ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
28 January, 2013
புற்றுநோயை கட்டுப்படுத்தும் மஞ்சள்!
மெரிக்காவின், ஹூஸ்டனில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ மையத்தைச்
சேர்ந்த மருத்துவர் சரஸ்வதி சுகுமார் கூறியதாவது:இந்தியாவில், பல
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உணவில் மஞ்சள் சேர்க்கப்பட்டு வருகிறது. மஞ்சளை
உணவில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக, 20 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள்
நடத்தப்பட்டு உள்ளன.இதில், மூட்டுவலியை குறைப்பதில், மஞ்சள் பெரும் பங்கு
வகிப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதுபோல், புற்றுநோய், நீரிழிவு நோய்,
சரும நோய் போன்றவற்றிலிருந்தும், மனிதர்களை காப்பதில் மஞ்சள் முக்கியப்
பங்கு வகிக்கிறது.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும்
கதிர்வீச்சு சிகிச்சையால், சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை மஞ்சள் சரி
செய்து விடுகிறது.
மாத்திரை வடிவில்:மஞ்சளை
அப்படியே சாப்பிடும் வகையில் நம் உடல் அமைப்பு இல்லை என்பதால், இப்போது,
மாத்திரை வடிவிலும் மஞ்சள் கிடைக்கிறது. நாம் சமைக்கும் உணவுடன் மஞ்சளையும்
சேர்த்துவிட்டால், அது நல்லதொரு பலனை அளிக்கும். மஞ்சளை சேர்த்துக்
கொள்வதால் கூடுதலான ருசி கிடைக்காது; மாறாக, உணவுப் பொருளுக்கு நிறத்தை
அளிக்கும். மஞ்சளின் முழு பலனையும் பெற, சமையல் எண்ணெயை சூடு படுத்தி,
அதில் மஞ்சள் தூளைக் கலந்து உணவுப் பொருளுடன் சேர்க்கலாம்.
பிள்ளைய பார்த்தீங்களா?
குரோம்பேட்டையைச் சேர்ந்த தெரு நாய் ஒன்று இரண்டு குட்டிகளை போட்டது. தனது
குழந்தைகளை கொஞ்ச நேரம் கொஞ்சிவிட்டு அதற்கு சாப்பாடு கொடுப்பதற்காக வெளியே
போய் கிடைத்த இரையோடு திரும்பிய தாய் நாய்க்கு அதிர்ச்சி. அங்கு இருந்த
இரண்டு குட்டிகளையும் காணவில்லை. அந்த இடத்தை சுற்றி,சுற்றி வந்த அதன்
கண்களில் கண்ணீர். இந்த காட்சியை எல்லாம் மாடியில் இருந்து பார்த்த சுரேஷ்
என்பவர் நாயின் கவலையை எழுதி நோட்டீசாக ஒட்டிவிட்டார்.
இந்திய பிரபலங்கள் 100...
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட இந்திய பிரபலங்கள் 100 பேரின்
பட்டியலில் விஜய்க்கு 28வது இடமும், சூர்யாவுக்கு 43, அஜீத்துக்கு 61
மற்றும் விக்ரமுக்கு 67வது இடமும் கிடைத்துள்ளது.
போர்ப்ஸ் பத்திரிக்கை இந்திய பிரபலங்கள் 100 பேரின் பட்டியலை
வெளியிட்டுள்ளது. பிரபலம் மற்றும் வருமானத்தின் அடிப்படையில்
தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளவர் பாலிவுட் நடிகர்
ஷாருக்கான். அவர் கடந்த 2011-2012ம் ஆண்டில் ரூ.202.83 கோடி
சம்பாதித்துள்ளார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது சல்மான் கான்.
எனது வாயில் தனது ஆணுறுப்பை எடுத்து அவர்...?
41வயதுப் பெண் ஒருவர் மருத்துவமனை ஒன்றில் டாக்டர் செய்த பாலியல்
சேஷ்டைகள் குறித்து கோர்ட்டில் விவரித்தபோது கடும் வேதனையுடன் அதைக்
குறிப்பிட்டார். அவர் சொல்லச் சொல்ல கோர்ட் ஹாலே அதிர்ச்சியுடன் அதைக்
கவனித்தது.
