|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 January, 2012

வார பலன் 27-1-12 முதல் 2-2-12 வரை...

மேஷம் பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வீடு மாற்ற இது உகந்த வாரம். பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். பெரியோர் ஆசி கிடைக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவரின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கலாம்.வேலை பார்ப்போருக்கு: கொடுத்த வேலைகளை குறித்த நேரத்திற்குள் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

ரிஷபம் பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். அரசு வழியில் சலுகைகள் கிடைக்கும். மகான்களின் ஆசி கிடைக்கும். கை நழுவிப்போன வாய்ப்பும் திரும்ப வரும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். சிலர் புதிய வீடு கட்டி குடி போகலாம். குடும்பத்துடன் புனிதத் தலங்களுக்கு சென்று வரக்கூடும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். சிலருக்கு விருப்ப ஓய்வு கிடைக்கலாம். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்கள் எதையும் கூற வேண்டாம்.

மிதுனம் பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கலாம். பழக்கமில்லாதவர்களிடம் வெளிப்படையாகப் பேச வேண்டாம். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். சகோதர வழி உறவுகள் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு மகிழக்கூடும். கணவரை அனுசரித்துச் செல்லவும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் செல்வாக்கு அதிகமாகலாம். சக ஊழியர்கள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். அதனால் உங்கள் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு.

கடகம் பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் குறையும். எதிர்பாராத தனவரவு ஏற்படலாம்.பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். சேமிப்பில் கவனம் செல்லும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மங்கலப் பொருட்கள் பெறக்கூடும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களால் நன்மை உண்டு. அலுவலகத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசாமல் இருப்பது நல்லது.

சிம்மம் பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு சீராக இருக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். திறமை பளிச்சிடும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்தாருடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். பேச்சில் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். எதிர்பார்த்தபடி ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். உடல் நலம் மேம்படும். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தேவையில்லாத பயணங்களைத் தள்ளிப் போடவும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். குடும்பத்துடன் ஆன்மீகச் சுற்றுலா சென்று வரக்கூடும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: பண வரவு திருப்திகரமாக இருக்கும். இதுவரை தொல்லை கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் சில சலுகைகள் பெறக்கூடும்.

துலாம் பொது: அதிர்ஷ்டகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் வெற்றிகரமாக முடியும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தார் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். சமையல் அறையில் வேலை பார்க்கும்போது கவனமாக இருக்கவும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

விருச்சிகம் பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வருமானம் வரத் துவங்கும். எதிர்பார்க்கும் தகவல் கிடைத்து மகிழக்கூடும். பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். பேச்சில் நிதானம் தேவை. எதிர்பாராத பணவரவு உண்டு. இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம்.

தனுசு பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் மேம்படும். சமுதாயத்தில் பெரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சரியாகப் புரிந்து கொண்டு செய்தால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்கலாம். சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். எதிலும் நிதானம் தேவை.

மகரம் பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் சிறப்பாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். இருப்பினும் வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. சமுதாயத்தில் மதி்பபும், மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்கத்தில் இருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைத்து மகிழக்கூடும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். சேமிப்பில் கவனம் செலுத்தவும்.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் அளவோடு பழகவும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும்.

கும்பம் பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. சேமிப்பில் கவனம் தேவை.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகளின் கெடுபிடி குறையும். சிறப்பாக பணியாற்றி பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைத்து மகிழக்கூடும்.

மீனம் பொது: சாதகமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் தேவைக்கு அதிகமாகவே வரும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பெற்றோரை அனுசரித்துச் செல்லவும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். வேலை பார்க்கும் பெண்களுக்கு பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு அதிக வருமானம் வரும் புதிய வேலை கிடைக்கலாம். வேலையில் கூடுதல் கவனம் தேவை. அடுத்தவர்களை நம்பி உங்கள் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது.

தமிழக அரசின் இளம்பெண் அறிவியலார் விருது...

தமிழக அரசின் இளம்பெண் அறிவியலார் விருது 7 பேருக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது ஒருவருக்கும் இன்று வழங்கப்படுகிறது. தமிழக அரசு பெண் விஞ்ஞானிகளை கவுரவிக்கும் விதத்தில் தமிழ்நாடு இளம்பெண் அறிவியலார் விருதினையும், வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு உயர்கல்வி துறைகளில் சிறப்பாக செயலாற்றும் பெண்களுக்கு வழங்கி வருகிறது.ரூ.20,000 ரொக்கம் மற்றும் சான்றிதழுடன் கூடிய இந்த விருது வேளாண்மை அறிவியல், சுற்றுச்சூழல் விஞ்ஞானம் சார்ந்த 7 துறைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி டாக்டர்.கங்கா ராதாகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகின்றது.

2010ம் ஆண்டுக்கான இளம்பெண் அறிவியலார் விருது பெறுபவர்கள் விவரம் வருமாறு,
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் டாக்டர் மரகதம்,
அண்ணாமலை பல்கலைக்கழக இணை பேராசிரியர் டாக்டர் எஸ்.மலர்விழி,
பெரம்பலூர் பருத்தி ஆய்வக துணை பேராசிரியர் டாக்டர் ஷீரின் ஜெனிதா ராஜம்மாள்,
பெரியார் பல்கலைக்கழக துணை பேராசியர் டாக்டர் டி.பூங்கொடி விஜயகுமார்,
அழகப்பன் பல்கலைக்கழக துணை பேராசியர் டாக்டர் கே.பாண்டிமாதேவி,
அண்ணா பல்கலைக்கழக கணிதப்பிரிவு துணை பேராசியர் டாக்டர் விமலா மணிவாசகம்,
சவிதா பல்கலைக்கழக வேதியல் துறை துணை பேராசிரியர் டாக்டர் கே.உதயலட்சு

செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்...?

ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.

1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.
3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.
4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.
5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.
6. பெற்றோர், மற்ற பெரியோர்ளைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.
7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.
10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.
11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம். 12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.
13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.
14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.
15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.
16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.
17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.
18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.
19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.
21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.
23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.
24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.
26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.
28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.

தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.

பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.

அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.

சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.

பிராணிரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.  விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.

லாலாபக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.

சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.

அவீசி: பொய்சாட்சி சொன்னால் நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.

மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற தண்டனைகள்:
1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.
2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.
3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.
4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.
5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.
6. தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள் தேரையாய்ப் பிறப்பான்.
7. நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம் பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.
8. தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி அவதிப்படுபவனாகவும் பிறப்பர். இப்படி வேறு, வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும். எனவே மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை நரகில் நிச்சயம் என்று அறிந்து புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும்.

இதே நாள்...


  • சர்வதேச படுகொலை நினைவு தினம்
  •  தாமஸ் எடிசன், வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்(1880)
  •  தேசிய புவியியல் கழகம் வாஷிங்டன் டிசியில் அமைக்கப்பட்டது(1888)
  •  ஜான் லோகி பயார்ட், முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்தினார்(1926)
  •  சர்வதேச படுகொலை நினைவு தினம் முதன் முதலில் ஜெர்மனியில் அனுசரிக்கப்பட்டது(1996)

விவசாயி வெங்கடபதிக்கு பத்மஸ்ரீ விருது...


