ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
19 May, 2012
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்!
எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றவில்லை எனில், அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்,'' என, மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர், விஜய்குமார் காவித் கூறினார்.சென்னை அரசு மருத்துவக் கல்லூரியையும், மருத்துவமனையையும் பார்வையிடுவதற்காக, மகாராஷ்டிர மாநிலத்தின் மருத்துவக் கல்வி அமைச்சர் விஜய்குமார் காவித்க நேற்று சென்னை வந்தார்.அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் கனகசபையுடன் கலந்துரையாடினார்.
பின், அமைச்சர் பேசியதாவது:எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனையிலும் பணிபுரிவதற்கு, முற்றிலும் தடை விதித்துள்ளோம். வெளியில் பணிபுரியச் சென்றால், அரசு மருத்துவமனைகளில் ஈடுபாட்டுடன் பணிபுரிய மாட்டார்கள்.அவ்வாறு வெளியில் செல்வதைத் தவிர்ப்பதற்காக, ஆறாவது ஊதியக் குழுவின் ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.மகாராஷ்டிராவில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், குறைந்தது ஓராண்டுக்கு, கிராமப் புறங்களில் பணியாற்ற வேண்டும். அவ்வாறு, பணிபுரிய மறுப்பவர்கள், அரசிற்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும்.மேலும், சென்னை அரசு பொது மருத்துவமனை, மிகவும் பெரியதாக இருக்கிறது. இங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, மிகவும் அதிகமாக இருக்கிறது. எங்கள் மருத்துவமனையில், அதிகமாக, 1,500 படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன.தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மருத்துவர்கள், எங்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய தாராளமாக வரலாம். ஏனென்றால், அங்கு ஓய்வின் வயது,62 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு, 14 அரசு மருத்துவமனைகள் உள்ளன. மேலும், ஆறு மருத்துவமனைகள் உருவாக்கப்பட உள்ளன.
இதே நாள்...
- கனடாவின் மொன்ட்றியல் நகரம் அமைக்கப்பட்டது(1604)
- இந்தியாவின் நவீன தொழில்துறை முன்னோடியான ஜாம்செட்ஜி டாடா இறந்த தினம்(1904)
- சோவியத் ஒன்றியம், மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது(1971)
- இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது(1649)
ஷங்கர் வீட்டு முன் முற்றுகை போராட்டம் !
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அந்நாட்டுக்கு நடிகர், நடிகைகள் செல்லக்கூடாது என திரையுலகம் தடைவிதித்தது. இதனால் தமிழ் நடிகர், நடிகைகள் யாரும் அங்கு செல்லவில்லை. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன.ஆனால் இதை மீறி 'ரெடி' என்ற இந்தி படப்பிடிப்பில் பங்கேற்க அசின் இலங்கை சென்றார். இது சர்ச்சையை கிளப்பியது. அசினுக்கு நடிகர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. தமிழ் படங்களில் அவரை நடிக்க வைக்கக்கூடாது என்றும் வற்புறுத்தப்பட்டது.இந்த நிலையில் ஷங்கர் இயக்கப் போகும் புதுப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-இலங்கையில் ராஜபக்சே அரசு ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது. அதன் மூன்றாம் ஆண்டு துக்க தினத்தை உலக தமிழர்கள் இப்போது கடை பிடிக்கின்றனர்.ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன.இந்த நிலையில் தமிழர் உணர்வுகளுக்கு எதிராக நடந்து கொண்ட அசினை தனது புதுப்படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் முடிவெடுத்திருப்பதாக வெளியான தகவல் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது. திரையுலகினரின் தடையை மீறி அசின் இலங்கை சென்றது மட்டு மின்றி ராஜபக்சேயுடன் விருந்தும் சாப்பிட்டார்.ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றவர்களோடு கைகுலுக்கி விட்டு வந்த அசினை படத்தில் ஷங்கர் நடிக்க வைக்கக்கூடாது. மீறி நடிக்க வைத்தால் ஷங்கர் வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அறிக்கையில்
கேரளாவின் குப்பை மேடா? தமிழகம்??
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே கொட்டப்பட்ட கேரள தொழிற்சாலையின் ரசாயன கழிவுகளை 24 மணி நேரத்துக்குள் அகற்ற கெடு நிர்ணயிக்கப்பட்டது.பொள்ளாச்சியை அடுத்த கோபாலபுரம் சோதனை சாவடியில் கடந்த 17ம் தேதி அதிகாலை கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ரசாயன கழிவை ம.தி.மு.க.,வினர் மடக்கி பிடித்தனர்..
ஆனால், கழிவு கொண்டு வந்த லாரி ஓட்டுனர் மற்றும் சிலர் ம.தி.மு.க.,வினருக்கு போக்கு காட்டிவிட்டு லாரியை பொள்ளாச்சி அருகே உள்ள செடிமுத்தூரில் கொண்டுவந்து நிறுத்தி லாரியில் இருந்த கழிவுகளை கொட்டினர்.இதுபற்றி தகவல் கிடைத்ததும், பொள்ளாச்சி சுற்று வட்டார ம.தி.மு.க.,வினர் செடிமுத்தூரில் திரண்டனர். அதிகாரிகள் யாரும் இப் பிரச்னைக்கு தீர்வு காண முன்வராததால் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.அதற்குள், பொள்ளாச்சி தாலுகா இன்ஸ்பெக்டர் மகேந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று, ம.தி.மு.க.,வினரிடமும், கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ரசாயன தொழிற்சாலை (நிட்டா ஜெலடின்) நிர்வாகத்தையும் தொடர்பு கொண்டு பேசினார். தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் ம.தி.மு.க இருதரப்புக்கும் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் நேற்று மதியம் 2.00 மணிக்கு பேச்சு நடத்தினர்.தொழிற்சாலை நிர்வாகத்தரப்பில் பேசிய அமீர் என்பவர், "கேரள மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், "இக்கழிவுகளை வைத்து இயற்கை உரம் தயாரிக்க பயன்படுத்தலாம். இந்த கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்று சான்று கொடுத்துள்ளார். எனவே நாங்கள் இந்த கழிவுகளை உலர வைத்து இயற்கை உரம் தயாரிக்க திட்டமிட்டும்ளோம்' என்றார்.
ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் பேசும்போது, "இயற்கை உரம்” தயாரிக்க இக்கழிவுகளை பயன்படுத்துவதாக இருந்தால் கேரளாவிலேயே அதை செய்யட்டும். தமிழகத்துக்கு எதற்காக கொண்டு வர வேண்டும். இந்த கழிவுகள் அபாயகரமான ரசாயனகழிவுகள் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.எனவே, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் கேரளா உள்ளாட்சித்துறை மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக இந்த கழிவை கேரளாவுக்கு எடுத்து செல்ல வேண்டும்'' என்றார்.பொள்ளாச்சியில் கொட்டப்பட்ட கழிவு 24 மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்தி கேரளாவுக்கு கொண்டு செல்ல வேண்டும். இனிமேல் கேரளா தொழிற்சாலை கழிவை கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானித்து இரு தரப்பிலும் கையெழுத்தை போலீசார் பெற்றனர். இதையடுத்து கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.அதேபோல, கேரள மாநிலம் தத்தமங்கலத்தில் இருந்து 1,1/2 டன் ஆடு, மாட்டு, கோழி இறைச்சி கழிவுகளை ஏற்றிக் கொண்டு மினி டோர் ஆட்டோ ஓன்று நேற்று முன்தினம் ஆனைமலை நோக்கி வந்தது.
செமனாம்பதி சோதனை சாவடியில் நின்ற தமிழக போலீசார் அந்த மினிடோர் ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். அதனை ஓட்டி வந்த டிரைவர் வினை மற்றும் புரோக்கர் பாலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இறைச்சி கழிவு ஏற்றப்பட்ட மினிடோர் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு ஆனைமலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.ஏற்கனவே மக்கிப்போய் இருந்த அந்த கழிவுகள் துர்நாற்றம் வீசியதால் போலீசார் அந்த மினிடோர் ஆட்டோவை கொண்டுபோய் ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்தினர். நேரம் போக போக நாற்றம் அதிகமானது.வேறு வழியில்லாமல், இரவு 7 மணி அளவில் ஆனைமலை பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் கொண்டுபோய் குழி தோண்டி புதைக்க போலிசார் முயன்றனர்.இதை அறிந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். கேரள கழிவுகளை கொண்டு வந்து இங்கு புதைக்க ஆனைமலை என்ன குப்பைக்காடா ? என்று போலீசாரிடம் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கேரளாவின் இறைச்சி கழிவுகளை இங்கு புதைக்க கூடாது என வலியுறுத்தி சின்னப்பம் பாளையம் செல்லும் சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.அந்த வழியாக வந்த தமிழக அரசு பேருந்தை சிறை பிடித்தனர். தகவல் அறிந்ததும் ஆனைமலை பேரூராட்சி தலைவர் சாந்து விரைந்து வந்து சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். எக்காரணம் கொண்டும் கேரள இறைச்சி கழிவுகளை இங்குள்ள குப்பை குழியில் புதைக்க விடமாட்டோம் என்று பொதுமக்கள் கூறிவிட்டனர். இதைத் தொடர்ந்து இறைச்சி கழிவு ஏற்றப்பட்ட மினிடோர் ஆட்டோ கேரள எல்லைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கேரளா எல்லைக்குள் அனுப்பிய பின்னரே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.பொதுமக்கள் நடத்திய சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பொதுமக்களுக்கு உள்ள விழிப்புணர்வும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு வரவேண்டும்.
ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கபட்ட ஒரே பெண்மனி!
மனிப்பூர் மேரி கோம் லன்டன் 2012 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கபட்ட
ஒரே பெண்மனி. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான இந்த 29 வயது
பெண்மனி தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். இது வரை ஐந்து முறை உலக
சாம்பியன் மற்றூம் இந்தியாவின் நெ 1 சாம்பியன் இவர். காடுவெட்டி குரு
போன்ற குண்டர்கள் சாரி தொண்டர்கள் இந்த நாட்டையே கொளுத்துவோம்
என வெட்டி பந்தா விட்டு கொண்டிருக்கும் வேலையில் 33% சதவிகிதம் கூட
சரியாக தராத ஐந்து பெண்மனிகள் முதலைமச்சர் ஆக ஆளும் இந்த பரந்த
இந்திய தேசத்தில் இந்த விஷயம் பெருமைக்குறியது.
- சும்மா கல்யானம் ஆனாலே ஒன்னும் முடியலடா சாமி என
நீட்டி முழக்கும் பெண்களே இரண்டு குழந்தைகளுக்கும் தாய் ஆகி இன்னும்
சாம்பியன் - உங்களால் முடியாது ஒன்றும் இல்லை.
Subscribe to:
Posts (Atom)