|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 August, 2011

உஷ்ணம் போக்கும் கேப்பைக் கூழ்!

ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இதனை கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது. மலைப்பகுதிகளில் தானாக வளரக்கூடிய சிறு தானியங்களில் அற்புதமான சத்துக்கள் மறைந்துள்ளன. சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை. இவை சத்து மிக உறுதியான உடலமைப்பை தந்து, உழைக்கும் மக்களின் உறுதியை பலப்படுத்தும் உணவாகத் திகழ்கிறது.

இச்சிறுதானியங்கள் அதிகளவு தாதுப் பொருட்களான இரும்பு, மெக்னிசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இத்தானியங்களில் பி வைட்டமின் மற்றும் நைசின் போலிக் ஆசிட் உள்ளிட்ட அமினோ அமிலங்களும் உள்ளன. மேலும், இவை அதிகளவில் உட்கொள்ளும் போது விரைவில் செரிமானமடைவதுடன் மற்ற சத்துக்களையும் உடம்புக்குத் தேவையான அளவில் மாற்றித்தரக்கூடிய சக்தியையும் கொண்டுள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து இரைப்பை புழுவைத் தடுத்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை கொண்டவை.

ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இது கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் பிங்கர் மில்லட் என்றும், தமிழில் கிராமங்களில் இப்பயிர் இன்றைக்கும் கேப்பை என்றே அழைக்கப்படுகிறது. இப்பயிர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது.

இந்தியாவில் விளையும் சிறுதானியத்தில் 25 சதவீதம் கேழ்வரகு ஆகும். அரிசி மற்றும் கோதுமையை விட அதிகளவு ஊட்டசத்து நிறைந்தது. இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு.

உடலுக்கு வலிமை தரும்: கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன. இதுதவிர பி கரேட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் உடலுழைப்பாளிகளாகவும் திடகாத்திரமானவர்களாகவும், திகழ்ந்து வந்துள்ளனர்.

கேப்பையை கூழாக சாப்பிடுவதை விட ரொட்டி போல செய்து சாப்பிடலாம். ஏனெனில் கூழாக உண்ணும் போது சீக்கிரம் ஜீரணம் ஆயிடும். மீண்டும் பசி எடுக்கும் எனவே ரொட்டி ஜீரணம் ஆக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் பசி குறைவா எடுக்கும்.

உஷ்ணத்தை குறைக்கும்: ராகி களி உடல் உஷ்ணத்தைக் குறைத்து குடலுக்கு வலிமை தரும். இன்றைக்கும் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் கிராமங்களில் களி செய்து உண்கின்றனர். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கேப்பை கூழ் ஊற்றுவது வாடிக்கையாக உள்ளது. இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. ராகி மால்ட் செய்தும் சாப்பிடலாம்.

பெண்கள் ஏன் திகில் படத்தைப் பார்த்தால் பயப்படுகிறார்கள்?

படங்களைப் பார்த்தால் ஏன் பெண்கள் பயப்படுகிறார்கள் என்று சிந்தித்ததுண்டா? அதற்கு காரணம் பெண்களின் மூளை தான் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
திகில் படங்கள் பார்த்தால் பெண்கள் வீல் என்று கத்துவது வழக்கம். கிரீச்சிட்ட பீதியுடன் திகில் படம் பார்க்கும் பெண்கள் அதிகம். திகிலூட்டும் எந்த விஷயத்துக்குமே ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள்.

இதற்கு என்ன காரணம், பெண்கள் மட்டும் ஏன் பயப்படுகிறார்கள் என்று லண்டனைச் சேர்ந்த யூனிவர்சிட்டி காலேஜின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சுமார் 30 ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் அழகான இயற்கை காட்சி புகைப்படங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நிறைந்த புகைப்படங்களும் காண்பிக்கப்பட்டன. அழகான படங்களைப் பார்க்கும்போது சிரிக்க வேண்டும் என்றும், வன்முறைப் படங்களைப் பார்க்கையில் முகத்தை சோகமாக வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டார்கள்.

அதன் பிறகு அவர்களின் நினைவாற்றல் பரிசோதிக்கப்பட்டது. அதில் பெண்கள் அழகான, அமைதியான விஷயங்களை எதிர்கொள்வதை விட வன்முறை உள்ளிட்ட மோசமானவற்றைப் பார்க்கும்போது அவர்களின் பய உணர்வுகள் அதிகரிப்பது தெரிய வந்தது.

அடுத்து திகில் படம் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் இருப்பதால், அவர்களின் மூளை தூண்டுவிக்கப்பட்டு அதீத அச்சத்திற்குள்ளாகின்றனர். அதனால் தான் பயப்படுகிறார்கள். ஆனால் ஆண்கள் அவ்வாறு எதிர்பார்ப்பதில்லை. வரட்டும் பார்க்கலாம் என்றிருக்கின்றனர்.

இது குறித்து ஆய்வுக்குத் தலைமை தாங்கிய டாக்டர் கியூலிலியா கல்லி கூறியதாவது, பெண்கள் திகில் படங்களைப் பார்க்கையில் எப்பொழுது திகில் காட்சி வரும் என்ற எதிர்பார்ப்பிலேயே இருப்பார்கள். ஒரு வகையான இசை வந்தால் உடனே திகில் காட்சி வரப்போகிறது என்று நினைத்துக் கொள்வார்கள். இது அவர்கள் மூளையில் பதிந்துவிடுகிறது. ஆனால் ஆண்கள் அப்படியில்லை.

கெட்டவைகளை எதிர்பார்ப்பது, அவற்றை நினைவில் வைத்துக் கொள்வது தான் பயத்திற்கு காரணம் என்றார்.

ஆஸ்துமா போக்கும் அம்மன் பச்சரிசி!

இயற்கையாக மண்ணில் வளரும் பல தாவரங்கள் மூலிகைகளாகவும், மருத்துவ குணம் கொண்டவையாகவும் காணப்படுகின்றன. அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை. நம்முடைய பாராமுகத்தினால் மழைக்காலத்தில் அவை தானாகவே வளர்ந்து கோடை காலத்தில் வாடிப்போகின்றன. சித்தர்கள் மட்டுமே அந்த மூலிகைகளை கண்டறிந்து மருத்துவத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

அம்மன் பச்சரிசி எனப்படும் தாவரம் நம் வீட்டின் ஓரங்களிலும், சாலையோரங்களிலும் தானாகவே வளரும் சிறு தாவரம். இது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பகுதிகளிலும், வெப்பமண்டலப்பகுதிகளிலும் வளரும் குறுஞ்செடி. தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் விவசாய நிலங்களில் கழைச் செடியாக காணப்படும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் ஃபிளேவனாய்டுகள், டெர்பினாய்டுகள், அல்கனின்கள்,பினோலிக் அமிலங்கள், சிகிமிக் அமிலம் மற்றும் கோலைன் அடங்கி உள்ளன. வொன்ட்ரி அகோன்டேன்,மெரிகியல் ஆல்கஹால் யூபோஸ்டிரால்,டாராசிரால் டாராசிரோன் டைனி அடோக்சின் போன்றவை பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

குடல் பூச்சிகளை வெளியேற்றும்; பெரியம்மன் பச்சரிசி, சிற்றம்மன் பச்சரசி, சிவப்பம்மான் பச்சரிசி, வெள்ளையம்மான் பச்சரிசி,வயம்மாள் பச்சரிசி என பல வகை உள்ளன. இதன் முழுத்தாவரமும் மருத்துவ பயன் கொண்டது.

இத்தாவரத்தின் தரைமேல் உறுப்புகள் மூச்சுக்குழல் ஆஸ்துமா போக்க வல்லது. இருமல் போக்குவி, மிததுயில் தூண்டுவி. ஆங்கில அமெரிக்க மருத்துவத்தில் குடல் அமீபா நோயினைப் போக்க பயன்படுகிறது. வயிற்றுக் குடல் பூச்சிகளையும் வெளியேற்றும். இது வயிற்றுப்பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும்,வெப்புத் தணிப்பானாகவும், சதை நரம்புகளில் வீக்கம் குறைப்பானாகவும், செயற்படுகிறது.

இலையை சமைத்து உண்ண வறட்சி அகலும், வாய், நாக்கு, உதடு, ஆகியவற்றில் வெடிப்பு ரணம் தீரும். இந்த இலையை அரைத்து பால் அல்லது மோரில் கலக்கிப் பெரியவர்களுக்குக் கொடுக்க வெட்டை, வெள்ளைபடுதல், மருந்துகளின் உஷ்ணம் ஆகியவைபோகும்.

