|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 October, 2012

halloween வரை பொறுப்போம்.

தாண்டவம் போகலாம்னு சொன்ன hotel transylvania கூட்டிட்டு போற! மாற்றான் பார்க்கலாம்ன  Sinister, பார்த்தோம், இப்ப அடுத்த படம் Silent Hill  கூட்டிட்டு போறிய இல்ல பிரெண்ட்டோட போகட்டான்னு கேட்குற? ஏன் இப்படி கொலைவெறி எடுத்து பேய் படமா பார்க்குறான்னு தெரியல? சரி halloween வரை பொறுப்போம்.  

அடப்பாவிங்களா?

மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை என்ற பட்டத்தை அளிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம், அடப்பாவிங்களா? உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா பராஷார், காந்தியைப் பற்றியும், அவரை தேசத் தந்தை என அழைக்கப்படுவதற்கான காரணம் குறித்தும் விவரங்களைத் தருமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்தார். அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், "மகாத்மா காந்திக்கு அதுபோன்ற பட்டம் எதுவும் வழங்கப்படவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து "மகாத்மாவை தேசத் தந்தை என்று முறைப்படி அறிவிக்க வேண்டும்' என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் ஐஸ்வர்யா கடிதம் எழுதினார்.


பின்னர் தனது கோரிக்கை மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மனு அளித்தார்.அந்த மனு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:மகாத்மா காந்தியை தேசத் தந்தை என குடியரசுத் தலைவர் அறிவிப்பது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனெனில், அரசியல் சாசன சட்டம் பிரிவு 18(1)-ன்படி யாருக்கும் எந்தவிதமான பட்டத்தையும் அளிக்க இயலாது. கல்வித் துறை மற்றும் ராணுவத்தைச் சார்ந்தோருக்கு மட்டுமே பட்டங்களை அளிக்க முடியும்'' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சூப் ஓன்று சுப்’ பாகிப்போனதேன்?

ஆட்டுக்கால் சூப் இங்கே ஆட்கல் சுப் என்றாகியுள்ளது.சூப் போடுவதற்காக எடுக்கப்பட்ட ஆட்டின் காலில் மிஞ்சிய பகுதியை என்ன செய்வது என்று தெரியாமல் ஆ பக்கத்தில் போட்டுவிட்டார்கள் போலும்,அப்ப கால் என்ற வார்த்தைக்கு வரவேண்டிய துணைக்கால் இல்லாமல் கல் என்று இருக்கிறதே அதற்கு காரணம்,அந்த காலில்தான் முதல் நாள் சூப் போட்டு இருப்பார்களோ!! அது சரி சூப் ஏன்? சுப் என்றாகியிருக்கிறது ,சரியில்லை என்றால் சப் என்றுதானே சூப் மாறும், இங்கே சுப் என்று ஏன் மாறியதோ தெரியவில்லை?

பூமாலை தொடங்கி ஐபிஎல் டீம் வரை...

வீடியோ பத்திரிக்கை பூமாலை  மாறன் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் கலாநிதி மாறன், தயாநிதிமாறன் சகோதரர்கள் 18 வருடங்களுக்கு முன்பு பூமாலை வீடியோ பத்திரிக்கை ஆரம்பித்தனர். அதில் சினிமா செய்திகள், இயக்குநர் மற்றும் நடிகர் நடிகை பேட்டிகள் போன்றவைகளையும் திரைப்பட பூஜை போன்றவைகள் இடம்பெற்றன. இருந்தாலும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
சன் டிவி! தூர்தர்சன் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து தொடங்கப்பட்டது சன் டிவி. இந்த வேரிலிருந்து கிட்டத்தட்ட கேடிவி,சன்நியூஸ், சன் மியூசிக், ஆதித்யா என தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் 30 சேனல்களை வரை தன் கைவசம் வைத்துள்ளது சன் குழுமம்.
பண்பலை வானொலி  சூரியன் எப்.எம் என்ற பண்பலை வானொலியை தொடங்கி பல்வேறு இந்திய மொழிகளில் ஒலிபரப்புகிறது.
பத்திரிக்கை துறையில் சன் குழுமம்  தினகரன் என்ற காலை நாளிதழும், தமிழ்முரசு என்ற மாலை நாளிதழும் சன் குழுமத்தின் வசம்.  குங்குமம் வார இதழ் சன் குழுமத்திடம் இருந்து வெளியாகும் வார இதழாகும்.
எஸ்.சி.வி, சன் டைரக்ட்  ‘எஸ்.சி.வி' எனப்படும் சுமங்கலி கேபிள் விசனை கையில் வைத்துள்ள சன் குழுமம் இல்லங்களில் நேரடியாக தனது நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ‘சன் டைரக்ட்' என்ற டிடிஎச் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவையை 2005ம் ஆண்டு முதல் தொடங்கியது.
திரைப்படத்துறையில் சன் குழுமம்  ஊடகத்துறையில் கோலோச்சிய சன் குழுமம் திரைப்படத்துறையில் சன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி பல திரைப்படங்களை விநியோகம் செய்தது முதன் முறையாக ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தை தயாரித்தது.
ஸ்பைஸ் ஜெட் விமானசேவை  ஊடகத்துறையில் மட்டுமே கோலோச்சிய சன் குழுமம் 2010ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் என்ற விமான நிறுவனத்தை வாங்கியது. அதுவரை உள்ளூரில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் முதன் முறையாக டில்லியில் இருந்து காட்மண்டுவுக்கு இயக்கப்பட்டது.
விளையாட்டுத்துறையில்  பெரும்பாலான சேனல்களை கைவசம் வைத்திருக்கும் சன் குழுமம்  முதன் முறையாக ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட புதிய ஐ.பி.எல் அணி deccan chargers யை வாங்கியுள்ளது.