புதுச்சேரி விவசாயிக்கு, இந்தாண்டிற்கான ஜனாதிபதியின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறையில் அதிக மகசூல் தரும் உயர் ரக கனகாம்பரம், சவுக்கு மரக்கன்றுகளை கண்டு பிடித்து, சாதனை படைத்த புதுச்சேரி கூடப்பாக்கம் விவசாயி வெங்கடபதிக்கு, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அவர் கூறுகையில், ""கனகாம்பரம், சவுக்கு, கொய்யா உள்ளிட்டவை அதிக மகசூல் தரக்கூடிய வகையில், புதிய ரகங்களை கண்டுபிடித்து, மத்திய அரசின் காப்புரிமை பெற்றுள்ளேன். எனது கண்டுபிடிப்பிற்கு, இதுவரை வேளாண் துறை மற்றும் பல்வேறு நிலைகளில், ஏழு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நேரடியாக என்னை அழைத்து பாராட்டி கவுரவப்படுத்தினார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, வேளாண் ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தியதால், புதிய ரக சவுக்கு "ரங்கசாமி சவுக்கு' என பெயர் வைத்தேன். பத்மஸ்ரீ விருது பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

3 அல்லது 4 வீரர்களுக்கு இதுவே கடைசி டெஸ்ட்...

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மூன்று அல்லது நான்கு வீரர்களுக்கு இந்தப் போட்டியே கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று கூறியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். இரண்டாவது தொடர்ச்சியான வெளிநாட்டு மண்ணில் ஒயிட்வாஷ் - என அனைத்து போட்டிகளிலும் மோசமான தோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது. அதிலும், அடிலெய்டில் இந்திய அணி மோதும் இந்தப் போட்டி மூன்று நான்கு வீரர்களுக்கு கடைசி போட்டியாக இருக்கும். இனி அடுத்த டெஸ்ட் போட்டிகளுக்கான கால அட்டவணை ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் உள்ளது. இப்போது சீனியர் வீரர்கள் விடைபெற வேண்டும். விராட் கோலி போன்ற இளம் வீரர்களை அதற்குள் தயார் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.


ஓய்வு பெறுகிறார் ராகுல் திராவிட்!
வெள்ளிக்கிழமை இரவுடன் இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் திராவிடின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. 39 வயதான அவர், அடிலெய்ட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். அவர் ஏற்கெனவே ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். மற்ற பேட்ஸ்மேன்களை விட ராகுல் திராவிட்டுக்கு இது ஒரு சோதனைக் காலமாகவே அமைந்துவிட்டது. ஆஸ்திரேலியாவுடனான 4 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து அவர் மொத்தம் 194 ரன்களே எடுத்தார். அதுவும் சராசரியாக 24.25 ரன்கள். இது அவருடைய டெஸ்ட் போட்டிகள் வாழ்க்கையில் மிக மோசமான சுற்றுப் பயணமாக அமைந்துவிட்டது. இந்திய அணியின் சார்பில், டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் எடுத்தவர் பட்டியலில் சர்வதேச அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ள ராகுல் திராவிட், 13,288 ரன்கள் குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கள் 15,470 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
ராகுல் திராவிட் இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 270 ரன்கள் இவர் அதிகபட்சமாக எடுத்த ரன்கள். சராசரி 52.31
மேலும், 210 கேட்சுகள் என்ற அதிகபட்ச கேட்சுகளைப் பிடித்துள்ளார். இதுவரை 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.
1996ல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 2012ல் அடிலெய்ட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நிறைவு செய்கிறார். 2005ல் இருந்து 2007 வரை இந்திய அணியில் கேப்டனாக இருந்தவர் இவர்.

நமது நாட்டிலேயே மின் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படுகிறார்கள் இலங்கைக்கு மின்சாரம் தருவது எந்தவிதத்தில் நியாயம்?


நமக்கே மின் பற்றாக்குறை உள்ளது. மின்சாரம் இன்றி நாமே தவிக்கும் போது இலங்கைக்கு மின்சாரம் தருவது எந்தவிதத்தில் நியாயம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கார்கில் போரில் இறந்தவர்களுக்கு மத்திய அரசு பல உதவிகளை செய்தது. ஆனால் நமது நாட்டு தமிழ் மக்கள் இலங்கையில் இறந்தபோது மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. குஜராத்தில் பூகம்பம், ஆந்திராவில் வெள்ளம் என்றவுடன் ஓடிச் சென்று உதவும் மத்திய அரசு கடலூர் தானே புயலால் சின்னாபின்னமாகி கிடந்ததை கண்டுகொள்ளவில்லை. இந்தியா ஒரு பேரரசு. ஆனால் சிறிய நாடான இலங்கைக்கு பயந்து நடுங்குவது ஏன்? மேலும் நமது நாட்டிலேயே மின் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படுகிறார்கள். அப்படி இருக்க இலங்கைக்கு மின்சாரம் தருவது எந்தவிதத்தில் நியாயம்? மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு சென்றார். போய்வந்ததும் இங்கே தமிழக மீனவர்கள் மீது இலங்கைக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகிறார்கள் என்றார்.

