சைக்கிளை நேராக ஓட்டுவதே பலருக்கு தகராறு. ஆனால், பல கொண்டை ஊசி
வளைவுகள் கொண்ட சரிவான மலைப்பாதையில் சைக்கிளில் பின்புறமாக அமர்ந்து
கொண்டு 80 கிமீ வேகத்தில் ஓட்டி அசத்துகிறார் நார்வே நாட்டை சேர்ந்த
எஸ்கில் ரோனிங்ஸ்பேக்கன்.
நார்வே நாட்டிலுள்ள பிரபலமான ட்ரோல்ஸ்டிகன் மலைப்பாதையில் 4.5 கிமீ நீளம்
தூரத்துக்கு அவர் சைக்கிளில் பின்புறம் பார்த்து அமர்ந்து கொண்டு
சீறுகிறார். எதிர்திசையில் வாகனங்கள் ஒருபுறம் சென்றுகொண்டிருந்தாலும் மிக
லாவகமாக சைக்கிளை அவர் ஓட்டும் காட்சி திறமையின் உச்சம். இதற்குமேல் தகவல்
தேவையில்லை என்று நினைக்கிறேன். நேராக வீடியோவை போட்டு பார்த்துவிடுங்கள்.
முயற்சித்தால் மனிதனால் முடியாதது எதுவுமில்லை என்பதை உணர்த்தி நம்பிக்கையை
ஏற்படுத்தும் விதத்தில் இந்த நிகழ்வை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.