தூதுவளை இலையுடன் துவையல் செய்து சாப்பிட்டால் உடல் பலப்படும்.

கீழாநெல்லியுடன் சம அளவு அம்மன் பச்சரிசி இலை சேர்த்து காலை, மதியம், இரு வேளையும் எருமைத் தயிரில் உண்ண உடம்பு எரிச்சல், நமைச்சல், மேக ரணம், தாது இழப்பு தீரும். இலையை அரைத்து ஊறலுடன் பரவுகின்ற படைகளுக்குப்பூச அவை குணமாகும்.

வயிறு நோய்கள் போக்கும்;சிவப்பு அம்மன் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம், ஆகியவற்றை போக்கும் தன்மை உண்டு. இதன் மூலம் சுக்கில தாது விருத்தியாகும். இதனை வெள்ளிபஸ்பம் என்றும் கூறுவர். இதை நிழலில் உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு 5 - 7 குன்றுமணி எடை வீதம் மோரில் கொடுக்க குழந்தைகளுக்கு மலத்தை போக்கும், வயிறு தொடர்பான நோய்களையும் கிருமிக் கூட்டத்தையும் ஒழிக்கும்.

அம்மன் பச்சரி செடியின் பால் முகப்பரு, பால்பரு ஆகியவற்றைப் போக்கும். நக சுற்று ஏற்பட்டுள்ள இடத்தில் இதன் பாலை தடவி வர குணமாகும். கால் ஆணி வலி குறையும். இலையை நெல்லிக்காய் அளவு நன்கு அரைத்துபசும் பாலில் கலக்கிக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுக்கச் சிறு நீருடன் குருதிப்போக்கு, மலக்கட்டு, நீர்கடுப்பு, உடம்பு நமச்சல் ஆகியவை தீரும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அம்மன் பச்சரிசிப் பூவை அரைத்து கொட்டைப் பாக்களவு பாலில் கலந்து ஒரு வாரம் கொடுக்கத் தாய் பால்பெருகும்.

ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு கூடிட்டாய்ங்க!

சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என பிரிந்து நின்று திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த மூன்று நிறுவனங்களும், பிரச்சினை என்று வந்ததும் ஒன்றுக்கொன்று கரம் கோர்த்து நிற்கின்றன.

இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்துதான் அஜீத்தின் மங்காத்தாவை வெளியிடுகிறார்கள் என்பது இன்றைய ஸ்பெஷல் செய்தி.மங்காத்தா திரையரங்குகளைத் தொடுவதே சிரமம் என்று கடந்த சில தினங்கள் முன்பு வரை செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில்தான் ஞானவேல் ராஜா உள்ளே வந்தார். அவர் படத்தின் தயாரிப்பாளரான க்ளவுட் நைன் பெயரையே அவர் சுத்தமாக மறைத்துவிட, போங்கப்பா நீங்களும் உங்க டீலும் என கடுப்பானார் தயாநிதி அழகிரி.

இந்த நேரத்தில் அவரது க்ளவுட் நைன் பேனரையும் சன் பிக்சர்ஸையும் இணைத்து வைத்தவர் கருணாநிதியின் மற்றொரு வாரிசான உதயநிதி ஸ்டாலின். தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் உதவியுடன் சன் பிக்சர்ஸ் வழங்கும் அஜீத்தின் மங்காத்தா என இப்போது நிலைமை மாறியிருக்கிறது.

விளம்பரங்களில் 'க்ளவுட் நைன் - சன் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்' என்றே குறிப்பிட்டுள்ளனர்.இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தயாநிதி அழகிரி, "அண்ணன் உதயநிதிக்கு நன்றி. அவர்தான் இந்தப் படம் சன் பிக்சர்ஸ் மூலம் வெளியிட ஏற்பாடு செய்து கொடுத்தார்" என்று கூறியுள்ளார்.

பொதுவாக ஒரு படத்துக்கு 25 நாட்களுக்கு மேல் விளம்பரம் செய்து வெளியிடுவது சன் பிக்சர்ஸ் பாணி. ஆனால் தயாநிதிக்காக இந்தப் படத்தை ஒரு வாரத்துக்குள் விளம்பரம் செய்து வெளியிடுகிறார்கள்.படம் வரும் 31-ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என உறுதியளித்துள்ளார் தயாநிதி அழகிரி.

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியல்!

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்திரா நூயிக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. அதேபோல காங்கிரஸ் தலைவர்சோனியா காந்திக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதலிடத்தை ஜெர்மன் அதிபர் ஏஞ்சலொ மார்க்கல் பெற்றுள்ளார்.

55 வயதாகும் பெப்சி நிறுவன தலைவர் இந்திரா நூயி 4வது இடத்தைப் பிடித்துள்ளார். 64 வயதான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 7வது இடத்தில் உள்ளார். ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயலதிகாரி சந்தா கோச்சார் 43வது இடத்திலும், பயோகான் தலைவர் கிரண் மஜூம்தார் ஷா 99வது இடத்திலும் உள்ளனர்.

ஐரோப்பிய யூனியனின் ஒப்பில்லாத தலைவியாக ஏஞ்செலா மார்க்கல் விளங்குவதாக அவருக்கு போர்ப்ஸ் புகழாரம் சூட்டியுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் 2வது இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் பிரேசில் முதல் பெண் அதிபராக சில மாதங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட தில்மா ருஸ்ஸாப் இருக்கிறார்.

ஐந்தாவது இடத்தில் பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரி ஷெரில் சந்த்பர்க், 6வது இடத்தில் மெலின்டா கேட்ஸ், 8வது இடத்தில் மிஷல் ஒபாமா, 9வது இடத்தில் ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டைன் லகார்டே, 10வது இடத்தில் கிராப்ட் புட்ஸ் நிறுவன சிஇஓ ஐரீன் ரோசன்பெல்ட் ஆகியோர் உள்ளனர். இந்தப் பட்டியலில் மொத்தம் உள்ள 100 பேரில் 65 பேர் அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா, சீனா, இஇந்தியா, இங்கிலாந்திலிருந்து தலா 3 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வயதில் குறைந்த பெண் லேடி ககாதான். 25வயதான இவர் 11வது இடத்தில் இருக்கிறார். அதிக வயதான பெண் இங்கிலாந்து ராணி எலிசபெத்தான். 85 வயதான இவர் 49வது இடத்தைப் பிடித்துள்ளார். ஒப்ரா வின்பிரே, பியான்ஸ் நோல்ஸ், ஏஞ்செலீனா ஜூலி, ஹாரி பாட்டர் நாவலாசிரியை ஜே.கே.ரோலிங் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

அன்னா ஹசாரேவுடன் விஜய் உண்ணாவிரதம்!

ஊழலை ஒழிக்க காந்தியவாதி அன்னா ஹசாரே மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் விஜய், டில்லியில் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார். நாட்டில் ஊழ‌லை ஒழிக்கவும், வலுவான லோக்பால் மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தியும் தொடர்ந்து 10வது நாளாக காந்தியவாதி அன்னா ஹசாரே, டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஹசாரேயின் இந்த உண்ணாவிரதத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி கொண்டே போகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். இதற்காக விமானம் மூலம் டில்லி சென்ற விஜய், அங்கிருந்து நேரடியாக ராம் லீலா மைதானத்திற்கு வந்து, ஹசாரேயை சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்து உண்ணாவிரதம் போராட்டத்தில் அவரும் கலந்து கொண்டார்.

பின்னர் உண்ணாவிரத மேடையில் விஜய் பேசியதாவது, ஊழலை ஒழிக்க ஹசாரே அவர்கள் மேற்கொண்டுள்ள இந்த உண்ணாவிரதம், நாடுமுழுவதும் இளைஞர்கள் மத்தியில், புது எழுச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த எழுச்சியை கோடிக்கணக்கான இந்தியர்கள் கவனித்து வருகிறார்கள். இது வெற்றி பெற வேண்டும் எனவும் நினைக்கிறார்கள். வெற்றி கிடைத்தால் காந்தியின் அஹிம்சை கொள்கைக்கு இது மேலும் வலு சேர்க்கும். இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்பது நமது கடமை, இதில் நானும் பங்கேற்று எனது கடமை செய்துள்ளேன். இந்த உண்ணாவிரத ‌போராட்டம் எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு ஹசாரே அவர்களின் உடல்நலமும் முக்கியம், அவருக்கு  ஆரோக்கியமான உடல்நிலையை அந்த ஆண்டவன் வழங்க வேண்டும். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு நானும், எனது மக்கள் இயக்கமும் முழு ஆதரவு அளிக்கும் என்றார்.

ஹசாரேவுக்கு ஆதரவாக இருதினங்களுக்கு முன்னர் தமிழ் திரையுலகினர் உண்ணாவிரதம் இருந்தபோது ஒருசில நடிகர், நடிகையரை தவிர மற்ற நடிகர்கள் யாரும் விஜய், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் உட்பட கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

50 வயதிலும் .... Nancy Dell







 She likes to think that she doesn't look a day over 30 and judging by these pictures Nancy Dell' Olio few observers would argue with her claim. 

The former lover of ex-England manager Sven Goran Eriksson celebrated her 50th birthday in style showcasing her youthful body in a bikini while sunning herself in Fasano, Italy. Nancy relaxed and caught some rays in a skimpy bronze two-piece that many women of her age would no doubt feel a little insecure about wearing.

தனது காதலருடன் அமெரிக்காவில் Miley Cyrus - முளைச்சு 3 இழை விட வேண்டாம் முலச்சாவே போதும் லவ் பண்ணலாம்!






கலண்டருக்காக தன் உடலை நிர்வானப்படுத்திய நடிகை - Kate Moss





விமான பணிப்பெண்களின் மார்பகத்தை சோதிப்பதால் சர்ச்சை!

தென்கொரியா தலைநகரில் இந்தோனேஷியா நாட்டுக்கு சொந்தமான கருடா விமான சேவை நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது.  இந்த விமான நிறுவனம் சார்பில் இங்கிருந்து 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட பணிப்பெண்கள் வேலை பார்க்கின்றனர். இவர்களை ஒவ்வொரு முறையும் விமானத்தில் பறக்கும் முன்பு டாக்டர்களை கொண்டு முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. பணிப்பெண்கள் சிலர் சிலிகான் மார்பகங்களை பொருத்தியுள்ளனர். மேலும் மார்பகங்களில் பச்சை குத்திக் கொள்கின்றனர்.

விமானம் வானத்தில் பறக்கும் போது, காற்றின் அழுத்தம் குறைவு ஏற்பட்டால் சிலிகான் மார்பகங்கள் வெடிக்கவும், பச்சை குத்திய மார்பகங்களில் வலியும் தோன்றும் ஆபத்துக்கள் உள்ளன.   எனவே பணிப்பெண்கள் சிலிகான் மார்பகங்கள் பொருத்தி இருக்கிறார்களா? பச்சை குத்தி இருக்கிறார்களா? என்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

அப்படிப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வசதிகள் செய்யப்படுகின்றன. ஆனால் உடைகளை களையச் செய்து மார்பங்களை கையால் பிடித்து நடத்தப்படும் இந்த சோதனை சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மார்பகத்தில் சோதனை நடத்த மாற்று வழிகள் பல இருக்கும்போது கையினால் பிடித்து சோதித்து பார்ப்பது ஏற்க முடியாதது. அதுவும் ஆண் டாக்டர்கள் இதை செய்வது சகிக்க முடியாதது என்று பெயர் சொல்ல விரும்பாத பணிப்பெண் ஒருவர் கூறியுள்ளார்.

இதுபற்றி விமான நிறுவன அதிகாரி ஒருவர், விமான பணிப்பெண்கள் உடலில் பச்சை குத்திக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து வாடகைக்கு அமர்த்தப்படும் பணிப்பெண்களுக்கும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் மார்பகங்களில்தான் பெண்கள் பச்சை குத்திக் கொள்கின்றனர் என்பதால், மார்பகங்கள் சோதித்து பார்க்கப்படுகின்றன. ஆனால் கைகளால் தொட்டு சோதனை நடத்தப்படுவதாக கூறப்படும் புகார் தவறானது. பார்வையால் மட்டுமே இது செய்யப்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.

ரத்தம் உறையும் இலங்கை தமிழினப் படுகொலைக்கு நியாயம் கேட்டு நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி !

இந்தியா முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரம் இளைஞர் - மாணவர்களை திரட்டி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நடத்தும் நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி 2011 ஆகஸ்ட் 26ல் டெல்லியில் நடைபெறுகிறது.அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் பி.சந்தோஷ்குமார் இந்தப்பேரணிக்கு தலைமை வகிக்கிறார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்  ஏ.பி.பரதன்,  தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோரும் இந்தப்பேரணியில் கலந்துகொள்கின்றனர்.


 இந்தப்பேரணியில் பங்கேற்க இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் மற்றும் தமிழர் தேசியஇயக்கத்தலைவர் பழ.நெடுமாறனும் வழியனுப்பி வைத்தனர்.

அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர்மூச்சுடன் உறுதியான மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்சபூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப்பெண்ணானவள் தன்னையும் தன் உடலையும் காமக்கண்ணுடன் பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்துகொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகிறாள். பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மிமீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். மணப்பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயேபரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள்.

நினைவுத்திறன் - ஒரு உளவியல்ரீதியான அலசல்!


நினைவு என்பது மனதில் இருக்கிறது. ஏறக்குறைய அனைத்துமே மனதில் இருக்கிறது என்றே கூறலாம். உளவியல் நிபுணர்களைப் பொறுத்தவரை, மனம்தான் எல்லாம். மனதிற்கு வெளியே வேறு உலகம் என்று எதுவும் கிடையாது. மனம்தான் இன்னொரு உலகைப் பற்றிய கற்பனையை நமக்குத் தருகிறது. நாம் வாழும் உலகில் நாம் காணும் விஷயங்கள் நமது மனதைப் பொறுத்தே அமைகின்றன. நமது உணர்ச்சிகளும், எண்ணங்களும், உலகம் மற்றும் வாழ்வைப் பற்றிய நமது பார்வையை தீர்மானிப்பதோடல்லாமல், நமது ஆரோக்கியம், ஏற்புத்திறன் மற்றும் தீர்வுகாணும் தன்மை ஆகியவற்றையும் நுட்பமாகப் பாதிக்கின்றனஒரு வளர்ந்த மனிதனின் மூளையானது சுமார் 11,000 மில்லியன் மூளை செல்கள் அல்லது நியூரான்களைக் கொண்டுள்ளது. நியூரானுக்கு நடுவில் செல் உடல் இருக்கிறது. அவற்றில் மெல்லிய இழைகள் இருக்கின்றன. இந்த இழைகளின் மூலமே, நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த 11,000 நியூரான்களின் உள் இணைப்புகள் மற்றும் உப பகுதிகளின் எண்ணிக்கைக்கு கணக்கில்லை என்பதால், நமது மூளையின் திறனுக்கு அளவில்லை. எனவே மனித மூளையானது, வாழ்நாளில் நடக்கும் அனைத்து விஷயங்களையுமே பதிவுசெய்து கொள்கிறது.

இந்த பதிவுசெய்யும் செயல்பாடு பற்றி சிலவிதமான கோட்பாடுகள் உள்ளன. இது எலக்ட்ரிகல் செயல்பாடு எனவும், ரசாயன செயல்பாடு எனவும் அல்லது இரண்டும் கலந்தது எனவும் சொல்லப்படுவதுண்டு. இந்த பதிவு செய்தலானது, ஒவ்வொரு விதமான செயல்பாடுகளுக்கும் ஏற்றவகையில் மாற்றம் செய்யப்படுவதாக நம்பப்படுகிறது. நினைவானது மூளையின் வெவ்வேறு பகுதியில் அதன் உள்ளடக்கத்திற்கு ஏற்றவாறு பதியப்பட்டாலும், அது முழுமை என்ற நிலையில்தான் இருக்கிறது என்ற கருத்துக்கு ஆதாரம் இருக்கிறது. இந்த நிலையை ஹோலோகிராமுடன் ஒப்பிடலாம்நமது மூளையானது எவற்றையெல்லாம் சேகரித்து வைக்கிறது என்று பார்த்தால், நாம் பார்ப்பது, கேட்பது, உணர்வது என அனைத்தையும் அது பதிவு செய்கிறது. நாம் தூங்கும்போது எதையும் அதிகமாக பதிவுசெய்ய முடியாததற்கு காரணம், நமது புலன்கள் அந்த சமயத்தில் எதையும் அறிதாகவே உணர்கின்றன.

முடியும் என்று நம்புங்கள்
ஒரு செயலில் நமக்கு வெற்றி கிடைப்பதற்கான முதல் படியே, அதை நம்மால் வெற்றிகரமாக செய்ய முடியும் மற்றும் அதை செய்வதற்கான திறன் நம்மிடம் உள்ளது என்று நம்புவதுதான். இறைவன், உங்களுக்கு அற்புதமான சக்தி கொண்ட மூளையை கொடுத்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளுங்கள். விஞ்ஞானிகள் கடுமையான முயன்றும் மூளையின் செயல்பாட்டு அற்புதத்தையும், அதன் திறனையும் புரிந்துகொள்ள முடியவில்லை. மூளையானது, உங்கள் வாழ்வின் சிறியது முதல் பெரியது வரை அனைத்தையும் நினைவில் கொள்ளும் திறன் பெற்றது.
ஒரு விஷயத்தை பலரும் செய்கிறார்கள், உங்களைவிட வயதானவர்கள் செய்கிறார்கள், வயதில் குறைந்தவர்கள் செய்கிறார்கள், உங்களைவிட குறைவாய் படித்தவர்கள் செய்கிறார்கள் என்ற நிலை இருக்கையில், உங்களாலும் முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். மேற்கூறிய நபர்கள் சிறந்த நினைவாற்றலைப் பெற்றிருக்கிறார்கள் என்றால், ஏன் உங்களால் முடியாது என்று எண்ண வேண்டும். இந்த நம்பிக்கைதான் நம்மை எதையும் சாதிக்க வைக்கும் மற்றும் நமது நினைவுத்திறனை மேம்படுத்த உதவும்.

நினைவாற்றல் மேம்பாடு வாழ்க்கையின் அம்சம்
ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை இல்லையெனில், அவனால் எதையும் சாதிக்க முடியாது. நம்பிக்கை இருந்தால் ஒரு மலையைக் கூட நகர்த்தி விடலாம் என்பது ஒரு பழமொழி.

வாழ்க்கையில் எதுவுமே எளிதாக கிடைத்து விடுவதில்லை. எளிதாக கிடைத்துவிட்டால், அது நமக்கு ஒரு பொருட்டாக தெரிவதில்லை. ஒரு விஞ்ஞானியோ, வரலாற்று அறிஞரோ, இசைக் கலைஞரோ, அரசியல்வாதியோ யாராக இருந்தாலும், தமது துறையில் வெற்றி பெறுவதற்கு முன்பாக, தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை, வெற்றிக்காகவே அர்ப்பணிக்கின்றனர்.
ஒருவர் தனது உடலை ஆரோக்கியமாக வைக்க விரும்பினால், முறையான உணவுமுறை, உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். இவற்றுக்காக அவர் தனது வாழ்க்கையையே அர்ப்பணிக்க வேண்டியதில்லை. ஆனால், தனது வாழ்க்கை முழுவதும் அந்த நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அவற்றை வாழ்வின் அம்சங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோலத்தான் நமது நினைவுத்திறனும். நினைவுத்திறனை மேம்படுத்துவதற்காக நீங்கள் உங்களின் வாழ்க்கையையே அர்ப்பணிக்க வேண்டியதில்லை. நினைவுத்திறன் மேம்பாட்டு வழிமுறைகளை வாழ்க்கையின் அம்சங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
தமது முயற்சிகளை நாளை துவங்கலாம், அடுத்த வாரம் துவங்கலாம், அடுத்த மாதம் துவங்கலாம் அல்லது அடுத்த வருடம் துவங்கலாம் என்று பலர் தள்ளிப் போடுகின்றனர். ஆனால், இதுபோன்று தள்ளிப் போடுவதால், ஏராளமானோர், கடைசிவரை எதையும் செய்யாமலேயே இருந்து விடுகின்றனர். எனவே எதை தொடங்கினாலும் உடனே துவங்குங்கள்.


தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள்.  
கடவுள் எப்போதுமே ஓரவஞ்சனை காட்டுவதில்லை. ஒருவரை சிறந்தவராகவும், இன்னொருவரை தாழ்ந்தவராகவும் படைப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் மூளையின் திறனில் வித்தியாசம் இருப்பதில்லை, ஆனால் அதன் விருப்ப செயல்பாட்டில் வேறுபாடு இருக்கிறது. ஒருவரால் சிறப்பாக செய்ய முடிந்த ஒரு விஷயத்தை இன்னொருவரால் செய்ய முடியாது. அவர் வேறொரு விஷயத்தை சிறப்பாக செய்யும் ஆற்றலைப் பெற்றிருப்பார்.

நீங்கள் உங்களின் நினைவாற்றலை மேம்படுத்த விரும்பினால், முதலில் உங்களின் தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள். உலகின் மிகப்பெரிய மேதைகள் பலர், மிக மோசமான ஞாபக மறதி நோயுள்ளவர்கள்(உதாரணம்-ஐன்ஸ்டீன்) என்பதை நீங்கள் படித்திருப்பீர்கள். எனவே நினைவுத்திறன் குறைபாடு என்பது அறிவுத்திறன் தொடர்பானதல்ல. அதேசமயம் அது வாழ்க்கைக்கு தேவையான விஷயமாகவும் இருக்கிறது. எனவே முறையான பயிற்சிகளின் மூலம் உங்களின் குறையை சரிசெய்யலாம்.

நம்பிக்கையுடன் இருங்கள்
நம்பிக்கையில்லா மனிதன் எதையுமே சாதிக்க முடியாது. நம்பிக்கை என்பது ஒரு போட்டியில் உங்களின் எதிராளியை வெல்வதற்கு மட்டும் தேவையான அம்சம் அல்ல, உங்களின் உள்ளார்ந்த பயம் மற்றும் சந்தேகங்களைப் போக்குவதற்கும் நம்பிக்கை அவசியம். ஓட்டுநர் பயிற்சியை முடித்த பிறகு, தனியாக சாலையில் வண்டியை ஓட்ட வேண்டுமெனில் நம்பிக்கை வேண்டும். முதன்முதலில் ஒரு வகுப்பில் பாடம் எடுக்க வேண்டுமெனில் நம்பிக்கை வேண்டும். அனைத்து எதிர்மறை சிந்தனைகளுமே சுய அழிவுக்கு வித்திடுபவை. ஒரு விஷயத்தை உங்களால் நினைவில் வைக்க முடியாது என்று நீங்கள் நினைத்தால், உங்களின் மூளைக்கு "அதை மறந்துவிடு" என்று கட்டளைப் போகிறது. எனவே எதிலுமே நம்பிக்கை வேண்டும்.

பிரச்சினை என்ன என்பதைக் கண்டறியவும்
உங்களுக்கு பொதுவில் நல்ல நினைவுத்திறன் இருக்கும். ஆனால் சில குறிப்பிட்ட விஷயங்கள் உங்களுக்கு நினைவில் நிற்காமல் போகும். அவற்றை நினைவிற்கு கொண்டு வருவதில் நீங்கள் எப்போதுமே சிரமப்படுவீர்கள். சிலருக்கு, பெயர்கள் மறந்துபோகும். சிலருக்கு இடங்கள் மறந்துபோகும். சிலருக்கோ, எண்கள் மறந்துபோகும் மற்றும் சிலருக்கு ஆட்களின் முகங்கள் மறந்துபோகும். சிலருக்கு நல்ல விஷய ஞானம் இருந்தும், அவர்களால் ஒரு மேடையில் தமது கருத்துக்களை தெளிவாக எடுத்துரைக்க இயலாது. சிலருக்கு எவ்வளவு கடினப்பட்டு படித்திருந்தாலும், தேர்வு அறையில் பதில்களை நினைவில் கொண்டுவந்து எழுதுவதில் சிரமம் இருக்கும்.


