|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 June, 2011

இதே நாள்...


  • ஐரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது(1922)

  •  வடகொரியா, சியோலைக் கைப்பற்றியது(1950)

  •  கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது(1967)

  •  மால்கம் எக்ஸ், ஆப்பிரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்(1964)



  • நஞ்சுக்கு மருந்தாகும் திருநீர்ப்பச்சை...


    இந்தியாவின் வெப்ப மண்டலப் பிரதேசங்களில் வளரும் திருநீர்பச்சை, சாலை ஓரங்களிலும் வீணாக இருக்கும் இடங்களிலும் அதிகமாக வளர்ந்திருக்கும். முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையதாகும். விதைகள், மலர்கள், இலைகள், வேர் போன்றவை மருத்துவ குணம் கொண்டவை.

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: போர்னியால், கற்பூரம், சிட்ரால்,சிட்ரோனெல்லால், யூகலிப்டால்,ஷொக்சனால், சைக்லோஹெக்சோன், யூஜினால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், மென்தால், ஓசிமின்,

    தைலம், மலர்கள், இலைகளில் இருந்து கிடைக்கும் டெரியேக்டியால். ஐசோகுவார் செட்ரின், காம்ப்ஃபெரால் போன்ற வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன. மருந்தாகும் தாவரம் மணமிக்க இலைகள் கக்குவான் இருமலுக்கு பயன்படும். சாற்றினை மூக்கினுள் செலுத்த சளி கட்டுப்படும். படர்தாமரை நோயை குணப்படுத்தும். தேனுடன் கலந்து சூடாக்கப்பட்ட சாறு சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்தாகும். மலர்கள் அஜீரணத்தைப் போக்கும், சிறுநீர்க் கடுப்பை, நீக்கும். வேரானது காய்ச்சலை தணிக்கும், குழந்தைகளுக்கு மலச்சிக்கலை குணப்படுத்தும்.

    கிருமி நாசினி பூச்சிகளை அகற்றும், ஜூரத்தை குறைக்கும் கிருமி நாசினியாகும். அஜீரணத்தைப் போக்கும். நஞ்சுக்கு மாற்று மருந்தாகும். மணமிக்கது. வியர்க்கச் செய்யும். சிறுநீர்க்கடுப்பை போக்கும். கபத்தை வெளிக்கொணர உதவுகிறது. பிசுபிசுப்பு தன்மை உடையது. சிறுநீர்ப்பை அழற்சி, மலச்சிக்கல் உள்மூலம், சிறுநீரக கோளாறு, சாறுமேக வெட்டை நோய், கோனேரியா, வயிற்றுப்போக்கு, வலி, புண்கள், போன்றவற்றிற்கு பயன்படும், பற்று புண்கள், காயங்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

    ரத்த வாந்தியை கட்டுப்படுத்தும் சகல விதமான வாந்திகளுக்கும் இது நல்ல மருந்து. குறிப்பாக ரத்த வாந்தி, கப வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகையாகும். இந்தப் பச்சிலையின் சாறெடுத்து சுடுநீரில் கலந்தோ அல்லது கஷாயம் செய்து கொடுக்க வாந்தி கட்டுப்படும். முகத்தில் விஷப் பருக்கள் தோன்றினால் அதற்கு திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி சாறெடுத்து அந்தச் சாற்றோடு வசம்பு வைத்து நன்கு அரைத்து விஷப் பருக்கள் மீது மூன்று வேலை தடவினால் பரு காய்ந்து கொட்டிவிடும்  

    மன உளைச்சல்...

    மன உளைச்சல் என்ற வார்த்தை இப்போது அனைவராலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தையாகிவிட்டது. பணியிடங்களில் ஏற்படும் நெருக்கடி, உடல்ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களினால் மன உளைச்சல் அல்லது மன அழுத்தம் ஏற்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த மன அழுத்தம் தாம்பத்ய உறவையும் பாதிக்கின்றது என்று தெரிவிக்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு.

