|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 February, 2013

Thiruvilayadal MOVIE


இந்த கம்பீரம் வேறு எந்த தமிழனுக்கு இருக்கும்?

ஒரு உன்மை என்னவென்றால்.... காமராஜர் இந்திய தேசிய காங்கிரஸ் 

தலைவராக இருந்தபோது தான் லால் பகதூர் சாஸ்த்ரி இறந்த பிறகு... 

இந்திரா காந்தி.. ப்ரதம மந்திரியாக காமராஜரால் 

தேர்ந்தெடுக்கப்பட்டார்..

அவர்கள் மனிதர்களே அல்ல?

பீகார் மாநிலத்தில் பகல்பூர் என்னும் இடத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு தூக்கில் தொங்கவிட்டு கொல்லப்பட்டுள்ளார். அவருக்காக டில்லி பெண்கள் அமைப்புகள் இதுவரை குரல் கொடுக்கவில்லை. அவருக்காக சென்னை நடிகைகள் கடற்கரையில் ஊர்வலம் போகவில்லை. அவருக்காக அன்னை சோனியாவின் கண்களில் கண்ணீர் வரவில்லை. ஏனெனில் அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் என்றால் அவர்களை தாராளமாக கற்பழிக்கலாம். தாராளமாக கொலை செய்யலாம். சித்திரவதை செய்யலாம். ஏனெனில் அவர்கள் மனிதர்களே அல்ல போலும்!

வலுவான புதிய சினிமா சட்டம்.

தணிக்கை செய்யப்பட்ட விஸ்வரூபம் படம் தொடர்பாக தமிழக அரசு சினிமா தணிக்கை துறையின் மீது குற்றம் சாட்டியது. எனவே மாநிலங்கள் தணிக்கை துறையின் விதிகளை மீறாவண்ணம் இருப்பதை உறுதிபடுத்தும் விதத்தில் சினிமா சட்டத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முகுல் மட்கல் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய தணிக்கை துறை அதிகாரி ஷர்மிளா தாகூர், மத்திய அரசின் விருதுபெற்ற பாடலாசிரியர் மற்றும் எம்.பி. ஜாவத் அக்தர் ஆகியோர் இடம் பெறுவர். இது குறித்து அவர்கள் அளிக்கும் வலுவான புதிய சினிமா சட்டமானது தேசிய திரைப்பட தணிக்கை துறையால் கடைபிடிக்கப்படும். 

பாலியல் புகாரில் சிக்கிய அரசியல்வாதிகள் குறித்தும் பேச்சே காணோம்?


