விஜய்சேதுபதியின் முகத்தில் பாதி முகம் புலிமுகம் மாதிரி டிசைன் செய்யப்பட்ட ‘எடக்கு’ என்ற திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் எப்போது கமிட் ஆனார்? இது பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லையே! என ரசிகர்களும் விஜய் சேதுபதிக்கு நெருக்கமானவர்களும் ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்.
’எடக்கு’ படம் பற்றி கேட்டபோது விஜய்சேதுபதி “ ’எடக்கு’ என்ற பெயரைக் கேட்டதும் எனக்கே முதலில் வியப்பாக இருந்தது. அந்தமாதிரி படத்தில் நான் நடித்ததாக நினைவே இல்லை. அதுபற்றி விசாரித்த பிறகு தான் தெரிந்தது, அது நான் 7 வருடங்களுக்கு முன்பு நடித்த கன்னடத் திரைப்படமான ’அக்கடா’ படத்தின் டப்பிங் என்று. அக்கடா படத்தில் நான் மெயின் ரோலில் நடிக்கவில்லை. படத்தில் மொத்தமே நான்கு காட்சிகளில் தான் வருவேன். என் படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையில் படம் பார்க்க வந்து, நான் நான்கே காட்சிகளில் வருவதைக் கண்டால் என் மீதான நம்பிக்கை குறைந்துவிடும். நான் அந்த படத்திற்கு தமிழில் டப்பிங் கூட பேசவில்லை. ஆனால் என்னை முன்னிலைப்படுத்தி படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.