The Dalai Lama pleaded with exiled Tibetan MPs on Monday to accept his resignation as their political leader, warning that a delayed handover could pose “an overwhelming challenge”. In a letter read out to the exiled parliament, the 75-year-old Nobel peace laureate argued that the Tibetan movement was now mature enough for a directly-elected political leader. (Source: Hindustan Times)
"அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக நான் எடுத்த முடிவை, திபெத் நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் கால தாமதம் செய்தால், தேவையற்ற பிரச்னைகளும், நிச்சயமற்ற தன்மையும் ஏற்படும்' என, திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா கூறினார்.தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவர் தலாய் லாமா, கடந்த வாரம் அறிவித்தார். இதுகுறித்த முறையான அறிவிப்பை, இமாச்சல் மாநிலம் தரம்சாலாவில் செயல்படும் திபெத் பார்லிமென்டில் (நாடு கடந்த அமைப்பு) நேற்று வெளியிட்டார். அவரது இந்த அறிவிப்பை, திபெத் பார்லிமென்ட் சபாநாயகர் பென்பா டிசெரிங், திபெத் மொழியில் வாசித்தார். தலாய் லாமாவின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒருவரிடம் தலைமை பொறுப்பை தரப்போவதாக அறிவித்தேன். இதற்கு திபெத் நிர்வாகிகள் சிலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆனால், புதிய தலைமைக்கு இது தான் சரியான நேரம் என நினைக்கிறேன். என் முடிவை திபெத் நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.திபெத் பிரச்னை தீர்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அந்த காலம் வரை, நான் தலைமை பதவியில் நீடிக்க முடியாது. எனவே, புதிய தலைவரை தற்போது தேர்வு செய்தால், பிரச்னை சுமுகமாக தீரும். இதற்கிடையில், ஏதாவது பிரச்னை என்றால், அதை தீர்ப்பதற்கு நான் உதவுவேன். புதிய தலைவரிடம் பொறுப்பு ஒப்படைப்பதில் கால தாமதம் ஏற்பட்டால், நிச்சயமற்ற தன்மையும், தேவையற்ற பிரச்னைகளும் <உருவாகும். இதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு தலாய் லாமாவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.