. சர்வதேச ஹீரோஃபிலியா நோய் தினம்
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
16 April, 2012
இதே நாள்...
. சர்வதேச ஹீரோஃபிலியா நோய் தினம்
மாடிப்படி ஏறுங்க!
மாடி ஏற படிகளை உபயோகித்தால் உடல்பருமன், இதயநோய் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள். ஜிம்மிற்கு சென்று பணம் செலவழித்து உடற்பயிற்சி செய்வதைக்காட்டிலும் மாடிப்படி ஏறுவது சிறந்த உடற்பயிற்சி என்கின்றனர் நிபுணர்கள். மாடிப்படி ஏறும்போது உடலின் அனைத்து பகுதிகளும் இயங்குகின்றன. இதன் காரணமாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து காணமல் போகின்றன. கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் எக்ஸலேட்டர், லிப்ட் போன்றவைகளை உபயோகப்படுத்துவதை விட மாடிப்படிகளை பயன்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
இதயத்திற்கு பலம் மாடிப்படி ஏறுவதனால் இதயநோய்கள் ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள். இதய தசைகள் பலமடைகின்றன. இதனால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச்செல்லப்படுகிறது. வாரத்திற்கு மூன்று முறை அதாவது 30 நிமிடங்கள் மாடிப்படி ஏறி இறங்கினாலே போதும். இதயநோய்கள் எதுவும் ஏற்படவாய்ப்பில்லை. உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றது.
உடல் எடை குறையும் மாடிப்படி ஏறி இறங்கினால் எக்கச்சக்க கலோரிகள் எரிக்கப்படுகின்றன.உடல் பருமன் ஏற்படுவதில்லை. மாறாக குண்டு உடல்காரர்கள் மாடிப்படி ஏறி, இறங்கினால் உடல் சிக் என்று ஆகிவிடும்.
பிஸியானவர்களுக்கு ஏற்றது வேலைப்பளுவினால் ஜிம், உடற்பயிற்சி என தனியாக நேரத்தை செலவழிக்க இயலாதவர்கள் மாடிப்படி ஏறி இறங்குவதன் மூலம் சிறந்த உடற்பயிற்சி கிடைக்கிறது. இதனால் உடல் பிட்டாவதோடு, கான்சன்ட்ரேசன் பவர் அதிகரிக்கிறது. இது பிற உடற்பயிற்சிகளை விட ஆபத்தில்லாத உடற்பயிற்சியாகவும் செயல்படுகிறது. அதேசமயம், மூட்டுவலி உடையவர்கள், பின்னங்கழுத்து வலி உள்ளவர்கள் மாடிப்படி ஏறுவதை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
'செக்ஸைத்' தேடியவர்களில் நம்பர் 1-பாக், நம்பர் 2 இந்தியா!
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கள் தொடர்பான ஆய்வுகளின்படி,கூகுள் இணையத்தளத்தின் மூலம் செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது. இணையத்தளத்தில் ‘செக்ஸ்’ குறித்து அதிகம் தேடுதலை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன. வியட்நாம் மூன்றாமிடத்திலும் எகிப்து நான்காமிடத்திலும் இந்தோனேஷியா ஐந்தாமிடத்திலும் உள்ளதாக ‘கூகுள் ட்ரென்ட்ஸ்’ ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த பட்டியலில் அல்ஜீரியா, மொராக்கோ, மலேசியா, போலந்து, துருக்கி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து முதலிடம் 2011 ம் ஆண்டு மட்டுமல்லாது கூகுள் தேடல் தளத்தில் இதுவரைக்காலமும் அதிக செக்ஸ் தேடலை மேற்கொண்டோர் உள்ள நாடுகளின் பட்டியலிலும் பாகிஸ்தான் தான் முதலிடத்தில் உள்ளது. இதில் இந்தியாவை 3 ஆம் இடத்திற்கு தள்ளிவிட்டு வியட்நாம் இரண்டாமிடத்தில் உள்ளது. 20 மில்லியன் இணைத்தள பாவனையாளர்களைக் கொண்டுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் நிலையில், அனைத்து வருடங்களுக்குமான உலகளாவிய ‘செக்ஸ் தேடல் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளது’ என பாகிஸ்தானின் த எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ரம்ஜான் மாதத்தில் லீவ் கடந்த 2011 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை பிப்ரவரி, ஆகஸ்ட் மாதம் தவிர்ந்த ஏனைய சகல மாதங்களிலும், செக்ஸ் என்ற வார்த்தையை தேடியவர்களை அதிகம் கொண்ட உலகின் முதல் 10 நகரங்களின் பட்டியலில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் இடம்பெற்றுள்ளது. பிப்ரவரி, ஆகஸ்ட் ( ரம்ஜான் மாதம் ) மாதங்களுக்கான பட்டியலில் எந்தவொரு பாகிஸ்தான் நகரமும் இடம்பெறவில்லை என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
8 இந்திய நகரங்கள் செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட 10 நகரங்களில் 8 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. உலகளவில் இந்தியாவின் லக்னோ முதலிடத்தையும் கொல்கத்தா இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன. சென்னை உலகளவில் 7 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.பாகிஸ்தானின் லாகூரும் வியட்நாமின் ஹனோயும் முதல் 10 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவை சாராத நகரங்களாகும்.
