|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 January, 2012

தேனி மாவட்டம். தமிழ் MOVIE...










பார்த்ததில் பிடித்தது!



இலங்கை தயாரிப்புகளை தமிழகத்தில் விற்க தடை!


இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை தமிழக டியுசிஎஸ் கடைகளில் விற்க வேண்டாம் என்றும், விற்பனைக்கு வைத்துள்ள இலங்கைப் பொருள்களை அகற்றிவிடுமாறும் நகர கூட்டுறவு சங்கம் உத்தரவு பிறப்பிப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு நகர கூட்டுறவுச் சங்கங்களின் மூத்த அலுவலர் சக்தி சரவணன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். "இலங்கைப் பொருள்களைப் புறக்கணிப்போம்" என்ற அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையை வழிக்குக் கொண்டுவர, அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே தீர்மானம் கொண்டுவந்தது நினைவிருக்கலாம். ஆனால் கூட்டுறவுக் கடைகளில் இலங்கை பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட, "இலங்கைப் பொருள்களைப் புறக்கணிப்போம்" குழுவினர், இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அரசு நகர கூட்டுறவுச் சங்கங்களின் கடைகளின் முன்னால் உள்ள அலுமாரிகளிலிருந்து அந்தப் பொருள்கள் அகற்றிவிடுமாறும், இனி இலங்கை தயாரிப்புகளை விற்பனைக்கு வைக்க வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கையில் உற்பத்தியாகும் பிஸ்கட், சாக்கலேட், மருந்துப் பொருள்கள் போன்றவை கடந்த இரு ஆண்டுகளாகவே தமிழகத்தில் பெரிதாக விற்பனையாகாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை...


வடகொரியா தனது நாட்டுக்குள் செல்போன்களை பயன்படுத்துவதை "போர்க் குற்றமாக" அறிவித்துள்ளது. செல்போன்களை யாராவது பயன்படுத்தினால் போர்க்குற்றவாளியாக கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அந்நாடு எச்சரித்துள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.எகிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் நீண்டகாலமாக ஆட்சி நடத்திய அதிபர்களுக்கு எதிராக நிகழ்ந்த கிளர்ச்சி வடகொரியாவில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் உள்ள வடகொரிய அரசுக்கு எதிரான அதிருப்தியாளர்களுக்கு நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை எவரும் தகவல் அனுப்பிவிடக் கூடாது என்பதற்காக இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.இதேபோல் நாட்டை விட்டு வெளியேறி தென்கொரியாவில் அடைக்கலம் கோருவோருக்கு வெளியில் இருந்து தகவல்கள் கிடைப்பதையும் தடுக்கும் நோக்கத்தில் வடகொரிய அரசு இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் அண்டை நாடான சீனாவுக்குள் அகதிகளாக செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து வடகொரிய அரசு இத்தகைய தடையை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கச்சத்தீவை மீட்போம்-முல்லைப் பெரியாறைக் காப்போம்!


முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். அதேபோல தமிழக மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இழந்த கச்சத்தீவை மீண்டும் மத்திய அரசு மீட்க வேண்டும் என்று ஆளுநர் ரோசய்யா தனது உரையில் தெரிவித்துள்ளார்.இன்று சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரையின்போது இதுகுறித்துக் கூறுகையில்,தமிழக மீனவர்கள் உரிமையைப் பாதுகாக்க பாக். ஜலசந்தியில் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும். மேலும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று, இது தொடர்பாக மத்திய அரசு இலங்கையுடம் பேச்சு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதால் தமிழக நலன்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகளை கடைப்பிடிக்குமாறு கேரள அரசை வலியுறுத்த மத்திய அரசு முயற்சி செய்யவேண்டும். நதி நீர் உரிமைகளையும் விவசாயிகளையும் பாதுகாக்க தமிழக அரசு உறுதியாக உள்ளது. புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அணை பாதுகாப்பு மசோதாவில், அணை அமைந்திருக்கும் மாநிலத்துக்குத்தான் அணையின் உரிமை என்பதற்குப் பதிலாக அணையின் பயன்பாட்டை நம்பியிக்கும் மாநிலத்தின் அணை பாதுகாப்புக் குழுவின் கட்டுப்பாட்டில் அணை இருக்க வேண்டும். இதில் அணை யாருக்கு சொந்தம் என்பதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும் என்று தெரிவித்தார். 

டெஸ்ட் தரவரிசையில் தடம்புரண்ட இந்திய வீரர்கள்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சரியாக விளையாடாமல் படுதோல்வி கண்டதன் எதிரொலியாக டெஸ்ட் தரவரிசையில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர் இந்திய வீரர்கள். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 13-வது இடத்துக்கும், ராகுல் திராவிட் 18-வது இடத்துக்கும், வி.வி.எஸ்.லட்சுமண் 23-வது இடத்துக்கும், சேவாக் 24-வது இடத்துக்கும், கம்பீர் 34-வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.ஆஸ்திரேலியத் தொடரில் சதமடித்த ஒரே இந்திய வீரரான விராட் கோலி, 17 இடங்கள் முன்னேறி 50-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களுக்குள் எந்த இந்திய வீரரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.பெüலிங்கைப் பொறுத்தவரையில் ஜாகீர்கான் 10-வது இடத்தில் உள்ளார். முதல் இருபது இடங்களுக்குள் வேறு எந்த இந்திய வீரரும் இல்லை.


அதேநேரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிராக தொடர்நாயகன் விருதை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் 7 இடங்கள் முன்னேறி இப்போது 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். பாண்டிங் 8 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தைப் பிடித்துள்ளார். இலங்கையின் சங்ககரா, தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ் ஆகியோர் பேட்டிங் தரவரிசையில் முறையே முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளனர்.ஆஸ்திரேலிய பெüலர் பீட்டர் சிடில் 2 இடங்கள் முன்னேறி இப்போது 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவருடைய அதிகபட்ச தரவரிசை இதுதான். ரியான் ஹாரிஸ் 4 இடங்கள் முன்னேறி 22-வது இடத்தையும், லியான் 43-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் பாகிஸ்தான் வீரர்களும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் முதல்முறையாக 8-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.


முதல் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 17 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் பெüலர் சயீத் அஜ்மல் 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுதான் அவரின் அதிகபட்ச தரவரிசை. 3-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தின் ஆண்டர்சன், அஜ்மலைவிட 25 புள்ளிகள் குறைவாக உள்ளார். பாகிஸ்தானின் அப்துர் ரெஹ்மான் முதல்முறையாக முதல் 10 இடங்களுக்கு முன்னேறியுள்ளார். இப்போது அவர் 9-வது இடத்தைப் பிடித்துள்ளார். பெüலிங் தரவரிசையைப் பொறுத்தவரையில் தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானின் இரு சுழற்பந்துவீச்சாளர்கள் ஒரே நேரத்தில் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இங்கிலாந்துக்கு சிக்கல்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ள இங்கிலாந்து, தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள துபையில் நடைபெறவுள்ள 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடைசி போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றிபெறும்பட்சத்தில் தரவரிசையில் இந்தியாவை நெருங்கும்.


இந்தியா தோல்வி பாகிஸ்தான் கொண்டாட்டம்.
பாகிஸ்தான் ஊடகங்களோ, இந்தியா தோல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகரும், டாக்டருமான அம்பிரீன் என்பவர் கூறுகையில், "ஆஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி கண்டுள்ளதும், பாகிஸ்தான், இங்கிலாந்தை வீழ்த்தியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. பாகிஸ்தானிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு அந்நாட்டு ஊடகங்கள் அறிவுரை கூறியிருப்பது எங்களுக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது' என்றார். முன்னாள் கேப்டன் மொயின் கூறுகையில், "ஐபிஎல் போட்டியில் எங்கள் வீரர்களை சேர்த்துக் கொள்ள இந்தியா மறுக்கும் நிலையில், பாகிஸ்தான் சிறப்பாக ஆடி வெற்றிபெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஐபிஎல் போட்டியில் எங்களை புறக்கணிப்பது கோபத்தை ஏற்படுத்துகிறது. இப்போது எங்கள் அணியில் சிறந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது' என்றார்.

ஆஞ்சநேயருக்கு வடை மாலை ஏன்?

நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்துவடை சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு.  வெண்ணெய் சாத்துதல்: ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார், அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,

சந்திரசூடேஸ்வரர் கோவிலைக் கட்டியது சோழ மன்னரா? கிருஷ்ண தேவராயரா?

