|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 September, 2011

போப் பெனடிக்ட் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு!

கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர் போப் பெனடிக்ட் XVI மற்றும் 3 வாடிக்கன் கர்டினால்கள் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போப் பெனடிக்ட் XVI உள்ளார். அவர் வாடிகன் நகரில் வசித்து வருகிறார். அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் உயிர்பிழைத்தவர்கள் மையம் சார்பில் போப் பெனிடிக்ட் XVI மற்றும் வாடிகன் நகரின் செயலரான கார்டினல் டர்சிஸியோ பேர்டோன், கார்டினல் கல்லூரியின் டீன் கார்டினல் ஏஞ்சிலோ சோடனோ, விசுவாச உபதேச சபையின் தலைவர் கார்டினல் வில்லியம் லிவாடா ஆகிய 4 பேர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் பாதிரிமார்களால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்த குற்றசாட்டுகள் மீது, போப் பெனிடிக் XVI மற்றும் 3 கார்டினல்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இது மனிதநேயத்திற்கு எதிரான செயலாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சர்வதேச சட்ட நிபுணர்கள் சிலர் கூறியதாவது, மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள், இனப்படுகொலை உள்ளிட்ட முக்கிய வழக்குகளை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்கிறது. வாடிகன் தலைவர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் முன், அந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தின் கட்டுபாட்டிற்குள் வருகிறதா என்பதை கண்டறிய வேண்டியுள்ளது.

உலகளவில் நடைபெறும் குற்ற சம்பவங்களை விசாரிப்பது அவ்வளவு எளிதல்ல. சர்வதேச அளவில் சர்வதேச நீதிமன்றத்தின் எல்லைக்குள் பல உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த பட்டியலில் வாடிகன் நகரம் வருவதில்லை, என்றனர்.

வரிவசூலில் அலட்சியம்: மத்திய தணிக்கை துறை !

தமிழக போக்குவரத்து துறையின் கவனக்குறைவான நடவடிக்கைகளால், கோடிக்கணக்கான ரூபாய் மாநில அரசிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய தணிக்கைத் துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

தமிழக போக்குவரத்து துறையின் 2009-10 வரையுள்ள வரவு-செலவு கணக்குகளை மத்திய தணிக்கை துறை கணக்கிட்டது. அது குறித்து மத்திய தணிக்கை துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 1947ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மோட்டார் வாகன வரி விதிகளின்படி, வாகன உரிமையாளர்கள் வாகன வரி, கூடுதல் நிலுவை வரி என்ற வேறுபாடு உள்ளது.

இதிலும் ஒப்பந்த பஸ்களாகவோ அல்லது நிறுத்த பஸ்களாகவோ பயன்படுத்துவதற்கு இடையேயான வேறுபாட்டை பொறுத்து வரி செலுத்த வேண்டும்.  ஆனால், இந்த வேறுபாடு இல்லாமல் பல போக்குவரத்து அலுவலகங்கள் எந்த வேறுபாடும் இல்லாமல் வசூலித்துள்ளது. கடந்த 2009-10 கணக்குகளை ஆய்வு செய்ததில், 7.79 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை போக்குவரத்து துறை வசூலிக்கப்படாமலேயே விட்டுள்ளது தெரிகிறது.

தமிழகத்தின் கரூர், நெல்லை உள்ளிட்ட இடங்களில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் தணிக்கை செய்யப்பட்டது. இதில் 2008-09ம் ஆண்டில் 120 ஸ்பேர் பஸ்களை ஒப்பந்த பஸ்களாக இயக்க அனுமதிக்கப்பட்டு, தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கான வரி, ஒப்பந்த பஸ்களுக்குரிய வீதத்தில் வசூலிக்கப்படவில்லை. இதில் 7.05 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசால் மூலம் 2008 டிசம்பர் மாதம் முதல், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட சரக்கு வாகனங்களை தமிழகத்தில் பயணிக்க 3,000 ரூபாய் என இருந்த வரி 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

ஆனால், அந்த வரி உயர்வை கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நெல்லை, உள்ளிட்ட 8 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படுத்தவில்லை. இதனால், 36.92 லட்சம் ரூபாய் அரசிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மோட்டார் வாகன வரி சட்டப்படி, பிறமாநில ஆம்னி பஸ்களுக்கு தற்காலிக உரிமம் வழங்குவதற்காக வரி வசூலிப்பில் சரியாக கணக்கிடாமல் விட்டதால், 37.03 லட்சம் ரூபாய் அளவிற்கு குறைவாக வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை, சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சுட்டிக் காட்டியுள்ளது.

2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் !

