ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
14 October, 2011
நினைச்சது கிடைக்கலைன்ன,கிடைச்சது காப்பாத்திக்கோ...!
எது நடந்ததோ அது நன்றாக நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்..
சினிமா கீழ்த்தரமாகவும், அசிங்கமாகவும் ஆகிவிட்டது; நான் இனி நடிக்கவே மாட்டேன்!
காதலர் தினம் படம் மூலம்
கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனாலி பிந்த்ரே. கண்ணோடு
காண்பதெல்லாம் படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்திருந்தார். இந்திப் படங்களில்
ஆர்வம் காட்டிய அவர் கடந்த 2002ம் ஆண்டு இந்தி திரைப்பட இயக்குனரும்,
நடிகருமான கோல்டிபெல்லை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு
போட்டார். கடந்த 2005ம் ஆண்டு ரன்வீர் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.அவருக்கு பட வாய்ப்புகள் வந்தபோதும் நடிக்க மறுத்துவருகிறார்.இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சோனாலியிடம் மீண்டும் நடிக்க வருவீ்ர்களா என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்,
‘’மீண்டும் நடிக்கலாம் என்று தான் இருந்தேன். ஆனால் தற்போதுள்ள
சூழ்நிலையைப் பார்த்து தான் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.முன்பு அழகை அழகாகக் காட்டினார்கள். நடிகைகளின் கவர்ச்சியும் ரசிக்கும் வகையில் இருந்தது.
ஏன் நானும் கூட கவர்ச்சியாக நடித்துள்ளேன். ஆனால் அதில் ஆபாசம் இல்லை. தற்போதுள்ள நடிகைகள் சகட்டுமேனிக்கு ஆடைகளைக் குறைத்து பார்க்க அறுவறுப்பாகவும், ஆபாசமாகவும் நடித்து சினிமாவின் தரத்தையே சீர்குலைத்துவிட்டனர். சினிமா கீழ்த்தரமாகவும், அசிங்கமாகவும் ஆகிவிட்டது. நாளுக்கு நாள் சினிமாவின் தரம் தாழ்ந்துகொண்டே தான் போகிறது. ஆகையால் நான் இனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன்’’ என்றார்.
புதிய 20 ரூபாய் நோட்டு வெளியீடு!
இந்திய ரிசர்வ் வங்கி, “எப்” ஆங்கில எழுத்தை உள்பொதிந்து அச்சடிக்கப்பட்ட புதிய ரூ.20 நோட்டுகளை வெளியிட உள்ளது ரிசர்வ் வங்கி ஆளுநர் டி.சுப்பாராவ் கையெழுத்திட்ட மகாத்மா காந்தி வரிசை
2005, நோட்டுக்களின் இரண்டு இடங்களில் உள்ள எண்கள் வரிசையில், “எப்”
எழுத்து உள்பொதிந்து அச்சடிக்கப்படும். இதைத்தவிர இந்த ரூ.20 நோட்டுக்களில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கு
முன் வெளியிடப்பட்ட ரூ.20 நோட்டுக்களும் சட்டப்படி செல்லுபடியாகும் என்று
சென்னை ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் ஜி.பி.போரா வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்
மொபைல் வீடியோவில் அதிகமாக தேடப்படும் நடிகை !
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் மொபைல்
வீடியோக்களில் உலகின் மிக அதிகமாக தேடப்படும் பிரபலமான ஒருவராக
இருக்கிறார். சமீபத்தில் வியூகிளிப் வீடியோ நிறுவனம் செப்டம்பர் மாத
அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலகளவில் முதல் 10
பிரபலங்களில் கரீனா கபூர் 4வது இடத்திலும் (இந்தியா) மற்றும் சோனக்ஷி
சின்ஹா 6வது இடத்திலும் (இந்தியா) உள்ளனர்.மேலும், இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் அஜய் தேவ்கான்
நடிப்பில் வெளியான ராஸ்கல்ஸ் படத்தில் கங்கனா ரணாவத் நீச்சல் உடையில்
வருவது, வித்யா பாலன் நடிக்கும் டர்ட்டி பிக்சர்ஸ், நடிகை ராக்கி சாவந்த்
யோகா குரு பாபா ராம்தேவை திருமண செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தது ஆகியவை
பிரபலமாக பார்க்கப்பட்டது என வெளியிட்டுள்ளது.
உலகளவில், ஆப்பிள்
ஐ-போன், பிளாக் பெர்ரி, நோக்கியா செல்போன்கள் உள்ளிட்ட 10 மொபைல்
சாதனங்களின் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என அந்நிறுவனம்
தெரிவித்துள்ளளது.
இந்த வார ராசி பலன் (14-10-11 முதல் 20-10-11 வரை)
மேஷம்: பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும்
காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். மனம்
குதூகலமாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
பயணங்களால் நன்மை உண்டு. பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக
நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். கணவரை அனுசரித்துச்
செல்வீர்கள். குடும்பத்தாரிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
வேலை
பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாகக்
குறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வேலை பளு அதிகரிக்கும். சக
ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.
ரிஷபம்: பொது:
முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். மனம்
தெளிவாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக
இருப்பார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். சிலர் புனிதப் பயணம்
மேற்கொள்ளக்கூடும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும்.
கணவருடன் இருந்து வந்த பிரச்சனை தீரும். உறவினர்களை அனுசரித்துச்
செல்லவும். சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. வருமானம் அதிகரிக்கும்.
வேலை
பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். வீண்
பேச்சைக் குறைப்பது நல்லது. சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்கள் பற்றி பேச
வேண்டாம். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.
மிதுனம்: பொது:
வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும்.
பண வரவுக்கு குறைவிருக்காது. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வீண்
செலவுகளை குறைத்துக் கொள்ளவும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பெண்களுக்கு:
குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை
அதிகரிக்கும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். குல தெய்வ வழிபாடு
மேற்கொள்ள திட்டமிடக்கூடும்.
வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில்
சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைத்து
மகிழக்கூடும். சக ஊழியர்கள் நட்போடு பழகுவார்கள்.
கடகம்: பொது:
குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பண வரவு நன்றாக
இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.
இந்த வாரம் சொத்துக்கள் வாங்க வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம்
நன்றாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள்.
வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.
வேலை
பார்ப்போருக்கு: வேலை பளு குறையும். சிறப்பாக செயல்பட்டு உயர்
அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களை அனுசரித்து்ச செல்லவும்.
பண வரவுக்கு குறைவிருக்காது.
