ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
11 January, 2012
தேசிய இளைஞர் தினம் ...
விவகானந்தர் 1863 ஜன., 12ம் தேதி கோல்கட்டாவில் பிறந்தார். இன்று இவரது
150வது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவரது இயற்பெயர்
நரேந்திரநாத். இளம் வயதில் பிரம்மசமாஜத்தில் உறுப்பினரானார்.
தட்சணேஸ்வரத்தில் ராமகிருஷ்ணரை சந்தித்த விவேகானந்தர், அவரது தலைமை
சீடரானார். 1893ல், அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த சர்வதேச அனைத்து சமய
மாநாட்டில் "சகோதர, சகோதரிகளே' என அழைத்து அவர் பேசியது, இந்தியர்களின் இறை
உணர்வையும், ஒழுக்க வாழ்க்கை முறைகளையும் உலகுக்கு எடுத்துக்காட்டும்
வகையில் அமைந்தது. இதனால் உலகம் போற்றும் உன்னத ஆன்மீக நெறியாளராக
விவேகானந்தர் கருதப்படுகிறார்.
விவேகானந்தரின் பார்வையில்: "ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம்,
ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம்,
பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த
நாடும் முன்னேறும்' என்று விவேகானந்தர் கூறினார். மேலும் "நாட்டுப்பற்று
மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள்... இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்'
என்றார். இதிலிருந்து விவேகானந்தர் எந்த அளவிற்கு இளைஞர்கள் மீது நம்பிக்கை
வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.
எதிர்பார்ப்பு: இளைஞர்கள் சிலர் மது, புகையிலை மற்றும் போதை
பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இதிலிருந்து விடுபடுவதற்கு அரசு தகுந்த
விழிப்புணர்வு, வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைய
இளைஞர்கள் தேசப்பற்று, அர்ப்பணிப்பு, விளையாட்டு, கல்வி போன்றவற்றில்
திறமையானவர்களாக உள்ளனர். திசைகாட்டியாக இருக்க வேண்டிய இளைஞர்கள், திசை
மாறாமல் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபட்டு, நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை
சேர்க்க வேண்டும் என, இத்தினத்தில் உறுதிமொழி எடுப்போம்.
இதே நாள்...
மகரஜோதிக்கு பிறகு தமிழர்கள் மீது தாக்குதல்...
கேரளாவில் மகரஜோதிக்கு பிறகு தமிழர்களை தாக்கும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக மத்திய உளவுப்பிரிவு போலீசார் அறிக்கை அனுப்பி உள்ளனர். முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையால், தமிழக, கேரள உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருமாநில மக்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் தமிழகத்தில் கேரள மக்களின் சொத்துக்கள் மட்டுமே சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில்,
மகரஜோதிக்கு பிறகு அங்குள்ள தமிழர்களையும், அவர்களின் சொத்துக்கள் மீதும்
தாக்குதல் நடத்தப்படும், என மத்திய உளவுத்துறை எச்சரித்து அறிக்கை அனுப்பி
உள்ளது. இந்த செய்தி கேரள பத்திரிக்கை ஒன்றில் வெளியாகியுள்ளது. இதனிடையே,
தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், தமிழகத்தில் உள்ள கேரள மக்கள்
மீதும் தாக்குதல் நடத்தப்படும், என இங்குள்ள மத்திய உளவுத்துறை அறிக்கை
அனுப்பி உள்ளது.
ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் குறட்டை...!
அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருந்த முதியவரின் காது, மூக்கு, உதடு, தாடைகளை எலிகள்
கடித்தன. பக்கவாத நோய் காரணமான ஏற்கனவே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த
அவர், தற்போது மேலும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரைச் சேர்ந்த 70 வயது முதியவருக்கு,
கடந்த திங்களன்று பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவரை அங்குள்ள
மதுர தாஸ் மாத்தூர் அரசு மருத்துவமனையில், உறவினர்கள் சேர்ந்தனர். தீவிர
சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரால், அசையக்கூட முடியவில்லை.
வென்டிலேட்டர் கருவி மூலம், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதியவரைப் பார்க்க வந்த அவரது
உறவினர்கள், அவரின் மூக்கு, காது, உதடு, தாடைகள் பிய்ந்து ஆபத்தான நிலையில்
இருப்பதைக் கண்டு பதறிப் போயினர். இதுகுறித்து அவர்கள், மருத்துவமனை
நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.