நமது மூளையில் ஏகப்பட்ட செய்திகள் உட்புகுவதால், எதை நினைவில் வைக்க வேண்டும் மற்றும் எதை அழித்துவிட வேண்டும் என்ற வரையறையை நாம் உருவாக்க வேண்டும்.
மூளையின் திறனை அறிதல்
இத்தகைய குறைபாடுகள் அனைத்திற்கும் பின்னணியில் ஒவ்வொரு காரணம் உண்டு. ஆர்வமின்மை, பதட்டம் மற்றும் புரிந்துகொள்ளாமல் படித்தல் போன்ற காரணங்கள் அவற்றுள் சில. எனவே இவற்றை அறிந்து நாம் சரிசெய்தால், நமது நினைவுத்திறன் குறைபாட்டு பிரச்சினையைத் தீர்க்கலாம்


மனித மூளையில் இன்னும் கண்டறியப்படாத ஏராளமான எண்ணிக்கையில் சிக்கலான அமைப்புகள் உள்ளன. மனித மூளையானது அளவற்ற விஷயங்களை நினைவில் வைக்கும் திறன் கொண்டது. வேற்றுமொழி பெயர்கள், வருடங்கள், எண்கள் மற்றும் கவிதைகள் உள்ளிட்ட பலவித அம்சங்களை நினைவில் வைத்து, தேவைப்படும்போது உடனடியாக வெளிக்கொணரும் ஆற்றல் உடையது. பல அசாதாரண நினைவாற்றல் உள்ள நபர்களின் செயல்பாடுகளைப் பார்த்து நீங்கள் வியந்திருப்பீர்கள். எனவே, உங்களின் நினைவுத்திறனை மேம்படுத்தினால் நீங்களும் பலரை வியக்க வைக்கலாம்.

அன்னா ஹசாரேவுடன் விஜய் உண்ணாவிரதம்!

ஊழலை ஒழிக்க காந்தியவாதி அன்னா ஹசாரே மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் விஜய், டில்லியில் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார். நாட்டில் ஊழ‌லை ஒழிக்கவும், வலுவான லோக்பால் மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தியும் தொடர்ந்து 10வது நாளாக காந்தியவாதி அன்னா ஹசாரே, டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஹசாரேயின் இந்த உண்ணாவிரதத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி கொண்டே போகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். இதற்காக விமானம் மூலம் டில்லி சென்ற விஜய், அங்கிருந்து நேரடியாக ராம் லீலா மைதானத்திற்கு வந்து, ஹசாரேயை சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்து உண்ணாவிரதம் போராட்டத்தில் அவரும் கலந்து கொண்டார்.

பின்னர் உண்ணாவிரத மேடையில் விஜய் பேசியதாவது, ஊழலை ஒழிக்க ஹசாரே அவர்கள் மேற்கொண்டுள்ள இந்த உண்ணாவிரதம், நாடுமுழுவதும் இளைஞர்கள் மத்தியில், புது எழுச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த எழுச்சியை கோடிக்கணக்கான இந்தியர்கள் கவனித்து வருகிறார்கள். இது வெற்றி பெற வேண்டும் எனவும் நினைக்கிறார்கள். வெற்றி கிடைத்தால் காந்தியின் அஹிம்சை கொள்கைக்கு இது மேலும் வலு சேர்க்கும். இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்பது நமது கடமை, இதில் நானும் பங்கேற்று எனது கடமை செய்துள்ளேன். இந்த உண்ணாவிரத ‌போராட்டம் எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு ஹசாரே அவர்களின் உடல்நலமும் முக்கியம், அவருக்கு  ஆரோக்கியமான உடல்நிலையை அந்த ஆண்டவன் வழங்க வேண்டும். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு நானும், எனது மக்கள் இயக்கமும் முழு ஆதரவு அளிக்கும் என்றார்.

ஹசாரேவுக்கு ஆதரவாக இருதினங்களுக்கு முன்னர் தமிழ் திரையுலகினர் உண்ணாவிரதம் இருந்தபோது ஒருசில நடிகர், நடிகையரை தவிர மற்ற நடிகர்கள் யாரும் விஜய், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் உட்பட கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதியின் குடும்பத்தில் உள்ள 365 உறுப்பினர்கள் தான் காவல் துறையில் குறுக்கிட்டனர் என்றால், அவர்கள் வீட்டு வேலைக்காரர்கள் எல்லாம் குறுக்கிட்டு உள்ளனர்,'' ஜெயலலிதா!


முந்தைய தி.மு.க., ஆட்சியில், காவல் துறையின் பணிகளில் யார் தான் குறுக்கிடுவது என்று ஒரு வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. அமைச்சர்கள் குறுக்கிடுவர், அதிகாரிகள் குறுக்கிடுவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அதை எல்லாம் தாண்டி பல வினோத சம்பவங்கள் முந்தைய ஆட்சியில் நடந்துள்ளன. ஒருமுறை, மத்திய சென்னை பகுதியில், நள்ளிரவு 2 மணியளவில், ஒரு வாலிபர் குடித்துவிட்டு ரகளை செய்த தகவல், கன்ட்ரோல் ரூமுக்கு போனது. அங்கு ரோந்து பணியிலிருந்த பெண் எஸ்.ஐ.,க்கு, கன்ட்ரோல் ரூமில் இருந்து தகவல் தரப்பட்டது.

உடனே அந்த பெண் எஸ்.ஐ., அங்கு சென்று, ரகளை செய்த வாலிபரை கைது செய்து ஜீப்பில் ஏற்றினார். உடனே அங்கு வந்த ஒரு பெண், எஸ்.ஐ.,யின் கையை பிடித்து கீழே இறக்கி, கன்னத்தில் பளார் என்று ஒரு அறை அறைந்தார். "என்னடி நினைச்சிட்டு இருக்கே? என் பிள்ளையையாடி கைது செய்யற?' என்று கேட்டு தன் பையனை கையை பிடித்து, வண்டியை விட்டு இறக்கி அழைத்துச் சென்றுவிட்டார். பெண் எஸ்.ஐ.,யை கன்னத்தில் அறைந்த அந்த பெண் யார்? முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி வீட்டு வேலைக்காரி. இந்த லட்சணத்தில் ஆட்சி நடந்து இருக்கிறது. அந்த பெண் எஸ்.ஐ., காவல் நிலையத்துக்குச் சென்று, இன்ஸ்பெக்டரிடம் புகார் சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த இன்ஸ்பெக்டர், தகப்பனார் போல இருந்து அறிவுரை கூறி, "நீ தொடர்ந்து காவல் துறை பணியில் இருக்கணுமா? இதை கண்டுக்காம அப்படியே விட்டுவிடு' என்று கூறியுள்ளார். முந்தைய ஆட்சியில், காவல் துறையினர் தங்கள் கடமையை செய்ய விடாமல், பல அதிகார மையங்களும் குறுக்கிட்டன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தில், 365 அங்கத்தினர் இருக்கின்றனர். அவர்கள் தான் குறுக்கிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அவர்கள் வீட்டு வேலைக்காரர்களும் குறுக்கிட்டு இருக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் கூறினார்.

வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன் பேட்டி எதற்கு? அழகிரி!!

வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்; பேட்டி எதற்கு?'' என, திருச்சி மத்திய சிறையில், மத்திய அமைச்சர் அழகிரி, விரக்தியில் கூறினார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, எஸ்.ஆர்.கோபி, தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், "அட்டாக்' பாண்டி ஆகியோரை பார்க்க, நேற்று மதியம் 1.15 மணிக்கு, திருச்சி மத்திய சிறைக்கு, மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அழகிரி வந்தார். சிறைக்கு சென்று கைதிகளை பார்க்க, மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், மத்திய அமைச்சர் அழகிரியுடன், மத்திய இணையமைச்சர் நெப்போலியன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி ஆகியோர் மட்டுமே, உள்ளே சென்றனர். அட்டாக் பாண்டி, குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளதால், அவரை பார்க்க அனுமதி வழங்காமல், எஸ்.ஆர்.கோபி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரை பார்க்க மட்டுமே, சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்தது. சிறைக்குள் சென்ற மூர்த்தி, சிறிது நேரத்தில் வெளியே வர, அதுவரை வெளியே நின்றிருந்த முன்னாள் அமைச்சர் நேரு, சிறை உள்ளே சென்று அழகிரியுடன் சேர்ந்து கொண்டார். அரை மணி நேர சந்திப்புக்கு பின், 1.45 மணிக்கு அழகிரியும், மற்றவர்களும் சிறையிலிருந்து வெளியே வந்தனர்.
வெளியே வந்த மத்திய அமைச்சர் அழகிரியிடம், நிருபர்கள் பேட்டி கேட்க, ""வேட்டியே வேணாம்னுட்டேன்; பேட்டி எதற்கு?'' எனக் கூறி, மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.

தி.மு.க.,வினர் குழப்பம் : சிறையிலிருந்து வெளியே வந்த மத்திய அமைச்சர் அழகிரிக்கு, சில முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், சால்வை, தி.மு.க, கட்சிக்கரை போட்ட, துண்டு, வேஷ்டி ஆகியவை கொடுக்க முயன்றனர். அவற்றை வாங்க அழகிரி மறுத்து விட்டார். அதன்பின்னரே, இந்த வார்த்தையை அவர் கூறினார்.
ஆகையால், மேற்கண்ட காரணத்தின் அடிப்படையில் இந்த கருத்தை மத்திய அமைச்சர் அழகிரி கூறினாரா அல்லது வேறு எதையும் மனதில் வைத்துக் கொண்டு, "பொடி' வைத்து பேசினாரா என, தி.மு.க.,வினர் குழம்பிப் போயினர்.

அழகிரிக்கு தைரியம் ஊட்டிய தி.மு.க.,வினர் : மதுரை மத்திய சிறையில் தி.மு.க.,வினரை நேற்று சந்தித்த மத்திய அமைச்சர் அழகிரி, வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடரப் போவதாக ஆறுதல் தெரிவித்தார்.
நேற்று மாலை 3.35 மணிக்கு கட்சிக் கொடி கட்டிய காரில் அழகிரியும், மத்திய அமைச்சர் நெப்போலியனும் சிறைக்கு வந்தனர். இவர்களுடன் முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி மற்றும் வழக்கறிஞர்கள் மோகன்குமார், லிங்கத்துரை சென்றனர். ஜெயிலர் அறையில் அவைத் தலைவர் இசக்கிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் மின்னல்கொடி, குடும்ப டாக்டர் நவநீதகிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர் மலைச்சாமி, எஸ்ஸார் கோபியின் சகோதரர் ஈஸ்வரன், திண்டுக்கல் வேட்பாளராக போட்டியிட்ட விஜயன் ஆகியோரை சந்தித்தார்.

அப்போது அழகிரி, ""சிறைகளில் கட்சிக்காரங்களை தீவிரவாதிகளாக நடத்துறாங்க. உள்ளே வைத்த போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப் போகிறேன். அவர்களும் "உள்ளே' வருவாங்க. இந்தம்மா(ஜெயலலிதா) மீது கேஸ் நடந்துட்டு இருக்கு; கூடிய சீக்கிரம் முதல்வர் பதவியில் இருக்க மாட்டார்,'' என்ற அவரிடம், "அண்ணே, கட்சி வேட்டி கட்டக்கூடாதுனு சொல்றாங்கண்ணே' என்று ஈஸ்வரன் கூற, அங்கிருந்த ஜெயிலர் தமிழ்ச்செல்வன் மறுத்தார். பின், 3.55 மணிக்கு வெளியே வந்த அழகிரி, நிருபர்களிடம், ""உள்ளே இருந்தவர்களை சந்தித்தபோது, "எங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் பொய்யானது; அதை தைரியமாக சந்திப்போம்' என்று எனக்கு தைரியம் ஊட்டினர். வழக்கு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.

அழகிரி "டென்ஷன்' : கொடைக்கானல் நகராட்சித் தலைவர் முகமது இப்ராகிமை சந்திக்க கடந்த மாதம் மதுரை சிறைக்கு அழகிரி வந்தபோது, அவரது கார் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால் நேற்று, "மத்திய அமைச்சராக அவர் வராததால், "ப்ரோட்டோகால்' படி அனுமதிக்க முடியாது' என்று அதிகாரிகள் கூறினர். இதனால், கேட்டிற்கு வெளியே காரில் 5 நிமிடம் காத்திருந்த அழகிரியும், நெப்போலியனும் நடந்தே உள்ளே சென்றனர். அப்போது தி.மு.க.,வினர், காவலர்களுக்கு எதிராக கோஷமிட, "இவ்வளவு பேரு வந்தா எப்படி உள்ளே விடுவாங்க?' என அழகிரி, "டென்ஷன்' ஆனார்.

லஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது : ரத்தன் டாடா!

லஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது'' என, ரத்தன் டாடா போன்ற தொழிலதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மும்பையில், வர்த்தக மேலாண்மை கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா பேசுகையில், ""கடந்த 90ம் ஆண்டுகளில், தொழிற்சாலைகளுக்கான லைசென்ஸ் பெறுவதற்கு மட்டும், லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. தற்போது ஒப்பந்தம் போட, ஒப்பந்தத்தை மாற்ற என, எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேர்மையான வழியைக் கையாண்டால், தொழில் நடத்த முடியாது.
எனவே, லஞ்சம் கொடுப்பது போன்ற குறுக்கு வழியை கையாள வேண்டியுள்ளது. தொழில் நடத்துவதில், சமதளமான சூழ்நிலை இல்லை. இப்படிப்பட்ட தருணத்தில், லஞ்சம் கொடுக்காமல் காரியம் சாதிக்க நினைப்பவர்கள் பின்தங்கி விடுவர். அதே நேரத்தில், "லஞ்சம் கொடுத்து விட்டு காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டியது தானே' என, என்னிடம் வேலை பார்க்கும் இளைஞர்கள் கேட்கின்றனர். அவர்கள் சொல்வதைக் கேட்டால், நான் தலைநிமிர்ந்து நடக்க முடியாது'' என்றார். மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவன துணை தலைவர் ஆனந்த் மகேந்திரா குறிப்பிடுகையில், ""ஊழலை ஒழிப்பதில் அரசியல்வாதியிடம் மட்டும் பொறுப்பை எதிர்பார்க்கக் கூடாது என்பதை தான், அன்னா ஹசாரேயின் போராட்டம் தெரிவிக்கிறது. நுகர்வோரிடமும் இந்த பொறுப்புணர்வு இருக்க வேண்டும்'' என்றார்.

இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி குறிப்பிடுகையில், ""தொழிலில் போட்ட பணத்தை பல மடங்கு திருப்பி எடுக்க வேண்டுமானால், லஞ்சம் என்ற குறுக்கு வழியைத் தான் கையாள வேண்டியுள்ளது. லஞ்சம் கொடுப்பது அநியாயமானது என்பதை, வர்த்தகர்கள் பலரும் தைரியமாகக் கூற மறுக்கின்றனர். இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும். அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்க காத்திருக்கிறோம்'' என்றார்.

சட்டம் தெரியாத கருணாநிதி ஜெயலலிதா!

போலீஸ் துறையில் எந்த தலையீடும் இருக்கக் கூடாது. ஆனால், ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு, சட்டத்தைப் பற்றி தெரியவில்லை,'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவின் பதிலுரை: சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் போது, அங்கு பொருளாதார வளர்ச்சிக்கு இடமிருக்காது. முந்தைய தி.மு.க., ஆட்சியில் சமூக விரோதிகளைக் கண்டு காவலர்கள் அஞ்சிய நிலைமை, தற்போது மாறி, காவலர்களைக் கண்டு சமூக விரோதிகள் அஞ்சும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்று, சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. காவலர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்று எவரிடமிருந்தும் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் தங்கள் பணிகளை நியாயமாகவும், நேர்மையாகவும் மேற்கொண்டால் தான், சட்டத்தின் மீதும், அரசின் மீதும் மக்கள் நம்பிக்கை வைப்பர். ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்த சபையில் ஒரு முறை பேசும் போது, "காவல் துறை என்பது பொதுவான துறை தான். அது, நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது, எங்களுக்கு கட்டுப்பட்ட துறை. நீங்கள் ஆட்சியில் இருந்தால், உங்களுக்கு கட்டுப்பட்ட துறை' என்று கூறியுள்ளார்.

காவல் துறை, ஆட்சியாளர்களுக்கு கட்டுப்பட்டு, அவர்கள் சொற்படி எல்லாம் கேட்கிற துறை அல்ல. ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிக்கு ஏற்றவாறு, கொள்கைகளோ, கோட்பாடுகளோ, நோக்கங்களோ மாறக்கூடியது அல்ல.
அது, நீதிக்கும், நேர்மைக்கும், சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்ட துறை. காவல் துறையின் பணிகளில் குறுக்கீடு செய்ய, யாருக்கும் அதிகாரம் இல்லை. காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் கூட, அதன் செயல்பாடுகளில் தலையிட முடியாது. சட்டத்துக்கு உட்பட்ட முறையில் தான், அறிவுரை வழங்க இயலும்.