சிம்மம்: பொது:
சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு
சுமாராகத் தான் இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலம்
மேம்படும். வீண் பயனங்களைத் தள்ளிப் போடவும். பெண்களுக்கு:
குடும்பம் சீராக நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி
மகிழ்வீர்கள். தடைபட்ட திருமணப் பேச்சுக்கள் தொடரும். பேச்சில் நிதானம்
தேவை.
வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை நல்லபடியாக செய்து
முடிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். பண வரவு
நன்றாக இருக்கும்.
கன்னி: பொது: இன்பமான
வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு
நன்றாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மனம்
உற்சாகமாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வீண் பயணங்களைத்
தவிர்க்கவும். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். கணவன்
மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப
நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். உடல் நலம் நன்றாக இருக்கும்.
வேலை
பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். வேலைகளை
சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைத்து
மகிழ்வீர்கள்.
துலாம்: பொது: அனுகூலமான
வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பண வரவு சீராக
இருக்கும். பயணங்களால் நன்மை உண்டு. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம்
நன்றாக நடக்கும். பண வரவு அதிகரிக்கும். உங்கள் கோரிக்கைகளை குடும்பத்தார்
ஏற்றுக்கொள்வார்கள். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.
வேலை
பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கும் வேலைகளை
உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும்
ஒப்படைக்க வேண்டாம்.
விருச்சிகம்: பொது:
நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். மனக் கவலைகள்
மாறும். பண வரவு அதிகரிக்கும். சமுதாயத்தில் செல்வாக்கு உயரும்.
ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். பெண்களு்ககு:
குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை
அதிகரிக்கும். தாய்வழி உறவுகள் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில்
கலந்து கொண்டு மகிழ்வீர்கள். பேச்சில் நிதானம் தேவை.
வேலை
பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உயர்
அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு இடமாற்றம்
கிடைக்கலாம். எதிர்பார்த்த கடன்தொகை கிடைத்து மகிழ்வீர்கள்.
தனுசு: பொது:
ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பண வரவு
நன்றாக இருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். யாருக்கும் ஜாமீன்
கையெழுத்திடவோ, வாக்கு கொடுக்கவோ வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம்
நன்றாக நடக்கும். வருமானம் அதிகரிக்கும். மங்கல நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி
மேற்கொள்ளக்கூடும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீண்
வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில்
சுமூகமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால்
உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மகரம்: பொது:
மிதமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்படச் செய்து முடிப்பீர்கள். பண
வரவு நன்றாக இருக்கும். சேமிப்பில் கவனம் தேவை. நெருங்கிய உறவினர்களால்
தொல்லை உண்டு. உடல் நலனில் கவனம் தேவை.
பெண்களுக்கு: குடும்பம்
சீராக நடக்கும். கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை நன்றாக இருக்கும்.
உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகள் நலனில்
கவனம் செலுத்தவும்.
வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும்.
இருப்பினும் சக ஊழியர்களை நம்பி உங்களை வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். பணி
நிமித்த பயணங்கள் மேற்கொள்ளக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பதவி மாற்றம்
கிடைக்கலாம்.
கும்பம்: பொது: சாதகமான வாரம்.
எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும்.
நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்கள் அன்புடன் பழகுவார்கள்.
பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.பெண்களுக்கு: குடும்பம்
மகிழ்ச்சிகரமாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். புதிய
ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்தி
மகிழக்கூடும்.
வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். உயர்
அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. உங்கள்
வேலைகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம்.
மீனம்: பொது:
இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண
வரவு நன்றாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. நண்பர்கள் ஆதரவாக
இருப்பார்கள். பயணங்களால் நன்மை கிடைக்காது. பெண்களுக்கு: குடும்பம்
நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகள்
நலனில் கவனம் செல்லும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். பேச்சில்
நிதானம் தேவை.
வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சிறப்பாக
செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச
வேண்டாம். பொறுப்புகள் அதிகரிக்கும்.
இதே நாள்...
கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட்...?
மாணவர்களின் ஆராய்ச்சித் திறன்களை வளர்ப்பதற்காக திட்டமிடப்பட்ட ப்ராஜெக்ட் பணிகள், சடங்குகளாக மாறிவிட்டன. கல்லூரி மற்றும் பல்கலைப்
படிப்புகளில் செய்யப்படும் மாணவர்களின் ப்ராஜெக்ட் மற்றும் ஆராய்ச்சிப்
பணிகள், பெரும்பாலும் பிறரின் பணிகளை காப்பியடிப்பதாக உள்ளன என்ற புகார்கள்
சில வருடங்களாகவே அதிகளவில் வந்து கொண்டுள்ளன. மதிப்பெண்களைப் பெறுவதற்கான
ஒரு கட்டாய செயல்முறையாகவே இதனை மாணவர்கள் கருதுகிறார்கள்.
இணையதளங்களிலிருந்து எடுப்பதும், ஒரே தலைப்பில் ஏற்கனவே வேறு சிலர்
செய்ததை பின்பற்றுவதும், நண்பர்களின் ப்ராஜெக்ட் பணியை காப்பியடிப்பதும்
இன்று பரவலாக நடைபெறும் விஷயங்களாகி விட்டன. இத்தகைய விஷயங்களை எளிதாக
செய்யும் மாணவர்கள், இவற்றால் வரும் பின்விளைவுகளைப் பற்றி யோசிப்பதில்லை. படிப்பிற்கு பிறகான காலகட்டத்தில், நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான
திறமையை வளர்க்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த ப்ராஜெக்ட் பணிகள்
திட்டமானது, தற்போது வெறும் சடங்காக மாறிவிட்டது. இணையதளங்களிலிருந்து
விஷயங்களை இறக்குமதி செய்து, தனது சொந்த பணிபோல்(தேவையான காரண-காரியங்கள்
இல்லாமலேயே) சமர்ப்பிக்கும் போக்கு மாணவர்களிடம் அதிகரித்து விட்டது.
பரீட்சையில் காப்பியடிப்பதற்கும், இதற்கும் எந்த வித்தியாசமுமில்லை என்று
கல்வியாளர்கள் இதனைக் கூறுகின்றனர்.
மேலும், ப்ராஜெக்ட் பணியின் முடிவில் இணைக்கப்பட வேண்டிய
விவரக்குறிப்புகள்(Bibliography) விஷயத்தில், பல மாணவர்கள் அலட்சியமாகவே
இருக்கிறார்கள். மாணவர்களின் ஆராய்ச்சித் திறன்களை வளர்ப்பதற்காக திட்டமிடப்பட்ட ப்ராஜெக்ட் பணிகள், சடங்குகளாக மாறிவிட்டன.
