இயற்கையாக உருவான அதிசயங்கள் பற்றிய
பட்டியலை சுவிட்சர்லாந்தில் உள்ள `புதிய 7 அதிசயங்கள் அறக்கட்டளை'
வெளியிட்டு வருகிறது. அதன்படி, உலக அளவில் 7 அதிசயங்களின் தற்காலிக
பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் முதல் இடத்தை ஆப்பிரிக்காவை சேர்ந்த அமேசான் காடு
பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை வியட்நாம் ஹலாங் வளைகுடா, மூன்றாவது
இடத்தை அர்ஜென்டினா இகுசு நீர்வீழ்ச்சி ஆகியவை பெற்றுள்ளன.இது தவிர, தென்
கொரியாவின் ஜேஜு தீவு, இந்தோனேசியாவின் கொமாடோ, பிலிப்பைன்சின் தரைக்கு
கீழ் ஓடும் புயர்டோ பிரின்சிசா ஆறு, தென் ஆப்பிரிக்காவின் டேபிள் மலை
ஆகியவையும் அதிசய பட்டியலில் உள்ளன.உலக அதிசயங்கள் குறித்த அதிகாரப்பூர்வ இறுதி பட்டியல் அடுத்த ஆண்டு (2012) தொடக்கத்தில் வெளியாகிறது.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
13 November, 2011
இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனி பதவி விலகினார்!
இத்தாலியை மட்டுமல்லாமல் உலகையே தனது காதல் லீலைகளால் ஆட்டிப் படைத்து வந்த பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ஒரு வழியாக தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதையடுத்து மக்கள் ரோம் நகரில் கூடி அதை வரவேற்று கொண்டாடினர். நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த தனது ராஜினாமா உதவும் என்று பெர்லுஸ்கோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக மகா 'காம மன்னனாக' திகழ்ந்தவர் பெர்லுஸ்கோனி. விபச்சார அழகிகளுடன் அவர் போட்ட ஆட்டமும், கொட்டமும் இத்தாலியின் பெயரை உலக அளவில் நாறடித்து விட்டது. இருந்தாலும் தனது காம லீலைகள் குறித்து அவர் ஒருபோதும் வெட்கப்பட்டதே கிடையாது. இதெல்லாம் எனது தனிப்பட்ட விஷயங்கள் என்று கூறி வந்தார். ஆனால் சமீபத்தில் அவரது காம லீலைகள் பெரும் சர்ச்சையாகி வழக்குகளும் தொடரப்பட்டன.இதையடுத்து பெர்லுஸ்கோனி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தன. ஆனாலும் அவர் அதை சட்டைசெய்யவில்லை. ஆனால் நாட்டின் பொருளாதாரம் மகா மோசமாக நலிவடைந்து விட்டதைத் தொடர்ந்து பெர்லுஸ்கோனிக்கு எதிரான எதிர்ப்புகள் வலுத்தன. சமீபத்தில் நடந்த ஓட்டெடுப்பில் பெரும்பான்மையைப் பெறத் தவறினார் பெர்லுஸ்கோனி. இதையடுத்து தான் பதவி விலகப் போவதாக அவர் அறிவித்தார்.அதன்படி தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார். பெர்லுஸ்கோனியின் ராஜினாமாவையடுத்து ரோம் நகரில் கொண்டாட்டங்கள் வெடித்துள்ளன. பெர்லுஸ்கோனி எதிர்ப்பாளர்கள் கூடி அவருக்கு எதிராக போராட்டங்களில் குதித்துள்ளனர். நூற்றுக்கணக்கான பெர்லுஸ்கோனி எதிர்ப்பாளர்கள் ரோம் நகரில் மோட்டார் சைக்கிள்களில் பேரணி நடத்தி பெர்லுஸ்கோனியின் ராஜினாமாவை வரவேற்றனர்.தனது ராஜினாமா குறித்து பெர்லுஸ்கோனி கூறுகையில், எனது ராஜினாமாவால் இத்தாலியின் நலிவடைந்த பொருளாதாரம் தலை நிமிரும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.அடுத்து புதிய அரசை அமைக்கும் முயற்சிகள் தொடங்கவுள்ளன. இந்தப் பணியை முன்னாள் ஐரோப்பிய ஆணையர் மரியோ மொன்டி மேற்கொள்வார் என்று தெரிகிறது.
ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்த பெர்லுஸ்கோனி, அன்றைய இரவை 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசமாக கழித்துள்ளார்பெர்லுஸ்கோனியின் பெர்சனல் வாழ்க்கை காமக் களியாட்டங்கள் நிறைந்தது. அவரைப் போல காதல் லீலைகளில் ஈடுபட்ட தலைவர் யாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு ஏகப்பட்ட லீலைகளில் ஈடுபட்டிருந்தவர் பெர்லுஸ்கோனி.
தற்போது அவர் பிரதமர் பதவியை விட்டு விலகி விட்டார். இதுதொடர்பான முடிவை கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவர் அறிவித்தார். அதற்குப் பின்னர் அவர் ஒரு இளம் பெண்ணுடன் அன்றைய இரவைக் கழித்துள்ளார். அவரது பெயர் பிரான்செஸ்கா பாஸ்கர். இவர் பெர்லுஸ்கோனியின் கட்சியைச் சேர்ந்தவர். இவருடன் ஏற்கனவே பெர்லுஸ்கோனியை இணைத்து ஏராளமான செய்திகள் வந்துள்ளன. அன்றைய இரவு ஏழரை மணியளவில் பெர்லுஸ்கோனியின் வீட்டுக்கு பாஸ்கல். அடுத்த நாள் காலை 10 மணிக்குத்தான் புறப்பட்டுச் சென்றார்.இரவு முழுவதும் அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இதுகுறித்து பாஸ்கலிடம் சில செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் இதில் வெட்கப்பட என்ன உள்ளது என்று பட்டென்று கேட்டாராம். இதைக் கேட்டதும் செய்தியாளர்களுக்குத்தான் ரொம்ப வெட்கமாகிப் போய் விட்டதாம். இதுவரை பிரதமர் என்ற பதவிக்குள் கட்டுப்பட்டிருந்தார் பெர்லுஸ்கோனி. எனவே இதுவரை நடந்ததெல்லாம் வெறும் டிரெய்லர்தான். இனிமேல்தான் மெயின் பிக்சரே வரப் போகிறது, இனிமேல்தான் அவர் ஓவராக ஆடுவார் என்று இத்தாலியர்கள் ஆரூடம் கூறுகிறார்கள்.
அரபு லீக்கிலிருந்து சிரியா நீக்கப்பட்டது!
அரபு லீக் அமைப்பு சிரியாவை தனது அமைப்பிலிருந்து நீக்கியுள்ளது. மேலும், சிரியா மீது உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதிக்குமாறும் அது அழைப்பு விடுத்துள்ளது. அரபு ஒப்பந்தத்தை அதிபர் பாஷர் அல் அஸ்ஸாத் அமலாக்கும் வரை சஸ்பெண்ட் நடவடிக்கை தொடரும் என்றும் அரபு லீக் அறிவித்துள்ளது. மேலும் போராட்டம் நடத்துவோரை ராணுவத்தைக் கொண்டு அடக்குவதையும், ஒடுக்குவதையும் சிரியா கைவிட வேண்டும் என்றும் அரபு லீக் கூறியுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று சிரிய தூதர் யூசப் அகமது கூறியுள்ளார். அரபு லீக்குடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஏற்கனவே சிரியா அமல்படுத்தியுள்ளது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையின் பின்னால் அமெரிக்க அரசு உள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சிரியாவுக்குள் வெளிநாடுகளின் ஊடுறுவலை ஏற்படுத்த அரபு லீக் துணை போகிறது, உதவுகிறது. லிபியாவிலும் அப்படித்தான் அரபு லீக் நடந்து கொண்டது. இப்போதும் அப்படியே நடக்க அது முயலுகிறது என்றார் அவர்.இதற்கிடையே, அரபுலீக்கின் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஐரோப்பியன் யூனியன் தலைவர் ஆகியோர் வரவேற்றுள்ளனர். சிரியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் மீது படை பலத்தை சிரிய அரசு பிரயோகித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி மக்கள்.
