கூட்டத்தில் பேசிய வைகோ, தலைநகர் சென்னையின்
வரலாற்றில் உயர்நீதிமன்ற நிகழ்வுகளில் ஆகஸ்ட் 30ஆம் தேதி சந்தித்தைப் போன்ற
உணர்ச்சிகளின் சங்கமத்தை இதுவரை சந்தித்தது கிடையாது. கோடான கோடி
தமிழர்களின் மனது பதைப்பதைத்திருந்தது. சாந்தன், முருகன், பேரறிவாளனுக்கு
செப்டம்பர் 9ஆம் தேதி தூக்கு தண்டனை என்ற முடிவு என்ன ஆகும். தாயத்தில்,
தமிழத்தில், கடல் கடந்த நாடுகளில், தரணி எங்கும் வாழும் தமிழர் மனங்களில்
வேதனை நெருப்பு மண்டி எழுந்த வேளையில் உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள்
நாகப்பன் அவர்களும், சந்திய நாராயணா அவர்களும், அந்த நீதிமன்றத்தில்
வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி அவர்கள் எடுத்து வைத்த வாதங்களை கேட்டு, தூக்கு
தண்டனையை நிறுத்தி வைக்கிறோம். அரசுகள் தங்கள் கருத்துக்களை இந்த
நீதிமன்றத்துக்கு தருவதற்கு எட்டு வார காலம் தவணை அறிவிக்கிறோம் என்ற
சொற்கள் அந்த நீதிமன்றத்தல் ஒலித்த வேளையில் கண்ணீர் விட்டவர்கள் பலர்.
அவர்களது இருதயங்களில் ஏற்பட்ட உணர்வுகளை அடக்க முடியாமல் துடித்தவர்கள்
பலர்.
நான் இந்தக்
கூட்டத்தில், இதே இடத்தில் தான் 1991ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் மனிதகுல
வரலாற்றில் இத்தகைய ஒரு வீர திலகத்தை இதுவரை கண்டதில்லை என்று சொல்லத்தக்க
மாவீரர் திலகம் பிரபாகரன் பிறந்த நாளாகிய அந்நன்னாளில், தமிழர் எழுச்சி
மாநாட்டை நடத்திய தோழர்கள் இந்த மேடையில் இருப்பதை துரைசாமி அவர்கள்
சுட்டிக்காட்டினார்கள். இன்றைக்கு அதே இடத்தில் கூட்டம். அடுத்து என்ன
நடக்கும். தூக்கு கயிறு அன்று அறுந்தது. நிரந்தரமாகவே அறுக்கப்பட்டுவிடும்
என்று நான் நம்பிக்கையை தெரிவித்தேன். நிரந்தரமாக அதை தீயிட்டு
கொளுத்துவோம் என்று இங்கே நிகழ்ச்சியை நடத்தியவர்கள் தூக்கு கயிற்றுக்கு
நெருப்பு வைத்தார்கள்.
என்ன நடக்கப் போகிறது. வழக்கு ஒன்று பதிவாகியிருக்கிறதாமே உச்சநீதிமன்றத்தில். சென்னை உயர்நீதிமன்றத்திலே விசாரிக்கப்படுகின்ற அறிவிக்கப்பட்ட மத்திய அரசு நிறைவேற்ற துடிக்கின்ற பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை பற்றி அவர்கள் தொடுத்திருக்கக்கூடிய விண்ணப்பத்தின் மீது நடைபெறுகிற வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்திலே நடக்கக் கூடாது. அது வேறு நீதிமன்றத்துக்கு, உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்று ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அது தாக்கல் செய்யப்பட்ட நாளில், அதை பதிவுக்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்துக்கு மாறாக, அதன் பிறகு இதுகுறித்து இரண்டு வார காலத்திற்குள் மத்திய அரசும், மாநில அரசும், வேறொரு சிறைச்சாலையிலே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்திலே அதை எதிர்த்து மனு தொடுத்தவர்களாக இருக்கின்ற சாந்தனும், முருகனும், பேரறிவாளனும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
என்ன காரணத்திற்காக இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலே விசாரிக்கப்படக் கூடாது.கரிய மேகங்கள் வானத்தில் முற்றுகை போட்டிருக்கின்றன. ஆகாயத்தை பார்த்தால் நட்சத்திரங்கள் எவையுமே கண்களிலே படவில்லை. பெரு மழை கொட்டக் கூடும். இடியும் மின்னலும் வின்னிலே பாயக் கூடும் என்று இன்று பகலில் வானிலை ஆய்வு அறிவிப்பாளர் அறிவித்ததை தொலைக்காட்சிகள் வெளியிட்டன. ஆகவே இடியும், மின்னலும், பெருங்காற்றும் சூழ்ந்துவிடும் என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டிய பலர் கூட வராமல் இருக்கலாம். ஆனால் இந்தக் கூட்டம் முக்கியமான காலக்கட்டத்தில் நடக்கின்ற கூட்டம். இங்கே மத்திய அரசின் உளவுப் பிரிவினர் வந்திருக்கிறார்கள். சாதாரணமாகவே வருவார்கள். இது பெரியார் திராவிடர் கழகம் நடத்துகின்ற கூட்டம். வில்லங்க பார்ட்டி பூரா இங்கே வந்திருக்கு. மத்திய அரசின் உளவுத்துறை. அதிலும் தமிழ் உணர்வுள்ள எத்தனையோ அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். டெல்லியில் இருந்து இயங்குகின்ற ஊடகங்களுக்கு செய்தி அனுப்புகிற செய்தியாளர்கள் வந்திருக்கிறார்கள். தமிழத்திலே இருக்கின்ற ஊடங்கள் ஒன்றிரண்டுகளை தவிர இந்த மூன்று உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்திகளை தருகிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நஞ்சை கக்குவதற்கு ஒன்றிரண்டு தொலைக்காட்சிகள் டெல்லியிலே துடித்துக்கொண்டிருக்கின்றன.