உடல் முழுக்க மனிதன் கடித்த காயங்களுடன் 2 வயது பெண் குழந்தை எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு...

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 18ஆம் தேதி வந்த 15 வயதுமிக்க இளம்பெண் ஒருவர், தனது மகள் என்று கூறி 2 வயது பெண் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். படுக்கையில் இருந்து கீழே விழுந்துவிட்டதாகவும் அந்த பெண் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையின் உடலில் மனிதர்கள் கடித்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டன. தலைப் பகுதியில் பலத்த காயம் இருந்ததாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் இப்போது அந்த குழந்தை கோமா நிலையில் உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நரம்பியல் மருத்துவர் சுமித் சின்கா, சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது மிக மோசமான கட்டத்தில் இருந்தாள். உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. தலையில் பலமான பெரிய காயம் இருந்தது. இங்கே கொண்டு வந்தபோது கோமா நிலையில் இருந்தாள். நாங்கள் சி.டி. ஸ்கேன் எடுத்துள்ளோம். மூளையில் பெரிய காயம் இருந்தது. உடனடியாக அவளுக்கு நாங்கள் ஆபரேஷன் செய்துள்ளோம் என்றார்.டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த குழந்தையை தத்தெடுத்ததாக, அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார். இளம் பெண் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். எனவே குழந்தையின் உண்மையான பெற்றோரை கண்டுபிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குழந்தையின் படத்தை பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளனர்.

புதிய அணை கட்ட கேரள அரசு சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்கவில்லை!


தேசிய பல்லுயிரினம் ஆணையம் சார்பாக 2 நாள் மாநாடு சென்னை தியாகராய நகர் ரெசிடன்சி டவர் ஓட்டலில் இன்று காலை தொடங்கியது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி ஜெயந்தி நடராஜன் தலைமை தாங்கி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளகளின் கேள்விகளுக்கு மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் பதில் அளித்தார்.
 
கேள்வி:  சாலையோரம் உள்ள மரங்களை அழிக்கிறார்களே?
 
பதில்:  மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமல் சாலையை விரிவுபடுத்த முடியாது. 4 வழிப்பாதையை 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்வதற்கும் எங்களிடம் அனுமதி பெற வேண்டும். இதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். தேவை இல்லாமல் அனுமதி தர மாட்டோம். சாலை யோரத்தில் உள்ள மரத்தின் அளவு என்ன? அடர்த்தி, உயரம் என்ன? என்பதைப் பார்த்து கவனமாகச் செயல்படுகிறோம்.  
 
கேள்வி:  முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் துறையிடம் கேரள அரசு சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதா?



பதில்:  இதுபற்றி பாராளுமன்றத்தில் கேட்கப்பட்டது. இதுவரை கேரளா அரசு அனுமதி கேட்கவில்லை என்றுதான் பாராளுமன்றத்தில் நான் கூறி இருக்கிறேன்.
 
கேள்வி:  பிளாஸ்டிக் கழிவினால் சுற்றுச்சூழல் அதிகமாகப் பாதிக்கப்படுகிறதே?  
 
பதில்:  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மக்கள் இயக்கமாக கொண்டு வரவேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை சாலை போடுவதற்கு பயன்படுத்தினால் தரமாக இருக்கும். இதுபற்றி தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தானே புயல் நிவாரண நிதி நடிகர் ரஜினிகாந்த் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ரூ.10 லட்சம் நிதி வழங்கினார்.