நீதியரசர் வர்மா கமிஷன் பரிந்துரைத்ததில் பலவற்றை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை காரணம். இவர்கள் ஏற்க மறுத்துள்ள அம்சங்களை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும். அத்தகைய இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காகத்தான் இவ்வாறு அவசரச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் தரும் புகார்களைப் பதிவு செய்யாத போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க வேண்டும், மேலும், சிறப்புப் படை அல்லது காவல்துறையினர் பணிக்காலத்தில் இதுபோன்ற பாலியல் வன்முறையில் ஈடுபட்டால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி விசாரணை நடத்த வேண்டும், அந்த அராஜக செயலுக்காக அவர்களுக்குத் தலைமை ஏற்றிருந்த அதிகாரி மீதும் வழக்கு தொடுக்க வேண்டும் என்று வர்மா கமிஷன் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால், அது குறித்து இந்த அவசரச் சட்டம் மெüனம் காக்கிறது. பாலியல் புகாரில் சிக்கிய அரசியல்வாதிகள் குறித்தும் பேச்சே காணோம்.
மணவாழ்வில் ஒரு பெண் சந்திக்க நேரும் பாலியல் வன்முறைக்கும் தண்டனை வழங்க இக்கமிஷன் பரிந்துரை செய்தது. ஆனால், அதுபற்றியும் மத்திய அமைச்சரவை அக்கறை கொள்ளவில்லை. திராவக வீச்சில் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவ உதவியை அரசே ஏற்பது குறித்தும் பேச்சே இல்லை. ஆனால், வர்மா கமிஷன் பரிந்துரைக்காத மரண தண்டனையை மத்திய அமைச்சரவை தன்னிச்சையாகப் பரிந்துரைத்துள்ளது. பாலியல் வன்முறையில் ஈடுபட்ட கும்பலுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கருத்து, தில்லி பாலியல் படுகொலைச் சம்பவத்தில் பரவலாக இருந்தபோதிலும், பெண்கள் அமைப்புகள் இதற்கு மாறான கருத்தை முன்வைத்ததால்தான், இந்த தண்டனையைத் தான் பரிந்துரைக்கவில்லை என்று வர்மா கமிஷன் தெளிவாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும்கூட, அரிதினும் அரிதான நேர்வுகளில் மரண தண்டனை அளிப்பதில் நீதிபதியின் விருப்புரிமைக்கு இந்த அவசரச் சட்டம் வகை செய்கிறது.
தில்லி பாலியல் வழக்கில் மிக விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு, மிக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையும் தொடங்கிவிட்ட நிலையில், இது குறித்து மத்திய அரசு விரைந்து செயல்படுவது மகிழ்ச்சிதான். ஆனால் அதை முறைப்படி, இரு வாரங்களில் கூடவிருக்கும் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு உள்படுத்தி சட்டத் திருத்தமாகவே நிறைவேற்றலாமே என்பதுதான் நமது கேள்வி. ஒரு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும்போது, முன்தேதியிட்டு அமல்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் அவசரச் சட்டத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது. இந்த அவசரச் சட்டம், தற்போது தில்லி துணை மருத்துவ மாணவி பாலியல் படுகொலை வழக்குக்குப் பொருந்துமா என்றால், பொருந்தாது. அப்படியானால், யாரைக் காப்பாற்ற மத்திய அமைச்சரவை முயல்கிறது?
தற்போதைய தில்லி பாலியல் படுகொலை வழக்கில், மக்கள் கோபம் கொண்டிருக்கும் விவகாரம் - 6 பேர் கும்பலில், மிக வெறித்தனமாக இயங்கி அப்பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கிய நபர் "பதினேழரை வயது சிறுவன்' என்பதால், அவனை சிறார் நீதிமன்றத்தில் விசாரிப்பது பற்றியே! சட்டப்படி அவன் சிறுவனாக இருக்கலாம். ஆனால் அவன் செய்த செயல் சிறுவனுக்கு உரித்தானது அல்ல என்பதுதான் மக்கள் கருத்தாக இருக்கிறது. சிறார் வயது 18 என்பதை 16 ஆகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வர்மா கமிஷன் பரிந்துரைக்க மறுத்துள்ளது. இருப்பினும், அரிதினும் அரிதான நிகழ்வுகளிலும், சிறார் ஈடுபடும் குற்றத்தின் கடுமையை வைத்து அவர்களைப் பொது நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என்பதை இந்த அவசரச் சட்டம் உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், அதை ஏன் மத்திய அரசு செய்யவில்லை?
வர்மா கமிஷன் 29 நாள்களில் அறிக்கை கொடுத்தது. அதேபோன்று இவர்களும் விரைந்து செயல்பட்டதாகக் காட்டிக்கொள்ளவும் வேண்டும். அரசு இயந்திரத்தில் அங்கமாக இருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும். ஆகவே கமிஷன் பரிந்துரைத்த சில முக்கியமான பரிந்துரைகளை எடுத்துக்கொள்ளாமல், பரிந்துரைக்கப்படாத மரண தண்டனையை எடுத்துக்கொண்டு, தங்களை அப்பழுக்கில்லாதவர்களாக காட்டிக்கொள்ள நினைக்கிறது மத்திய அரசு. பிரச்னைகளை விவாதிக்காமல் அமைச்சரவை மட்டுமே முடிவு செய்துள்ள இந்த அவசரச் சட்டம் பலன் அளிக்காது என்றும், இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் பெண்கள் அமைப்புகள் குரல் கொடுத்தன. ஆனாலும் குடியரசுத் தலைவர் இந்த அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.அவசரக்கோலத்தில் அள்ளித்தெளித்த கோலம் போல ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது மத்திய அமைச்சரவை. உளப்பூர்வமான முனைப்புடன் அல்லாமல் அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே அரசின் குறிக்கோளாக இருக்கும்போது, இந்த அவசரச் சட்டத்தால் முழுப் பயன் பெண்களுக்குக் கிடைக்குமா? எங்கேயோ, ஏதோ இடிக்கிறது!