இந்த காலக்கட்டத்தில் மிக முக்கியமான நேரத்தில் நான் கேட்கிறேன், மத்திய அரசை கேட்கிறேன். பொங்கி வருகிற ஆத்திரத்தையெல்லாம் நான் கொட்டுவதற்கு தயாராக இல்லை. எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நாங்கள் கேட்கிறோம். மத்திய அரசே, இந்த வழக்கை பதிவு செய்தது யார். சென்னை உயர்நீதிமன்றத்திலே விசாரிக்கப்படக் கூடாது என்று ஒரு மனுவை இந்த தமிழத்தில் தலைநகர் சென்னையில் இருக்கின்ற ஒரு நபரின் பெயரில், அங்கு இருக்கிற ஒரு வழக்கிறிஞர் மூலமாக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறதே, இந்த வழக்கை தொடுத்தன் பின்னணி என்ன. யார் அதற்கு பின்னாலே மறைந்திருப்பவர்கள். ஒரு பேரவையின் பெயரால் வந்திருக்கலாம். அவர்களுக்கு தொடர்பில்லை என்றால் வெளிப்படையாக சொல்லிவிடவேண்டும். இதன் பின்னணியில் என்ன காரணம். சென்னை உயர்நீதிமன்றத்தில் பதட்டம் நிலவியதாம். கொந்தளிப்பு நிலவியதாம். விசாரணை ஒழுங்காக நடத்த முடியாதாம். நீதிபதிகள் நிர்பந்தத்துக்கு ஆளாகிவிடுவார்களாம். எனவே இந்த வழக்கை இங்கே விசாரிக்கக் கூடாதாம். இப்படி ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததையடுத்து அதனுடைய கருத்துக்களை மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் கேட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.
நான் கேட்கிறேன். அத்தனை ஆயிரம் பேர் திரண்டிருந்த உயர்நீதிமன்றத்தில் கலவரம் நடந்ததா. கூச்சல் நடந்ததா. சொல்லட்டும் மத்திய அரசுக்கு உளவுத்துறை. நிசப்தம் நிலவியது. நிசப்தம் நிலவிய வேளையில் வழக்கறிஞர்கள் வாதங்களை எடுத்து வைத்தார்களே, நீதிபதிகளுக்கு முன்னால் இப்படி ஒரு காட்சியை எங்காவது பார்க்க முடியுமா. கொந்தளிக்கிறது உள்ளம். ஆவேச உணர்வு இருந்தால் கூட நீதிமன்றத்தில் சகோதர சகோதரிகள் கட்டுப்பாட்டை காப்பாற்றவில்லையா. இதற்கு மாறுபட்ட கருத்துடையவர்களும் அங்கே உளவினார்களே. இந்த மூன்று பேர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று நாம் துடிக்கின்றபோது, அதற்கு மாறுபட்ட கருத்துக்கொண்ட கட்சியினர் ஓரிருவர் தமிழகத்திலே பேசி வருகிறார்களே அவர்களை சார்ந்தவர்களும் அந்த நீதிமன்ற வளாகத்திலே உளவினார்களே வழக்கறிஞர்களாக. ஏதாவது அமளி நடந்ததா. இதை சொல்ல வேண்டும். அப்படியென்றால் என்ன நோக்கம்.
சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு கயிற்றை நிரந்தரமாக அறுத்துவிடும் மூவருக்கும் என்ற எண்ணத்தினாலா. உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கின்ற தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய முடியுமா என்று கேட்டால் முடியும். முன்னுதாரணங்கள் நிரம்ப இருக்கின்றன. பல்வேறு உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் முடியும்.
No comments:
Post a Comment