ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
12 January, 2012
ஞானம் பெற உதவுவது தவம்...
ஞானம் பெற உதவுவது தவம். காவி உடுத்துவதும், காட்டிற்கு சென்று மூச்சடக்குதலும் தவமாகாது. காற்றை மட்டுமே உண்டு, ஒற்றைக்காலில் நெருப்பின் நடுவே நிற்றல் மட்டுமே தவமாகாது. இவை தவத்தின் வெவ்வேறு அடையாளங்களே. ஐம்புலன்களை அடக்கல் ஐம்புலன்களை அடக்கி உள்ளத்தை பரிசுத்தமாக வைத்து மனஅமைதியும், பொறுமையும் மேற்கொள்வதே ‘தவம்’ என்கின்றனர் முன்னோர்கள். தனக்கு வரும் துன்பங்களை மன அமைதியுடனும், பொறுமையுடனும், தாங்கிக்கொள்ளுதல், மற்றொரு உயிருக்கு துன்பம் செய்யாதிருத்தல், ஆகிய இருபண்புகளும் சேர்ந்த ஒரு பண்பே ‘தவம்’ ஆகும். தவமே சிவம் வியாபாரம் செய்யும் வியாபாரிக்கு அதனால் செல்வம் பெருகும், விவசாயிக்கு வேளாண்மையால் தானியம் வரும். தானதர்மத்தால் புகழ் வரும். கல்வியால் அறிவு வரும், முறையான உணவினால் உடலுக்கு ஆரோக்கியம் வரும் ஆனால் தவத்தால் சிவம் வரும் என்கின்றனர் ஞானிகள்
பலம் தரும் சாத்துக்குடி!
மனித உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களான புரதம், கால்சியம், நார்ச்சத்து, உயிர்சத்து, போன்றவை பழங்களில் அதிகம் காணப்படுகின்றன. உடலுக்கு நேரடியாக சத்துக்களை கொடுப்பவை பழங்கள் மட்டுமே. உண்ணும் உணவு எளிதாக ஜீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதிகளில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் பழங்கள் உதவிபுரிகின்றன. சீதோஷ்ண காலங்க்ளில் விளையும் பழங்களை உண்டாலே உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அந்த வகையில் சாத்துக்குடி பழம் உடலுக்கு பலத்தை தருவதோடு ரத்த உற்பத்தியை அதிகரிக்கும் என்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் சாத்துக்குடி பழம் நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பார்ப்பதற்கு காய்போல பச்சையாகவே காணப்படும். ஆனால் சுளைகள் இனிப்பாக இருக்கும். சாத்துக்குடியில் பி உயிர்ச்சத்தும், இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் காணப்படுகின்றன.
எலும்பு வளர்ச்சி கால்சியம் சத்து குறைபாட்டினால் எலும்பு, பற்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். அவர்களுக்கு சாத்துக்குடி ஏற்றது. சாத்துக்குடியை தினசரி உட்கொள்வதன் மூலம் உடல் பலம் பெறுவதோடு எலும்பு வளர்ச்சியடையும். பசியை தூண்டும் வயிறு மந்தமாக பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் தினசரி இரண்டு சாத்துக்குடி சாப்பிட ஜீரணசக்தி அதிகரித்து பசி உண்டாகும். வயதானவர்களுக்கு உணவை செரிமானத்தை அதிகரிக்கும், மலச்சிக்கலை போக்கும் நினைவாற்றலை அதிகரிக்கும். மறதி நோயால் அவதிப்படுபவர்களுக்கு சாத்துக்குடி அருமருந்தாகும். தினசரி சாத்துக்குடி ஜூஸ் பருகி வர நினைவாற்றல் அதிகரிக்கும்.
நோயாளிகளுக்கு ஏற்றது. நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் இரண்டு வேளை சாத்துக்குடி சாறு பருகினால் புத்துணர்ச்சி ஏற்படுவதோடு, உடலுக்கு வலு உண்டாகும். சாத்துக்குடி ரத்தத்தில் எளிதில் கலப்பதால் விரைவில் உடல் நலமடையும். சோர்வைப் போக்கும் சிலர் எப்போதும் சோர்வாக இருப்பர். அசதியினால் தலைசுற்றலுடன் மயக்கம் ஏற்படும். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும். ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்தசோகையை போக்கும்.

லஞ்சத்துக்கு ஆசைப்படும் அதிகாரிகள்...!
ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகளிலேயே இந்திய அதிகார முறைமை தான் மிக மோசமானது, லஞ்சத்திற்கு ஆசைப்படும் ஊழல் அதிகாரிகள் இந்தியாவில்தான் அதிகம் உள்ளனர் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் 10 இடங்களில், இந்தியாவுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம், ஆசிய நாடுகளில், எந்த நாட்டில் அதிகார முறைமை சிறந்த முறையில் செயல்படுகிறது, எந்த நாட்டில் மிக மோசமாக செயல்படுகிறது என்பதைக் கண்டறிய சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வு அறிக்கையின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முதலீட்டாளர்களுக்கு தலைவலி இந்தியாவில் உள்ள அதிகார வர்க்கம் அதாவது அதிகாரிகள் திறமை குறைந்தவர்களாக உள்ளனர். இவர்கள் மீது, ஊழல் உள்ளிட்ட மிகப் பெரிய அளவிலான புகார்கள் கூறப்படுகின்றன. இது இந்தியாவில் முதலீடு செய்ய வரும் அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக உள்ளது. குறிப்பாக, இந்திய அதிகார முறைமையில், போதுமான உள்கட்டமைப்பு வசதி இல்லாதது, ஊழல், அதிகாரிகள் லஞ்சத்துக்கு ஆசைப்படுவது போன்றவை பெரும் பிரச்னைகளாக உள்ளன. நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலம், தங்களுக்கு சாதகமான காரியங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன.
தாறுமாறான வரிச்சுமை மேலும், இந்தியாவில், தாறுமாறான மற்றும் கடும் சுமையை ஏற்படுத்தக் கூடிய வரிகள், சுற்றுச் சூழல் மற்றும் பிற கட்டுப்பாடுகள் ஆகியவை, அந்நிய நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதைத் தடுக்கின்றன. இதனால் அந்நிறுவனங்களுக்குப் பெருமளவில் செலவு ஏற்படுகிறது. இந்திய கோர்ட்டுகளுடன் மல்லுக்கட்டுவதை விட அவற்றைத் தவிர்ப்பதையே நிறுவனங்கள் விரும்புகின்றன.தவறான முடிவுகள் எடுக்கப்படும் போது அதற்கு இந்திய அதிகாரிகள் பொறுப்பேற்பதே இல்லை. எப்போதாவதுதான் பொறுப்பு ஏற்கின்றனர். இதனாலேயே பெரும்பாலான அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் முதலிடம் இந்த ஆய்வறிக்கையின்படி, மொத்தம் 10 இடங்களில், 2.25 புள்ளிகள் பெற்று சிங்கப்பூர் முன்னணியில் உள்ளது. இதையடுத்து ஹாங்காங் (3.53), தாய்லாந்து ( 5.25), தைவான் (5.57), ஜப்பான் (5.77), தென் கொரியா (5.87) மற்றும் மலேசியா (5.89)ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. மலேசியாவை அடுத்து, சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த வரிசையில் இந்தியா 9.21 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

மனிதர்கள் மடியலாம்... மண் மடியக்கூடாது!
ஈழத்தின் வீரப் போர் கதையை முதல் முறையாக ஒரு படத்தில் பதிவு செய்துள்ளனர் தமிழ்ப் படைப்பாளிகள். இத் திரைப்படத்தில் நாயகனாக கனடா வாழ் ஈழத்தமிழரும் கனடாவில் எடுக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த்திரைப்படமான '1999' நாயகருமான சுதன் மகாலிங்கம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் நாயகியாக நவீனா என்பவர் நடித்துள்ளார். படத்தின் இயக்குநர் இகோர் இதற்கு முன் தமிழில் ஆர்யாவை வைத்து கலாபக்காதலன் படத்தைக் கொடுத்தவர். தேன்கூடு படத்தினை இலெமூரியா சர்வதேச திரைப்பட நிறுவனம் தயாரிக்க பிளசிங் எண்டர்டெய்னர்ஸ் பிரபாதிஷ் சாமுவேல் வழங்குகிறார்.
