|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 November, 2011

மனைவி மீது சந்தேகம் பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை, உடந்தையாக இருந்த தாய்! (கலிகாலம்)

குழந்தை தன்னைப் போல் இல்லை என்று கூறி அதை புதரில் வீசிய தந்தையையும், தாயையும் போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் மதுரை-தென்காசி மெயின் ரோட்டில் தொடக்க கூட்டுறவு வங்கி பின்புறம் உள்ள புதரில் கடந்த 17ம் தேதி பசசிளம் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. புளியங்குடி டிஎஸ்பி ஜமீம் மற்றும் போலீசார் அங்கு சென்று குழந்தையை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகி்ச்சை அளித்த பிறகு நெல்லை சரணாலய ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வாசுதேவநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அந்த குழந்தை வாசுதேவநல்லூர் கிணற்றடி தெருவைச் சேர்ந்த முத்துபாண்டி, அவரது மனைவி சசிகுமாரி ஆகியோருக்கு பிறந்தது என்பது தெரிய வந்தது. போலீசார் சசிகுமாரியை பிடித்து விசாரித்தனர்.

அப்போது வாசுதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனக்கு கடந்த 16ம் தேதி குழந்தை பிறந்ததாகவும், 17ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் குழந்தை தன்னைபோல் இல்லை என கணவர் சந்தேகப்பட்டு தன்னிடமிருந்து குழந்தையை பறித்து புதரில் வீசியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சசிகுமாரியையும், முத்துபாண்டியையும் கைது செய்தனர். மேலும் குழந்தை பிறந்ததை மறைத்தது தொடர்பாக வாசுதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் அரிசி பயன்பாடு அதிகரிப்பு!

தமிழகத்தில் தானிய உணவு பயன்பாடு குறைந்து அரிசி பயன்பாடு அதிகரித்துள்ளது என ஜெர்மனி பல்கலைக்கழக பேராசிரியர் டெட்லெப் ப்ரைசன் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் துறை, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் சார்பில் "காட்சிசார் மானிடவியல், உணவு பண்பாடு' சிறப்பு கருத்தரங்கம், ஆவணப்படம் திரையிடுதல் நடந்தது. இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் அல்போன்ஸ் மாணிக்கம் தலைமை வகித்தார். பிரிட்டோ வின்சென்ட் வரவேற்புரையாற்றினார்.

தொலைக்காட்சி பத்திரிகையாளரின் பார்வையில் 'காட்சிசார் மானிடவியல்' என்ற தலைப்பில் ஜெர்மனி ஆவணப்பட தயாரிப்பாளர் அன்னி ப்ரைசன் உரையாற்றினார். டார்ஜிலிங் தேயிலை உற்பத்தி, டான்சானியா காபி உற்பத்தி முறைகள், இந்திய பண்பாடு குறித்து அவர் விளக்கினார்.

ஜெர்மனி ஜஸ்டஸ் லெய்பிக் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் டெட்லெப் ப்ரைசன் பேசும்போது 16ம் நூற்றாண்டு ஜெர்மனி மக்களின் உணவு பழக்க, வழக்கங்கள், தற்போதைய உணவு முறைகள், மேல்தட்டு, உழைக்கும் வர்க்கத்தின் உணவு பழக்க, வழக்க முறைகள் குறித்து விளக்கினார். தற்போது ஜெர்மனியில் உள்ள மேல்தட்டு மக்கள் தங்களின் உணவுப் பழக்க, வழக்கத்தின் காரணமாக ஒல்லியான உடல் வாகுடன் உள்ளனர் என்றும், உழைக்கும் மக்கள் வர்க்கம் அதிக எடையுடன் காணப்படுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். தமிழகத்தில் உணவு பழக்கங்கள் மாறியுள்ளது. தானிய உணவு வகைகளின் பயன்பாடு குறைந்து அரிசி பயன்பாடு அதிகரித்துள்ளது. இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கடாபி மகன் சைப் அல் இஸ்லாம் கைது: விடுவிக்க 2 பில்லியன் டாலர் பேரம்!