அவ்வாறு இல்லாமல், குற்றம் செய்தவரை காவல் துறையினர் கைது செய்யும் போது, அவ்வாறு கைது செய்யப்பட்டவரை விட்டு விட வேண்டுமென, உத்தரவிடவோ, அறிவுரை வழங்கவோ எவராலும் முடியாது.
சமீபத்தில் ஒரு பேட்டியில், "சுவிஸ் வங்கியில் உங்களுக்கு பணம் இருப்பதாக அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியிட ஏதாவது பின்னணி இருக்கிறதா' என்று கேள்வி கேட்டபோது, அதற்கு பதிலளித்த கருணாநிதி, "இந்தப் பத்திரிகையின் ஆசிரியரோ அல்லது உரிமையாளரோ, நான் ஆட்சியில் இருந்தபோது, அவரை காவல் துறையினர் கைது செய்தபோது, நான் உடனே தலையிட்டு, பத்திரிகைகாரர்களை எல்லாம் கைது செய்ய வேண்டாம் என உத்தரவிட்டு, அவரை விடுதலை செய்தேன்' என்று கூறியுள்ளார். இது உண்மையாக இருக்குமானால், காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நபரை, வாய்மொழியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிடுவது, காவல் துறையின் நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்வது தான். ஐந்து முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி. ஆனால், கருணாநிதி இன்று வரை சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை. காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன என்பதும் அவருக்குத் தெரியவில்லை. இத்தனை ஆண்டு காலம், வெறும், மனோகரா பாணியில் வசனத்தை பேசிக் கொண்டு காலத்தை ஓட்டியுள்ளார் என்று தெரிகிறது. முந்தைய அரசு அமைத்த காவல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க மறுத்து, கருணாநிதி ஒப்புதலுடன் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், அரசியல்வாதிகள் காவல் நிலையங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது, நடைமுறைக்கு ஒவ்வாதது என்றும், அதை நடைமுறைப்படுத்த இயலாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்படி ஒரு அரசாணையை வெளியிடுவதே, சட்ட விரோத செயல் என்று கூட தெரியாத ஒருவர், முதல்வராக இத்தனை ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டுள்ளார். இவ்வாறு முதல்வர் பேசினார்.

பாகிஸ்தானில் இருந்து கள்ள நோட்டுகள் தமிழகத்தில் புழக்கம்!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு, வங்கதேசம் வழியாக கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஐந்து பேர், கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 5.80 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை, பெரியமேடு ஈ.வி.ஆர். சாலையில், நேற்று முன்தினம் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, "பைக்'கில் வந்த இருவர், போலீசாரை கண்டதும் வாகனத்தைத் திருப்பி, ஓட முயன்றனர். அவர்களை விரட்டிப் பிடித்து சோதனையிட்டதில், 500 ரூபாய் நோட்டுகளாக, ஒரு லட்ச ரூபாய்க்கு கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரிடம் பிடிபட்ட, மண்ணடியைச் சேர்ந்த முகமது பரூஷ் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் கொடுத்த தகவலின்படி, பெரியமேட்டில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மசூத்ஷேக், தஞ்சாவூரை சேர்ந்த ஷாஜகான் மற்றும் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ரமணன் ஆகிய மூவரை, போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, 4.80 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 500 ரூபாய் கள்ள நோட்டுகள், பைக், ஒன்பது மொபைல் போன்கள் மற்றும் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு, நல்ல நோட்டுகளாக மாற்றி வைத்திருந்த 98 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மசூத் ஷேக், 20, வங்கதேசம் அருகேயுள்ள மேற்குவங்கம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவன். இவனுக்கு, பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் வழியாக, கள்ள நோட்டுகளை ஒருவர் கொடுப்பதாக, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மற்ற நால்வரும், இவனிடமிருந்து கள்ள நோட்டுகளை பெற்று, நல்ல நோட்டுகளாக மாற்றிக் கொடுத்து வந்துள்ளனர். இவர்கள், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

கள்ள நோட்டுகளை கண்டுபிடிப்பது எப்படி? : பாகிஸ்தானிலிருந்து, தமிழகத்தில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள, 500 ரூபாய் கள்ள நோட்டுகள், ஒரிஜினல் நோட்டுகளை போலவே அமைந்துள்ளன. ஒரிஜினல் 500 ரூபாய் நோட்டில் உள்ள ஆர்.பி.ஐ., என பொறிக்கப்பட்ட மெல்லிய வெள்ளிக் கம்பி, நோட்டுகளை அசைக்கும் போது நிறம் பச்சை, நீலம் என மாறி மாறி வரும். ஆனால், கள்ள நோட்டில் அவ்வாறு தெரியாது.

மோசடியில் வாங்கிய நிலத்தில் திருச்சி அறிவாலயம்! Nehru arrested in land grab case


தமிழகத்தில் நடந்துள்ள ஏகப்பட்ட நில மோசடி வழக்கில் முன்னாள் ஆட்சியாளர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலை திருச்சியில் மாஜி போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்., நேரு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் வைக்கப்பட்டுள்ள போலீஸ் ஆயுதபடை திருமண மண்டபத்தில் ஏராளமான ஆதரவாளர்கள் குவிந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆட்சி காலத்தில் ஆயிரக்கணக்கான நில மோசடி நடந்திருப்பதாக வந்த புகாரை அடுத்து புதிதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க, அரசு இது தொடர்பான வழக்கை விசாரிக்க தனிப்படை போலீசார் பணிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக மதுரை, சென்னை, ஈரோடு, சேலம், கோவை என பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க., நிர்வாகிகள், மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் , மாஜி எம்.எல்.ஏ.,க்கள் என இது வரை 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாஜி போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்., நேரு வீட்டில் இன்று காலையில் அதிரடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். இவரது வீட்டிற்குள் நுழைந்த போலீசார் நேருவை கைது செய்து திருச்சி ஆயுத படை திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இவருடன் மாஜி எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி, ஜவுளிக்கடை உரிமையாளர் சுந்தரராஜூலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

வழக்கின் சாராம்சம் என்ன ? : கடந்த 2009 ல் திருச்சியில் ஒரு தி.மு.க,வின் அறிவாலயம் திறந்து வைக்கப்பட்டது. கலைஞர் அறிவாலயம் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த அறிவாலயத்தை கட்சி தலைவரும், அப்போதைய முதல்வருமா ன கருணாநிதி திறந்து வைத்தார். ஏறக்குறைய சென்னை அறிவாலய மாடலில் இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்கென ஒரு ஏக்கர் நிலம் டாக்டர் சீனிவாசன் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டது. திருச்சியில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள இந்த நிலம் பல கோடி மதிப்பு பெறும். ஆனால் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டதாகவும், தன்னை மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து போட வைத்ததாகவும், சீனிவாசன் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பான விசாரணை நடத்திய போலீஸ் கே.என்., நேரு மாஜி எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி, லால்குடி எம்.எல்.ஏ., சௌந்திரராஜன், ராமாநுஜம் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் கே.என்., நேரு, உள்பட 3 பேரை கைது செய்திருக்கின்றனர். இன்னும் தலைமறைவாக உள்ள தி.மு.க.,வினரை தேடி வருகின்றனர்.

பொய் வழக்கை சட்டப்படி சந்திப்போம் : கைது செய்யப்பட்டு அழைத்து சென்ற போது நிருபர்களிடம் பேசிய நேரு; நாங்கள் யாரையும் அடித்து, மிரட்டி வலுக்கட்டாயமாக நிலத்தை வாங்கவில்லை. எந்த தவறும் செய்யவில்லை. இது பொய் வழக்கு, சட்டப்படி சந்திப்போம் என்றார்.

கடலூர் சிறையில் அடைப்பு : வழக்கில் கைது செய்யப்பட்ட விவரத்தை பதிவு செய்யும்போது நேருவின் உடல் அங்க அடையாளம் குறிக்கப்பட்டது. இவர் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 4 ல் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட் புஷ்பராணி வரும் செப் 8 ம்தேதி வரை ரிமாண்‌ட் செய்து உத்தரவு பிறப்பித்தார். முதலில் திருச்சி சிறைக்கு‌ கொண்டு செல்லப்பட்டு பின்னர் கடலூர் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். கடலூர் கொண்டு செல்லும் வழியில் தொண்டர்கள் போலீஸ் வேன் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தொண்டர்கள் யாரும் மறியலில் ஈடுபட வேண்டாம் எல்லோரும் போங்கடா என வேனில் இருந்து இறங்கி வந்து விரட்டினார்.

