சென்னை நகர் முழுவதும் மு.க.அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி அவரது
ஆதரவாளர் ஒருவர் ஒட்டியிருந்த போஸ்டரைக் கண்டு திமுக தலைவர் கருணாநிதி
கடும் கோபம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் ஜி.வெங்கட் என்கிற ஜி.வி.ரமணா (இருவரும்
திமுகவினர் அல்ல) வரும் 30-ந் தேதி அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி சென்னை
நகர் முழுவதும் குறிப்பாக கருணாநிதியின் வீடு உள்ள கோபாலபுரம் பகுதியில்
ஒருசுவர் கூட விடாமல் 3 வித போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அதில் அழகிரியின் படம் மட்டும்தான் இடம்பெற்றுள்ளது. திமுகவினர் எப்போதும்
பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் படத்தை சேர்த்து அச்சிடுவதே வழக்கம்.
இப்படி ஒட்டப்பட்ட போஸ்டர்களில்.
சுவரொட்டி வாசகங்கள்: கண்ணகி சிலம்பும், மனோகரன் விலங்கும் வீழ்ந்ததா
வீழ்த்தியதா.?
அதுக்கும் மேல.. அதுக்கும் மேல... அதுக்கும் மேலே.. அண்ணன் உசுருலே.
இங்கே பரமசிவனும் இல்லை. நாங்கள் கருடனும் இல்லை. நடப்பது ராம நாடகமே
என கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மு.க.ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்று கருணாநிதி அறிவித்துவிட்ட நிலையில்
அழகிரியின் சார்பாக கருணாநிதியை கடுப்பேற்றும் வகையில்தான் இந்த
போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதைப் பார்த்த கருணாநிதியும் அனைத்து
போஸ்டர்களையும் எப்படியாவது கிழித்து எறியுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment