|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 December, 2011

இந்திய சந்தையில் கால்பதி்க்கிறது ஏர்ஏசியா..

ஆசியாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனமான ஏர்ஏசியா ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்தியா மற்றும் சீன சந்தையில் புதிய யூனிட்களை துவங்க திட்டமிட்டுள்ளது. ஏர்ஏசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 11ம் ஆண்டு துவக்கத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்த ஏர்ஏசியா ஏர்லைன்ஸ் நிறுவன தலைமை நிர்வாகி டோனி பெர்னான்டஸ் கூறியதாவது, இந்த செய்தி உண்மைதான் என்றும், இந்தியா மற்றும் சீன சந்தையில் விரைவில் புதிய யூனிட்களை தாங்கள் துவக்க திட்டமிட்டுள்ளோம். லாப நோக்கத்தோடு மற்றும் அதிவிரைவு விரிவாக்கத் திறனுடனான செயல்திட்டத்தை, அடுத்த 10 ஆண்டுகாலங்களில் செயல்படுத்த உள்ளோம். 10 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து, 11ம் ஆண்டில் அடி எடுத்துவைத்துள்ள தங்கள் நிறுவனம், அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகி உள்ளோம். தற்போது இயங்கி வரும் இந்தோனேஷியா ஏர்ஏசியா மற்றும் தாய் ஏர்ஏசியா யூனிட்களின் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது. இதனை கருத்தில்கொண்டே, புதிய யூனிட்களை துவக்க திட்டமிட்டு‌ள்ளோம். இந்த ஆண்டில் துவங்கப்பட்ட பிலிப்பைன்ஸ் ஏர்ஏசியா மற்றும் ஜப்பான் ஏர்ஏசியா பிரிவுகளிலிருந்து, 2012ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து விமானங்களின செயல்பாடு துவங்க உள்ளது. ஏர்ஏசியா நிறுவனம் சார்பில், த‌ற்போதைய அளவில் 89 ஏர்பஸ் ஏ320 விமானங்கள் இயங்கி வருவதாகவும், அடுத்த 10 ஆண்டுகளி்ல், 300 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். 2009ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2010ம் ஆண்டில் நிறுவனத்தின் நிகரலாபம், கிட்டத்தட்ட 2 மடங்கு அளவிற்கு உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

3டி ஐ தொடர்ந்து விரைவில் வருகிறது க்யூ.டிவி.


 தற்போது பிரபலமாகி வரும் 3டி டிவிக்களுக்கு பதிலாக க்யூ.டி.,டிவி எனப்படும் புதிய தலைமுறைக்கான டிவி.,யை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த புதிய டிவியை மடத்து, எளிதில் கையில் எடுத்துக் கொண்டு போகும் விதமாகவும், பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள இந்த க்யூ.டி., டிவி, மனித தலைமுடியை விட 100,000 மடங்கு சிறிய தடிமனைக் கொண்டுள்ளதாவும்ல வளையும் தன்மை கொண்டதாகவும், வால்பேப்பர் முதல் பெரிய திரை வரையிலும் பெரிதாக்கிக் கொள்ளும் திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இது பிளாட் ஸ்கிரீன் டிவி., விட தொழில்நுட்ப திறன் அதிகம் கொண்டதாகும். இந்த க்யூ.டி.,டிவிக்கள் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு ! இதற்க்காகவேனும் தனித்தமிழகம் வேண்டும்.