முள்ளிவாய்க்கால், முல்லைத் தீவுக்கும் போங்கள்- உலகத் தமிழர் இயக்கம்
இலங்கையில் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட இடங்களை இந்திய எம்.பிக்கள் குழு பார்வையிட வேண்டும் என்று உலகத் தமிழர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக இந்திய எம்.பிக்கள் குழுவுக்கு தலைமை வகிக்கும் சுஸ்மா சுவராஜ் மற்றும் எம்.பிக்களுக்கு உலகத் தமிழர் இயக்கத்தின் தலைவர் செல்வன் பச்சமுத்து அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையில் நடைபெற்ற போரில் 2 லட்சத்து 16 ஆயிரம் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பல்லாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். உள்நாட்டுப் போரினால் தமிழர்கள் வசிக்கும் வடகிழக்கு பகுதி முற்றாக அழிந்துபோயுள்ளது.
போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என இந்தியா பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகாலமாக இந்தியாவும் இலங்கையும் இந்த உதவிகள் தொடர்பாக பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. 50 ஆயிரம் வீடு கட்டும் திட்டத்துக்கு உதவி, 52 டிராக்டர்கள், 50 ஆயிரம் மிதிவண்டிகள் இவை மட்டுமல்லாது மறுவாழ்வுக்கு 192 மில்லியன் ரூபாய் நிதி உதவி என இந்தியா வழங்கியிருக்கிறது. திருகோணமலை திருக்க்கேதீசுவரம் கோயிலை சீரமைக்க 326 மில்லியன் ரூபாய் நிதி உதவி, பள்ளிகளை சீரமைக்க 187 மில்லியன் ரூபாய் நிதி உதவி, கட்டமைப்பு பணிகளுக்கு 425 அமெரிக்க டாலர் கடனுதவி, ரயில்வே திட்டங்களுக்கு 37.5 மில்லியன் டாலர் கடனுதவி என பல்வேறு திட்டங்களை இந்தியா அளித்துள்ளது.
இவைமட்டுமின்றி இலங்கை மற்றும் இந்திய அரசுகள் வெளியிடும் அறிக்கைகளில் வடகிழக்கு வாழ் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டும் வருகிறது. இந்தியா இத்தனை செய்தாலும்கூட சீனாவிடமிருந்தே அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான உதவிகளையும் இலங்கை பெற்று வருவது என்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இந்த நிலையில் இந்திய எம்.பிக்கள் குழு இலங்கைக்கு செல்கிறது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் முழுமையாக ராணுவமயமாக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், சம்பூர், வாகரை என போரினால் தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் இந்திய எம்.பிக்கள் குழு செல்லுமேயானால் நிச்சயம் நாம் வரவேற்போம்.மேலும் மன்னார், மட்டக்களப்பு பாதிரியார்களையும் யாழ்ப்பாண பல்கலைக் கழக ஆசிரியர் மற்றும் மாணவர்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களையும் இந்திய எம்.பிக்கள் குழு கண்டிப்பாக சந்திக்க வேண்டும். இதை தவிர்த்து இலங்கை அதிகார்கள் அழைத்துச் செல்லும் "சுற்றுலா"வாக தங்கள் பயணம் இருக்கக் கூடாது.இந்திய அரசுக்கு எம்.பிக்கள் குழு சொல்ல வேண்டிய சில விஷயங்களையும் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.
1. இலங்கையை இந்திய அரசு ஆதரிப்பது என்பது தமிழர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல... இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கும் கூட எதிரானதே...
2. கடனுதவி, புனரமைப்பு விஷயங்களை மட்டுமே பார்க்காமல் போர்க் குற்றங்களுக்கும் இலங்கையைப் பொறுப்பாக்க வேண்டும். ஐ.நா. குழுவின் அறிக்கையின்படியான போர்க் குற்றங்கள் பற்றி விசாரிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.
3. வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து முற்றாக ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். 1987-ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும்.
