|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 January, 2013

பார்த்ததில் பிடித்தது!



Amazing Gangnam Style...


வருமா வராதா?


தமிழ் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் இரவு 8.30 க்கு வெளியாகும் தீர்ப்பு! தள்ளி வைத்து 10 மணிக்கு ஒத்திவைப்பு!

இப்படியும் ஒரு முதலமைச்சர்!


கையிருப்புத் தொகை ரூபாய் 1,080.00
வங்கி இருப்பு ரூபாய் 9,720.00
மொத்தச் சொத்து மதிப்பு - ரூபாய் 2,20,000.00

இது, திரிபுரா மாநிலத்தை ஆளும் முதல்வர் மாணிக் சர்க்கார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), சொத்துக் கணக்கு! வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மாணிக் சர்க்கார், வேட்பு மனுவில் இந்தத் தகவல்களை தந்திருக்கிறார். இதில் மொத்த சொத்து என்று குறிப்பிடப்பட்டிருப்பது, இவருக்குச் சொந்தமாக இருக்கும் தகரக் கூரை வேயப்பட்ட 432 சதுர அடி வீடுதான். இதனுடைய மதிப்புதான் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். இது அவருடைய தாயார் வழியில் வந்த சொத்து!

'ம்க்கும்... மத்ததெல்லாம் பொண்டாட்டி பேர்ல, பினாமி பேர்ல இருக்கும்' என்று அவசரப்பட்டுவிடாதீர்கள்..!மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் இவருடைய மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யா, ஓய்வூதிய பலன்களாக பெற்ற வகையில் நிலையான வைப்புத் தொகையாக 23 லட்சத்து 58 ஆயிரத்து 380 ரூபாய் வைத்திருக்கிறார். கையிருப்பு தங்கம் 20 கிராம். இதன் மதிப்பு, ரூபாய் 72, 000. கையிருப்பு ரொக்கம் 22 ஆயிரத்து 15 ரூபாய். ஆக மொத்த மதிப்பு 24 லட்சத்தி 52 ஆயிரத்தி 395 ரூபாய்.

இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. எல்லாருக்குமே ஐந்து இலக்கங்களை தாண்டிய சம்பளம்தான். நாட்டிலேயே மிக மிக குறைவாக சம்பளம் வழங்கப்படுவது திரிபுராவில்தான். மாதச் சம்பளம் 9,200 ரூபாய். இதை அப்படியே கட்சியிடம் கொடுத்து விடுவார் மாணிக் சர்க்கார். கட்சிக்கு தன் உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு, கட்சியிலிருந்து வழங்கப்படும் உபகாரச் சம்பளம் மட்டுமே இவருக்கு உண்டு. அந்த வகையில் மாணிக் சர்க்காருக்கு மாதம் 5,000 ரூபாய் தரப்படுகிறது.

என்னதான் முட்டி மோதிக் கணக்குப் போட்டாலும்... முதல்வர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோருடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 27 லட்ச ரூபாயைத் தாண்டவில்லை. அடச்சே... நம்ம ஊரில், சும்மா நான்கு தெருவுகளை உள்ளடக்கிய கவுன்சிலர் பதவியில் உட்கார்ந்திருப்பவர்களில் பலருக்கும் பல கோடிகளில் சொத்துக்கள் இருக்கின்றன. மாத வருமானமே பல லட்சங்களில். ஓயாமல் பறப்பது டாடா சுமோ, இன்னோவா, சைலோ... போன்ற சொகுசு கார்களில்தான். இந்த மனுஷன் என்னடாவென்றால், சொந்தமாக ஒரு கார் கூட இல்லாமல், முதல்வர் பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஏற்கெனவே மூன்று முறை தொடர்ந்து முதல்வராக அமர்ந்திருக்கும் இவர், நான்காவது முறையாகவும் போட்டியிடுகிறார்.

ஹாலிவுட் படங்களை முறியடித்த விஸ்வரூபம்!

கமல் இயக்கத்தில் உருவாகி பல பிரச்சனைகளை சந்தித்த விஸ்வரூபம் படத்தின் மீதான தடை குறித்த வாதம் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. ஒரே மாதிரியான பிரச்சனையை எதிர்கொண்ட துப்பாக்கி படத்திற்கு இன்று(29.01.13) வழங்கப்பட்ட தீர்ப்பு மேலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. நீதிமன்றத்தில் நடந்த வாதத்தின் போது ‘மற்ற மாநிலங்களில் வெளியாகியுள்ள விஸ்வரூபம் படத்தினால் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் ஏன் தடை விதிக்கக் கோருகிறீர்கள்’ என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. மற்ற மாநிலங்களில் வெளியான விஸ்வரூபம் வசூலைக் குவிப்பதோடு, அமெரிக்காவிலும் மற்ற ஹாலிவுட் படங்களை விட அதிக வசூலைக் குவித்துள்ளது.   US - BOX OFFICE-ஐ பொருத்த வரையில் விஸ்வரூபம் படம் சென்ற வார இறுதியில் மட்டும் இந்திய மதிப்பீட்டின்படி 3 கோடியே 43 லட்ச ரூபாய் வசூலித்திருக்கிறது. ஹாலிவுட் தயாரிப்பாளரை ஆச்சர்யப் படுத்திய கமல் இப்போது ஹாலிவுட் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். அமெரிக்காவில் நடைபெற்ற விஸ்வரூபம் பிரீமியர் ஷோவிற்கு ஹாலிவுட்டின் முக்கிய பிரபலங்களும் வந்து கலந்துகொண்டது விஸ்வரூபம் படத்திற்கு ஹாலிவுட்டில் கிடைத்திருக்கும் வரவேற்பை வெளிப்படுத்தியது.

இதயம் துடிக்க மறுத்தால்?

கண்ட இடங்களில் கிறுக்கக் கூடாது தான். ஆனாலும் சில நேரங்களில் அந்த கிறுக்கல்க பல நல்ல தத்துவங்களைக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட தத்துவக்குவியல் தான் இது.

இலங்கை ராணுவத்தின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். அமெரிக்கா!


2009ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு சில நாட்களிலேயே லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொடூரமாக கொன்று குவித்து போரை முடித்து விட்டதாகவும், விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டதாகவும், புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக் கொன்று விட்டதாகவும் பிரகடனம் செய்தது இலங்கை அரசு. அன்று முதல் இன்று வரை தங்களது தாயகத்தில், சிங்களர்களின் ஆதிக்கத்தின் கீழ் அவஸ்தைப்பட்டு வருகின்றனர் ஈழத் தமிழர்கள். ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த படுகொலைகளுக்கு இலங்கே ராணுவமே பொறுப்பு என்று அனைத்துத் தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அமெரிக்கா, போர் குற்றம் புரிந்த இலங்கை அரசு மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் பிரச்சினை எழுப்பியது. இதற்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்ததுடன் போர் குற்ற விசாரணைக்கும் மறுப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஒரு தீர்மானத்தையும் கொண்டு வந்தது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா ஓட்டுப் போட்டது,தீர்மானமும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இதேபோல இன்னொரு தீர்மானத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.
 
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஜேம்ஸ் முர்ரே கூறுகையில், போர்குற்றம் புரிந்த இலங்கை ராணுவத்தின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். அதை வலியுறுத்தி மீண்டும் ஒரு நடைமுறை தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வருகிறது. வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை கமிஷன் கூட்டத்தில் அந்த தீர்மானம் சமர்பிக்கப்படும். இலங்கையில் மனித உரிமை, பொறுப்பு மற்றும் சமரசம் குறித்த விஷயங்களில் அரசு நடவடிக்கை எடுப்பதாக காட்டிக்கொண்டாலும், அது முழுமையாக நடைபெறவில்லை. இலங்கை தன் மக்கள் மீதான வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அவசியம் ஆகிறது. அமெரிக்காவும் மற்ற ஐ.நா. மனித உரிமை அமைப்பின் 23 உறுப்பு நாடுகளும் இதையே நம்புகிறது என்றார். இந்தத் தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போதே எழுந்துள்ளது.

