|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 September, 2011

மீண்டும் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த காஜல்!









காஜல் அகர்வால் பிலிம்பேர் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக மீண்டும் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார். நடிகை காஜல் அகர்வால் எப்ஹெச்எம் பத்திரிக்கைக்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால், நான் டாப்லெஸ்ஸா போஸே கொடுக்கவில்லை என்று கூப்பாடு போட்டார். உடனே அந்த பத்திரிக்கை தாங்கள் சொல்வது தான் உண்மை என்பதை நிரூபிக்க பேஸ்புக்கில் காஜலின் இன்னொரு டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டது.

அதன் பிறகு காஜல் சத்தத்தையே காணோம். இந்நிலையில் பிலிம்பேர் பத்திரிக்கையின் செப்டம்பர் மாத இதழின் அட்டைப் படத்திற்காக மீண்டும் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார். நெட் போன்ற துணியையும், பச்சை நிற ஆப்பிளையும் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
இதுக்கு என்ன 'டாப் கிளாஸ்' விளக்கத்தைக் கொடுக்கப் போகிறாரோ காஜல்??

நியூயார்க்கை விட்டு வெளியேற ராஜபக்சேவுக்கு அமெரிக்க அதிகாரிகள் திடீர் தடை!

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்துள்ள ராஜபக்சேவை, ஐநா. கூட்டத்தைத் தவிர வேறு எங்கும் போக வேண்டாம். நியூயார்க்கை விட்டு வெளியேற வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் எங்கும் போக முடியாமல் நியூயார்க்கோடு முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ராஜபக்சே.

ராஜபக்சேவுக்கு இலங்கையை விட்டு எங்கும் சுதந்திரமாக இருக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து சென்ற அவர் லண்டனில் மிகப் பெரிய தமிழர் எதிர்ப்பைச் சந்தித்தார்.மேலும் அவர் மீது கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால் போன வேகத்தில் அவர் நாட்டுக்கு ஓடி வர வேண்டியதாயிற்று. இந்த நிலையில் தற்போது ஐநா. கூட்டத்தில் பேசுவதற்காக வந்துள்ள ராஜபக்சேவை, நியூயார்க் நகரை விட்டு வெளியேற வேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனராம். வெளியேறினால் போர்க்குற்ற வழக்கில் சிக்கிக் கைதாக நேரிடலாம் என்றும் அவருக்கு எச்சரிக்கப்பட்டுள்ளதாம்.

ஐநா. கூட்டத்திற்கு வருவதற்கு மட்டும்தான் உரிய பாதுகாப்பு தர முடியும். மாறாக பிற இடங்களுக்குப் போவதாக இருந்தால் அந்தப் பாதுகாப்பு தர முடியாது என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் நியூயார்க்கைத் தவிர வேறு எங்கும் போக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ராஜபக்சே. அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் உடையவர் ராஜபக்சே. இதனால் ஏற்பட்ட உடல் நலப் பாதிப்புக்கும் அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார். தற்போது அதில் அமெரிக்க அதிகாரிகள் மண்ணை அள்ளிப் போட்டுள்ளனர்.

போலீஸ் நடத்திய திடீர் ரெய்டில் 49 + 2 போலி டாக்டர்கள் கைது!


திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் திடீரென போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் 49 போலி டாக்டர்கள் சிக்கினர். அவர்களைப் போலீஸார் கைது செய்தனர். இந்த மாவட்டங்களில் பெருமளவில் போலி டாக்டர்கள் புழங்கி வருவதாக போலீஸாருக்குப் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து போலீஸார் தீவிரக் கண்காணிப்பை முடுக்கி விட்டனர்.

இதையடுத்து இன்று அதிரடி ரெய்டில் நான்கு மாவட்ட போலீஸாரும் குவித்தனர். இதில் 49 போலி டாக்டர்கள் பிடிபட்டனர். இவர்களில் யாருமே கம்பவுண்டராக கூட இருந்தது கிடையாதாம். பத்தாவது, 12வது படித்து முடித்து விட்டு டைரக்ட் டாக்டர்கள் ஆனவர்கள்.

ஏதோ எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு டாக்டர் ஆனவர்களைப் போலவே, பக்காவாக கிளினிக் வைத்து மக்களின் உயிருடன் விளையாடிய இவர்களைப் பிடித்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். போலி டாக்டர் வேட்டை தொடரும் என காவல்துறை தெரிவித்திருப்பதால் பிடிபடாமல் எஸ்கேப் ஆகியுள்ள மற்ற போலிகளும் கிலியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

தயாநிதி மாறன் மீது விரைவில் எப்.ஐ.ஆர் தாக்கல் சிபிஐ!

ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரான தயாநிதி மாறன் மீது சிபிஐ விரைவில் முதல் தகவல் அறிக்கையை (FIR) தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. அடுத்த மாத துவக்கத்தில் இந்த எப்ஐஆர் தாக்கலாகலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கும் விவகாரத்தில் அதன் முந்தைய உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டியதாகவும், ஏர்செல் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு அவரை நிர்பந்தித்ததாகவும், அவர் அதை மேக்சிஸ் விற்ற பின் ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கியதாகவும் தயாநிதி மீது புகார் உள்ளது. ஸ்பெக்ட்ரம் கிடைத்த பிறகு மேக்சிஸ் நிறுவனம் சன் டிவியின் டிடிஎச் திட்டத்தில் பல நூறு கோடிகளை முதலீடு செய்தது. இது தொடர்பாக சிவசங்கரன், தயாநிதி மாறன், சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் ஆகியோரிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது.

