|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 February, 2017

இது யாரோட இந்தியா..இதுதான் இந்தியாவெனில் யாருக்கு வேணும் இந்த இந்தியா..?

ஆளும் வர்க்கமே சொரணை இல்லையா ?
வி ஐ பி களுக்கே இந்தியா…!!!
பாவனா -வுக்கு
பாவாடை கிழிந்தால்
பாராளுமன்றம் வரை எதிரொலிக்கிறது
நந்தினி
ஹாசினி -களுக்கு
கருவறுக்கப்பட்டாலும்
அது கிணற்றுக்குள்ளே மூடி மறைக்கப்படுகிறது …!!!
அம்பாணி, அதாணி
மல்லையா கடன் வாங்கினால்
அது தள்ளுபடி செய்யப்படுகிறது
இராமையா
மூக்கையா இராமசாமி -கள்
கடன் வாங்கினால்
தடியடி நடத்தி வசூலிக்கப்படுகிறது..!!!
அரசியல்வாதிகள்
ஆற்றுமணலை கொள்ளையடித்தால்
சுங்கச்சாவடிகள் சுதந்திரமாக திறக்கப்படுகிறது
அன்றாட காய்சிகள்
மாட்டு வண்டியில்
மணல் எடுத்தால்
மாட்டு வண்டிகள் சூறையாடப்படுகிறது..!
கல்வியை தொழிலாக்கி
அதை காசுக்கு விற்று
பணம் பார்க்கும் கபோதிகளுக்கு
கல்வி தந்தையென பட்டம் அளிக்கப்படுகிறது
தேர்விலே
பக்கத்தில் இருப்பவனை பார்த்து
காப்பி அடித்தால் மாணவனுக்கு
மூன்றாண்டு தேர்வெழுத தடைவிதிக்கிறது..!
போலி நாயகனுக்கும்
அரசியல் வாதிகளுக்கும்
சட்டத்தில் பல விதிவிலக்குகள் அளிக்கப்படுகிறது
சாமானியனுக்கோ சட்டம்
தன் கடமையை செய்கிறது..!
இயற்கையை அழிப்பவன்
இறைவனென போற்றப்படுகிறான்
இயற்கையை காக்க போராடுபவன்
தேசதுரோகியென தூற்றப்படுகிறான் .
ஆக இது யாரோட இந்தியா..இதுதான் இந்தியாவெனில் யாருக்கு வேணும் இந்த இந்தியா..?

கட்டமைக்கப்பட்ட இந்தியா என்ற போலி தேசத்தை தியாகம் செய்கிறோம்.


என்னதுக்குடா நாங்க தியாகம் பன்னனும்?
திருப்பதி கோவில் சுவரில் எழுதியிருக்கும் கல்வெட்டு சொல்லும் அந்த கோவில் யாருடையதுனு - தியாகம் செய்திருக்கோம்
கேரளாவில் பீர்மேடு யாருடையது - தியாகம் செய்திருக்கோம்
தண்ணி கொடுக்காதபோதும் நெய்வேலில இருந்து மின்சாரம் கர்நாடகாவுக்கு கொடுக்கிறோம் - தியாகம் செய்திருக்கோம்
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட எல்லாரையும் தமிழர்களுக்கு தெரியும் ஆனா 21 வருடம் செக்கிழுத்த வ.உ.சிதம்பரத்தை தமிழ்நாடு தாண்டி யாருக்காவது தெரியுமா? - தியாகம் செய்திருக்கோம்
கேரளாவில் குஜராத்தில் விரட்டப்பட்ட அணுஉலையை எங்க தலைல கட்டுணீங்க - தியாகம் செய்திருக்கோம்
பெங்களூர் உண்மையான பேர் தெரியுமா - தியாகம் செய்திருக்கோம்
நீங்க இலங்கைட்ட சீன் போடா கச்சத்தீவை கொடுத்தீங்க - தியாகம் செய்திருக்கோம்
மாநிலங்கள் பிரிக்கையில் 11% காடுகள் ஒதுக்கியபோது தமிழகத்திற்கு எத்தனை சதவீதம்னு தெரியுமா - தியாகம் செய்திருக்கோம்
தியாகத்தை பற்றி யாரிடம் பேசுவது என தெரிந்து பேசுங்கள்
இனி இந்தியாவை தியாகம்
செய்ய தயாராகிவிட்டோம்!
இந்தியா என்ற அண்டை நாட்டிற்காக தமிழர் நாடு கணக்கில் இல்லாத எண்ணற்ற தியாகங்கள் போதுமான அளவு கடந்த பல நூறு வருடங்களாக செய்துள்ளது...
எமது மண்ணின் வளங்களை போதுமான அளவு களவாடி இருக்கிறீர்கள்...
நெய்வேலி மண்ணை முழுமையாக நாங்கள் இழந்து மின்சாரம் உற்பத்தி செய்கிறோம் ஆனாலும் அந்த மின்சாரம் எங்கள் உரிமை அல்ல...
கடற்கரை முழுமைக்கும் அணு உலை பூங்கா என்று எங்கள் கடல் வளங்களையும்,எம் மண்ணையும் சிதைக்கிறீர்கள் நாங்களே இதுவரை தியாகம் செய்பவர்களாக இருந்து வருகிறோம்...
கச்சத்தீவை தியாகம் செய்தோம் மீன்பிடி உரிமை இழந்தோம்...
முல்லை பெரியாறு அணையை தியாகம் செய்தோம் தண்ணீர் எங்களுக்கு இல்லை...
நியூட்ரினோ, மீத்தேன் என்று எங்கள் நாட்டை இன்னும் தியாகம் செய்து வருகிறோம்...
எங்கள் ஆறுகளில் இருந்து எம் மண்ணை தியாகம் செய்து உங்கள் இந்தியாவை செழிப்புடன் இருக்கவைத்திருக்கிறோம்...
ஆகையால் ஒரே ஒரு முறை
நாங்கள் #கட்டமைக்கப்பட்ட_இந்தியா_என்ற#போலி_தேசத்தை_தியாகம் செய்கிறோம்.
தகவலுக்கு நன்றி
கார்த்திகேயன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...