|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 October, 2011

700 கோடியை எட்டுகிறது உலக மக்கள் தொகை !


உலக மக்கள் தொகை, 700 கோடியை எட்டுகிறது. ஐ.நா., மக்கள் தொகை நிதி நிர்வாக இயக்குனர் பபாதுண்டி ஓசோடைம்ஹின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்னும் நான்கு நாட்களில், உலக மக்கள் தொகை, 700 கோடியாகிறது. உலக மக்கள் தொகையில், 10 முதல், 24 வயதுள்ளவர்களின் எண் ணிக்கை, 180 கோடி. எதிர்காலம், இளைஞர்களின் கையில் உள்ளதால், இவர்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் உலக நாடுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயங்களுக்காக அதிகம் செலவிடப்பட வேண்டும்.

எவ்வளவு தான் நவீன மயமானாலும் ஆண், பெண் மற்றும் இனப்பாகுபாடுகள், பல நாடுகளில் நிறையவே காணப்படுகின்றன. இந்த பாகுபாடுகள் மறைந்தால் தான், பொருளாதாரம் மற்றும் பல துறைகளில் வளர்ச்சி காண முடியும். வளரும் நாடுகளில் இன்னும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. இந்த நாடுகளில் உள்ள வளர் இளம் பருவத்தினருக்கு செக்ஸ் கல்வி பற்றியோ, கருத்தடை பற்றியோ, எய்ட்சிலிருந்து பாதுகாத்து கொள்ளும் அறிவோ போதிய அளவுக்கு இல்லை. இவ்வாறு பபாதுண்டி ஓசோடைம்ஹின் கூறியுள்ளார்.

உ.பி.,யில் விழா: வரும் 31ம்தேதி, மக்கள் தொகை 700 கோடியை எட்டுவதால் இதற்கான விழாவை உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. "பிளான்' என்ற சர்வதேச அமைப்பு இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் நைஜல் சாப்மேன் குறிப்பிடுகையில், " உலகம் முழுவதும் பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படுகிறது. பொருளாதார காரணங்களுக்காக இந்தியாவில் பெண் சிசு கொலை அதிகம் நடக்கிறது. இதன் காரணமாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் என்ற நிலை காணப்படுகிறது. பஞ்சாபில் இந்த நிலை இன்னும் மோசம். அங்கு ஆயிரம் பையன்களுக்கு 846 சிறுமிகள் என்ற விகிதாசாரம் காணப்படுகிறது. உ.பி.யில் பிறப்பு விகிதம் அதிகம் என்பதால் 700வது கோடி குழந்தையின் பிறப்பை லக்னோவில் கொண்டாட உள்ளோம். 700வதுகோடி குழந்தைக்கு சான்றிதழும் அளிக்க உள்ளோம். பெண் குழந்தைகளை போற்றும் விதத்தில் இந்த விழா அமைய உள்ளது' என்றார்

மனைவியை காதலிப்பது எப்படி?

கணவனின் பாதி தான் மனைவி. அப்படிப்பட்ட மனைவியைக் காதலிப்பது எப்படி என்று பார்ப்போமா. தினமும் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கப் போவதற்கு முன்பு வரை பம்பரமாய் சுழலும் மனைவிக்கு ஒரு நாள் ஓய்வு கொடுங்கள். வீட்டு வேலைகளை நீங்கள் செய்து அசத்துங்கள். நீங்கள் அவ்வாறு பெயருக்கு சொன்னால் கூட வேணாமுங்க, வாரம் முழுவதும் ஓயாது உழைக்கிறீங்க. சனி, ஞாயிறு நிம்மதியா ஓய்வு எடுங்க, வீட்டு வேலைகளை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி உங்களை வேலை செய்யவிடமாட்டார்.

அது தான் மனைவியே சொல்லியாச்சுல நாம் போய் கால் மேல காலப்போட்டு டிவி பார்ப்போம் என்று சென்றுவிடாதீர்கள். நீயும் தான கண்ணு தினமும் உழைக்கிற இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடு என்று சொல்லி வீட்டு வேலைகளைச் செய்யுங்கள். மனைவி உச்சி குளிர்ந்து போவார்.

