|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 August, 2011

லோக்பாலுடன் எனது போராட்டம் நிற்காது அன்னா ஹசாரே!


எனக்கென்று, தனிப்பட்ட குடும்பம் எதுவும் இல்லை. இந்த நாடும், மக்களுமே என் குடும்பம். லோக்பாலுடன் எனது போராட்டம் நின்றுவிடாது. இதில், வெற்றியடைந்துவிட்டு, இன்னும் பல போராட்டங்களை கையில் எடுக்கத் தான் போகிறேன். விவசாயிகள் பிரச்னை, தொழிலாளர்கள் பிரச்னை, தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்டவைக்காக, அடுத்து களம் இறங்குவேன்'' என்று, அன்னா ஹசாரே தெரிவித்தார்.வலுவான லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்திட வலியுறுத்தி, காந்தியவாதியான அன்னா ஹசாரே, டில்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே, இரண்டு நாட்கள் திகார் சிறையில் உண்ணாவிரதம் இருந்த அவர், அதன் பின் ராம்லீலா மைதானத்திற்கு வந்து, தன் உண்ணாவிரதத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஒரு மேடை அமைத்து, அதில் அன்னா ஹசாரே மட்டும் அமரும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டாக்டர்கள் அவரை, அவ்வப்போது பரிசோதனை செய்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்த, ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில், மேடையிலிருந்தபடியே சில நிமிடங்கள் உரையாற்றிய ஹசாரே கூறியதாவது:
வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென, அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுகிறோம். இந்தப் போராட்டம், இத்துடன் நிறைவடைந்து விடும் என்று, யாரும் நினைக்க வேண்டாம். அரசாங்கத்தின் தவறான கொள்கைகள், நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்ப்பதற்கான ஒரு ஆரம்பமே இது.

லோக்பால் மசோதாவுடன், எனது போராட்டம் நின்று விடும் என, நினைக்காதீர்கள். மக்களை வாட்டி எடுக்கும், இன்னும் பல பிரச்னைகள் உள்ளன. அவற்றையெல்லாம் கையில் எடுக்கத் தான் போகிறேன். அரசாங்கத்தை எதிர்த்து, மற்ற பிரச்னைகளுக்காக இந்தப் போராட்டத்தை, இளைஞர் சக்தியுடன் நிச்சயம் விரிவுபடுத்துவேன்.குறிப்பாக விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு, நிறைய சங்கடங்களும் சிக்கல்களும் உள்ளன. தேர்தல் நடைமுறைகளில், பெரும் சீர்திருத்தம் கொண்டு வரப் பாடுபடுவேன். தற்போது, 10 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டால், அவர்களில் பாதிப் பேர் ஊழல்வாதிகளாக உள்ளனர். மீதிப் பேர் ரவுடிகளாக உள்ளனர்.

இவர்கள், மக்களை மதிப்பது இல்லை. இவர்களுக்கு, ஓட்டுப் போட வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை. இவர்களில் யாருக்கும் ஓட்டுப் போட விருப்பம் இல்லை என்றால், அதற்கும் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.பெரும்பாலான மக்களின் ஓட்டுக்களை வாங்காமலேயே, ஆட்சிக்கு வந்து அதிகாரம் செய்யும் போக்கே, தற்போது காணப்படுகிறது. இதை, தேர்தல் சீர்திருத்தங்கள் மூலமே, சரி செய்ய முடியும்.

விவசாயிகளின் வயிற்றில், அரசாங்கம் அடிக்கிறது. அவர்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்குப் பறித்து, பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறது. இதனால், விவசாயிகள் நாடு முழுவதும் குமுறிக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் நிலத்தை விற்கலாமா, வேண்டாமா என்பது குறித்து, அந்தந்த கிராம சபைகளுக்கு மட்டுமே அதிகாரம் வழங்க வேண்டும். வீட்டோ அதிகாரத்தை, கிராம சபைகளுக்கு அளித்தால் தான், இவ்விஷயம் சரிப்படும். இதற்காகவும் களம் இறங்கக் காத்திருக்கிறேன்.

அதேபோல, தொழிலாளர்கள் பிரச்னை, நாடெங்கும் வாட்டி வதைக்கிறது. குறைந்த ஊதியத்தை வழங்கி விட்டு, தொழிலாளர்களை வாட்டி வதைக்கின்றனர். பல நிறுவனங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களையே மதிப்பதில்லை. அரசாங்கமும் தட்டிக் கேட்பதில்லை. இந்த அவலத்திற்காகவும், குரல் கொடுப்பேன்.எனக்கென்று, தனிப்பட்ட குடும்பம் எதுவும் இல்லை. இந்த நாடும் மக்களும் தான் எனக்கு எல்லாமே. அவர்கள் தான், எனக்கு குடும்பம். எனவே, என் குடும்பத்திற்காகப் போராடுவதில் இருந்து, பின்வாங்கப் போவதில்லை.
இவ்வாறு, அன்னா ஹசாரே பேசினார்.

மழையால் பாதிப்பு* ஹசாரேக்கு என, தனியாகப் படுக்கை, தலையணை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காற்றாடி வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
* அவர், அவ்வப்போது படுத்துக் கொள்கிறார். மற்ற நேரங்களில் எல்லாம், கூட்டத்தினரைப் பார்த்து, கையசைத்து உற்சாகப்படுத்துகிறார்.
* டில்லியில் பெய்யும் மழை காரணமாக, ராம்லீலா மைதானம், சேறும் சகதியுமாக இருப்பதால், அந்த இடத்தைச் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
*டில்லி மாநகராட்சி பா.ஜ., வசம் உள்ளதால், இதற்கான ஏற்பாடுகள், ஜரூராக நடைபெற்று வருகின்றன.
* தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அங்கிருக்கும் பொதுமக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து வருகின்றன.
* மைதானம் முழுவதுமே தேசியக் கொடியும், நாட்டுப்பற்றுடன் கூடிய பாடல்களும், வந்தே மாதரம் மற்றும் இன்குலாப் ஜிந்தாபாத் கோஷங்களுமாகவே இருக்கின்றன.
* குடிநீர் மற்றும் சுகாதார வசதி, சரிவர செய்யப்படாததால், போராட்டத்தில் பங்கேற்ற 400க்கும் மேற்பட்டோர், தங்களுக்கு வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டதாக, அங்கு இருந்த மருத்துவக் குழுவினரிடம் சிகிச்சை பெற்றனர்.
* மைதானத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசாருக்கு, நேற்று முன்தினம் இரவு, தூக்கமில்லாத இரவாகவே கழிந்தது.
* அதிகாலை 3 மணிக்குத் தான், மைதானத்துக்குள் உணவு வினியோகம் செய்யப்பட்டது.
* போலீசாரும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர்களும், பசியுடன் இருந்ததால், அந்த உணவுகளை வாங்கி, ஆர்வமாகச் சாப்பிட்டனர். உணவு நன்றாக இருப்பதாக, போலீஸ் தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
* மேடையின் முன்பாக, போலீசாரால் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா, மேடை நிகழ்வுகளைப் படம் பிடிப்பதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, "டிவி' கேமராமேன்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
* மைதானத்தில், ஏதாவது சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் இருந்தால், உடனடியாக, அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது.
* பேச்சாளர்கள் பலரும், மைக்கில் பேசிக் கொண்டே உள்ளனர். இடையில், நாட்டுப் பற்றுடன் கூடிய பாடல்களை, பல்வேறு இளைஞர்களும் குழுவினரும் பாடியபடி உள்ளனர்.

நாடு முழுவதும் போராட்டம்:

* ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆமதாபாத், ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., மாணவர்கள், "ஆன்-லைன்' மூலம், மனு அளிக்கும் பிரசாரத்தைத் துவக்கியுள்ளனர்.
*ஹசாரேயின் போராட்டத்தை ஆதரிப்பதாக, பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் அறிவித்துள்ளார்.
* தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், மும்பை புறநகர் ரயில்களில், ஜன் லோக்பால் குறித்து, விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
* உ.பி., மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள், ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவாக, நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
* அந்தமான், போர்ட் பிளேரில் உள்ள, ஜவஹர்லால் நேரு ராஜ்கீயா மகாவித்யாலயா கல்லூரி மாணவர்கள், ஊழலுக்கு எதிராக, நேற்று பேரணி நடத்தினர்.

* பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

* ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி சிறைக் கைதிகள் 50 பேர், ஊழலுக்கு எதிராக, நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

""ஊழலுக்கு எதிராக, மக்கள் சக்தி கிளர்ந்தெழுந்துள்ளது. மக்களின் கோபத்தைப் புறக்கணித்து விட்டு, இறுமாப்புடன் மத்திய அரசு நடந்து கொள்ளக் கூடாது. பார்லிமென்டின் மற்ற அனைத்து அலுவல்களையும் ஒதுக்கி வைத்து விட்டு, கூடிய விரைவில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்

ராஜீவ் கொலையின்போது உங்கள் தலைவர்கள் எங்கே போனார்கள்? இளைஞர் காங். யுவராஜுக்கு சீமான் கேள்வி!

பெரியார் திராவிட கழகமும், நாம் தமிழர் இயக்கமும் இணைந்து மரண தண்டனையை ஒழிப்போம், மனிதநேயம் காப்போம் என கடந்த 16.08.2011 அன்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பேசுகையில்,

பேரறிவாளனை சிறைச்சாலை ஒரு மனிதனாக மாற்றியிருக்கிறது. அதேசமயம் சிறை பேரறிவாளனை சீர்த்திருத்தவில்லை. சிறையை பேரறிவாளன் சீர்த்திருத்தியிருக்கிறார். வேலூர் சிறை ஒரு கல்லூரியாக மாறியிருப்பதற்கு பேரறிவாளன் தான் காரணம். கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இதில் தலையிட்டு மூவரையும் மீட்க முயற்சிக்க வேண்டும்.இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காவல்துறை ஆணையரிடம் போய், என்னை (சீமான்) கைது செய்ய வேண்டும். எங்கள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார். சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அந்தக் கட்சியில் இருந்து எங்கள் கட்சிக்கு பாடுபட வேண்டாம். பேசாமல் விலகி எங்கள் கட்சிக்கு வந்துவிடுங்கள்.

நீங்கள் (யுவராஜா) எங்களை எதிர்த்து போராட வேண்டாம். நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களிடம் கேளுங்கள். அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்திற்கு வரும்போது, தன் தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய தலைவியாக இருந்த அம்மையார் இந்திரா காந்தியின் சிலை. காங்கிரஸ் கட்சியின் தலைவியின் சிலை. அய்யா ராஜீவ்காந்தி அவர்களுடைய தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள்.

திரளாக திரண்டு இருக்கிற என் தமிழ் உறவுகள் சாதாரணமான சீமான் நான் என்னுடைய வாகனத்தில் இருந்து இறங்கி இந்த மேடைக்கு வரும்போது கூட என்னை சுற்றி நூற்றுக்கணக்கான தம்பிகள் என்னை பாதுகாப்பாக பத்திரமாக அழைத்து வருவதை நீங்கள் பார்த்தீர்கள்.

பெருமைக்குரிய பெருமகள் இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர் அம்மையார் இந்திரா காந்தி அதுவும் உங்கள் கட்சியின் தலைவி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அந்த தலைவர் வரும்போது, அவரைவிட்டு எங்கே போனீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். அதற்கு பின்னர் சொல்லுங்கள் பேரறிவாளன் உள்பட மூன்று பேரை தூக்கில் போட வேண்டும் என்று. எங்கே போனார் அய்யா மூப்பனார். என் தம்பிகள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன் என்று சொன்ன தங்கபாலு எங்கே போனார். ப.சிதம்பரம் போனது எங்கே. ஜெயந்தி நடராஜன் போனது எங்கே. அய்யா ஈவிகேஎஸ் இளங்கோவன் எங்கே போய் நின்று கொண்டிருந்தார். அன்றைக்கு டாஸ்மாக் ஒன்றும் இல்லையே. எங்கே போனீங்க நீங்க. எங்கே போனீங்க நீங்க.

யுவராஜ் அவர்களே தன் தலைவனுக்கு அருகே வராமல் தனித்து சாகவிட்ட துரோகத்திற்காக உங்கள் தலைவர்களை முதலில் தூக்கிலிடு. பிறகு என் தம்பிகளை தூக்கிலிட சொல்லுங்கள். ராஜீவ் காந்தி மீது பற்றுக்கொண்டவர் என்று சொல்லுகிறீர்கள். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த நான் சொல்லுகிறேன் இந்திரா காந்தி செத்ததுக்கு மூன்று நாள் என் வீட்டில் சோறு ஆக்கவில்லை. படிக்கிற காலத்தில் அழுது கிடந்தேன். என் தாய் போல நேசித்து வாழ்ந்தேன். உங்களுக்கு இந்திரா காந்தி யார் என்று தெரியுமா.

என்னை கைது செய்யச்சொல்லி மனு கொடுக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளாக ஆண்ட நீங்கள், சோனியா காந்திக்கு இந்த நாட்டில் வைத்தியம் பார்க்க கூட வசதியில்லாத நிலையில் இந்த நாட்டை வைத்திருக்கிறீர்கள். உங்களிடம் பணம் இருக்கு. அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கிறீர்கள். என்னிடம் பணம் இல்லை. என்ன செய்வது. நேராக சுடுகாட்டில் போய் படுத்துவிடுவதா.

யுவராஜ் அவர்களே, நீங்கள் சரியான ஆளாக இருந்தால், இதேபோல் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள். இந்த இடத்தில் நான் தீக்குளிக்கிறேன். மறுபடி உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 500 ஓட்டு வாங்கி காட்டுங்கள். இல்லையேல் அனைத்து கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி வைத்து, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி. யுவராஜ் அவர்களே உங்களுக்கு ராகுல்காந்தி மட்டும்தான் தெரியும். மோதிலால்நேரு, ஜவகர்லால் நேரு என எனக்கு எல்லாம் தெரியும். இவ்வாறு சீமான் பேசினார். 

இந்த வார ராசி பலன் (19-8-11 முதல் 25-8-11 வரை)

மேஷம்

பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்பில் கவனம் செல்லும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கன்னிப் பெண்கள் மனம் மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும்.

வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நலம். சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்கள் பற்றி பேச வேண்டாம்.

ரிஷபம்

பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். உறவினர்களும், நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கும் வேலையை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்

பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மனதில் புது தெம்பு பிறக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். கணவரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும்.

வேலை பார்ப்போருக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன்தொகை கிடைத்து மகிழக்கூடும். வேலை பளு அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கடகம்

பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பண வரவு சீராக இருக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். உங்கள் திறமைகள் பளிச்சிடும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். பிரச்சனைகள் வந்தாலும் அதை எளிதில் சமாளித்துவிடுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். சேமிப்பில் கவனம் தேவை.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கக்கூடும். சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம்.

சிம்மம்

பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். கனவுகள் நனவாகும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். பதவிகளும், கௌரவமும் தேடி வரும்.

பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய ஆடைகள் கிடைக்கக்கூடும். உறவினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கலாம்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். மனம் சந்தோஷமாக இருக்கும்.

கன்னி

பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண வரவுகள் கைக்கு வந்து சேர தாமதமாகலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். மகன் அல்லது மகளுக்கு புதிய வேலை கிடைத்து மகிழக்கூடும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். வீண் செலவுகளைக் குறைக்கவும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்

பொது: திருப்திகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லுங்கள். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். அதனால் சோர்வாக காணப்படுவீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.

விருச்சிகம்

பொது: சுமாரான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். தொலை தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. பண வரவு நன்றாக இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை.

பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கன்னிப் பெண்கள் மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும்.

தனுசு

பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு இடமாற்றம் கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.

மகரம்

பொது: சுமூகமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். பெரிய மனிதர்களை சந்திக்கக்கூடும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். எதிலும் நிதானம் தேவை.

வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் சிறப்பாக பணியாற்றுவீர்கள். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். அடுத்தவர்களைப் பற்றி விமர்சி்க்க வேண்டாம்.

கும்பம்

பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு சீராக இருக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். நெருங்கிய உறவினர் ஒருவரை சந்தித்து மகிழக்கூடும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். உறவினர் இல்லத்து சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழக்கூடும். பொறுமையாய் இருந்து பெருமை தேடிக்கொள்ளவும்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.

மீனம்:


பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. குல தெய்வ வழிபாடு செய்ய குடும்பத்தோடு வெளியூர் செல்ல நேரலாம்.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடத்த முயற்சிகள் மேற்கொள்ளக்கூடும். சகோதர வழி உறவுகள் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழக்கூடும். வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

இதயநோயை குணமாக்கும் பிரண்டை!

இந்தியாவே மூலிகைகள் நிறைந்த தேசம்தான். நம்நாட்டில் கிடைக்கும் மூலிகைகளே நமது நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளன. காடு, மலைகளில்தான் மூலிகைகள் வளரும் என்பதில்லை. சாலையோரங்களிலும்,வயல்வரப்புகளிலும் கூட மூலிகைகள் தானாக வளர்ந்து நிற்கின்றன. வேலிகளில் படர்ந்து வளரும் பிரண்டை எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பிரண்டை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் கொடியாகும்.

இதில் ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன. முப்பிரண்டை கிடைப்பதற்கரியது. இது மலைப் பகுதியில்தான் அதிகம் காணப்படும். இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் வைட்டமின் சி ஆகியவை காணப்படுகின்றன.


மருத்துவ மூலிகை: இலைகளும், இளம் தண்டுத் தொகுதியும் உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீராணகோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.

மெலிந்த உடல் குண்டாக: ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.

வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

பிரண்டை துவையல்: எலும்பு சந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். அவர்கள் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.

இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.

மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.

ரத்த ஓட்டம் சீராகும்: உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.

எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும். கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.

பொன்னிறம் தரும் புங்கை பால்!

புங்கை மரத்தின் தாயகம் இந்தியா. குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலேயே இவை தோன்றியிருக்க வேண்டும் என்று தாவரவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவிலிருந்து இந்த மரம் தென்கிழக்கு ஆசியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும், ஹவாய்க்கும், அமெரிக்காவில் உள்ள புளோரிடாவிற்கும் இந்த மரம் பரவியிருக்கிறது.

ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான். எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது. பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். சாலை ஓரங்களில் நிழல் தரவும், மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று. வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு. புங்கை மரத்தின் மலர்கள், விதைகள், இலைகள், பட்டை,வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: விதை, எண்ணெய், மலர்கள்,இலைகள், தண்டுப்பட்டை, ஆகியவற்றில் இருந்து பல ரசாயனப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. கருஞ்சின்,பொன்காப்பின்,பொன்காக்ளாப்ரோன்,பொன்கால்,கரஞ்சாக்ரோமின்,கனுகின்,நீயோக்ளாப்ரின் போன்றவை.

நோய் எதிர்ப்பு சக்தி: புங்கன் கிருமிகளை அகற்றி உடலைத் தேற்றும் குணம் உடையது. புங்கன் இலையைக் குடிநீரிட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த கணத்திற்குக் கொடுக்கலாம். புங்கன் இலையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதை குளித்து வந்தாலும் அல்லது ஒற்றடமாக கொடுத்து வந்தாலும் கீல் வாத நோய்கள் கட்டுப்படும். புங்கன் இலைச்சாற்றை வயிறு பொருமலுக்கும், கழிச்சலுக்கும் குறிப்பிட்ட அளவு உள்ளுக்குக் கொடுக்க குணம் தெரியும். புங்கன் இலையை அரைத்து ரத்த மூலத்திற்குப் பற்றிடலாம்.

இலைகளின் சாறு, இருமல், வாயுக்கோளாறு, அஜீரணம்,பேதி ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும்.கஷாயம் பெரி-பெரி நோயை குணப்படுத்தும். புங்கமரத்தின் பால் புண்களையும், வாய்வையும் நீக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு பொன்போன்ற நிறத்தைக் கொடுக்கும். இந்த பாலை புண்களுக்குப் போட்டு வந்தால் விரைவில் அவை ஆறும்.

நீரிழிவை குணமாக்கும் மலர்கள்: மலர்கள் நீரிரிழிவு நோய்க்கு மருந்தாகும். நீரிழிவு நோயினருக்கு அதிக தாகம் ஏற்படும். இதற்கு புங்கம் பூவை கசாயமிட்டு அருந்தி வரலாம். புங்கன் பூவை தேவையான அளவுஎடுத்துக் கொண்டு சிறிது நெய் விட்டு வறுத்து இடித்துப் பொடிசெய்து 500 மி.கி. முதல் 1 கிராம் வீதம் உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மேக நோய்கள் குணமாகும் புளிப்பு, வாயு பதார்த்தங்களை இச்சமயம் நீக்க வேண்டும். பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை 2 அல்லது 3 மண்டலம் தேனில் கொள்ள மதுமேக ரணங்கள் தீரும். புகை, போகம், புளி, மீன் கருவாடு நீக்கவும்.

புண்களை ஆற்றும் விதைகள்: விதைகளின் பொடி கக்குவான் இருமலுக்கு நல்லது. எண்ணெய் அஜீரணத்துடன் கூடிய ஜுரத்தை குணப்படுத்தும். தோல் நோய்களுக்கு புறப்பூச்சு மருந்தாகப் பயன்படும். புழுவைத்த புண்களை ஆற்றும்.