ஷோரி மீதான புகார்களுக்கு ஆதாரமில்லை...: அதே நேரத்தில் பாஜக ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண் ஷோரி மீது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கூறப்படும் புகார்களுக்கு ஆதாரமில்லை என்று சிபிஐ கூறுகிறது. ஆனால், அவருக்கு முன் அமைச்சராக இருந்த மறைந்த பிரமோத் மகாஜனின் பங்கு குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரித்து வருகிறது.

'ரீமேக்’ராஜா டைரக்‌ஷனில் அஜீத் நடிக்கும் ‘’துடிப்பு’’


ஜெயம் படத்தில் ஆரம்பித்து தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி வரும் ‘ரீமேக்’ராஜா, தற்போது  ஆசாத் தெலுங்குப்படத்தை வேலாயுதம் என்று தமிழில் இயக்கிவருகிறார்.  இப்படத்தில் விஜய் நடித்துள்ளார்.
இதையடுத்து அவர் அஜீத்தை வைத்து இயக்குகிறார்.  இப்படத்தை தற்போது காணாமல் போன தயாரிப்பாளர்கள் பட்டியலில் இருக்கும் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.தெலுங்கில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து வெளிவரவுள்ள ‘தூக்குடு’ படத்தின் ரீமேக்கிலேயே அஜீத் நடிக்கவுள்ளார். அந்த படத்தை சீனுவிட்லா இயக்கி இருந்தார். 


மகேஸ்பாபு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். தூக்குடு என்றால் தமிழில் வேகம், துடிப்பு என்று பொருளாம். நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம் திரையரங்கில் அஜித், ஜெயம்ராஜா ஆகியோர் தூக்குடு படத்தை பார்த்துள்ளனர். இப்படத்திற்காக அஜீத்திற்கு 15 கோடி சம்பளம்

மரண தண்டனைக்கு எதிரான பயணக் தொடக்கம்!


கூட்டத்தில் பேசிய வைகோ, தலைநகர் சென்னையின் வரலாற்றில் உயர்நீதிமன்ற நிகழ்வுகளில் ஆகஸ்ட் 30ஆம் தேதி சந்தித்தைப் போன்ற உணர்ச்சிகளின் சங்கமத்தை இதுவரை சந்தித்தது கிடையாது. கோடான கோடி தமிழர்களின் மனது பதைப்பதைத்திருந்தது. சாந்தன், முருகன், பேரறிவாளனுக்கு செப்டம்பர் 9ஆம் தேதி தூக்கு தண்டனை என்ற முடிவு என்ன ஆகும். தாயத்தில், தமிழத்தில், கடல் கடந்த நாடுகளில், தரணி எங்கும் வாழும் தமிழர் மனங்களில் வேதனை நெருப்பு மண்டி எழுந்த வேளையில் உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் நாகப்பன் அவர்களும், சந்திய நாராயணா அவர்களும், அந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி அவர்கள் எடுத்து வைத்த வாதங்களை கேட்டு, தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கிறோம். அரசுகள் தங்கள் கருத்துக்களை இந்த நீதிமன்றத்துக்கு தருவதற்கு எட்டு வார காலம் தவணை அறிவிக்கிறோம் என்ற சொற்கள் அந்த நீதிமன்றத்தல் ஒலித்த வேளையில் கண்ணீர் விட்டவர்கள் பலர். அவர்களது இருதயங்களில் ஏற்பட்ட உணர்வுகளை அடக்க முடியாமல் துடித்தவர்கள் பலர். 

நான் இந்தக் கூட்டத்தில், இதே இடத்தில் தான் 1991ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் மனிதகுல வரலாற்றில் இத்தகைய ஒரு வீர திலகத்தை இதுவரை கண்டதில்லை என்று சொல்லத்தக்க மாவீரர் திலகம் பிரபாகரன் பிறந்த நாளாகிய அந்நன்னாளில், தமிழர் எழுச்சி மாநாட்டை நடத்திய தோழர்கள் இந்த மேடையில் இருப்பதை துரைசாமி அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இன்றைக்கு அதே இடத்தில் கூட்டம். அடுத்து என்ன நடக்கும். தூக்கு கயிறு அன்று அறுந்தது. நிரந்தரமாகவே அறுக்கப்பட்டுவிடும் என்று நான் நம்பிக்கையை தெரிவித்தேன். நிரந்தரமாக அதை தீயிட்டு கொளுத்துவோம் என்று இங்கே நிகழ்ச்சியை நடத்தியவர்கள் தூக்கு கயிற்றுக்கு நெருப்பு வைத்தார்கள்.

