|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 July, 2011

இதே நாள்...


  •  சர்வதேச நீதி தினம்
  •  தென் கொரியா அரசியலமைப்பு தினம்
  •  முதலாவது பஞ்ச் இதழ் லண்டனில் டெளியிடப்பட்டது(1841)
  •  கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டின் ஆரம்ப நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது(1955)
  •  கிழக்கு தீமோர் இந்தோனேசியாவுடன் இணைக்கப்பட்டது(1976)

ஆயிரம் பேரைக் கொன்று அரை வைத்தியனாகு!

பல் மருத்துவ மாணவர்கள் ஒரு பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள்.  நோயாளியின் பெயர் ஷோவா ஹனாக்கோ - 2.

 அறுவைச் சிகிச்சை செய்யும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்களைப் பார்த்து, அவர்கள் அரைகுறையாக ஏதாவது செய்து விடுவார்களோ என்று ஹனாக்கோ திடுக்கிடுகிறாள்; பயப்படுகிறாள்;
 
சிகிச்சை நடக்கும்போது அவளுக்கு அதிகமாக வலித்தால் அதைச் சொல்ல பயந்துகொண்டு முக பாவனையிலேயே தெரிவிக்கிறாள். அவளுடைய கண்கள் திறந்து திறந்து மூடுகின்றன. வாயை அவ்வப்போது திறந்து மூடுகிறாள்.  அவள் இப்படி இருப்பதாலோ என்னவோ மாணவர்கள் அவளைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் சிகிச்சை செய்கிறார்கள். அவளை வைத்து மிகவும் சுதந்திரமாகப் பல் மருத்துவத்தைக் கற்றுக் கொள்
 கிறார்கள்.

ஆனால் ஷோவா ஹனாக்கோ - 2 மனிதப் பெண் அல்ல. பல் மருத்துவ மாணவர்கள் கற்றுக் கொள்வதற்காக மனிதப் பெண்ணைப் போல உருவாக்கப்பட்டுள்ள ரோபாட். டோக்கியோவில் உள்ள ஷோவா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த ரோபாட், பல் மருத்துவத்தின்போது மனிதர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்களோ, அப்படியெல்லாம் நடந்து கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹனாக்கோ 2-ன் உடல் சிலிக்கானால் ஆனது. காற்று அழுத்தத்தினால் அது இயங்குகிறது.


"ஆயிரம் பேரைக் கொன்று அரை வைத்தியனாகு' என்பார்கள் அந்தக் காலத்தில். இந்தக் காலத்தில் ஆயிரம் பேரையல்ல, ஒருவரைக் கூடக் கொல்ல முடியாது என்பதால், ரோபாட்களை உருவாக்கிக் கற்றுக் கொள்கிறார்கள் மருத்துவ மாணவர்கள்.

சாப்பிட்டவுடன் சும்மா இருங்கள்!

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு' என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.  நன்றாகச் சாப்பிட்டவுடன் தூக்கம் கண்களை இழுத்தால், முகத்தில் தண்ணீரை அடித்துத் தூக்கத்திலிருந்து தப்பியுங்கள். அரை மணி நேரம் கழித்து படுக்கச் செல்லுங்கள். அப்போதுதான் நன்கு செரிக்கும். சாப்பிட்டவுடன் ஒரு பழம் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். மலச்சிக்கல் இல்லாமல் போகும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.  சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்போ, பின்போதான் பழம் சாப்பிட வேண்டும். சாப்பிட்டவுடன் பழம் சாப்பிட்டால் வயிற்றுக்குள் காற்று சென்று வயிறு உப்புசத்திற்கு உள்ளாகும்.


 சாப்பிட்டவுடன் சிறிது தூரம் நடந்தால் நல்லது என்பார்கள். அப்படி நடக்கக் கூடாது. ஏனென்றால் சாப்பிட்டவுடன் செரிமான உறுப்புகளுக்குச் செல்ல வேண்டிய ரத்தம், கால்களுக்குச் சென்றுவிடும். உணவில் உள்ள சத்துகள் முழுமையாக ரத்தத்தில் கலப்பதற்கு சாப்பிட்டவுடன் நடப்பது இடைஞ்சல் செய்யும்.  சாப்பிட்டவுடன் "தம்' சிலர் அடிப்பார்கள்.  சாப்பிட்டவுடன் புகைக்கும் 1 சிகரெட்டால் ஏற்படும் புற்றுநோய் அபாயம் 10 சிகரெட்டால் ஏற்படும் அபாயத்துக்குச் சமமாம்.  சாப்பிட்டவுடன் என்னதான் செய்வது?
 சும்மா இருக்கலாமே?

தீயை விடப் புகை ஆபத்தானது! ப்ரியா ரவிச்சந்திரன்!

- இந்த ஒற்றை எழுத்துக்குப் பரபரக்காதவர்களே கிடையாது. ஆனால் இந்த ஒற்றை எழுத்தால் விளையும் அழிவுகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. தீபாவளி போன்ற பண்டிகைகளின் போதும், பல்வேறு சமயங்களிலும் திடீர் திடீரென நடக்கும் தீ விபத்துக்களைத் தீரமுடன் எதிர்கொள்பவர்கள் தீயணைப்பு வீரர்கள். அவர்களின் சார்பாக தீயணைப்புப் பணியில் எதிர்கொள்ளும் சவால்களைச் சுட்டும் விழிச் சுடராய் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் தீயணைப்புத் துறையின் மத்திய சென்னை, கோட்ட அலுவலர் ப்ரியா ரவிச்சந்திரன். இந்திய அளவில் தீயணைப்புத் துறையில் பயிற்சி பெற்ற பெண் அதிகாரிகள் இருவர். அதில் ப்ரியா ரவிச்சந்திரனும் ஒருவர்.


 எப்போதாவதுதானே தீயணைப்புத் துறை வீரர்களுக்கு வேலை இருக்கிறது. மீதி நேரமெல்லாம் ஓய்வாகத்தானே இருக்கிறார்கள் என்ற ஒரு கருத்து  நிலவுகிறதே...!  எப்போதாவதுதான் போர் நடக்கிறது. அதற்காக ராணுவ வீரர்கள் அனைவரும் ஓய்வெடுக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா? வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போதும், பெரும் விபத்துகளின் போதும் ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதைப் போன்றே, தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுவார்கள். எப்போது வேண்டுமானாலும் தீ விபத்துகள் ஏற்படலாம் என்ற நிலையில், நாங்கள் எப்போதும் தீயை அணைப்பதற்காகத் தயார் நிலையிலேயே இருக்கிறோம். எங்களுக்கு விபத்து பற்றிய முதல் தகவல் வந்த ஓரிரு மணித்துளிகளுக்குள் தீயணைப்பு வண்டி நிலையத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற விதியெல்லாம் இருக்கின்றது. மற்ற வேலைகளைப் போல் இது காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை செய்யும் வேலை கிடையாது. 24 மணிநேரமும் தீயை அணைப்பதற்குத் தங்களை எந்நேரமும் விழிப்புடன் வைத்திருக்கும் வேலை.
 
தீ விபத்துகள் எல்லாம் ஒரே தன்மை
 யுடையவையா? 
 சாதாரணமாக அடுப்பிலிருந்து தீ பற்றிப் பரவுவது ஒரு வகை. இதுதவிர, மின் கசிவால் ஏற்படும் தீ, ரசாயனப் பொருட்கள் பற்றிக் கொள்வதால் உண்டாகும் தீ எனப் பல வகைகள் உண்டு. தீ விபத்துகளின் தன்மையைக் கொண்டே அதை அணைக்கும் முறைகள் வேறுபடும். கெமிக்கல்களால் உண்டாகும் தீயை அணைக்க நீரைப் பயன்படுத்த மாட்டோம். நுரை கலவை ஊர்தியைப் பயன்படுத்துவோம்.

 விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கு நீங்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் எவை?  ஈஆர்டி எனப்படும் அவசர கால மீட்பு ஊர்தியைக் கொண்டு மிக உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீ விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்போம். இந்த வாகனத்தில் பல வசதிகள் இருக்கும். ஸ்கை-லிஃப்ட் போன்ற பல நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி மீட்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம். இது தவிர குறுகிய சந்துகளில் புகுந்து தீயை அணைப்பதற்கு உதவும் சிறப்பு மோட்டார் பைக்குகள் போன்ற உபகரணங்களை வாங்கிப் பயன்படுத்துவதற்கு எங்களின் உயர் அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

 தீ விபத்துகளில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?  பேருந்துகளில் பயணிக்கும்போதும், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், திருமணக் கூடங்கள் போன்ற இடங்களிலும் விபத்து ஏற்படும் நேரங்களில் தப்பிக்கப் பயன்படும் வழிகள் எங்கே இருக்கின்றன் எனப் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுக்கு மாடி வீடுகளில், ஷாப்பிங் மால்களில் தீ விபத்து ஏற்பட்டால், தப்பிப்பதற்கு லிஃப்டையோ, எக்ஸலேட்டர்களையோ பயன்படுத்தக் கூடாது. படிக்கட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது மிகவும் முக்கியம். தீயணைப்புப் பாதுகாப்பு வாரமான ஏப்ரல் 14 முதல் 21 வரை இதுபோன்ற செய்திகளைப் பள்ளிகள் தோறும் சென்று சொல்கிறோம். அடிப்படையில் தீ விபத்து பற்றி பள்ளிக் குழந்தைகளுக்கு இருக்கும் தெளிவுகூட பெரியவர்களுக்கு இல்லை என்பதுதான் சோகம்.
 
நெருக்கமாக இருக்கும் குடிசைப் பகுதிகளில் தீ பற்றியவுடன் வேகமாகப் பரவும். இதுபோன்ற சமயங்களில் அடுத்து இருக்கும் குடிசையில் தீ பரவாமல் தடுப்பதற்கு வழி செய்ய வேண்டும். தீப்பிடித்த இடத்திலிருந்து உடனே அகன்றுவிடவேண்டும். உடைகளில் தீப்பற்றினால், போர்வையை உடலில் சுற்றித் தரையில் உருண்டு தீயை அணைக்கவேண்டும்.  கேஸ் சிலிண்டர் லீக் ஆகியிருந்தால், மின்சார விளக்கு, ஃபேன் போன்றவற்றின் ஸ்விட்சுகளை ஆன் செய்யக்கூடாது. ரசாயனத்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் இடங்களில் புகை கடுமையாக இருக்கும். இதுபோன்ற சமயங்களில் வேகமாகத் தவழ்ந்து புகை படிந்த இடத்தை விட்டு அகல வேண்டும். தீயை விடப் புகை ஆபத்தானது!
 
உங்களை மேம்படுத்திக் கொள்ள துறை சார்ந்த சிறப்புப் பயிற்சி ஏதாவது எடுத்து வருகிறீர்களா? இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 தீயணைப்புத் துறை அலுவலர்களைச் சிறப்புப் பயிற்சிக்காகக் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு அனுப்பினர். இதில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற மூவரில் நானும் மீனாட்சி விஜயகுமாரும் இருந்தோம். அங்கு தீயணைப்புத் துறையில் நவீன உபகரணங்களைப் பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி முகாமில் பங்கேற்றோம். இதேபோல், ஜெர்மனியில் நடந்த "இண்டஸ்ட்ரி ரிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்டடி' பயிற்சி முகாமில் பங்கேற்றது நல்ல அனுபவமாக இருந்தது.

இதே நாள்...


  • சான் டியாகோ நகரம் அமைக்கப்பட்டது(1769)
  •  ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் சுவீடனில் வெளியிடப்பட்டது(1661)
  •  டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது(1955)
  •  மிலேனியம் பூங்கா சிகாகோவில் அமைக்கப்பட்டது(2004)
  •  இந்திய ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை பிறந்த தினம்(1968)
  • கீழே விழுந்தாலும் மீசையில் மண் ? தோல்வியில் முடிந்த நித்யானந்தாவின் நிகழ்ச்சி!

    ஆபாச வீடியோ குற்றச்சாட்டால் சரிந்துபோன தனது செல்வாக்கை சரிசெய்ய, தியானத்தில் இருப்பவர்களை 'குண்டலினி சக்தி'யின் மூலம் அந்தரத்தில் மிதக்க வைப்பதாக சவால் விட்ட நித்யானந்தாவின் ஆன்மீக நிகழ்ச்சி தோல்வியில் முடிந்தது.


    பிடதி நித்யானந்தா தியான பீடத்தில், குரு பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி, 15.07.2011 அன்று காலையிலிருந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவை ஒட்டி, ஆசிரமத்தின் பிரதான வாயிலில் இருந்து, ஆனந்தேஸ்வரா கோவில் வரையிலும் நித்யானந்தா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ஆசிரமத்திலுள்ள ஆனந்தேஸ்வரா சன்னிதியின் முன், பஞ்சதபா ஆசனம் போடப்பட்டிருந்தது. அதில், நித்யானந்தா அமர்ந்திருந்தார். 

