|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 March, 2012

Oomai Vizhigal - ஊமை விழிகள் MOVIE ONLINE


Panchatantiram Movie ONLINE


Mappillai Goundar DVD Movie Online


பார்த்ததில் பிடித்தது!



பிரபாகரன் -25 குறிப்புகள்...

மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்.

நன்றி விகடன்.
 



பூட்டிய காருக்குள் 2 வயது சிறுவன் மூச்சுத் திணறி பலி!


பூட்டிய காருக்குள் இருந்த 2 வயது சிறுவன் மூச்சுத் திணறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் அஜாக்கிரதையால் அந்த சிறுவன் இறந்ததாக கூறப்படுகிறது.சென்னை, பட்டாபிராம் கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் மாருதி(25). இவர் உணவு பொருள் வழங்கல் துறையில் லாரி டிரைவராக இருக்கிறார். இந்த நிலையில், நேற்று மதியம் 1.15 மணியளவில் தனது வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த தனது காரில் 2 வயது மகன் இளமாறனுடன் ஏசியை போட்டுவிட்டு அமர்ந்திருந்தார். அப்போது, அவரது அலுவலகத்திலிருந்து போன் அழைப்பு வந்ததாக தெரிகிறது.அவசரத்தில் தனது மகனை காரிலேயே வி்ட்டுவிட்டு அதே பகுதியில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்று 1 மணிநேரத்திற்கு பின்னரே காரில் தனது மகனை விட்டு விட்டு வந்தது அவரது நினைவுக்கு வந்ததுள்ளது. உடனே, அவசரமாக வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த காருக்குள் ஓடி வந்து திறந்து பார்த்தபோது அவரது மகன் மயக்கமடைந்து கிடந்தான். உடனே அருகிலிருந்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். ஆனால், இளமாறன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதையும் கேட்காமல் மாருதி மகனின் உடலைத் தூக்கிக் கொண்டு சென்றுவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், சிறுவன் இறந்ததற்கான காரணம் உறுதியாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தையோ, தாயோ புகார் கொடுக்காததால், போலீசாரே வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர். மேலும், சிறுவனின் மரணத்திற்கு தந்தையின் அஜாக்கிரதையே காரணம் என்று கூறி அவரை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பெற்றோர்களே உஷார்: காருக்குள் இருந்த சிறுவன் இறந்ததற்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை. ஆனால், காருக்குள் ஏசி ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்ததால் அதிலிருந்து வெளியான விஷ வாயு தாக்கி சிறுவன் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவலை சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்கள் மறுத்துள்ளனர். நிறுத்தியிருக்கும்போது காரின் ஏசியிலிருந்து விஷ வாயு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றும், காருக்குள் போதிய காற்று இல்லாததால் சிறுவன் இறந்திருக்கலாம் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, தந்தையின் அஜாக்கிரதை பிஞ்சு மழலையின் உயிரை பறித்துவிட்டது. இனியாவது காருக்குள் குழந்தைகளை விட்டுவிட்டு ஷாப்பிங் செல்வது போன்றவற்றை தவிர்த்தால் இதுபோன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் நடக்காது. 

உலகை உலுக்கப் போகும் பிரபாகரன் மகன் கொடூரக் கொலை வீடியோ!

