|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 March, 2012

"என்றென்றும் ராஜா"





வளர்ப்பு நாய்களும் நுண்ணறிவும்....!


மனிதர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளில் நாய்களுக்கு மிக முக்கிய இடம் உண்டு. வெளிநாடுகளில் நாய்களுக்கு உயில் எழுதிவைத்த சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த அளவிற்கு நாய்களின் மீது பாசம் வைத்துள்ளனர். நம் நாடுகளிலும் நன்றியுள்ள நாய்கள் மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்துள்ளன. உலகம் முழுவதும் உள்ள நாய் வகைகளில் வீடுகளிலும், தொழிலுக்காகவும் வளர்க்கப்படும் மிகச்சிறந்த நாய்வகைகளை அறிந்து கொள்வோம்.

ஜெர்மன் ஷெப்பர்டு

ஜெர்மன் ஷெஃபர்டுகள் பல நிறங்களில் காணப்படுகின்றன. பொதுவாக கருப்பு, காய்ந்த பழுப்பு, உள்ளிட்ட நிறங்கள் பிரசித்தி பெற்றவை. உலகின் முதன்மையான காவல், பாதுகாப்பு நாய் என்றால் அது ஜெர்மன் ஷெஃபர்டுதான். அவற்றின் விசுவாசம், காவல்காக்கும் தன்மை போன்றவற்றால் இந்த நாயினம் உலகின் வளர்ப்பினநாய்களில் ஒன்றாக உயர்ந்தது.

ஜெர்மன் ஷெப்ஃபர்டு நாய்கள் முதலில் கால்நடை மந்தையை மேய்த்து செல்வதற்காகவே உருவாக்கப்பட்டது. இதன் கம்பீரமான தோற்றம் நுண்ணறிவு, கட்டளை பயிற்சியின் போது வெளிப்படுத்திய ஆற்றல் போன்றவை காரணமாக அவை காவல் காக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.

பார்டர் கோலி

பார்டர் கோலி நாய்கள் மிகவும் சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் கொண்டவை. இதன் நுண்ணறிவுத் திறனுக்காக வளர்க்கப்படுகிறது. கட்டளைகளை ஏற்று அதற்கேற்ப செயல்படும் திறம் கொண்டவை

கோல்டன் ரெட்ரீவர் 

கோல்டன் ரெட்ரீவர் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள வளர்ப்பு நாயாகும். எஜமானர்களுக்கு விசுவாசம் மிக்கது. குடும்பத்தில் உள்ள அனைவருடனும் பாசத்துடன் பழகக் கூடியது. 200 வகையான கட்டளைகளை புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவை. புத்திக்கூர்மையுள்ள இந்த நாய்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி தேடித் தரக்கூடியவை கோல்டன் ரெட்ரீவர். 

டாபர்மேன் பின்ஷர் 

டாபர்மேன் நாய்கள் அச்சம் அறியாதவை, அளவற்ற வலிமை கொண்டவை. அதேசமயம் அழகும், புத்திசாலித்தனமும் கொண்டவை. குடும்பத்தினரும் பாச உணர்வோடு பழகும் தன்மை கொண்டவை.

ஷெட்லாந்த் ஷீப் டாக் 

உலகில் உள்ள புத்திசாலியான நாய்களில் ஒன்று ஷெட்லாந்த் ஷீப்டாக். இவை எஜமானர்களின் குணத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவதில் கெட்டிக்காரத்தனம் கொண்டவை. இந்த வகை நாய்கள் மனிதர்களுடன் பாசமாக பழகக் கூடியவை. 

லேப்ரார்டர் ரெட்டீரிவர் 

அமெரிக்காவிலும், உலக அளவிலும் பெரும்பாலான குடும்பங்களில் இந்த நாய் வளர்க்கப்படுகிறது. இது அன்பான நாய். அனைவரிடமும் நன்றாக பழகும். குழந்தைகளுக்கு பாதுகாப்போடு பாசத்தையும் காட்டும். சுயமாக வேலை செய்யும். மனிதர்களின் நடத்தைகளை அறிந்து அவர்களின் செயல்களுக்கு ஏற்ப பதில் தரும். அவசரகாலத்தில் புத்திச்சாலித்தனத்தோடு செயல்படும்

பாப்பிலான்

உலகிலேயே பாசமான நாய் என்றழைக்கப்படுகிறது பாப்பிலான். இதன் அழகிற்காகவும், பாசத்திற்காகவும் உலகம் முழுவதும் விரும்பப்படுகிறது. காதுகளில் முடி அடர்ந்து பட்டாம்பூச்சியின் இறகுகளைப் போல காணப்படும். சிறிய உருவம்தான் என்றாலும் போட்டிகளில் அசராமல் பங்கேற்கும். புத்திக்கூர்மை கொண்ட இந்த நாய்கள் எஜமானர்களின் சொத்துக்களை பாதுகாப்பதில் கெட்டிக்காரத்தனம் கொண்டவை.