 

கண்ணகி சிலம்பும், மனோகரன் விலங்கும் வீழ்ந்ததா? வீழ்த்தியதா?


சென்னை நகர் முழுவதும் மு.க.அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி அவரது ஆதரவாளர் ஒருவர் ஒட்டியிருந்த போஸ்டரைக் கண்டு திமுக தலைவர் கருணாநிதி கடும் கோபம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் ஜி.வெங்கட் என்கிற ஜி.வி.ரமணா (இருவரும் திமுகவினர் அல்ல) வரும் 30-ந் தேதி அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி சென்னை நகர் முழுவதும் குறிப்பாக கருணாநிதியின் வீடு உள்ள கோபாலபுரம் பகுதியில் ஒருசுவர் கூட விடாமல் 3 வித போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் அழகிரியின் படம் மட்டும்தான் இடம்பெற்றுள்ளது. திமுகவினர் எப்போதும் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் படத்தை சேர்த்து அச்சிடுவதே வழக்கம். இப்படி ஒட்டப்பட்ட போஸ்டர்களில். சுவரொட்டி வாசகங்கள்: கண்ணகி சிலம்பும், மனோகரன் விலங்கும் வீழ்ந்ததா வீழ்த்தியதா.? அதுக்கும் மேல.. அதுக்கும் மேல... அதுக்கும் மேலே.. அண்ணன் உசுருலே. இங்கே பரமசிவனும் இல்லை. நாங்கள் கருடனும் இல்லை. நடப்பது ராம நாடகமே என கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்று கருணாநிதி அறிவித்துவிட்ட நிலையில் அழகிரியின் சார்பாக கருணாநிதியை கடுப்பேற்றும் வகையில்தான் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதைப் பார்த்த கருணாநிதியும் அனைத்து போஸ்டர்களையும் எப்படியாவது கிழித்து எறியுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

 

ஆசியா நோபல் பரிசு!


உலக அளவில் பல்வேறு துறைகளில் சேவை, சாதனை புரிந்தவர்களுக்காக வழங்கப்படும் நோபல் பரிசைப் போன்று ஆசியாவிலும் பரிசு வழங்குவதற்காக பிரபல தைவான் தொழிலதிபர் ஒருவர் 550 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளார். பிரபல தொழில் அதிபர் சாமுவேல்யின் தைவான் நாட்டை சேர்ந்தவர். இவர் சீனாவில் பெருமளவு முதலீடு செய்துள்ளார். உலக நன்மைக்காக பாடுபடுவர்களுக்கு உலகில் வழங்கப்படும் நோபல் பரிசை போன்று ஆசியாவிலும் பரிசு வழங்கவேண்டும் என்று அவரின் டேங் பரிசு நிறுவனம் முடிவு செய்தது. அதற்காக சுமார் 550 கோடி ரூபாய் வழங்க சாமுவேல் முன்வந்துள்ளார். நோபல் பரிசை விட அதிகம் இந்த டேங் பரிசானது வரும் 2014-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படவுள்ளது. உலக நாடுகளில் உள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். பரிசு பெறுபவர்களுக்கு 3 பில்லியன் தைவான் டாலர் வழங்கப்படும். உலகின் மிகப்பெரிய பரிசான நோபல் பரிசின் தொகையானது ரூ. 6 கோடிக்கு மேல் உள்ளது. ஆனால் சாமுவேல் யின்னின் இந்த டேங் - பரிசுத்தொகை அதைவிட அதிகமாக 9 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...