    தாம்பத்யத்தின் போது கணவன் மனைவி இருவரும் ஒரே மனநிலையில் இருக்க வேண்டும். களைப்பு மற்றும் மன அழுத்தத்தில் கணவன் இருக்கும் போது மனைவி உறவில் ஈடுபடும் மனநிலையில் இருந்தாலோ, மனைவிக்கு இஷ்டமில்லாத சமயத்தில் கணவன் உறவுக்கு அழைத்தாலோ அது சிறப்பானதல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

    இனப்பெருக்கத்தை தடுக்கும் மன உளைச்சலுக்கு காரணமான ஹார்மோன் அட்ரீனலின் சுரப்பியில் சுரக்கிறது. இது விரைவாக செயல்பட்டு மூளையில் சுரக்கும் இனப்பெருக்க ஹார்மோனை தடை செய்கிறது. அதுமட்டுமல்லாமல் இனப்பெருக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் ஹார்மோனையும் சுரக்கச் செய்வதாக கூறி அதிர்ச்சியடைய வைக்கிறது அந்த ஆராய்ச்சி.

    கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இதனை கண்டுபிடித்துள்ளனர். மன அழுத்தம் மூலம் சுரக்கும் இனப்பெருக்கத் தடை ஹார்மோன், பிட்யூட்டரி சுரப்பியில் தாக்கத்தை ஏற்படுத்தி ஆணிடம் சுரக்கும் டெஸ்ரோஸ்டிரான் மற்றும் பெண்ணின் ஓவரிகளில் சுரக்கும் ஈஸ்ரோஜன் அளவினையும் கட்டுப்படுத்துகிறது. இதன் விளைவாக,. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. அண்டம் வெளியிடுதல் பாதிப்படைகிறது. இனப்பெருக்க ஈடுபாடும் குறைந்து போகிறது. இதனால் கருத்தரிப்பதற்கான சிகிச்சைக்கு உள்ளாபவர்களுக்கு மன உளைச்சல் அதிகரிக்கிறது.

    மிருகங்களுக்கும் மனஉளைச்சல் 2000 மாவது ஆண்டில்தான் இந்த இனப்பெருக்கத்தடை ஹார்மோன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பறவைகளில் மட்டுமே காணப்பட்ட இந்த ஹார்மோன் தற்போது பாலுட்டிகளிடமும், மனிதர்களிடமும் சுரப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அடைத்துவைத்து வளர்க்கப்படும் மிருகங்களுக்குக்கூட மன உளைச்சல் ஏற்பட்டு அவற்றின் இனப்பெருக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது.மன உளைச்சல் ஏற்படும் சமயங்களில் இனப்பெருக்கச் செயல்களில் ஈடுபடுவது பயனற்றது என்று இந்த ஆய்வாளர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கிறார்.

    இது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. ஏனெனில் ‘வறுமையினால் ஏற்படும் மன உளைச்சலுக்கு மருந்தாகத்தான் இனப்பெருக்கச் செயல்களில் இந்தியர்கள் ஈடுபட்டு மக்கள்தொகையை அதிகரிக்கிறார்கள்’ என்பது மக்கள்தொகைப் பெருக்கத்தை ஆராயும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

    மனதில் உற்சாகம் நீடிக்கும் திருமணம் ஆன புதுத் தம்பதிகளை ஹனிமூன் அனுப்பி வைப்பதே இருவரும், வேறு எந்த சூழ்நிலையையும் யோசிக்காமல், மனம் மகிழ ஒரே சிந்தனையில் புணர்ச்சி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.

    உறவு கொள்வதற்கு முன் மேற்கொள்ளப்படும் கிளர்ச்சி தூண்டல் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது. எனவே புணர்ச்சியின் போது, அவசரத்தை கடைபிடித்தல் தேவையற்றது. தவிர, திருமணமாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் பல்வேறு காரணங்களால் இருபாலருக்குமே தாம்பத்ய உறவில் நாட்டம் விட்டுப்போவது சகஜம்தான். அதுபோன்ற நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில், அவரவர் சூழ்நிலைக்கேற்ப, அவ்வப்போது உறவில் ஈடுபடுவது மனதில் உற்சாகத்தை நீடிக்கச்செய்யும்.