கல்லூரி மற்றும் பல்கலைப்
படிப்புகளில் செய்யப்படும் மாணவர்களின் ப்ராஜெக்ட் மற்றும் ஆராய்ச்சிப்
பணிகள், பெரும்பாலும் பிறரின் பணிகளை காப்பியடிப்பதாக உள்ளன என்ற புகார்கள்
சில வருடங்களாகவே அதிகளவில் வந்து கொண்டுள்ளன. மதிப்பெண்களைப் பெறுவதற்கான
ஒரு கட்டாய செயல்முறையாகவே இதனை மாணவர்கள் கருதுகிறார்கள்.
இணையதளங்களிலிருந்து எடுப்பதும், ஒரே தலைப்பில் ஏற்கனவே வேறு சிலர்
செய்ததை பின்பற்றுவதும், நண்பர்களின் ப்ராஜெக்ட் பணியை காப்பியடிப்பதும்
இன்று பரவலாக நடைபெறும் விஷயங்களாகி விட்டன. இத்தகைய விஷயங்களை எளிதாக
செய்யும் மாணவர்கள், இவற்றால் வரும் பின்விளைவுகளைப் பற்றி யோசிப்பதில்லை.
படிப்பிற்கு பிறகான காலகட்டத்தில், நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான
திறமையை வளர்க்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த ப்ராஜெக்ட் பணிகள்
திட்டமானது, தற்போது வெறும் சடங்காக மாறிவிட்டது. இணையதளங்களிலிருந்து
விஷயங்களை இறக்குமதி செய்து, தனது சொந்த பணிபோல்(தேவையான காரண-காரியங்கள்
இல்லாமலேயே) சமர்ப்பிக்கும் போக்கு மாணவர்களிடம் அதிகரித்து விட்டது.
பரீட்சையில் காப்பியடிப்பதற்கும், இதற்கும் எந்த வித்தியாசமுமில்லை என்று
கல்வியாளர்கள் இதனைக் கூறுகின்றனர். மேலும், ப்ராஜெக்ட் பணியின் முடிவில் இணைக்கப்பட வேண்டிய
விவரக்குறிப்புகள்(Bibliography) விஷயத்தில், பல மாணவர்கள் அலட்சியமாகவே
இருக்கிறார்கள்.எனவே, மாணவர்கள், ப்ராஜெக்ட் பணிகளை தங்களின் எதிர்கால வாழ்விற்கான
திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகக் கருதி, சரியான முறையில்,
கடின முயற்சியெடுத்து, சுயமாக சிந்தித்து செய்ய வேண்டும். ப்ராஜெக்ட்
கண்காணிப்பாளர்களும், தங்களது பணியின் புனிதம் கருதி முறையாக செயல்பட
வேண்டும்.
2ஜி' ஊழலை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது சுப்ரீம் கோர்ட்!
ஏல முறை மூலம், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, பிரதமர்
மன்மோகன் சிங், கடிதம் வாயிலாக தெரிவித்த யோசனை, புறக்கணிக்கப்பட்டது ஏன்?
பிரதமர் எழுதிய கடிதத்தின் மீது, உரிய நேரத்தில் நடவடிக்கை
எடுக்கப்பட்டிருந்தால், இந்த ஊழலை தடுத்திருக்கலாமே' என, மத்திய அரசிடம்,
சுப்ரீம் கோர்ட் நேற்று கேள்வி எழுப்பியது. "2ஜி' ஸ்பெக்ட்ரம்
ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்த வழக்கை, சுப்ரீம் கோர்ட் கண்காணித்து
வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் கோயங்கா, சஞ்சய்
சந்திரா ஆகியோரின் ஜாமின் மனுக்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்
ஜி.எஸ்.சிங்வி, எச்.எல்.டாட்டு ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன், நேற்று
விசாரணைக்கு வந்தன.
அப்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில்,
மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து, நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை
எழுப்பினர். நீதிபதிகள் தெரிவித்ததாவது: சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள
குற்றப்பத்திரிகையில், 2007 நவம்பர் 2ம் தேதி மிக முக்கிய இடம்
பெற்றுள்ளது. இந்த தேதியைப் பற்றி அனைவருக்கும் தெரியும்; சி.பி.ஐ.,க்கும்
தெரியும். ஏலத்தின் மூலம் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என,
தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அந்த நாளில் கடிதம்
எழுதியுள்ளார். ஆனால், பிரதமரின் ஆலோசனையை அப்போதைய தொலைத்தொடர்புத் துறை
அமைச்சர் ஏற்க மறுத்துள்ளார். நிதி அமைச்சகமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமரின்
ஆலோசனையைப் புறக்கணித்து, ஏல முறையில் இல்லாமல், முதலில் வந்தவர்களுக்கு
முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அப்போதே, உரிய நேரத்தில் இதுகுறித்து நடவடிக்கை எடுத்திருந்தால்,
ஸ்பெக்ட்ரம் ஊழல் நடக்காமல் தடுத்திருக்க முடியும். அரசு ஏன் நடவடிக்கை
எடுக்கவில்லை.
இந்த விஷயத்தில் என்ன நடக்கப் போகிறது என்பது,
அரசுக்கு அப்போது தெரியவில்லையா? 2008 ஜனவரி 9ல் நடக்கவிருந்த
தொலைத்தொடர்பு ஆணையத்தின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. ஏல முறை தொடர்பான
கொள்கையைப் பின்பற்றாமல், அப்போதைய அமைச்சர் ராஜா, "2ஜி' ஸ்பெக்ட்ரம்
ஒதுக்கீட்டுக்காக 122 அனுமதி கடிதங்களை வழங்கியுள்ளார்.
இந்த
விவகாரம் தொடர்பாக புகார் கூறப்பட்டதில் துவங்கி, கடந்த மூன்று ஆண்டுகளில்,
அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? இந்த வழக்கு தொடர்பான நடைமுறைகளை
முடிப்பதில் சி.பி.ஐ., காலதாமதம் செய்வது ஏன் என்று தெரியவில்லை. இன்னும்
எத்தனை நாட்கள் இவர்கள் (ஜாமின் கோரியவர்கள்) சிறைக் கம்பிகளுக்குள்
இருக்கப் போகின்றனர் என்பது தான் எங்கள் கேள்வி. இன்னும் விசாரணையை
துவங்கவில்லையே. இது முடிவடைவதற்கு ஏழு ஆண்டுகள் ஆகுமா? இவ்வாறு நீதிபதிகள்
கேள்வி எழுப்பினர்.