பூமி சுற்றி வரும் சூரியனை விட சிறிய வடிவிலான 2 சூரியன்களையும் அதை சுற்றிவரும் கிரகத்தையும் குறித்த படங்களை கெப்ளர் விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளது. நாசா மூலம் விண்ணில் ஏவப்பட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் கெப்ளர் விண்கலம் அவ்வப்போது விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தும் படங்களை அனுப்புவது வழக்கம். கெப்ளர் விண்கலம் மூலம் பூமிக்கு அருகில் அல்லது தொலைவில் உயிர்வாழ ஏற்ற கிரகம் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறியவே அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கெப்ளர் விண்கலம் அனுப்பியுள்ள படங்கள் மூலம், ஒரு புதிய கிரகத்தையும் 2 சூரியன்களையும் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து 200 ஓளியாண்டு தூரத்தில் உள்ள இந்த கிரகத்திற்கு கெப்ளர் 16பி என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

இந்த கெப்ளர் 16பி கிரகத்தில் பாதியளவு பாறையும், பாதியளவு வாயுக்களும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு உயிரினம் வாழ முடியாத நிலையில் உள்ளதாக தெரிகிறது. கிரகத்தின் அளவு ஏறக்குறைய சனிக்கிரகத்தின் அளவையும், 2 சூரியன்களும், பூமியின் சூரியனை விட சிறியவை எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அதில் 1 சூரியன் பூமியின் சூரியனின் 69 சதவீத அளவையும், மற்றொன்று 20 சதவீத அளவையும் கொண்டுள்ளதாக தெரிகிறது. சூரியக் குடும்பத்தில் உள்ளது போல, சூரியன்கள் தன்னை தானே சுற்றிக் கொண்டே, அந்த கிரகத்தையும் சுற்றி வருகின்றன. இதனால் மூன்றிற்கு இடையே அவ்வப்போது கிரகணங்கள் ஏற்படுகிறது.

ஆனால் இம்மூன்றிற்கும் இடையேயான இயக்க வேகத்தை துல்லியமாக கணக்கிட முடியவில்லை. கெப்ளர் 16பி 2 சூரியன்களையும் சுற்றி வர 229 நாட்களை எடுத்து கொள்கிறது. வெள்ளி கிரகம் சூரியனை சுற்றி வர 225 நாட்களை எடுத்து கொள்கிறது.

கெப்ளர் ஆராய்ச்சியாளர் வில்லியம் புரூக்கி கூறுகையில், "சூரியக் குடும்பத்தை ஒத்த அநேக கிரகங்களும், சூரியன்களும் உள்ளது. அதில் சிலவற்றில் உயிர்வாழ தேவையான அம்சங்கள் அடங்கி இருக்கலாம் என்பதை கெப்ளர் அனுப்பியுள்ள படங்கள் மூலம் நிரூபணமாகிறது. அதன்மூலம் ஆராய்ச்சியாளர்கள் கடக்க வேண்டிய பாதை வெகுதொலைவு உள்ளது என தெரிகிறது", என்றார்.

தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் அண்ணா பல்கலை. முறைகேடு - சிஏஜி!

னியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது, கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கொடுத்தது ஆகியவற்றில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய கணக்குத் தணிக்கைத் துறை குற்றம்சாட்டியுள்ளது. தமிழக அரசின் 2009- 10-ஆம் நிதியாண்டின் வரவு- செலவு கணக்குகளை ஆய்வு செய்த, மத்திய கணக்குத் தணிக்கை துறை சட்ட சபையில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

இதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது, கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது ஆகியவற்றில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தணிக்கை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2009-10-ம் ஆண்டுகளில் 32 இளநிலை படிப்புகளுக்கும், 48 முதுநிலைப்பட்டப்படிப்புகளுக் கும், சுயசார்பு படிப்புகளாக நடத்த அனுமதி அளித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளுக்கு தற்காலிக இணைப்பு அனுமதி வழங்க, கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில், குறைந்த பட்சமாக 85 மதிப்பெண்ணும், நிரந்தர அனுமதி வழங்க 90 மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.

தகுதியில்லாத 111 கல்லூரிகள்: ஆனால், தற்காலிக இணைப்பு அனுமதி வழங்க, எந்தவித காரணத்தையும் குறிப்பிடாமல், குறைந்த பட்ச மதிப்பெண்ணை 85-ல் இருந்து 50 ஆக குறைக்க பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு முடிவு எடுத்துள்ளது. இதன் காரணமாக தகுதி யில்லாத 111 கல்லூரிகள் இணைப்பு அனுமதி பெற்றுள்ளன.

மேலும் இணைப்பு வழங்குவதற்கு அளவு கோல்களான ஆசிரியர் குழு, சோதனை கூடம், நூலகம், மற்றும் பொது வசதிகள் ஆகிய நான்கிற்கும் தனித்தனியே குறைந்த பட்ச மதிப்பெண்கள் குறிப்பிடப்படவில்லை.