சமூக விரோதிகளையும், ரவுடிகளையும் எனது அரசு வேரறுக்கும் ஜெயலலிதா!
தமிழகத்தில் ரவுடிகள், சமூக விரோதிகள், நில அபகரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறைக்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அரசின் முக்கியத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் மிக முக்கிய பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உள்ளது. மேலும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை காவல்துறை அதிகாரிகளுக்கு உள்ளது. இதன் காரணமாக இவர்களை அவ்வப்போது நேரில் அழைத்து மாநாடு நடத்துவது மாநில முதல்வர்களின் வழக்கமாகும். அந்த வகையில் முதல்வராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இந்த மாநாட்டுக்கு ஜெயலலிதா ஏற்பாடு செய்துள்ளார். இன்றும், நாளையும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் மாநாட்டு அரங்கில் இந்த மாநாடு இன்று தொடங்கியது. தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி தொடக்க உரை நிகழ்த்தினார்.
ஜெயலலிதா தனது பேச்சின்போது குறிப்பிட்ட சில முக்கிய அம்சங்கள்: மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களாகிய உங்களுடன் உரையாடுவது குறித்து மகிழ்ச்சி. மக்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து கொள்வதற்குரிய சூழலை உருவாக்குவதற்கு இந்த மாநாட்டில் நடைபெறும் விவாதங்களும் மேற்கொள்ளப்படும். உறுதியான அணுகுமுறைகள் உதவும். ஒவ்வொரு முறையும் நான் ஆட்சி பொறுப்பை ஏற்கும் போது நிர்வாகத்தை சீரமைக்கவும், சமூக, பொருளாதார, நிதிக்கட்டுப்பாடுகளை ஏற்படுத்தவும் நான் சீர்திருத்தங்களை மேற்கொள்வது வழக்கம். இது எனது அரசின் நிர்வாக சிறப்புக்கு முத்திரை பதிப்பதாகும். இந்த அரசு தூய்மையான, ஒளிமறைவற்ற, திறமையான, பொறுப்பான நிர்வாகத்தை அளிக்க இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. தமிழக மக்கள் என் மீது தங்கள் நம்பிக்கையை தெரிவித்து அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு தீர்க்கமான முடிவை அளித்திருக்கிறர்கள்.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்: மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்பது எனது கனவாகும். ஏழை மற்றும் கீழ்தட்டில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை அளித்து அவர்கள் மரியாதைக்குரிய வாழ்க்கையை பெற்றிட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. சட்ட ஒழுங்கை திறமையாக பராமரிப்பது, மக்கள் பணிகளை திறமையாக நிறைவேற்றுவது, விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது, அடிப்படை வசதிகளை உருவாக்குவது, பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவது மேலும் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவது ஆகியவை இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும்.
சமூக விரோத சக்திகளையும், ரவடிகளையும் ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பு செய்தவர்கள் மீது விரைவாகவும், கடுமையாகவும் எடுத்துள்ள நடவடிக்கை மாநில அரசின் மீதும், காவல்துறை மீதும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. சட்ட நடவடிக்கைகள்படி அந்த நிலங்களை உரியவர்களுக்கு ஒப்படைக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனது முந்தைய ஆட்சி காலங்களில் தமிழக காவல்துறை சிறப்பான முறையில் பணியாற்றி வந்துள்ளது. நான் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு அனைத்து பிரச்சனைகளையும் அச்சமின்றி நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு சுதந்திரம் அளித்தேன். தீவிரவாதம், நக்சலைட் போன்றவற்றால் நமது சமுதாயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நான் எப்போதுமே பயங்கரவாதத்தை திறமையாக ஒடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வந்துள்ளேன். நமது சமுதாயத்தில் பிரிவினை சக்திகள் வளரவிடக்கூடாது என்றும் உறுதிபட நடவடிக்கை எடுத்து வந்துள்ளேன். பயங்கரவாதம் மற்றும் அடிப்படை வாதம் தலைதூக்காமல் இருப்பதற்கு நமது உளவுத்துறை வலுப்படுத்தப்பட வேண்டும். சட்ட ஒழுங்கை நிலை நாட்டும்போது சிறிய சம்பவங்களை கூட துச்சமாக கருதிவிடக்கூடாது. அத்தகைய சிறிய சம்பவங்கள் ஒரு வகுப்பு மோதலாகவோ, ஜாதி மோதலாகவோ உருவெடுக்கலாம். இத்தகைய நிலையை நீங்கள் விழிப்புடன் இருந்து திறமையாக கையாளுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காவல்துறையினருக்கு அவ்வப்போது பயிற்சி அளித்து நவீன ஆயுதங்களையும், தொலைத் தொடர்பு சாதனங்களையும் அளிப்பது அவசியம். கடந்த காலங்களில் இதற்கு அளிக்கப்பட்ட முன்னுரிமையை இப்போதும் எனது அரசு வழங்கும். சிறந்த நிர்வாகத்தை அளிக்க வேண்டும் என்ற லட்சியத்தை அடைவதற்கு தடையாக இருப்பது ஊழல். மாவட்ட தலைவர்கள் என்ற முறையில் கலெக்டர்களுக்கு இத்தகைய நிலையை உருவாக்குவதற்கு கடுமையான பொறுப்பு இருக்கிறது.
லஞ்ச ஊழலற்ற நிர்வாகம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகம் அரசிலும் எதிரொலிக்கும். எனவே மக்களுக்கு எதிர்பார்ப்புக்கிணங்க மாவட்ட கலெக்டர்கள் செயல்பட வேண்டும். விவசாயம், உள்ளாட்சி நிர்வாகம், சுகாதாரம், கல்வி, நலத்திட்டங்கள், எஸ்.சி.எஸ்.டி, பின்தங்கியோர் மற்றும் மிகவும் பின்தங்கியோர் ஆகியோருக்கு முன்னரிமை அளிக்கப்பட்டுள்ளது.வறுமை ஒழிப்பு, அடிப்படை வசதிகளில் கிராமப்புறங்களுக்கும் நகர்புறங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைத்தல், ஆண் பெண் ஆகியோரை சமமாக நடத்துதல், திறமையை வளர்ப்பது, வேலையை உருவாக்குவது ஆகியவற்றுக்கு அரசு முன்னுரிமை அளிக்கும். நான் முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு எடுத்துரைத்திருக்கிறேன். இவற்றை திறம்பட செயல்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன். அதிகாரிகள் தங்களுடைய எண்ணங்களை சுருக்கமாக குறிப்பிட வேண்டும். எதிர்காலத்தில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தை முன் மாநிலமாக பின்பற்றக்கூடிய அளவுக்கு சிறந்த நிர்வாகத்தை அளிக்க நான் திட்டமிட்டிருக்கிறேன். அதிகாரிகள் இதனை உருவாக்குவதற்கு முழுமையாக பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.
ராகுல், சோனியாவுக்கு ஓட்டு இல்லை கருத்துக்கணிப்பில் மக்கள்!