கேட்க நாதியில்லாத மதிய அரசு, ஆட்சிக்கு வந்தாலே சொரணை இழக்கும் தமிழக அரசு! எதற்காக நாம் இன்னும் அடிமைப்பட்டு ?   ஒன்பது நாள் ஸ்டிரைக்கிற்கு பின் கடலுக்கு சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை எச்சரித்து விரட்டியடித்தனர். இலங்கை சிறையில் உ<ள்ள தமிழக மீனவர்களை விடுவிக்ககோரி கடந்த ஒன்பது நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்தனர். ஸ்டிரைக் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் ராமேஸ்வரத்திலிருந்து 700க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு கடல் பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை இலங்கை கடல் பகுதிக்குள் நுழைய விடாமல் தடுத்து, எச்சரித்து விரட்டியுள்ளனர். ஒரு வாரத்திற்கு பின் மீன்பிடிக்க சென்றதால் நேற்று கரை திரும்பிய படகுகளில் தலா 30 முதல் 60 கிலோ வரை இறால் மீன்பாடு இருந்தது. எதிர்பார்த்ததைவிட குறைந்த அளவே இறால் மீன்பாடு இருந்தது என, மீனவர்கள் தெரிவித்தனர். சிலர் வழக்கம்போல் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளால் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துள்ளனர். இதனைப்பார்த்த இலங்கை கடற்படையினர் இரட்டைமடி மீன்பிடிப்பில் ஈடுபட்ட படகை வழிமறித்து படகில் இருந்த மீனவர்களை பிளாஸ்டிக் பைப்பினால் தாக்கி விரட்டியடித்தனர்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஏப்ரல் முதல் வாரத்தில் துவக்க தேர்வுத்துறை திட்டம்!



 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, மார்ச் கடைசி வாரத்தில் இருந்து துவக்குவதற்குப் பதில், ஏப்ரல் முதல் வாரத்தில் துவக்க, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. வழக்கால் தாமதம்: நடப்பு கல்வியாண்டில், சமச்சீர் கல்வி வழக்கு, பள்ளி தள்ளிவைப்பு ஆகியவற்றால், 183 பள்ளி வேலை நாட்களில், 60 நாட்கள் இழப்பு ஏற்பட்டன. இதனால், வழக்கமான கால அட்டவணைக்குள், பாடத் திட்டங்களை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஈடுசெய்த 48 நாட்கள்: இதை ஈடுகட்ட, அரசுப் பள்ளிகள் உட்பட அனைத்து வகையான பள்ளிகளும், மாதத்திற்கு இரண்டு சனிக்கிழமைகளில் இயங்க உத்தரவிடப்பட்டது. இதன்மூலம், 17 நாட்கள் கூடுதலாகக் கிடைத்தன. மேலும், காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில், 10 நாட்கள் பள்ளிகள் நீட்டிப்பு மற்றும் 10 நாள் தேர்வு விடுமுறை ஐந்து நாட்களாகக் குறைப்பு ஆகிய நடவடிக்கைகள் மூலம், 15 நாட்களும்; பள்ளிகள் முடியும் நேரத்தை, அரை மணி நேரம் நீட்டிப்பு செய்ததன் மூலம், 16 நாட்கள் என, 48 நாட்கள் ஈடு செய்யப்பட்டுள்ளன.
இன்னும், 12 நாட்களை ஈடுசெய்ய வேண்டிய நிலை, பள்ளிக் கல்வித் துறைக்கு உள்ளது. பள்ளிக் கல்வித்துறை இவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும், மாணவர்கள் மத்தியில் ஒருவித பீதி இல்லாமல் இல்லை.ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டதால், பொதுத் தேர்வை நன்றாக எழுத முடியுமா என்ற பயம், மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை, வழக்கமான அட்டவணையில் இருந்து, ஒரு வாரம் தள்ளி வைக்க, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.கடந்த பொதுத்தேர்வு, மார்ச் 28ல் துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி முடிந்தது. இந்த ஆண்டு தேர்வை, மார்ச் கடைசி வாரத்திற்குப் பதில், ஏப்ரல் முதல் வாரத்தில் துவக்கி, 20 தேதிக்குள் முடிப்பது குறித்து, தேர்வுத் துறை ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "கல்வியாண்டு துவங்கியதில் இருந்தே, மாணவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. பாடங்களை மீண்டும் ஒரு முறை மாணவர்கள் படிக்கவும், மனதளவில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வாய்ப்பு கொடுக்கும் வகையிலும், மார்ச் கடைசி வாரத்திற்குப் பதிலாக, ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்வுகள் துவங்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஒரு வாரம் தள்ளி வைப்பதால், எவ்வித பிரச்னையும் ஏற்படாது&'&' என்றார்.