தலைமறைவாக இருந்த லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் பாலைவனத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் முகம்மது அல் அலாகி தெரிவித்துள்ளார். கடாபிக்கு அடுத்து லிபிய அதிபராக சைப் அல் இஸ்லாம்(38) தான் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரது தந்தைக்கு எதிராக புரட்சி வெடித்ததையடுத்து சைப் கடந்த அக்டோபர் 19ம் தேதி பாலைவனப் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் தலைமறைவாகிவிட்டார்.

கடந்த ஒரு மாதமாக லிபியாவின் புதிய அரசு சைப் அல் இஸ்லாமை வலைவீசித் தேடி வந்தது. இந்நிலையில் சைபும், அவரது உதவியாளர்கள் 2 பேரும் சஹாரா பாலைவனத்தில் உள்ள ஒபாரி நகர் அருகே சென்று கொண்டிருக்கையில் போராளிகள் கையில் சிக்கினர். அவர்கள் நைஜருக்கு தப்பிச் செல்ல முயன்றபோது தான் பிடிபட்டனர்.

தன்னை விடுவித்தால் 2 பில்லியன் டாலர் தருவதாக போராளிகளிடம் சைப் பேரம் பேசியதாக அஸ் சிந்தான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.ஆனால் போராளிகள் சைபின் வலையில் சிக்கவில்லை. மாறாக அதை அவமானமாகக் கருதியாக அந்த தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் சைப் அல் இஸ்லாமிற்கு எதிராக கடந்த ஜூன் மாதம் 27ம் தேதியே பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.கடாபி அவரது சொந்த ஊரான சிர்டேவில் வைத்துக் கொல்லப்பட்டார். அவரது மகன் முதாசிம் கடாபியும் அந்த தினமே போராளிகளால் கொல்லப்பட்டார். கடாபியின் உடல் ரகசியமான இடத்தில் புதைக்கப்பட்டது.

கடாபி சித்திரவதையில் தவித்த பெண்கள்!


கொலல்ப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபி செக்ஸ் விஷயத்தில் மிகவும் பலவீனமானவர் என்றும், தினமும் 4 அல்லது 5 பெண் பாதுகாவலர்களுடன் உறவு கொண்டதாக அவரது சமையல்காரர் பைசல் தெரிவித்துள்ளார். பல பெண்கள் வேலை முடிந்ததும், நேராக மருத்துவமனைக்குத்தான் போவார்களாம். அந்த அளவுக்கு கடுமையாக நடந்து கொள்வாராம் கடாபி.

42 ஆண்டுகளாக லிபியாவை ஆண்ட கடாபியைச் சுற்றி எப்பொழுதும் ஃபுல் மேக்கப்புடன் பெண் பாதுகாவலர்கள் இருந்தனர். அவருக்காக குண்டடி பட்டு இறந்த பாதுகாவலர்களும் உண்டு. இந்நிலையில் கடாபியின் பெண் பாதுகாவலர்கள் பற்றி அவரிடம் 7 ஆண்டுகளாக சமையல்காரராக இருந்த பைசல் கூறியதாவது,

கடாபி ஒரு செக்ஸ் பைத்தியம். அவரால் உறவு வைக்காமல் இருக்க முடியாது. தினமும் 4 முதல் 5 பெண் பாதுகாவலர்களுடன் உறவு வைத்தார். அது அவருக்கு ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. தினசரி அந்த பெண் பாதுகாவலர்கள் அவரது அறைக்கு செல்வார்கள், அவருடன் உடலுறவு வைப்பார்கள், அதன் பிறகு முகம் சிவந்து வெளியே வருவார்கள்.

அவர்கள் அனைவருமே கடாபியுடன் உறவு வைத்துள்ளனர். கடாபியுடன் யார் மிகவும் ஒட்டி, உறவாடுகிறார்களோ அவர்களுக்கு பங்களா, கட்டு கட்டாக பணம் கிடைத்தது. அவர்கள் கடாபியுடன் உறவு வைத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தவுடன் நேராக மருத்துவமனைக்கு தான் செல்வார்கள். காரணம் அவ்வளவு உள்காயம் ஏற்பட்டிருக்கும் என்றார்.