    If a person is dealing with a lot of stress for a long period, it may start to affect their personal relationships.  There are many reasons why people will not be able to function because of their stress that they are under either at home or at work.  They can cause a gap in any relationship and may end up being the factor that destroys it.
    Sexual and reproductive disturbances can happen for some people that are dealing with stress.  They can have decreased sexual desire and this can end up causing serious problems in their relationships.  They may not have the ability to perform because they have too much on their mind dealing with the stress.  Stress hormones have an impact on the hypothalamus gland, which will make the reproductive hormones.  This can make it hard for the person to have children.


    When stress happens, it is important to recognize it and deal with it right away.  They need to learn to handle the stress so that they do not end up ruining their love life and their family relationships.  The stress needs to be addressed with a professional so that they can continue to have great lasting relationships with their loved ones and so they can have a good support system.


    Money is a big part of stress in relationships.  If a married couple is having financial problems, they are more likely to have stress on their relationship.  They may feel pressured and worried all the time that they start to take out their emotions on their spouse.  It is important to find a way to deal with the money issues so that the couple can function better together.


    Stress can also be a problem for parents.  You need to realize when you are taking things out on your children for no reason.  Learn to manage stress so that you are not taking it out on your kids.  They are not the problem but if you continue to place your stress on them, it can lead to further problems in the family.


    Take the time to figure out a plan for stress and how to make things better. When you are willing to try and make things right, you will find that the stress can be relieved and the relationships can be saved.  It is worth the time and the effort to make things right with your loved ones.

    ரஷ்யாவில் பயங்கர விமான விபத்து: 44 பேர் பலி


    இந்த வார ராசி பலன் (24-6-2011 முதல் 30-6-2011 வரை)

    மேஷம்
    பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் பலவற்றில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். அரசாங்க வேலைகள் தாமதமானாலும் இறுதியில் நல்லபடியாக முடியும். குடும்பத்தாருடன் தெய்வீக சுற்றுலா செல்லக்கூடும்.

    பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். திருமணம் கைகூடும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. இல்லையெனில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். குறிப்பாக பணப்பொறுப்பில் உள்ளவர்கள் கண்ணும் கருத்துமாய் இருப்பது நல்லது.

    ரிஷபம்
    பொது: வெற்றிகரமான வாரும். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வருமானத்திற்கு குறைவிருக்காது. சிலர் புதிய வீட்டிற்கு மாறக்கூடும்.

    பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். குடும்பத்தி்ல் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொல்லைக் கொடுத்த உயர் அதிகாரிகள் மாற்றம் கிடைத்து செல்லக்கூடும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம்.

    மிதுனம்
    பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்களை சிரமமின்றி செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சனை தீரும். வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். உடல் நலனில் கவனம் தேவை.

    பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வருமானத்திற்கு குறைவிருக்காது. புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.

    கடகம்
    பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளக்கூடும்.

    பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. கணவரை அனுசரித்துச் செல்லவும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்தி மகிழக்கூடும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இல்லையெனில் உயர் அதிகாரிகள் கோபத்திற்கு ஆளாகலாம். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு இடமாற்றம் கிடைக்கக்கூடும்.

    சிம்மம்
    பொது: சாதகமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வ பலத்தால் செயற்கரிய சாதனைகள் புரிவீர்கள்.

    பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடலும், உள்ளமும் பலப்படும். திருமணம் கைகூடும். இளம்பெண்கள் மனம் மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு குறையும். அலுவலகப் பயணங்களால் நன்மை கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்க இன்னும் சில காலம் பொறுமையுடன் இருக்கவும். குடும்ப விஷயங்கள் பற்றி பேச வேண்டாம்.

    கன்னி
    பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்களை எளிதில் முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்பு பெருகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலனில் கவனம் தேவை.

    பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். உறவினர்களை சந்தித்து மகிழக்கூடும். பண வரவுக்கு குறைவிருக்காது. தாய்வழி உறவுகள் குடும்ப சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வீட்டுக்குத் தேவையான நவீன பொருட்கள் வாங்கக்கூடும்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும்.

    துலாம்
    பொது: உற்சாகமான வாரம். எடு்ககும் காரியங்கள் நல்லபடியாக முடியும். வருமானம் இரட்டிப்பாகும். தேகத்தில் புதுப்பொலிவு உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்கள் செய்வீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

    பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பேச்சில் நிதானம் தேவை. பிரிந்த உறவுகள் ஒன்றுசேரக்கூடும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் பல சலுகைகள் கிடைக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

    விருச்சிகம்
    பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். மனதில் இனம் புரியாத பயம் இருக்கும். நண்பர்களை ஆலோசிக்காமல் முக்கிய முடிவுகள் எடுக்கமாட்டீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.

    பெண்களுக்கு: குடும்பம் குடும்பம் சீராக நடக்கும். கணவருடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பிரிந்த உறவுகள் ஒன்று சேரக்கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் நிம்மதி இருக்கும். தடைபட்டிருந்த வேலைகள் கூட வெற்றிகரமாக முடியும். பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

    தனுசு
    பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்களை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். மனம் தெளிவு பெரும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள். சிலர் புதிய வீட்டிற்கு மாறக்கூடும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்லசெய்தி வரும்.

    பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். மனதில் புது தெம்பு பிறக்கும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் பாராட்டக்கூடும். வருமானத்திற்கு குறைவிருக்காது. அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

    மகரம்
    பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பிறரிடம் பேசும்போது நிதானம் தேவை. சிலருக்கு அரசு விருது கிடைக்கலாம்.

    பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழக்கூடும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும். பேச்சில் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு ஊதிய உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். வேலை பளு குறையும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

    கும்பம்
    பொது: நன்மையான வாரம். பண வரவு நன்றாக இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பிறருக்கு வாக்கு கொடுக்கவோ அல்லது ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். அனாவசியப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

    பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
    கணவரை அனுசரித்து செல்வீர்கள். வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். உயர் அதிகாரிகள் பாராட்டக்கூடும். சிலருக்கு ஊதிய உயர்வும், இடமாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள்.

    மீனம்
    பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தாரிடம் பாராட்டு பெறக்கூடும். பண வரவு நன்றாக இருக்கும். பயணங்களின்போது கவனமாக இருப்பது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை.

    பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். தடைபட்ட திருமணம் கைகூடும். கன்னிப் பெண்கள் குதூகலமடையக்கூடும். கணவருடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

    விஜய் டிவி விருது விழா சிறந்த நடிகர் விக்ரம்

    விஜய் டிவி சார்பில் சிறந்த திரையுலக கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.


    2010-ம் ஆண்டுக்கான விருதுகள் பெற்றவர்கள் விவரம்:

    சிறந்த நடிகர் : விக்ரம் (ராவணன்)

    சிறந்த நடிகை : அஞ்சலி (அங்காடித் தெரு)

    சிறந்த வில்லன் நடிகர் :  ரஜினிகாந்த் (எந்திரன்)

    சிறந்த நகைச்சுவை நடிகர்:  சந்தானம் (பாஸ் என்கிற பாஸ்கரன்)

    சிறந்த இயக்குனர் : வசந்த பாலன் (அங்காடித் தெரு)

    சிறந்த கதை மற்றும் திரைக்கதை : பிரபு சாலன் (மைனா)

    சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரகுமான் (விண்ணைத் தாண்டி வருவாயா)

    சிறந்த குணச்சித்திர நடிகர் : தம்பி ராமையா (மைனா)

    சிறந்த குணச்சித்திர நடிகை : சரண்யா (தென்மேற்கு பருவாக்காற்று)

    சிறந்த ஒளிப்பதிவு : ரத்னவேலு (எந்திரன்)

    சிறந்த புதுமுக நடிகர் : வித்தார்த் (மைனா)

    சிறந்த புதுமுக நடிகை : அமலா பால் (மைனா)

    சிறந்த பொழுதுபோக்கு படம் : சிங்கம்

    சிவாஜி கணேசன் விருது : இயக்குனர் கே.பாலசந்தர்

    ரசிகர்களால் தேர்வு செய்யப்பட்ட விருதுகள்!