விதியெல்லாம் எதிர்கட்சியினருக்கு மட்டுமே...

அரசுக்கு சொந்தமான சுவர்களில் விளம்பரம் செய்யக்கூடாது. மீறி செய்தால் அபாராதம் விதிக்கப்படும். விளம்பரமும் தார் பூசி அழிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி விதி வகுத்துள்ளது. ஆனால் இந்த விளம்பரத்தை பார்க்கும் போது அந்த விதியெல்லாம் எதிர்கட்சியினருக்கு மட்டும் தானோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

உலக அளவில் 60% புலிகள் நம்மோடு!


 உலக அளவில், 60 சதவீத புலிகளை தன்னகத்தே கொண்டு, இந்தியா   தொடர்ந்து முதல்இடத்தை பிடித்துள்ளது. இந்தியா முழுவதும், 20ம்   நூற்றாண்டில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் இருந்தன.   ஆங்கிலேயர் காலத்தில், வனவிலங்கு வேட்டை அதிகமாக இருந்ததால்,   விலங்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இந்திய   சுதந்திரத்துக்கு பின், வனத் துறை ஏற்படுத்தப்பட்டு, வனமும்,   விலங்குகளும் பாதுகாக்கப்பட்டன. கடந்த, 1973ம் ஆண்டு   கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை, 1,800 ஆக   குறைந்ததால், "புராஜக்ட் டைகர்' திட்டத்தை மத்திய அரசு   அமல்படுத்தியது. புலி இனங்கள் தொடர்ந்து அழிந்து வந்ததால், 1972 நவ.,   18ல், புலியை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவித்தது.   முதல் இடம் கடந்த, 2006ல் நடந்த கணக்கெடுப்பின்படி, இந்தியா   முழுவதும் புலிகளின் எண்ணிக்கை, 1,411 ஆக குறைந்ததால், புராஜக்ட்   டைகர் திட்டத்தை மத்திய அரசு முடுக்கியது. தற்போது, இந்தியாவில்   உள்ள, 1,706 புலிகளில், தமிழகத்தில் மட்டும், 292 புலிகள் உள்ளன.

 உலக   அளவில், 60 சதவீத புலிகளை தன்னகத்தே கொண்டு, இந்தியா தொடர்ந்து   முதல்இடத்திலுள்ளது.இதுகுறித்து, வனத் துறை அதிகாரிகள்   கூறியதாவது:உலகம் முழுவதும் இந்திய இனம், சுபத்திரன், சைபீரியஸ்,   பாலி, ஹாஸ்பின், ஜவான் இனம் என, எட்டு வகையான புலி இனங்கள்   இருந்தன. ஆனால், 1940ல் பாலி இனமும், ஹாஸ்பின் இனமும், 1970ல்   ஜவான் இனமும் முற்றிலும் அழிந்தது.உலகில் உள்ள நான்கு வகையான   புலி இனங்களில், ராயல் பெங்கால் வகை புலிகள் மட்டும் இந்தியாவில்   உள்ளது. உலகளவில், 3,200 புலிகள் உள்ளன. இதில், இந்தியாவில், 60   சதவீத புலிகள் உள்ளன. கர்நாடகாவில், 305, தமிழகத்தில், 292, மத்திய   பிரதேசத்தில், 260, உத்தர பிரதேசத்தில், 227, மகாராஷ்டிராவில், 164,   அசாமில், 145 புலிகளும் உள்ளன. தமிழகத்தில் முண்டந்துறை,   முதுமலை, ஆனைமலை சரணாலயங்களில், புலிகளின் எண்ணிக்கை   வேகமாக உயர்ந்து வருகிறது. புலிகளை காக்க மத்திய, மாநில அரசுகள்   பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதால், இந்தியாவில் புலிகளின்   எண்ணிக்கை உயர வாய்ப்புஉள்ளது.

(கருப்பு)பணக்காரர்களை மீண்டும் அழைக்கும் சுவிஸ் வங்கி!