எதிர்பாராத நேரத்தில் கட்டித் தழுவி அன்பாக ஒரு முத்தம் கொடுங்கள். ஆஹா, என் புருஷனுக்கு என் மேல் எவ்வளவு பாசம் என்று பூரித்துப் போய்விடுவார். திடீர் என்று ஏதாவது ஒரு பரிசு கொடுத்து அசத்துங்கள். மனைவி வேலைக்கு செல்பவரா? அவரை ஊக்குவியுங்கள். அதனால் அவர் இன்னும் திறமையாக பணிபுரிவார். அலுவலகப் பிரச்சனைகளைக் கூறினால் முடிந்தால் தீர்வு காண உதவுங்கள்.

மனைவியை மனதாரப் பாராட்டுங்கள். அது அவரின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு சிலு, சிலுவென்று காற்று வீசுகையில் மனைவியின் காதருகில் சென்று ஐ லவ் யூ என்று சொல்லுங்கள். அவர் பதில் சொல்லாமல் புன்னகை புரிந்தால். ஐ லவ் யூ சொன்னால் லவ் யூ டூ என்று சொல்ல வேண்டும் என்று கூறுங்கள். டிவி பார்க்கையில் எப்பொழுதுமே உங்களுக்கு பிடித்த சேனல்களை மட்டும் பார்க்காதீர்கள். உங்கள் மனைவிக்கு பிடித்த சேனலை வைத்து இருவரும் சேர்ந்து பாருங்கள். (நாங்க எங்க எங்களுக்கு பிடித்த சேனல் பார்க்கிறோம், எப்ப பார்த்தாலும் சீரியல் தான் ஓடுகிறது என்று நீங்கள் சொல்வது கேட்கிறது)

இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் மொட்டை மாடியில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள். நீங்கள் எப்பொழுது அவரை முதன்முதலாகப் பார்த்தீர்கள். நிச்சயதார்த்தத்தில் எப்படி ஓரக்கண்ணால் பார்த்தீர்கள், திருமணத்தில் உங்கள் மனைவி எப்படி வெட்கப்பட்டு தலைகுனிந்தபடி நின்றார், குழந்தை பிறந்தபோது எப்படி உணர்ந்தீர்கள் என்பது போன்று பேசுங்கள். இதெல்லாம் எத்தனை தடவை பேசினாலும் அலுக்காத ஆனந்த விஷயங்கள்.

ஆசையைச் சொல்வது எப்படி?


மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ, இனிக்கும் இன்ப நிலவே நீ வா வா என்று நீங்கள் மட்டும் பாடிக் கொண்டிக்க, உங்களவர் அது குறித்த சிந்தனையே இல்லாமல் 'புக்' எதையாவது படித்துக் கொண்டிருக்கிறாரா...... கவலைப்படாதீர்கள், அப்படி இருப்பதாலேயே மட்டும் அவருக்கு செக்ஸ் உறவில் நாட்டம் இல்லை என்று அர்த்தம் இல்லை. நாமதான் ஆரம்பிக்கனுமா, அங்கிருந்து வரட்டுமே என்ற எண்ணத்தினால் கூட அப்படி இருக்கக் கூடும். இல்லாவிட்டால் ஏதாவது தயக்கமாகக் கூட இருக்கலாம். எனவே, பார்ட்னரின் மனதில் என்ன உள்ளது என்பதை சின்ன சின்ன சில்மிஷங்கள் மூலம் நாம் அறிந்து உறவுக்குள் புகலாம். நீங்கள் பெண்ணாக இருந்தால் இப்படிச் செய்து பாருங்கள்...சொக்க வைக்கும், உணர்ச்சியைத் தூண்டக் கூடிய உள்ளாடைகளுக்கு மாறுங்கள். நிச்சயம் உங்கள் ஆள் திசை திரும்புவார்.