நெருக்கடி காலத்தை நினைவுப்படுத்துகிறது - கருணாநிதி : தி.மு.க.,வினர் கைது செய்யப்படுவது நெருக்கடி காலத்தை நினைவுப்படுத்துவதாக உள்ளது என சட்டசபையில் உள்ள வருகை பதிவேட்டில் இன்று கையெழுத்து போட வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: சட்டசபைக்கு தி.மு.க., உறுப்பினர்கள் வராதது குறித்து தாம் எதுவும் கூற முடியாது. பேரவையில் எனக்கு அமரும்படி எவ்வித இட வசதியும் செய்து தரப்படவில்லை என்றும் குறை கூறினார். கைது கண்டித்து போராட்டம் நடத்தப்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, இது குறித்து கட்சியின் பொதுக்குழு, செயற்குழுதான் முடிவு செய்யும் என்றார்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை அழகிரி எச்சரிக்கை : திருச்சி சிறையில் உள்ள அட்டாக் பாண்டியை சந்திக்க வந்த மத்திய அமைச்சர் அழகிரி கூறுகையில்; தி.மு.க,வினர் கைது செய்யப்படுவது ஜெயலலிதாவின் 100 நாள் சாதனையில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம் என்றார். மேலும் எங்கள் மீது பொய் வழக்கு போடும் அதிகாரிகள் மீது , நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது நடவடிக்கை எடுப்போம் இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, ஜவுளி கடை ஒன்றின் உரிமையாளர் சுந்தரராஜுலு ஆகியோரையும் போலீஸôர் கைது செய்து சமுதாயக் கூடத்துக்கு அழைத்து வந்தனர். கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இவர்கள் மூவரும், குற்றவியல் நடுவர் புஷ்பராணியின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மூவரையும் செப்டம்பர் 8-ம் தேதி வரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நடுவர் புஷ்பராணி உத்தரவிட்டார். இதையடுத்து, மூவரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், அங்கிருந்து கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.


மேலும் 4 பேர் கைது:

இந்த வழக்கில் தொடர்புள்ளதாக, திருச்சி மாநகராட்சி துணை மேயர் மு. அன்பழகன், மாவட்ட திமுக துணைச் செயலர் குடமுருட்டி சேகர், பந்தல் ஒப்பந்ததாரர் மாமுண்டி, நிலத் தரகர் ஷெரீப் ஆகியோரும் வியாழக்கிழமை பகலில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.


வழக்கு விவரம்:

திருச்சியில் கரூர் புறவழிச் சாலையில் மாவட்ட திமுகவுக்காக "கலைஞர் அறிவாலயம்' என்ற பெயரில் திருமண மண்டபமும், திமுக அலுவலகமும் கட்டப்பட்டது. இதைக் கடந்த 2008-ம் ஆண்டு, செப். 21-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
இந்தக் கட்டடத்துக்காக அந்தப் பகுதியில் 3 பேரிடம் இருந்து மொத்தம் 56,333 சதுரஅடி நிலம் வாங்கப்பட்டது. 20,433 சதுரஅடி நிலம் வக்பு வாரியத்திடம் 99 ஆண்டு குத்தகைக்குப் பெறப்பட்டுள்ளது. நிலம் விற்ற 3 பேரில் ஒருவர்தான் தற்போது புகார் அளித்துள்ள டாக்டர் கே. சீனிவாசன். இவருடைய நிலத்தின் அளவு 13,920 சதுரஅடி.


இந்த இடத்தை மிரட்டி வாங்கும் நோக்கத்தில் டாக்டர் கே. சீனிவாசன், அவரது மனைவி மணிமேகலை, சீனிவாசனின் தந்தை கிருஷ்ணசாமி ஆகியோரை துறையூரிலிருந்து திருச்சிக்கு கடத்தி வந்ததாகவும், கே.என். நேரு அலுவலகத்தில் அவரது தம்பி கே.என். ராமஜெயம், சுந்தரராஜுலு, ஷெரீப், அ. செüந்தரபாண்டியன், அன்பில் பெரியசாமி ஆகியோர் அடித்து மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலத்துக்காக ரூ. 2.40 கோடி கொடுப்போம் என உறுதியளிக்கப்பட்டு, முன்தொகையாகக் கொடுத்த ரூ. 40 லட்சத்தையும் துணை மேயர் மு. அன்பழகன், மாவட்ட திமுக துணைச் செயலர் குடமுருட்டி சேகர் ஆகியோர் துறையூர் செல்லும் வழியில் பறித்து வந்துவிட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புகாரின் பேரில், கே.என். நேரு, கே.என். ராமஜெயம், குடமுருட்டி சேகர், மு. அன்பழகன், அன்பில் பெரியசாமி, சுந்தரராஜுலு, அ. செüந்தரபாண்டியன் (தற்போதைய லால்குடி எம்எல்ஏ), பந்தல் ஒப்பந்ததாரர் மாமுண்டி, நிலத் தரகர்  ஷெரீப் மற்றும் கொப்பம்பட்டியைச் சேர்ந்த தமிழ்மாறன், தமிழ்ச்செல்வன் ஆகிய 11 பேர் மீது, 9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

A hot fan at Copa America விளையாட்டுல இதெல்லாம் சகஜம்மப்பா!

கால்பந்து போட்டியை காணவந்த பெண் தன் உற்சாகத்தை இப்படி வெளிகாட்டினர் நம்ம கங்குலி கூட சட்டைய கலட்டி சுத்துனாரே? நினைவிருக்கும் !  
Peruvian supporters cheer for their team before the start of the 2011 Copa America football tournament third-place match against Venezuela held at the Ciudad de La Plata stadium in La Plata, 59 Km south of Buenos ஐரேஸ்






உண்ணாவிரதத்தை கைவிட அன்னா ஹசாரே 3 நிபந்தனைகளை விதித்துள்ளார்!


1. அரசின் கடைசிமட்ட ஊழியர்கள் வரை லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவருவது குறித்து பார்லி.,யில் விவாதம் நடத்த வேண்டும்.
2. ஒவ்வொரு மாநிலங்களில் லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்ட லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவது குறித்து பார்லி.,யில் விவாதம் நடத்த வேண்டும்.
3. டெலிபோன் ஒட்டுகேட்கும் உரிமை மற்றும் தவறு செய்யும் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் உரிமையை லோக்பாலுக்கு வழங்குவது குறித்து விவாதம் நடத்த வேண்டும்.

இதே நாள்...


  •  உருகுவே விடுதலை தினம்(1825)
  •  இந்திய ஆன்மிகவாதி கிருபானந்த வாரியார் பிறந்த தினம்(1906)
  •  கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்(1609)
  •  பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது(1830)
  •  சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது(1991)

ஊழல் பற்றி தகவல் தந்தால் ரூ.50 ஆயிரம் வெகுமதி! பாட்னா!!

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபடுவோர் பற்றிய தகவல்களை தருபவர்களுக்கு, அரசு சார்பில் 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என, பீகார் அரசு அறிவித்துள்ளது. ஊழலுக்கு எதிராக வலுவான மசோதா கொண்டுவரக் கோரி, ஹசாரே துவங்கியுள்ள போராட்டத்தால், நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் என்பதில், ஒருமித்த கருத்து எழுந்துள்ளது. இந்நிலையில், ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் பீகார் அரசு தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளது. ஊழல் ஒழிப்பில் போராடுபவர்களுக்கு வெகுமதி அளித்து கவுரவிக்க முடிவு செய்துள்ளது. பாட்னாவில் நிருபர்களிடம் பேசிய பீகார் துணை முதல்வர் சுசில் குமார் மோடி கூறுகையில்,"லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தருவோருக்கு வெகுமதியாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும், ஊழல் வழக்குகளில் ஆஜராகி சிறப்பாக செயல்படும் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் ஊழல் வழக்குகளை சிறப்பாக விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகளுக்கும் பரிசு அளிக்கப்படும். ஊழல் வழக்குகளில் சிக்கியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அதில் கிடைக்கும் நிதியைக் கொண்டு, பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...