ஓசூர் மலை மீதுள்ள சந்திரசூடேஸ்வரர் கோவிலைக் கட்டியது சோழ மன்னரா? கிருஷ்ண தேவராயரா? என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஓசூர் மலை மீது சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 800 ஆண்டுக்கு முந்தைய பழமையான கோவில். கோவில் அடிவாரத்தில், ஆண்டு முழுவதும் வற்றாத பச்சை குளம் உள்ளது. கோவிலில் மூலவர் சந்திரசூடேஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். கோவில் உட்பிரகாரத்தில் ஜலகண்டேஸ்வரர் லிங்கம் சிறப்பு வாய்ந்தது. மழையில்லாத காலத்தில் இந்த லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடத்தினால், மழை பெய்யும் என்பது ஐதீகம். அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய கற்களைக் கொண்டு கோவில் கட்டப்பட்டுள்ளதாலும், மலை மீது அமைந்துள்ளதாலும் இக்கோவில் வரலாற்று சிறப்பு மிக்க கோவிலாகக் கருதப்படுகிறது. இந்த கோவிலில் தற்போது, டி.வி.எஸ்., நிறுவனம் சார்பில், 2 கோடி ரூபாய் மதிப்பில், ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக, கோவிலின் முன் பகுதியில் இருந்த சிறிய அலங்கார கோபுர வளைவு மற்றும் கற்தூண்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த கோவிலின் வரலாற்று சிறப்பு மிக்க பழங்கால தூண்களை இடிக்க, உள்ளூர் தெலுங்கு அமைப்புகள் பகிரங்க எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. அவர்கள், "கோவிலை தங்களுடைய தெலுங்கு வம்சாவளியான கிருஷ்ண தேவராய மன்னர் தான் கட்டினார். அதனால், எங்கள் ஆலோசனையை கேட்காமல் எப்படி இடிக்கலாம் என, போர்க்கொடி உயர்த்தி, கோபுர திருப்பணியை நடத்தக்கூடாது என கூறி வருகின்றனர். பதிலடியாக, தமிழ் அமைப்பினர், "சந்திரசூடேஸ்வரர் கோவிலை தங்களுடைய வம்சாவளியான சோழ மன்னர் ஆட்சியில், ராஜேந்திர சோழர் தான் கட்டினார். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதனால், திருப்பணி தொடரவும், செயல்படுத்தவும் துணை நிற்போம் என, நோட்டீஸ் அடித்து, பொதுமக்கள் மத்தியில் வினியோகம் செய்து வருகின்றனர். இதனால், தற்போது சந்திரசூடேஸ்வரர் கோவிலைக் கட்டியது சோழ மன்னர் ஆட்சியிலா? அல்லது கிருஷ்ண தேவராயர் ஆட்சியிலா? என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து கோவில் செயல் அலுவலர் சிவகுமார் கூறுகையில், "கோவில், 12ம் நூற்றாண்டில் ஹொய்சாளர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. கோவில் கண்டிப்பாக சோழ மன்னர் மற்றும் கிருஷ்ண தேவராயர் மன்னர் ஆட்சியில் கட்டப்படவில்லை என்றார்

தியாகிகள் தினம்...

நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், விடுதலைக்காகவும் பாடுபட்ட தலைவர்கள் மறைந்த நாளை, தியாகிகள் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த தினம் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடுகிறது. அந்த வகையில் தேசத்தந்தை மகாத்மா காந்தி, மறைந்த ஜன.30ம் தேதியை தியாகிகள் தினமாக இந்தியா முழுவதும் கடைபிடிக்கின்றனர்.

இன்று டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு, ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மலரஞ்சலி செலுத்துவர். மகாத்மா காந்தியின் தியாகத்தையும், சேவையையும் நினைவுபடுத்தும் வகையில், இந்தியா முழுவதும் காலை 11 மணிக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும். சாதி, சமயம், மொழி வேறுபாடுகள் கடந்து காந்தியவாதிகள், மகாத்மாவின் சிறப்பை பற்றி பஜனை பாடி கொண்டாடுவர்.1948ம் ஆண்டு ஜன.30ம் தேதி, மகாத்மா காந்திஜி, கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவின் துக்க நாளாக இது அமைந்தது. உலகம் முழுவதிலும் பெரிய தலைவர்கள் கொல்லப்பட்ட வரலாறு உண்டு. இந்த தியாகிகள் நாளில் நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் பாதுகாப்பு குறித்தும் கருத்தில் கொள்வது அவசியம். அவர்களின் கருத்துக்களையும், கொள்கைகளையும் நினைவுகூர்ந்து தியாகிகளின் கனவுகள் நனவாகிட அனைவரும் உழைத்திடுவோம்.

