|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 January, 2012

Gentleman Blockbuster Tamil Full Movie


Endhiran 2010 Tamil Movie Watch Online


Ayyaa


Pistha - Tamil Comedy Movie - English Subtitles


Salangai Oli - Tamil Movie -


Varumaiyin Niram Sivappu - Tamil Movie -


Movie of the Day...!Sirai Chalai MOVIE ONLINE

65 வயதிற்கு மேல்...

ஃப்ளோரிடா மாகணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்ட 238 தம்பதியரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடம் தாம்பத்ய உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மாதம் ஒருமுறை மகிழ்ச்சி அப்போது மாதம் ஒருமுறை உறவில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், உற்சாகத்தில் ஆழ்த்தியதாகவும் 40 சதவிகித்ததிற்கு மேற்பட்ட தம்பதியர் கூறியுள்ளனர். தனித்தனியாக கேட்கப்பட்ட கேள்விகளில் மாதத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை உறவில் ஈடுபடுவது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியதாகவும் 80 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு பாஸ்டனில் நடைபெற்ற ஜிஎஸ்ஏ வின் 64வது வருடாந்திர கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆரோக்கியம், உற்சாகம் அதேபோல் ஆரோக்கியமான உடல் நிலை உள்ளவர்கள் 70 வயது வரை தாம்பத்ய உறவில் ஈடுபடுவதற்கான உணர்வு இருக்கும் என்று இங்கிலாந்தின் மருத்துவ இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் மகப்பேறு மருந்தியல் பிரிவின் ஸ்டேசி டெஸ்லர் லிண்டாவ் தலைமையிலான குழுவினர் வயதான ஆண் மற்றும் பெண்களின் செக்ஸ் உணர்வு குறித்து வெவ்வேறு ஆய்வுகளை நடத்தினர். அதில் முதுமைக் காலத்தில் பெண்களை விட ஆண்களுக்கு பாலுணர்வு அதிகம் இருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆரோக்கியமான உடல் நிலை உள்ளவர்கள் 70 வயது வரை தாம்பத்ய உறவில் ஈடுபாடு காட்ட முடியும் என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 வயதான ஆண்கள் ஆரோக்கியமாக இருந்தால் மேலும் 15 ஆண்டுகளுக்கு உறவில் ஈடுபட முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அரை மணி நேரம்... 250 கலோரி...


டிரட் மில்களில் ஏறி வியர்க்க விறுக்க, நின்று கொண்டே ஓடுவது, மைதானத்தைச் சுற்றி ஓடி உடலை குறைக்க முயற்சிப்பது, சைக்ளிங் போவது, ஜிம்முக்குப் போய் மூச்சு முட்ட முட்ட உடற்பயிற்சி செய்வது... இப்படி, உடல் எடையைக் குறைக்கவும், தேவையில்லாமல் சேர்ந்து கிடக்கும் கலோரிகளைக் காலி செய்யவும் கடுமையாக முயற்சிப்பதை விட அரை மணி நேரத்தில் 250 கலோரிகளை காலி செய்ய எளிமையான வழி உள்ளது - அதுதான் 'செக்ஸ்ர்சைஸ்'! இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில்தான் செக்ஸ் உறவு ஒரு நல்ல உடற்பயிற்சி என்பதைத் தெரிவித்துள்ளனர். பெண்களிடம்தான் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். உடல் எடையைக் குறைக்க செக்ஸ் உறவில் ஈடுபடுவதற்கு பல பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்களாம். கடுமையாக பாடுபட்டு உடற்பயிற்சி செய்வதை விட செக்ஸர்சைஸ் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முடியும் என்பது அவர்கள் எண்ணமாம்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், 76 சதவீதம் பெண்கள், உடல் எடை அதிகமாகி விட்டதாக உணரும்போது செக்ஸர்சைஸில் ஈடுபட விரும்புவோம் என்று கூறியுள்ளனர். மேலும் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள், ஜிம்முக்குப் போவதை தற்போது விட்டு விட்டதாகவும், அதற்குப் பதில் செக்ஸ் உறவில் அதிகம் ஈடுபட விரும்புவதாகவும் கூறியுள்ளனராம். அரை மணி நேர செக்ஸ் உறவின்போது நமது உடலிலிருந்து 250 கலோரிகள் காலியாகிறதாம். உறவின் நேரத்தையும், வேகத்தையும் பொறுத்து 350 கலோரி வரை கூட எரிகிறதாம். சும்மா, ஒரு மணி நேரம் சாதாரணமாக முத்தமிட்டாலே 200 கலோரி வரை காலியாகிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது...

