|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 March, 2012

Actress Trisha Glamour For Telugu Movie



யாதுமாகி நிற்பவள் பெண்!


பெண் என்பவள் சக்தியின் அம்சம். உலகின் இயக்திற்கு தேவையான சக்தியை அளிக்கும் சர்வ வல்லமை படைத்தவளாக பெண் இருக்கின்றாள். 101 வது மகளிர் தினம் கொண்டாட உள்ள இந்த வேளை மங்கையரின் சக்தியை தெரிந்து கொள்வோம். உலகில் இனப்பெருக்கம் என்பது அத்தியவசியமானது. அது இல்லையேல் உலகமே ஸ்தம்பித்து விடும். இதற்கு பெரும் பங்கு வகிப்பது பெண்மணிகள்தான். கருவை உருவாக்குவதோடு ஆண்களின் கடமை முடிந்து விடுகிறது. பத்துமாதம் கருவை சுமந்து குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்வது வரை பெண்கள் சக்தியின் அம்சமாக இருந்து வலிகளை தாங்கிக் கொள்கின்றனர். ஆண் குழந்தையை விட பெண் குழந்தைகள் தான் வளர்ச்சியில் முதன்மையாக உள்ளனர்.குப்புறப்படுப்பது,சிரிப்பது,தவள்வது,நடப்பது,பேசுவது எல்லாம் முந்திக்கொண்டு செய்கின்றனர் என்பது விஞ்ஞான உண்மை.

சாதனை பெண்மணிகள் அறிவை வளர்க்கும் புனித இடமான கல்விக்கூடங்களில் பெரும்பான்மையினர் பெண்கள்தான். ஏனெனில் அவர்களுக்குத்தான் பொறுமை அதிகம் என்று கல்வி நிர்வாகத்தினரால் தேர்ந்தெடுத்து வெற்றியும் பெறுகின்றனர். செவிலியர்கள்,மருத்துவர்கள்,விமானப்பணிப்பெண்கள்..இப்படி அநேகர் சிரித்த முகத்துடன் வலம் வருவதில் பெண்களே அதிகம்.
மடக்கும் பெண்மணிகள் ரகசியமாக குரலை தாழ்த்தி கிசுகிசுப்பது முதல், மற்றவர்களின் கவனத்தைக் கவர உச்சஸ்தாயியில் பேசுவதிலாகட்டும் இவர்களுக்கு நிகரில்லை. ஒரே கேள்வியை பலவித கோணத்தில் அலுக்காமல் கேட்டு உண்மையை அறியும் வல்லமை இவர்களுக்கே உண்டு. 

கிரகிக்கும் தன்மை அதிகம் பெண்கள் அதீத பார்வைத்திறன் கொண்டவர்கள். எந்த ஒரு கூட்டமான இடத்துக்கு சென்றாலும் தெரிந்தவர் தலை இவர்களது கண்களுக்கு சட்டென சிக்கிவிடும். அதேபோல் பெண்கள் கூர்மையான கவனிக்கும் தன்மை கொண்டவர்கள். முணுமுணுக்கும் ஆண்களிடம் இருந்து வார்த்தைகளை கவனித்து கரெக்டாக பாயிண்ட் அறிந்து கொள்வார்கள்.

மோப்ப சக்தி மோப்ப உணர்விலும் இவர்களை அடித்துக்கொள்ள வாய்ப்பில்லை.ஒரு உணவகத்திற்கு சென்றால் உணவுப்பொருளை மோப்பம் செய்தே இன்னென்ன சமையல் பொருட்கள் சேர்த்து செய்த உணவுப்பண்டம் இது கண்டு பிடித்து சொல்வது முதல் எதிர் பிளாட்டில் இருந்து வரும் வாசனை,கீழ் பிளாட்டில் இருந்து வரும் சமையல் வாசனையை நுகர்ந்து எளிதில் இன்னவகை உணவு என்று கண்டுபிடிக்கும் தகுதி இவர்களுக்கே உரித்தானது.

கற்பூர புத்தி எதையும் சட்டுன்னு புரிந்து கொள்ளும் கற்பூரப்புத்தி பெண்களுக்கு மட்டுமே உண்டு என்பது கண்கூடான உண்மை. வீட்டில் அலமாரிகளில் மலை போன்று குவித்து பொருட்கள் இருந்தாலும் கண்பார்த்ததும் கையால் எடுக்கும் திறமை பெண்களைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெண்களால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும் என்பது திண்ணமான உண்மை. போனை எடுத்தால் அது அனலாக கொதிக்கும் வரை பேசித்தீர்ப்பதில் சூராதிசூரர்கள்.