புதிய குற்றச்சாட்டு - கனிமொழி எதிர்ப்பு :
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு, டில்லி
சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,
தி.மு.க., எம்.பி., கனிமொழி, கலைஞர் "டிவி' நிர்வாகி சரத்குமார் ஆகியோர்
சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அல்தாப் அகமது கூறியதாவது: இந்த வழக்கில்,
நம்பிக்கை மோசடி என்ற புதிய குற்றச்சாட்டை, எங்கள் கட்சிக்காரர்கள் மீது
சி.பி.ஐ., சுமத்தியுள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில்,
இவர்களுக்கு எந்த பங்கும் இல்லை. எனவே, இவர்கள் மீது, நம்பிக்கை மோசடி
குற்றச்சாட்டை கூற முடியாது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் இவர்களுக்கு
எந்த தொடர்பும் இல்லாதபோதும், அரசு ஊழியர்களாக இல்லாதபோதும், இவர்களுக்கு
எதிராக இந்த குற்றச்சாட்டை கூற முடியாது.
இவ்வாறு அல்தாப் அகமது
கூறினார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சினியுக் பிலிம்ஸ்
தயாரிப்பாளர் கரீம் மொரானி, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர்
சித்தார்த் பெகுரா ஆகியோரது வழக்கறிஞர்களும் நேற்று வாதாடினர்.
கொலையில் முடியும் கள்ளக்காதல்கள்!
கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம், கேரளாவின்
சுற்றுலாத்தலமான மூணாறு, குந்தலா அணைக்கட்டின் அருகே, கழுத்தில் கயிறு
இறுக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம். யாரென அனைவரும் அதிர்ந்து நிற்க,
அருகில், புதுப்பெண்ணான மனைவி வித்யாலட்சுமி. தேனிலவு வந்த இடத்தில், யாரோ
அனந்தகிருஷ்ணனை கொன்றுவிட்டு, நகைகளை பறித்துச் சென்றதாக அவர் கூற, போலீஸ்
விசாரணையும், மொபைல் போன் குறுந்தகவல்களும் உண்மையை வெளிக்கொண்டுவந்தன.
அடுத்தடுத்து
அதிர்ச்சித் திருப்பங்கள்... திருமணமான ஏழே நாளில், அனந்தகிருஷ்ணன் கட்டிய
மஞ்சள் கயிற்றின் ஈரம் கூட காயாத நிலையில், கள்ளக்காதலன் ஆனந்துடன்
சேர்ந்து, வித்யாவே கணவனை கொன்றது அம்பலமானது. கடந்த 20
ஆண்டுகளுக்கு முன் வரை, அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறிக்கொண்டிருந்த
இதுபோன்ற விஷயங்கள், தற்போது, தினசரி செய்தியாக மாறிவிட்டன. கணவனுக்கு
தெரியாமல் மனைவி, மனைவிக்கு தெரியாமல் கணவன், மற்றொருவருடன் உறவு
வைத்திருப்பது, சாதாரணமாகிவிட்டது.
334 கொலைகள் : மேற்கத்திய
மோகமும், தகவல் தொழில்நுட்பக் கலாசாரமும் தமிழகத்தில் ஊடுருவத்
துவங்கியபோதே, நாகரிகம் என்பதற்கான அடிப்படை விதிகளும் மாறிவிட்டன. இந்த
வரிசையில், கள்ளக்காதலும் புதிய கலாசாரமாகிவிட்டது. ஆண், பெண் நட்பில்,
உடல் ரீதியான ஈர்ப்பு, பிரதான இடம் பிடித்துவிட்டது. வீட்டில் கணவன்,
மனைவியின் தேவைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பூர்த்தியாகாதபோது
புதிய துணையைத் தேடுகின்றனர். இந்த விவகாரம் பழைய துணைக்கு தெரியாதவரை
பிரச்னை ஏற்படுவதில்லை. தெரிந்துவிட்டால், ஆண், பெண் யாராக இருந்தாலும்,
கண்டிப்பவரை, "காலி செய்யும்' அளவிற்கு துணிந்து விடுகின்றனர். கடந்தாண்டு
மட்டும், 334 கொலைகள் நடந்துள்ளன.
கடந்த 2008, 2009, 2010 ஆகிய
மூன்று ஆண்டுகளில் 143 ஆண்களும், 120 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆண்கள்
கொல்லப்பட்ட சம்பவத்தில், அவர்களது மனைவிமார்கள் பெரும்பாலும்
சம்பந்தப்பட்டுள்ளனர். காதலில் பல வகைகள் இருப்பதைப் போல், கள்ளக்காதலிலும் மூன்று, நான்கு பிரதான வகைகள் உள்ளன.
கவனத்தில்
வராத மனைவியர் : முதல் வகைக்கு பலியாகுபவர்கள், பணமே பிரதானமாகக் கொண்ட
ஆண்கள். இவர்களுக்கு, மனைவியிடம் காதலைக் காட்டுவதற்கு கூட நேரம்
இருப்பதில்லை. இத்தகைய கணவன்மார்களின் மனைவிகளுக்கு, பக்கத்து
வீட்டுக்காரனின், "ஹலோ! சவுக்கியமா?' என்ற குசல விசாரிப்பு கூட, மிகப்
பெரிய குதூகலத்தைக் கொடுத்துவிடுகிறது. குசல விசாரிப்பு, "குஜால்' வரை
சென்றுவிடுகிறது. இத்தகைய பெண்களுக்கு, தன்னோடு பழகும் ஆணின் அழகோ,
அறிவோ ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. கணவனை விட சுமாரான அழகு, அந்தஸ்து என
இருந்தாலும், தன் மீது அக்கறை காட்டுகிறான் என்ற எண்ணமே, அவர்கள் பக்கம்
இவர்களை விழ வைத்துவிடுகிறது. இது கணவன்மார்களுக்கு தெரியும் போது, முதலில்
கண்டிப்பு, அடுத்த கட்டம், கொலை. இதில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து
கணவரை கொன்றவர்கள் ஏராளம் என்கிறது போலீஸ் தரப்பு.
"மாஜி' காதல் :
அடுத்த வகை, திருமணமான பின், கணவனது நடவடிக்கைகள் பிடிக்காமல், முன்னாள்
காதலனுடன் கள்ளக்காதல் கொள்வது. பெற்றோர் விருப்பம், நிர்பந்தத்திற்காக
காதலித்தவனை விட்டு வேறு ஒருவரை கரம் பிடிக்கும் பெண்கள், சில நேரங்களில்
முன்னாள் காதலனை பார்க்கும் போது, மீண்டும் உள்ளிருக்கும் காதல்
துளிர்க்கிறது. காதலனோ, பழைய காதலியின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ள,
கள்ளத்தனமாக காதல் வளர்கிறது. இதில், பெண்கள் பெரும்பாலும் பாதுகாப்பாக
உணர்வதாக, மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது போன்ற சம்பவங்களிலும்,
சில நேரம், கட்டுப்படுத்துபவர் உயிர், "கட்டுப்பட்டுப்' போகிறது. இதற்கு,
மூணாறு ஹனிமூன் கொலை ஒரு எடுத்துக்காட்டு. இது தவிர, சென்னையில், பள்ளி
ஆசிரியை ஒருவர் முன்னாள் காதலனால், கொலை செய்யப்பட்ட சம்பவமும்,
கள்ளக்காதல் கொலை பட்டியலை உயர்த்தியது.