மிகச்சிறிய குழந்தை...


அமெரிக்காவில் பிறக்கும் போது கால்கிலோ மட்டுமே இருந்த உலகின் குட்டிக்குழந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆரோக்கியமான குழந்தை என்றால் பிறக்கும்போது குறைந்த பட்சம் இரண்டரை கிலோ எடை இருக்கும். ஆனால், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் ஹைடி லிப்ரா என்ற பெண்ணிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மிகச்சிறிய அளவில் குழந்தை பிறந்தது. மெலின்டா ஸ்டார் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை வெறும் 269 கிராம் எடை மட்டுமே இருந்த்து. இது உலகின் மிகக் குறைவான எடை கொண்ட குழந்தைகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

பிரசவத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே இந்த குழந்தை பிறந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இன்குபெட்டரில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தற்போது அந்த குழந்தையின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து தற்போது வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இருப்பினும் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். தனது பிஞ்சுக் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்வதை மிகவும் பாக்கியமாக கருதுவதாக குட்டிக்குழந்தையின் தாயார் ஹைடி

சருமத்தை பாதுகாக்கும் வைட்டமின் சி!

பனிக்காலம் வந்தாலே உடலில் அதிகம் பாதிப்பிற்குள்ளாவது சருமம்தான்.முகம் முழுவதும் தேமல் போல வெள்ளையாக தோன்றி அழகையே கெடுத்துவிடும். அதேபோல கை, கால்களில் தோல்களில் வெடிப்பு ஏற்படும். வறண்ட சருமம் இருந்தாலோ வைட்டமின் சத்து குறைபாட்டினாலே இத்தகைய கோளாறுகள் ஏற்படுகின்றன. பனிக்காலத்தில் சருமத்தை பாதுகாக்க ஆலோசனை தருகின்றனர் அழகியல் நிபுணர்கள். இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு குளிர்காலத்தில் முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை உணர்வார்கள். பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. இதேபோல் ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.

மேனி பளபளப்பு ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும். வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி பளபளக்கும். ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் பள பளப்பாகும் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள்.

சுடுநீரில் எலுமிச்சை அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.

தக்காளிப் பழச்சாறு பனியால் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும். மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது சர்வ நிச்சயம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.

செயற்கை விந்தணு கண்டுபிடிப்பு...


உலகிலேயே முதன் முறையாக செயற்கை ஆணுருப்பு மூலம் விந்தணு உற்பத்தி செய்துள்ளனர் கலிபோர்னியா விஞ்ஞானிகள். இது மலட்டுத்தன்மையினால் சந்ததியை உருவாக்க முடியாமல் இருந்த ஆண்களுக்கு வரப்பிரசாதம் என்று மருத்துவ உலகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் கியோபோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜப்பான் கருத்தரிப்பு மைய நிபுணர்கள் எலியின் கருவில் உள்ள ஸ்டெம்செல்களில் இருந்து தரம் வாய்ந்த திசு செல்களை ஆய்வகத்தில் வைத்து தயாரித்தனர். அவற்றை மலட்டுதன்மையுடன் இருந்த ஒரு எலியின் விரை பைக்குள் செலுத்தினர். அது இயற்கையானதை போன்று செயற்கையான விந்தணுவை உற்பத்தி செய்தது. அவற்றை எலியின் கரு முட்டையில் செலுத்தினர். இதை தொடர்ந்து உடல் நலத்துடன் கூடிய எலிக்குட்டிகள் பிறந்தன. எனவே இதே முறையை மலட்டுத்தன்மை நோயில் சிக்கி தவிக்கும் ஆண்களின் உடலில் பயன்படுத்தவும் நிபுணர்கள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து கலிபோர்னியாவை விஞ்ஞானிகள் செயற்கை விந்தணு உற்பத்தி செய்யும் உயிரியல் இயந்திரம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இந்த செயற்கை ஆண் உறுப்பில் விந்தணுக்களை செலுத்தியதில் அவை எண்ணற்ற விந்தணுக்களை உற்பத்தி செய்தன. இந்த செயற்கை விந்தணு உற்பத்தி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த புதிய முயற்சி மலட்டுத் தன்மையால் மருகிப்போயிருந்த ஆண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஏத்த நேரம் 'ஏழரை...