கலாநிதி மாறனின் நிர்வாகம்  32 சேனல்கள், 45 எப்.எம் ரேடியோ, நாளிதழ், வார இதழ் என ஊடகத்துறையில் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்வதற்கு சன்குழுமத்தின் நிறுவனர் கலாநிதிமாறன் நிர்வாகத்திறமையே சான்று என்கின்றனர் நீண்ட நாட்களாக சன் குழுமத்தை சேர்ந்தவர்கள். 

We Know About Caffeine in Energy Drinks Like Monster, But What About the Other Ingredients?



பார்த்ததில் பிடித்தது



  • Anbu Raja shared Pakkir Kani's status update.


    காவல் நிலையத்தில் வைத்து நான்கு இருளர் இன பெண்கள் கற்பழிக்கப்பட்டபோது பேசப்படாத பெண்ணியம்,இன்று பாடகி சின்மயிக்காக பேசப்படுகிறது.சட்டமும் சரி சமூகமும் சரி ஒருவருக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பார்ப்பதில்லை,அவர் யார் என்பதைத்தான் பார்க்கின்றன.


    சுயசிந்தனையை முடக்குபவை எவை??

    ஒவ்வொரு மனிதனும் சுயமாக சிந்திக்கவும், சிந்தனைகளைச் செயல்படுத்தவும் ஆற்றல் படைத்தவன். எனினும், பெரும்பான்மை மக்கள் தங்களது சிந்தனைத் திறனைப் பல முக்கியமான விஷயங்களில் பயன்படுத்துவதில்லை. தங்களால் ஆய்வுக்கு உட்படுத்தாத கடவுள், மதம் போன்ற விஷயங்கள் தங்களது வாழ்வை வெகுவாகப் பாதிப்பதை உணராமலிருக்கிறார்கள். அதன் காரணமாக, மக்கள் மனங்களில்

    மூடநம்பிக்கைகள் ஆட்சி செய்கின்றன.
    அறிவிற்குப் பொருந்தாத பல சடங்குகள், சம்பிரதாயங்கள் மனித சமுதாயத்தில் கடைபிடிக்கப்படுகின்றன. மதிப்புமிக்க மனித சக்தியும், இயற்கைச் செல்வங்களும் வீணடிக்கப்படுகின்றன.

    அர்த்தமற்ற இலக்குகளுக்கான மக்கள் வாழ்வு பாழாகின்றது. ஆகவே, இது மனித சமுதாயத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, மக்களுடைய சிந்தனைத் திறனை முடக்கும் காரணிகளைக் கண்டறிவோம்.

    பொதுவாக மக்கள் காலங்காலமாக நிலவிவரும் நம்பிக்கைகளை, பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து பிரச்சனைகளின்றி வாழவே விரும்புகிறார்கள். தங்களுக்குப் பழக்கமான பழைய பாதைகளே ஆபத்தற்றவை என்று நினைக்கிறார்கள். அவற்றையே பின்பற்றுகிறார்கள். எவற்றிலும் மாற்றங்கள் செய்யப் பயப்படுகிறார்கள். இம்மனநிலை சுயசிந்தனையை முடக்கும் ஒரு சக்தியாக இருக்கிறது.