உலகையே உலுக்கப் போகும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய பதைபதைப்பூட்டும் வீடியோ காட்சிகளை லண்டனின் சேனல் 4 நிறுவனம் நாளை வெளியிடுகிறது. இதனால் உலகம் எங்கும் உள்ள அத்தனைத் தமிழர்களும் நாளைய இரவை நோக்கி பெரும் சோகத்துடன் காத்துள்ளனர். பல நாட்டு ராணுவ உதவியுடனும், ஏராளமான சதி வேலைகளின் உதவியுடனும், விடுதலைப் புலிகளின் நிழலைக் கூட நெருங்க முடியாத இலங்கை ராணுவம், கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் ஈழப் போரை கொடூரமாக முடித்தது. லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழ் இனத்தையே ஈழத்தில் சின்னாபின்னமாக்கி விட்டது.
ரத்த வெறி பிடித்த ஓநாய்களை விடவும் மோசமாக சிங்கள ராணுவத்தினர் நடந்து கொண்ட வெறிச்செயல், ஈனச் செயல், இனவெறி கொடூரம் குறித்த வீடியோ ஆதாரங்களை கடந்த ஆண்டு சேனல் 4 நிறுவனம் வெளியிட்டு உலகையே அதிர வைத்தது. இந்த நிலையில் தற்போது இன்னொரு வீடியோ படத்தை அது உருவாக்கியுள்ளது. லண்டன் நேரப்படி நாளை இரவு 10.55 மணியளவில் ஒளிபரப்பவுள்ளது சேனல் 4 நிறுவனம். இந்த வீடியோ படத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்ட கொடூரக் காட்சி அடங்கியுள்ளது. மேலும் பிரபாகரன் குறித்த பரபரப்புக் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்த காலம் மெக்காரே தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணப் படத்தை இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை நாலரை மணியளவில் காணலாம். ஐ. நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே ஆகிய நாடுகள் கொண்டு வந்துள்ளன. இந்தப் பின்னணியில் நாளை வெளியாகவுள்ள வீடியோ காட்சிகள் உலக சமுதாயத்தை வெகுண்டெழச் செய்து, இலங்கையை வீழத்தும் என்ற பெரும் நம்பிக்கையுடன் ஈழப் போரில் நீதி கேட்டும் நிற்கும் ஈழத் தமிழர்களும், உலகின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்களும் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர். குறிப்பாக நாளைய வீடியோவில் தங்களது தலைவர் பிரபாகரன் குறித்த செய்தி இருக்குமோ என்ற பதைபதைப்பும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் மனதில் மேலோங்கி நிற்கிறது. 

சேனல் 4 நிறுவனத்திடம் பிரபாகரன் குறித்த முக்கிய வீடியோ.

லண்டனைச் சேர்ந்த சேனல் 4 டிவி நிறுவனத்திடம் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த முக்கிய வீடியோவும் கிடைத்துள்ளதாக டெய்லி மெயில் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மிகக் கொடூரமான முறையில் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.


பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்தரின் மிக மிக நெருக்கமான முறையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும், அதுதொடர்பான வீடியோ காட்சியை ஒளிபரப்பப் போவதாக சானல் 4 நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அந்த வீடியோ காட்சியில் பிரபாகரன் குறித்த முக்கிய காட்சியும் இடம் பெற்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இலங்கையின் கொலைக்களங்கள் என்ற பெயரில், 2 ஆண்டுக்கு முன்பு, இலங்கையில் நடந்த போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள், படுகொலைகள் குறித்த ஆவணப்படத்தை சேனல் 4 ஒளிபரப்பியது. தற்போது அதன் தொடர்ச்சியாக இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற பெயரில் புதிய ஆவணப்படத்தை அது தயாரித்துள்ளது.


அதில்தான் பாலச்சந்திரன் படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது. அதிலேயே பிரபாகரன் குறித்த காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு மணி நேரம் ஓடக் கூடிய இந்த வீடியோ காட்சிகளின் நம்பகத்தன்மையைப் பரிசோதித்து இவை உண்மைதான் என்று தெரிவித்துள்ள தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பெளன்டர் , சேனல் 4 நிறுவனத்திற்கு பாலச்சந்திரன் படுகொலைச் சம்பவம் தவிர்த்து அவனது தந்தை பிரபாகரன் குறித்த ஒரு படமும் கிடைத்தது. அதில் பிரபாகரனின் தலையில் மிக பலத்த காயம் காணப்பட்டது. அவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது என்றார். 

ஐந்து மாநில தேர்தல் 690 எம்.எல்.ஏ.,க்களில் 252 பேர் கிரிமினல்!

:நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில், தேர்வு செய்யப்பட்டுள்ள 690 எம்.எல்.ஏ.,க்களில் 252 பேர் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள்.உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிந்து, 690 எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 35 சதவீத எம்.எல்.ஏ.,க்கள், அதாவது 252 பேர் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள். இதே போல, தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.,க்களில் 66 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். அதாவது 457 பேர், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து கொண்டவர்கள். தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2007ம் ஆண்டு இதே மாநிலங்களில் தேர்தல் நடந்த போது, 27 சதவீதம் பேர் தான், அதாவது 190 பேர் கிரிமினல் பின்னணியுடன் இருந்தனர். இதே போல, அப்போதைய தேர்தலில் 34 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் அதாவது, 235 பேர் தான் கோடீஸ்வரர்களாக இருந்தனர். உ.பி., நிலவரம்:உத்தர பிரதேசத்தில் புதிதாகத் தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.,க்களில் 189 பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள். கடந்த தேர்தலில், 140 பேர் மீது மட்டும் கிரிமினல் வழக்குகள் இருந்தன. இம்மாநிலத்தில் தற்போது 271 எம்.எல்.ஏ.,க்கள் கோடீஸ்வரர்கள்.
ஆளும் சமாஜ்வாதி கட்சியின் சார்பில், பிகாபூர் தொகுதியிலிருந்து தேர்வாகியுள்ள மித்ர சென் என்பவர் மீது, 36 கிரிமினல்வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியின் சார்பில், சுவார் தொகுதியிலிருந்து தேர்வாகியுள்ள நவாப் காசிம்  அலிகானுக்கு 56.89 கோடி ரூபாய் சொத்து உள்ளது. முபாரக்பூர் தொகுதியிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்வாகியுள்ள, ஷா ஆலம் என்பவருக்கு 54.44 கோடி ரூபாய் சொத்து உள்ளது. மணிப்பூர்:மணிப்பூரில் தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் யார் மீதும் கிரிமினல் வழக்குகள் இல்லை. கடந்த தேர்தலின் போது ஒருவர் மட்டுமே கோடீஸ்வரராக இருந்தார். ஆனால், இந்த முறை 16 கோடீஸ்வரர்கள் தேர்வாகியுள்ளனர். பஞ்சாப்: பஞ்சாபில் 22 பேர் கிரிமினல் பின்னணியுடன் தேர்வாகியுள்ளனர். கடந்த முறை 21 பேர் மட்டுமே கிரிமினல் பின்னணியுடன் இருந்தனர். தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.,க்களில் 86 சதவீதம் பேர் (117 பேர்) கோடீஸ்வரர்கள் தான். கடந்த தேர்தலில் 66 சதவீதமாக இருந்த (77 பேர்) கோடீஸ்வரர்கள் இந்த முறை அதிகரித்துள்ளனர்.கோவா: கோவாவில் 37 கோடீஸ்வரர்கள் எம்.எல்.ஏ.,க்களாக தேர்வாகியுள்ளனர். 12 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.கடந்த தேர்தலில் தேர்வானவர்களில் ஒன்பது பேர் மட்டுமே குற்றப் பின்னணியுடன் இருந்தனர். உத்தரகண்ட்:உத்தரகண்டில் தேர்வாகியுள்ள சட்டசபை உறுப்பினர்களில் 19 பேர் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள்; 32 பேர் கோடீஸ்வரர்கள். கடந்த தேர்தலின் போது, 17 பேர் கிரிமினல் பின்னணியுடன் இருந்தனர்; 12 பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். 

இதே நாள்...

  •  வில்லியம் ஹேர்ச்செல், யுரேனஸ் கோளை கண்டுபிடித்தார்(1781)
  •  மங்கோலியா, சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது(1921)
  •  ஆக்ஸிஜனை கண்டுபிடித்த ஜோசப் பிரீஸ்ட்லி பிறந்த தினம்(1733)
  •  இந்தியாவின் நவீன தொழிற்துறையின் முன்னோடியான ஜாம்ஷெட்ஜி டாடா பிறந்த தினம்(1839)
  •  தமிழறிஞர் கா.நமச்சிவாயம் இறந்த தினம்(1936)

தண்ணீர் பிரச்னை சர்வதேச நாடுகளுக்கு ஐ.நா எச்சரிக்கை!


உலகம் முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்னை விசுவரூபம் எடுத்து வருவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், உணவுப் பொருட்கள் விலையேற்றம் மற்றும் பருவநிலையில் அதீத மாற்றங்கள் என பெரும் அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக தண்ணீர் பேரவை, 1997ம் ஆண்டில் இருந்து மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தண்ணீர் பிரச்னைகள் குறித்த கூட்டத் தொடரை நடத்துகிறது. பேரவையின் ஆறாவது கூட்டத் தொடர், பிரான்ஸ் நாட்டின் மார்செய்ல் நகரில் நேற்று துவங்கியது. வரும் 17ம் தேதி வரை இக்கூட்டத் தொடர் நடக்கிறது.இத் தொடரில், 180 நாடுகளின் பிரதிநிதிகள், 140 அமைச்சரக பிரதிநிதிக் குழுக்கள், 800 வல்லுனர்கள், 25 ஆயிரம் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத் தொடரை முன்னிட்டு, உலகளவில் உருவாகியுள்ள தண்ணீர் பிரச்னை குறித்து ஐ.நா., விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:வரும், 2050ம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகை தற்போதைய, 700 கோடியில் இருந்து, 900 கோடியாக அதிகரிக்கும். மக்கள் தொகை அதிகரிப்பு, இறைச்சி சார்ந்த உணவுப் பழக்கம் அதிகரிப்பு இவற்றால், 2050ல், 70 சதவீதம் வரை உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.

தற்போதைய உற்பத்தி வழிமுறைகள் மூலம், எதிர்காலத்தில் உலகளவிலான விவசாய உற்பத்தியை, 20 சதவீதம் மட்டுமே அதிகரிக்க முடியும்.தற்போதைய விவசாயத்தில், சராசரியாக 70 சதவீதம் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் தண்ணீர் 44 சதவீதமும், பின்தங்கிய நாடுகளில் 99 சதவீதமும் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் கடந்த, 50 ஆண்டுகளில் மும்மடங்கு வேகத்தில் குறைந்துள்ளது. இதில் பெரும்பாலான தண்ணீர் குடிநீருக்காக வினியோகிக்கப்படுகிறது. சில இடங்களில், புதுப்பிக்க முடியாத நிலத்தடி நீர் வளங்கள் மிக மோசமான நிலையை எட்டி விட்டன.

விவசாயம், உணவு உற்பத்தி, மின்சாரத் தேவை இவற்றின் அதிகரிப்பாலும், மோசமான நீர் மேலாண்மையாலும், நல்ல தண்ணீருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும்.அதேநேரம் பருவநிலை மாற்றம் உண்மையான விசுவரூபம் எடுக்கக் கூடிய அச்சுறுத்தலாக வளர்ந்து வருகிறது. முறையான திட்டம், அமலாக்கம் இல்லை என்றால், லட்சக்கணக்கான மக்கள், பசி, நோய், மின் பற்றாக்குறை மற்றும் வறுமையில் விழுவதை நம்மால் தடுக்க முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், குடிசைகள் எண்ணிக்கையில், சென்னை நான்காம் இடம்.


தமிழக நகரங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் கிராமப்புற குழந்தைகளை விட மோசமான நிலையில் உள்ளதாக, ஐ.நா.,வின் அங்கமான, "யூனிசெப்'பின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனிசெப் சார்பில், உலக குழந்தைகளின் நிலை குறித்த அறிக்கை, சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின் முக்கிய தகவல்கள்:

* ஆறு வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, நகரங்களில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுவே, கிராமப்புறங்களில், 13 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
* தமிழகத்தில், 48 சதவீத குழந்தைகள் நகரங்களில் வாழ்கின்றனர்.
* இந்தியாவில், 50 ஆயிரம் பகுதிகளில் குடிசைகள் நிறைந்துள்ளன. இதில், மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இங்கு, 35 சதவீதமும், ஆந்திராவில் 11 சதவீதம், மேற்குவங்கத்தில் 10 சதவீதம், தமிழகம் மற்றும் குஜராத்தில் 7 சதவீதம் குடிசைப் பகுதிகள் உள்ளன.
* இந்தியாவில், குடிசைகள் எண்ணிக்கையில், சென்னை நான்காம் இடம் வகிக்கிறது. 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி, சென்னையில் நான்கில் ஒரு பங்கினர், குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். சென்னையில், 12 லட்சம் மக்கள் குடிசையில் வாழ்கின்றனர்.
* கிராமப்புறத்தில் வாழும் குழந்தைகளை விட, நகர குழந்தைகளின் நிலை வறுமை காரணமாக மோசமாக உள்ளது. பள்ளிகள், மருத்துவமனை, நீர் நிலைகள் ஆகியவற்றுக்கு அருகில், குடிசைப் பகுதி குழந்தைகள் வாழ்ந்தாலும், வறுமை மற்றும் பாகுபாடான தன்மையால், அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.
* கிராமத்து தாய்களை விட, நகரத்து பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் பின்தங்கியுள்ளனர். இவர்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை அதிகம் விரும்புவதில்லை.
* தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், குழந்தைகளின் இறப்பு விகிதம், 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசுக்காக நடிகை தமன்னா...



சூதாட்ட விவகாரத்தில் தனது படத்தை அனுமதியின்றி வெளியிட்ட "சண்டே டைம்ஸ்' பத்திரிகை மீது சட்டப்படி நடவடிக்கை!



கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் தனது படத்தை அனுமதியின்றி வெளியிட்ட "சண்டே டைம்ஸ்' பத்திரிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக பாலிவுட் நடிகை நூபுர் மெஹ்தா மிரட்டியுள்ளார். பிரிட்டனை சேர்ந்த "சண்டே டைம்ஸ்' பத்திரிகை, கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்டது. இதில், பேட்ஸ்மேனுக்கு மந்தமாக ஆட, ரூ. 35 லட்சம், பவுலர் ரன்களை வாரி வழங்க, ரூ. 40 லட்சம், போட்டியின் முடிவை உறுதி செய்யும் வீரர் அல்லது நிர்வாகிக்கு ரூ. 6 கோடி வரை சூதாட்ட புக்கிகள் பணம் கொடுப்பதை அம்பலப்படுத்தியது. 


கடந்த ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் மோதிய உலக கோப்பை அரையிறுதியில் சூதாட்டம் நடந்ததாக தெரிவித்தது. வீரர்களை கவர, பாலிவுட் நடிகை ஒருவரை சூதாட்ட புக்கிகள் பயன்படுத்தியதாக படத்துடன் செய்தி வெளியிட்டது. இது தொடர்பாக ஐ.சி.சி., விசாரணை நடத்த உள்ளது. தற்போது "சண்டே டைம்ஸ்' வெளியிட்ட நடிகையின் கவர்ச்சி படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முகத்தை மறைத்து வெறும் உடலை மட்டுமே இப்படம் காட்டுகிறது. இது, தனது படம் தான் என பாலிவுட் நடிகை நூபுர் மெஹ்தா அடித்துக் கூறுகிறார். அனுமதியின்றி வெளியிட்டு இருப்பதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக எச்சரித்துள்ளார். 

இது குறித்து நூபுர் மெஹ்தா கூறியது: படத்தில் இருப்பது நான் தான். ஆனால், புகாரில் உண்மையில்லை. விளம்பரம் தேடுவதற்காக எனது படத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர். எனக்கு சூதாட்டத்தில் எவ்வித தொடர்பும் இல்லை. கிரிக்கெட் வீரர்களுடன் உறவும் இல்லை. எனது பெயருக்கு "சண்டே டைம்ஸ்' பத்திரிகை களங்கம் ஏற்படுத்தியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். எனக்கு தொடர்பு இருந்தால், ஆதாரத்துடன் வெளியிட்டிருக்க வேண்டும். பாலிவுட் மற்றும் இந்திய நடிகைகளுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். ஏதோ ஒரு நடிகையின் உருவ மாதிரி என்ற அடிப்படையில் வெளியிட்டிருந்தாலும் கூட, எனது அனுமதியை பெறவில்லை. இப்பிரச்னையில் சட்ட நடவடிக்கை எடுக்க, எனக்கு அனைத்து உரிமையும் உள்ளது. இவ்வாறு நூபுர் மெஹ்தா கூறினார்.