தமிழக புதிய அமைச்சரவை...



புதிய அமைச்சர்கள் பதவியேற்ற பிறகு, தமிழக ஆளுநர் ரோசய்யாவுடன், முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை. 

பத்ம ஸ்ரீ பெற்றிருக்கும் ந.முத்துசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...


1936ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்தவர். தமிழில் நவீன நாடகங்கள் உருவானதற்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் ந.முத்துசாமி. இதற்காக இவர் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களில் முத்துசாமி முக்கியமானவர். இவரது "கூத்துப்பட்டறை" என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்துவருகிறது. நவீன தமிழ் நாடகங்களை உலகமெங்கும் நடத்திக் காட்டிய பெருமை ந.முத்துசாமிக்கு உண்டு. "கசடதபற", "நடை" போன்ற இலக்கிய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

பார்த்ததில் பிடித்தது!

ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி 
திமுக அல்ல - தளபதி  

அப்படியா.... அப்பறம் ஏன் உங்க அப்பா ஒவ்வரு தேர்தல் 
வரும்போதும் இது தான் எனது கடைசி தேர்தல் ஆகையால் 
என்னை முதல்வர் பதவில உட்கார வையுங்கனு ஊரு ஊரா 
போய் திருவோடு எந்துனாறு..?

Kishore Kswamy 
அண்ணா கண்ட இயக்கத்தை ஆக்கிரமித்து, அதன்வழியே ஊழல் 
செய்து, ஊதிப் பெருத்து, உள்ளடி வேலைகள் செய்து திளைத்து 
உலகத் தமிழினமே 'இரண்டாம் கருணா' என எள்ளி நகையாடுகிற 
கோபாலபுரத்து சகுனி, அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக 
எந்த காங்கிரஸ் கட்சியை தமிழகத்திலிருந்து 
துடைத்தெறிவதற்கு தன் ஆயுளையே அர்ப்பணித்துப் 
போராடினாரோ, அந்த இயக்கத்தை ஸ்பெக்ட்ரம் போன்ற உலக 
மகா ஊழல்களிலிருந்து தன் ஒரு குடும்பம் தப்பிப்பதற்காக 
இப்போது காங்கிரஸ் கட்சியின் காலடியில் வைத்து சாஷ்டாங்க 
பூஜை நடத்தியும், கேட்ட தொகுதிகளை, கேட்ட எண்ணிக்கையில் 
கொடுத்தும், நிரந்தர அடிமையாகிவிட்ட இந்தக் கருணாநிதிதான், 
அன்று கச்சத் தீவு, காவிரி வழக்கு என தமிழினத்தின் 
உரிமைகளையும், உடமைகளையும் இதே காங்கிரஸ் கட்சி 
அன்று கைகாட்டிய கன்னடர்க்கும், சிங்களர்க்கும் சீட்டெழுதிக் 
கொடுத்து, அடிமைச் சேவகம் புரிந்தவரும், இந்த ஆரூரார்தான். 
இவருக்கு அண்ணாவின் பெயரைச் சொல்வதற்கு அருகதை 
துளியும் இல்லை....

top star and dasavadharam star
மிக பழமை வாய்ந்த மொழி நம் தமிழ் மொழி ...
 Erode Kathir
பள்ளிக்கூடத்துல ’ஆல்பாஸ்’னு சொன்னாலும் சொன்னாங்க, ஆனந்த விகடன்ல ’மேதை’க்கும் 36 மார்க்!
  • சில நேரங்கள்ள ஆ.விகடன புரிஞ்சிக்கவே முடியாது!

    all is end 
    தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்...
  • சொர்ணமுகி...MOVIE ONLINE


    டிசம்பர் 26 MOVIE ONLINE



    படுக்கையறை, பொருட்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஆஸ்துமா நோய் தாக்காமல் பாதுகாக்கலாம்!