பாத்ரூமுக்குள் புகுந்து ஜில்லென்று ஒரு குளியல் போட்டு தலையில் ஈரம் சொட்டச் சொட்ட, ஒரே ஒரு துண்டை மட்டும் உடம்பில் கட்டிக் கொண்டு அப்படியே வாருங்கள். துண்டு நழுவப் போவது 'இப்பவா, அப்பவா' என்ற ரேஞ்சுக்கு இருந்தால் இன்னும் பெட்டர். என்னதான் ஹிட்லர் டைப் ஆளாக இருந்தாலும் கூட இந்தக் கோலத்தைப் பார்க்கும் யாருக்குமே நிச்சயம் 'மூட்' மாறும். முடிந்தவரை படுக்கை அறையில் கருப்பு அல்லது சிவப்பு நிற உடையை அணியுங்கள். செக்ஸ் உணர்வைத் தூண்டுவதில் இந்த இரண்டு கலர்களுக்கும் ஏகப்பட்ட பங்கு இருக்கிறது.

உங்களவரை நெருங்கி உட்கார்ந்து, அல்லது படுத்தபடி சற்றே செக்ஸியாக பேசுங்கள், சைகைகளை செய்யுங்கள். பேச்சை விட சைகைகளுக்கு நிறைய 'பவர்' உண்டு. எனவே இது ஒர்க் அவுட் ஆகும்.  நெருங்கி உட்கார்ந்து கைகளால் அவரை தழுவுங்கள், மென்மையாக. சின்னச் சின்ன வருடல்கள், முத்தம், ஒற்றை விரலால் உடல் முழுவதும் நர்த்தனம் செய்யுங்கள். நிச்சயம் 'பார்ட்டி' நெளிய ஆரம்பிப்பார். இப்படிச் சின்ன சின்னதாக செய்து உங்களவரை மூடுக்குக் கொண்டு வரலாம்.  இது பெண்களுக்கு. சரி, நீங்கள் ஆணாக இருந்தால், என்ன செய்ய வேண்டும்?  பெண்ணின் உடலிலேயே செக்ஸ் உணர்வுகளைத் தூண்டக் கூடிய சில முக்கிய இடங்களில் முதுகும் ஒன்று. அங்கு உங்களது கை விரல்களை சில விநாடிகள் விளையாட விட்டால், நிச்சயம் பலன் கிடைக்கும்.

உங்கள் பார்ட்னரின் காது மடல்களுடன் சில நிமிடம் விளையாடுங்கள். நெருங்கிச் சென்று லேசாக முனுமுனுத்தபடி பேசினாலே அவருக்கு நிச்சயம் மூட் கிளம்பி விடும். முத்தமிடுவது, நாவால் வருடுவது போன்றவையும் கூட கூடுதல் பலன் தரும். அதற்காக, காது ஜவ்வு கிழிந்து போகும்படி சத்தமாக மட்டும் பேசி விடாதர்கள்! பெண்ணின் கழுத்தில் நிறைய விஷயம் இருக்கிறது. கைகளால் அங்கு நீங்கள் நர்த்தனம் ஆடினால், கழுத்தின் பின்பக்கத்தில் லேசாக முத்தமிட்டால், வருடிக் கொடுத்தால், மயங்காத பெண்ணும் மயங்குவார். உடனடி உறவுக்கான 'பாஸ்போர்ட்' இந்த இடத்தில்தான் கிடைப்பதாக செக்ஸாலஜிஸ்ட்டுகள் கூறுகிறார்கள்.

உங்களவரின் கால்களை இதமாக பிடித்து விடுங்கள், பாதங்களில் மசாஜ் செய்யுங்கள், விரல்களை சொடுக்கி எடுங்கள்-வலி்க்காமல். குதிகால், பாதம், முழங்காலின் பின்பகுதி ஆகியவற்றில் உங்கள் விரல்கள் விளையாடும் விதத்தைப் பொறுத்து வேகமான உறவுக்கு உத்தரவாதம் கூடும். இதுபோன்ற சின்னச் சின்ன வேலைகள் மூலம் மூடில் இல்லாதவர்களையும் கூட மாற்றி உங்கள் பக்கம் மயங்க வைக்கும்.

100 ஆண்டுகளில் ஐபிஎம் நிறுவனத்தின் முதல் பெண் சிஇஓ நியமனம்!