    பிடித்த ஹீரோ : ரஜினிகாந்த் (எந்திரன்)

    பிடித்த ஹீரோயின் : த்ரிஷா (விண்ணைத் தாண்டி வருவாயா)

    பிடித்த  டைரக்டர் : ஷங்கர் (எந்திரன்)

    பிடித்த  படம் : எந்திரன்

    துபாயில் த‌மிழ்ச்ச‌ங்க‌ ச‌ந்திப்பு







    துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் சார்பில் உறுப்பின‌ர்க‌ள் மாதாந்திர‌ ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி ஜூன் 24ம் தேதியன்று மாலை ஷார்ஜா ரயான் ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து. நிக‌ழ்ச்சிக்கு துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ த‌லைவி ஜெய‌ந்தி மாலா சுரேஷ் த‌லைமை தாங்கினார். நிறுவ‌ன‌ப் புர‌வ‌ல‌ர் ஏ.லியாக்க‌த் அலி முன்னிலை வ‌கித்தார். பொதுச்செய‌லாள‌ர் சி.ஜெக‌ந்நாத‌ன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். கும்ப‌கோண‌ம் அர‌சு க‌லைக்க‌ல்லூரியின் ஓய்வு பெற்ற‌ த‌மிழ்த்துறைத் த‌லைவ‌ர் முனைவ‌ர் பேராசிரிய‌ர் மு.அ. முஹ‌ம்ம‌து உசேன் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்தினார். அவ‌ர் த‌ன‌து உரையில் பாலைவ‌ன‌த்தில் ஒரு சோலையாக‌ த‌மிழ் ம‌க்க‌ள் அனைவ‌ரும் ஒருங்கிணைந்து ந‌ட‌த்தி வ‌ரும் இவ்விழாவில் ப‌ங்கேற்ப‌தில் பெருமித‌ம் கொள்வ‌தாக‌ தெரிவித்தார். மேலும் குழ‌ந்தைக‌ள் முத‌ல் அனைவ‌ரும் த‌மிழ் மொழியில் மிகுந்த‌ ஆர்வ‌முட‌ன் திக‌ழ்வ‌தைப் பாராட்டினார். பெற்றோர்க‌ள் த‌ங்க‌ள் குழந்தைக‌ளுக்கு க‌ட்டாய‌ம் த‌மிழ் க‌ற்றுக் கொடுக்க‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌த்தையும் வ‌லியுறுத்தினார்.குற‌ள் சொல்லும் நேர‌ம், நாட்டிய‌ ந‌ட‌ன‌ம், வினாடி வினா, ந‌கைச்சுவை நேர‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ள் ந‌டைபெற்ற‌ன‌. விருதை செய்ய‌து ஹுசைன் க‌ல்வியின் அவ‌சிய‌ம் குறித்த‌ பாட‌ல் பாடினார். விழாவிற்கான‌ ஏற்பாடுக‌ளை த‌மிழ்ச் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள் செய்திருந்த‌ன‌ர்.

    ஜப்பான் மொழி வழி தமிழ் நூல் வெளியீடு!


    ஹாங்காங் வாழ் தமிழரான சித்ரா சிவகுமாரும் அவருடைய தோழி ஷாலினியும் இணைந்து ஜப்பானிய மொழி வழி தமிழ் என்ற நூல் சென்னையில் வெளியிடப்பட்டது. அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தோசோகாய் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சென்னையில் உள்ள ஜப்பானிய தூதரக அதிகாரி கயோகா புருகவா தலைமையில் சென்னையில் உள்ள மயேகவா இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் யசுனோரி ஹிராசகோ, இந்த நூலை வெளியிட்டார். இந்த நூலில் ஜப்பானியர்கள் எளிதாக தங்கள் மொழி மூலம் தமிழைக் கற்கும் வகையில் உரிய படங்களும் உள்ளன.