ராட்வீலர்

இந்த நாய்க்கு மோப்ப சக்தி அதிகம், அதனால் போலீஸ், உளவுப்பிரிவு போன்றவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. காவல் புரிவதிலும், கண்டறிவதிலும் கெட்டிக்காரத்தனம் கொண்டவை.

ஆஸ்திரேலியன் கேட்டில் டாக்

ஆஸ்திரேலியாவின் நாட்டு இனத்தைச் சேர்ந்த நாய் இது. உலகிலேயே புத்திசாலியான நாய் என்று கருதப்படுகிறது. இது விழிப்புணர்வு மிக்கவை. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பலசாலிகள் இந்த நாய்கள். இதனால் ஆஸ்திரேலியாவில் கால்நடை மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. சகிப்புத்தன்மையும், கருணையும், கொண்டவை. கூர்மையான கண்களைக் கொண்ட இந்த நாய்கள் சொத்துக்களை பாதுகாப்பதில் கெட்டிக்காரத்தனம் கொண்டவை.

தேவானந்தாவைப் பிடிக்க ரெட் அலர்ட் உயர்நீதிமன்றத்தில் மனு!


கொலை வழக்கில் சென்னை நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ரெட் நோட்டீஸ் கொடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கொலை வழக்கில் சென்னை நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

இந்த வழக்கில் இந்திய வெளியுறவுத் துறை அளித்துள்ள பதில் மனுவில் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தா அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தரும்போது கைது செய்ய முடியாது என்றும், இது இருநாடுகளுக்கு இடையேயான தூதரக உறவை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒருவர் குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் அவர் இந்திய குடிமகனாகவோ அல்லது வெளிநாட்டவராகவோ இருந்தாலும் தலைமறைவாக இருக்கும் அவரை சம்பந்தப்பட்ட போலீசார் சி.பி.ஐ.யை அணுகி சர்வதேச போலீஸ் துணையுடன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக ரெட் நோட்டீஸ் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் டக்ளஸ் 17 ஆண்டு தலைமறைவு குற்றவாளியாக இலங்கையில் இருந்து வருகிறார். அவருக்கு எதிராக ரெட் நோட்டீஸ் கொடுக்க சி.பி.ஐ. துணையுடன் இன்டர்போல் போலீசாரை தமிழக போலீசார் அணுகி இருக்க வேண்டியது கடமையாகும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. எனவே டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ரெட் நோட்டீஸ் கொடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழக உள்துறை செயலாளர் போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதி்ல் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இங்கிலாந்தில் உள்ள 120,000 பிரச்சனைக்குரிய குடும்பங்கள் பற்றி ஆய்வு 72,000 குடும்பங்களில் குழந்தைகளுக்கு தந்தையே இல்லை.


இங்கிலாந்தில் சுமார் 72,000 குடும்பங்களில் உள்ள குழந்தைகள் தந்தையின்றி வளர்கின்றனர் என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இங்கிலாந்தில் உள்ள 120,000 பிரச்சனைக்குரிய குடும்பங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 72,000 குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு தந்தையே இல்லை. அந்த குழந்தைகள் தாயின் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். மீதமுள்ள குடும்பங்களில் தந்தைகள் இருந்தாலும் அவர்கள் குடிகாரர்களாகவோ, போதைக்கு அடிமையாகவோ, வேலைக்குப் போகாமல் ஊர்சுற்றுபவர்களாகவோ உள்ளனர். இதனால் அவர்களால் தங்கள் பிள்ளைகளு்ககு சிறந்த முன்மாதிரியாக இருக்க முடியவில்லை. இதில் விந்தை என்னவென்றால் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட 120,000 குடும்பங்களில் 20 சதவீத குடும்பங்களில் தலா 5 குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே வறுமையில் வாடும் குடும்பங்களில் ஏராளமான குழந்தைகள் இருப்பது மேலும் பிரச்சனை தான். இவ்வாறு பிரச்சனைகள் அதிகமுள்ள குடும்பங்கள் அரசுக்கு தலைவலியாக உள்ளது. 

இது குறித்து அந்நாட்டு அரசு அதிகாரி எரிக் பிக்கில்ஸ் கூறியதாவது, பல குடும்பங்களில் தந்தைகளே இல்லாதது பெரிய பிரச்சனையாக உள்ளது. தந்தைகள் இருக்கும் குடும்பங்களில் அவர் குடிகாரர்களாகவோ, போதைப் பொருட்களுக்கு அடிமையாகவோ, வேலைக்கு செல்லாதவர்களாகவோ உள்ளனர். அத்தகைய தந்தைகளை வேலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்கள் வேலைக்கு சென்று சம்பாதித்து பணம் கொண்டு வந்தால் தான் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க முடியும் என்றார். இந்த பிரச்சனை உள்ள குடும்பத் தலைவர்களை வேலைக்கு அனுப்ப, குடி மற்றும் போதைப் பழக்கங்களில் இருந்து விடுபடவைக்க இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் 448 மில்லியன் பவுண்ட் செலவிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டக் குழுவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் பிரச்சனை உள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றுக்காக சென்று அந்த குடும்பத் தலைவர்களை ஒழுங்குபடுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

திருமணமான ஒரு மணி நேரத்திலேயே மனைவியை விவகாரத்து...