புங்கம் விதையிலிருந்து குழித்தைல முறைப்படி எடுக்கப்பட்ட எண்ணெயை குறிப்பிட்ட அளவு உள்ளுக்கும், மேலும் பூசி வர மேகம், பாண்டு முதலிய நோய்கள் குணமாகும். நரை,திரை,மூப்பு நீங்கி இளமையோடு நீண்ட காலம் வாழலாம். சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு புங்கன் விதைப் பொடியை தேனுடன் கலந்து 1 முதல் 5 அரிசி எடை அளவு கொடுக்க குணம் தரும். இதையே தேள் கடி நஞ்சுக்கும் உண்டால் அவ்விஷம் முறியும்.

வேரில் எடுக்கப்படும் சாறு ஆழமான புழுவைத்த புண்களை ஆற்றும், பற்களை சுத்தப்படுத்தவும்,ஈறுகளை வலுப்படுத்தவும் பயன்படும். புங்கன் வேரை காடியில் அரைத்து விதை வீக்கத்திற்கு பற்றிட்டு வர வீக்கம் குறையும். புங்கன் வேர்ப் பட்டையைப் பொடி செய்து 500 மி.கி. வீதம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால் இருமல், ஈளை முதலியவை குணமாகும்.

பயோடீசலாகும் விதை: புங்கன் எண்ணெயிலிருந்து தற்பொழுது பயோடீசல் தயார் செய்து வாகனம் மற்றும் ஆயில் இஞ்ஜின்களுக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். இந்த ஆயிலைப் பிரிக்கும் போது கிளசரின் மற்றும் மெத்தனால் கிடைக்கின்றது. இந்த ஆயில் சோப்பு செய்யப் பயன்படுத்தப் படுகிறது. அதன் புண்ணாக்கு பயிர்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.

எலும்புகளை பலப்படுத்தும் 'ஜூஜுபி'!

ஜூஜுபி என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இலந்தைப் பழத்தின் தாயகம் சீனா. இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். இலந்தையில் மாவுப் பொருள் , புரதம், தாது உப்புகள், மற்றும் இரும்புசத்தும் உள்ளது. இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.

இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

பித்த மயக்கத்தை போக்கும்: உடலில் பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும். .

கால்சியம் சத்தினை அதிகரிக்கும்: உடம்பிலுள்ள எலும்புகளுக்கும் பற்களுக்கும் உறுதி தரும் உடம்பில் பலம் பெருகும். பகல் உணவுக்குப் பிறகு இலந்தைப்பழத்தை உட்கொண்டால் செரிமானம் உண்டாவதுடன் பித்தமும் கபமும் சாந்தமுறும். பழத்தை உலர்த்தி கொட்டையை நீக்கி உட்கொண்டால் கபத்தை வெளிக் கொண்டு வரும்.

உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது. பற்களும் உறுதிபெறும். கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும்

செரிமானத்தை தூண்டும்: பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும். பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். அவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

நலிந்து போன பொருளாதாரத்தை ஆய்வு செய்ய ரூ. 5 கோடியில் தயாரிக்கப்பட்ட பஸ்சில் ஒபாமா பயணம்!

பொருளாதார வீழ்ச்சியால் சரிந்த தன் செல்வாக்கை மீட்டெடுக்கும் யாத்திரையை தொடங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அமெரிக்க பொருளாதார மீட்சி தொடர்பான ஆய்வு என்ற பெயரில் ஒபாமா மேற்கொண்டுள்ள இந்த பஸ் பயணத்திற்காக ரூ. 5 கோடியில் அதி நவீன வசதிகள் கொண்ட சொகுசு பஸ்சை உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதனால், அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார். சரியான திட்டமிடுதல் இல்லாத அவரது கொள்கைகளின் காரணமாகவே பொருளாதாரம் வீழ்ச்சி கண்டதாக அமெரிக்கா முழுவதும் அவர் மீது அதிருப்தி அலை வீசுகிறது.

இந்த நிலையில், தனது செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தும் வகையில் மக்களை நேரில் சந்தித்து கருத்துக்களை கேட்க அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல மாகாணங்களில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதால், அவருக்காக நவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சொகுசு வசதிகள் நிறைந்த பஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.

பார்க்க நம்ம ஊர் சென்னை டூ பெங்களூர் ஆம்னி பஸ் போலத்தான் இது தெரிகிறது. ஆனால் பக்கா பாதுகாப்பு வசதிகளுடன் இதை வடிவமைத்துள்ளனர். இந்த பஸ்சில்தான் அவர் தற்போது பயணம் மேற்கொண்டுள்ளார். முழுக்க முழுக்க கறுப்பு வண்ணத்தில் இந்த பஸ் மிளிர்கிறது. ரசாயண தாக்குதல் மற்றும் குண்டுவெடித்தால்கூட பஸ்சில் ஒரு சிறு துரும்பு கூட சேதமடையாது. புல்லட் புரூப் கொண்ட கண்ணாடி மற்றும் பாகங்களால் பஸ்சின் பாடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

டயர்களும் பஞ்சர் புரூப் தொழில்நுட்பம் கொண்டது. தவிர, பஸ்சுக்குள் சிறிய ரத்த வங்கி, கூட்ட அரங்கம், சிறிய சமையலறை, ஓய்வு அறை ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது. வயர்லெஸ் டெலிபோன் மற்றும் செயற்கைகோள் தொடர்பு வசதிகளும் இருக்கிறது.

இந்த பஸ்சை கனடாவை சேர்ந்த பிரபல பஸ் பாடி பில்டிங் நிறுவனமான பிரெவோஸ்ட் வடிவமைத்துள்ளது. உள்ளலங்காரம் மற்றும் வசதிகளை ஹெம்பில் பிரதர்ஸ் கம்பெனி வடிவமைத்துள்ளது. ரூ.5 கோடி மதிப்பில் இந்த பஸ் கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க புலனாய்வு துறையினரின் ஒரு டஜன் கார்கள் புடைசூழ அதிபர் ஒபாமா இந்த பஸ்சில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த செலவை தவிர்த்தாலே, ஒரு ஆயிரம் பேருக்கு சம்பளப் பிரச்சினையைக் குறைக்கலாம் போலிருக்கே...!

புற்று நோயை தடுக்கும் ஆலிவ்!

நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ், மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால்தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும் பூரண பலன் கிடைப்பதில்லை. சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.

இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம்.

ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழக்கொட்டைகளே ஆலிவ் விதை. இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: ஆலிவ் எண்ணெயில் ஓலிரோசைடு, ஒலிரோபின், ஒலினோலிக் அமிலம், லிவ்டியோலின், எபிஜெனின் பிளேவனாய்டுகள், பால்மிட்டிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் பெருமளவு காணப்படுகின்றன.

திரவத் தங்கம்: ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன. ஆன்டி ஆக்ஸிடென்டல், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துகள், காணப்படுகின்றன.

கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செலினியம் போன்றவை உள்ளன. வைட்டமின் பி 1,2,3,5,6 ப்ரோ வைட்டமின் ஏ பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஈ. கே, போன்றவை இதில் அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாகவே ஆலிவ் எண்ணெய் திரவத்தங்கம் என்று மதிக்கப்படுகிறது.

தோலினை மினுமினுப்பாக்கும்: இவை தோலில் ஹைப்போடெர்மிஸ் வரை ஊடுருவி, தோலின் அனைத்து அடுக்குகளையும் பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் வைத்திருப்பதுடன் தசைக்கும் தோலுக்கும் இடையே வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. 100மிலி ஆலிவ் எண்ணெயில் ஏறத்தாழ 20 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும், 12மிகி வைட்டமின் ஈ, 62 மைக்ரோகிராம் வைட்டமின் கே காணப்படுகிறது.

