|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 March, 2012

காரடையான் நோன்பு!

காரடையான் நோன்பு! சுமங்கலி பெண்கள், மாங்கல்ய பாக்கியத்திற்கும், கன்னியர்கள் சிறப்பான வாழ்க்கைத் துணை அமையவும், வரம் கோரி மகாலட்சுமியை நோக்கி வேண்டும் காரடையான் நோன்பு இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. பங்குனியை புருஷனாகவும், மாசியை பெண்ணாகவும் கொண்டு, இரண்டும் கூடும் காலத்தில், மகாலட்சுமியை நோக்கி நோன்பு இருப்பது காரடையான் நோன்பு. நோன்பின்போது பெண்கள் செய்யும் பிரார்த்தனை இதுதான்,  *உருகாத வெண்ணெய்யும், ஓரடையும் நான் செய்தேன் ஒருகாலும் என் கணவர் என்னை விட்டு பிரியாத வரம் வேண்டும். மகாலட்சுமியை நோக்கி இந்த பிரார்த்தனை நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது. இளம்பெண்கள் சிறப்பான வாழ்க்கைத் துணை வேண்டும் எனவும், நோன்பு இருக்கின்றனர். காரடையான் நோன்பை மகாலட்சுமியே இருந்ததாக ஐதீகம். காரடையான் நோன்பு நன்நாளில்தான், சாவித்திரி, கணவனின் உயிரை எமனிடமிருந்து மீட்டதாக நம்பிக்கை உள்ளது. அவரின் கணவர், மாமியார், மாமனாருக்கு உரிய கடமையைச் செய்பவர்களும், பிறந்த வீட்டிற்கு பெருமையைப் பெற்றுத்தருபவர்களும் பதிவிரதையாகின்றனர். அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது இந்தநாள். மாமியாருக்கு சேவை செய்யும் மருமகள்களுக்கான விரதம் மட்டும்மல்ல, மருமகளை தங்கள் மகளாக எண்ண வேண்டும் என்று மாமியாருக்கும் உணர்த்துகிறது இந்த விரதம்.  *கார்காலத்தில் (முதல்போகம்), விளையும் நெல்லை குத்தி, மாவாக்கி அதில் வெல்லம் அல்லது காரம், தட்டாம்பயிறு (காராமணி) சேர்த்து, காரடை தயார் செய்யப்படுகிறது. இந்த நைவேத்தியத்தின் பெயரால் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பு எனவும் அழைக்கப்படுகிறது. பெண்கள் தனது கணவர் அல்லது பெரியவர்கள் கையால் சரடு (நோன்பு கயிறு) பெற்று கட்டிக்கொள்வார்கள். இன்று காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று காலை 9.25 மணி முதல் 9.45 மணிவரை நோன்பு அனுஷ்டிக்கலாம்.  விரதமுறை: விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். மாசிக்கயிறு பாசி படியும் என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.  பலன்: காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.


இன்டர்நெட்லும் இனி டிவி பார்க்கலாம்!

இன்டர்நெட் டிவி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது இன்டல் நிறுவனம். தகவல்களையும், வீடியோக்களையும் பார்க்க பயன்படுத்தப்பட்டு வந்த இன்டர்நெட் சேவையில், இனி டிவியையும் பார்க்கலாம். இந்த இன்டர்நெட் டிவி திட்டம், கேபில் ஆப்ரேட்டர்களுக்கெல்லாம் ஒரு நெருக்கடியை உண்டு செய்யும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இது சம்மந்தமாக இன்டல் நிறுவனம் மற்ற மீடியாக்களிடம், ‘வெர்ச்சுவல் கேபில் ஆப்பரேட்டர்’ பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றது. நவீன வாழ்க்கைக்கு பழகிய அனைவரும் எந்த நேரமும் இன்டர்நெட் முன்பு தான் இருக்கின்றனர்..இனி இன்டல் நிறுவனம் முயற்சி செய்து வரும் இந்த இன்டர்நெட் டிவி சேவை வந்துவிட்டால் அனைவரும் எப்பொழுதும் இன்டர்நெட் முன்பு தான் இருப்பார்கள் என்று தான் தோன்றுகிறது. 2012-ஆம் ஆண்டு இந்த இன்டர்நெட் டிவி சேவையை இன்டல் நிறுவனம் வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 


ஐன்ஸ்டீன் பிறந்த தினம்...


 1879ம் ஆண்டு மார்ச் 14ல் ஜெர்மனியில் பிறந்த இவர், இயற்பியல் மீதுள்ள நாட்டத்தால் இயற்பியல் வல்லுனரானார். உலகப் புகழ் பெற்ற சார்புக் கோட்பாடு, பிரவுனியன் இயக்கம், ஒளி மின் விளைவை கண்டுபிடித்தது இவர் தான். இதற்காக, 1921ம் ஆண்டு கோட்பாட்டு இயற்பியலில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
E=mc2: ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்புகளில் இந்த ஆற்றல் சமன்பாடு முக்கியமானது. எந்த ஒரு பொருளும் ஓய்வு நிலையிலோ அல்லது இயங்கு நிலையிலோ இருக்கும் போது, அது குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டிருக்கும் என்பது இந்த சமன்பாடு. E=mc2 என்ற இந்த சமன்பாட்டை 1905ம் ஆண்டு வெளியிட்டார். 1905ம் ஆண்டு ஐன்ஸ்டீன் வெளியிட்ட மூன்று ஆய்வு முடிவுகளின் நூற்றாண்டு நிறைவை குறிக்கும் வகையில் 2005ம் ஆண்டு சர்வதேச இயற்பியல் ஆண்டாக கொண்டாடப்பட்டது.

பேச்சுகளும், சர்ச்சைகளும்: ஐன்ஸ்டீன் சிறந்த பேச்சாளராகவும், அவரது பேச்சு பல தரப்பினரிடையே எதிர்ப்பை கிளப்பும் வகையிலும் இருக்கும். ""பிரபஞ்சத்தை படைத்ததில் கடவுளுக்கு மாற்று ஏதேனும் உண்டா?'', ""மூன்றாம் உலகப் போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என எனக்கு தெரியாது. ஆனால் நான்காம் உலகப் போரில் கம்புகளும், கற்களும் தான் பயன்படுத்தப்படும்'' என இவர் கூறிய வாக்கியங்கள் மத குருமார்கள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம் பெரும் எதிர்ப்பை கிளப்பியது.

மரணப் படுக்கையிலும் ஆய்வு: ஐன்ஸ்டீன், மரணப்படுக்கையில் இருக்கும் போதும், மனதில் ஏதாவது கணித - இயற்பியல் தொடர்புடைய சமன்பாட்டை சிந்தித்து கொண்டே இருந்தாராம். இவரது மரணத்திற்கு பின், தாமஸ் ஹார்வி என்ற ஆய்வாளர் இவருடைய மூளையை ஆய்விற்காக எடுத்து வைத்துக் கொண்டதாகவும், அது இன்று வரை அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் மருத்துவமனை பாத்தாலஜி (நோயியல்) பிரிவில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. இயற்பியல் மட்டுமல்லாமல், அறிவியலில் இவர் ஆற்றிய பங்கை சிறப்பிக்கும் வகையில் சென்ற நூற்றாண்டின் சிறந்த மனிதர் என "டைம்ஸ்' நாளிதழ் இவருக்கு பட்டம் அளித்தது. இவர் 1955ம் ஆண்டு ஏப்ரல் 18ல் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் எனும் இடத்தில் மரணமடைந்தார்.

இதே நாள்...


  •  இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்(1879)
  •  ஜெர்மன் தத்துவியலாளர் கார்ல் மார்க்ஸ் இறந்த தினம்(1883)
  •  அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் இறந்த தினம்(1932)
  •  ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்கர் ஒருவர் முதன் முதலாக பயணித்தார்(1995)

அதே அழகு, அதே இளமை ஆனால் நடிக்க மாட்டேன்...