இதே நாள்...


  •  உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
  •  இந்தியாவில் தியாகிகள் தினம்
  •  இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தி இறந்த தினம்(1948)
  •  பாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது(1972)
  •  ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது(1964)

ஜப்பானை சேர்ந்த மரிக்கோ இந்து முறைப்படி திருமணம்!


 மதுரை மேலமாடவீதியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., மன்ற துணை தலைவர் சோமசுந்தரம். இவரது மகன் வெங்கடேஷ், ஜப்பானில் டோக்கியோவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரும், டோக்கியோவில் வங்கி ஒன்றில் பணிபுரியும் மரிக்கோவும் காதலித்தனர்.இவர்கள் காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் பச்சைகொடி காட்டினார். நேற்று இருவரும் மதுரையில் இந்து முறைப்படி திருமணம் செய்தனர். மரிக்கோ, தன் பெயரை "பிரியங்கா' என மாற்றி, பட்டுச் சேலை அணிந்து, கூடலழகர் பெருமாள் கோயிலில் வெங்கடேஷை கரம் பிடித்தார். சோமசுந்தரம் கூறியதாவது: வெங்கடேஷூக்கு பல இடங்களில் பெண் பார்த்தும், சரியாக அமையவில்லை. பிடித்த பெண்ணை கூறினால், திருமணம் செய்து வைப்பதாக அவரிடம் தெரிவித்தேன். அவர் தயங்கியபடி, மரிக்கோ குறித்து கூறினார். "இணையதளத்தில்' பார்த்த போது, மரிக்கோவை எங்களுக்கு பிடித்தது. திருமணத்திற்காக ஜன., 27ல் அவரது குடும்பத்தினர் மதுரை வந்தனர். ஜப்பானியர்கள் மரியாதை தெரிந்தவர்கள். மணமக்களுக்கு ஜப்பானிய மொழி, ஆங்கிலம் தெரிவதால், மொழி ஒரு தடையில்லை. அதேசமயம், நாங்கள் தமிழில் பேசுவதை மருமகள் புரிந்து கொண்டு சிரிக்கிறார், என்றார். அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன்செல்லப்பா உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.

குழந்தைகளை நீர்த்தொட்டியில் மூழ்கடித்து கொலை!

குழந்தைகளை நீர்த்தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த வழக்கில், தாய்க்கு நாமக்கல் மாவட்ட விரைவு கோர்ட் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் கடுங்காவல் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் நடராஜபுரத்தை சேர்ந்தவர் நேரு. இவருக்கு முதல் மனைவியின் மூலம், சக்திவேல் மற்றும் ஷாலினி என்ற 2 குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி இறந்தபடியால், நேரு, அமலா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி, அமலா, 2 குழந்தைகளை வீட்டினுள் இருந்த நீர்த்தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். இதுதொடர்பாக, அமலா மீது நாமக்கல் போலீஸ் ஸ்டேசனில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு இன்று மாவட்ட விரைவு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நசீர் அகமது, அமலாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

"சிறந்த தேர்தல் நடத்துனர்'


சட்டசபை தேர்தலில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை சிறப்பாக அமல்படுத்தி, பணியாற்றியதை பாராட்டி, திருச்சி ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றிய சங்கீதாவுக்கு, மத்திய தேர்தல் கமிஷன் வாக்காளர் தினத்தன்று, "சிறந்த தேர்தல் நடத்துனர்' என்ற தேசிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்ட, திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதா, துணிச்சலாக பணியாற்றினார். ஏப்., 4 ல் அதிகாலை திருச்சி, பொன்னகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.ஜே.டி., என்ற தனியார் ஆம்னி பஸ் மேற்கூரையில், வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைத்திருந்த, 5 கோடியே, 11 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தார். இதையடுத்து, ஆர்.டி.ஓ., சங்கீதா தேசிய அளவில் பிரபலமானார். அவரது சாகச செயல்களை பாராட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆக., 15 ல் சுதந்திர தினத்தன்று, வீர தீர செயல்களுக்கான, "கல்பனா சாவ்லா விருது' வழங்கி கவுரவித்தார். இதன்பின், மருத்துவ விடுப்பில் சென்ற ஆர்.டி.ஓ., சங்கீதா, தற்போது திருச்சி நில சீர்திருத்த உதவி கமிஷனராக பணியாற்றி வருகிறார். 