மலேசியாவில் திருமணமான ஒரு மணி நேரத்திலேயே தனது காதல் மனைவியை ஒருவர் விவகாரத்து செய்ய விண்ணப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் லீ(23) என்பவர் தனது காதலி வாங்கை(27) சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து பதிவு திருமணம் செய்து கொண்டார். அப்போது அங்கு ஒரு கார் டீலர் வந்துள்ளார். அவரைப் பார்த்த வாங் தனக்கு புதிய கார் ஒன்றை வாங்கித் தருமாறு கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு லீ மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வாங் தனது கணவருடன் தகராறு செய்துள்ளார். அவர்களின் தகராறு முற்றியபோது புதிய கார் வாங்கித் தரவில்லை என்றால் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன் என்று வாங் மிரட்டியுள்ளார். ஆனால் லீ அதற்கும் மசியவில்லை. இவ்வளவு பிடிவாதம் பிடிக்கும் மனைவி தேவையில்லை என்று நினைத்த அவர் வாங்குடன் விவாகரத்து பிரிவுக்கு சென்று அதற்கான விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுத்தார். இதையடுத்து அவர்களுக்கு விரைவில் விவாகரத்து கிடைக்கவிருக்கின்றது. கார் கேட்டு மனைவி அடம்பிடித்ததால் திருமணமான ஒரு மணி நேரத்திலேயே அவரை கணவர் விவகாரத்து செய்த சம்பவம் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதான் இந்தியா...

பாஸ் பண்ணியும் கண் தெரியாததால் வேலைக்கு சிபாரிசு தேடிய அவலநிலை !
 2008ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. குரூப் பி தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற பெண் பூர்ணிமா ஜெயினுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலையீட்டால் ரயில்வேத் துறையில் வேலை கிடைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் டாக்டர் பிரகாஷ் ஜெயின். அவரது மகள் பூர்ணிமா ஜெயின். 25 சதவீதம் மட்டுமே கண்பார்வையுள்ளவர். அவர் 2008ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. குரூப் பி தேர்வில் 1,123 மதிப்பெண்கள் எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். நேர்காணலிலலும் 300க்கு 210 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால் அவரது பார்வைக் குறைபாட்டைக் காரணம் காட்டி அவருக்கு அரசு வேலை வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து அவர் இது குறித்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அவரை மத்திய நிர்வாக ஆணைய அலுவலகத்தை அணுகுமாறு கூறியது. அதன்படி அவரும் மத்திய நிர்வாக ஆணையத்தை அணுகினார். அங்குள்ள அதிகாரிகள் நிச்சயம் அரசு வேலை வழங்குவதாக அவரிடம் உறுதியளித்தனர். ஆனால் அவருக்கு பணிநியமன உத்தரவு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் சிபிஎம் எம்.பி. பிருந்தா காரத் உதவியால் பிரதமர் மன்மோகன் சிங்கை அணுகி தனது நிலையை எடுத்துக் கூறினார். பிரதமரின் தலையீட்டால் பூர்ணிமாவுக்கு ரயில்வே துறையில் வேலை கிடைத்துள்ளது. அவர் அடுத்த வாரம் பணியில் சேர்கிறார். 4 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு வேலை கிடைத்துள்ளதில் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

அணுஉலை! கண்ணீர் விடும் கல்பாக்கம்


தமிழினத்தலைவர் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட ஆதாரத்தை வெளியிடுகிறது சேனல் 4!


தண்டிக்கப்படாத போர்க்குற்றம்' எனும் ஆவணப்படத்தை தயாரித்துள்ள சேனல் 4, வருகிற 14ஆம் தேதி இரவு அதனை வெளியிடுகிறது. ஈழத்தில் நடந்துள்ள போர்க்குற்றங்களின் உண்மையான ஆதாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் நோக்கத்தில் இந்த ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் திரையிடப்படுகிறது.இந்த ஆவணப்படம் பல அதிர்வலைகளை தோற்றுவிக்கும் என நம்பப்படுகிறது.
இந்த ஆவணப்படத்தில், பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் (வயது 12) ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் காட்சி வருகிறது. பாலச்சந்திரனும் அவருடன் இருந்த மெய்க்காப்பாளர்களும் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கான முழு ஆதாரங்களும் கிடைக்கப் பெற்றிருப்பதாக கூறுகிறது சேனல் 4 நிர்வாகம்! 
""பாலச்சந்திரன் நெஞ்சில் 5 தடவைகள் சுட்டிருக்கிறார்கள்'' என்று தெரிவிக்கிறார் சேனல் 4க்கு கிடைத்த ஆதாரங்களை ஆராயந்து ஆய்வு அறிக்கை சமர்பித்துள்ள பேராசிரியர் டெரிக் பவுண்டர்!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...