மேலும் கடாபி ஆண்மையை தக்க வைத்துக் கொள்ள ஏகப்பட்ட மருந்துகளையும் சாப்பிட்டு வந்துள்ளாராம். இதை அதிகமாக சாப்பிடக் கூடாது என்று கடாபியுடன் நெருக்கமாக இருந்த உக்ரைன் நாட்டு நர்ஸ் அவ்வப்போது கடாபிக்கு எடுத்துக் கூறுவாராம், ஆனாலும் அதைக் கண்டு கொள்ளவில்லையாம் கடாபி. லிபியாவில் புரட்சி வெடித்த பிறகு தலைமறைவாக இருந்த கடாபியை கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி அவரது சொந்த ஊரான சிர்டேவில் வைத்து போராளிகள் கொன்றனர். அவரது உடலை அனைவருக்கும் தெரியும்படி அடக்கம் செய்தால் அந்த இடத்தை யாராவது வணக்க ஸ்தலமாக ஆக்கிவிடுவார்கள் என்பதற்காக ரகசிய இடத்தில் அடக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திராவுக்கு எத்தனையாவது பிறந்த நாள் தெரியாத தமிழக காங்கிரஸ்!

மறைந்த பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத முக்கியத் தலைவர்களில் ஒருவரும், இரும்புப் பெண்மணி என்று உலகத் தலைவர்களால் புகழப்பட்டுவருமான இந்திரா காந்தியின் பிறந்த நாள் கூட சரியாக தெரியாமல் மக்கள் மத்தியில் கேவலப்பட்டுள்ளது தமிழக காங்கிரஸ் கட்சி. இந்திரா காந்தியின் 94வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியினரோ 105வது பிறந்தநாள் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிட்டு கேவலப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் இந்திரா காந்தி. அமெரிக்காவுக்கு பெரும் மிரட்டலாக விளங்கியவர். பாகிஸ்தான் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர். வங்கதேசம் என்ற ஒரு புது நாடு பிறக்க காரணமாக அமைந்தவர். சீனாவைக் கண்டு அஞ்சாமல் செயல்பட்டவர். தனது துணிச்சல் மற்றும் தைரியமான, அதிரடி போக்கால் உலகத் தலைவர்களால் பாராட்டப்பட்டவர். அனைவரின் மதிப்பையும் பெற்றவர். ஆனால்  தலைவரின் பிறந்த நாளைக் கூட சரிவரத் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் தங்கள் இஷ்டத்திற்கு 105வது பிறந்த நாள் என்று செய்திக்குறிப்பு வெளியிட்டு கேவலப்பட்டுள்ளது தமிழக காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரை இப்படியா அவமதிப்பது என்று மூத்த காங்கிரஸார் மனம் ஒடிந்து போய் நிற்கின்றனர். இந்த லட்சணத்தில் காமராஜ் ஆட்சியை அமைப்போம் என்று வாய் கூசாமல் பேசிக் கொள்கின்றனர் காங்கிரஸார். புதிய தலைவராக ஞானதேசிகன் பதவிக்கு வந்தவுடனேயே நடந்துள்ள இந்த குழப்பம் தமிழக காங்கிரஸாருக்கு கசப்பான அனுபவமாக அமைந்து விட்டது.

மேலும் மேலும் கடன் வாங்கினால் மக்கள் தலையில்தானே விடியும்?

கடன் வாங்கியாவது பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் போக்குவரத்து கழகங்களை நடத்துமாறு அதிகாரிகளிடம் கூறியதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் கூறுவது போல், மேலும் மேலும் கடன் வாங்கினால் அது யார் மீது விடியும். அதுவும் மக்கள் மீது தானே விடியும். இது எப்படி ஒரு நல்ல நிர்வாகமாக இருக்க முடியும் என்று கேட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு திவாலாகும் சூழ்நிலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களை உயிர்ப்பிப்பதற்கும், இந்த நிறுவனங்கள் மக்களுக்கு தொடர்ந்து தங்களது சேவையை ஆற்றிடுவதற்கான வழிவகை குறித்தும் 17.11.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, கட்டண உயர்வுகள் பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனையடுத்து, இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதற்கான காரணங்களை அன்றே தொலைக்காட்சி மூலம் நான் எடுத்துரைத்ததோடு மட்டுமல்லாமல், அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவினை நல்கிட வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்திருந்தேன்.