இதே நாள்...


  • இந்திய கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்(1882)
  •  இந்திய மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிறந்த தினம்(1935)
  •  இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தினம்(1969)
  •  யூனிசெப் நிறுவனம் அமைக்கப்பட்டது(1946)
  •  கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி இறந்த தினம்(2004)

உலக சாதனைக்காக உப்பை வைத்து...


 உலக சாதனைக்காக உப்பை வைத்து பெரிய வரைபடம் வரைந்து வேலூர் காட்பாடி பெண் சாதனை படைத்துள்ளார்.கோவையை மையமாகக் கொண்டு செயல்படும், "எலைட்' உலக சாதனை என்ற நிறுவனம் சார்பில் உப்பை வைத்து உலகின் பெரிய அளவு வரைபடம் வரைந்து சாதனை செய்யும் நிகழ்ச்சி வேலூர் அடுத்த காட்பாடியில் நடந்தது. வேலூரை சேர்ந்த சதீஷ் என்ற தொழில் அதிபர் மனைவி சரிதா, இந்த சாதனையை காலை, 7. 30 மணிக்கு துவங்கி மாலை, 5.30 மணிக்கு முடித்தார். 9 மணி நேரத்தில் இவர் இந்த சாதனையை செய்தார்.இதற்காக, 7 மீ., நீளம், 12 மீ., அகலம் கொண்ட ஒன்றரை இன்ச்க்கு, 84 சதுர மீட்டர் கொண்ட உப்பால் மாபெரும் ஓவிய தாளில் உலக உருண்டை கொழுந்து விட்டு எரிவது போல வரைபடம் வரைந்தார்.இதற்காக, 2,000 கிலோ எடை கொண்ட, 100 மூட்டை கல் உப்பு, 40 கிலோ கலர் உப்பை பயன்படுத்தினார். ஏழு கலர்களில் படம் வரைந்துள்ளார். இவர் இதை செய்யும் போது யாரிடமும் பேசக் கூடாது. மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை, 15 நிமிடம் ஓய்வு எடுத்து கொள்ளலாம். கிளவுசை கையில் அணிந்து கொண்டு வரைய கூடாது மற்றும் இவர் வரையும் படம் பொது மக்களிடம் ஒரு இமேஜை ஏற்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகள் படி சரிதா இந்த படத்தை வரைந்துள்ளார். இந்த பூவுலகை வெப்பமயமாதலில் இருந்து தடுக்க வேண்டும் என்கின்ற உணர்வு நம் வருங்கால சந்ததிகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை வரைந்துள்ளார்.உலக சாதனை செய்த சரிதா ஆந்திர மாநிலம் கர்நூல் சொந்த ஊர். பி காம் பட்டதாரியான இவர் இந்த சாதனை செய்ய சிறப்பு பயிற்சிகள் பெற்றுள்ளார்.

இது குறித்து "எலைட்' உலக சாதனை நிறுவனத்தின் நிறுவனர் பிரதீப் குமார் கூறுகையில்,""எலைட்' உலக சாதனை நிறுவனத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 10 ஆயிரத்து, 800 சாதனையாளர்கள் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 96 நாடுகளில், 11 உலக சாதனைகள் செய்யப்பட்டுள்ளது,'' என, கூறினார்.

5வது ஐ.பி.எல் 74 matches, over a period of 54 days...

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 5வது ஐ.பி.எல்., தொடரில் 76 போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்காக வீரர்கள் ஏலம் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி துவக்கத்திலோ நடைபெறும் எனவும், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளை எதிர்த்து இரண்டு முறை விளையாடும் எனவும் ஐ.பி.எல்., நிர்வாக குழு தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். ஐ.பி.எல்., தொடரில் நீக்கப்பட்ட கொச்சி அணியில் இடம்பெற்ற வீரர்களும் ஏலத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் சுக்லா கூறினார்


கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு...