மத்திய தேர்தல் கமிஷன் சார்பாக இந்தியா முழுவதும் ஜன., 25 ல் வாக்காளர் தினவிழா கொண்டாடப்பட்டது. டில்லி விக்யான் பவனில் நடந்த வாக்காளர் தினவிழாவில், நாடு முழுவதும் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய, ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழக சட்டசபை தேர்தலில் சங்கீதா சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி, அவருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தியதை பாராட்டி, "சிறந்த தேர்தல் நடத்துனர்' விருதும், செலவினங்களை கண்காணித்து, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தியதுக்கு கேடயமும் வழங்கப்பட்டது. தவிர, ரொக்கப்பரிசாக, 50 ஆயிரம் ரூபாய்க்கான, "செக்' வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விருது வழங்கினார். இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் குரோஷி, தேர்தல் கமிஷனர்கள் சம்பத், பிரம்மா ஆகியோர் பங்கேற்றனர்

மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமையை நடைமுறைப்படுத்துவது குறித்து, பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது குரேஷி!


தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியதாவது: தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் நிலுவையில் உள்ளன. இவற்றை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமை தொடர்பான விஷயத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதை, அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில், தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. குற்றப் பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து, அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஓட்டளிப்பதை கட்டாயமாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. இது, நடைமுறையில் சாத்தியமற்றது. தவறான செயல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், தேர்தல் கமிஷனுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும். தேர்தல் நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன், ஆட்சியில் இருப்பவர்களால் அரசியல் ரீதியான விளம்பரங்கள் கொடுப்பதையும் தடை செய்ய வேண்டும். ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் தடை செய்யப்படுமானால், தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளும் தடை செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக எங்களுக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன. இவ்வாறு குரேஷி

இந்தியாவை பழிவாங்குவோம் ...


 நாங்கள் எப்போதும் பாகிஸ்தானை பாதுகாப்பதில் ‌உறுதியாக இருக்கின்றோம் என்றும், அங்கு தான் வாழ விரும்புகிறோம் என்றும், காஷ்மீர் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இதற்கென இந்தியாவுக்கு எதிராக போராடவும் அனைவரும் தயாராக வேண்டும் என்றும், அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் பாகிஸ்தானில் நடந்த மாபெரும் பேரணியில் ஜமாஉத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ் சயீத் பேசினார், முல்தானில் நடந்த பேரணியில் 40 க்கும் மேற்பட்ட மத மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றனர் . இந்த பேரணியில் மும்பை வழக்கில் தொடர்புடைய ஜாமத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் ஆவேசமாக பேசினார். இந்த பேரணியில் அவர் பேசுகையில் கூறியதாவது: இந்தியாவிற்கு எதிரான ஜம்ஜக்தா எக்ஸ்பிரஸ் ரயில் தாக்குதலில் இருந்து எங்களின் பணி துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் நல்ல படியாக நடக்கும்.

சுதந்திர காஷ்மீரைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அமெரிக்கா - பாகிஸ்தான் உறவை மறு ஆய்வு செய்ய வேண்வும். இந்நாட்டினர் இஸ்லாம் நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என்றார். பாகிஸ்தான் மக்கள் இணைந்து உறுதியான நிலைப்பாட்டை எடுதத்தோமானால் அமெரிக்காவின் சதியை உடைத்து எறிய முடியும் என்றார். இந்த பேரணியில் முன்னாள் ஐ.எஸ்.ஐ., ஹமீத் ஹூல், முக்கிய பிரமுகரான ஷேக்ரசீத் அகம்மது, ஜியா உல் ஹக் மகன் இஜாஸ் உல் ஹக் உள்ளிட்ட சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இடிச்சபுளி செல்வராஜ் மரணம்!

பிரபல காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ். இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்றோருடன் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். T.R படங்களில் அதிகம் பேசப்பட்ட இடிச்சபுளி செல்வராஜ் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. மாலை இறுதி சடங்கு நடந்தது. இவருக்கு செல்வம் என்ற மனைவியும், வசந்தி என்ற மகளும் உள்ளனர். இடிச்சபுளி செல்வராஜின் தம்பிதான் நடிகர் பாண்டு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...