அந்தரங்கம், மீண்டும் கோகிலா, ஜானி, முந்தானை முடிச்சு, மாந்தோப்பு கிளியே உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர், தீபா. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் கவர்ச்சி நாயகியாகவும், ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வலம் வந்தவர். இவர், இப்போது பாட்டியாகி விட்டார். தீபாவின் கணவர் ரெஜாய் கல்லூரி பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று விட்டார். தீபா ரெஜாய் தம்பதிக்கு ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறார். அவர் கேரளாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மானேஜராக இருக்கிறார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி பெயர், ரஞ்சனி. இவர்களுக்கு ஒரு வயதில் ரீஹான் என்ற மகன் இருக்கிறான்.

ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்த தீபா கூறியதாவது:  எனக்கு இப்போது 50 வயது ஆகிவிட்டது. திருமணமாகி 30 வருடங்கள் ஆகிவிட்டன. நான் இன்னும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதாக எல்லோரும் பாராட்டுகிறார்கள். அது இறைவன் எனக்கு அளித்த வரம்.  அந்தரங்கம்' படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானேன். கடைசியாக நான் நடித்த தமிழ் படம்,  முந்தானை முடிச்சு.' அதன்பிறகு குடும்பத்தை கவனிக்க வேண்டியிருந்ததால், நடிப்பதை நிறுத்தி விட்டேன். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கல்லூர் என்ற இடத்தில், கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். இப்போதும் எனக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு குடும்பம் முக்கியம். அதனால் இனிமேல் நடிக்க மாட்டேன். ஜனங்கள் என்னை இன்னும் ஞாபகம் வைத்திருப்பதற்காக நன்றி.

என் மகனுக்கு நடிப்பதில் ஆர்வம் இருக்கிறது. அவனை சினிமாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்திருக்கிறேன். மகனைப்போல் பேரனையும் சினிமாவில் நடிக்க வைக்க நான் ஆசைப்படுகிறேன். நான் நடிகை ஆனதற்காக ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. பெருமைப்படுகிறேன். இப்போது நடிக்கவில்லை என்றாலும், தியேட்டர்களுக்குப்போய் நிறைய சினிமா பார்க்கிறேன். அங்காடித்தெரு, நாடோடிகள் ஆகிய இரண்டு தமிழ் படங்களையும் சமீபத்தில் பார்த்து ரசித்தேன். எனக்கு பிடித்த நடிகை, ஸ்ரீதேவி. என் சக கால கதாநாயகி அவர். பழைய நடிகைகள் ஷீலாவும், சாரதாவும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். தினமும் நான் பைபிள்' படிக்கிறேன். தியானம் செய்கிறேன். கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வருகிறேன். மிக சிறந்த சமூக சேவகியாக வரவேண்டும் என்று எனக்கு ஆசை. ஏழைகளுக்கும், முதியோர்களுக்கும் சேவை செய்ய விரும்புகிறேன்.'' இவ்வாறு தீபா கூறினார்.

20-ந்தேதி உலக சிட்டுக்குருவி தினம்!

சிட்டுக்குருவி இனம் மெல்ல, மெல்ல அழிந்து வருகிறது. நகரங்களில் சிட்டுக்குருவிகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. செல்போன் அலைவரிசை கோபுரங்கள் காரணமாக சிட்டுக் குருவிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் வரும் 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப் படுகிறது. சிட்டுக்குருவிகளை காப்பாற்றி முன்பு போல உலாவ விட முயற்சிகள் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் 9444049492 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

ரெயில்வே பட்ஜெட் தமிழக பயன்கள்.

2012-13 ரெயில்வே பட்ஜெட்டில் தமிழக ரெயில்வே திட்டங்கள்: 

* சென்னை பறக்கும் ரெயில் திட்டம் 2013ம் ஆண்டு செயல்பட தொடங்கும்.

* தமிழ்நாட்டிற்கு 11 புதிய ரெயில்கள் இயக்கப்படும்.