லோக்பால் மசோதா தொடர்பாக,சோனியா, ராகுல் தொகுதி உட்பட பல லோக்சபா தொகுதிகளில், அன்னா ஹசாரே அணியினர் நடத்திய கருத்துக் கணிப்பில், மசோதாவுக்கு ஆதரவாக ஏராளமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ஊழலை ஒழிக்க பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என, வலியுறுத்தி வரும் அன்னா ஹசாரே அணியினர், தங்களின் கோரிக்கைக்கு மக்களிடம் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக, காங்., தலைவர் சோனியாவின் ரேபரேலி தொகுதி, ராகுலின் அமேதி தொகுதி உட்பட பல லோக்சபா தொகுதி மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தினர். இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், மத்திய அரசு விரைவில், பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்றா விட்டால், தங்களின் தொகுதியின் காங்., எம்.பி.,க்கு அடுத்த முறை ஓட்டு போடுவதில்லை என, பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அன்னா ஹசாரே அணியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா கூறியதாவது: நாடு முழுவதும் பல லோக்சபா தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், பலமான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என, மக்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹசாரேயின் மசோதாவுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆதரவு தராவிட்டால், அவருக்கு அடுத்த முறை ஓட்டுப் போட மாட்டோம். அவரை எம்.பி.,யாகத் தேர்வு செய்ய மாட்டோம் என, அவரது தொகுதியைச் சேர்ந்த 99 சதவீத வாக்காளர்கள் கூறியுள்ளனர். ராகுலின் அமேதி தொகுதியிலும், இதேபோல், 98 சதவீதத்தினர், பலமான லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தந்துள்ளனர்.இவ்வாறு சிசோடியா கூறினார்.பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடர் விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில், அன்னா ஹசாரே அணியினரின் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே ஆசிரியர் தேர்வு!
தொடக்கக் கல்வி இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நடைபெறும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொடக்கக் கல்வியில் உள்ள 1,743 காலியிடங்களுக்கான தேர்வு குறித்து, கடந்த 9ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தேர்வு, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நடைபெறும். ஏற்கனவே, மொழி மற்றும் இனவாரியாக இறுதி மூப்பு தேதியுடன் பெறப்பட்ட, பணிநாடுனர்கள் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பங்களை பெறலாம். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், விண்ணப்பம் வேண்டுவோரின் பெயர், வேலை வாய்ப்பகத்திலிருந்து பெறப்பட்ட பட்டியலில் உள்ளதை உறுதி செய்தபின், விண்ணப்பப் படிவம் வழங்கப்படும். இந்த இறுதி மூப்பு தேதி பட்டியல், அந்தந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருக்கும். விண்ணப்பங்களை, நவம்பர் 15 முதல் எவ்வித கட்டணம் ஏதுமின்றி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 23ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லேடி ககாவுக்கு செக்ஸ் மாற்று அறுவை சிகிச்சை !
அமெரிக்காவின் பிரபல பாப்பாடகி லேடி ககா. கவர்ச்சி பாடகியான இவர் சமீபத்தில் தான் பாட்டு பாடி நடித்த “மேரி தி நைட்” என்ற வீடியோவை ரிலீஸ் செய்தார். அப்போது அவரது வித்தியாசமான “போஸ்” அடங்கிய போட்டோக்கள் வெளியிடப்பட்டன. அதில் அவர் ஆஸ்பத்திரி தள்ளு வண்டியில் (“ஸ்ட்ரெச்சர்”) படுத்து இருப்பது போன்று இருந்தது. அது அவர் “செக்ஸ்” மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்ற வதந்தியை பரப்பியுள்ளது.ஏனெனில் சமீபத்தில் இவர் தனது ரசிகர்களுக்கு ஒரு செய்தி வெளியிட்டு இருந்தார்.அதில், "உங்களுக்கு எப்போதும் சொல்லாத தகவலை வெளியிடப்போகிறேன். அது அருவெறுக்க தக்க உண்மையாக இருக்கலாம்" என தெரிவித்து இருந்தார். அதை வைத்து இவர் செக்ஸ் மாற்று ஆபரேசன் செய்து இருக்கலாம் என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். கடந்த 2009-ம் ஆண்டு முதல் இவர் வித்தியாசமான முறையில் உடைகளை அணிந்து தோன்றி வருவதான் இந்த வதந்தியை உண்மை என நம்பகத்தோன்றுவதாக இவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்
அப்துல்கலாமுக்கு அவமரியாதை: அமெரிக்காவுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா எச்சரிக்கை!