தோழமை உணர்வு பெண்கள் யாருடனும் சட்டென்று பழகிவிடுவார்கள். அதிக தோழமை உணர்வு பெண்களுக்கு மட்டுமே உரித்தானது. பிறந்த வீட்டு உறவினர்களையும், புகுந்த வீட்டு உறவினர்களையும் பேலன்ஸ் செய்து ,சமாளித்து வாழ்வியலை அழகாக்குவதும் இவர்களே. பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டிருந்தாலும் கமுக்கமாக சேமிப்பில் செம கில்லாடிகள் இவர்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

நினைவாற்றல் அதிகம் கடுகளவேணும் ஒரு சிறு பொருளைப்பார்த்தாலும் அது என்ன வென்று அடையாளம் கண்டு பிடிப்பதில் இருந்து மண்டையில் அது பற்றி ஏற்றிக்கொள்வது,மனசில் அது பற்றி படிக்கறது,பிரிதொரு சமயத்தில் அது எங்கே எப்படி,எவ்வளவுக்கு கிடைக்கும் என்பதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் ஞானச்செல்விகள் இவர்கள். ஒருத்தர் தெரிந்த மொழியில் பேசி புரியா விட்டாலும் புரிந்த மாதிரி காட்டிக்கொள்வது முதல், புரியாதவர்களுக்கு புரியும் வரை அலுப்பு சலிப்பில்லாமல் திரும்பத்திரும்ப சொல்லி புரிய வைப்பதில் புண்ணியர்களும் இவர்களே. இப்படி இயற்கையும் விஞ்ஞானமும்,சுற்றுப்புறமும் பெண்களுக்கு தன்னிகரில்லாத ஆற்றலை தந்திருப்பதால்தான் பெண்களால் அனைத்துமாகி நிற்க முடிகிறது. வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை தாண்டி சாதிக்க முடிகிறது.

ரூ.2,010 கோடியில் திருப்பதி தேவஸ்தான பட்ஜெட்!

நகரி :திருப்பதி தேவஸ்தானம், 2012 -13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு முதன் முதலாக, 2,010 கோடி ரூபாய்க்கான பட்ஜெட், தேவஸ்தான போர்டின் பட்ஜெட் கூட்டத்தில், பக்தர்களின் மீது சுமையின்றி ஆமோதிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான போர்டின் கூட்டம், சேர்மன் பாபிராஜி தலைமையில் நேற்று முன்தினம் திருமலையில் நடந்தது. பின்னர், பாபிராஜி பட்ஜெட் அம்சங்கள் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:புது மணமக்களுக்கு தேவஸ்தானம் சார்பில், இலவசமாக நடத்தி வைக்கப்படும், "கல்யாண மஸ்து திருமண நிகழ்ச்சிகளை, இனி திருமலையில் மட்டுமே நடத்த தீர்மானிக்கப்பட்டது. "நித்ய கல்யாணம் என்ற பெயரில் இத்திருமணங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.தமிழகத்தில் கன்னியாகுமரி, அரியானா மாநிலத்தில் குருஷேத்திரத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் கட்ட, பட்ஜெட்டில், 22 கோடியே 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்படும். இதுவரையில் அதிகளவு முன்பதிவு செய்துள்ள ஆர்த்தி சேவா டிக்கெட் எண்ணிக்கை குறைக்கப்படும்.தலித், தாழ்த்தப்பட்ட சிற்றூர்களில் கோவில் கட்ட வழங்கப்பட்டு வரும் நிதியை, 5 லட்சத்தில் இருந்து, 10 லட்சமாக உயர்த்தப்படும். இதற்கு பட்ஜெட்டில், 12 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். திருமலையில் பக்தர்கள் இலவசமாக பயணம் செய்ய, மேலும் புதிதாக ஏழு (தர்ம ரதம்) பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முடி காணிக்கை செலுத்தும், "கல்யாண கட்டா கட்டடங்களில் பக்தர்களுக்கு மேலும் வசதி ஏற்படுத்தித் தரப்படும். "ஸ்வரணம் திட்டத்தின் கீழ், வாய் பேசாத, காது கேளாத குழந்தைகளுக்கு மருத்துவ உதவி அளிக்க, 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், 150 இடங்களில் சீனிவாச கல்யாண உற்சவம் நடத்த அனுமதி அளிக்கப்படும். திருமலையில் "நந்தகம் விடுதி வளாகப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, அங்கு கூடுதல் வசதி ஏற்படுத்தப்படும்.திருப்பதி தேவஸ்தான சொத்துக்கள் மற்றும் பக்தர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க அனுமதிக்கப்படும். திருமலை கோவிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்த, "இன்னர் கேரிடார் என்ற பெயரில், திருமலையைச் சுற்றிலும் இரும்பு வேலி அமைக்கவும், அலிபிரியில் பாதுகாப்பை பலப்படுத்த நவீன வசதியுடன் கண்காணிக்கவும் நிதி ஒதுக்கப்படும்.திருப்பதியில் உள்ள ருயா மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த, 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நடைபாதை வழியில், 20 கி.மீட்டருக்கு ஒரு இடத்தில், பக்தர்கள் ஓய்வு எடுக்க கட்டடங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்படும்.திருமலையில் துப்புரவு மற்றும் தூய்மைக்காக, முன்னுரிமை அடிப்படையில், 58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நித்ய அன்னபிரசாதம் டிரஸ்டுக்கு நிதி பற்றாக்குறையை போக்க, 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.இவ்வாறு பாபிராஜி தெரிவித்தார்.

