2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, உலகளவில் 98 கோடியே 30 லட்சம் பேர் சர்வதேச சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டோடு ஒப்பிடும் போது, இது 4.6 சதவீதம் அதிகம் என உலக சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. 2010, 2011ம் ஆண்டுகளில் அதிக சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடு என்ற பெருமையை, பிரான்ஸ் பெற்றுள்ளது. 7 கோடியே 95 லட்சம் பேர் பிரான்சுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இதற்கு அடுத்த 4 இடங்களில் அமெரிக்கா, சீனா, ஸ்பெயின், இத்தாலி உள்ளன. 2011 கணக்கின் படி, 62 லட்சத்து 90 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
27 September, 2012
எட்டு கோடி பேரின் பசியை போக்கி இருக்க முடியும்?
நாட்டில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்குகளில், கடந்த ஐந்தாண்டுகளில், 36 ஆயிரம் டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வீணடிக்கப்பட்ட இந்த உணவு தானியங்கள் மூலம், எட்டு கோடி மக்களின், பசியை போக்கி இருக்க முடியும்.தேஜிந்தர் பால் சிங் பக்கா என்பவர், "கடந்த ஐந்தாண்டுகளில், இந்திய உணவு கழகத்துக்கு (எப்.சி.ஐ.,) சொந்தமாக, நாடு முழுவதும் உள்ள சேமிப்புக் கிடங்குகளில், எவ்வளவு உணவு தானியங்கள் கெட்டுப் போயின' என்பது பற்றிய, விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேட்டிருந்தார்.நாடு முழுவதும் உள்ள, இந்திய உணவு கழகத்துக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில், சேமித்து வைக்க முடியாமல், 2008லிருந்து, இதுவரை, 36 ஆயிரம் டன், உணவு தானியங்கள், பயன்படுத்த முடியாத அளவுக்கு, கெட்டு போயின. இதில், அதிகபட்சமாக, இந்தியாவின் உணவு தானிய களஞ்சியம் என அழைக்கப்படும், பஞ்சாபில் தான், 19.290 ஆயிரம் டன், உணவு தானியங்கள், அழுகி விட்டன. அடுத்தபடியாக, மேற்கு வங்கத்தில் உள்ள, அரசு உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்குகளில், 4,545 டன், உணவு தானியமும், குஜராத்தில், 4,290 டன்னும், அழுகி விட்டன. வீணடிக்கப்பட்ட, இந்த, 36 ஆயிரம் டன் உணவு தானியத்தின் மூலம், ஒரே ஒரு நாளைக்கு, 440 கிராம் என்ற அளவில், எட்டு கோடி பேரின் பசியை போக்கி இருக்க முடியும். இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலட்சியம் காட்டாமல் உதவி செய்யுங்கள்.
சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு, மறந்துபோன மனிதாபிமானமும் ஒரு காரணமாகியுள்ளது.புற்றீசல் போல பெருகி வரும் வாகனங்களுக்கு தக்கவாறு விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாலை விபத்து செய்தி இல்லாத நாளிதழ்களே என்று கூறும் அளவுக்கு மோசமான நிலை உருவாகியுள்ளது.
சாலை விபத்தில் சிக்கி ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பாதிப்படைவர்களை உரிய நேரத்தில் உதவி கிடைக்காததும் முக்கிய காரணம்.துடிதுடிப்பவர்களை ஒரு சில நொடிகள் நின்று வேடிக்கை பார்த்து விட்டு கண்டும் காணாமல் செல்லும் மனப்போக்கு அதிகரித்துள்ளது. இதுவே பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணமாகிறது. விபத்துக்கள் எதிர்பார்த்து நடப்பது இல்லை.
எனவே, சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு ஒவ்வொரு வினாடியும் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து விபத்தில், பாதிக்கப்படுவர்களுக்கு அலட்சியம் காட்டாமல் உதவி செய்யுங்கள்.பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்தவுடன் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல உதவுங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதும் அவசியம். உரிய நேரத்தில் நீங்கள் செய்யும் உதவி ஒரு உயிரை காப்பாற்றப் போகிறது என்பதை மனதில் வைத்து யோசிக்காமல் களத்தில் இறங்குங்கள்.
மேலும், அவசர வேலை, முக்கிய வேலை என்று யோசிக்காதீர். ஒரு உயிரை காப்பாற்றுவதை விட இந்த உலகில் வேறு அவசர வேலை எதுவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் என்று அலைய வேண்டியிருக்கும் என்று அச்சப்பட வேண்டாம். தற்போது விபத்தில் சிக்குபவர்களை மருத்துவமனையில் உடனே அனுமதிக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சட்டத்தில் பல தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.நீங்கள் உதவி செய்ய முன்வரும்போது அடுத்தவர் யோசிக்காமல் முன் வருவார். எனவே, விபத்தில் சிக்கி துடிதுடிப்பவர்களின் உயிரை மட்டுமல்ல, மறந்துபோன மனிதாபிமானத்தையும் சேர்த்து காக்க முன் வாருங்கள்.
Subscribe to:
Posts (Atom)