ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
13 March, 2014
காக்கா முட்டை’
நாளைய இயக்குனரில் கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான மணிகண்டன் இப்படத்தை இயக்குகிறார்.சிறுவர்களை மையமாகக் கொண்ட படம் இது. இப்படத்தில் சிம்புவும், தனுஷும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள் . படத்தில் கொஞ்ச நேரம் வந்தாலும் தனுஷ் - சிம்புவின் கேரக்டர் முக்கியமானதாக இருப்பதால், அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்களாம். 'காக்கா முட்டை' அநேகமாக ஜூன் 2014ல் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'நாட்டுக்கொரு நல்ல செய்தி’ சொல்லும் ஆர்வத்துக்கு ஒரு சல்யூட்!
'பெண்ணைவிட ஆணைப் பலமா படைச்சதே, அவளை நாம பாதுகாக்கத்தான். பலவந்தப்படுத்த அல்ல’, 'இலங்கைல கொத்துக் கொத்தாக் கொல்லப்பட்டு ஒரு இனமே அழிஞ்சப்ப, நாம இங்க ஐ.பி.எல். பார்த்துக்கிட்டுல்ல இருந்தோம்’, 'போலிக்கு மட்டும்தான் இந்த நாட்டுல இன்னும் போலி வரலை’, 'நம்ம நாட்ல உண்மையை உண்மைனு நிரூபிக்கவே 20 வருஷம் ஆகுமே!’, 'ஒரு பரபரப்பான செய்தியை இன்னொரு பரபரப்பான செய்தியால மறக்கடிப்பானுங்க. ஆனா, நம்மளை எப்பவும் பதட்டத்துலயே வெச்சிருப்பாங்க!’ என படம் முழுக்க நிமிர்ந்து பார்க்கவைக்கிறது சமுத்திரக்கனியின் வசனம்.
'மோசமானவங்கள்ல முக்கியமானவங்க’
அதிகம் மட்டம் போட்ட எம்.பி-க்களில் முதல் இடம், ராமநாதபுரம் தி.மு.க. எம்.பி., நடிகர் ரித்தீஷுக்குதான். தமிழக எம்.பி-க்களின் வருகைப் பதிவில் இவருக்கே கடைசி இடம். 350 நாட்களில் 135 நாட்கள் மட்டுமே அவைக்கு வந்திருக்கிறார். ரித்தீஷ§க்கு முந்தைய இடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் தொல். திருமாவளவன் இருக்கிறார்.
Subscribe to:
Posts (Atom)