அடக் கொடுமையே...



சென்னை சவுகார்பேட்டை பி.கே.ஆர். கார்டன் பகுதியில் வசித்து வருபவர் சுரேந்திரகுமார் (வயது 17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்தான். இதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் சுப்ரியா. (பெயர் மாற்றம்) 37 வயதான இவருக்கு திருமணமாகி 8 வயதில் மகன் இருக்கிறான். ஆசிரியை சுப்ரியா, மாணவன் சுரேந்திரகுமாரிடம் நெருங்கி பழகினார். 

பாடம் கற்றுக் கொடுக்கும் ஆர்வத்தில் ஆசிரியை இப்படி நடந்து கொள்வதாக சுரேந்திரா நினைத்தான். ஆனால் நாளடைவில் சுப்ரியா அவனுக்கு காதல் பாடத்தை கற்றுக் கொடுத்தார். இதனால் குரு சிஷ்யன் உறவு மாறி 2 பேரும் காதல் வானில் சிறகடிக்க தொடங்கினர். பள்ளியில் காதலை கற்றுக் கொடுத்தது மட்டுமின்றி, மாலையில் டியூசன் என்ற பெயரிலும் சுப்ரியா, சுரேந்திராவுக்கு அறிவியலை கற்றுக் கொடுத்துள்ளார். செல்போன் மூலமாக ஆபாச எஸ்.எம்.எஸ். மற்றும் படங்களையும் சுப்ரியா அனுப்பினார். ஒருநாள் சுரேந்திரா வீட்டில் இருந்தபோது சுப்ரியா அனுப்பிய ஆபாச படம் அவனது செல்போனில் வந்து விழுந்தது. இதனை சுரேந்திராவின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடந்த மாதம் யானைக்கவுனி போலீசில் புகார் செய்தனர். பள்ளியிலும் முறையிட்டனர். இதன்பிறகு ஆசிரியை மற்றும் மாணவனின் நலன் கருதி புகார் வாபஸ் பெறப்பட்டது. 

ஆசிரியை சுப்ரியாவை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில் கடந்த 4 ந்தேதி மாலையில் வீட்டை விட்டு சென்ற சுரேந்திரா பின்னர் வீடு திரும்பவில்லை. அப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் அவனை கண்டுபிடிக்க முடியாததால் யானைக்கவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடினர். வியாசர்பாடியில் உள்ள ஆசிரியை சுப்ரியாவின் வீட்டுக்கு உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அங்கு அவரையும் காணவில்லை. சுப்ரியாவும், சுரேந்திராவும் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. 2 பேரும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். 

சுப்ரியாவின் செல்போனும், மாணவன் சுரேந்திராவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு தொய்வு ஏற்பட்டுள்ளது. யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை சுப்ரியா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மாணவனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்துவரும் நேரத்தில் ஆசிரியை சிக்கினால் அவரை கடத்தல் வழக்கில் (மாணவர் மைனர் என்பதால்) கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.காதலுக்கு கண் இல்லை என்பார்கள் ஆனால் இன்று.. கள்ளக்காதலுக்கும் கண் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குருவாக போற்றி மதிக்கப்படவேண்டிய ஆசிரியை ஒருவரே, தனது பள்ளியில் படிக்கும் 11 வது வகுப்பு மாணவனை மயக்கி காதல் வலையில் வீழ்த்திய சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



மாசி மகத்தன்று செல்ல வேண்டிய கோயில்



 மாசி மாதத்தை மாதங்களின் சிகரம் என்றும் கும்பமாதம் எனவும் கூறுவார்கள். மாசி மாதத்தில் மகநட்சத்திரத்துடன் பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே மாசி மகம். இந்த நாளில் மகம் நட்சத்திரத்திற்கே உரிய கோயிலான தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் சகல சவுபாக்கியங்கள் கிடைக்கும், நீண்ட கால பிரார்த்தனை நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. அத்துடன் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்களும் மாசிமகத்தன்று இந்த கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பிலும் சிறப்பு

மைக்ரோசாப்ட்டுடன் தமிழக அரசு!

