|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 August, 2011

இதே நாள்...


  • பிரான்ஸ் விடுதலை தினம் (1960)
  •  பிரேசில் மாணவர் தினம்
  •  இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது(1812)
  •  பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் பிறந்த தினம்(1943)
  • ஹசாரே பிடிவாதம்...!

    லோக்பால் மசோதா விவகாரத்தில் பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசால் புறக்கணிக்கப்பட்ட அனைத்து விஷயங்களையும் மசோதாவில் சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை,'' என, சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

    அவர் கூறியதாவது: பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட்ட லோக்பால் மசோதாவில் ஒன்றுமே இல்லை. அது ஒரு மாயை தோற்றமே. ஊழலை ஒழிக்க நாங்களும் சட்டம் கொண்டு வந்துள்ளோம் என, மக்களுக்கு சொல்லிக் கொள்ளவே அந்த சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனால், எந்தப் பலனும் இருக்காது.

    நாங்கள் எழுப்பிய பல பிரச்னைகள், மசோதாவில் சேர்க்காமல் விடப்பட்டுள்ளன. அவை எல்லாம் சேர்க்கப்பட வேண்டும். லோக்பால் மசோதா பிரச்னைக்காக நான் உண்ணாவிரதம் இருக்கப் போவது, மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் தான். இவ்வாறு ஹசாரே கூறினார்.

    Hardening its posture, Team Anna Hazare today told a Parliamentary panel to recommend to the government to replace the Lokpal bill with a stronger anti-corruption draft legislation, or else the activist would go on an indefinite hunger-strike from August 16.
    Hazare, along with RTI activist Arvind Kejriwal and senior lawyers Prashant Bhushan and Shanti Bhushan, met members of the Parliamentary Standing Committee on law and justice, personnel and public grievances in the evening. The meeting lasted for around two and a half hours.
    At the meeting, Hazare asked the government to scrap the bill that was moved in Parliament last week and to replace it with a stronger anti-corruption draft law that brings the Prime Minister within its ambit, a spokesperson for Team Anna said.
    Hazare said the decision of the Parliamentary Standing Committee to study the Jan Lokpal bill along with the government legislation was a "good thing", but made it clear that he would continue with his fast from August 16 if the panel did not take a decision by that date.

    சத்தமில்லாமல் நடந்த மங்காத்தா இசை வெளியீடு!







    அஜீத்தின் "மங்காத்தா" பட பாடல் எப்ப வரும், எப்ப வரும் என்று ஏங்கி போய் இருந்த ரசிகர்களுக்கு, ஒரு வழியாக இன்று ரிலீசானது. எந்தவித ஆடம்பரமும் இல்லாமல்,  எளிமையாக நடந்து முடிந்துள்ளது. க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிப்பில், ‌வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜீத் நடித்திருக்கும் 50வது படம் "மங்காத்தா". அஜீத்துடன் அர்ஜூன், த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜீத் இதுவரை நடித்திராத, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

    ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் கடந்த சில மாதங்களாகவே தள்ளிக்கொண்டே போனது. ஆரம்பத்தில் அஜீத் பிறந்தநாளில் ஆடியோவை ரிலீஸ் செய்வதாக இருந்தது. ஆனால் சில பல பிரச்சனைகளால் ஆடியோவை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இருப்பினும் அஜீத் பிறந்த நாளன்று ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக "விளையாடு மங்காத்தா..." என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் ரிலீஸ் செய்தனர். இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்‌பை பெற்றிருக்கிறது. ஆனாலும் படத்தின் மொத்த பாடலும் எப்போதும் ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

    இந்நிலையில் இன்று (10.06.11) காலை தனியார் ரேடியோ நிலையம் ஒன்றில், மங்காத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா மிக எளிமையாக நடத்தப்பட்டு உள்ளது. "பில்லா-2" பட சூட்டிங்கிற்காக அஜீத் ஐதராபாத்தில் இருப்பதால் அவர் இல்லாமல், டைரக்டர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட சிலர் மட்டும் கலந்து கொண்டு மங்காத்தா படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.

    இலங்கை பிரச்னை நோட்டீசில் குழப்பம்!

    இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் நடைபெறவுள்ள விவாதம் குறித்த அறிவிப்பில், அடுத்தடுத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் பின்னணி குறித்து சந்தேகம் கிளம்பியுள்ளது. இலங்கை போர் நடைபெற்ற போது, அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த, தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., - தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. லோக்சபாவில், விதிஎண் 193ன் கீழ், பொது விவாதமாக நடைபெறவுள்ள இலங்கை தமிழர் பிரச்னை, கடந்த வாரமே நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நடக்கவில்லை. இந்நிலையில், லோக்சபா அலுவல்கள் குறித்த கையேடு நேற்று காலை வழக்கம் போல அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது. அதில், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா., சபை வெளியிட்டுள்ள அறிக்கையை மையமாக வைத்து பொது விவாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க., சார்பில் தம்பித்துரை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சிலர் இதுகுறித்த நோட்டீஸ் அளித்திருந்தாலும், தி.மு.க.,வின் பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு அளித்த நோட்டீஸ் மட்டுமே பட்டியலாகியிருந்தது. இவரோடு சேர்ந்து சமாஜ்வாடியின் சைலேந்திர குமாரும் இந்த பிரச்னையை கிளப்புவதாக கூறப்பட்டிருந்தது. அதாவது, Discussion under rule 193 shri T.R.BAALU, shri SHAILENDRA KUMAR to raise a discussion on alleged killing of Sri Lankan Tamils by Sri Lankan army in the year 2009 as recently revealed in a United Nations Report என்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த லோக்சபா குறிப்பேடு, பத்திரிகையாளர்கள் மற்றும் எம்.பி.,க்கள் என, அனைவருக்குமே காலையிலேயே வினியோகிக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.,வினர் அமளி காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில், எம்.பி.,க்கள் மத்தியில், திருத்தப்பட்ட ஒரு லிஸ்ட் வினியோகிக்கப்பட்டது.
    அதில், இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தின் விவாதம் குறித்து, காலையில் அளிக்கப்பட்டிருந்த குறிப்பேடு வாசகங்கள் அப்படியே மாற்றியமைக்கப்பட்டிருந்தன. ஒரு சில எம்.பி.,க்கள் இதை கண்டு ஆச்சரியமும், குழப்பமும் அடைந்தனர். அதாவது, ரிவைஸ்டு லிஸ்ட் ஆப் பிசினெஸ் என, தலைப்பிட்டு அதில், இலங்கையில் வாழும் தமிழர்களின் புனர்வாழ்வுக்கு இந்தியா செய்து வரும் உதவிகள் மற்றும் நடவடிக்கைககள் மீதான விவாதம் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதாவது, shri.T.R.BAALU, shri SHAILENDRA KUMAR to raise a discussion on the steps taken by Government of India for relief and resettlement of Tamils in SriLanka and other measures to promote their welfare என்று வாசகங்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. ஒரே விவாதம் குறித்து காலையில் அளிக்கப்பட்ட அலுவல் குறிப்பேட்டில் ஒருவிதமாகவும், மதியம் அளிக்கப்பட்ட குறிப்பேட்டில் மற்றொரு விதமாகவும் மாற்றம் செய்யப்பட்டது ஏன்? என்பது மர்மமாக உள்ளது. இரண்டிலுமே பார்லிமென்ட் செகரட்டரி ஜெனரல் டி.கே.விஸ்வநாதன் கையொப்பமுள்ளது. போரின்போது அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பதே பார்லிமென்டில் விவாதமாக வரக்கூடாது என கருதப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும், இந்த விவாதம் டி.ஆர்.பாலு அளித்த நோட்டீஸ் அடிப்படையில்தான் ஏற்கப்பட்டிருக்கிறது. அப்படியானால், டி.ஆர்.பாலு அளித்த நோட்டீசில் இருந்த வாசகங்கள் ஏன் மாற்றம் செய்யப்பட்டன? அப்படியே மாற்றுவது என்று முடிவு செய்திருந்தாலும்கூட டி.ஆர்.பாலுவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. இந்த திடீர் மாற்றத்தை, அ.தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சிகள் இன்று அவையில் எழுப்பலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Young Father Becomes the Youngest Grandfather at Age 29


    After becoming a father at the age of 15, now he has become the youngest grandfather. 14 years ago Shem Davies who is now 29 went to the hospital to see his now 14 years old daughter Tia born to this world. Then, this year he also rushed to the hospital again but this time to see Tia gave birth to her newly born daughter Gracie. Responding to the new born baby, Davies said he is “incredibly proud” of his daughter.

    When the newly grandfather stepped into the hospital to see his grandchild, the nurses at the maternity ward could only be stunned at Gracie’s grandfather who had to show his ID to prove that he was in fact 29 years old. The fresh face granpa walk into the rooms and told to her daughter and everyone that “she will be a brilliant mum.”

    Tia gave birth before her 15th birthday and celebrated in the hospital and told that Gracie is the best birthday present. The baby was born premature. The seven week premature baby was caused by Tia’s Pre-Eclampsia that had been diagnosed by the doctor.

    “At first I wasn’t overly pleased that she was pregnant but I soon got over that. Now it’s all about being positive,” Tia said. “The condition, which often leaves expectant mothers with high blood pressure and protein in their urine, could lead to life-threatening symptoms for both mother and baby,”  she added. Tia revealed that the contrast between the carefree fun of the school playground and then the fear of death for her and the baby was something she would never forget.

    Tia who has been dating Jordan, Gracie’s father, for 18 month is planning to be a hairdresser. Gracie will be staying at Tia’s mother 30 years old Kelly John, a former girlfriend of Davies. while Tia will finish her school.

    Weird Chicken Race...இங்கல்ல இங்கிலாந்துல!

    This is a quite odd habit. When people choose to have horse race, these Bonsall people choose to have chicken race. They make the chicken to run by feeding them into the finish line. The first chicken which can run across the line will be the winner. Believe it or not this event is held every year. The people call this event as the annual World Hen Racing Championships. Do not expect to have a horse-race like competition where the competitors run with wonderful pace. Here, you will find the chickens are only walking along and sometimes confused themselves. Most of the viewers of this race is children. Go chicken go chicken!

    வாகனங்களில் கிறுக்கல் நம்பர் பிளேட் வரும் 31ந் தேதிக்குள் மாற்ற காலக்கெடு!

    தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களில் எழுதப்பட்டிருக்கும் நம்பர் பிளேட்டுகளை மாற்றுவதற்கு வரும் 31ந் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஓடும் பெரும்பாலான வாகனங்களில் அதன் உரிமையாளர்கள் தங்களது இஷ்டத்திற்கு பதிவு எண்ணை எழுதியுள்ளனர். சிலர் இதற்கு ஒரு படி மேலே போய் குலதெய்வம், தங்களது அரசியல் தெய்வங்களின் படங்களை ஒட்டி அழகு பார்க்கின்றனர்.

    வாகன நம்பர் பிளேட்டுகளில் குறிப்பிட்ட அளவுகளில் பதிவு எண்கள் எழுதப்பட வேண்டும்; பதிவு எண்களை தவிர பிற வாசகங்கள் இடம்பெறக்கூடாது. ஒவ்வொரு வாகன மாடலுக்கு தக்கவாறு குறிப்பிட்ட தடிமன் மற்றும் இடைவெளியில் எழுத்துக்கள் மற்றும் எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என 1989ம் ஆண்டு மோட்டார்வாகன சட்டம் 50 மற்றும் 51 வது பிரிவுகளில் விதிமுறைகள் உள்ளன.

    இருப்பினும், பெரும்பாலானோர் இந்த விதிமுறைகளை மதிப்பதில்லை. மேலும், இதுபோன்று கிறுக்கல்களுடன் எழுதப்பட்ட நம்பர் பிளேட்டுகள் கொண்ட வாகனங்கள் பெரும்பாலும் குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து துறைக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து புகார்கள் வந்தன.

    இதையடுத்து, வாகன நம்பர் பிளேட்டுகள் விதிமுறைகளின்படி உரிய அளவில் எழுத போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், வரும் 31ந் தேதிக்குள் கிறுக்கல் நம்பர் பிளேட்டுகளை மாற்றிவிட வேண்டும் என தமிழக போக்குவரத்து கமிஷனர் காலக்கெடு விதித்துள்ளார்.

    மேலும், காலக்கெடுவை மீறி விதிமுறைகளை மீறி எழுதப்பட்டிருக்கும் நம்பர் பிளேட்டுடன் வரும் வாகனங்களின் ஆர்சி புக் 1988ம் ஆண்டு மோட்டார்வாகன சட்டம் 53வது பிரிவு விதியின் கீழ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கார்களுக்கான நம்பர் பிளேட்டுகளில் எழுதப்படும் எழுத்துக்கள் மற்றும் எண்கள் 65 மிமீ உயரமும், 10மிமீ தடிமனும், 10 மிமீ இடைவெளியுடனும், இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகன நம்பர் பிளேட்டுகள் 30 மிமீ உயரமும், 5மிமீ தடிமனும், 5 மிமீ இடைவெளியுடன் எழுதப்பட்டிருக்கும் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    அதிக எடை கொண்ட குழந்தைகள் எண்ணிக்கை சென்னையில் அதிகரிப்பு!

    சென்னையில் பள்ளிக் குழந்தைகளில் அதிக பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல், பள்ளிக் குழந்தைகளிடைய நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது. சென்னை நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையம் சார்ப்பில் பள்ளி குழந்தைகளின் உடல் தன்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம், 23 அரசு மற்றும் 28 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

    ஆய்வின் முடிவில் தெரியவந்த முடிவுகள் பின்வருமாறு: இதில், சென்னை குழந்தைகளிடையே அதிக உடல் எடைக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிந்தது. மொத்த கணக்கெடுப்பில், 34 சதவீத மாணவ, மாணவியர் அதிக எடையுடன் இருந்தனர். 7 சதவீத மாணவ, மாணவியரின் ரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகமாக இருந்தது.

    எதிர்காலத்தில் உடல்நலத்தை கண்டுகொள்ளாத பட்சத்தில், சக்கரை நோய் வர அதிக வாய்ப்புள்ளது. ஆய்வில் கலந்து கொண்ட அதிக எடை கொண்ட பலருக்கும் உடலில் ஆங்காங்கே தேவையற்ற சதைமடிப்புகள் இருந்தது.

    இதுவும் பிற்காலத்தில் நீரிழிவு நோய் வழிவகுக்கும். அதிக உடல் எடையால், பருவமடைந்த மாணவியர் இடையே மாதவிடாய் ஒழுங்கற்ற முறையில் ஏற்பட்டு நீரிழிவு நோய் உண்டாகலாம் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

    Eyes Sparkle Like Diamonds with Diamond Contact Lenses!


    Colored contact lenses are one of the best things that happened couple of years ago. People could change their appearance just by putting on a pair of blue contact lenses. Even a pair of soccer colored lenses for those crazy soccer fans are available, not to forget Lady Gaga’s crazy colored eyes.
    Now in India, Shekhar Eye Center sells extraordinary diamond encrusted lenses. For those who love accessories these lenses are the ones you should try. The lenses are magnificent. People will literally look like having a pair of diamond eyes. For a whopping $15.000 you could get the eyes that literally light up the room.
    Dr. Chandrashekhar Chawan had the idea after his wife implanted a stone in her teeth like rappers. His new line of eye jewellery features 18 diamond yellow or white gold ring around the lenses. Chawan hopes to sell outside India. Experts in the other hand are skeptical about the safety of the diamond lens. As you know diamonds are used to cut glasses. In fact, heavy duty drill have diamonds on them.

    Keiko Fukuda, the World’s Oldest Woman Who Earned Judo Black Belt!


    Keiko Fukuda has devoted her life to Judo, amazingly even at the age of 98 she still practices Judo and has earned her the martial art’s highest honor.Sensei Keiko Fukuda, with a tenth degree black belt, making her the first woman who got the honor where only four people had achieved the same rank.


    As a young girl living in Japan, Sensei Fukuda studied calligraphy, flower arrangement, and tea ceremonies but then she found her passion was only on Judo.


    The clip explains that she endured gender discrimination and chose Judo over marriage for her dream. When she was young  Japan was very conservative. Women didn’t had much to say or to fight for. It was just not  allowed. But she fought for what she believed in.
    “This was my marriage,” Fukuda said through tears. “This is when my life destiny was set.” To explain more about Sensei Fukuda’s days and how she dedicates her life for Judo.

    கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற போகும் நீளமான ஸ்கூட்டர்!




    The 31 years old Colin Furze  loves his scooter very much and knows how to proof his love. The Linconshire plumber has done it again, breaking the world record where before he made the fastest mobility scooter designed to go 71mph. Now he has built the longest scooter and broken the current record of 14 meters to 22 meter as long as a tennis court. The vehicle was converted from 125cc scooter engine. It took a month to build the scooter that could carry 25 people.
    Friends are pilling up, taking each a seat on the scooter with Colin at the steering wheel trying to handle the scooter. The videos and documents signed  by his friends will be sent to Guinness World Record to further be recognized as the longest motorbike in the world.
    “When I first got on it I thought it would never work and at a slow speed it’s almost impossible to keep upright,” explained Collin after the stunt.


    “But once you get going it becomes a bit easier, although it is a real strain on your arms as it has such heavy steering.


    ஸ்கூட்டரில் எத்தனை பேர் போகலாம் என்றவுடன் இரண்டு அல்லது அதிகப்பட்சம் மூன்று பேர் என்பதுதான் நம் பதிலாக இருக்கும். ஆனால், லண்டனை சேர்ந்த பிளம்பர் ஒருவர் உலகின் மிக நீளமான ஸ்கூட்டரை வடிவமைத்து அதில் 23 பேரை அமர வைத்து ஓட்டிக்காட்டி அசத்தியுள்ளார்.

    72 அடி நீளம் கொண்ட உலகின் மிக நீளமான இந்த ஸ்கூட்டரை அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கி அதை ஒரு கிமீ தூரம் ஓட்டிக்காட்டி அவர் சாதனை புரிந்துள்ளார்.

    லண்டன் லிங்கன்ஷையர் பகுதியை சேர்ந்தவர் கோலின். பிளம்பர் வேலை பார்த்து வரும் இவருக்கு சிறு வயதிலிருந்து எதையாவது சாதித்து காட்ட வேண்டும் என்ற உணர்வு தீ உள்ளுக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

    அவருக்குள் பற்றி எரிந்த உணர்வு தீக்கு தீணி போடும் விதமாக ஒரு புது ஐடியா கிடைத்தது. அதாவது தனக்கு தெரிந்த பிளம்பர் தொழிலை வைத்து உலகின் மிக நீளமான ஸ்கூட்டரை உருவாக்கி சாதனை படைக்க முடிவு செய்தார்.