சர்ச்சையில் சிக்கியுள்ள டாக்டரின் பெயர் ஜார்ஜ் டூட்நாட். டோரண்டோவைச்
சேர்ந்தவர். இவர் மீதுதான் இப்போது வழக்கு பாய்ந்துள்ளது. மொத்தம் 21
வழக்குகள். அதாவது 21 பெண்களை, இவர் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தது,
சில்மிஷம் செய்தது, அவமரியாதை செய்தது என்று வழக்குப் போட்டுக் கைது
செய்துள்ளனர்.
இவரால் பாதிக்கப்பட்ட 41 வயதுப் பெண் டோரண்டோ கோர்ட்டில் பரபரப்பான
வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் திகிலுடன்
விவரித்தார். கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் இவருக்கு இந்தக்
கொடுமை நடந்தது.
அப்போது அவருக்கு ஹிஸ்டரெக்டமி அறுவைச் சிகிச்சை நடந்தது.
வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அவர்
விவரித்துள்ளார்.. அது இதோ...
எனக்கு மயக்க மருந்து கொடுத்திருந்தனர். ஆனாலும் எனக்கு நினைவு இருந்தது.
என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை என்னால் உணரவும் முடிந்தது.
அப்போது டாக்டர் ஜார்ஜ், எனது கவுனுக்குள் கையை விட்டு எனது வலது
மார்பகத்தை பிடித்து நிமிண்டினார். இதை உணர்ந்து நான் அதிர்ச்சி அடைந்து
கண்களைத் திறந்து பார்த்தேன். அப்போது டாக்டரின் முகம் எனது முகத்திற்கு
வெகு அருகே இருந்தது. அவர் என்னை முத்தமிட்டார். மேலும் அவரது நாக்கு எனது
வாய் மீது இருந்தது.
என்னால் நகரக் கூட முடியவில்லை. மற்ற டாக்டர்கள் எங்கே என்று நான்
கேட்டபோது, முன்னெச்சரிக்கையுடன் நடக்க எனக்குத் தெரியாதா என்ன என்று
என்னிடம் கேட்டார் ஜார்ஜ்.
அடுத்து அவர் செய்த செயல்தான் மிகக் கொடுமையானது. எனது வாயில் தனது
ஆணுறுப்பை எடுத்து அவர் வைத்தார். நான் மிகவும் கொடுமையாக உணர்ந்தேன்.
எனக்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது என்று அவர் கூறியபோது அப்பெண்
கடும் கோபத்துடன் காணப்பட்டார்.
64 வயதான டாக்டர் ஜார்ஜ் மீது 2006 முதல் 2010 வரை 25 முதல் 75 வயது
வரையிலான பெண்களை பாலியல் ரீதியாக இப்படிச் சீரழித்ததாக புகார்கள்
பதிவாகியுள்ளன. அவர் மீது 21 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டாக்டர் ஜார்ஜ் 1981ம் ஆண்டு முதல் நார்த் யார்க் ஜெனரல் மருத்துவமனையில்
பணியாற்றி வந்தார்.
ரேப் அதிகரிக்க காரணம் குட்டைப் பாவடையும், ஹை ஹீல்ஸ்ம்தான்?
உலகம் முழுவமும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து
வருகின்றன. பாலியல் வன் கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை
கொடுக்கலாம் என்ற பேச்சு ஒரு புறம் இருக்க பெண்களின் அணியும் உடைதான்
அவர்களை பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்குகிறது என்று கருத்து கூறி
வருகின்றனர் சில அதிசய பிறவிகள்.
கவர்ச்சிகரமான உடை அணிவதும், நள்ளிரவில் பெண்கள் தனியாக போவதும்தான்
அவர்கள் கற்பழிப்புக்கு ஆளாகின்றனர் என்று இந்தியாவில் சில நாடாளுமன்ற
உறுப்பினர்கள் கருத்து கூறி நாடு முழுவதும் எதிர்ப்பை வாங்கி
கட்டிக்கொண்டனர். இதேபோல் இங்கிலாந்திலும் ஒரு எம்.பி பேசியுள்ளார்.
