ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
25 March, 2013
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும். நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும். இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.
அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம். இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.
அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.
இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க. இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம். கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது. அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ். அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர். அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.
இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.
அதுவரை நாம் ஒயபோவதில்லை!
தெருவில் செல்கையில்
ஒருவன் இடித்துச் சென்றாலே
கோபம் வரும்
இவனென் சகோதரிகளை
துணியவிழ்த்து
படம் பிடித்து
எள்ளிநகைத்து
இழுத்து லாரியில் வீசுகிறான்,
கையை உடைக்க வேண்டாமா
காரி உமிழ வேண்டாமா
கொன்று புதைக்க வேண்டாமா
என் தாயைக் கொன்ற
என் மகனை கருவறுத்த
என் மனைவியை கொன்ற
என் சகோதரியை
நிர்வாணப் படுத்தியதொரு
கோபத்தை
பலி தீர்க்கும் வரை ..
அங்கே கடைசித் தமிழனொருவன்
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கும் வரை - இங்கே
நாம் ஒயபோவதில்லைஎன்று
உலகிற்கு உணர்த்துவோம்
ஈழதமிழன் சிந்திய
ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும்
ஈன சிங்கள இனம்
பதில் சொல்லும் காலம் வரும்.
பலி வாங்கியே தீருவோம் ..!
அதுவரை நாம் ஒயபோவதில்லை ..!
ஒருவன் இடித்துச் சென்றாலே
கோபம் வரும்
இவனென் சகோதரிகளை
துணியவிழ்த்து
படம் பிடித்து
எள்ளிநகைத்து
இழுத்து லாரியில் வீசுகிறான்,
கையை உடைக்க வேண்டாமா
காரி உமிழ வேண்டாமா
கொன்று புதைக்க வேண்டாமா
என் தாயைக் கொன்ற
என் மகனை கருவறுத்த
என் மனைவியை கொன்ற
என் சகோதரியை
நிர்வாணப் படுத்தியதொரு
கோபத்தை
பலி தீர்க்கும் வரை ..
அங்கே கடைசித் தமிழனொருவன்
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கும் வரை - இங்கே
நாம் ஒயபோவதில்லைஎன்று
உலகிற்கு உணர்த்துவோம்
ஈழதமிழன் சிந்திய
ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும்
ஈன சிங்கள இனம்
பதில் சொல்லும் காலம் வரும்.
பலி வாங்கியே தீருவோம் ..!
அதுவரை நாம் ஒயபோவதில்லை ..!
போராடினால்தான் வெற்றி!
''திட்டத்துக்காக மக்கள் அல்ல,
மக்களுக்காகவே திட்டம்"
விவசாய நிலங்களில்தான் எரிவாயு குழாய்களைப் பதிப்போம் என்று அடம்பிடித்த வந்த கெயில் நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்தபோதும், தமிழக அரசு அதிகாரிகளின் ஆதரவோடு அதிரடியாக
நிலங்களை கையகப்படுத்தி குழாய்களைப் பதித்தது கெயில் நிறுவனம். தலைமைச்
செயலாளர் அளவில் விவசாயிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்கிற உத்தரவும்
காற்றில் பறக்கவிடப்பட்ட்து.
இதையடுத்து போராட்டத்தில் குதித்த
விவசாயிகளை தமிழக போலீஸார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி ஒடுக்கப்
பார்த்தனர். ஆனால், உறுதி கலையாத விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதன் பிறகே இந்த விஷயத்தில் கவனத்தைத் திருப்பிய முதலமைச்சர் ஜெயலிலதா...
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப் பேச்சுவார்த்தைக்கு உத்தரவிட்டார்.
மூன்று நாட்கள் தொடர்பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, அனைத்து தரப்பு
வாதங்களையும் கேட்டறிந்த முதல்வர் ஜெயலலிதா, இன்று (மார்ச்-25) சட்டசபையில்
தன் முடிவை அறிவித்துள்ளார்.
1. கெயில் நிறுவனம் விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களை
பதிக்கும் தற்போதைய திட்டத்தினை உடனடியாக கைவிடவேண்டும்.
2. வேளாண் நிலங்கள்
பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாக பதிப்பதற்கு கெயில்
நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
3. கெயில் நிறுவனம் ஏற்கெனவே நிலங்களில் குழாய்களைப் பதிக்க தோண்டியுள்ள
குழிகளை உடனடியாக சமன்படுத்தி அந்நிலங்களை அதன் முந்தைய நிலையில்
விவசாயிகளிடமும் நில உரிமையாளர்களிடமும், ஒப்படைக்க வேண்டும்.
4. விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை தொடரும் வகையில் ஏற்கெனவே
பதிக்கப்பட்ட குழாய்களை கெயில் நிறுவனம் உடனடியாக அப்புறப்படுத்த
வேண்டும்.
5. இந்தத் திட்டத்தினால் பழவகை மரங்களையும் மற்றும் பிற கட்டுமானங்களையும்
இழந்து, தற்போது வரை இழப்பீடு அளிக்கப்படாத விவசாயிகளுக்கும், நில
உரிமையாளர்களுக்கும் உடனடியாக கெயில் நிறுவனம் உரிய இழப்பீட்டினை
வழங்க வேண்டும். 'கெயில்' திட்டம் தொடர்பாக விவசாயிகள் மீது தொடரப்பட்ட அனைத்து
வழக்குகளையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
''விவசாயிகளின் வீழ்ச்சியில் தொழில் வளர்ச்சி ஏற்படுவதை நியாய உணர்வு
கொண்ட யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திட்டத்துக்காக மக்கள் அல்ல, மக்களுக்காகவே திட்டம் என்பதில் எனது
தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என்பதையும், மக்களின் வாழ்வாதாரங்களை
பாதிக்கும் எந்தத் திட்டத்துக்கும் எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு என்றைக்கும்
உடந்தையாக இருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றும் கூறியிருக்கிறார் ஜெயலலிதா!
விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த முடிவை எடுத்திருக்கும்
முதல்வர் ஜெயலலிதாவை, 'எதிர்காலத்திலும் இதே நிலையைத் தொடர்வார்' என்கிற
நம்பிக்கையோடு பாராட்டுவோம்!
போராடினால்தான் வெற்றி என்பதை
மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது... இந்த விஷயம். எனவே, பாதிப்பு
வரும்போது போராட என்றுமே விவசாயிகளும் தயங்கக் கூடாது... தொடரட்டும்
நியாயமான போராட்டங்கள்!
"34 வயது 'குழந்தை'.சஞ்சய் தத்துக்கு ஆதரவு தரும் பொறிக்கிகள்!
நம் இனம் அழியும் போது ஆதரவு இல்லை கொத்து கொத்தாய் மடியும் பொழுது கேள்வி கேட்பார் இல்லை! இந்திய நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் என கூறிவிட்டு இன்று A K 47 வைத்து இருந்தவன் குற்றவாளி இல்லையாம் குழந்தையாம்? கேடு கெட்ட நாய்களே? பேட்டரி வாங்கி கொடுத்தவனை தூக்கிலிட காத்திருக்கும் அரசாங்கம் வீட்டில் ஆயுதம் வைத்திருந்தவன் ஒன்றும் அறியாத குழந்தையாம்! இந்த நாய்கள் கூறுகின்றன.
1993-ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை
விதிக்கப்பட்டிருக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சயத் தத்துக்கு மன்னிப்பு
கொடுத்து விடுதலை செய்யலாம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங்
கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
சஞ்சய் தத்துக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற
முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நடிகர் ரஜினிகாந்த், ஜெயா பச்சன் என
பலரும் அவரை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்
என்று கருத்து தெரிவித்து
வருகின்றனர்.
இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங்கும் அதிரடியாக சஞ்சய்
தத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில்,
சஞ்சய் தத் ஒரு குற்றவாளி அல்ல. அவர் ஒரு தீவிரவாதியும் அல்ல.1993-ம் ஆண்டு
ஒரு மோசமான நிலைமை இருந்தது. அப்போது அவருக்கு இளம் வயது. குழந்தைகள்
எப்படி சில நேரங்களில் செயல்படுவார்களோ அது போல் அவர் செயல்பட்டிருக்கிறார்
(சஞ்சய் தத் கைது செய்யப்பட்ட போது அவருக்கு 34 வயது என்பது
குறிப்பிடத்தக்கது). அவர் ஒரு தவறு செய்துவிட்டார். அதற்கான விலையாக 18 மாத
சிறைத் தண்டனையும் அனுபவித்துவிட்டார். கடந்த காலங்களில் மதவாதத்துக்கு
எதிராகவும் சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும் அவர் கருத்து தெரிவித்ததாலேயே
அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்கின்றனர் சிலர்
என்றார் அவர்.
இது பற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரஷீத் ஆல்வி கூறுகையில்,
சஞ்சய் தத் கருணை மனு தாக்கல் செய்யலாம். அதை ஜனாதிபதி பரிசீலனை
செய்யலாம்.. இது பற்றியெல்லாம் கருத்து சொல்ல முடியாது என்றார்.
டிவி சேனல்களுக்கு ஆப்பு டிராய்!
தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள்
எதுவாக இருந்தாலும் ஒரு மணிநேரத்திற்கு 12 நிமிடம் மட்டுமே விளம்பரங்களை
ஒளிபரப்ப வேண்டும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்)
உத்தரவிட்டுள்ளது.