4. கொழும்பு மற்றும் தூத்துக்குடி இடையே கப்பல் போக்குவரத்து இயக்குவதைவிட ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து இயக்கப்படுவதே சரியானது. குறைவான கட்டணமும்கூட.
5. வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தங்களது பாரம்பரிய தாயகத்தில் தங்களது உரிமையை நிலைநாட்டிக் கொள்ள, வங்கதேச மக்களைப் போல தமிழ் மக்கள் கண்ணியத்துடன் சம உரிமையுடன் வாழ வழியேற்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை செல்லும் குழுவிலிருந்து திரினமூல், ஐக்கிய ஜனதாதளமும் விலகல்!
இலங்கைக்கு செல்லும் இந்திய எம்.பிக்கள் குழு மேலும் பலவீனமாகியுள்ளது. இக்குழுவிலிருந்து தற்போது திரினமூல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகியவையும் வெளியேறி விட்டன. இதனால் குழுவின் எண்ணிக்கை 10 ஆக சுருங்கிப் போய் விட்டது.சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பிக்கள் குழு இலங்கை செல்லவுள்ளது. இந்தக் குழுவிலிருந்து ஏற்கனவே அதிமுக, திமுக ஆகியவை வெளியேறி விட்டன. இதனால் குழுவின் எண்ணிக்கை 14 என்பதிலிருந்து 12 ஆக குறைந்து விட்டது.இந்த நிலையில் திரினமூல் காங்கிரஸும், ஐக்கிய ஜனதாதளமும் இன்று விலகி விட்டன. திரினமூல் சார்பில் சுசாரு ரஞ்சன் ஹல்தாரும், ஐக்கிய ஜனதாதளம் சார்பில் சிவானந்த திவாரியும் போவதாக இருந்தது. ஆனால் இருவரும் போகவில்லை. இதனால் குழுவின் எண்ணிக்கை தற்போது 10 ஆக சுருங்கிப் போய் விட்டது.இந்த பத்துப் பேரில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உள்ளது. மற்றவர்கள் வட மாநில எம்.பிக்கள் ஆவர்.
சிதம்பர ரகசியம் தெரியுமா?
பஞ்சபூதங்களாக விளங்குபவன் இறைவன். அதில் ஆகாய ரூபமாக திகழ்கிற
தலம் தான் சிதம்பரம். இங்கே உருவம், அருவம், அருவுருவம் என்று மூன்று
நிலைகளில் சிவப்பரம்பொருள் காட்சி கொடுப்பது இத்தலத்தின் கூடுதல்
சிறப்பு. அதாவது ஆனந்தத் தாண்டவக் கோலத்தில், ஆனந்த நடராஜராகவும்,
சிவகாமி அம்மையாகவும் காட்சி தருவது உருவநிலை. சிவலிங்க ரூபத்தில்
திருமூலராகவும், ஸ்ரீசக்ரமாக உமையபார்வதியும் காட்சி தருவது அருவுருவ
நிலை. அடுத்து அருவமாக தரிசனம் தருவது தான் சிதம்பர ரகசிய ஸ்தானம்.
பொற்சபையில் ஆடல்வல்லாரின் வலப்பக்க சுவற்றில் சக்கரம் இருக்கும்
இடம் தான் இது. இதை திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும்
கூறலாம். சுதர்சன சக்கரத்தில் செல்வம் கொழிக்கும் தலமாக திருப்பதி
விளங்குவது போல் அன்னாகர்ஷண சக்கரத்தால் அன்னத்தில் செழிக்கிறது
சிதம்பரம். அந்தக் காலத்தில் அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று
போற்றப்பட்ட தலம் இது. நான்கு வேதங்களோட விழுப்பொருள், அண்ட
சராசரங்களோட முழுமுதற்பொருள் ஆகியவற்றைக் குறிக்கிறது தான் அருவ
நிலை. அதனால் தான் இந்தத் தலத்துக்கு சிதம்பரம் என்ற பெயர் அமைந்தது.
(சித்-அறிவு; அம்பரம்-வெட்டவெளி) அதனால் தான் பரந்து விரிந்த ஆகாய
தலமாகப் போற்றப்படுகிறது. இங்கே நம் கண்ணுக்குப் புலப்படும் நிலையில்
தங்க வில்வ மாலைகள் சார்த்தப்பட்டிருக்கும். சர்வம் சிவமயமாகத் திகழும்
இறைவனை, அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனை,
கருவறைச் சன்னதியின் திரையை விலக்கியதும், தங்க வில்வ மாலையை
தரிசிக்கலாம். உலகப் பற்று, அறியாமை ஆகியவற்றுடன் வாழ்கிறவன்,
அவற்றிலிருந்து விலகி மெய்ப்பொருளை உணரும் நிலையைப் பெற, மூடிய
திரையினுள்ளே இருக்கிற சிவப்பரம்பொருள் அருள்பாலிப்பதாக ஐதீகம்!