என்ன நடக்கப் போகிறது. வழக்கு ஒன்று பதிவாகியிருக்கிறதாமே உச்சநீதிமன்றத்தில். சென்னை உயர்நீதிமன்றத்திலே விசாரிக்கப்படுகின்ற அறிவிக்கப்பட்ட மத்திய அரசு நிறைவேற்ற துடிக்கின்ற பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை பற்றி அவர்கள் தொடுத்திருக்கக்கூடிய விண்ணப்பத்தின் மீது நடைபெறுகிற வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்திலே நடக்கக் கூடாது. அது வேறு நீதிமன்றத்துக்கு, உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்று ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அது தாக்கல் செய்யப்பட்ட நாளில், அதை பதிவுக்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்துக்கு மாறாக, அதன் பிறகு இதுகுறித்து இரண்டு வார காலத்திற்குள் மத்திய அரசும், மாநில அரசும், வேறொரு சிறைச்சாலையிலே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்திலே அதை எதிர்த்து மனு தொடுத்தவர்களாக இருக்கின்ற சாந்தனும், முருகனும், பேரறிவாளனும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

என்ன காரணத்திற்காக இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலே விசாரிக்கப்படக் கூடாது.கரிய மேகங்கள் வானத்தில் முற்றுகை போட்டிருக்கின்றன. ஆகாயத்தை பார்த்தால் நட்சத்திரங்கள் எவையுமே கண்களிலே படவில்லை. பெரு மழை கொட்டக் கூடும். இடியும் மின்னலும் வின்னிலே பாயக் கூடும் என்று இன்று பகலில் வானிலை ஆய்வு அறிவிப்பாளர் அறிவித்ததை தொலைக்காட்சிகள் வெளியிட்டன. ஆகவே இடியும், மின்னலும், பெருங்காற்றும் சூழ்ந்துவிடும் என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டிய பலர் கூட வராமல் இருக்கலாம். ஆனால் இந்தக் கூட்டம் முக்கியமான காலக்கட்டத்தில் நடக்கின்ற கூட்டம். இங்கே மத்திய அரசின் உளவுப் பிரிவினர் வந்திருக்கிறார்கள். சாதாரணமாகவே வருவார்கள். இது பெரியார் திராவிடர் கழகம் நடத்துகின்ற கூட்டம். வில்லங்க பார்ட்டி பூரா இங்கே வந்திருக்கு. மத்திய அரசின் உளவுத்துறை. அதிலும் தமிழ் உணர்வுள்ள எத்தனையோ அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். டெல்லியில் இருந்து இயங்குகின்ற ஊடகங்களுக்கு செய்தி அனுப்புகிற செய்தியாளர்கள் வந்திருக்கிறார்கள். தமிழத்திலே இருக்கின்ற ஊடங்கள் ஒன்றிரண்டுகளை தவிர இந்த மூன்று உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்திகளை தருகிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நஞ்சை கக்குவதற்கு ஒன்றிரண்டு தொலைக்காட்சிகள் டெல்லியிலே துடித்துக்கொண்டிருக்கின்றன. 

இந்த காலக்கட்டத்தில் மிக முக்கியமான நேரத்தில் நான் கேட்கிறேன், மத்திய அரசை கேட்கிறேன். பொங்கி வருகிற ஆத்திரத்தையெல்லாம் நான் கொட்டுவதற்கு தயாராக இல்லை. எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நாங்கள் கேட்கிறோம். மத்திய அரசே, இந்த வழக்கை பதிவு செய்தது யார். சென்னை உயர்நீதிமன்றத்திலே விசாரிக்கப்படக் கூடாது என்று ஒரு மனுவை இந்த தமிழத்தில் தலைநகர் சென்னையில் இருக்கின்ற ஒரு நபரின் பெயரில், அங்கு இருக்கிற ஒரு வழக்கிறிஞர் மூலமாக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறதே, இந்த வழக்கை தொடுத்தன் பின்னணி என்ன. யார் அதற்கு பின்னாலே மறைந்திருப்பவர்கள். ஒரு பேரவையின் பெயரால் வந்திருக்கலாம். அவர்களுக்கு தொடர்பில்லை என்றால் வெளிப்படையாக சொல்லிவிடவேண்டும். இதன் பின்னணியில் என்ன காரணம். சென்னை உயர்நீதிமன்றத்தில் பதட்டம் நிலவியதாம். கொந்தளிப்பு நிலவியதாம். விசாரணை ஒழுங்காக நடத்த முடியாதாம். நீதிபதிகள் நிர்பந்தத்துக்கு ஆளாகிவிடுவார்களாம். எனவே இந்த வழக்கை இங்கே விசாரிக்கக் கூடாதாம். இப்படி ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததையடுத்து அதனுடைய கருத்துக்களை மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் கேட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

நான் கேட்கிறேன். அத்தனை ஆயிரம் பேர் திரண்டிருந்த உயர்நீதிமன்றத்தில் கலவரம் நடந்ததா. கூச்சல் நடந்ததா. சொல்லட்டும் மத்திய அரசுக்கு உளவுத்துறை. நிசப்தம் நிலவியது. நிசப்தம் நிலவிய வேளையில் வழக்கறிஞர்கள் வாதங்களை எடுத்து வைத்தார்களே, நீதிபதிகளுக்கு முன்னால் இப்படி ஒரு காட்சியை எங்காவது பார்க்க முடியுமா. கொந்தளிக்கிறது உள்ளம். ஆவேச உணர்வு இருந்தால் கூட நீதிமன்றத்தில் சகோதர சகோதரிகள் கட்டுப்பாட்டை காப்பாற்றவில்லையா. இதற்கு மாறுபட்ட கருத்துடையவர்களும் அங்கே உளவினார்களே. இந்த மூன்று பேர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று நாம் துடிக்கின்றபோது, அதற்கு மாறுபட்ட கருத்துக்கொண்ட கட்சியினர் ஓரிருவர் தமிழகத்திலே பேசி வருகிறார்களே அவர்களை சார்ந்தவர்களும் அந்த நீதிமன்ற வளாகத்திலே உளவினார்களே வழக்கறிஞர்களாக. ஏதாவது அமளி நடந்ததா. இதை சொல்ல வேண்டும். அப்படியென்றால் என்ன நோக்கம்.

சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு கயிற்றை நிரந்தரமாக அறுத்துவிடும் மூவருக்கும் என்ற எண்ணத்தினாலா. உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கின்ற தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய முடியுமா என்று கேட்டால் முடியும். முன்னுதாரணங்கள் நிரம்ப இருக்கின்றன. பல்வேறு உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் முடியும்.


விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா?



ஈரோடு மாநகராட்சி மேயர் அதிமுக வேட்பாளராக மாவட்ட மகளிர் அணி செயலாளர் மல்லிகா பரமசிவம் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம், ‘விபச்சார வழக்கில் சிக்கியவர் ஈரோடு மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளரா?‘ என்று ஈரோட்டில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியை சேர்ந்தவர்களே தனக்கு எதிராக செயல்பட்டு வருவதாக மல்லிகா தெரிவித்தார்.
தனக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூரம்பட்டி போலீசில் புகார் அளித்தார். நேற்று சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி. தனபால், இன்ஸ்பெக்டர் விஜயன் ஆகியோர், அதிமுக பாரதிநகர் கிளை செயலாளர் குப்புசாமி, எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய அவைத்தலைவர் லிங்கேஸ்வரன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய துணை செயலாளர் பைக் முத்து, லட்சுமிநகர் கிளை செயலாளர் இளங்கோவன், எலவமலை ஊராட்சி செயலாளர் ஆனந்தமூர்த்தி, எலவமலை கிளை செயலாளர் மாதையன் மற்றும் ஆறுமுகம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். 

போஸ்டருக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று விசாரணையின்போது இவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து அதிமுக நிர்வாகிகள், “மேயர் வேட்பாளரை மாற்ற கோரி கட்சி மேலிடத்துக்கு பேக்ஸ் அனுப்பினோம்.  
அந்த மனு மீண்டும் மல்லிகா பரமசிவத்திடமே வந்துள்ளது. அங்கு அனுப்பிய புகார் எப்படி இவருக்கு வந்தது? நாங்கள் இவருக்கு எதிராக புகார் அனுப்பியதால் போலீசில் எங்களை பற்றி புகார் கொடுத்துள்ளார். 

இந்த பிரச்சனை தொடர்பாகவும், மேயர் வேட்பாளரை மாற்ற வலியுறுத்தியும் 50 பஸ்களில் சென்னை சென்று முதல்வரை சந்தித்து முறையிடவுள்ளோம்” என்றனர். விபசார வழக்கில் கைதானதாக கூறி ஈரோடு அதிமுக மேயர் வேட்பாளர் மல்லிகா பரமசிவம் குறித்து போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பாக, அதிமுக நிர்வாகிகள் 7 பேரிடம் சூரம்பட்டி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். 

ரெட்டி, கூட்டாளிகளுக்கு 200 லாக்கர்கள்!


கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு பெல்லாரியில் உள்ள தனியார் வங்கியில் 200 லாக்கர்கள் உள்ளன. இதில் தங்கம், பிளாட்டினம், வைரம் போன்றவை பதுக்கப்பட்டுள்ளன. கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. இவரும், இவரது சகோதரர்களும், பெல்லாரி மாவட்டம் மற்றும் அதையொட்டிய ஆந்திர எல்லைப் பகுதிகளில், ஏராளமான இரும்புத் தாது சுரங்கங்களை நடத்தி வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட பகுதியை விட அதிகமான இடங்களை ஆக்ரமித்து சுரங்கம் நடத்தியதாக, இவர்கள் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, கடந்த 5ம் தேதி ஜனார்த்தன ரெட்டியும், அவரது மைத்துனர் சீனிவாச ரெட்டியும், ஆந்திர ஐகோர்ட் உத்தரவுபடி கைது செய்யப்பட்டு, ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜனார்த்தன ரெட்டி மற்றும் சீனிவாச ரெட்டி ஆகியோர், பினாமி பெயரில் வெளிநாடுகளில் நிறுவனங்கள் நடத்தி வருவது தொடர்பாக விசாரிக்க வேண்டியிருப்பதால், கூடுதலாக மேலும் ஒன்பது நாட்கள் இவர்களை சி.பி.ஐ., காவலில் வைத்திருக்க அனுமதிக்கும்படி, சிறப்பு கோர்ட்டில் மனு செய்யப்பட்டிருந்தது. தெலுங்கானா போராட்டம் காரணமாக ஆந்திராவில் சகஜவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்றைய விசாரணையில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் இந்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