குளிக்கும்பொழுது இளவெந்நீரில் 10மிலி ஆலிவ் எண்ணெய் மற்றும் சில சொட்டுகள் லேவண்டர் எண்ணெய் கலந்து குளிக்கலாம். குழந்தைகளுக்கும் குளிப்பாட்டலாம். உள்ளங்கை கடினம் மாற ஆலிவ் எண்ணெயையும் சீனியையும் கலந்து உள்ளங்கையில் 10 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவ மென்மையடையும்.

இதயநோயை தடுக்கும்: ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேன், முட்டை வெண்கரு மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் தோல் வறட்சி உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவிவர வறட்சி நீங்குவதுடன், தோலும் மென்மையாகும். ரோமங்களை நீக்கியபின் முகம் மற்றும் தோலில் ஏற்படும் ஒவ்வாமை நீங்க அந்த இடங்களில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நகச்சொத்தை நீங்க ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வரலாம். ஆலிவ் எண்ணெயை முடி நுனியில் தோன்றும் வெடிப்பில் தடவலாம்.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்: தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

இதயநோயை தடுக்கும்; இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது. இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.

ஸ்பெயின் நாட்டில் நடந்த ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. தினம் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் வாரம் ஒருநாள் உட்கொண்டுவர இதயநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

கருவேலம் பிசின்...

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’ என்பது பழமொழி. இந்தியாவில் ஆலமரத்தைப்போல கருவேல மரமும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பண்டைய காலத்தில் கருவேலின் கொப்புகள் பல்குச்சிகளாக பயன்படுத்தப்பட்டன. பட்டையில் உள்ள டேனின் மற்றும் அமிலங்கள் பற்களை சுத்தப்படுத்தி ஈறுகளுக்கு வலிவு தரும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் டேனின்கள் அதிக அளவில் உள்ளன. மியூசிலேஜ் மற்றும் ஃபிளோவனாய்டுகள் காணப்படுகின்றன. பட்டைகளில் பாலிஃபினோலிக் கூட்டுப்பொருட்கள் உள்ளன. கேட்டிசின்,எபிகேட்டில் எபிகெலோ கேட்டிசின் குயிர்சிடின், கெலிக் அமிலம் பிசினில் கெலக்டோஸ்,ரெம்னோஸ் போன்றவை உள்ளன. விதைகளில் அமினோ அமினங்கள் காணப்படுகின்றன.

புண்களை குணப்படுத்தும்: கருவேல மரத்தின் இலைகள், பட்டை, பிசின் மற்றும் கனிகள் மருத்துவ பயன் கொண்டவை. துளிர் இலைகளின் வடிசாறு தசை இருக்கும் தன்மை கொண்டது. வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதிக்கு மருந்தாகிறது. பசையாக்கப்பட்டு புண்களின் மீது பூசப்படுகிறது. புண்களை ஆற்றப் பயன்படும் இந்த கசாயம் மலச்சிக்கலுக்கு இனிமாவாக பயன்படுகிறது.

பல்பொடியாகும் பட்டை: கருவேலம் பட்டையில் டேனின்கள் அதிகம் உள்ளது. இது தசை இருக்கும் தன்மை கொண்டது. இதன் கசாயம் புற்றுநோய் மற்றும் சிஃபிலிஸ் பால்வினை நோய்களில் வாய் கழுவியாகவும், கொப்பளிப்பாகவும் உதவுகிறது. தொண்டைக் கம்மல் மற்றும் பல்வலியும் போக்கும். கோனோரியா, சிறுநீரகத்தின் கல், பெண்குறிநோய் மற்றும் வெள்ளைப்படுதல் ஆகியவற்றில் ஊசி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. பட்டையின் கரியும், பாதம்கொட்டை ஓட்டின் கரியும் உப்புடன் கலந்து பல்பொடியாக உதவுகிறது.

பால் உணர்வு தூண்டும்: பிசின் நீரிழிவு நோய்க்கும் வயிற்றுப்போக்கு நிறுத்தவும் நீருடன் கலந்து தரப்படுகிறது. காய்ந்த பிசின் பொடியாக்கப்பட்டு கொய்னாவுடன் கலந்து வயிற்றுப்போக்குடனான காய்ச்சல் நீக்க உதவும். பிசினின் பொடி முட்டை வெண்கருவுடன் சேர்த்து தீப்புண் மற்றும் கொப்புளங்கள் மீது பூசப்படுகிறது. இரத்தபோக்கினை நிறுத்த வல்லது. நெய்யில் வறுத்து உபயோகித்தால் வலுவேற்றியாகவும் பால் உணர்வு தூண்டுவியாகவும் பயன்படும். பிசினின் மருத்துவ குணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இது கணையத்தில் இருந்து இன்சுலின் சுரத்தலை ஊக்குவித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. கனிகளின் கசாயம் சிறுநீர் இனப்பெருக்க உறுப்பு நோய்கள் தீர்க்க பயன்படுகிறது.

நண்பன் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து படக்குழுவைச் சேர்ந்த 250 பேருக்கு விருந்தளித்தார் விஜய்!

நண்பன் படக்குழுவைச் சேர்ந்த 250 பேருக்கு விருந்தளித்தார் படத்தின் ஹீரோ விஜய். இந்தியில் கலக்கிய '3 இடியட்ஸ்' படம் தமிழில் நண்பன் பெயரில் தயாராகிறது. விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்ஜே சூர்யா, லாரன்ஸ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடிக்கிறது. கதாநாயகியாக இலியானா நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எந்திரன் படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படம் இது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் 250 பேருக்கு விஜய் நேற்று இரவு தனது சொந்த செலவில் விருந்தளித்தார். வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. சைவம் மற்றும் அசைவ உணவுகள் விருந்தில் பரிமாறப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மிமிக்ரி உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடந்தன. ஆட்டம் பாட்டம் என கலகலப்பாக போனது அன்றைய மாலைப் பொழுது.விருந்துக்கு வந்த எல்லோரிடமும் விஜய் சகஜமாக சிரித்து பேசினார். அவர்களுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார். இந்த விருந்தில் விஜய்யுடன் நடித்த சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குனர் ஷங்கர், வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோரும் பங்கேற்றனர்.

கவுதம் மேனன் - ஜீவா இணையும் நித்யா!

ஜீவாவை வைத்து ஒரு புதிய படம் இயக்குகிறார் கவுதம் மேனன். இந்தப் படத்துக்கு நித்யா எனப் பெயரிட்டுள்ளார். இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. பாணா காத்தாடி மூலம் அறிமுகமாகி, விண்ணைத் தாண்டி வருவாயாவில் கடைசி நேரத்தில் வரும் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சமந்தா. தமிழில் இன்னும் சரியான இடத்தைப் பிடிக்க முடியவில்லையே என தவிக்கும் சமந்தாவுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக இந்தப் படம் பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் வரும் 2012-ல் வெளியாகவிருக்கிறது. கோ படத்தைத் தயாரித்த ஆர்எஸ் இன்போடைன்மெண்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்ய, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ராணாவுக்கான பாடல்கள் அனைத்தையும் ரஹ்மான் முடித்துக் கொடுத்துவிட்டதால், இப்போது புதிய படங்களை தமிழில் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார் ரஹ்மான். அப்படி ஒப்புக் கொண்ட முதல் படம் இதுதான்.

வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி சென்னையில் 'நித்யா'வின் படப்பிடிப்பு நடக்கிறது.

ஆதரவு பெருகுகிறது..கவலையில் மத்திய அரசு!

ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடையே அவருக்கு பேராதரவு பெருகி வருவதால் மத்திய அரசு கவலையில் ஆழ்ந்துள்ளது. அன்னா ஹசாரே உண்ணாவிரதம் நடத்தினால் அவருக்கு ஆதரவு பெருகும் என்ற உளவுப் பிரிவினரின் எச்சரிக்கையையடுத்து அவரை முன் கூட்டியே அரசு கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. இதனால் மத்திய அரசுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்தது. இதையடுத்து அன்னாவின் நிபந்தனைகளை ஏற்று அவரை விடுவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

நேற்று முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் உண்ணாவிரத மேடைக்கு வந்தபோது அவருடன் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் ஊர்வலமாக வந்தனர். இதனால் கொட்டும் மழையில் அவர் ராம்லீலா மைதானம் வந்து சேரவே 2 மணி நேரம் ஆகிவிட்டது. இதையடுத்து நேற்று முழுவதும் அவருடன் ஆயிரக்கணக்கான மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்துள்ளனர். இரவிலும் விடிய விடிய ராம்லீலா மைதானத்திலேயே ஆயிரக்கணக்கான மக்கள் அமர்ந்திருந்தனர்.

இன்று அவரது உண்ணாவிரதம் 2வது நாளை எட்டியுள்ளது. தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தாலும் மக்களிடையே மிக எழுச்சியுடன் பேசி வரும் அன்னா ஹசாரேவுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. இதனால், அவரை ஒடுக்க அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நிலைக்கு அரசதள்ளப்பட்டுவிட்டது.

அடுத்த 15 நாட்களுக்குள் தாங்கள் உருவாக்கிய லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அதுவரை எனது உண்ணாவிரதம் தொடரும். தேவைப்பட்டால் அதற்கு மேலும் தொடரும் என அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார்,

அவருக்கு பாஜக உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந் நிலையில் ராம்தேவை நள்ளிரவில் இழுத்துச் சென்றது போல ஹசாரேவிடம் அடாவடியாக நடந்து கொண்டால், மக்களிடம் கெட்ட பெயர் இன்னும் அதிகமாகிவிடும் என்பதால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த பொறுமையைக் கையாண்டு வருகிறது.

புதிய முயற்சிகள் மூலம் அவருடைய உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, ஹசாரே குழுவில் அவருக்கு நெருங்கிய தொடர்புடைய, குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு அதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் அன்னா குழுவினர் உருவாக்கிய மக்கள் லோக்பால் சட்ட மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்புவது அல்லது நிலைக் குழுவின் முன்பு தனது மசோதா பற்றி எடுத்துக்கூற அன்னாவுக்கு அழைப்பு விடுப்பது போன்ற யோசனைகள் பற்றியும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

அரசு அழைத்தால் நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராகி லோக்பால் குறித்து விளக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால், அப்போது மத்திய அரசு உருவாக்கிய லோக்பால் மசோதாவை நாடாளுமன்றம் நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைப்போம் என அன்னாவின் குழுவில் உள்ள அரவிந்த் கெஜரிவால் கூறியுள்ளார். பிரதமர், நீதிபதிகள், அரசு ஊழியர்களை லோக்பால் வரம்புக்குள் சேர்ப்பதில் இரு தரப்பிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மக்களிடையே பேசிய அன்னா ஹசாரே, நான் இறந்து போனாலும் கூட, எனது ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை இளைஞர்கள் தொடர வேண்டும். வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது, 1942ல் அவர்களை எதிர்த்து மகாத்மா குரல் கொடுத்தார். .ஆனால், இப்போது நாம் எதிர்க்கும் ஆட்சியாளர்கள் வேறு. இவர்கள் நாட்டு மக்களை கொள்ளையடிக்கின்றனர். மக்கள் சக்தியை, அரசாங்கம் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் முடிவில் நான் உயிரோடு இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். ஒருவேளை நான் மறைந்து போனாலும்கூட, ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தை இளைஞர்கள் தொடர வேண்டும் என்றார்.

ஜன்லோக்பாலை ஏற்கமுடியாது: சட்ட அமைச்சர் சல்மான்: இந் நிலையில் அண்ணா ஹசாரே குழு தயாரித்தளித்த ஜன் லோக்பால் மசோதாவை ஏற்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

வரும் 30ம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் தான் தயாரித்தளித்த லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஹசாரேவின் நிபந்தனையை ஏற்க முடியாது என்றும், தற்போது அரசு லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துள்ள நிலையில், ஒரே நேரத்தில் இரண்டு மசோதாக்களை தாக்கல் செய்வது இயலாத காரியம் என்றும் அவர் கூறினார்.

ரயில்வே அதிகாரிகள்-காண்ட்ராக்டர்கள் கூட்டுக் கொள்ளை குறித்து அறிய சிபிஐ இந்த அதிரடி சோதனை!

சென்னையில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட பாண்டியன், சேரன் உள்ளிட்ட 7 எக்ஸ்பிரஸ் ரயில்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் 100க்கும் அதிகமானோர் அதிரடி சோதனை நடத்தினர். எம்ர்ஜென்சி கோட்டா, ரயில் பெட்டிகள் பராமரிப்பு, முதல் வகுப்பு ரயில் பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் பெரும் முறைகேடுகள் நடப்பததாக வந்த புகார்களையடுத்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், பெங்களூர் மெயில், திருவனந்தபுரம் மெயில் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த சேதனையை நடத்தினர்.

ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்துவது, படுக்கை விரிப்புகளை துவைப்பது ஆகியவற்றின் காண்ட்ராக்டர்களில் பெரும் முறைகேடுகள் நடந்து வருவதாகவும், ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்தாமலேயே அதற்கான கட்டணம் காண்ட்ராக்டர்களுக்கு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதில் ரயில்வே அதிகாரிகள்-காண்ட்ராக்டர்கள் கூட்டுக் கொள்ளை குறித்து அறிய சிபிஐ இந்த அதிரடி சோதனையை நடத்தியுள்ளது. அதே போல எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்களை ரயில்வே அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் ஒதுக்குவதாகவும் புகார்கள் உள்ளன, இது குறித்து அறிய இந்த ரயில்களில் எமர்ஜென்சி கோட்டாவில் பயணித்த பயணிகளிடமும் சிபிஐ அதிகாரிகள் ஓடும் ரயிலில் வைத்தே விசாரணை நடத்தினர்.

கிட்டத்தட்ட 100 அதிகாரிகள் இந்த 7 ரயில்களிலும் அவை ஓடிக் கொண்டிருந்தபோதே சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனைகளையடுத்து மூத்த ரயில்வே அதிகாரிகள் பலர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்யலாம் என்று தெரிகிறது.

கம்பர் வழிபட்ட காளிதேவி கோயில் அடிப்படை வசதிகள் இன்றி கிடக்கும் பரிதாபம்!