ஐ.டி., காதல் : ஐ.டி.,
நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள், பெரும்பாலும், வெளிமாவட்டங்களில்
இருந்து வருகின்றனர். கணவன், மனைவியை தவிர மற்ற உறவினர்களிடம் இருந்து
பிரிந்திருக்கும் நிலையில், வேலை பளுவும் கூடும் போது, குடும்ப வாழ்க்கை
பின்தங்குகிறது. இந்த நிறுவனங்களில் ஆண்கள், பெண்கள் சகஜமாக பழகுவதால், பல
தொடர்புகள் ஏற்படுகின்றன. மேலும், ஐ.டி., நிறுவனங்களை தவிர, பல வீடுகளில்
கணினி வசதி உள்ளதால், "சாட்டிங்' கலாசாரம் மூலமும் கள்ளக்காதல் விவகாரங்கள்
பெருகியுள்ளன. பல நாட்கள் சாட்டிங் மூலம் பழகும் சிலர், நேரில் பார்க்கும்
போது பிடித்துப் போனால், காதலை வளர்த்துக் கொள்கின்றனர். இதில், சிலர்
"வீடியோ சாட்டிங்' மூலம், பாலியல் செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
ஜாலிக்காக
கள்ளக்காதல் : இதைத் தவிர எதைப் பற்றியும் கவலைப்படாமல், விளையாட்டுக்காக
அல்லது செக்ஸ் தேவைக்காக மட்டும் சிலருடன் உறவு வைத்திருப்பதை, "பேஷனாக'
கருதுபவர்களும் உண்டு. திருமணமான ஆணும், பெண்ணும் தங்களுக்கு
தெரிந்தவர்களுடன் இந்த வகையில் உறவு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதில்
இருவரும், தங்களது உண்மை துணைகளுக்கு ஒருபோதும் துரோகம் செய்வதில்லை;
இரட்டை வாழ்க்கை வாழ்கின்றனர். கள்ளக்காதல் இன்று நேற்றல்ல; பல ஆண்டுகாலமாக
இருக்கிறது. முன்பு கள்ளக்காதல் பாவம், துரோகம்; இன்று எல்லாம் சகஜம். "டிவி' தொடர்களும் ஒரு காரணம் : கள்ளக்காதல் சம்பவங்கள் தொடர்பாக, மனநல நிபுணர் நம்பி கூறியதாவது:
கிராமங்களில்
அரசல் புரசலான விஷயங்கள், நகர்ப்புறத்தின் வளர்ச்சியால் தற்போது
அதிகரித்துள்ளது. நகரமயமாதல், தொழில் மயமாதல் போன்ற காரணங்களால்,
தொடர்புக்கான வசதிகள் அதிகரித்துள்ளன. நகர்ப்புறத்தில், அடுத்த வீட்டில்
யார் இருக்கின்றனர். அந்த வீட்டிற்கு யார் வந்து செல்கின்றனர் என்பதே
பலருக்கு தெரியாது. இதனால், ஆணோ, பெண்ணோ தவறு செய்வதற்கு வாய்ப்புகள்
அதிகரித்து விட்டன.
தாம்பத்ய வாழ்க்கையில் ஏமாற்றம் அதிகரிக்கும்
போதும், கணவன், மனைவிக்கிடையில் ஒற்றுமையின்மை அதிகரிக்கும் போதும், பிறரது
தொடர்புக்கான வாய்ப்புகள் அதிகரித்துவிடுகிறது. ஏமாற்றம், விரக்தியில்,
தேடுதல் உணர்வும் அதிகரிக்கிறது. இதை, ஊடகங்களும் அதிகளவில்
ஊக்குவிக்கின்றன. "டிவி' சீரியல்கள் இது போன்ற விஷயங்களை
நியாயப்படுத்துவதுடன், இப்படியெல்லாம் செய்யலாம் என்று தூண்டுகின்றன.
கணவன்மார்களிடம் இருக்கும் குடிப்பழக்கம், பெண்களிடம் இருக்கும் அறியாமை
ஆகியவை, இருதரப்பையும் அரவணைப்பை தேடச் செய்கிறது.
சிங்கப்பூரில்,
தற்கொலை சம்பவங்கள் அதிகரித்த போது, தற்கொலை செய்திகள் வெளியிடக் கூடாது
என்று ஊடகங்களுக்கு மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தடைக்குப்
பின், தற்கொலை சம்பவங்களே குறைந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
டாக்டர்கள் சிலரும், இது போன்ற கள்ளத்தொடர்பு விஷயங்களை தவறானதில்லை என்று
நியாயப்படுத்துகின்றனர். இதை சட்ட விரோதமான உறவு என்று அவர்களுக்கு புரிய
வைக்க வேண்டும். இவ்வாறு நம்பி கூறினார்.
ஒழுக்கம் தான் ஒரே வழி? :
இந்த சம்பவங்களில் நடவடிக்கை குறித்து, பெயர் வெளியிட விரும்பாத போலீஸ்
அதிகாரி ஒருவர் கூறியதாவது: குடும்ப நல மையங்களில் முதலில், இது தவறு என்று
கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. மீறி தவறு செய்யும் போதும், புகார் வரும்
போதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விஷயத்தில், தனி மனித ஒழுக்கம்
என்பது முக்கியம். அனைத்து மதங்களிலும், இந்த விஷயம் தவறு என்பது
உணர்த்தப்படுகிறது. அதற்கான தண்டனையும் அளிக்கப்படுகிறது. ஆனாலும், யாரும்
அவற்றை மதிப்பதில்லை.
இந்த விஷயங்களுக்கு ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப
சாதனங்கள் பெரிதும் உதவுகின்றன. சமூகத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம்
கிடைக்காமல் போய்விடும் என்று பயப்படுபவர்கள் மட்டுமே, இந்த விஷயத்தில்
சற்று தள்ளி நிற்கின்றனர். கலாசார சீரழிவுக்கு, இந்த விஷயம் மிகப்பெரிய
எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் கூறினார்.