    இந்த குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அவர் நித்யானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது நித்யானந்தா ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கினார். அவரைத் தொடர்ந்து பக்தர்களும், ஆசிரம பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து நித்யானந்தாவுக்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.

    சிறிது நேரம் ஆசி வழங்கிய நித்தியானந்தா பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக பக்தர்களை தன்னால் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும் என்று சவால் விட்டார். குண்டலினியை எழுப்பி, மந்திரங்களை ஓதி அவர் சைகை செய்ய எம்பி யெம்பி குதித்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

    சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவின் கட்டளையை ஏற்று அந்தரத்தில் மிதக்க முயற்சித்தார். ஆனால் தடுமாறி கீழே விழுந்த அவர் அப்படியே சிரித்தப்படி உட்கார்ந்துவிட்டார்.

    கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சிரித்த நித்யானந்தாவிடம் ஒருவர் சவால் விட்டார். தன்னை இச்சோதனைக்கு உட்படுத்திக்கொண்ட அவருக்கு எந்த மாற்றமும் ஏற்படாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தில் ஈடுபட்டவருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் நித்யானந்தா. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

    மாறன் மீது புகார் கொடுக்கிறார் விஜய்?

    காவலன் பட விவகாரம் தொடர்பாக சன் குழும தலைவர் கலாநிதி மாறன், சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோரின் மீது புகார் தர தயாராகிறார் நடிகர் விஜய் என செய்திகள் வெளியாகியுள்ளன.

    கடந்த 5 ஆண்டுகளாக சன் டிவி மற்றும் சன் பிக்சர்ஸுக்கு நெருக்கமாக காட்டிக் கொண்ட பெரும்பாலான சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் இப்போது அப்படியே நேர் எதிராகத் திரும்பியுள்ளனர்.

    சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வேட்டைக்காரன், சுறா போன்ற படங்களில் நடித்த விஜய், காவலன் படத்தின் போது அதே சன் பிக்சர்ஸுக்கு எதிராக மாறினார்.
    இந்த காவலன் படத்தை வெளியிட தொடர்ந்து சன் பிக்சர்ஸ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் தடைகளை ஏற்படுத்தியதால் உரிய தேதியில் வெளியாகாமல் 3 நாள் கழித்து படம் வெளியானதாம்.

    இதனால் பல கோடி வசூல் இழப்பு ஏற்பட்டதாகவும் இதற்கு சன் பிக்சர்ஸ்தான் காரணம் என்றும் கூறி விஜய்யே நேரடியாக கலாநிதி மாறன், சக்சேனா, அய்யப்பன் மீது புகார் கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

    ஏற்கெனவே 4 வழக்குகளில் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலாநிதி மாறன் மீது 2 மோசடி, மிரட்டல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வரும் ஜூலை 26-ம் தேதி போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராகிறார்.

    இந்த நிலையில் விஜய்யும் புகார் தரவிருப்பது, சன் குழுமத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம் சுறா பட நஷ்டத்தை ஈடுகட்டுமாறு விஜய்க்கு எதிராக முன்பு போர்க்கொடி தூக்கிய அனைத்து விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள் இப்போது அமைதியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    ஒபாமாவின் 50-வது பிறந்தநாள்!

    அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் விருந்து சாப்பிட ரூ. 16 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் 50-வது பிறந்தநாள் வரும் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒபாமாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சிகாகோவில் நடக்கவிருக்கிறது.

    2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடக்கவிருப்பதால் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிதி திரட்ட முடிவு செய்துள்ளார் ஒபாமா.
    அதிபர் ஒபாமா தனது பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் 3-ம் தேதி சிகாகோவில் உள்ள ஆரகன் ஹாலில் ஆடம்பரமான விருந்து மற்றும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த விருந்தில் திரைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்பட பல முக்கியமானவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் ஒரு தம்பதி ரூ. 16 லட்சம் தெலுத்த வேண்டும். இதில் நுழைவுக் கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 500, மது மற்றும் விருந்திற்கு ரூ. 4 ஆயிரத்து 500, ஒபாமாவுடன் போட்டோ எடுப்பதற்கு ரூ. 45 ஆயிரம் என பல்வேறு கட்டணங்கள் அடக்கம்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...