 மைக்ரோசாப்ட்டின் சர்வதேசத் தலைவர் ஜீன் பிலிப்பி கார்டோயிஸ், இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தமிழகத்தில் கல்வி மற்றும் இ-கவர்னன்ஸ் துறைகளில் மைக்ரோசாப்ட் செய்ய உள்ள முதலீடுகள் குறித்து பேச்சு நடத்தினார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் மேம்படுத்தப்பட்ட கணினி படிப்பை வழங்கவும், தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகத்தை மேம்படுத்தவும் தமிழக அரசுடன் மைக்ரோசாப்ட் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளது.

திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்!

தனியார் பிஸ்கெட் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் மாணவிக்கு, டெண்டுல் கருடன் டின்னர் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திண்டுக்கல் எஸ்எம்பிஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி தயாஸ்ரீ. இவர் மாநில அளவில் நடைபெற்ற சன்பீஸ்ட் மில்கி மேஜிக் போட்டியில் கலந்து கொண்டு முதல் இடத்தைப் பெற்றுள் ளார். இப்போட்டி மாவட்ட, மண்டல, மாநிலம் என்று மூன்று கட்டமாக நடை பெற்றது.


இதில் உளவியல், உடற்தகுதி, தனித்திறன், ஆளுமை என்று பல்வேறு நிலைகளில் போட்டி நடந்தது. மாநில அளவில் முதலிடம் பெற்ற இவருக்கு 80 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும், ஒரு வாரம் ஐரோப்பாவில் கல்வி சுற்று லாவுக்கான செலவுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. இதுதவிர நட்சத்திர கிரிக்கெட் வீரர் டெண் டுல்கருடன் டின்னர் சாப்பிடும் வாய்ப்பும் இந்த மாணவிக்கு கிடைத் துள்ளது. மாணவியின் பெற்றோர் பாபு, சிவகுமாரி ஆகியோர் சின்னாளபட்டியில் டாக்டர்களாக உள்ளனர். வெற்றி பெற்ற மாணவியை பள்ளித் தாளாளர் கனகசபை, முதல்வர் ஜெயப் பிர காஷ் மற்றும் ஆசிரியர் கள் உள்பட அனை வரும் பாராட்டினர்.

பெண்ணுக்கு பிடித்த அப்பாவா நீங்கள்?

பருவம் என்பது பலவித குழப்பங்களைக் கொண்டது. இந்த காலகட்டத்தை உடைய பெண் குழந்தைகள் தங்களின் உடல் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களினால் பலவித சிக்கல்களை சந்திக்கின்றனர். பதின்பருவ பிள்ளைகளின் கோபத்திற்கும், எரிச்சலுக்கும் அர்த்தம் புரியாமல் பெற்றோர்கள் தவித்துதான் போகின்றனர். டீன் ஏஜ் பருவ காலக்கட்டத்தில் பெண் குழந்தைகள் வேகமாக வளர்கின்றனர் இவ்வளர்ச்சி உடல், அறிவு மற்றும் உணர்வு ரீதியானது. இந்த வயதில் பெண் பெரியவள் ஆகிவிடுகிறாள். இந்த சூழ்நிலையில் தந்தை – பெண் உறவு என்பது சற்று சிரமமான சிக்கலை ஏற்படுத்தும். தந்தையர்கள் தங்களின் பெண்களை குழந்தையாகவே பாவித்துக்கொண்டு ஆளுமையைத் திணிப்பது பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மகளை புரிந்து கொள்ளுங்கள் எந்தப் பெண் குழந்தையும் சிறிய வயதில் அப்பா செல்லமாக இருப்பார்கள். இந்த பாசவலையில் பழகிப்போன அப்பா, திடீரென டீன் ஏஜ்ஜில் மகள் தன்னைவிட்டு விலகத் தொடங்குவதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாதுதான். தாய் - மகள் முறை என்பது அப்பா - மகள் உறவு முறையிலிருந்து மிகவும் மாறுபட்டது. தாயுடன் ஒட்டுதலாக இருக்கும் மகள் தன்னிடம் விலகி இருக்கிறாளே என்ற ஆதங்கம் எந்த ஒரு தகப்பனுக்கும் ஏற்படத்தான் செய்யும். இந்த சூழ்நிலையில் "என் விருப்பப்படிதான் நடப்பேன்! எனக்கு என்ன பிடிக்குமோ அதை தான் செய்வேன்! எனக்கு எதை படிக்க வேண்டும் என்று தோணுகிறதோ அதைத்தான் படிப்பேன்' என்று அவள் அடம்பிடிக்கும் போது, குடும்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனையும் அப்பாவுக்கும் மகளுக்கும் இடையில் நடக்கின்ற நிகழ்வுகளின் விளைவுகள் நிச்சயம் குடும்பத்தையும் கலங்கடித்துவிடத்தான் செய்யும். எனவே, ஒரு டீன்ஏஜ் மகளுக்கு அப்பாவாக இருக்கும் ஒருத்தர் தன்னுடைய அதிகாரத்தை தளர்த்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு அப்பா என்ற ஸ்தானத்திலிருந்து கீழ் இறங்கி தோழனாக நடந்து கொள்ள வேண்டும்.