ஐபிஎம் நிறுவனத்தின் 100 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக, அதன் தலைமை நிர்வாகியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருந்த விர்ஜீனியா ரொமெட்டி, ஐபிஎம் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். 54 வயதான ரொமெட்டி, வரும் ஜனவரி 1ம் தேதி இந்தப் பதவியை ஏற்பார். ஐபிஎம் நிறுவனத்தின் 100 ஆண்டுகால வரலாற்றில் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அமெரிக்காவின் ஜெராக்ஸ், ஹெச்பி ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாகவும் பெண்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் பார்முலா-1 கார் பந்தயம் இன்று நொய்டாவில் துவங்குகிறது!


கார் பந்தய ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியுள்ள இந்தியாவின் முதல் பார்முலா-1 கார் பந்தயம் நாளை நொய்டாவில் துவங்குகிறது. இதற்காக, போட்டியை நடத்தும் ஜேபி ஸ்போர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. பார்முலா-1 கார் பந்தயங்கள் மேற்கத்திய நாடுகளில் மட்டும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், முதல் முறையாக இந்தியாவில் பார்முலா-1 கார் பந்தயங்கள் நடைபெற உள்ளன. ஏர்டெல் இண்டியன் கிராண்ட் பிரிக்ஸ் என்ற பெயரில் நடைபெற உள்ள இந்த பந்தயங்கள் டெல்லி அருகே நொய்டாவில் ஜேபி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அமைத்துள்ள புதிய ரேஸ் டிராக்கில் நடைபெற உள்ளன. புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரேஸ் டிராக்கை இந்தியாவின் முதல் பார்முலா-1 டிரைவர் நரேன் கார்த்திகேயன் கடந்த செவ்வாய்க் கிழமை திறந்து வைத்தார்.

இந்த நிலையில், இந்த ரேஸ் டிராக்கில் இந்தியாவின் முதல் பார்முலா-1 பந்தயங்கள் நாளை கோலாகலமாக துவங்குகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கார் பந்தயத்தை கொடியசைத்து துவங்கிறார். நாளை பயிற்சி பந்தயங்களும், நாளை மறுதினம் சனிக்கிழமை தகுதிச்சுற்றுகளும், வரும் ஞாயிற்றுக்கிழமை(30-10-2011)இறுதிச் சுற்றுப் போட்டிகளும் நடக்கின்றன. 5.14 கிமீ நீளம் கொண்ட ரேஸ் டிராக்கில் ஒவ்வொரு பந்தயமும் 60 லேப்புகள் (மொத்தம் 308 கிமீ) கொண்டதாக இருக்கும்.

இந்த பந்தயங்களில் பெர்னான்டோ அலோன்சோ, ஹாமில்டன், மைக்கேல், ஷூமேக்கர் உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்களும், நரேன் கார்த்திகேயன், கருண் சண்டோக் உள்ளிட்ட முன்னணி இந்திய வீரர்களும் பங்கேற்க இருப்பதால், கார் பந்தய ரசிகர்களுக்கு இப்போதே பார்முலா-1 ஜுரம் பற்றிக்கொண்டுவிட்டது. மேலும், போட்டியை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டெல்லியில் குவியத்துவங்கியுள்ளனர். இந்த நிலையில், போட்டிக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக ஜேபி குழுமம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, போட்டிகள் நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் பணக்கார பெண் சாவித்ரி ஜிந்தால்!


போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பணக்கார இந்தியர்கள் பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ள சாவித்ரி ஜிந்தால் தான் இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆவார். முகேஷ் அம்பானி முதல் இடத்தை தக்கவைத்துள்ளார். பணக்கார இந்தியர்கள் பட்டியலை அமெரிக்காவின் முன்னணி பப்ளிஷிங் மற்றும் மீடியா நிறுவனமான போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து 4வது முறையாக முதல் இடத்தில் உள்ளார் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி. அவரது சொத்து மதிப்பு 22.6 பில்லியன் டாலர். ஆனால் அவரது தம்பி அனில் அம்பானி 10வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

19.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள ஸ்டீல் நிறுவன அதிபர் லக்ஷ்மி மிட்டல் இரண்டாவது இடத்தில் உள்ளார். விப்ரோ நிறுவனர் ஆசிம் பிரேம்ஜி 3வது இடத்திலும், 9.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள சாவித்ரி ஜிந்தால் 5வது இடத்திலும் உள்ளனர். இன்றைய தேதிக்கு இந்தியாவின் பணக்காரப் பெண் சாவித்ரி ஜிந்தால் தான். 