கனிமொழிக்கு, தி.மு.க.,வில் முக்கியப்பதவி வழங்குவதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. கனிமொழிக்கு எதிராக, மற்றொரு பெண் வாரிசு கொம்பு சீவிய முயற்சி தோல்வியில் முடிந்தது. இருப்பினும், கனிமொழிக்கு ஆதரவு தெரிவிப்பது யார்? எதிர்ப்பு தெரிவிப்பது யார்? என்பதை கண்டறியும் வகையில், உடனடியாக பதவி வழங்காமல், "நூல் விட்டு' பார்க்கிறார் கருணாநிதி என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டில்லி திகார் சிறைவாசத்திற்கு பின், சென்னை வந்த கனிமொழிக்கு, தி.மு.க.,வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் செல்வி உட்பட அனைவரும், சென்னை விமான நிலையம் வரை சென்று வரவேற்றனர். கனிமொழியின் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், அவருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்க வேண்டும் என, அவரின் தாயார் ராஜாத்தி பிடிவாதமாக இருந்து வருகிறார்.கனிமொழிக்கு பதவி கொடுப்பதால், ஆண் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதால், அவருக்கு பதவி வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என, கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த மற்றொரு பெண் வாரிசு, மூத்த சகோதரரின் வீடு தேடி சென்று, கொம்பு சீவிவிட்டார்.

அதற்கு, அந்த மூத்த சகோதரரும், மற்றொரு சகோதரரும், "தந்தையின் கோபத்திற்கு நாங்கள் ஆளாக விரும்பவில்லை' எனக்கூறி நழுவினர். அதன் பின், அந்த பெண் வாரிசு, கனிமொழிக்கு பதவி வழங்கக் கூடாது என, நேரடியாக போர்க்கொடி தூக்கினார். அதேசமயம், ஆறு மாதம் சிறைவாசம் அனுபவித்த கனிமொழி மீது, கருணாநிதிக்கு அனுதாபம் ஏற்பட்டிருப்பதால், அவருக்கு பதவி வழங்கி, தி.மு.க.,வின் பெண் தலைவராக உருவாக்கவும், கருணாநிதி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கனிமொழிக்கு பதவி வழங்குவதற்கு முன், கட்சியிலும், குடும்பத்தினரிடமும், எந்த மாதிரி எதிர்ப்புகள் வருகின்றன, எதிர்ப்பவர்கள் யார்? யார்? ஆதரிப்பவர்கள் யார்? யார்? என்பதையும் தெரிந்து கொள்ளும் வகையில், அவருக்கு பதவியை உடனே வழங்காமல், கருணாநிதி நூல் விட்டுப் பார்த்து, மவுனம் காத்து வருகிறார்.

இது குறித்து, நம்பத்தகுந்த தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழலால் தான், தி.மு.க., தோல்வி அடைந்தது என, தி.மு.க., மத்திய அமைச்சர் கூறிய கருத்து, கனிமொழி தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்கு, பொருந்தாத கூட்டணி உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. மதுரையை சுற்றியுள்ள பத்து தொகுதிகளில், தி.மு.க., ஏன் தோல்வி அடைய வேண்டும். தென் மாவட்டங்களில், கனிமொழி தலைமையில் வேலை வாய்ப்பு முகாம் நடந்ததால், அங்கே சில தொகுதிகளில், தி.மு.க., வெற்றி பெற முடிந்தது என்ற வாதம் கனிமொழி தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ளது.கலைஞர் "டிவி'யில், கனிமொழி 20 சதவீதம் பங்கு பெற்றதால், அவர் சிறைவாசம் அனுபவித்தார். ஆனால், 60 சதவீதம் பங்கு பெற்ற குடும்பத்தினருக்கு, கனிமொழியால் எந்த பிரச்னையும் வரவில்லை. அந்த ஒரு காரணத்தை முன் வைத்துத் தான், பதவி வழங்க கருணாநிதி விரும்புகிறார். ஆனால், பெண் வாரிசு தான், தனது சகோதரர்களிடம் கொம்பு சீவிவிட்டார். அது பலிக்கவில்லை.