உலா வரும் எலிகள்: இதுபற்றி, பெயர் குறிப்பிட விரும்பாத டாக்டர்
ஒருவர் கூறுகையில், "மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில், கடந்த
திங்களன்று இரவு பணியில் இருந்த நர்சும், டாக்டர்களும், இரவு 11 மணிக்கு
முன்பாகவே தூங்கச் சென்று விட்டனர். இந்நிலையில், தீவிர சிகிச்சைப்
பிரிவின் சுவரில் இருந்த ஒரு ஓட்டை வழியாக உள்ளே வந்த எலிகள், முதியவரின்
மேல் ஏறி, அவரது காதுகள், மூக்கு, உதடுகள், தாடைகளை சிறிது சிறிதாக
கடித்துள்ளன. மூச்சு விடுவதற்கு இணைக்கப்பட்டிருந்த குழாய்களையும், எலிகள்
துண்டு துண்டாக்கி விட்டன. சுவரில் உள்ள ஓட்டை வழியாக எலிகள் உள்ளே
வருவதையும், வெளியே செல்வதையும் மருத்துவமனை நிர்வாகத்தினர் முன்னரே
பார்த்துள்ளனர். இருந்தும், எலிகள் வருவதைத் தடுக்க அவர்கள் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயிரை பாதுகாக்க, நோயாளி மருத்துவமனையில்
சேர்க்கப்படுகிறார். ஆனால், அங்கும் அவருக்கு பாதுகாப்பில்லை என்றால் என்ன
செய்வது' என்றார்
ஆசியாவிலேயே இந்திய அதிகார முறைமை தான் மிக மோசமானது!
ஆசியாவிலேயே இந்திய அதிகார முறைமை தான் மிக மோசமானது என புதிய ஆய்வில்
கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 10 இடங்களில், இந்தியாவுக்கு 9.21 வது இடம்
கிடைத்துள்ளது. இப்பட்டியலில், வியட்நாம், பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகள்
இந்தியாவை விட முன்னேறியுள்ளன.
ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம், ஆசிய நாடுகளில், எந்த நாட்டில்
அதிகார முறைமை சிறந்த முறையில் செயல்படுகிறது, எந்த நாட்டில் மிக மோசமாக
செயல்படுகிறது என்பதைக் கண்டறிய சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது. இதன் படி,
மொத்தம் 10 இடங்களில், 2.25 புள்ளிகள் பெற்று சிங்கப்பூர் முன்னணியில்
உள்ளது. இதையடுத்து ஹாங்காங், தாய்லாந்து, தைவான், ஜப்பான், தென் கொரியா
மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. மலேசியாவை அடுத்து, சீனா,
பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன. ஆனால்
9.21 புள்ளிகள் பெற்று இந்தியா கடைசியில் உள்ளது.
இதுகுறித்து அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியாவில் உள்ள அதிகார வர்க்கம் அதாவது அதிகாரிகள் திறமை குறைந்தவர்களாக
உள்ளனர். இவர்கள் மீது, ஊழல் உள்ளிட்ட மிகப் பெரியளவிலான புகார்கள்
கூறப்படுகின்றன. இது இந்தியாவில் முதலீடு செய்ய வரும் அந்நிய நாட்டு
நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக உள்ளது. குறிப்பாக, இந்திய அதிகார
முறைமையில், போதுமான உட்கட்டமைப்பு வசதி இல்லாதது, ஊழல், அதிகாரிகள்
லஞ்சத்துக்கு ஆசைப்படுவது போன்றவை பெரும் பிரச்னைகளாக உள்ளன. நிறுவனங்கள்
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலம், தங்களுக்கு சாதகமான காரியங்களை
நிறைவேற்றிக் கொள்கின்றன. மேலும், இந்தியாவில், தாறுமாறான மற்றும் கடும்
சுமையை ஏற்படுத்தக் கூடிய வரிகள், சுற்றுச் சூழல் மற்றும் பிற
கட்டுப்பாடுகள் ஆகியவை, அந்நிய நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதைத்
தடுக்கின்றன. இதனால் அந்நிறுவனங்களுக்குப் பெருமளவில் செலவு ஏற்படுகிறது.