    இதற்காக, தனது 125 சிசி ஸ்கூட்டரின் பின்பக்கத்தை பாதி அளவுக்கு வெட்டி எடுத்து, 72 அடி நீளம் கொண்ட அலுமினிய சேஸிசுடன் இணைத்தார். பிறகென்னெ, அவரது அயராத உழைப்பின் மூலம் உலகின் மிக நீளமான ஸ்கூட்டர் ரெடி.

    ஆனால், அதை ஓட்டிக்காட்டினால்தான் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறமுடியும். ஸ்கூட்டர் என்பதையும் ஒத்துக்கொள்வார்கள்.

    எனவே, தனது நீளமான... ஸ்கூட்டரை 100 மீட்டர் தூரம் ஓட்டி சாதனை படைக்க முடிவு செய்தார். இதற்காக, பலரை அணுகியபோது பலர் தயங்கினர். கீழே விழுந்துவிடுவோம் என்ற பயம்தான். இருப்பினும், அவரது சாதனை முயற்சியை மனமுவந்து பாராட்டிய 23 பேர் நம்பிக்கையுடன் அவரது ஸ்கூட்டரில் ஏறி உட்கார்ந்தனர்.

    மெல்ல மெல்ல சாதனை இலக்கை நோக்கி ஸ்கூட்டர் நகர துவங்கியது. என்ன ஆச்சரியம்! இலக்கு வைத்ததைவிட 10 மடங்கு கூடுதலாக, அதாவது ஒரு கிமீ தூரம் வரை அந்த ஸ்கூட்டரை ஓட்டி பார்வையாளர்களை அசத்தினார் கோலின்.

    வெறும் 9 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட 125 சிசி எஞ்சின் இத்தனை பேரையும் திக்கி திணறாமல் இழுத்து வந்ததும் இந்த சாதனையில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

    மேலும், இந்த சாதனையை வீடியோவாக பதிவு செய்து கின்னஸ் புத்தகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார். விரைவில் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லண்டன் கலவரம் பிர்மிங்ஹாமில் 3 ஆசியர்கள் கொலை!

    லண்டன் கலவரம் இங்கிலாந்தின் பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. பிர்மிங்ஹாமில் 3 ஆசியர்கள் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர்.
    கடந்த சனிக்கிழமை லண்டனின் வடக்கில் உள்ள டாட்டன்ஹாம் மாவட்டத்தில் கலவரம் மூண்டது. அப்போது அங்கு நடந்து வந்த அமைதியான ஊர்வலத்தின்போது போலீசார் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மார்க் டுக்கான் என்ற 29 வயது இளைஞர் உயிரிழந்தார். இவர் நான்கு குழந்தைகளுக்குத் தந்தை ஆவார். இதையடுத்து கலவரம் வெடித்து விட்டது.

    லண்டன் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. தீவைப்பு, கல்வீச்சு, துப்பாக்கிச் சூடு, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் சூறையாடல், ஏடிஎம் இயந்திரங்களை சூறையாடுதல் என வன்முறைக் காடாக மாறியுள்ளது லண்டன். இங்கிலாந்தின் பிற பகுதிகளுக்கும் கலவரம் பரவி வருகிறது.

    இங்கிலாந்து வாழ் ஆசியர்கள் சகேதரர்களான ஷாசாத், ஹாரி ஹுசைன். அவர்களது நண்பர் முசாவர் அலி. அவர்கள் பிர்மிங்ஹாமில் கார் கழுவும் கடை வைத்துள்ளனர். லண்டன் கலவரம் அங்கும் பரவியதால் அவர்கள் தங்கள் கடையை கலகக்காரர்கள் தாக்காமல் பாதுகாத்து வந்தனர்.

    நேற்றிரவு அந்த 3 பேரும் மசூதியில் தொழுதுவிட்டு, கடையைப் பாதுகாக்கச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீர் என்று 2 கார்கள் அசுர வேகத்தில் வந்து அந்த 3 பேர் மீதும் மோதின. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    அந்த மூவரும் ரோட்டோரமாகத் தான் சென்றனர். வேண்டும் என்றே அவர்கள் மீது காரை ஏற்றிக் கொன்றுள்ளனர். ஆம், இதை கொலை என்று தான் சொல்ல வேண்டும் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் ஒரு 32 வயது நபரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    இங்கிலாந்தில் கலவரக்காரர்கள் பிளாக்பெர்ரி போனின் மூலம் செய்தி அனுப்பி நாட்டின் பிற பகுதிகளிலும் கலவரத்தை தூண்டச் சொல்கின்றனர். இதனால் கலவரத்தை தூண்டப் பயன்படுத்தும் கருவாகியாக மாறியுள்ளது பிளாக்பெர்ரி. கலவரக்காரர்கள் பிளாக்பெர்ரி மொபலை பயன்படுத்தி தகவல் அனுப்பி பிற பகுதிகளிலும் கலவரத்தை தூண்டிவிடுகின்றனர்.