இணைப்புகளுக்கான நெறிகளைத் தளர்த்தியதும், ஒவ்வொரு அளவுகோலுக்கும் குறைந்த பட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்காததும், இணைப்பு கல்லூரிகள் வழங்கும் கல்வியின் தரத்தை பாதிக்கக் கூடிய செயலாகும். இணைப்பிற்கான நிபந்தனைகளை பல்கலைக்கழகம் விழிப்புடன் இருந்து தீவிரமாக செயல்படுத்தவில்லை.

ஏஐசிடிஇ அனுமதியில்லாமல்...  புதிதாக என்ஜினீயரிங் மற்றும் தொழில் நுட்பத்தில் பாடப்பிரிவுகளை தொடங்கும் பொழுதோ, நாட்டில் உள்ள கல்லூரிகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையில் எண்ணிக்கையை கூட்டவோ அல்லது குறைக்கவோ அகில இந்திய தொழில் கல்வி மன்றத்தின் (ஏ.ஐ.சி.டி.இ.) ஒப்புதல் மிகவும் அவசியம்.

ஆனால், இதன் விதிகளை மீறி என்ஜினீயரிங் பட்டப்படிப்புகளில் கூடுதலாக 42 மாணவர்களை சேர்க்க அனுமதி அளித்துள்ளது. கல்லூரிகளில் ஆசிரியர் -மாணவர் விகிதம் 1:15 என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால் ஆசிரியர் -மாணவர் விகிதம் 1:38 என்ற அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு வலைத்தளம் சார்ந்த தொழில் நுட்ப வள ஆதாரங்களை வழங்குவதற்காக கருத்துரு செய்யப்பட்ட 'அறிவுத்தர மையம' 6 ஆண்டுகளுக்கு மேலாக காலதாமதம் ஆனதுடன் அதற்காக செல வழித்த ரூ.6.16 கோடி வீணானது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

படுக்கையறைக்கு அழைத்தார் சரண்!








நடிகை சோனா, பாடகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.சரணும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டார்கள். மங்காத்தா படம் வெற்றி பெற்றதற்காக, அந்த படத்தில் நடித் திருந்த வைபவ் வீட்டில்  இரவு, `பார்ட்டி' நடந்தது.   அதில் வெங்கட்பிரபு,   பிரேம்ஜி, அரவிந்த், அஸ்வின், ஒளிப் பதிவாளர் சக்தி சரவணன், டான்ஸ் மாஸ்டர் அஜய்ராஜ் உள்பட `மங்காத்தா' படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள்.    இந்த பார்ட்டியின் போது சரண், தன்னை படுக்கை அறைக்கு அழைத்தார் என்று நடிகை சோனா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!

உணவு உண்பவர்கள் வாழை இலையை இடக்கை பக்கமாக நுனி வருவது போலவும். வலக்கை பக்கமாக அகன்ற அடி இலை வருவது போலவும் உண்பது முறையாகும். வாழை இலையில் தனலெட்சுமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப்பழக்கம் கொண்டவர்கள் லெட்சுமி கடாட்சம் பெறுவர் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். தலை முடி கறுப்பாகவே இருக்கும், சீக்கிரத்தில் நரைக்காது. கண்ட திசைகளுக்கு எதிராகவும் உண்ணுதல் கூடாது. உண்ணும் போது வடக்கு நோக்கி இருத்தல் நீண்ட ஆயுளும், தெற்கு நோக்கி இருத்தல் புகழும், மேற்கு நோக்கு இருப்பின் செல்வமும் பெருகும். ஒரு மூலையை பார்த்தவாறு உண்ணுதல் கூடாது. மேற்கண்ட முறையில் உணவை உண்ணுதல் நன்மையைத் தரும்.

குறைந்து வரும் மழை!


இந்தியாவில் மழைப்பொழிவு கணிசமாக குறைந்து வருகிறது,'' என, பன்னாட்டு நீர் மேலாண்மை நிறுவன இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: பருவநிலை மாற்றத்தால் பயிர் விளைச்சல் 10 விழுக்காடு குறைந்துள் ளது. மழைப்பொழிவு, 30 நாளிலிருந்து 20 நாளாக குறைந்து விட்டது. வெள்ள பெருக்கு இனி அடிக்கடி நிகழும். வெள்ளத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, நீரை சேமிக்கவும் தொழில் நுட்பம் அவசியம். தமிழகத்தில் நீர்நிலைகளின் ஆதாரங்கள் பற்றாக்குறையாக உள்ளன. அதை சரிசெய்யும் உயர்தொழில்நுட்பம் நம்மிடம் இருந்தும், அதை மக்களிடம் கொண்டு செல்ல முடியவில்லை. திறமையாக பயன்படுத்தும் பயிற்சி இல்லாதது இதற்கு 
காரணம். நீரியல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் பயிற்சி நிறுவனங்கள் உருவாக வேண்டும். சொட்டுநீர் பாசனம் கட்டாயம் என்ற அடிப்படையில், கிணறு, குழாய் பாசனத்திற்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும், என்றார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...