டோரி கட்சியைச் சேர்ந்த அந்த எம்.பியின் பெயர் ரிச்சர்டு கிரஹாம்.
கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டும், ஹை ஹீல்ஸ் போட்டுக் கொண்டும் ராத்திரி
நேரத்தில் பாருக்குப் போய் மது அருந்துவதும் பெண்களுக்கு ஆபத்தானது. அதை
அவர்கள் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் கற்பழிப்பு போன்றவை நடக்கத்தான்
செய்யும் என்றும் அவர் பேசியுள்ளார்.
எம்.பியின் இந்தப் பேச்சுக்கு கற்பழிப்புக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த ஜோ
உட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எம்.பியின் பேச்சு நம்மை 100
ஆண்டுகளுக்குப் பின்னால் கொண்டு போய் விடும் என்று அவர் சாடியுள்ளார்.
அது சரி கவர்ச்சியான உடை அணிந்தால்தான் பாலியல் வன்கொடுமைக்கு
ஆளாக்கப்படுகின்றனர் என்றால் 13 வயது பள்ளிச் சிறுமிகள் சுடிதார் அணிந்து
கொண்டுதானே பள்ளிக்குச் செல்கின்றனர். அவர்களை ஏன் கற்பழிக்கின்றனர்.
5 வயது சிறுமிகள் முதல் 60 வயது முதிய பெண்கள் வரை ஆண்களின் வக்கிரப்
பார்வைக்கு தப்ப முடியவில்லையே இதை என்ன சொல்வது?. புடவை அணிந்து கொண்டோ
அல்லது உடல் முழுக்க மறைக்கும் ஆடை அணிந்து கொண்டோ செல்லும் பெண்களை
மட்டும் எதுவும் செய்யாமல் விட்டுவிடுவார்களா என்ன?
போப் பறக்க விட்ட புறா கடித்துக் குதறிய சீகல்!
வாடிகன் சிட்டியில், போப்பாண்டவர் பறக்க விட்ட புறாவை, சீகல்
எனப்படும் கடற்பறவை படு வேகமாக பாய்ந்து வந்து கடித்துக் குதறி ரத்தக்
களறியாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் இதை அதிர்ச்சியுடன்
பார்த்து விக்கித்து நின்றனர்.
சமாதானத்தின் அடையாளமாக பார்க்கப்படுவது புறா. ஆனால் இந்த சமாதானப் புறாவை
கடித்துக் குதறி அனைவரையும் பதற வைத்து விட்டது சீகல் பறவை ஒன்று.
போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் நேற்று வழக்கமான ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை
உரையை நிகழ்த்தினார். அதற்கு முன்பாக அவர் புறா ஒன்றை பறக்க விட்டார்.
அப்போது வாடிகன் சிட்டி வளாகத்தில் வசித்து வரும் சீகல் பறவை ஒன்று படு
வேகமாக புறாவை நோக்கி ஓடி வந்து அதைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்து
போப்பாண்டவர் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கடும் வேதனையில் துடித்தபடி புறா சீகல்லிடமிருந்து தப்பித்து ஓடிப்
பறந்ததைப்பார்த்து கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரும் வேதனையும்,
அதிர்ச்சியும் அடைந்தனர். புறாவை சரமாரியாக கடித்துக் குதறிய பின்னர் அந்த
சீகல் பறவை அங்கிருந்து பறந்தோடி விட்டது.
இத்தனைக்கும் ரோம் நகரிலிருந்து வந்த 2000 இளைஞர்கள் நடத்திய அமைதிப் பேரணி
போப்பாண்டவர் உரை நிகழ்த்திய செயின்ட் பீட்டர்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில்
நேற்று முடிவடைந்தது. இதன் அறிகுறியாகவே புறாவைப் பறக்க விட்டார்
புலிகள் மீதான தடையை நீக்க கோரும் மனு ஏற்பு!
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய வைகோவின்
ரிட்மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ தாக்கல் செய்த ரிட் மனு
தலைமை நீதிபதி (பொறுப்பு) நீதியரசர் எலிப்பி தர்மாராவ், நீதியரசர் அருணா
ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு
வந்தது.
அப்போது வைகோ கூறியதாவது:
"விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு 2012 மே 14 இல்
பிறப்பித்த ஆணையை, மத்திய அரசு நியமித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி
வி.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயத்திற்கு அனுப்பி வைத்தது. அந்தத்
தீர்ப்பாயத்தில் நான் நேரில் சென்று, புலிகள் மீதான தடையை இரத்து செய்ய
வேண்டும் என்று மனுதாக்கல் செய்தேன். தீர்ப்பாயம் நடத்திய விசாரணைகளிலும்
பங்கேற்றேன். ஆனால், அந்தத் தீர்ப்பாயத்தில் பதிவு செய்யப்பட்ட
சாட்சியங்களின் வாக்குமூலம் உள்ளிட்ட ஆவணங்களின் பிரதிகள் எனக்கு
வழங்கப்படவில்லை.
புலிகள் மீதான தடையை, உறுதி செய்து தீர்ப்பாயம் 2012 நவம்பர் 27 ஆம் தேதி
பிறப்பித்த ஆணை நீதிக்கு எதிரானதும், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)
சட்டத்தின் விதிகளுக்கு முரணாகவும் உண்மைக்கு மாறான வாதங்களின்
அடிப்படையிலும் தரப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும்
இறையாண்மைக்கும் எதிராகவோ ஆபத்து ஏற்படும் விதமாகவோ செயல்பட்டால்தான்
சட்டப்படி குற்றமாகும்.
விடுதலைப்புலிகள் இயக்கம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படவில்லை.
ஆனால் மத்திய அரசு, விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டையும் தமிழ் ஈழத்தில்
சேர்க்க திட்டமிட்டுள்ளதாக எள்ளவும் உண்மை இல்லாத, முழுக்க முழுக்க
அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டை விடுதலைப்புலிகள் மீது சுமத்தி இந்தத்
தடையை நீடித்துள்ளது.
எது தமிழ் ஈழம்?
தமிழ் ஈழம் என்பது இலங்கைத் தீவில், ஈழத் தமிழர்களின் பூர்வீகத் தாயகமான
வடக்கு-கிழக்கு பகுதிகளைக் குறிப்பதாகும். இதற்கு ஆதாரமாக 1976 மே 14 இல்
வட்டுக்கோட்டையில் தமிழர் அமைப்புகள் தந்தை செல்வா தலைமையில் கூடி
நிறைவேற்றிய பிரகடனத்தை நான் தீர்ப்பாயத்தில் ஆவணமாக தாக்கல்
செய்திருந்தேன். ஆனால், தீர்ப்பாய நீதிபதி அந்தப் பிரகடனத்தின் வாசகத்தையே
புரிந்து கொள்ளாமல், இந்தியாவிலும், உலகத்திலும் உள்ள தமிழர்கள், தமிழ்
ஈழத்தின் குடிமக்கள் ஆகலாம் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ஈழத்தின் பூர்வீகக் குடிமக்கள், புலம்பெயர்ந்த நாடுகளில்
வாழ்பவர்கள், குடி உரிமை பெறலாம் என்றுதான் அப்பிரகடனம் கூறுகிறது.
அடிப்படையையே நீதிபதி மாற்றிச் சொல்கிறார். வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு
விடுதலைப்புலிகள் அங்கீகரித்ததற்கு ஆதாரம் இல்லை என்று தீர்ப்பாய நீதிபதி
கூறுகிறார். ஆனால், நான் பதிவு செய்த ஆவணங்களில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்
27 ஆம் தேதி மாவீரர் நாள் உரையின்போது, தேசியத் தலைவர் பிரபாகரன்
உரையாற்றும் மேடையில், தமிழ் ஈழ வரைபடம் துல்லியமாக
சித்தரிக்கப்பட்டுள்ளது. அது இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு பகுதிகளை
மாத்திரமே காட்டுகிறது. இது தான் வட்டுக்கோட்டை பிரகடனத்திற்கு புலிகள்
தந்துள்ள அங்கீகாரமாகும்."
