|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 March, 2013

C.F.L .பல்புகள் உடைந்தால்?


சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .

* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .

* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் .

* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் .

இது நாடா? சுடுகாடா ??


ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்!

 வாங்க கார் வாங்க குஜராத் போகலாம்.
ஒரு சட்டை அல்லது ஜீன்ஸ் பேண்ட் வாங்கினால் அதே போன்று மற்றொன்று இலவசம் என அறிவிப்பு தற்போது சர்வ சாதாரணமாகி விட்டது. அதன் மூலம் வியாபாரமும் அதிக அளவில் நடக்கிறது. குஜராத்தில் அது போன்ற வியாபார யுத்தியில் ஒரு கார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஒரு கார் வாங்கினால் அதே கம்பெனியின் மற்றொரு கார் இலவசம் என அறிவித்துள்ளது. “ரேபிட் சேடான்” கார் ஒன்று வாங்கினால் “பேபியா” கார் ஒன்று இலவசமாக வழங்கப்படும் என “ஸ்கோடா” கம்பெனி டீலர் உறுதி அளித்துள்ளார். இது 5 ஆண்டுகள் அதாவது 2018 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார் விற்பனை மந்தமானதை தொடர்ந்து இது போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கார் கம்பெனிகள் வெளியிட்டுள்ளனர்.

“வோல்ஸ் வாஜென்” நிறுவனம் அதிரடி சலுகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே வைத்துள்ள பழைய காரை விற்று விட்டு “வென்டோ சேடான்” கார் வாங்கினால் உடனடியாக அதற்குரிய மீதி பணம் தர தேவையில்லை. ஒரு ரூபாய் மட்டுமே கொடுத்தால் போதும். அதன் பின்னர் ஏழு வருடத்துக்கு மீதி பணம் செலுத்த வேண்டியதில்லை. மாறாக முழு பணமாகவோ, 36 தவணைகளாகவோ அதை கட்டலாம். இந்த சலுகை திட்டம் வந்த பிறகு 600 கார்களை விற்றுள்ளதாக குஜராத்தின் “ஸ்கோடா” நிறுவன டீலர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, “வோல்கவா ஜென்” நிறுவனம் மற்றொரு புதுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி “வென்டோ” கார் வாங்கினால் முதலில் அதற்குரிய 50 தசவீதம் பணம் மட்டுமே செலுத்தினால் போதும். மீதி பணத்தை ஒரு ஆண்டுகளுக்கு பிறகு செலுத்தலாம்.

மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள்.

மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது. மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது. அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

எந்த நோய் வராது?
1. ஆஸ்துமா:
மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.

2. கண் பாதிப்பு:
மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.

3. கேன்சர்:
பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

4. இருதய நோய்:
கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

எப்படி சாப்பிடணும்?

1. மீன் உணவை, எந்த வகையில் சாப்பிட்டாலும், அதன் சத்துக்கள் போகாது. ரொட்டி போல சுட்டு தயாரிக்கும் போது நன்றாக சமைக்க வேண்டும். எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில் மூலம் தயாரித்தால் நல்லது.

2. வாணலியில், சிறிய அளவு வெண்ணெய் போட்டும் பொரித்து சமைக்கலாம். "ஓவன்' சாதனத்தில் வைத்தும் சமைக்கலாம்.

3. உறைய வைக்கப்பட்ட மீனாக இருந்தால் அதற்கேற்ப, நேரம் விட்டு சமைக்க வேண்டும். சில வகை மீன்களில் பாதரசம் அதிகம். அதனால், அவற்றை சமைக்கும் போது, மிகுந்த கவனம் தேவை.

4. பாதரசம் அதிகமுள்ள மீன் வகையாக இருந்தால், கருத்தரிக்க இருக்கும் பெண்களும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தவிர்த்துவிட வேண்டும்.

5. மோசமாக உள்ள குளங்கள், குட்டைகளில் பிடித்த மீன்களை சமைத்துச் சாப்பிடக் கூடாது. அதனால், வேறு பாதிப்புகள் வரலாம்

உலகின் கடைசி வீரனாவது உன்னை சாய்ப்பான்!


"சத்யமேவ ஜெயதே'


நம் நாட்டு முப்படைகளின் கொடிகளில், "வாய்மையே வெல்லும்' என்ற வார்த்தை குறிப்பிடப்படாமல் பயன்படுத்தப்பட்டு வந்தது; இதை, தமிழகத்தைச் சேர்ந்த, காந்தியவாதி, கண்ணன் கோவிந்தராஜ் சுட்டிகாட்டியதை தொடர்ந்து, அனைத்து கொடிகளையும் மாற்றுவதற்கு முப்படைகள் முன்வந்துள்ளன.  நம் நாடு சுதந்திர பெற்ற பின், 1947ல், முப்படைகளின் கொடிகள் வடிவமைக்கப்பட்டன. ராணுவ கொடி, அசோக சின்னத்தின் கீழ், இரண்டு வாள்கள் கொண்டதாகவும், இடது பக்க ஓரத்தில் தேசிய கொடி இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டது. கடற்படை கொடி, வெள்ளை நிறத்திற்கு மத்தியில் அமைந்துள்ள நான்கு சிவப்பு கோடுகளுக்கு மத்தியில், அசோக சின்னமும், இடது பக்க ஓரத்தில் தேசிய கொடியும், வடிவமைக்கப்பட்டிருக்கும். அதே போல், நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்ட கப்பற்படை கொடியில், அசோக சின்னத்தின் கீழ், கழுகு பறப்பது போன்றும், இடது பக்க ஓரத்தில் தேசிய கொடி இருப்பது போலவும், வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மூன்று கொடிகளிலும், அசோக சின்னத்தின் கீழ், வாய்மையே வெல்லும், அதாவது, "சத்யமேவ ஜெயதே' என, இந்தியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த வார்த்தை, இடம் பெற்றால் மட்டுமே, தேசிய கொடி முழுமை பெறும் என, அரசியல் அமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், இம்மூன்று கொடிகளிலும் அவ்வார்த்தை, இடம் பெறவில்லை. இது, சட்டத்திற்கு புறம்பானது என, காஞ்சிபுரம் கீழ்மருவத்தூரைச் சேர்ந்த, காந்தியவாதி கண்ணன் கோவிந்தராஜ், முப்படைகளின் தளபதிகளுக்கு கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன், அவருக்கு பதில் எழுதிய அதிகாரிகள், விரைவில், முப்படைகளின் கொடிகளில், சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தை, இடம் பெறும் என, பதில் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, கண்ணன் கோவிந்தராஜ் கூறியதாவது: தேசிய கொடிகளில், வாய்மையே வெல்லும் என்ற வார்த்தை இடம் பெற்றால் மட்டுமே, கொடி முழுமை பெறும். ஆனால், சுதந்திரம் பெற்று இன்று வரை, முழுமை பெறாத கொடியையே நாம் பயன்படுத்தி வந்திருக்கிறோம் என்பது வேதனைக்குரியது. நம் நாட்டில் உள்ள குடிமக்கள், தேசிய கொடியை தவறாக பயன்படுத்தினால், தண்டிப்பதற்கென, சட்டப்பிரிவுகள் உள்ளன. ஆனால், அரசின் பிரதான அமைப்பே தவறாக பயன்படுத்தி வருவதை, நினைத்தால் வேதனையாக உள்ளது. இருந்தாலும், இனிமேலாவது, மாற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...