கனிமொழியை பொறுத்தவரையில், பதவி தாருங்கள் என, தந்தையிடம் வாய் திறந்து கேட்கவில்லை. தந்தைக்கு தன்னால் எந்த இடையூறும் வரக் கூடாது என்பதில், அவர் கவனமாக இருக்கிறார். ஆனால், ராஜாத்தி தான் கனிமொழியின் எதிர்கால அரசியலை கருத்தில் வைத்து, பதவி கேட்கிறார். கனிமொழிக்கு பதவி வழங்கும் பிரச்னையால், சில நாட்கள் ஸ்டாலின், அறிவாலயத்திற்கு செல்லாமல், அன்பகத்தில் இருந்து கட்சிப் பணிகளை கவனித்துள்ளார். அதேபோல், ஸ்டாலின் மனைவி துர்காவும், கனிமொழியை சந்திக்காமல் புறக்கணித்துள்ளார். இந்த பிரச்னைகளை எல்லாம், விரைவில் கருணாநிதி தீர்த்து வைப்பார்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முட்டை சாப்பிட்டால் உடல் எடை குறையும்!


முட்டை சாப்பிட்டால் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து அதிகரிக்கும் என்ற கருத்து பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் உடல் எடையை குறைக்க முட்டை ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.  இங்கிலாந்தில் உள்ள சர்தே பல்கலைக்கழக நிபுணர்கள் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் உணவு சாப்பிடும்போது ஒரு முட்டை எடுத்துக் கொண்டால் போதும். தானாக உடல் எடை குறைந்து விடும் என கண்டறிந்துள்ளனர்.   ஏனெனில் முட்டை சாப்பிடும்போது முழு உணவு உட்கொண்ட திருப்தி ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து நொறுக்கு தீனிவகைகள், பிஸ்கட், கேக் மற்றும் சாக்லேட்டுகளை சாப்பிடும் எண்ணம் வராது. அதனால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கருத்தைதான் பேராசிரியர் புரூஷ் கிரிப்பினும் கூறியுள்ளார். எனவே உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி கூடங்களுக்கு அலைந்து திரிய வேண்டாம். சாப்பாட்டின் போது தினமும் ஒரு முட்டை சாப்பிட்டாலே போதும்.
 

3 பெண்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு...

நோபல் அமைதி பரிசை 3 பெண்கள் பெற்றுக்கொண்டனர். இந்த பரிசு லிபெரியா அதிபர் எல்லன் ஜான்சன் சர்லிப், அதே நாட்டை சேர்ந்த லெமக் போவீ, யெமன் நாட்டின் டவாக்குல் கர்மன் ஆகியோர் பலத்த கரகோஷத்துக் கிடையே தங்களுக்கான பரிசு மற்றும் பதக்கங்களை பெற்றுக்கொண்டனர். இவர்கள் அநீதி, சர்வாதிகாரம், பாலியல் வன்முறை ஆகியவற்றிற்கு எதிராக போராடியதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசுக்கான குழுத்தலைவர் தேர்ப்ஜெர்ன் ஜாக்லாந்து கூறுகையில்,பரிசை பெற்ற பெண்கள், மனித உரிமை, பெண்களுக்கு சமஉரிமை மற்றும் அமைதிக்கான தூதர்களாக விளங்குவதாக கூறினார்.

வயிற்றில் இறந்த குழந்தையுடன்...

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அதையூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். விவசாயி. இவரது மனைவி காயத்ரி (24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வயிற்று வலி அதிகமானதால் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் (8ம் தேதி) அனுப்பி வைத்தனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட காயத்ரிக்கு இரண்டு நாள் ஆகியும் அறுவை சிகிச்சை செய்யப்பட வில்லை. இந்நிலையில் நேற்று, அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவ, மாணவிகளை பார்க்க வந்த ராமமூர்த்தி எம்எல்ஏவிடம், காயத்ரியின் உறவினர்கள் இதுகுறித்து புகார் கூறினர். 