இந்த கட்டண உயர்வுகளை கண்டித்து, பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அறிக்கைகள் விடுத்துள்ளனர். அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து சட்டமன்ற தேர்தலை சந்தித்த கட்சிகளின் தலைவர்கள் கூட இந்தக் கட்டண உயர்வுகளுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு, அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் நலனை விடுத்து வேறு பல காரணங்களுக்காக பல்வேறு முடிவுகளை முந்தைய தி.மு.க. அரசு எடுத்த காரணத்தால் தான், எதிர்கட்சி என்ற அந்தஸ்தைக் கூட வழங்காமல், சட்டமன்ற தேர்தலில் மக்கள் திமுகவை முற்றிலும் புறக்கணித்துவிட்டனர். இவ்வாறு புறக்கணிக்கப்பட்டதற்கு, பொதுத் துறை நிறுவனங்களை முந்தைய தி.மு.க. அரசு சீரழித்ததும் ஒரு காரணம்.

இது போன்ற கடினமான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு எனது தலைமையிலான அரசை ஆளாக்கிவிட்டு, தாங்கள் தான் மக்களை பாதுகாப்பதைப் போல நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணாநிதியின் செயல் “சாத்தான் வேதம் ஒதுவது போல்” உள்ளது.

17.11.2011 அன்று தமிழக அரசின் இந்த முடிவுகளைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது, “எவ்வளவு உயர்த்தியிருக்கிறார்கள், என்ன காரணத்திற்காக உயர்த்தியிருக்கிறார்கள் என்ற காரணங்களையெல்லாம் தெரிந்து கொண்டு திமுக தனது கருத்தை அறிவிக்கும்” என்பது தான் கருணாநிதியின் முதல் எதிர்த் தாக்குதலாக இருந்தது.

அரசு பொது நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்தில் இயங்கக் காரணம் கடந்த கால திமுக ஆட்சி தான் என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “இதைப் பொதுமக்கள் தீர்ப்புக்கு விட்டுவிடுகிறேன்” என்று பதில் அளித்துள்ளார் கருணாநிதி. இந்தப் பதிலிலிருந்து, பொதுத் துறை நிறுவனங்களை சீரழித்து, இந்தக் கட்டண உயர்வுக்கு வழி வகுத்தது முந்தைய தி.மு.க. அரசு தான் என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டு இருக்கிறார் கருணாநிதி.

இதனையடுத்து, நேற்று வெளியிட்ட அறிக்கையில் “பொதுத் துறை நிறுவனங்களுக்கு கடன் சுமை இருப்பது உண்மை தான் என்ற போதிலும், அந்தச் சுமையை ஏழை எளிய பொதுமக்கள் தலையிலே சுமத்தக் கூடாது என்பதற்காகத் தான் இந்தக் கட்டணங்களையெல்லாம் அதிகப்படுத்தவில்லை..... அதிகாரிகள் நிறுவனங்களுக்கு உள்ள கடன் சுமையைக் குறைக்க இந்தக் கட்டணங்களை எல்லாம் அதிகப்படுத்த வேண்டும் என்று என்னிடமும் கூறுவார்கள்…. அரசு கடன் பெற்றாவது மக்களுக்கு கெடுதல் வராமல் பாதுகாப்போம் என்று தான் கூறி இருக்கிறேன்” என்றும், “கட்டணங்களை உயர்த்தினால் சாதாரண ஏழை நடுத்தர மக்கள், மாதச் சம்பளத்தில் திட்டமிட்டு குடும்பம் நடத்துவோர் எப்படி இவ்வளவு செலவுகளை சமாளிக்க முடியும்”? என்றும் நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார் கருணாநிதி.

மின்சார வாரியம் என்றாலும், அரசு போக்குவரத்துக் கழகங்கள் என்றாலும், ஆவின் நிறுவனம் என்றாலும், அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாக்கி அவற்றை செயலிழக்கச் செய்த பெருமை முந்தைய திமுக அரசையும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையுமே சாரும்.