அறிவுரைகள் வேண்டாம் டீன் ஏஜ்ஜில் இருக்கும் மகள் அம்மாவைத் தவிர ஏறக்குறைய எல்லா உறவுமுறையினரிடமிருந்தும் தனித்து இருக்கவே விரும்புவாள்.அதை அப்பா என்பவர் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து அறிவுரைகள், சொல்வதும், அதை செய்; இதை செய்யாதே என அதிகாரம் செய்யும் போதும் அது அவர்களின் மனதை, தன்னம்பிக்கையை, அவர்களுக்குண்டான ஆளுமையை தகர்க்கின்றன. எனவே பதின் பருவ காலக்கட்டத்தில் உங்கள் மகளுக்காக சில விஷயங்களை விட்டுத்தான் கொடுக்க வேண்டியிருக்கும். தந்தையர் தங்களின் அணுகு முறையை மாற்றித்தான் கொள்ள வேண்டும்.

சந்தேகம் வேண்டாமே பதின் பருவத்தில் பெண்கள் தன்னுடைய அந்தரங்க விஷயங்களை கட்டிக் காப்பவளாகவும், அதை வெளியில் சொல்ல விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள். உடல் வளர்ச்சி மாற்றம், மனதில் எழும் மனவெழுச்சிகளுக்கு அர்த்தம் புரியாமல் இத்தகைய நிலையில் இதை வெளிப்படுத்தாமல் இருக்க, தனிமையை தேடுவாள். அப்பாவிடம் விலகி இருப்பதையே விரும்புவாள். அதே சமயம் விலகி இருக்கவும் ஆசைப்படும் அவள் அப்பாவின் பாசத்திற்காகவும் ஏங்கிக்கொண்டிருப்பாள்.

மகளின் குழப்பங்களையும், சந்தேகங்களையும், மனபோராட்டங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். உடலிலும் மனதிலும் எழும் மாற்றங்கள் குறித்து அவளுக்கு நல்ல தோழமையோடு இருந்து அறிவுறுத்தல் வேண்டும். அதை விடுத்து அவள் எங்கே போகிறாள்? யாரோடு பேசுகிறாள் என்றெல்லாம் துப்பறிய தொடங்கினால் பெற்றோர் மீது கோபப்பட ஆரம்பித்துவிடுவாள்.

பக்குவமாக கையாளுங்கள் நல்லது, கெட்டதுகளை அன்புடன் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களின் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, அதே சமயம் அவர்களின் நடவடிக்கைகளில் மேற்பார்வையிட்டு, எந்த விஷயத்தையும் எதிர்க்கொள்ள வேண்டிய மன பக்குவத்தை அவர்களுக்குத் தேவைப்படும் போது தந்து, வழிகாட்டுதலோடு இருந்தால், மகள் அப்பா உறவுமுறை குழப்பத்தை ஏற்படுத்தாது. அச்சத்தை உருவாக்காது.

குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமான தலைமுறை இடைவெளியை மேலும் நீட்டிவிடும் வேளையை இன்றை அவசர உலகமும், மேற்கத்திய பழக்கங்களும், அதிவேக தகவல் தொழில் நுட்பங்களும் கச்சிதமாக செய்து வருகின்றன. இந்த சூழலில் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் சில சமயங்களில் பிடிக்காதவர்களாகிவிடுகின்றனர். எனவே, அப்பாக்கள் குடும்பத்தில் தங்களின் ஆளுமையை வெளிப்படுத்தும் செயலை மிக புத்திசாலித்தனமாக கையாள வேண்டும். பதின் பருவத்தில் முக்கிய மான மாற்றம் மொட்டு விடும் பாலியல் உணர்வு. இந்த இனம் புரியாத உணர்வை அவர்கள் முழுவதும் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவார்கள். இதை கூர்ந்து கவனிக்கும் அப்பாக்கள் சட்டென்று அறிவுரைகளை அள்ளிவிடத்தான் நினைப்பார்கள். ஆனால், அப்படி செய்துவிடாதீர்கள்.

இந்த சூழ்நிலையில் அப்பா என்பவர் மகளுக்கு ரொம்ப அனுசரனையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அனைத்திற்கும் ஒரு பொது வரையறைகளை வைத்துக் கொண்டு, பதின் பருவ மகளிடம் அன்பாக நடந்து கொண்டால் எந்த அப்பாவுக்கும் பெண்ணைப் பிடிக்கும். எல்லாப் பெண்களுக்கும் அப்பாவையும் பிடிக்கும்.