200 லாக்கர்கள் ஆக்கிரமிப்பு: ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவர்களது சகோதரர்கள், பெல்லாரியில் செல்வாக்கு பெற்றவர்கள். இங்குள்ள தனியார் வங்கியில் 350 லாக்கர்கள் உள்ளன. இதில், 200 லாக்கர்கள் ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வசமுள்ளன. இதில், ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான 10 லாக்கர்களில் பிளாட்டினம், தங்கம், வைரம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன என, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில், சி.பி.ஐ., சோதனையில் ஜனார்த்தன ரெட்டியின் மைத்துனருக்கு சொந்தமான லாக்கர்களிலிருந்து, 14 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஜனார்த்தன ரெட்டிக்கு சீனா, வியட்நாம், சிங்கப்பூர், துபாய், கம்போடியா ஆகிய நாடுகளில், நிறுவனங்கள் உள்ளன. சுரங்கத் தொழிலில் முறைகேடாக சேர்க்கப்பட்ட பணம், இந்த நிறுவனங்களில் பதுக்கப்பட்டுள்ளதாக சி.பி.ஐ.,யும், வருமான வரித்துறையினரும் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடக்க உள்ளது.

"நாசா' அனுப்பிய செயற்கைக்கோள், நாளை பூமியைத் தாக்கலாம் என விஞ்ஞானிகள்!


இருபது ஆண்டுகளுக்கு முன் "நாசா' அனுப்பிய செயற்கைக்கோள், நாளை பூமியைத் தாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் "நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம், 1991ம் ஆண்டு 3,525 கோடி ரூபாய் செலவில், உயர் வளிமண்டல ஆராய்ச்சி செயற்கைக்கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.,) ஏவியது. இது பூமியின் வளிமண்டலம் குறித்த தகவல்களை திரட்டித் தந்து கொண்டிருந்தது. 14 ஆண்டுகள் தகவல்களை அனுப்பிய யு.ஏ.ஆர்.எஸ்., 2005ம் ஆண்டு செயலிழந்தது. ஒரு பஸ் அளவுள்ள இந்த செயற்கைக்கோளின் எடை 5670 கிலோ. விண்வெளியில் சுற்றி வந்த இந்த செயற்கைக்கோள் தற்போது பூமியின் வளிமண்டலத்தில் நுழையவுள்ளது. அப்போது அது 1,006 துண்டுகளாக வெடித்துச் சிதறும். இதில் பெரும்பகுதி வளி மண்டலத்தில் நுழையும்போது எரிந்து சாம்பலாகிவிடும். இருப்பினும் 26 துண்டுகள் பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளது. வெடித்து சிதறும் பாகங்கள் 150 கிலோ வரை எடை கொண்டவையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்போது விண்வெளியிலிருந்து கிளம்பும் என சரியாக ஆராய்ச்சியாளர்களால் கணிக்க முடியவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் பூமியில் விழும் என தெரிவிக்கின்றனர்.

செயல் இழந்த பல செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுற்றி வருகின்றன. இவை பூமியில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மீறி வளிமண்டலத்தில் நுழையும் செயற்கைக்கோள்கள் எரிந்து சாம்பலாகிவிடுகின்றன. அதையும் மீறி பூமிக்கு வரும் செயற்கைக்கோள்களை கடலுக்குள் விழச் செய்வது வழக்கம். ஆனால் யு.ஏ.ஆர்.எஸ்., செயற்கைக்கோளில் எரிபொருள் இல்லை. இதனால் இதன்செயல்பாட்டைகட்டுப்படுத்த முடியாது என தெரிவிக்கின்றனர். யு.ஏ.ஆர்.எஸ்., செயற்கைக்கோளின் உடைந்த பாகங்கள் கடலில் விழ வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றால் வடக்கு கனடாவில் அல்லது தென் அமெரிக்காவின் தென்பகுதியிலும் விழ வாய்ப்புள்ளது. இதில் 3200ல் ஒரு பங்கு, மனிதர்கள் மீது விழும் அபாயமும் இருக்கிறது. இது விழும்போது 750 கி.மீ., சுற்றளவு வரை இதன் பாகங்கள் பூமியில் பரவும்.

இந்திய நிறுவனங்களை கையகப்படுத்த அன்னிய நிறுவனங்கள் தீவிரம் !

நடப்பாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலுமான ஒன்பது மாத காலத்தில், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவது மற்றும் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அதிகரித்துள்ளது. இந்த வகையில், அன்னிய நிறுவனங்கள், கடந்த 9 மாதங்களில் 2,750 கோடி டாலர் மதிப்பிற்கு, 281 வர்த்தக ஒப்பந்தங்களை இந்திய நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ளன. அதே சமயம், கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் 1,340 கோடி டாலர் மதிப்பிலான 220 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆக, மதிப்பீட்டு காலத்தில், கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் அன்னிய நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவது மற்றும் இணைத்தல் தொடர்பான நடவடிக்கைகளின் மதிப்பு இரு மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டை விட, நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1,410 கோடி டாலர் மதிப்பிலான 61 வர்த்தக ஒப்பந்தங்கள், கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. டியோலாஜிக் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், மேற்கண்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு, பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்தின் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் 21 எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை 900 கோடி டாலருக்கு கையகப்படுத்துவதாக அறிவித்தது. இது தான், நடப்பாண்டில், கையகப்படுத்துதல் மற்றும் இணத்தல் தொடர்பாக, இதுவரை அன்னிய நிறுவனங்கள் மேற்கொண்ட வர்த்தகத்தில் மிகப் பெரிய மதிப்பைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், இதே காலத்தில், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஆஸ்திரேலியாவின் துறைமுக முனையங்களை, 197 கோடி டாலருக்கு கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டது. 


