|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 November, 2011

கலாம் அளித்த சான்றிதழை ஏற்க மாட்டோம் போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார்!


 கூடங்குளம் வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எங்களைச் சந்திக்கவில்லை. மேலும் அவர் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு அளித்துள்ள நற்சான்றிதழமையும் நாங்கள் ஏற்க முடியாது என்று கூடங்குளம் போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், அப்துல் கலாம் ஒரு வி்ஞ்ஞானி போல பேசவில்லை. குறிப்பிட்ட சிலரை மட்டும் சந்தித்து விட்டு அவர் போய் விட்டார் என்றும் உதயக்குமார் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூடங்குளம் வரும்போது எங்களையும் சந்திப்பார், எங்களது மக்களிடம் குறைகளை கேட்பார் என நம்பியிருந்தோம். ஆனால் அவர் வரவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. இதை விட சிறந்த தொழில்நுட்பம் தேவை என்று அப்துல் கலாம் எழுதியுள்ள கட்டுரை இந்து நாளிதழில் வந்துள்ளது. ஆனால் இன்று கூடங்குளம் அணு மின் நிலையப் பாதுகாப்பு சிறப்பாக உள்ளதாக கூறியுள்ளார் கலாம். இது நேர் மாறாக, முரண்பாடாக உள்ளது.

இங்கு அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அணு மின் நிலையம் என்றால் இதேபோல ஒன்றை கேரளாவில் போய் அவர்கள் அமைக்க முடியுமா? ஏன், மேற்கு வங்கத்தில் கூட நான்கை ஆரம்பிக்கட்டுமே. அதை ஏன் அவர்கள் செய்யவில்லை. கூடங்குளம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 12 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், அப்துல்கலாம் 40 பேரை சந்தித்ததாக கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. 40 பேரும் கூலிக்கு மாரடிப்பவர்களாக கூட இருக்கலாம். கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கொஞ்சம் கழிவுதான் வெளியேறும் என்று வி்ஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது என்ன பேச்சு வி்ஞ்ஞானிகள் போல அவர்கள் பேச வேண்டும். கொஞ்சம் என்றால் எத்தனை டன் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். 

மேலும் இந்தப் பகுதியில் சுனாமி வராது, பூகம்பம் வராது என்று உத்தரவாதம் தரத் தயாரா? சுனாமி வந்தபோது 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை கடல் அலைகள் மூடியதை அத்தனை பேரும் பார்த்தோம். அப்படி இருக்கையில் 13.5 அடி உயரமே கொண்ட இந்த அணு உலைகளை கடல் அலைகள் மூடாதா?. எங்களுக்கு கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டாம். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இந்தியாவுக்கு மின்சாரம் தேவைதான். அதை உற்பத்தி செய்ய பல மாற்று வழிகள் உள்ளன. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிலும்,முக்கிய நகரங்களிலும் பல்வேறு வகையான மாற்று மின் உற்பத்தித் திட்டங்களை நிறைவேற்றலாம். அதைச் செய்யாமல் அணு உலைகளை நிறுவுவதை எந்தக் காரணம் கொண்டும் ஏற்க மாட்டாம். கூடன்குளம் அனுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என உதயகுமார் கூறினார்.

விரத உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக்கூடாது ஏன்?

விரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு  இருத்தல் என்று பொருள். விரதமிருப்பவர், அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும். சாப்பிட்டால் மலஜலம் கழிக்க நேரிடுமே என்பதால் தண்ணீர் கூட குடிக்காமல் பசித்திருந்து, சிந்தனை மாறாமல் இருப்பதையே உபவாசம் என்ற நிலையில் முதன்மையாகக் கூறியுள்ளனர். உபவாசம் என்றால் இறைவனுக்கு அருகில் இருத்தல் என்று பொருள். முறையாக இருக்க இயலாதவர்கள் கூட அரிசி சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஆஸ்கர் விருதுக்கு 18 அனிமேஷன் படங்கள் !

84வது ஆஸ்கர் விருதுக்கு "தி அட்வென்சர் டின்டின்", "குங்குபூ பாண்டா 2" உள்ளிட்ட 18 அனிமேஷன் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. சினிமாவில் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் இருந்து பல்வேறு மொழி படங்கள், இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்படும். அ‌தேபோல் இந்தாண்டும், 2012ம் ஆண்டு பிப்.,26ம் தேதி நடக்க இருக்கும் 84வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை இப்போதே ஆரம்பமாகிவிட்டன. முதற்கட்டமாக அனிமேஷன் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.  இதில் ஸ்டீவன் ஸ்பெல்பர்க்கின் தி அட்வென்சர் டின்டின், குங்குபூ பாண்டா 2, ரியோ அண்ட் ரேங்கோ, புஷ் இன் பூட்ஸ், கார்ஸ்-2, ஹப்பி பீட் உள்ளிட்ட 18 படங்கள் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில் எந்த படம் ஆஸ்கர் விருது வாங்கபோகிறது என்பது 2012ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி தான் தெரியும். 

உலகின் காஸ்ட்லி பார்பர்!


உலகின் மிக காஸ்ட்லியான முடி திருத்துபவர்களாக கருதப்பட்ட ஷாலி ஹெர்ஸ்பெர்கர், ஃபிரிடேரிக் ஃபெக்காய் ஆகியோர் வரிசையில் தற்போது ரோஷனோ ஃபெர்ரிட்டி என்பவரும் இவணந்துள்ளார். தற்போது இவர் தான் உலகின் மிக காஸ்ட்லியான முடி திருத்துபவராக கருதப்படுகிறார். இவர் முடி திருத்துவதற்கு ஒரு நபருக்கு வசூலிக்கும் தொகை 1000 டாலர்களாகும். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.50,000 ஆகும். இவர் தான் இளவரசி டயானா உள்ளிட்ட உலகின் மிகப் பெரி பிரபலமான பெண் விஐபி க்களின் ஆஸ்தான் முடி திருத்துபவரார் ஆவார். ரோஷனோவிற்கு உலகம் முழுவதிலும் பல முக்கிய நகரங்களில் சலூன் உள்ளது. இந்தியாவில் ஏற்கனே மும்பை நகரில் சலூனை துவங்கி விட்ட இவர், தற்போது குர்கானில் தனது 2வது கிளையை துவக்க உள்ளார். இவரது சலூனில் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் ரோஷனோவே நேரடியாக பயிற்சி அளிக்கிறார். பாரிஸ், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 20 சலூன்களை இவர் இயக்கி வருகிறார். அவரவரின் முக அமைப்பிற்கு ஏற்றாற் போல் முடிஅழகை அமைப்பது இவரது சிறப்பம்சமாகும். இவர் தனது சலூன் மற்றும் முடி திருத்தும் முறையில் முற்றிலும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருவது இவரின் மற்றொரு தனிச்சிறப்பாகும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...