காலைநேரத்தில் தம்பதிகள் உறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதோடு அன்றைய தினம் முழுவதையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது ஆய்வு முடிவு. தம்பதியர்கள் உறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற நேரம் என்பது குறித்து இத்தாலி நாட்டில் உள்ள தம்பதியரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு முடிவில் காலை ஏழரை மணிக்கு உறவில் ஈடுபடுவது ஆரோக்கியமானது என்று கண்டறியப்பட்டது. காலை நேரத்தில் உறவு கொண்டால் அன்றைய தினம் உற்சாகமாக இருக்குமாம். காலை நேரத்தில் என்னதான் பரபரப்பு இருந்தாலும், பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இருக்குமாம். எனவே காலை நேரத்தில் உறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்தோடு ஆர்கசத்தையும் அதிகரிக்கும் என்கின்றார் ஆய்வில் ஈடுபட்ட செக்ஸாலஜிஸ்ட் சுஸி ஹெமான். அது சரி ஆபீஸ் போற அவசரத்தில அதுக்கு எங்க நேரம் என்கிறீர்களா? ஆய்வு இத்தாலியில தான் நடந்திருக்கு நம் ஊரில் இல்லை.

ஜனவரி மாதத்தில் கணவன் மனைவி இடையே அதிகம் சண்டை, வாக்குவாதம் நடைபெறுவதாக ஆய்வு!


 குளிர் மாதத்தில் அதிக நேரம் தம்பதியர் ஒரே அறைக்குள் இருக்க நேரிடுவதே இந்த சண்டைக்கு காரணம் என்கின்றன ஆய்வு முடிவு. ஆண்டு முழுக்க கணவன் - மனைவியரிடையே சண்டை, வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம்தான். இது குறித்து இங்கிலாந்தில் 1000 தம்பதியரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஜனவரியில்தான் மன உளைச்சல்கள் அதிகம் என்று பெரும்பாலான தம்பதியர் குறிப்பிட்டனர். ஒருநாளைக்கு சராசரியாக 20 முறை வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜனவரி மாதத்தில் சராசரியாக 38 சதவிகிதம் வீடுகளில் மோதல்கள் ஏற்படுகின்றன. 25 வயதுக்குக் குறைவானவர்களிடையே 48 சதவிகிதம் அளவுக்கு மோதல்கள் முற்றுகின்றன.

பொருளாதார பிரச்சினை ஜனவரி மாதத்தில் பனியும் குளிரும் அதிகம். அதனால் கணவனும் மனைவியும் வீட்டில் 15 மணி நேரத்திற்கு மேலாக ஒன்றாக இருக்க நேரிடுகிறது. (அதிக நேரம் இருந்தால் ரொமான்ஸ்தானே வரணும்). மோசமான பருவநிலை, நீண்ட இரவுகள், செலவுகள் அதிகமாவதால் சேமிப்பும் கையிருப்பும் குறைந்துவிட்ட நிலை போன்றவற்றால் மோதல்கள் வெடிக்கின்றன. பணம் சம்பாதிக்கும் ஆற்றல் கணவனுக்கு எவ்வளவு குறைவு என்பதை மனைவி அறியவும், செலவழிக்கும் ஆற்றல் மனைவியிடம் எவ்வளவு அதிகம் என்று கணவன் உணரவும் இந்த மாதம் பெரிதும் உதவுகிறது. எனவே பொருளாதாரப் பிரச்னைகளாலேயே பூசல் தொடங்குகிறது.