இதனை ஆழ்ந்த பக்தியால் உணரமுடியுமே தவிர, எவருக்கும் உணர்த்த
முடியாது. இங்கே தினமும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் உண்டு. இந்த
பூஜையில் கலந்து கொண்டால் உடலுக்கும், மனதுக்கும் புது சக்தியையும்,
முக்தியையும் கொடுக்கும். சிதம்பரத்தில் இந்த அருவ நிலைதான்
மூலஸ்தானம். அதுதான் ரகசிய ஸ்தானமும். திரையை விலக்கியதும், நம்
அறியாமை என்கிற இருளை விலக்கி அருள்கிறார் இறைவன்; அஞ்ஞானத்தில்
இருக்கிற நமக்கு மெய்ஞ்ஞானத்தை உணர்த்துகிறார். உலகத்தால்
அனைவருமே, ஒரு திரையைப் போட்டபடியே பேசுகிறோம், பழகுகிறோம்,
வாழ்கிறோம். சகஉயிர்களைப் பார்ப்பதையும் இறைவனை அடைவதையும்
உணர்த்துவதே சிதம்பர ரகசியத்தின் நோக்கம்.
மனித மூளையை உருவாக்கும் முயற்சியில்...
உலகின் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரை பயன்படுத்தி மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் மூளை செயல்பாடுகள் தொடர்பான நோயை தடுப்பது குறித்த ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த முயற்சியை 12 ஆண்டுகளில் முடிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
“சீட்டி பஜாவ்....டன் டனா டன்...
அமிதாப் பச்சன், ரானா டக்குபட்டி நடிப்பில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவரவுள்ள “டிபார்ட்மென்ட்” படத்தின் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாடல் “சீட்டி பஜாவ்....டன் டனா டன்...”. காரணம் அதில் நடித்துள்ள பிரேசிலை சேர்ந்த நடாலியா கவுர். ஆனால் பாட்டு வெளியானவுடன் எதிர்பார்ப்புக்கு மாறாக பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. காரணம் இந்த பாட்டு ரஜினியின் “அடுத்த வாரிசு” படத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த “ஆசை நூறு வகை” பாட்டின் ராகத்தை அப்பட்டமாக காப்பி அடித்திருப்பதனால். பாலிவுட்டின் தற்போதைய தேசிய கீதமாகி கொண்டிருக்கும் இந்த பாட்டு, காப்பியடித்த விவகாரம் காரணமாக பல சர்ச்சைகளை வேறு ஏற்படுத்தி வருகிறது.
சார்லி சாப்ளின் 123வது பிறந்த நாள்..
இன்று திரைப்படங்களில் வசனங்களைக் கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமால் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின்.சார்லி சாப்ளினின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததே இல்லை. பிறந்ததில் இருந்தே துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள் தான் அவரின் நண்பர்கள். 1889ஆம் ஆண்டு லண்டன் நகரில் சாப்ளின் பிறந்து, ஓரிரு வருடங்களிலேயே பெற்றோரிடையே சண்டை வந்து டிவோர்ஸ் ஆகிவிடவே, பேசத்தொடங்கும் முன்பே, தாயுடன் சேர்ந்து மேடையில் பாடவேண்டிய நிர்ப்பந்தம். ஐந்து வயதுச் சிறுவனின் பாட்டுக்குக்கிடைத்த அமோக வரவேற்பு, ஏழு வயதிலேயே பறிபோனது. காரணம், அவரது தாயாரின் மனநிலை பாதிக்கப்பட்டதுதான். குடும்பத்தைக் காப்பாற்ற சலூன், கண்ணாடித் தொழிற்சாலை, மருத்துவமனை என எங்கெங்கோ வேலை பார்த்தவர், சில காலம் தந்தையுடன் சேர்ந்து மேடை நாடகங்களிலும் நடித்தார். ஆனால், தந்தை திடீரென இறந்துவிடவே, மீண்டும் தொய்வு!.