இலங்கையில் இருந்து ஈழத் தமிழர் யார் வந்தாலும் இந்தத் தடையைக் காரணம்
காட்டி அவர்களை அச்சுறுத்துவதும், பொய்வழக்கு போடுவதும், சிறப்பு முகாமில்
அடைப்பதும் வழக்கமாகிவிட்டது. எனவே, தீர்ப்பாயத்தின் ஆணையை இரத்து செய்து,
புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுகிறேன்.
ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் மீதான தடையை எதிர்த்து, நான்
தாக்கல் செய்த ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தங்கள்
முன்னிலையில் விசாரணை நடைபெற்று அதன் மீதான தீர்ப்பையும் எதிர்பார்த்து
இருக்கிறோம்" என்றார்.
உடனே நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அவர்கள், வைகோவின் ரிட் மனுவை
அனுமதித்ததோடு, நான்கு வார காலத்திற்குள் அரசு தரப்பு பதில் தாக்கல் செய்ய
உத்தரவிட்டார்.
ப.சிதம்பரம் மீது 'ஐபிசி 420' வழக்கு!
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்போம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து
ஏமாற்றிய மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம் மற்றும் சுஷில்குமார் ஷிண்டே
ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு போலீசாருக்கு ஆந்திர மாநில
ரெங்காரெட்டி மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ரெங்காரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் ஆந்திர பிரதேச இளநிலை வழக்கறிஞர்கள்
சங்கத்தின் சார்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில்,
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை தாமதிக்கும் வகையில் பொய்யான
வாக்குறுதிகளை அளித்து முன்னாள் உள்துறை அமைச்சரும் தற்போதைய நிதி
அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் தற்போதைய உள்துறை அமைச்சர் சுஷில்குமார்
ஷிண்டே ஆகியோர் ஏமாற்றியுள்ளனர் என்றும் இருவர் மீதும் நடவடிக்கை தேவை
என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த ரெங்காரெட்டி மாவட்ட நீதிமன்றம், மத்திய அமைச்சர்கள்
ப.சிதம்பரம் மற்றும் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் மீது போலீசார் வழக்குப்
பதிவு செய்ய அனுமதி அளித்தது. இவர்கள் இருவர் மீது இ.பி.கோ. 420-வது கீழ்
மோசடி வழக்குப் பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தெலுங்கானா விவகாரம் 'விஸ்வரூபம்' எடுத்து ஆந்திராவை கொந்தளிப்பாக்கியுள்ள
சூழலில் ஆந்திர நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பை மதித்து செயல்படுத்தவில்லை?
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மதித்து செயல்படாத கர்நாடகாவுக்கு
உச்சநீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்தது.
தமிழகத்தில் கருகும் சம்பா பயிரைக் காப்பற்ற 12 டி.எம்.சி. நீரையாவது
தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்மையில்
தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான ஜெயின் ஓய்வு பெறுவதால் இன்று அது
விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் 12 டி.எம். நீர். கோரி வாதிடப்பட்டது. ஆனால்
கர்நாடகா இதை நிராகரித்தது. இதைத் தொடர்ந்து 6 டி.எம்.சி. நீரையாவது
தமிழகத்துக்கு திறந்துவிட முடியுமா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்
கேட்டனர்.
ஆனால் கர்நாடகாவோ தங்களது குடிநீர் தேவைக்கே 15 டி.எம்.சி.நீர்
தேவை என்று கூறியது. இதனால் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம், காவிரி
நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடகா மதித்து செயல்படுத்தவில்லை என்று கண்டனம்
தெரிவித்தனர்.
மேலும் 1992ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவின் குடிநீர் தேவை என்ன என்பதை
அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் காவிரி
கண்காணிப்புக் குழுவின் செயல்பாடும் திருப்தி இல்லை என்றும் உச்சநீதிமன்ற
நீதிபதிகள் கூறினர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் மனு மீது நாளை பிற்பகல் விசாரணை நடைபெறும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)