இந்த பணக்கார பட்டியிலில் 14 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளன. இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ராகுல் பாட்டியா மற்றும் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர் பெயர்கள் முதன்முறையாக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியிலில் இருந்த வினோத் கோயன்கா மற்றும் ஷாஹித் பால்வா ஆகியோரின் பெயர்கள் தற்போது இல்லை. அவர்கள் இருவரும் 2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா தூதரகத்தில் தமிழிலும் நேர்காணல்!


2010-11ம் ஆண்டில் இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்1பி விசா வழங்குவது 24 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் இந்த அளவுக்கு எச்1பி விசாவை அள்ளித் தந்துள்ளது வரலாற்றிலேயே இதுவே முதன்முறையாகும். இந்த ஆண்டில் இதுவரை 67,195 பேருக்கு எச்1பி விசா வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது 54,111 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரிவோருக்கே இந்த விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்தியர்களுக்கு 65,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதைவிட அதிகமாக 2,195 விசாக்களை அள்ளித் தந்துள்ளது அமெரிக்கா. இரு ஆண்டுகளுக்கு முன் இந்தியர்களுக்கான எச்1பி விசா ஒதுக்கீடு 1,95,000 ஆக இருந்தது. ஆனால், உள்நாட்டினருக்கு வேலைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்ததால் அது இரு ஆண்டுகளுக்கு முன் 65,000 ஆகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அமெரிக்க விசாவுக்காக அந் நாட்டுத் தூதரகங்களில் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நேர்காணல் நடத்தப்பட்டு வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நகர்களில் விசாவுக்கு விண்ணப்பிப்போர் சென்னையில் தமிழிலும் அல்லது இந்தியிலும், ஹைதராபாத்தில் தெலுங்கிலும், கொல்கத்தாவில் பெங்காலி மொழியிலும் நேர்காணலின்போது பதிலளிக்கலாம்.

சாதித்துக் காட்டினார் தோனி!


இந்திய கேப்டன் தோனி தொட்டதெல்லாம் மீண்டும் பொன்னாகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பட்டையை கிளப்பிய இவர், பேட்டிங்கில் பல்வேறு சாதனைகள் படைத்தார். அணியை அருமையாக வழிநடத்திய இவர், இளம் வீரர்களுக்கு உரிய ஊக்கம் அளித்தார். இதன் காரணமாக சச்சின், சேவக், ஜாகிர் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்திய அணி, தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றி சாதித்தது. சுழற்பந்துவீச்சில் திணறும் இங்கிலாந்து அணியின் பலவீனம் மீண்டும் ஒருமுறை அம்பலமானது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி முதல் கட்டமாக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளில் வென்ற இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நேற்று முன் தினம் கோல்கட்டாவில் நடந்த ஐந்தாவது போட்டியில் தோனியின்(75) அதிரடி கைகொடுக்க இந்திய அணி(271/8), இங்கிலாந்தை(176) மீண்டும் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 5-0 என முழுமையாக வென்று, கோப்பை கைப்பற்றியது. தவிர, இங்கிலாந்து மண்ணில் சமீபத்தில் சந்தித்த தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. இம்முறை இந்திய அணியின் வெற்றிநடைக்கு கேப்டன் தோனி முக்கிய காரணம். ரன் மழை பொழிந்த இவர், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இத்தொடரில் தோனியின் சில சாதனைகள்: 
* கோல்கட்டாவில் 75 ரன்கள் எடுத்த தோனி, கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் 4,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் அசார்(5, 239), கங்குலிக்கு (5104) பிறகு இப்பெருமையை பெறும் மூன்றாவது இந்திய கேப்டன் ஆனார்.
* ஒரு தொடரின் நான்கு இன்னிங்சில் அவுட்டாகாத முதல் இந்திய வீரரானார். இம்முறை 87(ஐதராபாத்), 35(மொகாலி), 15(மும்பை), 75 ரன்கள் (கோல்கட்டா) எடுத்தார். டில்லியில் நடந்த இரண்டாவது போட்டியில் "பேட்' செய்யவில்லை. இவர், இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 6 இன்னிங்சில் அவுட்டாகாமல் 340 ரன்கள் எடுத்து, புதிய சாதனை படைத்துள்ளார். 
* கோல்கட்டாவில் தனது 43வது அரைசதம் அடித்தார். ஏற்கனவே 7 சதம் அடித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 50 ரன்களுக்கும் மேல் 50 முறை(43+7) எடுத்த நான்காவது விக்கெட் கீப்பரானார். முதல் மூன்று இடங்களில் இலங்கையின் சங்ககரா(72), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட்(69), ஜிம்பாப்வேயின் ஆண்டி பிளவர்(50) உள்ளனர். தவிர, இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரில் 25 "கேட்ச்' பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையும் பெற்றார்.
* ஒருநாள் அரங்கில் ஆறாவது முறையாக தொடர் நாயகன் விருது வென்றார். இது இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது முறை. தோனிக்கு அடுத்து ரவிந்திர ஜடேஜா அசத்தினார். கோல்கட்டாவில் நான்கு விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் ஈடன் கார்டன் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார். இத்தொடரில் மொத்தம் 11 விக்கெட் வீழ்த்தினார். சுழலில் அசத்திய மற்றொரு இந்திய வீரர் அஷ்வின் 10 விக்கெட் கைப்பற்றினார்.