ஐயா யோக்கியவான் (மண்ணு மோகன் ) உள்நாட்டு மீனவன காப்பாத்த துப்பு இல்ல... இதுல இலங்கை தமிழர்களா!

இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்வதே நமது நோக்கம்  கலைஞருக்கு மன்மோகன்சிங் கடிதம்



தி.மு.க. தலைவர் கலைஞருக்கு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,  ‘’ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி மார்ச் 9-ந் தேதியிட்ட தாங்களின் கடிதத்துக்கு இந்த பதில் கடிதம் அனுப்பப்படுகிறது. இலங்கை வாழ் தமிழர்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு, முன்னேற்றம் இவற்றில் இந்தியா உயர் முக்கியத்துவம் கொடுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.   கடந்த 2009-ல் இனப்போர் முடிவுக்கு வந்ததும் அங்குள்ள தமிழ்களுக்கு அரசியல் ரீதியானதீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் இலங்கை அரசை இந்தியா இடைவிடாமல் வலியுறுத்தி வருகிறது. 

இடம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் விரைவிலேயே சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவசரகால சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச அமைப்பின் மூலம் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.  போரில் பாதிக்கப்பட்ட அனைத்து தமிழ் குடும்பங்களுக்கும் மனிதாபிமான உதவிகளை செய்ய வேண்டும். தமிழர் பகுதியில் இயல்பு நிலை திரும்ப தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
 
அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மறுவாழ்வு நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய அரசும் தேவையான உதவிகளை செய்து வருகிறது. வீடு கட்டி கொடுத்தல், கல்வி, சுகாதாரம், தொழில் பயிற்சி, விவசாயம், கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்தல் போன்ற திட்டங்களில் இந்தியாவும் பங்கெடுத்துள்ளது. இந்தியா மேற்கொண்ட முயற்சிகளால் தமிழர் பகுதியில் இயல்புநிலை திரும்பி உள்ளாட்சி தேர்தலும் நடைபெற்றுள்ளது. இலங்கை அரசு மேற்கொண்டு வரும் மறுவாழ்வு திட்டங்கள் தொடர்பான அறிக்கையை இந்திய அரசு வரவேற்றுள்ளது. மனித உரிமைகள் மீறல் தொடர்பாக, சுதந்திரமான, விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதை குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நாம் இலங்கை அரசை மீண்டும் வலியுறுத்தி உள்ளோம்.   ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நமது குறிக்கோள் எல்லாம் இலங்கை தமிழர்களின் எதிர்காலத்தை பற்றிய தாகவே எப்பொழுதும் இருந்து வருகிறது. இலங்கை தமிழர்கள் சமத்துவம், கவுரவம், சமநீதி, சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்வதே நமது நோக்கம் ஆகும்’’ என்று எழுதியுள்ளார். 
 

இது ஒரு நல்ல கேள்வி? ஆனால்??

 இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா முதலில் கொண்டு வந்திருக்க வேண்டும் திருச்சி சிவா.

ஜெனிவாவில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்குமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் முழக்கமிட்டனர். மாநிலங்களவையில் பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா, இலங்கை இறுதிப்போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா, பிரான்ஸ்,. நார்வே நாடுகள் கண்டன தீர்மானம் கொண்டு வந்துள்ளன. 

இலங்கை இறுதிப்போரின்போது ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். தார்மீகப் பொறுப்பேற்று இந்த தீர்மானத்தை இந்தியா முதலில் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் மற்ற நாடுகள் இந்த தீர்மானத்தை கொண்டுவந்துள்ளன. எனவே எந்தவிதமான தடுமாற்றமும் இலலாமல் இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். அதுதொடர்பாக எங்களக்கு உறுதியளிக்க வேண்டும் என்றார்.  

   

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...