திருக்கோவிலூர் கம்பர் வழிபட்டதாகக் கூறப்படும் காளிதேவி கோயிலில் இப்போது அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருக்கோவிலூரை அடுத்த திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்த காங்கேயன் எனும் வேளாளருக்கு மகனாக பிறந்தவர் சடையப்பர். இளமையிலேயே அரச குமாரனைப்போல வளர்க்கப்பட்டார். கடையெழு வள்ளல்களாகத் திகழ்ந்த எழினி, காரி, ஓரி, நள்ளி, பாரி, பேகன், மலையன் அதியமான் போன்ற வள்ளல் தன்மை மிக்கவர்களுக்கும் மேலாக கருணையும், எல்லா உயிர்களையும் தம்முயிர் போல் நினைத்துப் போற்றும் இதயமும் கொண்டு வாழ்ந்தார் அவர். இதில் குறிப்பாக வயிற்றுப் பிழைப்புக்காக வீட்டு வேலை தரும்படி தேரழுந்தூரில் இருந்து வந்த கம்பரையும் கம்பருடைய தாயாரையும் தெருவாயிற்படியில் கண்ட சடையப்ப வள்ளல், தம்முடைய இரண்டு கண்களும் கண்ணீர் பெருக்கெடுக்க அந்த அம்மையாரைத் தனது தாய் போலவும், சிறுவன் கம்பனைத் தன்னுடைய தந்தையைப் போலவும் நினைத்து அவர்களை உள்ளே அழைத்து கொண்டுபோய் உபசரித்து தன்னுடைய மாளிகையிலேயே தங்கவைத்துக் கொண்டார். சடையப்ப வள்ளல் அதிகாலையில் எழுந்து தனக்குச் சொந்தமான வயல்வெளிகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வருவது வழக்கம். காலையில் வீட்டிலிருந்து கிளம்பியதும் ஊருக்கு மேற்கில் அமைந்துள்ள ஏரியில் இறங்கிக் குளித்து விட்டு, ஏரியில் வடமேற்கில் குடிகொண்டிருக்கும் காளிதேவியை மனம் உருக வேண்டி பிராத்தனை செய்துவிட்டு வயல்வெளிகளைப் பார்த்துக்கொண்டே வீட்டிற்கு வருவார். கம்பரும் அவருடைய தாயாரும் வள்ளலின் வீட்டில் குடியேறியது முதல் சிறுவன் கம்பனுடைய சுறுசுறுப்பையும், அறிவாண்மையும் கண்டு வியப்படைந்த வள்ளல், கம்பன் மீது தனி கவனம் செலுத்தினார். தினமும் காலையில் வள்ளல் வயல்வெளிக்குச் செல்லும் போது கூடவே கம்பனையும் அழைத்துக்கொண்டு போவதை வழக்கமாக்கிக் கொண்டார். அதிகாலையில் வீட்டில் இருந்து கிளம்பியதும் இருவரும் வயல்வெளியைப் பார்த்துக் கொண்டே போய் ஏரி நீரில் குளித்து விட்டு நேராக காளிதேவி கோயிலுக்குப் போய் இருவரும் அம்பாளை வழிபடுவார்கள். முதல்நாள் வழிபாட்டின்போதே அம்பாளின் சக்தியும், பார்வையும், கருணையும், கம்பனின் மீது பதிவு செய்யப்பட்டுவிட்டது. அப்போதே கம்பனுக்கு ஏதோ ஒரு இனம்புரியாத ஆற்றல் தோன்றியது. அதுமுதல் தினம் தினம் தவறாமல் இருவரும் காளியை தரிசனம் செய்து கொண்டு வந்தார்கள். தக்க பண்டிதர்களைக் கொண்டு கம்பனுக்கு முறையான கல்வி கற்றுக்கொடுக்க வழி வகுத்துக் கொடுத்தார் சடையப்ப வள்ளல். கல்வியிலும் கேள்வியிலும் சிறந்து விளங்கிய கம்பன் தமிழ், சமஸ்கிருதம் முதலிய மொழிகளை கற்றுத் தேர்ந்ததுடன் கவிபாடும் திறமையையும் பெற்றார். வடமொழியில் வால்மீகி முனிவரால் எழுதப்பட்ட இராமனுடைய கதையை தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லும்படி வள்ளல் கேட்க, அதை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து சொல்லுவார். சடையப்ப வள்ளலுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. வடமொழி தெரியாத தனக்கு கம்பன் சொல்லித்தானே கேட்கின்றோம். அதை ஏன் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கக் கூடாது தமிழில் மொழி பெயர்த்தால் நாமே படித்து பரவசமடைவோமே தனக்கு மட்டும் அல்லாது தமிழ் பேசும் மக்களும் நேரடியாக படித்து தெரிந்து கொள்ளலாம் என்பதையும் எண்ணினார். ஒருநாள் வள்ளலும் கம்பரும் காளிதேவியை தொழுதுகொண்டு இருக்கும்போது தன்னுடைய மனதில் பதிந்திருந்த எண்ணத்தையெல்லாம் கம்பரிடம் இராமகதையை தமிழில் எழுதும்படி கேட்டுக்கொண்டார். அதைக் கேட்டவுடன் தாங்கள் இஷ்டப்படியே செய்வேன், தங்களுக்கு எல்லா விதத்திலும் நான் கடமைப்பட்டவன். ஸ்ரீமந் நாராயணனுடைய அவதாரமாகிய இராமபிராணின் சரிதத்தை ஸ்ரீமந் நாராயணனின் தங்கையான இந்த அந்தரியினுடைய ஆலயத்தில் இப்போதே பூஜைபோட்டு தொடங்கி வையுங்கள் என்று வள்ளலைக் கேட்க, அவரும் அதே நேரம் அம்பாள் சந்நிதியிலே பூஜை போட்டு இராம கதையை எழுவதுவதற்கு கம்பபரை ஆசிர்வதித்தாராம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயில் தற்போது எவ்வித அடிப்படை வசதிகளற்ற நிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக சின்னசெவலை கிராம எல்லையில் வயல்வெளிகளுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் செல்லும் வகையில் சாலை வசதி கிடையாது. இதனால் வயல்வெளி வரப்புகளின் மீதுதான் நடந்துச் செல்ல வேண்டியுள்ளது. எனவே பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி சாலை வசதியை ஏற்படுத்திடவும், திருக்கோவிலூர்-திருவெண்ணைநல்லூர் பிரதானச் சாலையில் உள்ள இவ்வூர் பிரிவு சாலையில் கம்பர் வழிப்பட்ட காளிதேவி கோயில் குறித்து வழிகாட்டி விளம்பர பலகை வைப்பதற்கும், இக்கோயிலுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

மருத்துவமனையாகிறது புதிய தலைமைச் செயலகம் முதல்வர் ஜெயலலிதா!