 இதையடுத்து, நடப்பாண்டில் இதுவரை, அன்னிய நிறுவனங்களை கையகப்படுத்துவது மற்றும் இணைத்தல் தொடர்பாக, மிக அதிக மதிப்பிற்கு மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் என்ற சிறப்பை இது பெற்றுள்ளது. அன்னிய நிறுவனங்கள், ஆர்வமுடன் இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவது குறித்து ஏ.என்.இசட் வங்கி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அலெக்ஸ் தர்ஸ்பை கருத்து கூறும் போது, "சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால், அன்னிய நிறுவனங்கள், அதிகளவில் இந்தியாவில் கால் பதிக்க விரும்புவதை இது எடுத்துக் காட்டுவதாக உள்ளது' என்று தெரிவித்தார் உலக நாடுகளில் உள்ளது போன்ற பிரச்னைகள் இந்தியாவிலும் உள்ளன. எனினும், சிறந்த தனியார் நிறுவனக் கட்டமைப்பு, அறிவார்ந்த வல்லுனர்களின் பங்களிப்பு, அதிகரித்து வரும் நடுத்தர வருவாய் பிரிவினர் உள்ளிட்ட அம்சங்கள், அன்னிய நிறுவனங்களை இந்தியாவை நோக்கி ஈர்ப்பவையாக உள்ளன என்று அவர் மேலும் கூறினார். இத்துடன், நாட்டில் ஜனநாயக நெறிமுறை சிறப்பாக உள்ளதும், வெளிநாட்டு நிறுவனங்களை, இந்தியாவில் கால்பதிக்க தூண்டுகின்றன. 


அதே சமயம், உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை காரணமாக, இந்திய நிறுவனங்கள், அயல்நாட்டு நிறுவனங்களை கையகப்படுத்துவது மற்றும் இணைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டாமல் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நடப்பு ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள், கையகப்படுத்துவது மற்றும் இணைத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக, அன்னிய நிறுவனங்களுடன் 970 கோடி டாலர் மதிப்பிலான, 142 வர்த்தக ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளன. அதே சமயம், சென்ற 2010ம் ஆண்டு இதே காலத்தில்,இந்திய நிறுவனங்கள் 2,390 கோடி டாலர் மதிப்பிலான 175 வர்த்தக ஒப்பந்தங்களை அயல் நாடுகளில் மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்திய நிறுவனங்கள், சிறப்பான வர்த்தக வாய்ப்புள்ள அயல்நாடுகளை சேர்ந்த நிறுவனங்களை கையகப்படுத்துவது அல்லது கூட்டு வைப்பதற்கான சாத்தியக் கூறுகளை தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் மின்உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ள நிறுவனங்கள், அவற்றின் நிலக்கரி தேவைக்காக, இந்தோனேஷியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள நிலக்கரி நிறுவனங்களை கையகப்படுத்தவோ அல்லது கூட்டாக இணைந்து செயல்படவோ ஒப்பந்தம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றன என ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சார் தெரிவித்தார். 


நடப்பாண்டு நிதிச் சேவைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, எரிசக்தி, தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் தொலைத் தொடர்பு துறைகளில் கையகப்படுத்தல் மற்றும் இணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, எரிசக்தி மற்றும் இயற்கை வளம் சார்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ரெலிகேர் கேப்பிடல் மார்கெட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கவுரவ் குங்கர் தெரிவித்தார். உலக பொருளாதாரத்தில் அசாதாரண ‹ழல் நிலவுகின்ற போதிலும், இந்தியாவின் நீண்ட கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, உள்நாட்டு நிறுவனங்களுடன் கூட்டாக செயல்பட அயல்நாட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர். 

கட்டண மேல்முறையீடு பள்ளிகளிடம் விசாரணை!


மேல்முறையீடு செய்ததால் கட்டணம் நிர்ணயிக்கப்படாத 2000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் அக்டோபர் 10ம் தேதி முதல் விசாரணை நடத்த கட்டண நிர்ணயக் குழு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ரவிராஜபாண்டியன் கல்விக் கட்டணக் குழு நிர்ணயித்த கட்டணத்தை எதிர்த்து 6,400 தனியார்கள் பள்ளிகள் மேல்  முறையீடு செய்தன.
இதில் 2,200க்கும் மேற்பட்ட பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் நடந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில் நீதிபதி ரவிராஜபாண்டியன் கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து, அவருக்குப் பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். சிங்காரவேலு தலைவராக நியமிக்கப்பட்டார்.தற்போது மேல்முறையீடு செய்த 2,200க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் தொடர்பாக  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளிடம் அக்டோபர் 10ம் தேதி முதல் விசாரணை துவங்க உள்ளது. ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளும், குறிப்பிட்ட தினத்தன்று உரிய ஆவணங்களுடன் நேரில் வர வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கல்விக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக பல பள்ளிகள் மீது புகார்கள் வந்துள்ளன.
இந்த புகாரின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இதுவரை ஒரு சில பள்ளிகள் பற்றிய அறிக்கை மட்டுமே வந்துள்ளது. முழுமையாக அறிக்கை கிடைக்கப்பெற்றதும் தவறு செய்த பள்ளிகள் மீது நவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நாள்...