முறைகேடாக சேர்த்த சொத்துகளை, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச்   சேர்ந்த பணக்காரர்கள், சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பதாக,   குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில், தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை,   தங்கள் வங்கிகளில், டெபாசிட் செய்ய வருமாறு, உலகில் உள்ள   பணக்காரர்களுக்கு, சுவிஸ் வங்கிகள் அழைப்பு   விடுத்துள்ளன."வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்கள், அவர்களது   நாட்டின், வருமான வரி துறையினர் மற்றும் கட்டுப்பாட்டாளர்களால்   கண்டுபிடிக்கப்பட முடியாத அளவுக்கு, பாதுகாப்பாக இருக்கும்' என,   சுவிஸ் வங்கிகள் உறுதியளித்துள்ளன.சுவிஸ் வங்கிகள், இது   தொடர்பாக, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.   சமீபத்தில், டாவோசில் நடைபெற்ற, உலக பொருளாதார கூட்டத்தில்   கலந்து கொண்ட, சுவிஸ் வங்கியாளர்களில் தகவலை   தெரிவித்துள்ளனர்.

இனி இரவு 11 மணிக்கு மேல் A சான்றிதல் படங்கள்!

 இந்திய கேபிள், "டிவி' சட்டப்படி, "ஏ' சான்று அளிக்கப்பட்ட, சினிமா   படங்களை, "டிவி'யில் திரையிட முடியாது. அந்த படங்களை, "டிவி'யில்   ஒளிபரப்ப வேண்டுமென்றால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்,   "யுஏ' சான்று அளிக்க வேண்டும்."யுஏ' சான்று வேண்டுமென்றால், "ஏ'   படங்களில் உள்ள, ஆபாச காட்சிகள் நீக்கப்பட வேண்டும்.   தயாரிக்கப்படும் படங்கள், "டிவி'யில் ஒளிபரப்பப்பட்டால் தான்,   தயாரிப்பாளருக்கு போதிய லாபம் கிடைக்கும் என்பதால், ஏராளமான   படங்கள், "யுஏ' தர சான்றுக்காக, மத்திய தணிக்கை வாரியத்தில்   காத்திருக்கின்றன.அவற்றில் எந்தெந்த படங்களை, "டிவி'யில்   திரையிடலாம் என்பது குறித்து முடிவெடுக்க, மத்திய தணிக்கை   வாரியத்துடன் இணைந்து, பி.சி.சி.ஐ., எனப்படும், செய்திகள் இல்லாத பிற,   "டிவி' நிகழ்ச்சிகளின் கட்டுப்பாட்டு அமைப்பு முயற்சித்து வருகிறது.  "ஏ' சான்று அளிக்கப்பட்ட படங்களை, "யுஏ' சான்றுக்கு மாற்ற, படத்தின்   முக்கிய காட்சிகளை வெட்ட வேண்டியிருப்பதால், படத்தின் கதை சரிவர   புரியாமல், பார்வையாளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு உள்ளது   என்பதால், "ஏ' சான்று படங்களை, நள்ளிரவு, 11:00 மணிக்கு மேல்,   "டிவி'களில் வெளியிட அனுமதிக்கலாம் என, தணிக்கை வாரியத்திற்கும்,   பி.சி.சி.ஐ.,க்கும், பட தயாரிப்பாளர்கள் ஆலோசனை   வழங்கியுள்ளனர்.

மேலும், படத்தின் ஒவ்வொரு அங்குலமும், மிக   கவனமாக தயாரிக்கப்படுவதால், படத்தில், ஆங்காங்கே காட்சிகளை   வெட்டுவதும் சிரமமான பணி; அதனால், படத்தில் உயிரோட்டம்   இல்லாமல் போய் விடுகிறது என்ற கோரிக்கையும், முன்   வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, "ஏ' படங்களை, நள்ளிரவில்,   "டிவி'யில் காட்டலாம் என்ற கொள்கை அளவிலான முடிவிற்கு வந்துள்ள,   பி.சி.சி.ஐ., எந்தெந்த படங்களை திரையிடலாம் என்பதை முடிவு   செய்வதற்காக, சமூக ஆர்வலர்கள், திரைப்பட துறையினர் மற்றும்   தகவல், ஒலிபரப்பு துறை அதிகாரிகளை கொண்ட குழுவை   ஏற்படுத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, விரைவில்,   நள்ளிரவு, 11:00 மணிக்கு, "ஏ' படங்கள், "டிவி'களில் ஒளிபரப்ப வாய்ப்பு   உள்ளதாக, மத்திய தணிக்கை துறை 

அண்ணாதுரை நினைவு தினம்!