1984-ல் இலங்கை திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள தென்னமரவாடி என்ற பசுமை நிறைந்த தமிழ் கிராமம் சிங்கள வெறியர்களால் சூறையாடப்படுகிறது. அந்த கிராம அழிவிலிருந்து ஒரு ஈழ விருட்சம் வீரமாய் துளிர்விடுகிறது. அதன் போராட்டக் கதை 2009 முள்ளிவாய்க்கால் வரை தொடர்கிறது. முடிவே வரலாறு….. இல்லை அது முடியாத வரலாறு, என்பதுதான் படத்தின் அடிநாதம். இலங்கை வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்ட ஒரு தமிழீழக் கிராமத்தை தேன்கூடு திரைப்படத்தில் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்களாம். தமிழீழ மக்கள் மண்ணை விட்டுதான் போகிறார்கள்.. மண் அவர்களை விட்டுப்போகாது.. ஆண்ட தமிழினம் மீண்டும் ஆளும்…மனிதர்கள் மடியலாம்.. மண் மடியாது! இதை தேன்கூடு உணர்த்தும் என்கிறார்கள் லெமூரியா படக்குழுவினர். பிப்ரவரியில் உலகமெங்கும் வெளிவருகிறது 'தேன் கூடு'

சம்மன்களை வாங்க மறுத்து, ஒளிந்து கொண்டிருக்கும் இந்தியாவின் தொழிலதிபர்களான ரூயா மற்றும் கெய்தான் !
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் நீதிமன்றம் அனுப்பி சம்மன்களை வாங்க மறுத்து, ஒளிந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களான ரூயா மற்றும் கெய்தான் குடும்பத்தினருக்கான சம்மன்களை, அவர்களது வீடுகளில் நீதிமன்றம் ஒட்ட வைத்துள்ளது.
எஸ்ஸார் தொழில் குழுமத்தின் உரிமையாளர்களான அனுஷ்மன் ரூபா, ரவி ரூயா ஆகியோர் மீதும், லூப் டெலிகாம் நிறுவன அதிபர்களான கிரண் கெய்தான், அவரது கணவர் ஐ.பி.கெய்தான் ஆகியோர் மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ வழக்குத் தொடர்ந்துள்ளது. இவர்கள் மீது சமீபத்தில் டெல்லி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்தது. இதையடுத்து, கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இவர்கள் துபாய்க்குச் சென்றுவிட்டனர். இவர்களை விசாரணைக்கு வரக் கோரி நீதிமன்றம் அனுப்பிய சம்மன்களை, அவர்களது வீடுகள், அலுவலகங்களில் யாரும் வாங்கவில்லை. இதையடுத்து இந்த சம்மன்கள் அங்கு ஒட்டப்பட்டுள்ளன.
இந் நிலையில் இவர்களது பாஸ்போர்ட்களை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் சிபிஐ விரைவில் மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது.2008ம் ஆண்டில் வோடபோன் நிறுவனத்தில் 33 சதவீத பங்குகளை வைத்திருந்த எஸ்ஸார் நிறுவனம், லூப் டெலிகாமிலும் பெரும் பங்குகளை வைத்திருந்தது. ஒரு மண்டலத்தில் 2ஜி லைசென்ஸ் பெறும் தொலைத் தொடர்பு நிறுவனம் இன்னொரு தொலைத் தொடர்பு நிறுவனத்தில் 10 சதவீதத்துக்கு மேல் பங்குகளை வைத்திருக்கக் கூடாது என்பது விதி. ஆனால், இந்த விதியை மீறி லூப் டெலிகாமின் பெயரைப் பயன்படுத்தி எஸ்ஸார் நிறுவனம் தனக்கு ஒதுக்கப்பட்டதை விட அதிகமான அளவு ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது. இதையடுத்து இந்த இரு நிறுவனங்களையும் 2ஜி வழக்கில் சிபிஐ சேர்த்தது

ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர துணைப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது குற்றம்!

இது குறித்து ராஜபக்சேவிடம் ரம்புகவெல்லா புகார் கூறியதையடுத்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில், சில்வா தவறாக நடந்து கொண்டது உறுதியானதையடுத்து, ரம்புகவெல்லாவிடம் மன்னிப்பு கோருமாறு அவருக்கு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதே நேரத்தில் சந்துலாவின் நடவடிக்கைகள் சரியில்லை என்றும் ரம்புகவெல்லாவிடம் ராஜபக்சே கூறியதாகத் தெரிகிறது. ரம்புகவெல்லா மீதும் ஏற்கனவே பல புகார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்று, அவருக்கும் ஒரு டிவி நடிகைக்கும் உள்ள தொடர்பாகும். மேலும் ரம்புகவெல்லாவின் மகன் லண்டனில் ஒரு ரஷ்ய விபச்சாரப் பெண்ணுடன் பிடிபட்ட விவகாரமும் சில காலத்துக்கு முன் வெளியே தெரியவந்ததும் குறிப்பிடத்தக்கது.