இத்தொடர் குறித்து கேப்டன் தோனி கூறியது: இந்திய மண்ணில் இங்கிலாந்து அணியின் செயல்பாடு தொடர்ந்து மோசமாகவே உள்ளது. இதை கர்வத்துடன் சொல்லவில்லை. புள்ளிவிவரங்களை பார்த்தால் உண்மை தெரியும். இங்கு நடந்த கடந்து மூன்று (2006, 2008, 2011) ஒருநாள் தொடரில் இந்தியா 16 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது. ஆனால், பேட்டிங் தான் எடுபடவில்லை. தொடரை 5-0 என வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை இங்கிலாந்தில் சந்தித்த தோல்விக்கு பழிதீர்த்ததாக கருதக் கூடாது. ஏனென்றால் விளையாட்டில் பழிவாங்குவதற்கு இடமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை குறிப்பிட விரும்புகிறேன். இந்திய அணியின் பந்துவீச்சு சற்று பலவீனமாக உள்ளது. தற்போதைய தொடரில் கூட நமது வேகப்பந்துவீச்சாளர்கள் முழுமையாக 10 ஓவர்கள் வீச முடியவில்லை. ஒட்டுமொத்தமாக பார்த்தால், பந்துவீச்சில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. பவுலர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ரெய்னா, திவாரி போன்றவர்களை பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படாது. 


"பேட்டிங்' வரிசையில் 6வது வீரராக களமிறங்கி விளையாட பழகிக் கொண்டேன். "பவர் பிளே' விதிமுறை மாற்றம் காரணமாக இந்த நிலையில் மிகவும் கவனமாக "பேட்' செய்ய வேண்டும். இங்கிலாந்து மண்ணில் தோற்ற போது கடுமையாக விமர்சித்தார்கள். இதைப் பற்றி கவலைப்படவில்லை. வெற்றி பெற்றால் பாராட்டுவார்கள் என்பது எனக்கு தெரியும். சச்சின், சேவக், யுவராஜ் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில், இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனாலும், சீனியர் வீரர்களின் இடத்தை எளிதில் நிரப்ப முடியாது.உலக கோப்பை, சாம்பியன்ஸ் லீக் என தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறோம். சச்சின் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லை. இதனால், ஈடன் கார்டனில் குறைவான ரசிகர்கள் வந்திருக்கலாம். தவிர, இந்தியாவின் மிகப் பெரிய மைதானமான இங்கு அனைத்து நேரங்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோத வாய்ப்பு இல்லை. இவ்வாறு தோனி கூறினார். 