மூன்றாண்டுகளில் அதிகளவில் கள்ளக்காதல் கொலை நடந்த நகரங்கள்:
1. தர்மபுரி -38
2.கிருஷ்ணகிரி-27
3.நாகப்பட்டினம்-23
4.வேலூர்-20
5.தேனி-14. இந்த ஐந்து பகுதிகளும் பொருளாதாரம், கல்வியில் பின்தங்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய சம்பவங்கள்:
* 2006 ஜூன்: தேனிலவுக்காக மூணாறு சென்ற போது, மனைவி வித்யாலட்சுமியின் ஏற்பாட்டின்படி, கணவன் அனந்தகிருஷ்ணன் கொல்லப்பட்டது.
* 2010 ஜூலை: தண்டையார்பேட்டையில், பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த நடுநிலைப் பள்ளி ஆசிரியை, முன்னாள் காதலனால் கொல்லப்பட்டது.
*
2010 ஜூலை: தன் வயிற்றில் வளர்ந்த கருவை கலைக்கச் செய்ததற்காக,
கள்ளக்காதலன் ஜெயக்குமாரின் மகன் ஆதித்யாவை, காதலி பூவரசி கொன்று,
சூட்கேசில் வீசியது.
*2011- சார்லஸ் என்பவர், நண்பனின் மனைவியுடன் கொண்டிருந்த கள்ளத் தொடர்பு காரணமாக கொலையுண்டது.
* 2011 பிப்ரவரி- சிந்தாதிரிப்பேட்டையில் சிரஞ்சீவி என்பவர் மனைவி, கணவனின் கள்ளத்தொடர்பை கண்டிப்பதற்காக தீக்குளித்தது.
*
2011 செப்டம்பர்- சூளைமேட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கணவன் மற்றும்
குழந்தைகளை விட்டு, காதலனுடன் சென்று, மூன்று மாதம் கழித்து திரும்பி
வந்தது.
பார்வையை பாதுகாக்க கண் அழுத்தத்தை கவனிங்க!
மன அழுத்தத்தினால் உடல்நலம் பாதிக்கப்படுவது இயற்கை. ஆனால் கண்ணில்
ஏற்படும் கண் அழுத்தத்தினால் பார்வை நரம்பு பாதிக்கப்படும் அபாயம் உண்டு.
இப்பிரச்சினைக்கு தொடக்கத்திலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை இழப்பை
சரி செய்வது கடினம் என்கின்றனர் மருத்துவர்கள்.
கண் பரிசோதனை அவசியம்: பார்வை
நரம்பை பாதித்து முற்றிலும் கண்களின் செயல்பாட்டை இழக்கச் செய்வது
குளுகோமா என்று சொல்லப்படும் கண் நீர் அழுத்த நோய். கண்ணின்
செயல்பாட்டிற்கு உதவும் திரவத்தின் அழுத்தம் அதிகரிப்பதன் காரணமாக இந்நோய்
உண்டாகிறது. இந்த திரவ அழுத்தமானது நாளடைவில் பார்வை நரம்பின் முனைகோடி
பாகங்களை செயலிழக்கச் செய்துவிடும் அபாயம் உண்டு. எனவே நாற்பது வயதுக்கு
மேல் கண்ணை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உலக அளவில் பார்வை இழப்பிற்கான முக்கிய காரணங்களில் கண்நீர் அழுத்த நோய்
மூன்றாம் இடம் வகிக்கிறது. ஏறத்தாழ 7 கோடி மக்களுக்கு இந்நோய் உள்ளதாக
கணக்கிடப்பட்டுள்ளது. இது தவிர 67 லட்சம் பேர் இருபக்க வாட்டிலும் பார்வை
இழப்பிற்கு உள்ளாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளையும் பாதிக்கும்: வயதானவர்களுக்கு
மட்டுமின்றி குழந்தைகளையும், கண்நீர் அழுத்த நோய் குறி வைக்கும்
என்கின்றனர் மருத்துவர்கள். இந்நோயை ஆரம்பத்திலேயே அறிகுறிகளைப் புரிந்து
கொண்டு சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை இழப்பை சரி செய்ய முடியாது
என்பதும் மருத்துவர்களின் எச்சரிக்கை. எனவே வந்தபின் தீர்க்க முடியாத
கண்நீர் அழுத்த நோயை வருமுன் காப்பதே நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
கண்புரைநோய்: இந்தியாவில்
கண் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரு
கோடியே இருபது லட்சம். இதில் வயதானவர்களை குறிவைத்துத் தாக்கும் கண்
நோய்களில் குளுக்கோமா எனப்படும் கண்நீர் அழுத்த நோய், சர்க்கரை நோயால்
ஏற்படும் விழித்திரை பாதிப்பு நோய் என பல உண்டு. அவற்றுள் பெரும்பாலான வயது
முதிர்ந்தவர்களை தாக்குவது காட்ராக்ட் எனப்படும் கண்புரை நோய். இதனால்
வயதானவர்களுக்கு கண் லென்சுகளின் திறன் குறைவதால் ஒளிக்கதிர்கள்
விழித்திரையை அடைவது பாதிக்கப்படுகிறது. இதனால், காட்சிகளை காணமுடியாமல்
போவதே கண்புரைநோய் எனக்கூறும் மருத்துவர்கள் இந்நோயால் பார்வைத்திறன்
முற்றிலும் பறிபோய்விடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
கண்புரை நோய்
ஏற்பட்டால், கண்களின் நீர் பைகளில் அடைப்பு உருவாகி, நீர் கசிவு
நீடிக்கும். மேலும் கண்களில் அழுக்கு போன்ற தன்மையும், தொடர்ந்து
வெளியேரும். இப்பிரச்சினைக்கு காட்ராக்ட் அறுவை சிகிச்சை முறையே சரியான
தீர்வு என்கின்றனர் மருத்துவர்கள். கண் நோய்களில் 63 சதவிகிதத்தினரை கண்
புரைநோய் தாக்கியுள்ளதாக கூறும் மருத்துவர்கள் இதற்கென காட்ராக்ட் அறுவை
சிகிச்சை பெறுபவர்கள் இரண்டு நாட்களிலேயே இயல்பு நிலையை அடையலாம் என்றும்
மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
சவுதியில் தமிழர்களுக்கு ஆபத்தில் உதவும் அமைப்பு!
