ஃபிளிப்கார்ட் காலணியின் விலையாகக் குறிப்பிட்டிருப்பது ரூ 399.00 அதற்கு வழங்கும் ஆஃபர் 62 %
ஆக இந்த காலணியின் ஆஃபர் விலை ரூ. 148.00. இதற்கான டெலிவரி சார்ஜ் ரூ.50.00 மொத்தம் ரூ. 198.00 அடுத்த படத்தைக் கவனிக்கவும்.
காலணியில் அச்சிடப்பட்டிக்கும் அசல் விலை ரூ.194.00 அதாவது காலணியின் அசல் விலையைவிட ஃபிளிப்கார்ட் அதிகமாகவே பணத்தை வாங்குகிறது. இகாமர்ஸ் ஆஃபர்கள் குறித்து நாணயம் விகடன் நடத்திய ஆல்லைன் சர்வேயில் காலணிகளை ஆன்லைனில் வாங்கலாம் என 25% மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆன்லைன் ஆஃபர்களில் இது போன்ற பொருட்களை வாங்கினால் லாபம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். அதாவது பொருட்களை ஆன்லைனில் விற்பதன் மூலம் அந்த நிறுவனத்தின் செலவினங்கள் குறைகிறது என்றும், அதனால்தான் ஆஃபர்களை வழங்குகிறார்கள் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.