இன்று உலக கேன்சர் தினம்!

இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும்   மேற்பட்டோர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். மேற்கு   வங்கத்தில் மட்டும் 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக   டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு வங்கத்தில் ஆண்டுக்கு 70,000   புற்றுநோய் பாதிப்புக்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும்   35,000 பேர் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர். இத்தகவலை   நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புற்று‌நோய் ஆராய்ச்சி கழக மருத்துவ   இயக்குனர் ஆஷிஷ் முகோபாத்யாயா தெரிவித்துள்ளார். பொதுவாக   ஆண்கள் நுரையீரல் புற்றுநோயாலும், பெண்கள் கர்ப்பப்பைவாய்   புற்றுநோயாலும் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் நகர்ப்புறங்களில் ‌  வசிக்கும் பெண்களில் பெரும்பாலும் மார்பக புற்றுநோயாலேயே   பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு 100 பெண்களில் 25 பேர் மார்பக   புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புகைபிடித்தல் மற்றும்   ஆல்கஹால் உட்கொள்ளுதல் ஆகியவற்றை முற்றிலும்   நிறுத்துவதாலும், சுற்றுப்புற மாசுபடுதலை கட்டுப்படுத்த நடவடிக்கை   எடுப்பதாலும் புற்றுநோயை கட்டுப்படுத்தலாமாம்.

காரணம்:*தேவையற்ற செல்களின் வளர்ச்சி மற்றும் செல்களின் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றம்.
*புகைப்பழக்கம் மற்றும் முறையற்ற உணவுப்பழக்கம்.
*சூரியனிடம்மிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள்.
*புற்றுநோய் ஏற்படும் வாய்புள்ள பணியில் ஈடுபடுதல்.
* எச்.ஐ.வி.,தொற்று உள்ளோரிடமிருந்து பரவுதல்.
*பெற்றோர்களிடம் இருந்து உருவாதல்.

அறிகுறிகள்:*உடலில் உள்ள உறுப்புகளில் ஒருவித தடிப்பு மற்றும் வீக்கம்.
*உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும் 

மாற்றங்கள்:*ஆறாத புண்கள்.
*தொடர் இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல்.
*மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் மாற்றம். 
*தொடர்ந்த அஜிரணம் மற்றும் உணவை விழுங்குவதில் பிரச்சனை ஏற்படுதல்.
*உடல் எடையில் மாற்றம்.
*இயல்புக்கு மாறான ரத்தபோக்கு மற்றும் ரத்த கசிவு.

விஸ்வரூபம் நீக்கப்படும் காட்சிகள்!

விஸ்வரூபம் படத்தில் கமல் நீக்க ஒப்புக் கொண்டுள்ள 7 காட்சிகள் குறித்த விவரம். முத்தரப்பு பேச்சு வார்த்தையின்போது இஸ்லாமிய அமைப்பினர் 15 காட்சிகளையும், சில வசனங்களையும் நீக்க வேண்டும் என்று கூறினார்கள். உடனே கமலஹாசன் தனது லேப்டாப்பில் பதிவு செய்துள்ள அந்த காட்சிகளை போட்டுக் காட்டி விளக்கினார். அவைகளை வெட்டினால் கதையின் தொடர்ச்சி இல்லாமல் போய் விடும் என்றார். இதையடுத்து 7 காட்சிகளை நீக்கவும், மற்ற இடங்களில் வசனங்களை நீக்கவும் ஒப்புக் கொண்டார். * படத்தின் தொடக்கத்தில், 
*இது இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ மற்ற சாதி-மதத்தினரின் கோட்பாடுகளுக்கு எதிராகவோ எடுக்கப்பட்ட படம் அல்ல, இது ஒரு கற்பனை கதை," என டைட்டில் போடப்படும். 
* படத்தில் ஆங்காங்கே காட்சிகளின் போது ஒலிக்கும் திருக்குர்ரான் வசனங்கள் நீக்கப்பட்டு வெறும் காட்சிகள் மட்டும் ஓடும். 
* திருக்குர்ரான் வசனம் பின்னணியில் அமெரிக்கரின் தலை துண்டிக்கப்படும் காட்சிகளும், வசனமும் நீக்கப்படும்.
 * அமெரிக்காவில் குண்டு வெடிப்பை தடுப்பதற்காக கமல்ஹாசன் பிரார்த்தனை செய்யும் காட்சிகளும், பின்னணியில் தெரியும் தொழுகை நடத்தும் காட்சிகளும் நீக்கப்படும்.
 * முல்லா ஒமர் கோவையிலும், மதுரையிலும் தலை மறைவாக இருந்தார் என்பதை சித்தரிக்கும் காட்சிகள் நீக்கப்படும். 
* நடிகர் நாசர் ஒரு காட்சியில், "முஸ்லிம் அல்லாதவர்களை அப்புறப்படுத்துவதே முஸ்லிம்களின் கடமை'' என்று வசனம் பேசுவார். அந்த காட்சிகள் நீக்கப்படும்.

