என்ன கொடுமை சரவணன்னு என்று சொன்னவருக்கே போய் சேர்ந்த படம்! சுட்டி T V ல போடவேண்டிய படம். கருமம் இதுல இடையே இடையே பாட்டு வேற இசை AR ரகுமான்.கொடுமை! motion picture ல படம் எடுத்தாங்களாம் இப்படி "மோசமான Picture" ஆ போய்டுத்து. இந்த படம் ரஜினி பொண்ணு இல்லாம வேற யாரவது எடுத்துருந்தா? கல்லால்லையே அடிச்சி கொன்றுப் பாங்க பாவம்.நல்லவேலை தியேட்டருக்கு போய் படம் பார்க்கலை.(ஆனந்தம்) இந்த கொடுமைய தியேட்டர்ல போய் பார்த்தவங்களுக்கு! சரி அத விடுங்க அதை ஏன் என் வாயால சொல்லிக்கிட்டு... AVATHAR பார்த்து சௌந்தர்யா சூடு போட்டு கொண்ட படம்.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
29 May, 2014
பாஸ்போர்ட்டில் படம் வரைந்த மகன்- நாடு திரும்ப முடியாமல் தந்தை!
சீனநாட்டை சேர்ந்த தந்தையும், அவரது நான்கு வயது மகனும் தென்கொரியாவுக்கு சென்றிருந்தனர். விமானத்தில் செல்லும்போது, பிரயாண களைப்பு தெரியாமல் இருக்க சிறுவன் பேனாவை எடுத்து படம் வரைந்து கொண்டே வந்துள்ளான் அச்சிறுவன். ஆனால் அவன் படம் வரைந்தது வெற்று காகிகத்தில் கிடையாது, தந்தையின் பாஸ்போர்ட்டில். இது தெரியாத தந்தை தென்கொரிய குடியுரிமை அதிகாரிகளிடம் பாஸ்போர்ட்டை காட்டியபோது அதிர்ச்சியடைந்தார். தந்தையின் உருவமே தெரியாத அளவுக்கு கண்டபடி படம் வரைந்து வைத்துள்ளான் சிறுவன். பாதுகாப்பு காரணங்களால் சிறுவனையும், தந்தையையும் சீனாவுக்கு திருப்பியனுப்ப முடியாத நிலையில் தென்கொரிய அதிகாரிகள் உள்ளனர். இந்த சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர்கள், பாஸ்போர்ட்டில் இருப்பது, அவர்தான் என்று கூறியும்கூட, தென்கொரிய அதிகாரிகள் ஏற்பதாக இல்லை.
ஓடாத படங்களுக்கெல்லாம் சக்சஸ் மீட் வைக்கும் கோடம்பாக்கம்!
முன்பெல்லாம் ஒரு படம் வெளியாகி 50 நாட்கள் அல்லது 100 நாட்கள் ஓடிய பிறகுதான் அந்த படத்தின் வெற்றியை கொண்டாடுவார்கள். ஆனால், இப்போதோ படம் வெளியாகி இரண்டு மூன்று நாட்களில் சக்சஸ் மீட் வைக்கிறார்கள். ஆனால், இது படங்களின் வெற்றிக்காக அவர்கள் வைப்பதில்லை. அப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தி பப்ளிசிட்டி செய்து படத்தை ஓடவைப்பதற்காக எடுக்கும் முயற்சிதான் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம் என்பதால், திரையுலகினரே இந்த சக்சஸ் மீட்டை கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மற்ற இயக்குனர்களின் படங்கள் வெளியாகும்போது அதுபற்றி நீங்கள் யாரிடமாவது உண்மையான விமர்சனங்களை சொன்னதுணடா? என்று இயக்குனர் சசிகுமாரிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, இப்போதெல்லாம் விமர்சனங்களை கேட்க யாருமே தயாராக இல்லை. காரணம், படம் வெளியான சில நாட்களிலேயே சக்சஸ் மீட் நடத்தும் வேலைகளில் பரபரப்பாகி விடுகிறார்கள். அதுமட்டுமின்றி, படம் வசூலித்ததோ இல்லையோ அவர்களே பாக்ஸ் ஆபீசில் வசூலில் முதலிடம் என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறர்கள். அந்த அளவுக்கு எதையாவது சொல்லி படத்தை ஓட வைக்க வேண்டும். என்கிற நிலையும் உருவாகி விட்டது என்று தனது கருத்தினை தைரியமாக பதிவு செய்திருக்கிறார் சசிகுமார்.
Subscribe to:
Posts (Atom)