1910ல் நாடகக் குழுவினருடன் அமெரிக்கா போனவருக்கு குறும்படங்களில் நல்ல பெயர் கிடைத்தது. அவரது முத்திரை கதாபாத்திரமான ‘டிராம்ப்’ (பேகி பேண்ட், தொப்பி, கைத்தடி, வளைந்த கால்கள்) பிரபலமானது. ‘திகிட்’, படத்தில் தொடங்கிய வரேவற்பு, ‘தி கிரேட் டிக்டேட்டர்’ வரை நீடித்தது. ஆனால், இந்த காலகட்டங்களில் குடும்ப வாழ்வு அவரை பாடாய்ப் படுத்தியது. 1918ல் நடந்த முதல் திருமணம், இரண்டு வருடம் மட்டுமே நீடித்தது. அதற்குப்பின் நடந்த இரண்டு திருமணங்களும்கூட சாப்ளினுக்குச் சோகத்தை மட்டுமே கொடுத்தன. 1942 ல் நான்காவது மனைவியாக ஓனெய்ல் அமைந்தபின் இல்லறத் தொல்லைகள் நின்றன. 1945ம் ஆண்டு. சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி என அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. இரண்டாவது மனைவி ஜோன் பெர்ரியும் சாப்ளின் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார். அவர் தரப்பு நியாயங்களை அமெரிக்க அரசு கேட்காததால், வேறு வழியின்றி, 1952 ல் கனத்த இதயத்துடன் சுவிட்சர்லாந்தில் அடைக்கலமானார் சாப்ளின்.
1910ல் நாடகக் குழுவினருடன் அமெரிக்கா போனவருக்கு குறும்படங்களில் நல்ல பெயர் கிடைத்தது. அவரது முத்திரை கதாபாத்திரமான ‘டிராம்ப்’ (பேகி பேண்ட், தொப்பி, கைத்தடி, வளைந்த கால்கள்) பிரபலமானது. ‘திகிட்’, படத்தில் தொடங்கிய வரேவற்பு, ‘தி கிரேட் டிக்டேட்டர்’ வரை நீடித்தது. ஆனால், இந்த காலகட்டங்களில் குடும்ப வாழ்வு அவரை பாடாய்ப் படுத்தியது. 1918ல் நடந்த முதல் திருமணம், இரண்டு வருடம் மட்டுமே நீடித்தது. அதற்குப்பின் நடந்த இரண்டு திருமணங்களும்கூட சாப்ளினுக்குச் சோகத்தை மட்டுமே கொடுத்தன. 1942 ல் நான்காவது மனைவியாக ஓனெய்ல் அமைந்தபின் இல்லறத் தொல்லைகள் நின்றன. 1945ம் ஆண்டு. சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி என அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. இரண்டாவது மனைவி ஜோன் பெர்ரியும் சாப்ளின் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார். அவர் தரப்பு நியாயங்களை அமெரிக்க அரசு கேட்காததால், வேறு வழியின்றி, 1952 ல் கனத்த இதயத்துடன் சுவிட்சர்லாந்தில் அடைக்கலமானார் சாப்ளின்.
1972 ஆம் ஆண்டு காலச் சக்கரம் சுழல, அதே அமெரிக்க அரசு, ‘உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்’ விருது பெற சாப்ளினை அழைத்தது. பரிசினை ஏற்றுக்கொண்டாலும், அமெரிக்காவில் தங்க விருப்பமின்றி, மீண்டும் சுவிட்சர்லாந்து கிளம்பினார் சாப்ளின். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து நின்று, "வாழ்நாள் முழுவதும் போர்க்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?" எனக் கேட்டார்கள். சாப்ளின் சிரித்தார்... "இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி... மாறிவிடும்! இதோ இந்தக் கணத்திலும் கூட!" சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும் பொழுது பெரிதும் வியப்புற்றனர். சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பல நடத்தப் பட்டு வந்தன. சாப்ளின் ஒரு முறை அப்போட்டி ஒன்றில் ரகசியமாகப் பங்கு பெற்றார்.இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது.
இனப் படுகொலையாளி ஹிட்லரின் காலத்தில், ஹிட்லருக்கு எதிராக படமெடுத்த 'மக்களின் கலைஞன்' சார்லி சாப்ளின் சொன்னது இது – "மனிதன் கொண்ட வெறுப்புகள் ஒரு நாள் மறையும், சர்வாதிகாரிகள் இறப்பார்கள், மக்களிடம் இருந்து அவர்கள் பறித்த அதிகாரம் மீண்டும் மக்கள் கைகளுக்கே திரும்பும், மனிதன் இறக்கும் வரை விடுதலை தாகம் மறையாது" – உன் மனம் வலிக்கும்போது சிரி; பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை! இன்றும் உலக மக்களின் மனதில் சிரிப்பலைகளைத் தவழவிட்டு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கும் சார்லி சாப்ளின் மறைந்து விட்டாரா என்ன? நம் நினைவலைகளில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்
Subscribe to:
Posts (Atom)