தோல்விக்கு என்ன காரணம் குக்: ""இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பேட்டிங்கில் சோபிக்காததே, தோல்விக்கு முக்கிய காரணம்,'' என, இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் கூறியதாவது: இத்தொடரில் எங்கள் அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. நிறைய வீரர்கள் முதன்முறையாக இந்திய மண்ணில் விளையாடினர். இங்குள்ள மைதானத்தின் தன்மை, தட்பவெப்பநிலை குறித்து முழுமையாக அறியமுடியவில்லை. இங்கிலாந்து மண்ணில் கண்ட தோல்விக்கு பின், இந்திய வீரர்கள் முழு நம்பிக்கையுடன் விளையாடினர். எங்கள் அணியின் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்தது. ஆண்டர்சன், பிராட் இல்லாத நிலையில் ஸ்டீவன் பின் வேகத்தில் நம்பிக்கை அளித்தார். தோனி, விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணிக்கு சுலப வெற்றி கிடைத்தது. வரலாற்று சிறப்புமிக்க ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த கடைசி போட்டியை காண குறைந்த அளவில் ரசிகர்கள் வந்தது ஆச்சரியமாக இருந்தது.  இவ்வாறு அலெஸ்டர் குக் கூறினார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு தமிழகத்தில் விரைவில்!

சேலம்:பள்ளி மாணவ, மாணவியருக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில், 2,234 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 543 உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகளும், 2,388 அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும், 1,044 உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இதில், 60 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களின் பெயர், பெற்றோர் விபரம், குடும்ப வருமானம் உள்ளிட்ட சுய விபரங்களும், பள்ளியில் இவர்களின் மதிப்பெண்கள், ஒழுக்க நடவடிக்கை, விளையாட்டில் ஆர்வம் உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும் பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் கம்ப்யூட்டர் மயமாக்கி, மாணவ, மாணவியருக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, மத்திய அரசு பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே குறியீட்டு எண்ணுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். மாநிலம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் சர்வரில், இந்த குறியீட்டு எண்ணில் அம்மாணவனின் சுய விபரம், வருகை பதிவேடு, விளையாட்டு, மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு வகுப்பறையிலும், "ஸ்வீப்பிங்' மிஷின் வைத்த பின், மாணவன் தனது வருகையை, "ஸ்மார்ட் கார்டு' மூலம், "ஸ்வீப்' செய்து பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம், தமிழகத்தில் எந்த மூலையில் இருந்தும், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நடவடிக்கைகளையும், விபரங்களையும் பெற முடியும்.மேலும், வேறு ஊர் அல்லது வேறு பள்ளிக்கு மாறும் மாணவர்கள், "டிசி' உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறாமலேயே, ஸ்மார்ட் கார்டு மூலம் படிப்பை தொடர முடியும். நம்நாட்டில் முன்னோடியாக, குஜராத்தில், ஸ்மார்ட் கார்டு திட்டம் வெற்றிகரமாக அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை, தமிழகத்திலும் செயல்படுத்தி, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சுயவிபரம் மற்றும் பள்ளி நடவடிக்கைகள் மட்டுமின்றி, ஆரோக்கியம் குறித்தும் இந்த ஸ்மார்ட் கார்டில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவனையும் மருத்துவ பரிசோதனை செய்து, அந்த விபரங்களும் சேர்க்கப்பட உள்ளது. இடை நிற்கும் மாணவர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.முதல்கட்டமாக, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது. இதன் செயல்பாடுகள் மற்றும் பயன்களை தொடர்ந்து, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, கடந்த மாதம் நிபுணர் குழு ஒன்று குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து, இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வந்துள்ளனர்.இன்னும் ஓரிரு வாரங்களில், இத்திட்டத்துக்கான துவக்க விழா நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், கல்வித்துறையில் நிலவும் பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.  

அமெரிக்காவில் குடித்துவிட்டு காரை நிர்வாணமாக ஒட்டிய பெண்!