சவுதி அரேபியாவில் வாழும் தமிழர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவ ஒரு அமைப்பு உருவாக்கப்படவிருக்கிறது.சவுதி
அரேபியாவில் ஏராளமான தமிழர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆபத்து காலங்களில்
உதவ ஒரு அமைப்பு உருவாக்கப்படுகிறது. இதனை சவுதி வாழ் தமிழர்கள் இணைந்து
உருவாக்குகின்றனர். சவுதி அதிலும் குறிப்பாக ஜெத்தா, மக்காவில் உள்ள
தமிழர்களுக்கு விபத்து, மரணம், சட்ட பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, ஏதாவது அவசர
உதவி தேவைப்பட்டாலோ இந்த அமைப்பின் உதவியை நாடலாம்.
இந்த
அமைப்பிற்கு உதவ விரும்புபவர்கள் பல வழிகளில் தங்களது பங்களிப்பை
செய்யலாம் என அறிவிக்கப்படுகிறது. நிதியுதவி செய்யலாம், சட்ட ஆலோசனை
உள்ளிட்டவற்றை வழங்கலாம், நேரில் வந்து உதவலாம், இல்லை போக்குவரத்திற்கு
உதவலாம். இது ஏற்கனவே உள்ள இந்திய அமைப்புகளில் இருந்து தனித்து இருக்கும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் 6 நாள்கள் லீவு!
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் 6
நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், குடிமகன்கள் மகா
கடுப்பில் உள்ளனர்.இந்த சோகத்தைத் தீர்க்க, இப்போதிலிருந்தே
கிடைத்த சரக்குகளை வாங்கி ஸ்டாக் வைக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் கடைகளில்
கூட்டம் அலைமோத ஆரம்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6,691 டாஸ்மாக்
மதுபான கடைகள் உள்ளன. சென்னையில் 482 கடைகள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக்
கடைகள் தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி திறந்து இருக்கும். காந்தி
ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் உள்பட குறிப்பிட்ட சில நாட்களில் டாஸ்மாக்
கடைகள் மூடப்பட்டு இருக்கும்.
அதேபோல், சட்டமன்ற தேர்தல்,
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்
நாட்களிலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக மூடப்படுவது வழக்கம்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்
வருகிற 17 மற்றும் 19-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை 21-ந் தேதி நடக்கிறது.
உள்ளாட்சி தேர்தலை
முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாட்கள் விடுமுறை
அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 15-ந் தேதி மாலை 5 மணி முதல் 19-ந் தேதி
மாலை 5 மணி வரையும் (5 நாட்கள்) ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் 21-ந் தேதி
அன்றும் தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு
இருக்கும்.
டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14
ஆயிரம் கோடி அளவுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. அதன்படி பார்த்தால்
மாதத்திற்கு சராசரியாக ஒன்றே கால் கோடி லாபம் கிடைக்கும். தற்போது
தொடர்ந்து 6 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் அரசுக்கு கணிசமான அளவு
வருமான இழப்பு ஏற்படும்.இருப்பினும் தேர்தலின்போது சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தயாநிதி மாறன் குடும்பத்தினர் ஏர்செல் - மேக்ஸிஸ் ஒப்பவந்தம் மூலம் ரூ 549.96 கோடி ஆதாயம் பெற்றார் என குற்றம்சாட்டியுள்ளது சிபிஐ!
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குடும்பத்தினர் ஏர்செல் - மேக்ஸிஸ்
ஒப்பவந்தம் மூலம் ரூ 549.96 கோடி ஆதாயம் பெற்றார் என குற்றம்சாட்டியுள்ளது
சிபிஐ. மேலும் ஏர்செல் தொடர்பான ஃபைலை மட்டுமே அவர் 44 நாட்கள் பார்த்து வந்ததாகவும் சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த
ஒப்பந்தம் மூலம் தயாநிதி மாறனின் அண்ணன் கலாநிதி மாறனுக்கு சொந்தமான
நிறுவனம் ரூ 550 கோடியை ஆதாயமாகப் பெற்றுள்ளது. இது ராசா - கனிமொழி மீது
சாட்டப்பட்டுள்ள ரூ.200 கோடி மோசடியை விட பெரியது என்பது
குறிப்பிடத்தக்கது.
சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல்
அறிக்கைப்படி, மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு 7 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களையும்,
அதன் துணை நிறுவனமான அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க்குக்கு அதே அளவு
லைசென்ஸ்களையும் ஒதுக்கியுள்ளார். இந்த நிறுவனம் சன் குழுமத்தில் 20 சதவீத
பங்குகளைப் பெற்றுள்ளது (பங்கு ஒன்று ரூ.80 வீதம் ).
இதே போல
அஸ்ட்ரோவில் கலாநிதி மாறன் 80 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார், ஒரு பங்கு ரூ
10 என்ற மதிப்பில். இந்த பங்கு பரிமாற்றத்தில் மட்டுமே ரூ 550 கோடியை
மாறன் சகோதரர்களின் நிறுவனங்கள் ஆதாயமாகப் பெற்றுள்ளன. இது 2ஜி
லைசென்சுக்காக மாறன் பெற்ற லஞ்சமாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
அளவுக்கதிகமான ஆஞ்சியோகிராம் சிறுநீரகத்தை பாதிக்கும்!
இதயநோய் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக ஆஞ்சியோகிராம் செய்வது
வழக்கம் ஆனால் அவசியமில்லாமல் அடிக்கடி ஆஞ்சியோகிராம் செய்து கொள்வது
சிறுநீரகத்தை பாதிக்கும் என இருதய நோய் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஆஞ்சியோகிராம் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடைமுறைகளால் அதிக அளவில்
கதிர்வீச்சுக்கு உள்ளாகி பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றும்
மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதயநோயை அறிய: திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு வலியால் துடிப்பவர்கள். ரத்தக்
குழாய்களில் உள்ள அடைப்பை கண்டறிந்து இருதய நோய் இருப்பதை உறுதிப்படுத்த
செய்யப்படும் பரிசோதனையே ஆஞ்சியோகிராம் ரத்தக்குழாயில் அயோடின் கலந்த
திரவத்தை செலுத்தி அது செல்லும் பாதையை எக்ஸ்ரே மூலம் படம் பிடித்து
அடைப்புகள் உள்ளதா என்பதை இச்சிகிச்சை மூலம் கண்டறியலாம். ஆனால்
நெஞ்சுவலியால் பாதிக்கப்படும் அனைவரும் ஆஞ்சியோகிராம் செய்துகொள்ளத்
தேவையில்லை என்கின்றனர் இதயநோய் நிபுணர்கள்.
இதயத்தில் லேசாக சுருக்
என்றாலே இதயகோளாறுதான் என்று அஞ்சுபவர்கள் பலர் உள்ளனர். நெஞ்சுவலிக்குக்
காரணம் மாரடைப்புதான் என்று நினைத்து அதை உறுதிசெய்ய ஆஞ்சியோகிராம் செய்யக்
கூறி மருத்துவர்களை வற்புறுத்துகின்றனர். ஆனால் தேவையில்லாமல்
ஆஞ்சியோகிராம் செய்துகொள்வதால் நோயாளிகளின் உடல் கதிர்வீச்சு பாதிப்புக்கு
உள்ளாவதோடு சிறு நீரக கோளாறுகளும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது!
உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில்
பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ -
0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு
நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில்
௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் கன்னட, தெலுங்கு, மராட்டிய
மக்கள் தங்களை எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும்
பயன்படுத்துகிறார்கள். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள
மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில்
30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்
பூனம் பாண்டேயின் அடுத்த அதிரடி யூடுபில் கலக்கிகொண்டு!
சிலருக்கு வாழ்க்கை இயல்பிலேயே எப்போதும் பரபரப்பாக இருக்கும். சிலரோ,
கடுமையாக முயற்சித்து எப்போதும் பரபரப்பாக வைத்துக் கொள்ள முயல்வார்கள்.
இதில் பூனம் பாண்டே 2வது ரகம் போல.
இவரை சில மாதங்களுக்கு முன்பு
வரை நிறையப் பேருக்குத் தெரியாது. ஆனால் இவர் விட்ட ஒரே ஒரு
ஸ்டேட்மென்ட்டால் உலகம் பூராவும் பரவி பாப்புலராகி விட்டார். இந்திய
கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக காட்சி தருவேன் என்று
இவர் விட்ட ஸ்டேட்மென்ட்டால் வலையுலகமே வாரிச் சுருட்டிக் கொண்டு பூனம்
பாண்டே குறித்த செய்திகளை அள்ளிக் கொடுக்க ஆரம்பித்தது.
ஆனால் தான்
சொன்னபடி பூனம் செய்யவில்லை என்பது வேறு கதை. அதற்கு பல காரணங்களை
அடுக்கிக் கொண்டு அம்பேல் என எஸ்கேப் ஆகி விட்டார் பூனம். இருப்பினும்
அத்துடன் நில்லாத அவர் தற்போது பார்ட் பார்ட்டாக தனது உடல் பாகங்களை
உலகுக்குக் காட்ட ஆரம்பித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தனது
முக்கால் கவர்ச்சிகரமான போஸ்களை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார்.
பின்னர் அவரது எடுப்பான முன்னழகுப் படங்களை உலவ விட்டார். தற்போது மேலும்
ஒரு படி முன்னேறி, குளிக்கும் காட்சி ஒன்றை வீடியோவில் வெளியிட்டு மேலும்
பரபரப்பைக் கூட்டியுள்ளார்.
தனது ட்விட்டர் தளத்தில்தான் இந்த
வீடியோவையும் இணைத்துள்ளார். 18 வயதுக்குட்பட்டவர்கள் தயவு செய்து பார்க்க
வேண்டாம் என்ற குறிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் குளியல்
அறையில்.,பாத் டப்பில் நின்றபடியும், வளைந்து நெளிந்தபடியும், ஹேன்ட் ஷவர்
மூலம் தனது உடலில் தண்ணீரை பீய்ச்சியடித்தபடியும் காட்சி தருகிறார் பூனம்.
வெள்ளை
நிறத்தில் வெறும் உள்ளாடைகளுடன் மட்டும் காட்சி தரும் பூனம் பாண்டேவின்
இந்த வீடியோ படு கவர்ச்சிகரமாக இருக்கிறது. விரைவில் பூனம் பாண்டேவின்
புதிய இணையதளம் செயல்பாட்டுக்கு வருகிறது. அதில்தான் இந்த வீடியோ மற்றும்
இதுபோன்ற வீடியோக்கள், புகைப்படங்கள் இடம் பெறவுள்ளன. இந்த குளியலறை
வீடியோவின் இறுதியில், விரைவில் இதுபோன்ற பல வீடியோக்களை எதிர்பார்த்துக்
காத்திருங்கள் என்ற அறிவிப்புடன், காட்சி முடிகிறது.
தாய்லாந்தில் நடைபெறவுள்ள திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டியில் (International Queen Competition) சென்னையைச் சேர்ந்த மலாய்க்கா பங்கேற்கிறார்!
கம்பீரமான அழகுடன் காணப்படும் மலாய்க்கா, நிச்சயம் உலக அழகி ஆவேன் என்று
நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இதுகுறித்து மலாய்க்கா சென்னையில்
செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், எனது பெயர்
மலாய்க்கா. நான் சென்னைதான். கேட்டரிங் டெக்னாலஜி படித்துள்ளேன். என்னை
எனது வீட்டில் ஒதுக்கி வைக்காமல் ஆதரித்து படிக்க வைத்து ஆளாக்கினர். எனது
குடும்பத்தினருடன்தான் நான் தங்கியுள்ளேன். இது எனக்குப் பெருமையாகவும்,
மகிழ்ச்சியாகவும் உள்ளது.
நான் கடந்த 2007ல் நடந்த மிஸ் சகோதரன்
அழகிப் போட்டியில் முதலிடம் பிடித்தேன். பிறகு மாடலிங்கில் நுழைந்தேன்.
ஆனால் சரியான வாய்ப்புகள் வரவில்லை. நான் தினசரி உடற்பயிற்சி செய்து எனது
உடல் வனப்பையும், அழகையும் பராமரித்து வருகிறேன். டயட்டில் இருக்கிறேன்.
இதனால்தான் நான் அழகாக இருக்கிறேன்.
தாய்லாந்துக்குப் போகும்
வாய்ப்பு எனக்கு வந்தபோது, அங்கு நடைபெறவுள்ள உலக அழகிப் போட்டியில்
பங்கேற்குமாறு என்னிடம் பலரும் கூறினர். இதையடுத்தே நான் அதில் பங்கேற்க
தனிப் பயிற்சி எடுத்தேன். தற்போது நவம்பர் 4ம் தேதி நடைபெறும்
இப்போட்டியில் நான் இந்தியா சார்பில் கலந்து கொள்கிறேன்.
இந்தியா
சார்பி்ல பங்கேற்க என்னைத் தேர்வு செய்துள்ள செய்தியைக் கேட்டதும் அப்படியே
பீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து எழுந்ததைப் போல உணர்ந்தேன். எனது
ஒட்டுமொத்த சமுதாயத்தின் சார்பில் நான் பங்கேற்கப் போவதை நினைத்தால்
பெருமையாக உள்ளது. இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிமிடம். எனது
திறமைக்கும் மதிப்பு கிடைத்துள்ளதை நான் உணர்கிறேன். இப்போட்டியில்
நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார் அவர்.
Subscribe to:
Posts (Atom)