மன்னிப்பு கேட்டதோடு சில்வாவை ராஜபக்சே விட்டுவிடக் கூடும் என்று தெரிகிறது. இலங்கையின் பெயர் கெட்டுவிடும் என்று கூறி, இந்த விவகாரத்தை இதற்கு மேல் பெரிதாக்க வேண்டாம் என்று ரம்புகவெல்லாவிடம் ராஜபக்சே கூறியுள்ளதாகவும் தெரிகிறது. இலங்கையில் புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரின்போது நடந்த இனப் படுகொலைகளில் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கும் பெரும் தொடர்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரைக் காக்க ராஜபக்சே தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
வரலாற்றை முறைப்படுத்த கருணாநிதி கோரிக்கை!
முல்லை பெரியாறு அணை உள்ள தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழர்களுக்கு சொந்தமானது என்று சான்றுகளே உள்ளன. 1886ம் ஆண்டு பிரிட்டிஷ் நிர்வாகம், திருவிதாங்கூர் அரசோடு செய்துகொண்ட ஒப்பந்தம் பிழையானது என்றும் மத்திய அரசு வரலாற்றை முறைப்படுத்த வேண்டும் என்றும், இதற்கு தமிழக அரசும் முழு ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தி.மு.க.தலைவர் கருணாநிதி
சமூக வலைதளங்களுக்கு டில்லி ஐகோர்ட் எச்சரிக்கை!
தங்களது சமூக வலைதளங்களில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்குமாறு, கூகுள் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கென ஒரு நடைமுறையை ஏற்படுத்துமாறும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காவிட்டால், சீனா போன்று தாங்களும் இத்தகைய சமூக வலைதளங்களை தடை செய்ய நேரிடும் என்றும் டில்லி ஐகோர்ட் எச்சரித்துள்ளது
நாகை மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் அட்டூழியம்
கண்ணீர் துளியாய் இருக்கும் ஒரு சிறு நாடு! இந்திய அரசாங்கம் இதுவரை தட்டி கேட்காததினால் இன்னும் இன்னும் நம்மை அடிமையாய் தமிழன் என்றால் இளித்தவாயன், தமிழன் என்றால் தன் மானம் இல்லாதவன், தமிழன் என்றால் அவனுக்கு மானம் ரோசம் எதுவும் இல்லாதவன் என்று நினைத்து கொண்டிருக்கும் மத்திய அரசை எதை கொண்டு நாம் அடிப்பது? கேரளா காரன் அடிப்பதையே தட்டிகேட்க வக்கில்லாத இந்த காங்கிரஸ் வெளியில் இருந்து ஒரு நாடு அடிப்பதையா கேட்கப்போகுது? இங்கு ஒரு பிரபாகரன் பிறந்து தனி தமிழ்நாடு கேட்டால் தான் தமிழனுக்கு விடிவு! அதுவரை மலையாளி கிட்ட மட்டும் இல்ல? கர்நாடக காரனும், ஆந்திரா காரணம், சிங்களவனும் நம்மள சுத்தி சுத்தி அடிப்பானுங்க நாமலும் அந்த நாதாரி சரி இலைன்னு இந்த நாதாரிய தேர்ந்தேடுப்போம். இதுவும் எனக்கு என்னனு?
கவிதையால் புரட்டி போட ஒரு பாரதி வேண்டாம்.
100 இளைஞர் கொடுத்தால் நாட்டை புரட்டி
போடநினைக்கும் ஒரு விவேகானந்தர் வேண்டாம்.
மீண்டும் ஒரே ஒரு பிரபாகரனை கொடு எம் தமிழினம் தழைக்க....
தன்மானம் காக்க... ஒரு வேலுப்பிள்ளை போதும்!
தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்குவதையும், இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களை கடத்தி செல்வதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் இந்த தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியவில்லை. இந்தநிலையில் நாகையை சேர்ந்த 13 மீனவர்கள் கடத்தப்பட்டு உள்ளனர். நாகையை அடுத்த அக்கரைப் பேட்டை மீனவ கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு சொந்தமான படகில் மகேந்திரன், செந்தில்நாதன், பழனிவேல், அருள், செல்வன், சற்குணன், செல்வநாதன் ஆகிய 7 பேரும், இன்னொரு படகில் 6 பேரும் கடந்த 9-ந்தேதி மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய எல்லையில் நடுக்கடலில் வலை வீசி மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
அப்போது குட்டி ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். 2 படகுகளை சுற்றி வளைத்தனர். பின்னர் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாக கூறி 13 மீனவர்களையும் அவர்கள் சிறைபிடித்து சென்றனர். அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் கரைக்கு திரும்பி இந்த தகவலை ஊருக்குள் தெரிவித்தனர். இந்த தகவல் காட்டு தீ போல பரவியது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. மீனவர்களின் குடும்பத்தினர் கதறினர்.

Subscribe to:
Posts (Atom)