கருச்சிதைவு ஏன்?

ஒரு பெண் தாயாவது அற்புதமான தருணம். தன்னுள் உருவான கருவை பலவித கனவுகளுடன் தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் எல்லா பெண்களாலுமே முதல் குழந்தையை முழுமையாக பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, ஒரு சில காரணங்களினால் இறந்து வெளியேறி விடுகிறது. இதனையே கருச்சிதைவு என்கின்றனர் மருத்துவர்கள்.

கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது? கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தாயின் உடல்நிலையும், கருவை தாங்கும் சத்தும் இல்லாததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கருச்சிதைவிற்காக பல்வேறு காரணங்களை மகப்பேறு மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

கருவானது கர்ப்பப் பையில் சரியான வளர்ச்சி பெறாமல் இருந்தால் கருச்சிதைவு அபாயம் ஏற்படும். அதேபோல் கருவானது கருப்பையில் சரியான முறையில் தங்காமல் இருத்தலும், கருப்பையின் வாய் திறந்திருத்தலும் அபார்சன் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய பிரச்சனைகளை சரிசெய்ய தகுந்த மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் கருச்சிதைவு தானாகவே ஏற்பட்டு விடும்.

இதேபோல் கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் கருச்சிதைவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது.தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது கருச்சிதைவு ஏற்படுகிறது.

மது, போதை பாதிப்பு சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட கருச்சிதைவை அதிகப்படுத்துகின்றன. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் கருச்சிதைவை வலிந்து அழைக்கும் காரணிகள். மனநலக் கோளாறுகள் கருச்சிதைவில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன. இதன் காரணமாகவே கருவுற்று மூன்று மாதங்களுக்கு கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். பயணங்களை தவிர்க்கவும்.

குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம். முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி இருக்கவேண்டும். அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.

ஊட்டச்சத்துணவு அவசியம் நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் செய்யக் கூடாது. கர்ப்பிணிகள் இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், கருச்சிதைவை முடிந்தவரை தடுத்து விடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

65 சாப்பிட விருப்பமா?

சிவப்பு நிறத்தில் மொறு மொறு என்று பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் உணவு சிக்கன் 65. கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பிரபலமடைந்து வரும் இந்த உணவு கோழிக் கறியை வறுத்து செய்யப்படுகிறது. சிக்கன் 65 கண்ணைக் கவரும் விதத்தில் கலராக தெரியவேண்டும் என்பதற்காக சேர்க்கப்படும் பொடியில் உள்ள ரசாயனம் மனித உடலுக்கும், குடலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. சிக்கன் 65 அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள், மரபணு பாதிப்புகளும் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் ரசாயனம் கலந்த மாமிச உணவுகளை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

செயற்கை நிறங்கள் உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அணுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எட்டு வகையான நிறங்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி உண்டு. ஆனால் இதை யாரும் கடை பிடிப்பதில்லை.  அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும் என்று பிரபல குடல்நோய் நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.

கழுத்துக் கழலை நோய் சிக்கன் 65ல் துணிகளுக்கு சாயம் ஏற்றப் பயன்படும் சூடான் டை, மெட்டானில் எல்லோ ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதுவே குடல் புற்றுநோய், சிறுநீராகக் கோளாறு, மரபணு கோளாறுகளை ஏற்படுத்துகின்றனவாம். அதேபோல் உணவில் சிவப்பு நிறத்தை கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த செயற்கை நிறங்களை இனிப்புகளில் மட்டுமே சேர்க்கவேண்டும். காரவகைகளில் சேர்க்க அனுமதி கிடையாது. மக்களின் மனதில் உணவைவிட உணவின் நிறம்தான் பளிச்சென்று பதிந்து உள்ளது. சிக்கன் 65 என்றால் சிவப்பு நிறமாக இருக்கவேண்டும் என்றும், அப்படி இருந்தால் மட்டுமே சிக்கன் 65 என்றும் நினைக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டே வியாபாரிகளம் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.

சிறுவர்களுக்கு ஆபத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம். எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த உணவுகளை சிறுவர்கள் கண்ணில் கூட காட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள். இதேபோல் ரசாயனம் கலந்து பதப்படுத்தப்பட்டுள்ள பன்றி இறைச்சி, கோழிக்கறி போன்றவைகளை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பதாலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்று உணவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கிரில்டு சிக்கன் சாப்பிடுவதும் ஆபத்து என்று கூறி சிக்கன் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.

ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டுப் பொருட்களை பள்ளிகளில் பயன்படுத்த தடை!