இந்திய கோர்ட்டுகளுடன் மல்லுக்கட்டுவதை விட அவற்றைத் தவிர்ப்பதையே
நிறுவனங்கள் விரும்புகின்றன. தவறான முடிவுகள் எடுக்கப்படும் போது அதற்கு
இந்திய அதிகாரிகள் பொறுப்பேற்பதே இல்லை. எப்போதாவதுதான் பொறுப்பு
ஏற்கின்றனர். இதனாலேயே பெரும்பாலான அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு
செய்யத் தயங்குகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில்
நாட்டிலேயே பணக்கார முதல்வர்!
நாட்டிலேயே பணக்கார முதல்வர் மாயாவதிதான் என, தெரியவந்துள்ளது. இவருக்கு 87.27 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளன.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அரசு சார்பற்ற அமைப்பு
வெளியிட்டுள்ள விபரங்கள் வருமாறு: தமிழக முதல்வர் ஜெயலலிதா தனக்கு 51 கோடி
ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், தன் சொத்துக்களின் மதிப்பு கடந்த ஐந்தாண்டுகளில்
அதிகரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதுதவிர ஆந்திர முதல்வர்
கிரண்குமார் ரெட்டிக்கு 8.1 கோடி ரூபாய்க்கும், ஒடிசா முதல்வர் நவீன்
பட்நாயக்கிற்கு 4.7 கோடிக்கும், அரியானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடாவுக்கு
3.74 கோடிக்கும், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு 2 கோடிக்கும்,
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு 1.78 கோடிக்கும், டில்லி முதல்வர் ஷீலா
தீட்சித்திற்கு 1.9 கோடிக்கும் சொத்துக்கள் உள்ளன. விரைவில் சட்ட தேர்தல்
நடக்க உள்ள மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதலுக்கு
6.76 கோடிக்கும், மணிப்பூர் முதல்வர் ஓக்ராம் இபோபிக்கு 6 லட்சத்திற்கும்,
உத்தரகண்ட் முதல்வர் பி.சி.கந்தூரிக்கு 1.69 கோடிக்கும், கோவா முதல்வர்
திகாம்பர் காமத்திற்கு 3.23 கோடிக்கும் சொத்துக்கள் உள்ளன.
இவர்களை எல்லாம் மிஞ்சும் வகையில், உ.பி., முதல்வர் மாயாவதிக்கு 87.27
கோடிக்கு சொத்துக்கள் உள்ளன. இதன்மூலம் நாட்டிலேயே பணக்கார முதல்வர்
இவர்தான் என்பது தெரியவந்துள்ளது. மாயாவதியின் சொத்து மதிப்பு அதிகமாக
இருப்பதற்கு, அவரின் சொத்துக்கள் எல்லாம் டில்லியில் இருப்பதே காரணம்.
மாயாவதிக்கு, டில்லி ஓக்லாவில் ஒரு வர்த்தக மையம் உள்ளது. சர்தார் படேல்
மார்க்கில் உள்ள அவருக்கு சொந்தமான மனைகளின் மதிப்பு 54 கோடி ரூபாய்.
இதுதவிர, மாயாவதியிடம் 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளும் உள்ளன என
தெரிவித்துள்ளது.
அந்தமான் பழங்குடியினரை ஆடச் செய்து ரசித்த சுற்றுலா பயணிகள்!
அந்தமானில் ஜாரவா பழங்குடி பெண்களை நடனமாட செய்து, சுற்றுலா பயணிகளை
மகிழ்வித்ததாக செய்தி வெளியிட்ட "டிவி' நிறுவனங்களுக்கு அந்தமான் நிகோபார்
அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, அந்தமான்
நிகோபார் யூனியன் பிரதேசத்திடமிருந்து, மத்திய அரசும் அறிக்கை கேட்டுள்ளது. அந்தமான்
நிகோபார் தீவில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில், ஜாரவா பழங்குடியினர்
வசிக்கின்றனர். இன்று வரை அவர்கள் எந்த ஆடையும் உடுத்தாமல், நிர்வாணமாகவே
வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலானோர் இறந்து விட, தற்போது 403 பேர்
மட்டுமே இந்தத் தீவில் உள்ளனர். இந்த பழங்குடி இனத்தை பாதுகாக்கும்
பொருட்டு, இவர்கள் வாழும் காட்டு பகுதியை நோக்கி செல்லும் சாலைகள்
அடைக்கப்பட்டுள்ளன.
பத்திரிகை செய்தி : இதற்கிடையே
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர், இந்த பழங்குடிகளை பார்க்க
சென்றதாகவும், இவர்களை அழைத்து சென்ற போலீஸ்காரர் ஒருவர், பழங்குடியின
பெண்களுக்கு பிஸ்கெட்டுகளையும், இனிப்புகளையும் வழங்கி அவர்களை நடனமாட
செய்ததாகவும், இதற்காக இந்த சுற்றுலா பயணிகளிடம் சம்பந்தப்பட்ட
போலீஸ்காரர், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் பிரிட்டனை சேர்ந்த
பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுவாக, காட்டுப் பகுதியில் சுற்றுலா
செல்பவர்கள் வனவிலங்குகளை பார்வையிடுவார்கள். ஆனால், அந்தமானில் இந்த
நிர்வாண பழங்குடியினரை பார்ப்பதற்காகவே உள்ளூர் போலீசார் உதவியுடன் "காட்டு
மனிதர்' சுற்றுலா நிகழ்ச்சி நடப்பதாக பிரிட்டனை சேர்ந்த "அப்சர்வர்'
மற்றும் "கார்டியன்'பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. இந்த
செய்தியை மையப்படுத்தி டில்லியை சேர்ந்த இரண்டு "டிவி' சேனல்கள் பழங்குடி
பெண்களின் நடன நிகழ்ச்சியை ஒளிபரப்பின.
சேனல்களுக்கு நோட்டீஸ் : இதுகுறித்து
அந்தமான் டி.ஜி.பி., எஸ்.பி.தியோல் குறிப்பிடுகையில், "அப்சர்வர்
பத்திரிகை குறிப்பிட்டுள்ள பழங்குடி பெண்கள் படம் 2002ல் எடுக்கப்பட்டது.
எனினும், பழங்குடியினரை காட்சி பொருளாக்கி சுற்றுலா பயணிகளுக்கு காட்டுவது
சட்டப்படி குற்றமாகும்' என்றார். பழங்குடி பெண்களின் கவுரவத்தை
இழிவுபடுத்தும் வகையில், அவர்களது நடனத்தை ஒளிபரப்பிய டில்லியை சேர்ந்த
இரண்டு சேனல்களுக்கு அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது. "பழங்குடி பெண்களை நடனமாட செய்தவர் ஒரு போலீஸ்காரர் என்பது
தவறானது. அவர் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற அங்கீகாரம் பெறாத
வழிகாட்டி. இது தொடர்பாக அவர் அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். எனினும்,
அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என அந்தமான் நிர்வாகம்
விளக்கமளித்துள்ளது.
ஜனவரி 12 விவேகானந்தரின் 150வது பிறந்ததினம்...
விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதியைத் தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது. சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது.1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் இறைவனுடன் கலந்தார்.
விவேகானந்தரின் பொன்மொழிகள்: நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்
உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை. அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி.
தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.
தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்.
மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்.
கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம் அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்.
சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார். ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள்.
மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள். உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.
தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.
கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் கடவுளுக்கே சேவை செய்தவராகிறோம்.
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் செவ்வாழை!
எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
மாலைக்கண்நோய் கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.
பல்வலி குணமடையும் பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும். சொரி சிறங்கு நீங்கும் சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும். நரம்பு தளர்ச்சி குணமடையும் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். குழந்தை பேறு தரும்
திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். தொற்றுநோய் தடுக்கப்படும் தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.
உடல்நடுக்கம் போக்கும் பச்சை திராட்சை...
திராட்சையில் பல வகை உண்டு நமக்கு அதிகம் பரிச்சயமானது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். அனைத்து வகை திராட்சைகளும் உடல் நலத்திற்கு ஏற்றது. திராட்சையை தினமும் உண்ண வேண்டும். திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம் உள்ளது. இது தவிர கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் மற்றும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன. ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. பச்சை திராட்சை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. எண்ணற்ற மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. ஜீரண சக்தி தரும் பசி இல்லாமல் அவதிப்படுபவர்கள் அடிக்கடி பச்சை திராட்சையை உண்டுவர பசியை தூண்டும். ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி பச்சைத் திராட்சைக்கு உண்டு.
உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் பச்சைத் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். இது குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும். உடல் நடுக்கம் தீரும் எந்த காரணமும் இன்றி அச்சமடைவர்பவர்களுக்கு திராட்சை அருமருந்தாக உள்ளது. கை, கால் நடுக்கம், உடல் சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சைத் திராட்சைப் பழத்தை சாறுபிழிந்து ஒரு அவுன்ஸ் எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை கலந்து சாப்பிட்டு வர நடுக்கம் குறையும். தினமும் பகல் உணவுக்குப் பின்னர் 20 நாட்களுக்கு சாப்பிட்டு வர பயம் குறைந்து மனோ தைரியம் ஏற்படும்.
உடல் அசதி போக்கும் உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் பச்சைத் திராட்சைப் பழம் ஏற்றது. சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை பச்சைத் திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும். மாதவிலக்கு சரியாகும் தினசரி பச்சைத் திராட்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற திராட்சை சிறந்த மருந்தாகும். இது உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால் குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிட கூடாது. இருதயம் பலப்படும் இதயத்தில் வீக்கம் ஏற்பட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு பச்சைத் திராட்சை மருந்தாகும். காலை உணவுக்குப் பின்னர் தினசரி பச்சை திராட்சை சாப்பிட்டு வர வீக்கம் குணமடையும் இருதயம் பலப்படும். எலும்புகள், பற்கள் கெட்டிப்படும்.
20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!
பேஸ்புக்கில் இருக்கும் சில விஷயங்கள் படிப்பவர்களை மிகவும் பிரம்மிக்க வைக்கிறது. சவுதி அரேபியாவை சேர்ந்த சவுத் பின் நாசர் அல் ஷாஹ்ரி என்பவர் பேஸ்புக்கில் தனது மகனை விற்க விளம்பரப்படுத்தி இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. உலக அளவில் உள்ள தொழில் நுட்பங்களில் கூட பண நெருக்கடி விளையாடுகிறது. அப்படி பண நெருக்கடி ஏற்பட்டதால் இவர் தனது மகனை விற்க முடிவெடுத்தாக கூறி இருக்கிறார். இவரது மகனின் விலை 73 மில்லியன் யூஏஇ திறாம்ஸ் (20 மில்லியன் டாலர்) என்று ஃபேஸ்புக்கில் கூறி இருக்கிறார். இது போன்று திகைக்க வைக்கும் சில விஷயங்கள் ஃபேஸ்புக்கில் வெளியாகின்றன.
ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், தனது சொந்த வாழ்கை பற்றி பகிர்ந்து கொள்ள நினைப்பவர்கள் என்று ஃபேஸ்புக்கில் வெளியாகும் செய்திகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். வீடு இல்லாத ஒரு பெண் மணி தனது வாழ்க்கை சூழலை பகிர்ந்து கொண்டதன் விளைவாக அவருக்கு ஃபேஸ்புக் ஃபாலோவர்கள் மூலம் நிறைய உதவிகள் கிடைத்தது. இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மனிதர் தனது மகனை விற்க தயாராக இருக்கும் இந்த செய்தி, படிப்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும். இப்படி சோஷியல் மீடியாவின் பயன்பாடு தினம் தினம் வித்தியாசப்படுகிறது. மக்கள் இதன் மூலம் நிறைய பயனடைவார்கள் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.
ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், தனது சொந்த வாழ்கை பற்றி பகிர்ந்து கொள்ள நினைப்பவர்கள் என்று ஃபேஸ்புக்கில் வெளியாகும் செய்திகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். வீடு இல்லாத ஒரு பெண் மணி தனது வாழ்க்கை சூழலை பகிர்ந்து கொண்டதன் விளைவாக அவருக்கு ஃபேஸ்புக் ஃபாலோவர்கள் மூலம் நிறைய உதவிகள் கிடைத்தது. இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மனிதர் தனது மகனை விற்க தயாராக இருக்கும் இந்த செய்தி, படிப்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும். இப்படி சோஷியல் மீடியாவின் பயன்பாடு தினம் தினம் வித்தியாசப்படுகிறது. மக்கள் இதன் மூலம் நிறைய பயனடைவார்கள் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.
அரசு டாக்டர்கள் கிளினிக் நடத்த தடை கோரி மதுரையில் வழக்கு!
அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்த வீ ஆர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 155 தாலுகா, 88 பிளாக் மருத்துவமனைகள் 14 நடமாடும் மருத்துவ பிரிவுகள், 7 பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் மற்றும் 7 தொழுநோய் மருத்துமனைகள் உள்ளன. பொதுமக்கள் இந்த மருத்துவமனைகளின் சேவையை நம்பியே உள்ளனர்.