    நாங்கள் இங்கே கொள்ளையடித்துவிட்டோம், தற்போது கிழக்கு லண்டனுக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்று ஒரு கலவரக்காரர் பிளாக்பெர்ரியில் செய்தி அனுப்பியுள்ளார். விலை உயர்வான பொருட்கள், டிசைனர் உடைகள், மதுபானங்கள், சைக்கிள்கள் விற்பனை செய்யும் கடைகளின் முகவரிகளை குறுந்தகவலாக அனுப்பி அவற்றை சூரையாடச் சொல்லி வருகின்றனர்.

    ஆங்காங்கே கடைகள் பற்றி எரிந்துகொண்டிருக்கையில் சிலர் முகமூடி அணிந்துகொண்டு செல்போன்களில் குறுந்தகவல் அனுப்புவதாகக் கூறப்படுகின்றது. உலகில் சுமார் 45 மில்லியன் மக்கள் பிளாக்பெர்ரி மூலம் தகவல்கள் மற்றும் படங்களை அனுப்புகின்றனர்.

    கலவரத்தை பரப்ப பிளாக்பெர்ரி பேருதவியாக இருப்பதால் குறுந்தகவல் அனுப்பும் வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பிளாக்பெர்ரி நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவ்வாறு செய்தால் 45 மில்லியன் பேர் பாதிக்கபடுவார்கள் என்று கூறி அந்த கோரிக்கையை பிளாக்பெர்ரி நிராகரித்துவிட்டது. ஆனால் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு உதவத் தயாராக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    குருத்வாராவை பாதுகாக்கும் ஆயுதம் ஏந்திய சீக்கியர்கள்:லண்டனில் கலவரம் மூண்டதையடுத்து ஆங்காங்கே தாக்குதல், தீவைப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாராக்களை கையில் ஆயுதம் ஏந்திய சீக்கியர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

    சவுதாலில் குரு சிங் சபா குருத்வாரா உள்ளது. கையில் ஹாக்கி ஸ்டிக் மற்றும் வாள் ஏந்திய சுமார் 700 சீக்கியர்கள் இந்த குருத்வாராவை பாதுகாத்து வருகின்றனர். சவுதாலில் இந்தியர்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். கலவரக்காரர்களிடம் இருந்து தங்கள் வீடு, கடை ஆகியவற்றை பாதுக்காக்கத் தான் சீக்கியர்கள் ஆயுதம் எடுத்துள்ளனர். அவர்கள் போலீஸ் உதவியுடன் தான் காவல் காத்து வருகின்றனர்.

    லண்டன் கலவர பூமியாக மாறியதை அடுத்து இங்கிலாந்து பிரதமர் தனது விடுமுறையை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளார். 4 நாட்கள் ஆகியும் கலவரம் அடங்கும்பாடில்லை. இனியும் கலவரம் தொடர்ந்தால் பிளாஸ்டிக் புல்லட்டுகளைப் பயன்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    நேற்றிரவு கான்னிங் சர்கஸ் காவல் நிலையத்தை ஒரு கும்பல் குண்டு வைத்து தகர்த்தது. லெஸ்டரில் சுமார் 100 இளைஞர்கள் கடைகளைக் கொள்ளையடுத்து அந்தப் பொருட்களை போலீசார் மீது வீசினர்.

    மேஜையில் தாளம்போட்டு வாய்ப்புகள் கேட்டேன்!

    சஞ்சய், நந்தினி ஜோடியாக சுப்புசுஜாதா இயக்கிய “தாண்டவக் கோனே படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. நடிகர்கள் சம்பத், சுப்பு, தயாரிப்பாளர் பிரபாகர் சீனிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல் சி.டி.யை வெளியிட்டு அவர் பேசியதாவது:

    புதுசா வருபவர்களை ஊக்குவிப்பது என் சுபாவம். ஆரம்ப காலங்களில் நானும் சிரமப்பட்டேன். எனக்காக என் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் சினிமா கம்பெனிகள் படியேறி வாய்ப்பு கேட்டு அலைவார். எங்கேயாவது சிறிய சினிமா கம்பெனி போர்டு தொங்கினால் கூட அங்குபோய் என்தம்பி நல்ல மியூசிக் போடுவான். கேட்டுப் பாருங்க என்பார்.