நாகப்பட்டினம் மாவட்டம் குற்றாலத்தைச் சேர்ந்தவர் வெள்ளிமலை. இவரது மகள் முத்துலட்சுமி குற்றாலம் கணபதி தேசிய நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 22.12.2003 அன்று மதிய உணவு இடைவேளையின் போது முத்துலட்சுமி பள்ளி அருகே தோழிகளுடன் சேர்ந்து ராட்டினம் ஆடினார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் முத்துலட்சுமியின் கையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் வலது கை அப்பறப்படுத்தப்பட்டது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிமலை வழக்கு தொடர்ந்தார். அதில் தனது மகள் வலது கையை இழக்க பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு தான் காரணம். எனவே அவளது எதிர்காலத்தை கருத்து கொண்டு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா நேற்று வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது,வழக்கு விசாரணையில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் கவனக் குறைவு மூலம் சிறுமி வலது கையை இழந்துள்ளது தெரிய வருகின்றது. சிறுமியின் தந்தை அரசிடம் இழப்பீடு அளிக்க கோரிக்கை விடுத்தும் கிடைக்கவில்லை.வழக்கின் தன்மை, ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மொத்தம் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதில் பள்ளி நிர்வாகம் ரூ.1.5 லட்சமும், அரசு ரூ.1.5 லட்சமும் வழங்க வேண்டும். மேலும் இழப்பீட்டுத் தொகையை 2005ம் ஆண்டு முதல் 12 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.

ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை பள்ளி நேரத்தில் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. இதனால் பல விபத்துகள், கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. மேலும் பள்ளி வளாகம் அல்லது பள்ளியையொட்டிய பகுதியில் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய விளையாட்டு பொருட்களை வைக்க அனுமதிக்கக் கூடாது. குழந்தைகளின் சுகாதாரத்தை கெடுக்கும் உணவுப் பொருட்களை பள்ளியின் அருகே விற்கக் கூடாது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

"SWISS BANK" LATEST LETTER LEAK [31st Oct, 2011]


Swiss Bank Corporation (Switzerland) gives you a clear note in which India’s top 10 healthy account details of indian origin persons with high money deposites have been stated. Please do check their all Indian account information with IT returns, their business profile, business background. Check the below accounts holders complete details and revert us their complete clear business details before 31st March, 2012.
Rajeev Ratna Gandhi - 1,98,356/-Crores
Andimuthu Raja - 7,856/-Crores
Harshad Mehta - 1,35,121/- Crores
Sharad Govindrao Pawar - 28,956/-Crores
Palaniappan Chidambaram - 33,451/-Crores
Suresh Kalmadi - 5,560/-Crores
Muthuvel Karunanidhi - 35,009/-Crores
Ketan Parekh - 8,256/-Crores
Chirag Jayesh Mohini - 96,455/-Crores
Kalanithi Maran - 15,090/-Crores
The above accounts have been blacklisted in our system dock, if we do not get a clear details of thier funds desposited in our bank before 31st March, 2012 their account will be impede.

ராகுல் கொள்கை அடி வாங்க ஆரம்பித்து...



காங்கிரஸ் கட்சியின் வருங்காலத் தலைவர், நாளைக்கே பிரதமர் பதவி கிடைத்தாலும் ஏற்றுக் கொண்டு சிறப்பாக செயல்படக் கூடியவர், அலெக்சாண்டர் போல் பிரமாதமான தலைவர் என்றெல்லாம காங்கிரஸாரால் கோஷ்டி கானம் பாடப்பட்டு வரும் ராகுல் காந்திக்கு ஐந்து மாநிலத் தேர்தலில் மீண்டும் ஒரு பெரும் தோல்வி கிடைத்துள்ளது. அவரது உத்திகளுக்குக் கிடைத்த பெரும் அடியாக இது கருதப்படுகிறது.

பெரிய சோகம் என்னவென்றால், தான் எம்.பியாக உள்ள அமேதி தொகுதிக்குட்பட்ட அத்தனை சட்டசபைத் தொகுதிகளையும் அவரது கட்சி சமாஜ்வாடியிடம் பறி கொடுத்திருப்பதுதான். இதுதான் காங்கிரஸை நடுநடுங்க வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸின் கொள்கை வகுப்பு, தேர்தல் உத்திகள், வேட்பாளர் தேர்வு என பல முக்கிய விஷயங்களை ராகுல் காந்தியிடம் தூக்கிக் கொடுத்து விட்டனர். இதனால் பிரதமரை மதிக்கக் கூடத் தேவையில்லை என்ற அளவுக்கு காங்கிரஸார் போய் விட்டனர். அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான், என்ற அளவுக்கு அவர்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர். விளைவு, இப்போது ஒவ்வொரு மாநிலத் தேர்தலிலும் ராகுல் காந்தியின் கொள்கை பலத்த அடியை வாங்க ஆரம்பித்துள்ளது.