டிவிக்களில் சினிமாவோ, சீரியலோ பார்க்க அமர்ந்தால் போதும் விளம்பரங்களின்
தொல்லை தாங்க முடியாது. 7முதல் 10 நிமிடத்திற்கு ஒருமுறை விளம்பரத்தை
போட்டு தாளித்து விடுவார்கள். விளம்பரங்களின் மூலம் கோடிக்கணக்கில் காசு
பார்க்கும் தனியார் சேனல்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் புதிய
அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது டிராய் இந்த அறிவிப்புக்கு தனியார்
சேனல்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
பல ஆயிரம் கோடி வருமானம்
இந்தியாவில் மொத்தம், 163 கட்டண சேனல்கள் இயங்கி வருகின்றன. இது தவிர இலவச
சேனல்களும் இந்தியாவில் நூற்றுக்கணக்கில் பெருகியுள்ளன.
கட்டண சேனல்கள், விளம்பரங்கள் மூலமாக, 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய்
வருமானம் ஈட்டுகின்றன. இதுதவிர, சந்தா மூலமாகவும், 21 ஆயிரத்து 300 கோடி
ரூபாய் வருமானம் பெறுகின்றன. ஆனால், ஒளிபரப்பு விஷயத்தில் உள்ள ஓட்டைகளைப்
பயன்படுத்தி, சந்தா வருமானத்தை விட, விளம்பரங்கள் மூலமாகவே அதிக
வருமானங்களை, கட்டண சேனல்கள் ஈட்ட முயற்சிக்கின்றன.
கட்டண சேனல்களுக்கு கட்டுப்பாடு
எனவே விளம்பர விஷயத்தில் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக ஒரு கருத்துருவை,
டிராய் உருவாக்கியுள்ளது. இதன்படி, கட்டண சேனல்களில் விளம்பரங்களை
ஒளிபரப்புவதில் சில கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த
கட்டண சேனல்களில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்போது, ஒரு மணி நேரத்தில் 12
நிமிடங்கள் விளம்பரங்கள் ஒளிபரப்ப வேண்டும் என டிராய் சுற்றறிக்கை
அனுப்பியுள்ளது. விளம்பரங்கள் ஒளிபரப்பும் நிமிடம் குறைவதால் சந்தாதாரர்கள்
எவ்வித தடையுமின்றி, நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும்.
விளம்பர இடைவெளியிலும் கட்டுப்பாடு
விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் நேரத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல்,
நிகழ்ச்சிகளின் போது விளம்பரம் ஒளிபரப்புவதற்காக விடப்படும் இடைவெளி
குறித்த விஷயத்திலும் கட்டுப்பாடு கொண்டுவரவும், டிராய் திட்டமிட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் 7 நிமிடத்திற்கு ஒரு பிரேக் என்ற வகையில்
விளம்பர இடைவெளி விடப்படுகிறது என்பதுதான் பார்வையாளர்களின் புகார்.
கட்டண சேனல்கள் எதிர்ப்பு
டிராயின் இந்த திட்டத்துக்கு, கட்டண "டிவி' சேனல்கள் தரப்பில் கடும்
எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சோனி பொழுதுபோக்கு சேனல் குழுமத்தின் தலைவர்
ரோஹித் குப்தா கூறியதாவது: "டிவி' சேனல்கள், தங்களின் வருமானத்துக்கு
பெரும்பாலும், விளம்பரங்களைத் தான் நம்பியுள்ளன. இதை எப்படி குறைக்க
முடியும் என்று கேட்டுள்ளார் குப்தா.
கழுவிலேற்றப்பட வேண்டியது ராஜபக்சே மட்டுமல்ல?
கழுவிலேற்றப்பட வேண்டியது ராஜபக்சே மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள
சிலரும் தான் என தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன்
தெரிவித்துள்ளார்.
மணப்பாறை நகரில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழீழம் கோரி உண்ணாவிரதம்
இருந்தனர். மாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நகரின் வீதிகள்
வழியாக தமிழீழம் ஒன்றே தீர்வு என்று முழக்கமிட்டு நகர்வலம் வந்தனர்.
அவர்கள் மத்தியில் தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் பேசியதாவது,
ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி. அனைத்துலக நீதிமன்றத்தின் முன்பாக அவன்
நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு செய்த படுகொலைகளுக்கும் பாதகங்களுக்கும்
தண்டனையாக அவனைத் தூக்கிலிட வேண்டும். ஆனால் ஈழத்தில் நடந்த மாந்தப்
படுகொலைகளுக்கு அவன் மட்டுமா காரணம்? இலங்கைப் படைகள் மட்டும் தனித்து
நின்று விடுதலைப் புலிகளோடு மோதியிருக்குமானால் தலைவர் பிரபாகரன் தலைமையில்
என்றைக்கோ தமிழீழம் அமைந்திருக்கும்.
