ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மூன்று அல்லது நான்கு வீரர்களுக்கு இந்தப் போட்டியே கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று கூறியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். இரண்டாவது தொடர்ச்சியான வெளிநாட்டு மண்ணில் ஒயிட்வாஷ் - என அனைத்து போட்டிகளிலும் மோசமான தோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது. அதிலும், அடிலெய்டில் இந்திய அணி மோதும் இந்தப் போட்டி மூன்று நான்கு வீரர்களுக்கு கடைசி போட்டியாக இருக்கும். இனி அடுத்த டெஸ்ட் போட்டிகளுக்கான கால அட்டவணை ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் உள்ளது. இப்போது சீனியர் வீரர்கள் விடைபெற வேண்டும். விராட் கோலி போன்ற இளம் வீரர்களை அதற்குள் தயார் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.
ராகுல் திராவிட் இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 270 ரன்கள் இவர் அதிகபட்சமாக எடுத்த ரன்கள். சராசரி 52.31
மேலும், 210 கேட்சுகள் என்ற அதிகபட்ச கேட்சுகளைப் பிடித்துள்ளார். இதுவரை 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.
1996ல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 2012ல் அடிலெய்ட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நிறைவு செய்கிறார். 2005ல் இருந்து 2007 வரை இந்திய அணியில் கேப்டனாக இருந்தவர் இவர்.
ஓய்வு பெறுகிறார் ராகுல் திராவிட்!
வெள்ளிக்கிழமை இரவுடன் இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் திராவிடின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. 39 வயதான அவர், அடிலெய்ட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். அவர் ஏற்கெனவே ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். மற்ற பேட்ஸ்மேன்களை விட ராகுல் திராவிட்டுக்கு இது ஒரு சோதனைக் காலமாகவே அமைந்துவிட்டது. ஆஸ்திரேலியாவுடனான 4 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து அவர் மொத்தம் 194 ரன்களே எடுத்தார். அதுவும் சராசரியாக 24.25 ரன்கள். இது அவருடைய டெஸ்ட் போட்டிகள் வாழ்க்கையில் மிக மோசமான சுற்றுப் பயணமாக அமைந்துவிட்டது. இந்திய அணியின் சார்பில், டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் எடுத்தவர் பட்டியலில் சர்வதேச அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ள ராகுல் திராவிட், 13,288 ரன்கள் குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கள் 15,470 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
No comments:
Post a Comment