 * ஆப்கன் சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு விளையாடுவது போல காட்டப்பட்டுள்ளதும் நீக்கப்படும்.





215 ஆண்டுகளாக ஓடிவரும் காவேரி! (பிரச்னை!)

தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நதிநீர் பிரச்சனை  215 ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு வரலாற்றுப் பார்வை!



ஆண்டுகாலம் நீடித்தது. கி.பி.1892-ம் ஆண்டு காவிரி நதிநீர் தொடர்பான முதலாவது ஒப்பந்தம் சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே உருவானது. இந்த ஒப்பந்தப்படி காவிரி ஆற்றின் குறுக்கே மைசூர் அரசு ஒரு அணையைப் புதிதாகக் கட்ட சென்னை மாகாணத்தின் ஒப்புதலைப் பெற ஒப்புக் கொள்ளப்பட்டது. 1910-ம் ஆண்டு மைசூர் அரசு கண்ணம்பாடி என்ற இடத்தில் 41.5 டி.எம்.சி. நீரைத் தேக்கி அணையைக் (கிருஷ்ணராஜசாகர்) கட்ட கர்நாடகா திட்டமிட்டது. ஆனால் சென்னை மாகாண அரசு அத்திட்டத்தை நிராகரித்தது. காவிரி விவகாரம் விஸ்வரூபமெடுத்த ஆண்டு இது எனலாம். அப்போதைய மத்திய அரசிடம் மைசூர் அரசு முறையிடு செய்ய கண்ணம்பாடியில் 11 டி.எம்.சிக்கு மேல் நீரைத் தேக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதியும் பெற்றது.


ஆனால் கர்நாடகா தமது தில்லுமுல்லு வேலையாக 41.5 டி.எம்.சி.நீரைத் தேக்கும் அளவுக்கு அணையைக் கட்ட சென்னை மாகாணம் கொந்தளித்தது. இதனால் அப்போதைய மத்திய அரசு கிரிஃபின் என்பவரை நடுவராக நியமித்தது. ஆனால் அவரால் திட்டவட்டமான தீர்ப்பைத் தர இயலவில்லை. இதனால் சென்னை மாகாண அரசு மேல்முறையீடு செய்தது. இதனால் சென்னை மாகாண அரசு மற்றும் மைசூர் அரசுகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தைகளின் விளைவுதான் இன்று பேசப்படுகிற 1924-ம் ஆண்டு ஒப்பந்தம். 1924-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே 2-வது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் 50 ஆண்டுகாலம்தான் என முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி மைசூர் அரசு விரும்பியபடியே 41.5 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையையும் சென்னை மாகாண அரசு மேட்டூர் அணையையும் கட்டிக் கொள்ள வழியேற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் முடிவடையவதற்கு முன்பாகவே 1960கள், 1970களில் காவிரி ஆற்றின் குறுக்கே தன்னிச்சையாகவே அணைகளைக் கட்டிக் கொண்டது.

