ஐபிஎம் நிறுவனத்தின் 100 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக, அதன் தலைமை நிர்வாகியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த
நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருந்த விர்ஜீனியா
ரொமெட்டி, ஐபிஎம் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO)
நியமிக்கப்பட்டுள்ளார். 54 வயதான ரொமெட்டி, வரும் ஜனவரி 1ம் தேதி
இந்தப் பதவியை ஏற்பார். ஐபிஎம் நிறுவனத்தின் 100 ஆண்டுகால வரலாற்றில்
இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் இவர் தான் என்பது
குறிப்பிடத்தக்கது. இப்போது அமெரிக்காவின் ஜெராக்ஸ், ஹெச்பி ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாகவும் பெண்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment