|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 October, 2012

பார்த்ததில் பிடித்தது



  • Anbu Raja shared Pakkir Kani's status update.


    காவல் நிலையத்தில் வைத்து நான்கு இருளர் இன பெண்கள் கற்பழிக்கப்பட்டபோது பேசப்படாத பெண்ணியம்,இன்று பாடகி சின்மயிக்காக பேசப்படுகிறது.சட்டமும் சரி சமூகமும் சரி ஒருவருக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பார்ப்பதில்லை,அவர் யார் என்பதைத்தான் பார்க்கின்றன.


    சுயசிந்தனையை முடக்குபவை எவை??

    ஒவ்வொரு மனிதனும் சுயமாக சிந்திக்கவும், சிந்தனைகளைச் செயல்படுத்தவும் ஆற்றல் படைத்தவன். எனினும், பெரும்பான்மை மக்கள் தங்களது சிந்தனைத் திறனைப் பல முக்கியமான விஷயங்களில் பயன்படுத்துவதில்லை. தங்களால் ஆய்வுக்கு உட்படுத்தாத கடவுள், மதம் போன்ற விஷயங்கள் தங்களது வாழ்வை வெகுவாகப் பாதிப்பதை உணராமலிருக்கிறார்கள். அதன் காரணமாக, மக்கள் மனங்களில்

    மூடநம்பிக்கைகள் ஆட்சி செய்கின்றன.
    அறிவிற்குப் பொருந்தாத பல சடங்குகள், சம்பிரதாயங்கள் மனித சமுதாயத்தில் கடைபிடிக்கப்படுகின்றன. மதிப்புமிக்க மனித சக்தியும், இயற்கைச் செல்வங்களும் வீணடிக்கப்படுகின்றன.

    அர்த்தமற்ற இலக்குகளுக்கான மக்கள் வாழ்வு பாழாகின்றது. ஆகவே, இது மனித சமுதாயத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, மக்களுடைய சிந்தனைத் திறனை முடக்கும் காரணிகளைக் கண்டறிவோம்.

    பொதுவாக மக்கள் காலங்காலமாக நிலவிவரும் நம்பிக்கைகளை, பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து பிரச்சனைகளின்றி வாழவே விரும்புகிறார்கள். தங்களுக்குப் பழக்கமான பழைய பாதைகளே ஆபத்தற்றவை என்று நினைக்கிறார்கள். அவற்றையே பின்பற்றுகிறார்கள். எவற்றிலும் மாற்றங்கள் செய்யப் பயப்படுகிறார்கள். இம்மனநிலை சுயசிந்தனையை முடக்கும் ஒரு சக்தியாக இருக்கிறது.

    சுயசிந்தனையை முடக்கும் மற்றொரு சக்தியாக சம்பிரதாயங்கள் இருக்கின்றன. எவ்வாறெனில், தனி நபர்கள் பல்வேறு நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் குடும்ப அங்கத்தினர்களிடமிருந்தும், சுற்றுப்புற மக்களிடமிருந்தும் கிரகித்துக் கொள்கிறார்கள். அவர்கள் காலப்போக்கில் பல விழுமியங்களுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் பாதுகாவலர்களாக மாறிவிடுகிறார்கள். அச்சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங்களும் மனிதர்களை மனதளவில் அடிமைகளாக்கி விடுகின்றன. ஆய்வு மனப்பான்மையை மழுங்கடித்து விடுகின்றன.

    நவீன போக்குவரத்து வசதிகளும், தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் பல்வேறு கலாச்சாரங்களைத் தெரிந்து கொள்ளும் நல்வாய்ப்பை மக்களுக்கு அளிக்கின்றன. ஊடகங்களின், இணையத்தின் பங்களிப்பு மிகப் பெரியது. இத்துடன் இலட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்கிறார்கள். மேலும், தற்சமயம் அதிகமான மக்கள் தொகையினர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். மாறுபட்ட கலாச்சாரத்தைப் பின்பற்றும் மக்களுடன் பழகி வாழ்கிறார்கள். இவை மக்கள் மனதில் நல்ல மாற்றங்களை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட நல்ல மனமாற்றங்கள் எதிர்பார்த்த அளவிற்கு உலகில் ஏற்படவில்லை. பழமையைக் கட்டிக் காக்கும் மனநிலைதான் பரவலாகி மேலோங்கி நிற்கிறது. முன்னோர்களிடமிருந்து சுவீகரித்த பல்வேறு நம்பிக்கைகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் அடிமைகளாக இருக்கிறார்கள்.

    இப்பழமை காக்கும் மனநிலை பரவலாக நிலவக் காரணங்கள் எவை? இதுபற்றி ஆராய்ந்தால், சமூகப் பிணைப்பு ஒரு காரணமாக உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் ஒரு சிறு கூட்டத்தின் அங்கத்தி னராக அடையாளப்படுத்திக் கொள் கிறான். அதன்மூலம் சமூகப் பாதுகாப்பை உணர்கிறான். சக சமூக அங்கத்தினர் களுடன் நட்புடன் உறவு கொண்டிருக்க விரும்புகிறான். அந்த உணர்வு மனிதனை ஒரு சிறு வட்டத்திற்குள் அடைத்து விடுகிறது. சக மனிதர்கள் விரும்பாத காரியத்தைச் செய்யும் தைரியத்தை இழந்து விடுகிறான். 
    நண்பன் வார்த்தை மாறுவதில்லை சந்தோசத்திலும் சரி துக்கத்திலும் சரி!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...