    கலைப்பொருள் கண்காட்சி: இதையொட்டி கலைப்பொருள் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை, சென்னையில் உள்ள ஜப்பான் தூதர் கயோகோ புருகுவா துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வீட்டு ஆபரணப் பொருட்கள், ஜப்பான் நாட்டின் கலாசாரத்தை எடுத்துக் காட்டும் கலைநயப் பொருட்கள், பூங்கொத்துகள், பல்வேறு கலைநுட்பத்துடன் கூடிய மலர்கள், இயற்கை எழில்மிகு வண்ணக் காட்சிகள் போன்றவை ஜப்பான் களிமண்ணால் செய்யப்பட்டு, கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள கலைப்பொருட்கள் எவ்வாறு செய்யப்பட்டது என்ற செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
    கண்காட்சியை நடத்திய ஜெனிபர் ராஜ்குமார் கூறுகையில், நான் திருமணமாகி ஜப்பான் சென்றபோது, அந்ந நாட்டின் கலை வடிவம் என்னை வெகுவாக ஈர்த்தது. அங்கு களிமண்ணால் கலைப்பொருட்கள் செய்வதற்கு ஐந்து வருடப் படிப்பு இருக்கிறது. அதை முழுமையாக படித்து, ஏழு சான்றிதழ்கள் பெற்றேன். பின், மூன்று வருடங்கள் அதே பயிற்சி நிலையத்தில், ஆசிரியராக வேலை பார்த்தேன். அந்நிறுவனம், பல்வேறு நாடுகளில் ஜப்பானிய களிமண் கலைப்பொருட்களின் கண்காட்சி நடத்தியது. நம் நாட்டு மக்களும் அந்த கலைநயத்தை அறிய வேண்டும், அதன் செய்முறையை புரிந்துகொள்ள வேண்டும். பல்வேறு நாட்டு கலைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு கண்காட்சி நடத்துகிறேன். இக்கண்காட்சியில் பங்கேற்ற பலர், அவர்களுக்கும் கலைப் பொருட்கள் செய்யும் பயிற்சியை கற்றுத் தரும்படி கேட்டனர், என்றார். 

    2011 இஃபா விருதுகள் தபாங் படத்திற்கு 6 விருதுகள்!





















    12வது இஃபா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சல்மான் கான் நடித்து சூப்பர் ஹிட்டான தபாங் படத்திற்கு மட்டும் 6விருதுகள் கிடைத்துள்ளது. ஆண்டுதோறும் பாலிவுட் படங்களுக்காக மட்டும் வெளிநாடுகளில் நடத்தபடும் விழா தான் இஃபா விருதுகள் எனப்படும் இந்திய சர்வதேச திரப்பட விழா. கடந்த ஆண்டு இந்த விழா இலங்கையில் நடந்தது. ஆனால் இலங்கை தமிழர் பிரச்சனை காரணமாகவும், ஒட்டுமொத்த தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், இந்தவிழாவை அமிதாப், ஐஸ்வர்யா, உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலர் இந்த விழாவை புறக்கணித்தனர். இதனால் கடந்த ஆண்டு இந்த விழா களையிழந்தது.

    இந்நிலையில் இந்தாண்டு இஃபா விருதுகள், கனடாவின் டொரண்டாவில் நடந்தது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பெரும்பாலான பேர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறந்த நடிகருக்கான விருது, "மை நேம் இஸ் கான்" படத்திற்காக ஷாரூக்கானுக்கும், சிறந்த நடிகைக்கான விருது, "பந்த் பஜா பாராத்" படத்திற்காக அனுஷ்கா சர்மாவுக்கும் கிடைத்தது. மேலும் சல்மான் கான் நடித்த, "தபாங்" படத்திற்கு மட்டும் சிறந்த படம், திரைக்கதை, புதுமுக நடிகை, வில்லன், நடனஅமைப்பு மற்றும் சவுண்ட் ரெக்கார்டிங் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 6 விருதுகளை தட்டிச் சென்றது.

    சிறந்த டைரக்டர் - கரன் ஜோகர் (மை நேம்இஸ் கான்)
    சிறந்த பாடல் இயக்கம் - நிரஞ்சன் ஐயங்கர் (மை நேம்இஸ் கான்)
    சிறந்த துணை நடிகர் - அர்ஜூன் ராம்பால்
    சிறந்த துணை நடிகை - பிரச்சி தேசாய்
    சிறந்த வில்லன் - சோனு சூட் (தபாங்)
    சிறந்த புதுமுக நடிகை - சோனாக்ஷி சின்ஹா (தாபங்)
    சிறந்த புதுமுக நடிகர் - ரன்வீர் சிங் (பந்த் பஜா பாராத்)
    கிரீன் குளாப் விருது - ப்ரியங்கா சோப்ரா
    சிறந்த ஜோடி - ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா (பந்த் பஜா பாராத்)
    வாழ்நாள் சாதனையாளர்கள் விருது - தர்மேந்திரா, சர்மிளா தாகூர்

    கடந்த இலங்கையில் இஃபா விருதுகள் விழா நடந்ததால் களையிழந்து போயிருந்த இந்தவிழா,  இந்தாண்டு பாலிவுட் நட்சத்திரங்களின் படையெடுப்பால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று களைகட்டி இருந்தது.

    பொறியியல் கவுன்சிலிங் தேதி விவரங்கள் ...


    கடந்த 24 ம் தேதி பொறியியல் கவுன்சிலிங்கிற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது எந்தெந்த கட்-ஆப் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, என்னென்ன தேதியில் கவுன்சிலிங் நடைபெறும் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்றால் அந்த விவரங்கள் அனைத்தும் முழு அளவில் கிடைக்கும்.

    http://www.annauniv.edu/tnea2011/counschph1.pdf

    ரிவுவாரியான தேதி விவரங்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. அந்த விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    அவற்றின் விபரம்:

    1. விளையாட்டு ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 28 மற்றும் 29ம்(ஜுன்) தேதிகளில் நடைபெறுகிறது.

    2. அதற்கடுத்து, விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் 30ம்(ஜுன்) தேதி நடக்கிறது.

    3. தொழில்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜுலை 1 முதல் 6ம் தேதி வரை 6 நாட்கள் நடக்கின்றன.

    4. மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் ஜுலை 7ம் தேதி நடக்கிறது.

    5. இதனையடுத்து பொது கவுன்சிலிங் ஜுலை 8ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

    இன்று கூர்ம ஜெயந்தி!

    நம்மை விட வயதில் மூத்தவர்களிடம், மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, நம் தாத்தாக்களின் மனம் புண்படாமல் பேச வேண்டும். இல்லாவிட்டால், இந்திரனுக்கு ஏற்பட்ட கதி தான் அவ்வாறு பேசுவோருக்கும் ஏற்படும். முனிவர்களில் மகா பெரியவரான துர்வாசர், வைகுண்டம் சென்று, மகாலட்சுமியிடம் பெற்ற மாலையை, யானை மீதேறி வந்த இந்திரனிடம் அளித்தார். பெரியவர்கள் பிரசாதம் கொடுத்தால், கண்ணில் ஒற்றி, வாங்கிக் கொள்ள வேண்டும்; குறிப்பாக, மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். ஆணவம் பிடித்த இந்திரன், அதை கழுத்தில் அணியாமல், யானையின் மத்தகத்தில் வைத்தான். யானை, தன் குணத்துக்கேற்ப அதை எடுத்து, காலில் போட்டு மிதித்து விட்டது. துர்வாசருக்கு கடும் ஆத்திரம். மகாலட்சுமியின் பிரசாதத்தை அவமதித்ததால், மூன்று உலகங்களிலும் லட்சுமி கடாட்சம் அழியட்டும் என சாபமிட்டு விட்டார். இந்திரன் பதறிப் போய் அவரது காலில் விழுந்தான்; ஆனால், துர்வாசர் கண்டு கொள்ளவில்லை. லட்சுமி கடாட்சம் இல்லாததால், உலகமே வறுமையில் ஆழ்ந்தது; அரக்கர்களின் ஆதிக்கம் ஓங்கியது. இதுபற்றி, பிரம்மாவிடம் தெரிவித்தான் இந்திரன். அவர், மகாவிஷ்ணுவிடம் விஷயத்தைச் சொன்னார்.