அரசு அதிகாரிகள், கட்டணங்களை உயர்த்த இவரிடம் கேட்டுக் கொண்டது போலவும், ஆனால் மக்களுக்காக இவர் உயர்த்த வேண்டாம் என்று கூறி அரசு கடன் வாங்கி இந்த நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்று தான் கூறியதைப் போலவும் ஒரு புளுகு முட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி. அரசு கடன் பெற்று, அந்தக் கடனிலிருந்து தமிழ்நாடு மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கியிருந்தால், அந்த நிறுவனங்கள் எவ்வாறு இது போன்ற ஒரு மீள முடியாத கடன் சுமையில், கடன் சுழலில் சிக்கி இருக்கும்?

அரசு பெற்றக் கடனிலிருந்து தானே தங்களுக்கு மட்டும் பயன் உள்ள, மக்களுக்கு எந்தவிதப் பயனும் விளைவிக்காத இலவசத் திட்டங்களுக்கு செலவிடப்பட்டது? பின்னர் அரசு எங்கிருந்து இந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்க இயலும்? பொதுத் துறை நிறுவனங்களை முற்றிலும் முடங்கச் செய்துவிட்டு, அவற்றை மரணப் படுக்கையில் தள்ளி விட்டு, இன்று வேறு வழியின்றி கட்டண உயர்வுகள் செயல்படுத்தப்படும் போது மக்களுக்காக பரிந்து பேசுவது போல பாசாங்கு செய்வது “குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது” போல் உள்ளது. இது முதலைக் கண்ணீர் தான் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இது போன்ற அறிக்கைகளால், தமிழக மக்கள் ஒன்றும் ஏமாந்துவிட மாட்டார்கள். பொதுத் துறை நிறுவனங்களை முடக்கிய கருணாநிதிக்கு இது போன்ற ஒரு கண்டன அறிக்கையை வெளியிட எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தலைச் சந்தித்து, தற்போது தமிழக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகளாக உள்ள கட்சிகளின் தலைவர்களில் பெரும்பாலானோர், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால், என்னைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர். அப்போது, தமிழ்நாட்டின் மோசமான நிதிநிலை குறித்தும், திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகள் குறித்தும், பொது மக்கள் நலனை எண்ணிப் பாராத செயல்பாடுகள் குறித்தும் என்னிடம் கவலை தெரிவித்தனர். இவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என்றும்; நான் முதலமைச்சாராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னால் தான் இவற்றையெல்லாம் சரி செய்ய முடியும் என்றும்; கடினமான முடிவுகளை, தைரியமாக, என்னால் தான் எடுக்க முடியும் என்றும் கூறினர். அப்போது அவ்வாறு கூறிவிட்டு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வுகளுக்கு கண்டன அறிக்கைகளை விடுவது சரியான செயல் தானா என்பதை அவர்கள் மனசாட்சியிடமே விட்டு விடுகிறேன்.

முன்பு, தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்தும், பொதுத் துறை நிறுவனங்களின் நிலை குறித்தும் கவலை தெரிவித்தவர்கள், தற்போது கண்டனம் தெரிவிப்பது இரட்டை வேடம் தானே! தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனத்தின் தற்போதைய உண்மை நிலை என்ன என்று எதிர்கட்சித் தலைவர்கள் எல்லோருக்கும் தெரியும். இன்றைய அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு கண்டனம் தெரிவிப்பது சரிதானா என்பதை அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். அரசியல் காரணங்களை விட, நாட்டின் நலன், நாட்டு மக்களின் நலன் முக்கியமானது என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு உங்கள் கண்டனங்களை தெரிவிக்க முற்படுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

2006 ஆம் ஆண்டு வரை லாபம் ஈட்டி வந்த பால் கூட்டுறவுச் சங்கங்கள் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாட்கள் கழித்தும் பணம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் 150 லட்சம் லிட்டர் பாலில் 22 லட்சம் லிட்டர் பால் கூட ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்ய இயலவில்லை. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான உரிய விலையை 45 நாட்களுக்கு மேலாகியும் பால் உற்பத்தியாளர்களுக்கு தராமல் நிலுவையில் வைத்திருந்தால், அவர்கள் ஆவின் நிறுவனத்திற்கு எவ்வாறு பால் வழங்க இயலும்?

பால் உற்பத்தியாளர்களுக்கு காலதாமதமாக பணம் வழங்கப்படுவதைப் பற்றி முந்தைய திமுக அரசு எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை. பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை குறைவாக, அதிலும் தாமதமாக அளிப்பது எந்தவிதத்தில் நியாயம்? எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு நிதி உதவி அளித்துள்ளது.