பீகார் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வாங்கிய மரண அடியை இன்னும் கூட அக்கட்சியினர் மறந்திருக்க முடியாது. அதேபோல ஒரிசாவிலும் ராகுல் காந்தியின் உத்திகளுக்கு பலத்த அடி கிடைத்தது. தமிழகத்திலும் ராகுல் காந்தியின் அணுகுமுறைகள் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது கேவலமான தோல்வியையே தழுவியது. இப்போது உ.பியிலும், பஞ்சாபிலும், கோவாவிலும் காங்கிரஸ் வாங்கியுள்ள அடியைப் பார்த்தால், இந்த மாநில மக்களும் ராகுல் காந்தியை ஏற்கவில்லை என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

உ.பியில்தான் ராகுல் காந்தியின் அணுகுமுறை பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது. காங்கிரஸ் கட்சி வெல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பல தொகுதிகளையும் அந்தக் கட்சி நழுவ விட்டுள்ளது. முலாயம் சிங் யாத்வையும், மாயாவதியையும் தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார் ராகுல் காந்தி. தேர்தல் பிரசாரத்தின்போது அவர் அடித்த ஸ்டண்ட்டைப் பார்த்தபோது அனைவருமே வியந்து போயிருந்தனர். ஒருவேளை காங்கிரஸ் பெரிய வெற்றியைப் பெற்று விடுமோ என்று கூட நினைக்கத் தோன்றியது. 

ராகுல் காந்திக்கு உதவி புரிய சகோதரி பிரியங்கா காந்தி, தனது கணவருடன் உ.பியில் முகாமிட்டு ஊர் ஊராகப் போய் வந்தார். ராகுல் காந்தி போகாத இடமே இல்லை என்று கூறும் அளவுக்கு ஷேவிங் செய்யக் கூட நேரமில்லாமல் தாடியுடன், உ.பியை வலம் வந்தார்.நடந்து போனார், விவசாயிகளுடன் உட்கார்ந்து பேசினார், குடிசைகளுக்குள் புகுந்து சாப்பிட்டார், இன்னும் என்னவெல்லாமோ செய்தார். ஆனால் கடைசியி்ல வாக்குகளைப் பெறத் தவறி விட்டார்.

இதில் கிளைமேக்ஸ் என்னவென்றால் தனது அமேதி தொகுதியில் ஒரு சட்டசபைத் தொகுதியில் கூட அவரால் காங்கிரஸை வெற்றி பெற வைக்க முடியவில்லை என்பதுதான். அமேதி எம்.பி. தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபைத் தொகுதிகளையும் சமாஜ்வாடி பிடித்து விட்டது. இது ராகுல் காந்திக்கு பெருத்த அவமானமான செய்தி என்பதில் சந்தேகமில்லை. தனது சொந்தத் தொகுதியைக் கூட அவரால் தக்க வைக்க முடியவில்லை.

ராகுல் காந்தியின் புயல்வேகப் பிரசாரம் காங்கிரஸுக்குக் கை கொடுக்கவில்லை. அவரது தேர்தல் உத்திகள், அணுகுமுறைகளுக்கும் பெரும் தோல்வியாக மாறியுள்ளது. உ.பியைப் போலவே பஞ்சாபிலும் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியுள்ளது. கோவாவில் ஆட்சியை பாஜகவிடம் பறி கொடுத்து விட்டது. மணிப்பூரை மட்டுமே தக்க வைத்துள்ளது. அதுவும் கூட அந்த மாநில முதல்வர் இபோபிசங்கின் தனிப்பட் செல்வாக்குதான் காரணமே தவிர காங்கிரஸின் செல்வாக்கு அல்ல.

உ.பியில் கடந்த முறை வாங்கியதை விட சில சீட்களை கூடுதலாகப் பெற்றுள்ளது காங்கிரஸ். உத்தரகாண்ட்டில் கூட பாஜகவிடமிருந்து ஆட்சியை இன்னும் அது முழுமையாக பறிக்கவில்லை, இழுபறிதான் காணப்படுகிறது. மொத்தத்தில் ஐந்து மாநில பொதுத் தேர்தல் ராகுல் காந்திக்கு மட்டுமல்லாமல் காங்கிரஸுக்கும் பெருத்த ஏமாற்றம்தான்.

இளைஞர் காங்கிரஸாரை மட்டுமே நம்பி அவர் களப் பணியாற்றுவது பலன் தராது என்பது புரிந்து போய் விட்டது. மேலும் அவரது அதிபுத்திசாலித்தனமான பேச்சுக்களும் மக்களிடம் எடுபடவில்லை என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. இனியும் காங்கிரஸ் மேலிடம் ராகுலை முழுமையாக நம்பியிருப்பது எந்த அளவுக்கு அந்தக் கட்சிக்கு உதவும் என்பதும் புரியவில்லை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...