    அவரிடம், இந்த பிரச்னை தீர, தேவர்கள் வலிமை பெற்று, அரக்கர்களை ஒடுக்கி வைக்க வேண்டும். அதற்கு, பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க வேண்டும். அதைப் பருகுவோர் சாகாநிலை பெறுவர்; ஆனால், அதைப் பெறுவது சாதாரணமானதல்ல. அரக்கர்களுடன் நட்பு கொள்வது போல நடித்து, அவர்களையும் கடலைக் கடைய அழைக்க வேண்டும். அவர்களுக்கும் அமிர்தம் தருவதாக ஒப்புக் கொள்ளுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்... என்றார் மகாவிஷ்ணு. விஷ்ணுவின் யோசனைப்படி, பாற்கடலைக் கடைய மேருமலையையே மத்தாக பயன்படுத்தினர். மத்தை இழுக்கும் கயிறாக மாற, வாசுகி என்ற பாம்பு சம்மதித்தது. அரக்கர்கள் தங்கள் வீரத்தை, வெளிக்காட்டும் வகையில், தலைப் பகுதியைப் பிடித்துக் கொண்டனர். தேவர்கள் வாலைப் பிடித்து கடலைக் கடைய ஆரம்பித்தனர்; ஆனால், மலை அசையவில்லை. கடலின் அடிப்பகுதிக்குள் நன்றாகச் சிக்கிக் கொண்டது. உடனே விஷ்ணு, ஆமையாக உருமாறி, கடலுக்குள் சென்றார். தன் வலிமையைப் பயன்படுத்தி, மலையைத் தூக்கி, தன் முதுகில் வைத்துக் கொண்டார். பின்னர் தேவாசுரர்கள் எவ்வித சிரமமுமின்றி கடலைக் கடைந்தனர். வலி தாங்காத பாம்பு விஷத்தைக் கக்க, அதை சிவபெருமான் எடுத்துக் கொண்டார். பார்வதிதேவி அவரது கழுத்தைப் பிடிக்கவே, அது கழுத்தில் தேங்கி, நீலகண்டன் என்று பெயர் பெற்றார். கண்டம் என்றால், கழுத்து! நீல நிறமுள்ள விஷத்தைக் கழுத்தில் கொண்டவரே நீலகண்டன். ஒருவழியாக அமிர்த கலசம் வெளியே வந்தது. அதை, தேவர்களுக்கு முதலில் கொடுத்த விஷ்ணு, அசுரர்களை மோகினி வடிவெடுத்து மயக்கி ஏமாற்றி விட்டார். தேவர்கள் சாகா நிலை பெற்றனர். பின்னர் எளிதாக அவர்கள் அசுரர்களைத் தோற்கடித்தனர்.

    ஆமை, தன் உடலை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வதைப் போல, மனிதனும் தன் ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவற்றை அடக்கப் பழக வேண்டும் என்பதை, ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து... என்கிறார் வள்ளுவர். இந்த அரிய தத்துவத்தை ஆமை அவதாரம் எடுத்ததன் மூலம், உலகுக்கு விளக்கினார் விஷ்ணு. ஆமையின் வடமொழிச் சொல்லே, கூர்மம்! ஆந்திராவில் ஸ்ரீகாக்குளம் மாவட்டம், ஸ்ரீகூர்மம் என்ற ஊரில், கூர்ம அவதாரத்துக்கு கோவில் இருக்கிறது. இவரை, கூர்மநாதர் என்கின்றனர். மூல ஸ்தானத்தில், ஆமை வடிவில் இருக்கிறார் பெருமாள். ஒரு பெரியவரை அவமதித்ததால் ஏற்பட்ட பலன்களைக் கவனித்தீர்களா! இனியும், நம் பெரியவர்களை, யோவ் பெருசு என்று கேலியாகவும், மனம் புண்படும்படியாகவும் பேசக் கூடாது. நல்ல நாட்களிலும், இன்டர்வியூ முதலான முக்கிய நிகழ்வுகளுக்குச் செல்லும் போதும், அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற வேண்டும். பெரியவர்கள் அவமதிக்கப்படும் நாடு நன்றாக இருக்காது என்பதைப் புரிந்து, இனியேனும் நடந்து கொள்வோம்!

    இதே நாள்...


  • உலகின் முதலாவது ஏடிஎம், லண்டன் என்ஃபீல்டில் அமைக்கப்பட்டது(1967)

  •  உலகின் முதலாவது அணுக்கரு ஆற்றல் உற்பத்தி மையம் மாஸ்கோவில் அமைக்கப்பட்டது(1954)

  •  கோலாலம்பூரில் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது(1998)

  •  சிபூட்டி, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது(1977)

  •  தமிழக எழுத்தாளர் அகிலன் பிறந்த தினம்(1922)

  • LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...