அரசு டாக்டர்கள், அரசு ஊழியர்கள், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை வரும் மக்களுக்கு முழு சேவை அளிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்துகின்றனர்.தனியார் மருத்துவமனைகளிலும் பணிபுரிகின்றனர். அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவதிலும், தனியாக கிளினிக் நடத்துவதிலும் அதிக லாபம் கிடைப்பதால் அரசு டாக்டர்கள் பணியில் அலட்சியம் காட்டுகின்றனர்.
கவனக்குறைவால் மரணம் அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான டாக்டர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை. அந்த நேரத்தில் சொந்த மருத்துமனையில் உள்ளனர். கடந்த 6 மாதங்களில் அரசு டாக்டர்களின் கவனக்குறைவால் 70 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் அரசு மருத்துமனைக்கு செல்ல கூடாது என்ற உயிர் பயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் போலீசார், ஆசிரியர்கள் தனியாக தொழில் நடத்த அரசு தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை உள்ளது. அதே போல் தமிழ்நாட்டிலும் அரசு டாக்டர்கள், தனியாக கிளினிக் நடத்தவும், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. கடந்த வாரம் தூத்துக்குடியில் அரசு மருத்துவர் ஒருவர் தனியார் கிளினிக்கில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஆபரேசன் செய்யும் போது தாயும், குழந்தையும் உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த மருத்துவரை கர்ப்பிணிப் பெண்ணின் கணவரே கொலை செய்தார். இந்த நிலையில் இந்த நிலையில் அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த தடைகோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினத்தந்தியிடம் கைமாறிய என்.டி.டிவி-ஹிந்து டிவி சேனல்!
என்.டி.டி.வி- த ஹிந்து பத்திரிக்கை ஆகியவை இணைந்து தொடங்கிய செய்தி சேனலை தமிழின் நம்பர் ஒன் நாளிதழான தினத்தந்தி நிர்வாகம் வாங்கியிருப்பதாகவும், ஏப்ரல் 14ம் தேதி தமிழ்புத்தாண்டு முதல் இந்த புதிய டிவி தந்தி நிர்வாகத்திலிருந்து வெளியாகவுள்ளதாகவும் மீடியா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்தப் புதிய செய்திச் சேனல் சன் நியூஸ் செய்திச் சேனலுக்குக் கடும் போட்டியைத் தரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்.டி.டி.வி ஆங்கில செய்திச் சேனல் ஹிந்து நாளிதழுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டு சில வருடங்களுக்கு முன் Metronation Chennai Television Ltd என்ற தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கியது. இந்த நிறுவனத்தின் சார்பில் என்டிடிவி-ஹிந்து என்ற பெயரில் வெளியான இந்த டிவியில் மெட்ரோ செய்திகள் மட்டும் முதலில் ஒளிபரப்பட்டன. பின்னர் தமிழிலும், ஆங்கிலத்திலும் செய்திகள் ஒளிபரப்பட்டன. ஆனால் சன் டிவி நிறுவனத்தின் வியாபித்த நேயர் பரப்பை ஊடுறுவிப் போக இவர்களால் முடியவில்லை. மேலும் புதிய தலைமுறை என்ற புதிய செய்திச் சேனல் சன் நியூஸ் சேனலையே பின்னுக்குத் தள்ளியதால் என்டிடிவி-ஹிந்து மேலும் பின்னுக்குப் போய் விட்டது.
தமிழ் சேனல்களுடன் போட்டியிட முடியாத காரணத்தினாலும், சரியான விளம்பர வருவாய் இல்லாத காரணத்தினாலும் இந்த சேனலுக்கு மூடுவிழா நடத்த இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருந்தன. இந்த நிலையில் என்.டி.டி.வி-ஹிந்து சேனல் தினத்தந்தி வசம் கைமாறியுள்ளது. அதனை புதுப்பொலிவுடன் மாற்றம் செய்து களமிறக்க தினத்தந்தி தீவிரமாக உள்ளதாம்.
புதிய செய்திச் சேனலின் முதன்மை செயல் அதிகாரியாக (சி.இ.ஒ) சந்திரசேகரன் என்பவரும், செய்தி ஆசிரியராக ராஜ் டிவியில் இருந்த ஜெயசீலன் என்பரும் இணைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழ் நாளிதழ்களின் அரசனான தினத்தந்தியின் செய்திச் சேனலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சேனலுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஏப்ரல் 14ம் தேதி தமிழ்புத்தாண்டுக்கு ஒளிபரப்பை தொடங்க தினத்தந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய தலைமுறையின் வருகையினால் சன் டிவியின் செய்திச் சேனலுக்கு தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது தினத்தந்தியும் புதிய செய்திச் சேனலை களம் இறக்குவதால் செய்திப் போட்டி மகா கடுமையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே நாள்...
- அல்பேனியா குடியரசு தினம்(1946)
- இந்திய விடுதலை போராட்ட தியாகி திருப்பூர் குமரன் இறந்த தினம்(1932)
- இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இறந்த தினம்(1966)
- இந்திய தொழிலதிபர் பிர்லா இறந்த தினம்(1983)
- நீரிழிவுக்கு மருந்தாக மனிதனில் இன்சுலின் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது(1922)
கொடியுடன் உயிர்நீத்த குமரனின் நினைவுநாள்...
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நாச்சிமுத்து முதலியார் கருப்பாயம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக அவதரித்தார் குமாரசாமி.அவரே பிற்காலத்தில் கொடிகாத்த குமரனாகதன்னுயிரை ஈந்தவர். அவருடன் பிறந்தவர்கள் ஏழு பேர். சென்னிமலையில் தற்போது குமரன் சதுக்கம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றியத்துவக்கப்பள்ளி, ஆங்கில ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்டது. இப்பள்ளியில்தான் குமரன் ஐந்தாம் வகுப்புவரை படித்தார்.மேல் படிப்பை தொடர பொருளாதாரம் இடந்தரவில்லை. 1914-ல் கல்வியை முடித்த இவர் 10 வயது சிறுவனாக பள்ளிபாளையத்தில் தன் தாய்மாமன் வீட்டுக்கு தொழில் தேடிச்சென்றார்.அதிலும் நிறைவடையாத அவர் மீண்டும் சென்னிமலைக்கே வந்து குலத்தொழிலான நெசவுத் தொழில் செய்து வந்தார். இளமைப் பருவத்திலேயே எளிய குடும்பத்தின் வருவாயைப் பெருக்க வேண்டிய சுமை குமரனின் தோளில் இறங்கியது.
ஈரோட்டில் உள்ள கடைக்கார் ஒருவரிடம், வாரம் ஒரு முறை நூல் எடுத்து வந்து, பாவோடிக் கஞ்சி தோய்த்து கைத்தறியில் சேலையாக நெய்து மீண்டும் அதை ஈரோட்டுக்கு எடுத்து சென்று உரிய கடைகாரர் இடம் ஓப்படைத்து கூலியும் நூலும் பெற்றவருவது அவரது வழக்கம். வறுமைபிடியில் சிக்கிதவித்த குமரனின் குடும்பம் 1916-ம் ஆண்டு திருப்பூருக்கு குடிபெயர்ந்தது. திருப்பூருக்கு சென்ற குமரன் ஓ.கே., சென்னியப்ப முதலியார் மற்றும் ஈங்கூரை சேர்ந்த ஈ.ஆர். ரங்கசாமி கவுண்டர் ஆகியோர் கூட்டாக நடத்திய பஞ்சு தரகு மண்டியில் எடை குறிப்பு எழுத்தர் வேலைக்கு சேர்ந்தார்.
தேச பந்து வாலிபர் சங்கம் என்ற விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு இந்திய விடுதலை போரில் குமரன் ஈடுபட தொடங்கினார். கள்ளுகடை மறியல், அந்நிய பொருட்களை எரித்தல் போன்ற காந்தியடிகள் அழைத்த போராட்டங்களுக்கு எல்லாம் சிரம் ஏற்று சென்றார். 6.1.1932-ம்தேதி மாலை திருப்பூர் நொய்யல் நதிகரையில் காந்தியை கைது செய்ததற்காக கண்டன கூட்டம் நடந்தது அக்கூட்டத்தில் அதில் 11.1.1932-ல் திருப்பூர் நகரில் சட்டமறுப்பு இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அன்று அச்சமில்லை... அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே என்ற பாரதியின் வைரவரிக ளை விண்அதிர முழுங்கி கொண்டு கொடி பிடித்து கொண்டு முன்னேறி சென்றார் குமரன். எழுச்சி மிகு ஊர்வலம் கண்டு தாக்கமுடியாமல் குண்டதடி தாக்குதல் நடத்தினர் வெள்ளையர். அதில் குரமனின் மண்டை பிழந்து கொட்டிய செந்நீர் தாயக மண்ணை மேலும் சிவப்பாக்கியது.