    பிறகு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மாதிரி பாடகர்கள் மற்றும் ஆர்கெஸ்ராவோடு போய் வாய்ப்பு கேட்க ஆரம்பித்தோம். தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் உட்கார வைத்து பாடி காட்டுவோம். யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் எந்த ஆர்கெஸ்ட்ராவும் இல்லாமல் பஞ்சு அருணாசலத்துக்கிட்ட “மச்சானை பார்த்தீங்களா மலைவாழ தோப்புக்குள்ளே என்ற பாட்டை பாடி மேஜையில் தாளம் போட்டு காட்டினேன். அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

    இளையராஜா கிட்ட திறமை இருக்குன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க என்று அவரிடம் கேட்டவர்களிடம் நான் கண்டுபிடிக்கா விட்டாலும் பெரிய இசையமைப்பாளராக வந்திருப்பார். காரணம் அவர்கிட்ட திறமை இருக்கு என்றார்.இந்த படத்தின் டைரக்டர் சுப்புசுஜாதாவும் அப்படித்தான். அவரிடம் திறமை இருக்கிறது. இவ்வாறு இளையராஜா 

    தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் !

    தூத்துக்குடி  மாவட்டம் எட்டையபுரம் வட்டாச்சி அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை கேட்டு நடையாய்நடந்திருக்கிறார் இந்த மூதாட்டி.     ஆதரவற்ற நிலையில் இருக்கும் இந்த மூதாட்டிக்கு யாரும் உதவாமல்போகவே,  பசி மயக்கத்திலும் கிறக்கத்திலும் வட்டாட்சி அலுவலக வளாகத்திலேயே மயங்கி சோர்ந்துவிட்டார். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய மகாகவி பாரதி பிறந்தமண் தான் இந்த எட்டையபுரம்.  இங்கேதான் இந்த கொடுமை.

    தடுப்புக் காவலில் உள்ள கே.பி. எப்படி முல்லைத்தீவு செல்ல முடியும்?: ஐ.தே.க!

    அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் உள்ளதாகக் கூறப்படும் விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாதன் (கே.பி)  எவ்வாறு விமானப்படை ஹெலிகொப்டரில் ராணுவப் பாதுகாப்புடன் முல்லைத்தீவு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.


    அத்துடன், வெள்ளைக் கொடி வழக்கிற்கு முன்பதாக கே.பி.யை நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
    கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஐ.தே.க. வின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார். எமது நாட்டை அழிக்கவும் படையினரையும் மக்களையும் கொலை செய்வதற்கும் சர்வதேச நாடுகளில் நிதி சேகரித்து விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய கே.பி. இன்று அரச விருந்தினராக பாதுகாக்கப்பட்டு வருகின்றார்.

    பாராளுமன்றத்தில் பலமுறை கே.பி. தொடர்பாக நாம் கேள்வி எழுப்பினோம். கே.பி. அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளை நடத்தி வருவதாகவும் சர்வதேச நாடுகளிலுள்ள புலிகளின் கப்பல்கள், பெற்றோல் நிரப்பும் நிலையங்கள் உட்பட சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொள்ளப் போவதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் இதுவரையில் இவை பெற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா  என்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. அத்தோடு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவுமில்லை. வழக்கு தாக்கல் செய்யப்படவும் இல்லை. வெள்ளைக் கொடி வழக்கு விசாரணைக்கு முன்பதாக கே.பி. க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். 

    பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாட்டை அழித்த கே.பி. விமானப்படை ஹெலிகொப்டரில் ராணுவப் பாதுகாப்புடன் முல்லைத்தீவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சுதந்திரமாக சுற்றித் திரிகின்றார்.


    அரச தடுப்புக் காவலில் இருப்பதாக கூறப்படும் கே.பி. அரச விருந்தினராக பாதுகாக்கப்படுகிறார். விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அரசாங்கம் சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்க முன்வருவதில்லை என திஸ்ஸ அத்தநாயக்க கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    ஜெயலலிதாவை விமர்சிப்பதா? இலங்கை அரசுக்கு சீமான் கண்டனம்!

     இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அந்த நாடு விமர்சித்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.