    மாசடைந்த சூழலும், தூசி, அலர்ஜி, போன்றவைகளினாலும் எண்ணற்ற குழந்தைகள் ஆஸ்துமா நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அவர்கள் உபயோகிக்கும், படுக்கையறை, பொருட்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஆஸ்துமா நோய் தாக்காமல் பாதுகாக்கலாம் என்கின்றனர் குழந்தை மருத்துவர்கள்.குழந்தை பருவத்தில் ஏற்படக்கூடிய ஆஸ்துமா நோய் பரம்பரை நோயல்ல. அதிகபட்சமாக குழந்தை பருவ ஆஸ்துமா நோய் அலர்ஜியால் ஏற்படக்கூடியது. பூக்களின் மகரந்த தூள்கள், வீட்டுத்தூசு, மிருகக்கழிவு, போன்றவற்றால் இது ஏற்படுகிறது.

    இயல்பான ஆஸ்துமா மூன்று வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவை இயல்பான ஆஸ்துமா என்று குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோயெதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளை இந்த ஆஸ்துமா தாக்குகிறது. குளிர்காற்று, வீரியம் மிக்க வாசனை, புகை போன்றவற்றாலும் வைரஸ் நுண்கிருமிகள் மூலம் ஏற்படும் தொற்று நோயாலும் ஏற்படக்கூடும். சில குழந்தைகளுக்கு மூன்று வயதிற்குப் பிறகே ‘ வீசிங்’ என்னும் மூச்சுத் திணறல் ஏற்படத் தொடங்குகிறது. இது சாதாரணமாக 8 வயதிற்கு முன்பாக குணமாகிவிடும். லேசான விட்டு விட்டு ஏற்படும் ஆஸ்துமா வருடத்திற்கு 3 அல்லது 4 முறை ஏற்படும். 10 முதல் 12 வயதிற்குள் சரியாகிவிடும். நடுத்தர கடுமையான ஆஸ்துமாவில் குழந்தைகளுக்கு நோயின் அறிகுறிகள் 2 வயதிற்கு முன்னரே ஆரம்பிக்கும்.நோயின் கடுமை அதிகாமாகவும், நீடித்தும் இருக்கும். இந்நோய் முழுமையாக குணமடையாது பிற்காலத்திலும் நீடிக்கும்.

    சுத்தமான சூழல் குழந்தைகளின் படுக்கை அறையினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மெல்லியதாக இருந்தால் அதை அடிக்கடி சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். திரைச் சீலைகளுக்கு மெல்லிய துணிகளே நல்லது. ஏனெனில் மொத்தமான வேலைப்பாடுடன் இருக்கும் துணிகளில் தூசி அதிகமாய் படியும் என்பதால் அதுவே குழந்தைகளை பாதிக்கும். குழந்தைகளின் படுக்கை அறையில் உள்ள புத்தகங்கள், சுவர்களில் தொங்கும் படங்களில் தூசிகள் தங்கியிருக்க வாய்ப்புண்டு. எனவே அவற்றை ஈரமான துணி கொண்டு துடைப்பது நல்லது. வீட்டில் நாய், பூனைகள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றின் ரோமங்களினால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்பவர்கள் அருகில் போக அனுமதிக்க கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    சத்தான உணவு குழந்தைகளுக்கு சத்தான உணவு அளிக்கவேண்டும். அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பிட்ட உணவினால் அலர்ஜி ஏற்படுகிறது என்று தெரிந்தால் அவற்றை தவிர்க்கலாம் என்கின்றனர் குழந்தை மருத்துவ நிபுணர்கள். ஆஸ்துமாவை எளிதில் குணப்படுத்தி விடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூச்சுப்பயிற்சி போன்றவற்றை சிறு வயது முதலே பழக்கப்படுத்தினால் ஆஸ்துமா நோயை தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மனோ தத்துவ முறைப்படி அளிக்கப்படும் சிகிச்சையும் பலன் அளிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...