  • சுவிட்சர்லாந்து விடுதலை பெற்று தனி நாடானது(1499)
  •  அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் ரஷ்யா தனது குடியேற்ற‌த்தை ஆரம்பித்தது(1784)
  •  நேஷனல் ஜியோகிரஃபிக் மேகசின் முதலாவது இதழ் வெளிவந்தது(1888)
  •  அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தானுந்து முதன் முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது(1893)
  • தமிழகத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் 17 மற்றும் 19 ல்!

    தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் இருகட்டங்களாக நடக்கிறது. திருச்சி மாநகராட்சியை தவிர, ஒன்பது மாநகராட்சிகளுக்கு முதல் கட்டமாக அக்டோபர் 17ம் தேதியும், மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 19ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது.

    இதுகுறித்து, தமிழக தேர்தல் கமிஷனர் அய்யர், நிருபர்களிடம் நேற்றிரவு கூறியதாவது: தமிழகத்தில், ஒன்பது மேயர், 755 மாநகராட்சி வார்டுகள், 125 நகராட்சி தலைவர்கள், 3,697 நகராட்சி வார்டுகள், 529 பேரூராட்சி தலைவர்கள், 8,303 பேரூராட்சி வார்டுகள், 31 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 655 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 6,470 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள், 99 ஆயிரத்து 333 கிராம ஊராட்சி வார்டுகள் என, ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 983பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. நகர் பகுதிகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர். எனவே, தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய, வாக்காளர்கள் இரண்டு ஓட்டளிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் நகர்ப்புற வாக்காளர்களுக்காக முதல்முறையாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிராமப்புற வாக்காளர்கள், மாவட்ட வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என, நான்கு பேரை தேர்வு செய்யவேண்டும். இதற்கு, ஓட்டுச் சீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு தேர்தல் கமிஷனர் கூறினார்.

    100 சதவீதம் நேர்மையாக தேர்தல் நடக்கும்: ""உள்ளாட்சி தேர்தல் 100 சதவீதம் நேர்மையாக நடத்தப்படும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என, மாநில தேர்தல் கமிஷனர் அய்யர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை வெளியிட்டு, அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும் இந்த நிமிடத்திலிருந்து (நேற்றிரவு 8 மணி) தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது. வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, "பூத் சிலிப்' அச்சடிக்கப்பட்டு ஓட்டுப்பதிவு தேதிக்கு, ஒரு வாரத்திற்கு முன்னரே, கொடுக்கப்படும். பூத் சிலிப் கிடைக்காதவர்களுக்கு, ஓட்டுப்பதிவு தினத்தன்று, ஓட்டுச்சாவடிக்கு அருகே வழங்கப்படும். " பூத் சிலிப்'பை அரசு ஊழியர்கள் தவிர மற்றவர்கள் வழங்க அனுமதி இல்லை. பூத் சிலிப்பை வாக்காளர்கள் பெற்றுக் கொண்டதற்கு கையொப்பம் பெற்று, தனி பதிவேடு பராமரிக்கப்படும். பூத் சிலிப்பில், வாக்காளரின் புகைப்படம் இருப்பதால், ஓட்டுப்பதிவுக்காக, பிற ஆவணங்களை வாக்காளர்கள் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. மாவட்ட அளவில், மாவட்ட கலெக்டர்களோடு, துணை கலெக்டர் அந்தஸ்தில் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கான வார்டு ஒதுக்கீடு, அரசால் அறிவிக்கப்பட்டது. இதில், தேர்தல் கமிஷனுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, உள்ளாட்சி தேர்தலை நடத்துவது மட்டுமே தேர்தல் கமிஷனின் பொறுப்பு. உள்ளாட்சி தேர்தலை 100 சதவீதம் நேர்மையாக நடத்த தேர்தல் கமிஷன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், பிற அமைப்புகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். 2006 உள்ளாட்சி தேர்தலை போல் அல்லாமல், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் இந்த உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். இவ்வாறு மாநில தேர்தல் கமிஷனர் கூறினார்.
    திருச்சிக்கு தேர்தல் இல்லை! தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலில், திருச்சி மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. திருச்சி மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டபோது, திருவெறும்பூர் பேரூராட்சி அதோடு இணைக்கப்பட்டது. "மக்களின் கருத்தை அறியாமல், தன்னிச்சையாக அரசே இந்த முடிவை எடுத்துள்ளது' எனக் கூறி, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், "திருவெறும்பூரை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்தது தவறு' என, ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இதனால், திருச்சி மாநகராட்சிக்கு தற்போது தேர்தல் நடக்கவில்லை.
    வேட்பு மனு தாக்கல் துவக்கம்: செப்., 22ம் தேதி
    மனு தாக்கல் கடைசி நாள்: செப்., 29
    மனு பரிசீலனை: செப்., 30
    திரும்பப் பெற கடைசி நாள் : அக்., 3
    ஓட்டுப் பதிவு: அக்., 17 மற்றும் 19
    ஓட்டு எண்ணிக்கை: அக்., 21ம் தேதி