மருத்துவர்களின் அலட்சி யத்தை பார்த்து கொதிப்படைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்எல்ஏ ராமமூர்த்தி உடனே மருத்துவமனை டீன் தேன் மொழி வள்ளியை சந்தித்து பேசினார். வயிற்றில் இறந்த குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுக்கா விட்டால் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது தெரியாதா? உயிருக்கு பாதுகாப்பு தர வேண்டிய நீங்கள் அலட்சியமாக நடந்து கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பினார். இதனையடுத்து விரைவில் அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, டீன் தேன்மொழி வள்ளி உறுதி அளித்தார்.  நேற்று இரவு 10 மணி அளவில், காயத்ரிக்கு ஆபரேஷன் செய்து, இறந்த குழந்தை அகற்றப்பட்டது. தற்போது காயத்ரி நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

கணவர் என நினைத்து வேறொருவரின் பைக்கில்...

நெல்லை நகரில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கடந்த 7-ந்தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நெல்லை நகரில் தற்போது 85 சதவீதத்திற்கும் அதிகமான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்கள். இந்நிலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஒருபெண், தனது கணவர் எனநினைத்து வேறொருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்றுவிட்டார். நெல்லை டவுனில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் நேற்று இரவு ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டனர். அவர்களில் ஏராளமானோர் மனைவியுடன் வந்திருந்தனர். அப்போது அந்த பகுதியில் கரண்ட் இல்லை. 

இந்நிலையில் மனைவியுடன் வந்திருந்த ஒருவர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு முடித்ததும், தன்னுடைய மனைவியை பைக்கில் ஏறுமாறு கூறினார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால், அங்கு நின்றுகொண்டிருந்த மற்றொருவரின் மனைவி, தனது கணவர் என நினைத்து, அவரது மோட்டார்சைக்கிளில் ஏறிவிட்டார். இதனைத்தொடர்ந்து அந்த நபரும், தனது மோட்டார் சைக்கிளை அங்கிருந்து கிளப்பினார். இதனையறியாத அந்த பெண்ணின் கணவர், தனது மனைவியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 
உடனே அவர் தனது மனைவியின் செல்போனுக்கு போன் செய்தார். அப்போது அந்த பெண், “உங்களுடன் வரும்போதே எனக்கு ஏன் போன் செய்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார். உடனே அந்தநபர் “நான் எங்கு போன் செய்தேன்” என்று கேட்டவாறு பின்னால் திரும்பி பார்த்தார். அவர் தனது மோட்டார்சைக்கிளில் வேறொரு பெண் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது மனைவி என நினைத்து வேறொருபெண்ணை அழைத்துவந்ததை அந்த வாகன ஓட்டியும், தனது கணவர் என நினைத்து வேறொரு நபருடன் பைக்கில் சென்றதை அந்த பெண்ணும், தெரிந்துகொண்டனர். உடனே நடந்த சம்பவம் குறித்து, அந்தபெண் தனது கணவருக்கு போன்செய்து மேம்பாலம் அருகே வரவழைத்தார்.
 
அங்கு அந்த பெண்ணின் கணவர் வந்தார். பின்பு தனது மனைவியை அழைத்துச்சென்றார். அதன்பிறகு அந்த வாகன ஓட்டி பெட்ரோல் பங்க்கிற்கு சென்று, அங்கு தவித்தபடி நின்ற தனது மனைவியை அழைத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தார். கரண்ட் கட் ஆகியிருந்தது, இருவரது மேடாட்டார்சைக்கிளும் ஒரே கம்பெனி வாகனங்கள், இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்தது ஆகிய மூன்று காரணங்ககளும் சேர்ந்து ஒரு கலாட்டா காமெடியை ஏற்படுத்திவிட்டன.

ஆவேசம் கொண்ட 20 ஆயிரம் தமிழர்கள் கேரளாவுக்குள் நுழைய முயற்சி...


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...