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்டுள்ள இடத்தில் பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை பேரவை விதி 110-ன் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பு:


நோயையும், அதன் காரணத்தையும் கண்டறிந்து அதனை தீர்ப்பதற்கான மருத்துவம் செய்ய வேண்டும் என்பது வள்ளுவர் மொழி. அதற்கேற்ப அனைவருக்கும் சுகாதாரம் என்ற குறிக்கோளை அடைவதற்காக தேசிய ஊரக சுகாதார நலத் திட்டம், தமிழ்நாடு சுகாதார நலத் திட்டம் என்ற இரண்டு மாபெரும் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச் சூழலைக் கொண்ட தரமான மருத்துவச் சேவையை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்துதல், தமிழ்நாடு சுகாதார நலத் திட்டத்தின் கீழ் மாவட்ட மருத்துவமனைகளுக்கு ரூ. 50 கோடி செலவில் உயிர் காக்கும் உபகரணங்களை வழங்குதல், உணவு பாதுகாப்பு, மருந்து காட்டுப்பாடு நிர்வாகத்துக்காக தனி ஆணையரகம், திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ. 100 கோடியில் சிறப்பு சிகிச்சை மையம், வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவமனை திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் 2011-12-ன் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
அதுமட்டுமல்லாமல், அனைவருக்கும் மருத்துவ சேவையை அளிக்கும் வகையில் முதலமைச்சரின் விரிவான பொது மருத்துக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும் தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாகப் பெறும் வகையில் பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முந்தைய திமுக அரசால் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காகக் கட்டப்பட்ட 97,829 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட "ஏ' பிளாக் கட்டடத்தில் இந்த சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.

சட்டப்பேரவையும், 36 அரசுத் துறைகளும் செயல்படுவதற்கு புதிய தலைமைச் செயலகக் கட்டடம் போதுமானதல்ல என்பதாலும், பயன்படுத்தக் கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதாலும், அலுவலகப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இல்லை என்பதாலும், இருவேறு கட்டடங்களில் தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும், சட்டப் பேரவையும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது. எனவே, பயன்படுத்தப்படாமல் உள்ள இந்தக் கட்டடத்தில் பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனையை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.


இந்தக் கட்டடத்தில், தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு, உயர் தர சிகிச்சைக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு, இந்த மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.



தில்லியில் உள்ள அகில இந்திய மருத்து அறிவியல் நிறுவன (எய்ம்ஸ்) மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் இந்த மருத்துவமனை அமையும். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இப்போது கட்டப்பட்டு வரும் "பி' பிளாக் கட்டடங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் முதல்வர் ஜெயலலிதா.

நம்ம ஊர் சூப்பர் ஸ்டார்!


10 Most Corrupt Indian Politicians...


While everyone has been animatedly supportingAnna Hazare's fight against corruption, people seem to have forgotten who the people are who actually led to this situation.
The peak of irony was when Anna was, allegedly, lodged in the same jail that housed the people who were responsible for two of the biggest scams in the country ever. How must the authorities have felt when they saw Raja and Kalmadi fill their plates while Anna was on a fast because of their misdeeds?
Corruption has become an unavoidable part of politics and every now and then, one or the other politician re-affirms this fact.
Here is our pick of the 10 most corrupt politicians of India.

Suresh Kalmadi:

Suresh Kalmadi, almost single handedly caused a loss of hundreds of crores of rupees to the country. The Commonwealth Games, organized by Kalmadi was no less than a loot with numerous reports of the magnum opus event being soaked in corruption making headlines way before the Games had even started. Apparently, out of Rs. 70000 crores spent on the Games, only half of the amount was actually spent. Owing to his involvement in the scam, Kalmadi was charged with corruption and sent to Tihar jail.

A. Raja

A scam worth Rs. 176,000 crore had former Union Cabinet Minister for Communications and Information Technology, Andimuthu Raja at the centre. A. Raja as he is generally called, was the prime accused in the 2G spectrum scam, which was the largest that the country had seen in a long time. Following the shocking exposure, Raja was indicted and forced to resign. Presently, he is too has been lodged at the Tihar jail and is awaiting his trial.

Mayawati

Mayawati has always been criticized for ostentatious display of power in her state. She has allegedly used her status as chief minister to amass large amounts of personal wealth. She was charged with corruption when the Taj Heritage Corridor Case was uncovered. Mayawati's birthdays have always been media events, where she usually appears decked in diamond jewellery and also accepts public donations for which, she often comes under fire. Her assets are worth millions of dollars and in the year 2007-08, she had paid an income tax of Rs. 26 crores, which placed her amongst the top 20 taxpayers of the year.

Lalu Prasad Yadav

The fact that Lalu Prasad Yadav has been an accused in 63-odd cases serves for the fact that Lalu stands as one of the strongest competitor in the list. The biggest scam that rocked Lalu's political career was the fodder scam which involved the embezzlement of Rs. 950 crore approximately. The accusation of nepotism against him has come up time and again but hardly any action has been taken against him owing to his 'connections' in the government.

Madhu Koda

Former Jharkand Chief Minister, and only the third independent legislator to assume the office of chief minister in India, Madhu Koda was responsible for a scam worth over Rs. 4000 crore. The man exploited the state's natural resources by licensing illegal mining leases and stashing away the wealth amassed during the undertaking. Furthermore, the Maoists received a 30% share of the booty. Koda was arrested on charges of money laundering and is still in prison following the rejection of numerous bail applications.

Mulayam Singh Yadav

Mulayam Singh Yadav is also known as one of the most corrupt ministers in the country despite not being directly involved in any major scams. Apart from his name being involved in appointments of tainted officers and mishandling of his power as chief minister, Mulayam Singh had one major allegation levelled against him– accumulation of disproportionate assets. The case drew limelight on his sons and daughter-in-law as they too were holders of the assests that amounted to crores of rupees.

Karunanidhi

The corruptions charges against M. Karunanidhi are so many that he is often referred to as the king or emperor of corruption. He was accused of lending support to the LTTE and was indicted for abetting the LTTE in the interim report which oversaw the investigation into Rajiv Gandhi's assassination.
Karunanidhi reportedly institutionalized corruption in the South. He was a leading player in the cash for votes scams that are common in the southern region, as well as notorious foe extreme nepotism shown under his rule. Not so surprising, is the fact that the main accused in the 2G scam, A, Raja, considers him to be his mentor.

Sharad Pawar

Very few people can miss the cosy relationship that Sharad Pawar shares with power and money.Every now and then, Pawar draws flak for alleged investments made by him and his family in various illegal projects. He was named by Abdul Karim Telgi, during a narcoanalysis test, stating that it was Pawar's brainchild to print fake stamp papers across the country and mint money. He was also accused in a multi-crore scam involving wheat imports and institutions headed by him and his close associates were served notices by the Bombay High Court for showing favoritism to his family.

Jayalalitha

The Chief Minister of Tamil Nadu has a staggering 46 corruption cases against her. Amongst the various scams were the Rs. 70 million coal import scam, Tansi land deal case, case of disproportionate assets and colour TV case, amongst many others. A raid in her residence and business establishments led to the seizure of some 28 kg of jewellery (worth Rs 51 crore), 91 wrist-watches, 41 air-conditioners, 10,500 sarees, 750 pairs of footwears, etc. She along with her former cabinet colleagues and senior bureaucrats who worked with her are still facing investigation with regard to corruption.

BS Yeddyurappa

The most recent politician http://www.mensxp.com/special-features/top-10/5458-meet-the-top-10-young-politicians-of-india.html to be caught in the web of corruption is former Chief Minister of Karnataka, B. S. Yeddyurappa. While he has a number of corruption lying against him, the one that toppled his career was his alleged involvement in the illegal iron ore export scam in districts of Karnataka. A lot of blame game followed and ended up with Yeddyurappa losing his ministerial post last month. Despite his denial, his image as one of the most corrupt politicians of the country will not fade anytime soon. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...