அஜித்குமார், மத்திய அரசின் சேவை வரி மீதான தனது கருத்தை தெரிவித்துள்ளார். இணையதளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அஜித் “ ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் திருந்தினால் தான் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும். அவர்களாக முன்வந்து தங்களிடமிருக்கும் ஊழல் செய்த கருப்பு பணத்தை தங்கள் பையிலிருந்து எடுத்து கொடுத்தால் தான் இந்தியா வளரும். தேவையில்லாமல் எதற்கும் வரி போட வேண்டிய அவசியமும் இருக்காது. இது மட்டும் நடந்துவிட்டால் உலகின் பணக்கார முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும். இவர்களிடமிருந்து இந்த நாட்டை ‘கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்’. இதே நிலை தொடர்ந்தால் வின்ஸ்டன் சர்ச்சில் கூறியது போல எதிர்காலத்தில் நீருக்கும், காற்றிற்கும் கூட வரி விதிக்க வேண்டிய கட்டாயம் வரலாம்” என்று கூறினாராம். நீருக்கு ஏற்கனவே வரி வசூலிக்கப்பட்டு வருவதால், அடுத்தது காற்று தான்.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
12 January, 2013
பாலகிருஷ்ணாவே கைகொட்டி சிரிப்பார்!
நாம் தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா படத்தை பார்த்து கைகொட்டி சிரித்திருக்கிறோம். பாலகிருஷ்ணாவே கைகொட்டி சிரிப்பார் என்றால் அது அலெக்ஸ்பாண்டியன் தான்! படம் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென நாம் வந்திருப்பது சிறுத்தையா? சகுனியா? அலெக்ஸ்பாண்டியனா? என்று டிக்கெட்டை எடுத்து பார்க்கத் தோன்றுகிறது. ‘டீசல் விக்குற விலைல இவ்ளோ கார்ல ஏண்டா துரத்திகிட்டு வர்றீங்க’ என்று சந்தானம் கேட்கும் போது ‘ நம்ம மைண்ட் வாய்ஸ் சந்தானத்திற்கும் கேட்டுவிட்டதோ?’ என்று ரசிகர்கள் திடுக்கிடுவது உறுதி. ’சிக்ஸ்பேக் இருக்கோ இல்லையோ நல்ல பிளாஷ்பேக் வெச்சிருக்கடா’ என்பன போன்ற சந்தானத்தின் வசனங்கள் இருக்கையில் உட்கார வைக்கிறது. கமெர்ஷியல் படத்தில் லாஜிக் எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாந்தால், இயக்குனர் பொறுப்பாக முடியாது. சந்தானம் செய்யும் காமெடிகளையெல்லாம் காணாமல் போகச் செய்கிறார் கார்த்தி. பாலத்திலிருந்து ரயில் மீது குதிப்பதும், ரயிலிலிருந்து நீரில் குதிப்பதும், நூறு கார்களில் வரும் அடியாட்களை துவம்சம் செய்வதும், ஆயிரம் குண்டுகளில் ஒரு குண்டு கூட கார்த்தி மீதும் அனுஷ்கா மீதும் படாததையும் பார்க்கும் போது விரல் வைக்க மூக்கு தான் இல்லை. கமர்ஷியல் படம் தான் என்றாலும் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய முதலமைச்சர் மகளுக்காக அந்த காண்டிராக்டில் கையெழுத்து போடுவது நெருடல். அலெக்ஸ் பாண்டியன் - சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. சிரிப்பு தான் வருகிறது!
மெய்யாலுமா?
இரண்டு மாதங்களில், கறிவேப்பிலையின் விலை இரு மடங்கு
உயர்ந்துள்ளது.கருணாநிதி கவலை!பொங்கல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
விலைவாசி எப்படி குறைந்துள்ளது தெரியுமா? முதல் ரகம் பச்சரிசி ஒரு
கிலோ, 2012ல், 32 ரூபாய்; தற்போது, 40 ரூபாய். இரண்டாம் ரக பச்சரிசி, ஒரு
கிலோ, 22 ரூபாய்; தற்போது, 30 ரூபாய். பொங்கல் தயாரிக்க தேவையான
வெல்லம் ஒரு கிலோ, 2012ல், 35 ரூபாய்; தற்போது 42 ரூபாய்.ஆட்டுக்கறி,
2012ல் ஒரு கிலோ, 320 ரூபாய்; தற்போது, 450 ரூபாய். நாட்டுக் கோழி, 2012ல்
ஒரு கிலோ, 220 ரூபாய்; தற்போது, 320 ரூபாய். இரண்டு மாதங்களில்,
கறிவேப்பிலையின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.இது தான் அ.தி.மு.க.,
ஆட்சியின் விலைவாசி நிலைமை. வாங்கும் சக்தி குறைவாகவே உள்ள
ஏழை, எளிய நடுத்தர மக்களை, விலைவாசி உயர்வு வேதனையின் உச்சிக்கே
தள்ளிக் கொண்டிருக்கிறது.இவ்வாறு கருணாநிதி அறிக்கையில்.
ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்!
Subscribe to:
Posts (Atom)