|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 January, 2013

தனி தமிழ்நாடு அமைத்து கொள்கிறோம் சீமான்!


நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் மொழிப்போர் தியாகிகளுக்கான பொதுக்கூட்டம் நடந்தது.இதில் கட்சி தலைவர் சீமான் பேசியபோது,  ‘’தமிழ் படித்தால் மட்டுமே வேலை, தமிழில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு வேலையில் முன்னுரிமை என்ற நிலை மிக விரைவில் வரும். நாங்கள் தமிழுக்காக போராடுவது அழிவின் விழிம்பில் இருக்கும் தமிழை காக்கவே தவிர, மற்ற மொழிகளை அழிப்பதற்காக அல்ல, தமிழ் இனத்தில் பிறந்து தமிழுக்காக போராடிய ஒரே தலைவர் பிரபாகரன்தான்.தமிழை வளர்க்கவும், தமிழ் இனத்தை அழியாமல் காக்கவும் வேறு ஒரு தலைவர் தமிழ் இனத்தில் இருந்தது இல்லை. ஆட்சியில் இருப்பவர்களுக்கு தமிழ் மொழியை பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு தேவை எல்லாம் தமிழர்களை ஆள வேண்டும். தாய்மொழியாக இருந்த தமிழ் பாடமொழியாகி தற்போது விருப்ப பாடமொழியாக இருப்பது மிகவும் வருத்தப்பட கூடிய விஷயமாகும். எந்த மொழியில் பேசுகிறீர்களோ அதை முழுமையாக பேசுங்கள். பேசும் மொழியில் மற்ற மொழிகளை இணைத்து அந்த மொழிகளை கலங்கப்படுத்தாதீர்கள்.
 
தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் பதவி மோகத்திற்காக மத்தியில் உள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்தார்களோ அப்போது இருந்தே தமிழ் மொழி அழிய தொடங்கிவிட்டது. எனவே தமிழையும், தமிழ் இனத்தையும் வாழ வைப்பதற்காக இளைய தலைமுறையினர் வரவிருக்கும் வரலாற்று புரட்சிக்கு தயாராக இருக்க வேண்டும்.  இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் கொள்ளப் படுவதை  மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லயேல் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தனி தெலுங் கானா அமைத்து கொண்டதை போல நாங்களும் தனி தமிழ்நாடு அமைத்து கொள்கிறோம். மேலும் தமிழ்நாட்டிற்கு நிதிஉதவி வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது. ஆனால் தமிழர்களுக்கு எதிரி நாடான இலங்கைக்கு ரூ.80 ஆயிரம் கோடி வட்டியில்லா கடனாக வழங்கியுள்ளது. மேலும் கடன் கொடுக்க தயாராக உள்ளது. ஆனால் இந்தியாவில் ஒரு அங்கமாக இருக்கும் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் நிதி வழங்க மத்திய அரசு தயாராக இல்லை.இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் கற்றால்தான் வேலை என்ற நிலை வரும். தமிழ்மொழி தமிழர்களுக்கு தாய்ப்பால் போன்றது. மற்ற மொழிகளை கற்று கொள்ளுங்கள் ஆனால் தாய்மொழி தமிழை தாய்ப்பால் போல பருகுங்கள் அப்போதுதான் அடுத்த தலைமுறையில் தமிழ்மொழி வளரும்’’என்று கூறினார்.

பாரத விலாஸ்!



சிவன், அம்பிகை, விஷ்ணு, விநாயகர், சூரியன் ஆகிய ஐந்து தெய்வங்களையும் வழிபடும் முறைக்கு பஞ்சாயதனம் என்று பெயர். இந்த ஐந்தில் எது இஷ்ட தெய்வமோ அதை நடுவில் வைத்து, மற்ற தெய்வங்களைச் சுற்றிலும் வைத்து வழிபட வேண்டும். விக்ரகமாக வைக்காமல், இயற்கையாகக் கிடைக்கும் கற்களையே இதற்குப் பயன்படுத்துவர். நர்மதா நதியில் கிடைக்கும் கல்லை சிவலிங்கமாகவும், ஆந்திராவிலுள்ள சுவர்ணமுகி ஆற்றங்கரையில் கிடைக்கும் சுவர்ணரேகசிலா என்னும் பொன் நிறக் கற்களை அம்பிகையின் அம்சமாகவும், பீகாரில் ஓடும் சோணபத்ரா நதியில் கிடைக்கும் சிவப்புக்கற்களை விநாயகராகவும், நேபாளம் கண்டகி நதியிலுள்ள கிடைக்கும் சாளக்கிராமக் கற்களை விஷ்ணுவாகவும், தஞ்சை மாவட்டத்தில் வல்லத்தில் கிடைக்கும் ஸ்படிக கற்களை சூரியனாகவும் வைத்துக் கொள்வர். இதனோடு, முருகனை வழிபட விரும்புபவர்கள் வேல் ஒன்றையும் சேர்த்துக் கொள்ளலாம். நாட்டின் ஒருமைப்பாட்டை உணர்த்தும் பஞ்சாயதன பூஜை முறை பின்பற்றும் வீட்டை பாரத விலாஸ் என்றே பாராட்டி மகிழலாம்.