    சுயசிந்தனையை முடக்கும் மற்றொரு சக்தியாக சம்பிரதாயங்கள் இருக்கின்றன. எவ்வாறெனில், தனி நபர்கள் பல்வேறு நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் குடும்ப அங்கத்தினர்களிடமிருந்தும், சுற்றுப்புற மக்களிடமிருந்தும் கிரகித்துக் கொள்கிறார்கள். அவர்கள் காலப்போக்கில் பல விழுமியங்களுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் பாதுகாவலர்களாக மாறிவிடுகிறார்கள். அச்சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங்களும் மனிதர்களை மனதளவில் அடிமைகளாக்கி விடுகின்றன. ஆய்வு மனப்பான்மையை மழுங்கடித்து விடுகின்றன.

    நவீன போக்குவரத்து வசதிகளும், தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் பல்வேறு கலாச்சாரங்களைத் தெரிந்து கொள்ளும் நல்வாய்ப்பை மக்களுக்கு அளிக்கின்றன. ஊடகங்களின், இணையத்தின் பங்களிப்பு மிகப் பெரியது. இத்துடன் இலட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்கிறார்கள். மேலும், தற்சமயம் அதிகமான மக்கள் தொகையினர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். மாறுபட்ட கலாச்சாரத்தைப் பின்பற்றும் மக்களுடன் பழகி வாழ்கிறார்கள். இவை மக்கள் மனதில் நல்ல மாற்றங்களை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட நல்ல மனமாற்றங்கள் எதிர்பார்த்த அளவிற்கு உலகில் ஏற்படவில்லை. பழமையைக் கட்டிக் காக்கும் மனநிலைதான் பரவலாகி மேலோங்கி நிற்கிறது. முன்னோர்களிடமிருந்து சுவீகரித்த பல்வேறு நம்பிக்கைகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் அடிமைகளாக இருக்கிறார்கள்.

    இப்பழமை காக்கும் மனநிலை பரவலாக நிலவக் காரணங்கள் எவை? இதுபற்றி ஆராய்ந்தால், சமூகப் பிணைப்பு ஒரு காரணமாக உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் ஒரு சிறு கூட்டத்தின் அங்கத்தி னராக அடையாளப்படுத்திக் கொள் கிறான். அதன்மூலம் சமூகப் பாதுகாப்பை உணர்கிறான். சக சமூக அங்கத்தினர் களுடன் நட்புடன் உறவு கொண்டிருக்க விரும்புகிறான். அந்த உணர்வு மனிதனை ஒரு சிறு வட்டத்திற்குள் அடைத்து விடுகிறது. சக மனிதர்கள் விரும்பாத காரியத்தைச் செய்யும் தைரியத்தை இழந்து விடுகிறான். 
    நண்பன் வார்த்தை மாறுவதில்லை சந்தோசத்திலும் சரி துக்கத்திலும் சரி!

உப்புக்கு சயனைடா?


பஞ்சம ஜாதியினர்  தீண்டத்தகாதவர்கள் : மற்றவர்களை சார்ந்து வாழ்பவர்கள் (ஒட்டுண்ணிகள்)

சூத்திரர்கள் தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்துக்காகவும் வாழ்பவர்கள்.

வைசியர்கள் வணிகம் மூலம் தங்களுக்காகவும், தங்களோடு வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபத்தை ஏற்படுத்துபவர்கள்.

சத்திரியர்கள் தமக்கு கீழ் இருப்பவர்கள் சாப்பிட்டதற்கு பிறகு சாப்பிடுபவர்கள்.

பிராமணர்கள் தாங்கள் கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு கற்பிப்பவர்கள்”

இந்த கருத்தை ட்விட்டரில் ரீட்விட் செய்து வழிமொழிந்ததின் மூலம் தன்னுடைய சமூகப்பார்வையை அகிலத்துக்கு தெரியப்படுத்தியிருக்கிறார் சகோதரி சின்மயி. அவரது அறிக்கைகளிலேயே தொடர்ச்சியாக அவரது சமூகம் குறித்த பெருமையை நாம் கண்டு பெருமிதப்பட்டுக்கொள்ள முடிகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...