ஆனால், இனவெறி பிடித்த நாடுகள் உடனிருந்து ஓர் இனப்படுகொலையை நிகழ்த்தின.
அவைகள் இன்று இலங்கை என்ற முகமூடிக்குள் ஒளிந்து கிடக்கின்றன. இலங்கைக்கு
ஆயுதங்களும், இராசயண ஆயுதங்களும், கொத்துக் குண்டுகளும், தடைசெய்யப்பட்ட
ஆயுதங்களையும் வழங்கியது இந்தியா இல்லையா? இலங்கைக்கு ஆதரவாக படைகளை
அனுப்பியது டெல்லி ஆட்சியாளர்கள் இல்லையா? உளவு சொன்னது இவர்கள் இல்லையா?
போருக்குப் பணம் கொடுத்தது இவர்கள் இல்லையா? அங்கு அப்பட்டமான மனித உரிமை
மீறல்களில் ஈடுபட்டது இவர்கள் இல்லையா? உப்பைத் தின்றவன் தண்ணீர்
குடித்துத் தானே தீர வேண்டும்!
இந்திய இலங்கை கூட்டோடு சீனாவும், பாக்கிஸ்தானும் கூடிச் சேர்ந்து கோரத்
தாண்டவம் ஆடவில்லையா? இவர்களுக்கு எல்லாம் மேலாக தமிழினத்தின் காவலனாக
வேலேந்தி நிற்க வேண்டிய கடமையிலிருந்த தமிழக அரசு என்ன செய்தது?
மேனனும், நாராயணனும் கொழும்புக்கு ஓரோடிச் சென்று ஆதரவு அளித்தபோது
சென்னைக் கோபாலபுரத்தின் கதவுகளைத் தட்டி ஆலோசனையும் ஆதரவும் பெற்ற பின்னர்
தானே சென்றார்கள்.
9 ஆண்டு காலம் அவர்களோடு கூடிக்குலவி ஆட்சி சுகம் கண்ட கருணாநிதி இன்று
பதவியைத் தூக்கி எறிவதால் மட்டும் குற்றாவாளிக் கூண்டில் இருந்து
இறக்கிவிடலாமா? இப்படி இவர்களையெல்லாம் தப்பிக்கவிட்டு இராஜபக்சேவை மட்டும்
தூக்கிலிட்டால் தமிழீழ மண்ணில் உயிரை விதையாக்கிய ஆயிரமாயிரம் பச்சைக்
குழந்தைகளின் உயிர்கள் அதை மன்னிக்குமா?
உயிர் கொடுத்த போராளிகளும், உயிர் நீத்த அப்பாவி மக்களும், ஏற்றுக்
கொள்வார்களா? எனவே ஒரு கயவனை மட்டுமல்ல பல கயவர்களின் கணக்குகளை சரி
பார்க்கும் நேரமிது என்றார்.
தேவை மனிதநேயம்!
கூவம் ஆற்றில் கால் தவறி விழுந்து உயிருக்கு போராடிய முதியவரை
போக்குவரத்து போலீஸ் ரவி காப்பாற்றியுள்ளார்.
சென்னை அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). அவர்
அதிகாலை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்கு பைக்கில்
புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது,
கூவத்தை எட்டிபார்த்தபடி 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர்.
இதனால் பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவரும் எட்டிப் பார்த்தார். அப்போது
கூவத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நெஞ்சு பகுதி முழுவதும்
மூழ்கிய படி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டபடி
இருந்தார். பொதுமக்கள் யாரும் காப்பாற்றவில்லை. உடனே ரவி மடமடவென
கூவத்துக்குள் இறங்கினார். ஆழமாக இருந்ததால் முதியவர் பக்கத்தில் செல்ல
முடியவில்லை. அங்கு கிடந்த நீளமான சவுக்கு கம்பை எடுத்து, அந்த முதியவரை
பிடித்துக் கொள்ளச் சொன்னார்.
ஆனால் கம்பு அவருக்கு எட்டவில்லை.
பின்னர், ரவி தனது ஷூவில் இருந்த கயிற்றை கழற்றி கம்போடு இணைத்து, அதை
பிடித்துக் கொள்ளுமாறு முதியவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்ய, அதை
பிடித்து முதியவரை இழுத்து வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார் ரவி.
முதியவருக்கு உடல் முழுவதும் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம்
கொட்டியது.
இதையடுத்து அங்குள்ள வீட்டில் தண்ணீர் வாங்கிய ரவி, முதியவரை குளிப்பாட்டிய
பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி
வைத்தார். முதியவருக்கு இடுப்பு, கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு
இருந்தது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதியவரை
காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவியை, அப்பகுதி மக்கள் கைகுலுக்கி பாராட்டு
தெரிவித்தனர். முதியவரை காப்பாற்றிய ரவிக்கு சல்யூட்.
Subscribe to:
Posts (Atom)