64-வது குடியரசு தினம்!

உலகின் பெரிய ஜனநாயக நாடுஇந்தியா, என்பதில் பெருமை கொள்கிறோம். 121 கோடி மக்கள் தொகையை கொண்ட நம் நாட்டில் மொழி, மதம், இனம் என வேறுபாடுகள் இருந்த போதும், ஜனநாயகப் பாதையில் தொடர்ந்து பயணிப்பது தான் சிறப்பம்சம்.விஞ்ஞானம், அறிவியல், விளையாட்டு, கல்வி, சினிமா என அனைத்து துறைகளிலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, இந்தியா முன்னேறிவருகிறது. கடந்த 15 ஆண்டுகளில்தனிமனித வருமானம் அதிகரித்துள்ளது.வடக்கில் பனிபடர்ந்த இமயமலை,தெற்கில் பசுமையான கேரளா,மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் வடகிழக்கு மாநிலங்கள், பாலைவனம் உள்ள ராஜஸ்தான் என புவியியல் அமைப்பிலும் பல வித்தியாசங்கள். சரியும் ஜனநாயகம்இவ்வளவு சிறப்புமிக்க இந்தியஜனநாயகம், இன்றைய நவீன காலத்தில் பல்வேறு பிரச்னைகளில் சிக்கிதவிக்கிறது. ஜனநாயகத்தின் தலைமை இடமான பார்லிமென்ட், பயனில்லாத இடமாக மாறிக்கொண்டிருக்கிறது. காந்தி, நேரு, வல்லபாய் படேல், நேதாஜி என ஆரம்பகால தலைவர்களின் சிறப்பான பணியை தொடர முடியாமல், தற்போதைய அரசியல்வாதிகள் தடுமாறுகின்றனர். 

இதனால் ஜனநாயகத்தின் மீதுமக்கள் நம்பிக்கை இழக்கின்றனர். தற்போதைய எம்.பி.,க்களில் மூன்றில் ஒரு பகுதியினர், கிரிமினல் பின்னணி உடையவர்கள். எந்த கூட்டத் தொடருமே, முழுமையான நாட்களை நிறைவு செய்வதில்லை. ஒவ்வொரு திட்டத்திலும் கோடிக்கணக்கில் ஊழல் நடக்கிறது.ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் மாறி மாறி அவர்கள் செய்த ஊழல்களை பற்றி பேசவே நேரம் கிடைக்கவில்லை. பின், மக்களைப்பற்றி சிந்திக்க எப்படி நேரம் வரும். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, இந்தியர்களின் கறுப்பு பணத்தை பற்றிய விவரம் இன்றளவும் வெளியிடப்படவில்லை. வெளிநாட்டு, உள்நாட்டு பயங்கரவாதம், நவீன இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான சி.பி.ஐ., ஆளும் கட்சியின், கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு ஆட்சியில் போடப்படும் வழக்குகள், அடுத்த ஆட்சியில், அதன் சுவடே இல்லாமல் தள்ளுபடி செய்யப்படுகிறது. இது,குற்றங்கள் அதிகரிக்கத்தான் வழி செய்யும். வாரிசு அரசியல், அசுர வளர்ச்சி பெறுகிறது. அதே நேரம், அரசியலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு இன்னும் கானல் நீராக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், ஆண்டுதோறும் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர், ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கும் கீழ் வருமானம் பெறுபவர்கள். நாளுக்குநாள் உயரும் விலைவாசியால், இவர்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதற்கு ஒரே தீர்வு, பெரும்பான்மை மக்களுக்கு பயன்பெறக் கூடிய திட்டங்களை நிறைவேற்றுவதற்குஅரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். மறுபக்கம், ஜனநாயகத்தை பாதுகாக்க, மக்களும் ஒத்துழைக்கவேண்டும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...