வீர திருமகன் செயல் அற்று போய் தரையில் சாய்ந்தார் அந்திலையிலும் அவரது வலது மணிக்கரம் பற்றிய தேசிய கொடி கீழே விழவில்லை. மண்ணுக்கு உடலை தந்து மணிக்கொடிக்கு தன் மார்பை தந்தார். சென்னிமலை குரமன் தானே ஒரு வரலாறாக மாறிவிட்டார் இந்திய விடுதலை போரில் உடல் பொருள் ஆவி என மூன்றை இழந்தவர்கள் என்ற தியாகப்பட்டியலில் தியாகி குமரன் முதன்மை இடம் பெற்று சாகவரம் அடைந்துள்ளார் சாவை சடங்கா நினைக்கும் மனிதர்கள் நடுவே அதை சரித்தரம் ஆக்கியவர் தியாகி குமரன். சென்னிமலையில் அவருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஈரோட்டில் உள்ள கடைக்கார் ஒருவரிடம், வாரம் ஒரு முறை நூல் எடுத்து வந்து, பாவோடிக் கஞ்சி தோய்த்து கைத்தறியில் சேலையாக நெய்து மீண்டும் அதை ஈரோட்டுக்கு எடுத்து சென்று உரிய கடைகாரர் இடம் ஓப்படைத்து கூலியும் நூலும் பெற்றவருவது அவரது வழக்கம். வறுமைபிடியில் சிக்கிதவித்த குமரனின் குடும்பம் 1916-ம் ஆண்டு திருப்பூருக்கு குடிபெயர்ந்தது. திருப்பூருக்கு சென்ற குமரன் ஓ.கே., சென்னியப்ப முதலியார் மற்றும் ஈங்கூரை சேர்ந்த ஈ.ஆர். ரங்கசாமி கவுண்டர் ஆகியோர் கூட்டாக நடத்திய பஞ்சு தரகு மண்டியில் எடை குறிப்பு எழுத்தர் வேலைக்கு சேர்ந்தார்.
தேச பந்து வாலிபர் சங்கம் என்ற விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு இந்திய விடுதலை போரில் குமரன் ஈடுபட தொடங்கினார். கள்ளுகடை மறியல், அந்நிய பொருட்களை எரித்தல் போன்ற காந்தியடிகள் அழைத்த போராட்டங்களுக்கு எல்லாம் சிரம் ஏற்று சென்றார். 6.1.1932-ம்தேதி மாலை திருப்பூர் நொய்யல் நதிகரையில் காந்தியை கைது செய்ததற்காக கண்டன கூட்டம் நடந்தது அக்கூட்டத்தில் அதில் 11.1.1932-ல் திருப்பூர் நகரில் சட்டமறுப்பு இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அன்று அச்சமில்லை... அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே என்ற பாரதியின் வைரவரிக ளை விண்அதிர முழுங்கி கொண்டு கொடி பிடித்து கொண்டு முன்னேறி சென்றார் குமரன். எழுச்சி மிகு ஊர்வலம் கண்டு தாக்கமுடியாமல் குண்டதடி தாக்குதல் நடத்தினர் வெள்ளையர். அதில் குரமனின் மண்டை பிழந்து கொட்டிய செந்நீர் தாயக மண்ணை மேலும் சிவப்பாக்கியது.
வீர திருமகன் செயல் அற்று போய் தரையில் சாய்ந்தார் அந்திலையிலும் அவரது வலது மணிக்கரம் பற்றிய தேசிய கொடி கீழே விழவில்லை. மண்ணுக்கு உடலை தந்து மணிக்கொடிக்கு தன் மார்பை தந்தார். சென்னிமலை குரமன் தானே ஒரு வரலாறாக மாறிவிட்டார் இந்திய விடுதலை போரில் உடல் பொருள் ஆவி என மூன்றை இழந்தவர்கள் என்ற தியாகப்பட்டியலில் தியாகி குமரன் முதன்மை இடம் பெற்று சாகவரம் அடைந்துள்ளார் சாவை சடங்கா நினைக்கும் மனிதர்கள் நடுவே அதை சரித்தரம் ஆக்கியவர் தியாகி குமரன். சென்னிமலையில் அவருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)