* விழுப்புரம் மயிலாடுதுறையிடையே தினசரி புதிய ரெயில்.

* சென்னை பெங்களூர் இடையே குளிர் சாதன ரெயில் சேவை.

* மன்னார்குடி திருச்சி மானாமதுரை இடையே புதிய பயணிகள் ரெயில் இயக்கப்படும்.

* சென்னை விசாகப்பட்டிணம் வாராந்திர புதிய ரெயில் இயக்கப்படும்.

* திருச்சி நெல்லையிடையே தினசரி இண்டர்சிட்டி புதிய ரெயில்.

* விழுப்புரம் காட்பாடி இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்.

* ஈரோடு கோவை வழியாக புதிய தாதர் திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ்.

* சென்னை பூரி இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ்.

* கோவையிலிருந்து அகமதாபாத், ஜோத்பூர் வழியாக பிகானிருக்கு புதிய எக்ஸ்பிரஸ்.

* மன்னார்குடி திருப்பதி வாரம் 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை.

* திருப்பதி மதுரை எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு.

* சென்னை சாலிமர் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ்.

* மங்களூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் கோவை வரை நீட்டிப்பு.

* மங்களூர் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு.

* திருச்சி நாகூர் பயணிகள் எக்ஸ்பிரஸ் நாகப்பட்டிணம் வரை நீட்டிப்பு.

* மதுரை திருப்பதி வாரம் 2 நாள் இயங்கும் எக்ஸ்பிரஸ் 3 நாட்களாக அதிகரிப்பு.

* அரக்கோணம் நந்தலூர் ரெயில் கடப்பா வரை நீட்டிப்பு.

* நிஜாமுதீன் கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் வாரம் 2 முறை இயக்கப்படும். 

neha-patel--florida-mother-sought-in-murder-of-one-year-old-son-


அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் நேகாபடேல் (30). அமெரிக்கா வாழ் இந்தியரான இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கு இஷான் என்ற ஒரு வயது மகன் இருந்தான். கடந்த பிப்ரவரி 16-ந் தேதி இவர் தனது மகன் இஷானை வீட்டில் இருந்த குளியலறை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்தார். பின்னர் அவனது உடலை 13 மணி நேரம் காரில் வைத்தப்படி சுற்றி திரிந்தார்.   அவனது, பிணத்தை யாருக்கும் தெரியாமல் வீசி எரிய முயன்றார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.  அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, “இஷானை பெற்ற பிறகு நான் உடல்ரீதியாக மிகவும் அவதிப்பட்டேன். இதனால் அவன் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது .   அதன் காரணமாக இவனை கொன்றேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.


According to Polk County Sheriff Grady Judd, Rashesh Patel, came home on Thursday to discover his wife, Neha Patel, 32, and their son missing. He tried to locate her and, at one point, was contacted by a credit card company who told him his card had been used in the Ocala area.  He drove to Ocala but was unsuccessful in finding his wife. He returned to his Polk County home and contacted authorities on Thursday evening. Early the next morning, the woman came home with the baby, Ishan, wrapped in a blanket. Rashesh took the blanket and saw the child's lifeless body.

Judd said she told her husband, "I killed him, and I'll be dead tomorrow."  After Rashesh contacted Neha's father, she ran out of the house and drove away. Judd said officers tracked Neha Patel's vehicle to Tampa International Airport.  But then she left and filled up her car at a 7-Eleven Thursday evening. Judd said the woman suffers from postpartum depression and has said in the past that she wanted to die in the Smoky Mountains.

Just before 7:30 Friday morning, Polk County officials notified airport police that Neha Patel, 32, had used her credit card at the TIA economy parking garage. Patel's vehicle was seen driving into the airport's long-term parking garage just after 1:00 p.m.  The woman was apprehended and taken to an airport holding cell. Polk County detectives interviewed Patel at the airport, and she will be booked into the Hillsborough County Jail. Judd said the baby had suffered "significant trauma."    He said the mother faces a first-degree murder charge. "I can't understand how anyone could murder a baby like this," Judd said.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...