ஒ‌ரே நாளில் 22கோடி ரூபாய் வசூல் - ரா-1

ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் ரா-ஒன் படம், முதல் நாளிலேயே 22 ‌கோடி ரூபாய் வசூலாகி சாதனை படைத்திருக்கிறது. பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான் நடிப்பில் அவரது மனைவி ‌கவுரி கான் தயாரிப்பில், அனுபவ் சின்ஹாவின் கதை இயக்கத்தில் உலகம் முழுவதும் ரிலீசாகி இருக்கும் படம் ரா-1. மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீசாகியுள்ளது. சுமார் 3000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகியுள்ள ரா-1, முதல் நாளிலேயே ரூ.22 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்தியில் ரூ.20கோடியும், தமிழ் மற்றும் தெலுங்கில் தலா ரூ.1 கோடியும் ஈட்டியுள்ளன. இதற்கு முன்னர் சல்மான் கானின் பாடிகார்ட் படம், நாடு முழுவதும் 2,700 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு, ஒரே நாளில் ரூ. 21 கோடியை வசூலித்தது. இது தான் இதுவரை இந்திப் படத்தின் சாதனையாக இருந்தது. அ‌தனை "ரா-ஒன்" படம் முறியடித்திருக்கிறது. மேலும் ஒரு வாரத்திற்குள் ரா-ஒன் படம் ரூ.100 கோடி வசூலை எட்டும் என்றும் கூறப்படுகிறது

ர ஒன்னில் ரஜினி!


போயிங்-ட்ரீம்லைனர் 787 விமான சேவை துவங்கியது!

போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள அதிநவீன விமானமான ட்ரீம்லைனர் 787 விமானம் தனது முதல் பயணத்தை நேற்று தொடங்கியது. உலகில் அதிகப்படியான பயணிகளுடன் பயணிக்கும் விமானம் ஏர்பஸ் (ஏ-380). சுமார் 800 பயணிகள் வரை பயணிக்ககூடிய இந்த விமானத்தில் அதி நவீன வசதிகள் நிறைய உள்ளன. இந்நிலையில் ஏர்பஸ் விமானத்திற்கு போட்டியாக போயிங் நிறுவனம் ட்ரீம்லைனர் 787 என்ற விமானத்தை உருவாக்க முயற்சித்தது, ஆனால் முடியவில்லை. இருந்தபோதிலும் இதுவரை தயாரிக்கப்பட்ட போயிங் விமானங்களை விட மிக அதிகமான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த விமானம் தான். சுமார் 260பேர் வரை இந்த விமானத்தில் பயணிக்கலாம். போயிங் நிறுவனம் தயாரித்துள்ள இந்த முதல் விமானத்தை, ஜப்பானின் நிப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ட்ரீம்லைனர் 787 விமானத்தின், முதல் சேவை, 240 ப‌யணிகளுடன் டோக்கியாவில் இருந்து ஹாங்காங் வந்து சேர்ந்தது. ட்ரீம்லைனர் 787 விமானத்தின் முதல் சேவையில் பயணித்த பயணிகள், விமானத்திலிருந்து மிகுந்த உற்சாகத்துடன் இறங்கி வந்தனர்.  

இதே நாள்...


  • அமெரிக்க கடற்படை தினம்
  •  பென்சல்வேனியாவின் ஃபிலடல்ஃபியா நகரம் அமைக்கப்பட்டது(1682)
  •  காங்கோ ஜனநாயக குடியரசு, சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1971)
  •  நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது(1961)
  • இளம்பெண்னை உயிருடன் அறுத்து சமைத்து சாப்பிடும் அதிர்ச்சி படங்கள்!












    ஆடு,மாடு, கோழி, மீன், பன்றி, பாம்பு, நாய், நண்டு, தவளை, உடும்பு, பூனை, நத்தை, முயல், பல்லி, கரப்பான் பூச்சி, எறும்பு, கொசு, தேனீ,கரையான், புறா, மடையான்,கொக்கு, மயில், குயில்,சிட்டுக்குறுவி என்று மனிதன் சாப்பிடாத ஐட்டமே இல்லை.  அதுவும் சீனர்கள் சாப்பிடாத ஐட்டமே இல்லை. மனிதன் மட்டும்தான் பாக்கி ( அகோரிகள் மனித மாமிசத்தை சாப்பிடுவது தவிர) என்று இருந்தது.  ஆனால், இப்போது மனிதனையும் விட்டுவைக்கவில்லை மனிதர்கள்.(?) சீனாவில் ஒரு இளம்பெண்ணை ஆடு, கோழியைப்போல் உயிருடன் அறுத்து சமைத்து சாப்பிடும் அதிர்ச்சி படங்களை ஒரு சீன இணையதளம் வெளியிட்டுள்ளது.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...