    இதுகுறித்து சீமான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

    தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முதல்வர் ஜெயலலிதா பற்றி இலங்கை அரசின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய அளித்துள்ள பதில்கள், இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் இலங்கை அரசை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதையே காட்டுகிறது.
    தீர்மானம் நிறைவேற்றியதெல்லாம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சி. உண்மைகளை அறியாமல் நிறைவேற்றப்பட்ட அர்த்தமற்ற தீர்மானங்கள். ஜெயலலிதாவிற்கு தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், இலங்கையின் கடற்பரப்பிற்குள் வந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்தட்டும். அதை அவர் முதலில் செய்ய வேண்டும் என்று கோத்தபய கூறியுள்ளார்.
    தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன் பிடிக்கிறார்கள், அது இலங்கை தமிழ் மீனவர்களைப் பாதிக்கிறது என்கிறார். இதில் உண்மை என்னவெனில், இந்திய கடற்பகுதிக்கு வந்து மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 70-க்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
    ஏதோ தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன் பிடிப்பதால் ஈழத்தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது போல் கோத்தபய பேசியுள்ளார். ஆனால் ஈழத்தமிழர் மீனவர்கள் ஆழ் கடலிற்கு வந்து மீன் பிடிக்க முடியாத வகையில் அவர்களை குறைந்த தூரத்திற்கு மட்டுமே கடலில் சென்று மீன் பிடிக்க இலங்கை அரசு அனுமதிக்கிறது.
    அவர்கள் நீண்ட தூரம் சென்று மீன்பிடிக்க முடியாத அளவிற்கே டீசல் வழங்குகிறது. தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும், மறுவாழ்வு தரப்பட வேண்டும், அதுதான் முக்கியமானது. அதை விட்டுவிட்டு போர்க்குற்றம் என்றெல்லாம் சத்தமிடுவது எந்தப்பயனையும் தராது என்று கோத்தபய கூறியுள்ளார். இவர் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை சரியாக படிக்கவில்லை என்பது தெரிகிறது.

    போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், இன்னமும் தமிழர்கள் முகாம்களிலேயே உள்ளனர். அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தம் செய்யப்படவில்லை. அவர்களுக்கு தேவையான உதவிகளையும் இலங்கை அரசு செய்யவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வருகிறது. எனவே அந்த நாட்டு அரசுக்கு எதிரான மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கோருகிறது.
    இத்தீர்மானம் குறித்து விளக்கமளித்த தமிழக முதல்வர் கூட, இலங்கை அரசை வழிக்கு கொண்டு வரவே பொருளாதார தடை அவசியமாகிறது என்று கூறினார். அதுமட்டுமல்ல, போர் முடிந்த பிறகும் அங்கு தமிழர்கள் எப்படிப்பட்ட அடக்கு முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் தமிழக முதல்வர் நன்றாகவே அறிந்துள்ளார். அதனால்தான் அங்கு அமைதி திரும்பிவிட்டது என்று பறைசாற்ற விரும்பும் இலங்கை அரசு சூழ்ச்சியுடன் நிறைவேற்ற முற்பட்ட கொழும்பு, தூத்துக்குடி கப்பல் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்று தனது கட்சியின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றினார்.
    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால் ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை என்று கோத்தபய கூறுகிறார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதன் விளைவே இலங்கைக்கு எதிராக நிதித் தடை கொண்டு வரவேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற அயலுறவுக் குழு நிறைவேற்றியுள்ள தீர்மானம் ஆகும்.
    அதுமட்டுமின்றி, இலங்கையில் நடந்த போர் குறித்து பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது. அது நிறைவேறினால், ஐ.நா. பாதுகாப்பு பேரவையிலேயே இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை தொடங்க அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரும் நிலை ஏற்படும்.
    விரைவில் அந்நாட்டு அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை தொடங்கும். அதில் ஈழத் தமிழர்களை ராஜபட்ச குழுவினர் இனப்படுகொலை செய்தது உறுதியாகும் என சீமான் தனது அறிக்கையில்

    மருத்துவ செலவாக குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்!


     650 வகையான நோய்களுக்கு கடந்த தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வரைதான் மருத்துவ செலவு அனுமதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் 950 வகையான நோய்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் வரை காப்பீட்டு திட்டம் மூலம் செலவழிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கூறினார்.   

    தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் டி.வெங்கடாசலம்(பெருந்துறை) பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள மருத்துவ திட்டத்தை மக்கள் அமோகமாக வரவேற்கிறார்கள். ஆனால், இந்த திட்டத்தில் எவ்வளவு பயன் என்பதனை தான் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் என்றார்.

    முந்தைய தி.மு.க. ஆட்சியில் ஒரு குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் மருத்துவ செலவு வழங்கப்பட்டது. ஆனால் புதிய திட்டமான, அ.தி.மு.க. அரசு கொண்டுவந்துள்ள திட்டத்தில் ஒரு வருடத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் மருத்துவ செலவு வழங்கப்படும். இதன் மூலம் 4 வருடங்களில் 4 லட்சரூபாய் வரை மருத்துவ செலவு கிடைக்கும். 
    உடனே முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு, உறுப்பினரின் கன்னிப்பேச்சு என்பதால் குறுக்கிடக்கூடாது என்றிருந்தேன். ஆனால், அவர் இந்த திட்டம் குறித்து கூறியதால், விளக்கம் அளிக்கிறேன். 

    முந்தைய திட்டத்தில் 642 வகையான சிகிச்சைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. ஆனால், இந்த புதிய திட்டத்தில் 950 வகையான சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...