இது தவிர, வெளிச் சந்தையில் விற்கப்படும் பாலின் விலைக்கும் ஆவின் பாலின் விலைக்கும் மிகுந்த வேறுபாடு இருப்பதால், இடைத் தரகர்களுக்கும், கள்ளச் சந்தைதாரர்களுக்கும் இதில் பெரும் பயன் சென்றுவிடுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள இயலும்? ஆவின் பால் விலையை உயர்த்தி உள்ளதன் மூலம் தான் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலையை, உரிய நேரத்தில் வழங்க இயலும். மேலும், ஆவின் நிறுவனம் திறம்பட மக்கள் சேவையாற்ற வழி வகுக்கும்.

இந்த விலையேற்றத்தை தற்போது மேற்கொள்ளவில்லை எனில் வெகு விரைவிலேயே ஆவின் நிறுவனத்தை மூட வேண்டிய நிலைதான் ஏற்படும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டால், அரசுத் துறையின் போட்டி ஏதும் இல்லாமல் தனியார் தங்கள் விருப்பப்படி பால் விலையை நிர்ணயிக்க வழி ஏற்பட்டுவிடும். அதனால் பொதுமக்களுக்கு, அதிலும், குறிப்பாக ஏழை எளிய, சாமான்ய, மாதச் சம்பளதாரர்கள் தான் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே தான் ஆவின் நிறுவனம் முற்றிலும் முடங்கிப் போய் விடாமல் காப்பாற்றுவதற்காக இந்த அவசியமான விலை உயர்வினை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதே போன்று தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளும் முடங்கிப் போகும் நிலையில் உள்ளன. டீசலின் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே வருகிறது. நான் ஏற்கெனவே எனது உரையில் குறிப்பிட்டதைப் போல 2001 ஆம் ஆண்டு 18 ரூபாய் 26 காசுகள் என்று இருந்த டீசல் விலையை தற்போது 43 ரூபாய் 95 காசுகள் என்ற அளவிற்கு மத்திய அரசு உயர்த்திவிட்டது. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையினால் டயர், டியூப் உட்பட பல்வேறு உதிரிப் பாகங்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துவிட்டன. தொழிலாளர்களின் ஊதியமும் உயர்ந்து விட்டது.

கடந்த நிதியாண்டின் இறுதியில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டு மொத்த இழப்பு 6,150 கோடி ரூபாய் என்ற அளவில் போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் எனது தலைமையிலான தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 60 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. போக்குவரத்துக் கழகங்களின் தற்போதைய நிலைமையை மாற்றுவதற்கு கட்டண உயர்வைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. இந்த நடவடிக்கை இப்போது எடுக்காமல் விட்டுவிட்டால், அரசு போக்குவரத்துக் கழகங்களே இல்லாத நிலைமைதான் ஏற்பட்டு விடும். அத்தகைய நிலைமை ஏற்பட்டால் தனியார் மட்டுமே பஸ்களை இயக்குவார்கள்.

17.11.2011 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டண உயர்வுகளுக்கு ஒப்புதல் அளித்து எடுக்கப்பட்ட முடிவுகள், முந்தைய தி.மு.க. அரசின் மோசமான செயல்பாடுகளால், வேறு வழி ஏதும் இல்லாமல், மன வருத்தத்துடன் எடுக்கப்பட்ட முடிவுகள் தான். அரசு பொதுத் துறை நிறுவனங்களின் சேவைகள் மக்களுக்கு தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள். முந்தைய திமுக அரசின் நடவடிக்கைகளால் முடங்கிப் போகும் அளவுக்கு தள்ளப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களை காப்பாற்ற மத்திய அரசும் எந்தவித உதவியையும் வழங்காத நிலையில், அந்த நிறுவனங்கள் முற்றிலும் செயலற்றுப் போகாமல் காப்பாற்ற இந்த கட்டண உயர்வைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான் இந்த முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

இதனை பொதுமக்கள் நன்கு உணர்ந்து அரசியல் ஆதாயத்திற்காக அறிக்கை விடுபவர்களின் பசப்பு வார்த்தைகளில் மயங்காமல், அவர்கள் விரிக்கும் மாய வலையில் விழாமல், எனது தலைமையிலான அரசுக்கு தங்களது முழு ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று தமிழக மக்களை மீண்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

தவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை (கலிகாலம்)

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஆண்டான்குளத்தில் கடந்த 18.11.2011 அன்று பச்சிளங்குழந்தையின் உடல் மிதந்தது. தகவலறிந்த சிவகிரி இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்குச்சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போலீசாரின் விசாரணையில் வாசுதேவநல்லூர் அருகில் உள்ள டி.ராமநாதபுரம் மாடசாமி கோவில் தெருவைச் சார்ந்த ஆறுமுக ராஜா அவரது மனைவி பரமேஸ்வரி மகள் ஆனந்தி ஆகியோர் குழந்தையைக் குளத்தில் வீசிக் கொலை செய்தது தெரிய வந்தது.

தவறான உறவின் காரணமாகப் பிறந்ததால் கொன்று விட்டோம் என விசாரணையில் அவர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனார்கள் போலீசார். 
ஆறுமுகராஜா தம்பதியரின் இளையமகள் ஆனந்தி. வீட்டிலிருந்தபடியே பீடி சுற்றுபவர். கூலித்தொழிலாளிகளான ஆறுமுகராஜாவும் பரமேஸ்வரியும் காலையில் வேலைக்குச் சென்றால் இரவு சாயும் போது தான் வீடு திரும்புவார்கள். எனவே தனிமையில் பீடி சற்றிக் கொண்டிருந்த ஆனந்தியின் மனம் அலைபாய்ந்தது. அவளது தனிமைச் சூழலைப் பயன் படுத்திக் கொண்ட பக்கத்து விட்டு நபர் ஒருவர் ஆனந்தியோடு பழக்கத்தை ஏற்படுத்தினார். சூழ்நிலையோ தனிமை. பருவத்தின் எல்லைக் கோட்டில், ஆனந்தியும் வாலிபரும். 
 ஒன்றாக கலந்து விட்டனர். விளைவு ஆனந்தியின் வயிற்றில் கரு உருவானது. பெண்ணின் கர்ப்பத்தையும், பழுத்த வெள்ளரிக் காயையும் பூண் போட்டு எத்தனை நாள்தான் மறைக்க முடியும். தன் உடலில் கரு வளர்வது வெளியே தெரியாமலிருக்க நைட்டி அணிந்து மறைத்தாள் ஆனந்தி. நிறைமாதத்தில் அவளது வேஷம் கலைய விபரம் தெரிந்த பெற்றோர்கள் மானம் போகுமே என தலையிலடித்துக் கொண்டார்கள். கடந்த 17ந் தேதி சிவகிரி தனியார் மருந்துவ மனையில் ஆனந்திக்கு பெண் குழந்தை பிறந்தது.

உடனடியாகக குழந்தையோடு ஆனந்தியையும் அழைத்துக் கெண்டு ஆறுமுகராஜாவும் பரமேஸ்வரியும் தளவாய்புரம் வழியாக ஆட்டோவில் ஊருக்குத் திரும்பினர்.
வழியில் தளவாய்புரம் அருகிலுளள்ள ஆண்டார்குளத்து கரையில் ஆட்டோவை நிறுத்தும்படி கூறினர். பிறகு பிறந்து 3 மணி நேரமான பிஞ்சு குழந்தையை மனிதாபிமானமில்லாமல் குளத்தில் வீசி விட்டு ஊருக்குச் சென்று விட்டனர். அடுத்த நாள் குழந்தையின் உடல் மிதந்தது. ஒட்டு மொத்த நெறிதவறிய உறவை வெளிப்படுத்தி விட்டது. பிறந்த அந்தப் பச்சைமண் செய்த பாவம் தான் என்ன? வீசி எறிவதற்கு அந்த உயிர் என்ன டீ குடிக்கும் பேப்பர் கப்பா என்று பதை பதைப்பில் புலம்புகிறார்கள் கிராமத்து மக்கள்.  கருணை இல்லாத மூவரின் கரங்களில் காப்பு மாட்டியது காவல்துறை

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...