குளிர் விவாகரத்து வருமானம் குறைவு, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை குறைவு போன்ற காரணங்களால் 65 சதவிகிதம் தம்பதியர் விவாகரத்துவரைகூட போகின்றனர். இனி இவரோடு வாழக்கூடாது என்று புத்தாண்டிலேயே தீர்மானித்துவிடுவதாக 7 சதவிகிதம் பேர் ஒப்புக்கொண்டனர். காலையில் சீக்கிரம் எழுந்துகொள்ளவே முடிவதில்லை என்று 59 சதவிகிதம் பேர் வரை கூறியுள்ளனர். ஜனவரி மாதத்தில் குளிர் அதிகம், சூரிய வெளிச்சம் குறைவு என்பதால் சோம்பலும் மன வெறுமையும் அதிகமாக இருக்கும் என்று உளவியலாளர் டோனா டாசன் தெரிவிக்கிறார். பண முடை, வேலையில்லாமல் வெட்டியாக இருக்கும் நேரம் அதிகரிப்பு, சோம்பல், உற்சாகம் இன்மை, அடுத்து என்ன செய்வது என்ற இலக்கு இல்லாமை போன்ற காரணங்களால் ஜனவரி மாதத்தில் கணவன், மனைவியரிடையே பூசல்கள் அடிக்கடி தோன்றுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

வெயிலில் சண்டை குறைவு அதே சமயத்தில் வெயில் காலங்களில் ஒரு நாளில் 10 மணி நேரம்தான் தம்பதியர் இருவரும் சேர்ந்து வீடு தங்குகின்றனர். அதிலும் பெரும்பாலும் தூங்குவதில் போய்விடுவதால் சண்டைக்கு போதிய அவகாசம் கிடைப்பதில்லை. எனவே தான் ஜனவரி மாதம் சண்டை மாதம் என்று முடிவுக்கு வந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

'நண்பன்' 10 நாளில் ரூ. 110 கோடி


பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டுள்ள நண்பன் படம் வசூல் சாதனை படைத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகி விட்ட நிலையில் இதுவரை ரூ. 110 கோடியை அது வசூலித்துள்ளதாகவும் கூறுகிறார்கள். படம் வெளியிடப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வரவேற்புடன் ஓடி வருவதாகவும், விஜய் மற்றும் மற்றவர்களின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. படத்தில் விஜய் உள்ளிட்ட அத்தனை பேரும் இயல்பாக நடித்துள்ளதை அனைவரும் ரசிப்பதாலும், வித்தியாசமான விஜய்யைப் பார்க்க ரிபீட் ஆடியன்ஸ் எனப்படும் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும்தான் படம் பெரும் வெற்றி பெற்றிருப்பதாக கூறுகிறார்கள்.

மேலும் வசூல் சாதனைகளை இது படைக்க ஆரம்பித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். பன்ச் டயலாக்குகளில் மட்டுமல்லாமல் பாந்தமான நடிப்பாலும் தன்னால் அசத்த முடியும் என்பதை விஜய் நிரூபித்து விட்டார் என்பதுதான் இந்தப் படத்தின் டாப் ஹைலைட்டாக அமைந்துள்ளது. விஜய் மட்டுமல்லாமல் ஜீவா, ஸ்ரீகாந்தக், சத்யன், சத்யராஜ் என மற்ற கலைஞர்களின் நடிப்புக்கும் பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதுவரை விஜய் நடித்து வெளியான படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்ற பேச்சும் படத்திற்கு பெரும் விளம்பரமாக அமைந்து விட்டது என்கிறார்கள் திரையுலகினர். விஜய் பட வசூல் குறித்து இதுவரை படத் தயாரிப்புத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்ற போதிலும் பத்து நாட்களில் ரூ. 110 கோடி வசூல் என்ற பேச்சே அந்தப் படத்திற்கு இன்னொரு விளம்பரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

எப்படி நாட்டை ஏமாற்றலாம் நீங்கள்?