1972-ம் ஆண்டு உண்மை அறியும் குழு அறிக்கை ஒன்றை அமைத்தது. அதன் மீது தமிழகம், கர்நாடகா அரசுகள் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு ஒப்பந்தம் உருவானது. 1974-ல் (1924ம் ஆண்டு ஒப்பந்தம் காலாவதியானது.) 1924 இல் உருவான ஒப்பந்தம் காலாவதியானது! 1986-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். காவிரி நதிநீர் விவகாரத்துக்கு தீர்வு காண நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினார். 1990ம் ஆண்டு வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது தமிழத்துக்கு சாதகமாக MGR ஆல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 25.6.1991-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணை வழங்கப்பட்டது. இந்த இடைக்கால ஆணைப்படி மேட்டூர் அணைக்கு 205 டி.எம்.சி. நீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் கர்நாடகா தமது பாசனப்பரப்பை 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா ஏற்கவில்லை. இடைக்கால ஆணைக்கு எதிராக அவசர சட்டத்தை கர்நாடகா பிறப்பிப்பது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

10.12.1991-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டது. ஆனால் கர்நாடகா இதை ஏற்கவில்லை 1997 ஆம் ஆண்டு காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முடிவுகளையும் கர்நாடகா நிராகரித்தே வந்தது. 5.2.2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டது. காவிரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி. என்றும் தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. நீரும் கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி. நீரும் ஒதுக்கீடு செய்து இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. கேரளாவுக்கு 30 டி.எம்.சி. நீரும் புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் வழங்கவும் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கர்நாடகா முறையீடு செய்தது. 1990களுக்குப் பிறகு பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் காவிரி நதிநீருக்காகப் போடப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளன. இன்று பிப்ரவரி 4-ந் தேதிதான் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெஜட்டில் பிப்ரவரி 20-ந் தேதிக்குள் வெளியாட்டாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உறுதியாக உத்தரவிட்டுள்ளது. கெஜட்டில் உத்தரவு போடப்பட்டுவிட்டால் கர்நாடகா நீரைத் திறந்துவிட்டாக வேண்டும். இரண்டு நூற்றாண்டுகாலமாக நீடிக்கும் காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவின் பிடிவாதம் தளருமா?  
கெஜட்டில் வெளிவருமா? பார்போம்!


விந்தணுவையே மாற்றிய டாக்டர்!

தன் மகன் என்னைபோலும் இல்லை அவர் தந்தை போலும் இல்லை? விந்தணுவையே  மாற்றிய டாக்டர்! 

செயற்கை கருவூட்டலுக்காக வந்த பெண்களுக்கு அவர்களது கணவர்களின் விந்தனுவுக்குப் பதில் வேறு சிலரின் விந்தனுவைத் தவறுதலாக செலுத்தி விட்டார் கனடா நாட்டைச் சேர்ந்த டாக்டர். தான் செய்தது தவறு என்பதை தற்போது அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். கனடாவைச் சேர்ந்த டாக்டர் நார்மன் பர்வின். இவர் மிகச் சிறந்த, புகழ் பெற்ற மகப்பேறு குறைபாடு நீக்கு மருத்துவர் ஆவார். கனடாவில் மிகவும் பிரபலமானவர். இவரது மருத்துவ அறிவும், திறமையும் மிகவும் பிரபலமானது. மேலும், கருக்கலைப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். அதைப் பெண்களின் உரிமையாக கூறி வருபவர். இந்த நிலையில் இவர் மிகப் பெரிய தவறு ஒன்றைச் செய்துள்ளார். அது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்தத் தவறை அவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு செய்துள்ளார். அதாவது தன்னிடம் செயற்கை கருத்தரிப்புக்காக வந்த 3 பெண்களுக்கு அவர்களது கணவர்களின் விந்தனுவுக்குப் பதில் வேறு சிலரின் விந்தனுக்களை தவறுதலாக இவர் செலுத்தி விட்டார். இதுதொடர்பாக பின்னர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையின்போது தனது தவறை டாக்டர் நார்மன் ஒத்துக் கொண்டுள்ளார். இந்த மூவரில் ஒருவருக்குமே மட்டுமே தன மகனுக்கு 23 வயதான பின்னர் அவன் தந்தை போலும் இல்லை, தாய் போலும் இல்லை எனத் தெரிய வந்ததால் மரபணுச் சோதனை செய்துள்ளனர். மகனின் மரபணு பெற்றோர் இருவரின் மரபணுவையுமே ஒத்துப் போகவில்லை. இதையடுத்தே டாக்டரின் தவறு தெரிய வந்தது. மற்ற இரு பெண்கள் யார் என்பது தெரிவிக்கப்படவில்லை.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...