    நான்கு நிறத்தில் ஓட்டுச் சீட்டுகள்: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் சிற்றூராட்சி வார்டு உறுப்பினர், சிற்றூராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோர்களுக்கான நான்கு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இதனால், நான்கு விதமான ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன. சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், சிற்றூராட்சி தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் ஓட்டுச் சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டிற்கு இள நீல நிறத்திலும் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

    மொத்த ஓட்டுச் சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்: 
    உள்ளாட்சித் தேர்தலில், 4 கோடியே, 63 லட்சத்து, 37 ஆயிரத்து, 379 வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்காக, 86 ஆயிரத்து, 104 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில், ஓட்டுப் பதிவு, 86 ஆயிரத்து, 104 ஓட்டுச் சாவடிகளில் நடைபெறுகிறது. இதில், 60 ஆயிரத்து, 518 ஓட்டுச் சாவடிகள், ஊரக பகுதிகளிலும், 25 ஆயிரத்து, 590 ஓட்டுச் சாவடிகள், நகர்ப்புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும், 4,876 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படை விவரங்களை, இந்திய தேர்தல் கமிஷனிடம் பெற்று உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழக தேர்தல் கமிஷன் தேசிய தகவல் தொடர்பு மையத்துடன் இணைந்து இந்தியாவிலேயே முதன் முதலாக ஆன்-லைன் முறையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    * மொத்தம், 4 கோடியே, 63 லட்சத்து, 37 ஆயிரத்து, 379 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
    * இவர்களில், 2 கோடியே, 32 லட்சத்து, 98 ஆயிரத்து, 838 பேர் ஆண் வாக்காளர்கள். 2 கோடியே, 30 லட்சத்து, 37 ஆயிரத்துல 930 பேர் பெண் வாக்காளர்கள். இதர வாக்காளர்கள், 611
    *'ஊரக பகுதிகளில், 1 கோடியே, 33 லட்சத்து, 18 ஆயிரத்து, 643 ஆண் வாக்காளர்களும், 1 கோடியே, 31 லட்சத்து, 24 ஆயிரத்து, 227 பெண் வாக்காளர்களும், 158 இதர வாக்காளர்களுமாக, மொத்தம், 2 கோடியே, 64 லட்சத்து, 43 ஆயிரத்து, 28 வாக்காளர்கள் உள்ளனர்.
    * நகர்ப்புறங்களில், 1 கோடியே, 80 ஆயிரத்து, 195 ஆண் வாக்காளர்களும், 99 லட்சத்து, 13 ஆயிரத்து, 703 பெண் வாக்காளர்களும், 453 இதர வாக்காளர்களுமாக, மொத்தம், 1 கோடியே, 99 லட்சத்து, 94 ஆயிரத்து, 351 வாக்காளர்கள் உள்ளனர்.

    உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான, "டெபாசிட்' தொகையை மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன் விவரம்:

    பதவி பொது எஸ்.சி., - எஸ்.டி.,
    ஊராட்சி உறுப்பினர் 200 100
    ஊராட்சித் தலைவர் 600 300
    ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் 600 300
    மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 1,000 500
    பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சித் தலைவர் 1,000 500
    நகராட்சித் தலைவர் 2,000 1,000
    மாநகராட்சி மேயர் 4,000 2,000
    பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் 500 250
    நகராட்சி வார்டு உறுப்பினர் 1,000 500
    மாநகராட்சி உறுப்பினர் 2,000 1,000

    தேர்தல் நடத்தும் அலுவலர்களின் எண்ணிக்கை விவரம்: நகர்புற உள்ளாட்சிகளில் 663 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 2,046 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 915 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 17 ஆயிரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர்புறங்களில் ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஐந்து அலுவலர்கள் வீதமும், கிராமப்புறங்களில் ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஏழு அல்லது எட்டு அலுவலர்கள் வீதமும், 6 லட்சத்து 30 ஆயிரம் அலுவலர்கள் ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஓட்டுப்பெட்டிகளும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும்: இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவிற்கு ஊரகப் பகுதிகளில் ஓட்டுப்பெட்டிகளும், நகர்புற பகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தேர்தலுக்கு, 2 லட்சத்து 39 ஆயிரம் ஓட்டுப்பெட்டிகளும், 80 ஆயிரத்து 500 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

    வேட்பாளர்கள் செலவு எவ்வளவு? வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை, மாநிலத் தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ளது. "தேர்தல் முடிவுகள்அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள், தேர்தல் அலுவலரிடம் தேர்தல் செலவு கணக்கை ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்க தவறுபவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்படும்' என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    பதவி செலவு(ரூபாயில்)
    ஊராட்சி வார்டு உறுப்பினர் 3,750
    ஊராட்சி தலைவர் 15,000
    ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் 37,500
    மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 75,000
    பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி தலைவர் 56,250
    முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சி தலைவர் 1,12, 500
    தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை நகராட்சி தலைவர் 2,25,000
    மாநகராட்சி மேயர் 5,62,500
    சென்னை மாநகராட்சி மேயர் 11,25,000

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...