வலுவான லோக்பால் கோரி நடந்து வந்த போராட்டம் பிசுபிசுத்துப் போய் விட்ட நிலையில் ஒரு மாத கால இடைவெளிக்குப் பின்னர் வாய் திறந்துள்ளார் அன்னா ஹஸாரே. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், எப்படி நாட்டை நீங்கள் ஏமாற்ற முடிந்தது என்று கேட்டுள்ளார் அன்னா.கடந்த டிசம்பர் மாதம் தான் தொடங்கிய 3 நாள் உண்ணாவிரதத்தை பாதியில் முடித்துக் கொண்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பினார் ஹஸாரே. அன்று முதல் அவர் ஓய்வில் இருந்து வருகிறார். இந்த நிலையில், பிரதமருக்கு அவர் ஒரு கடிதம் எழுதி தனது மெளனத்தைக் கலைத்துள்ளார்.

கடிதத்தில் அவர் கூறுகையில், வலுவான லோக்பால் மசோதா விவகாரத்தில் நாட்டை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். அரசு கொண்டு வந்துள்ள மசோதா உண்மையிலேயே வலுவானதுதானா? நாட்டை எப்படி உங்களால் ஏமாற்ற முடிந்தது? வலுவான லோக்பாலை கொண்டு வாருங்கள். இந்த நாடு என்றென்றும் உங்களை பாராட்டும், நினைவு கூறும்.நாடாளுமன்றத்தையே இந்த அரசு கட்டுப்படுத்தி வைத்திருப்பது வேதனை தருகிறது என்று கூறியுள்ளார் ஹஸாரே.இந்தக் கடிதத்தின் நகலை ராகுல் காந்தி, பாஜக தலைவர் நிதின் கத்காரி, உ.பி. முதல்வர் மாயாவதி ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார் ஹஸாரே.

இதே நாள்...


  • ஆர்க்குட் துவங்கப்பட்டது(2004)
  •  ஆப்பிள் மக்கிண்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது(1984)
  •  உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் சேவைக்கு விடப்பட்டது(1952)
  •  கொலம்பியா கிராமபோன், வாஷிங்டனில் அமைக்கப்பட்டது(1889)
  •  சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது(1957)

ஜனவரி 26-ல் கச்சத்தீவில் தேசியக் கொடி அர்ஜுன் சம்பத்

இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில், சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதி முதல் இந்து சமய ஆன்மிக பிரசார யாத்திரை நடைபெற்று வருகிறது. இதன்படி 3 நாள்கள் பயணமாக இந்தப் பிரசார யாத்திரை வெள்ளிக்கிழமை குளித்தலை பகுதிக்கு வந்தது. சனிக்கிழமை நெரூரில் வழிபாட்டுடன் யாத்திரை தொடங்கியது. கரூருக்கு வந்திருந்த பிரசார யாத்திரை குறித்து கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம்’’108 நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளில் நிறைவடைகிறது. யாத்திரையில் மதுவிலக்கு, சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு, 

ஊழல் எதிர்ப்பு இயக்க ஆதரவு, சுதேசி கொள்கை ஆகியவற்றை வலியுறுத்தி பிரசுரங்களை வழங்கி வருகிறோம். தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜனவரி 25-ம் தேதி கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் நடத்தப்படும். இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத்தீவில் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மத்திய அரசு சார்பில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். கச்சத்தீவை மீட்டெடுக்க முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்பின் ஒரு பகுதியாக அந்தத் தீவில் தேசியக் கொடியேற்ற நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அதன்படி ஜனவரி 26-ம் தேதி கட்சியின் மாநிலச் செயலர் பவர்நாகேந்திரன் தலைமையில் தேசியக் கொடி ஏற்றப்படும்’’ என்றார் அவர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...