நியூயார்க் விமான நிலையத்தில் அவரது கோட், ஷீவை கழற்றி வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து இருந்தது. வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா இந்த சம்பவம் தொடர்பாக, ’’அப்துல்கலாமிடம் சோதனை செய்யப்பட்டதை ஏற்றுக் கொள்ள இயலாது. இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் நிறுத்தப்படா விட்டால் அமெரிக்க உயர் அதிகாரிகளையும் நாங்கள் சோதனைக்கு உட்படுத்துவோம்’’என்று கூறியுள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபாமாவை எஸ்.எம்.கிருஷ்ணா தொடர்பு கொண்டு இந்த பிரச்சினையை அமெரிக்க அரசின் உயர்மட்ட நிலைக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி உள்ளார்.
மன்னிப்பு கேட்டது அமெரிக்கா: அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் பாதுகாப்பு என்ற பெயரில் அவரிடம் சோதனை நடத்திய அதிகாரிகள் கலாமின் கோட் மற்றும் ஷூவை பிடுங்கி சென்று எதுவுமில்லை என்று மீண்டும் திரும்ப ஓப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு கடும் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. யார் இவர் என கேட்டு தொடர்ந்து அவரிடம் சோதனை நடத்த வேண்டும் என்றனர். இவர் இந்தியாவின் ஜனாதிபதி அப்துதுல்கலாம் இவரிடம் சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என உடன் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது.
கண்டுகொள்ளவில்லை. கலாமின் கோட் சூட் மற்றும் ஷூக்ககளை பிடுங்கி சென்றனர். சில நிமிடங்கள் கழித்து சோதனை முடிந்தது கொண்டு செல்லுங்கள் என கொடுத்தனர். இதற்கு கலாம் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. வெடிபொருட்கள் இருக்கிறதா என்று சோதனை நடத்தப்பட்டதாம். மத்திய அரசு இந்த விஷயத்தை மிக சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கலாமை பொறுத்த வரையில் இது போன் அமெரிக்க அதிகாரிகளின் கெடுபிடிக்கு 2 வது முறை ஆளாகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க விமானம் ஒன்று டில்லியில் இருந்து கிளம்பும்போதும் இவரிடம் கெடுபிடிகள் காட்டப்பட்டது. இதற்கு எதிர்கட்சியினர் பார்லிமெண்ட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்’’ என்று தெரிவிக்கின்றது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க குடியேற்ற துறை அலுவலகம் மன்னிப்பு கேட்டதாகவும், இது தொடர்பான மத்திய அரசு அதிகாரிக்கு அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...!
உலகின் மூத்த மொழி தமிழ். தமிழின் எழுத்துக்கள் முதலில் பதியப்பட்டது பனைஓலையில்தான். இத்தையை முக்கியத்துவம் வாய்ந்த பனைமரத்தின் உயிருக்கு இன்று ஆபத்து நேர்ந்திருக்கிறது. பனைமரம் தமிழர்களின் அடையாளம், தமிழர் வாழும் பகுதிகளில் மட்டுமே பனைமரங்களும் வாழுகிறது அல்லது தமிழர்களின் மூதாதையர்கள் வாழும் பகுதியில் மட்டுமே பனைமரங்களும் இருக்கின்றது. தமிழகத்தில், மலேசியாவில், ஈழத்தில், மோரீசியஸ் தீவில், தென்னாப்பிரிக்காவில் என்று தமிழர்கள் வாழும் இடங்களில் மட்டுமே பனைமரமும் வளருகிறது.
இலங்கையில் பனை வளர்ச்சித்துறை என்று ஒரு துறையும் அதற்கு தனி ஒரு அமைச்சரையே நியமனம் செய்து பனை மரத்தின் பயனை மக்களுக்கு கொடுக்கிறது இலங்கை அரசு. மலேசியாவில், பனை மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணை இன்று உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் உணவு எண்ணையாக பயன்படுகிறது. பாம்ஆயில் என்று சொல்லப்படும் இந்த எண்ணை தான் நம் ஊரில் கிடைக்கும் அனைத்து என்னையிலும் கலந்துள்ளது.சங்க காலம் முதல், தமிழரின் வாழ்வில் பனைமரம் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனங்கருக்கு என்று சொல்லப்படும், சிறு மரங்களை உடைக்கும் போது அதில் கிடைக்கும் பச்சை குருத்து உண்பதற்கு சுவையாகவும் சத்தானதாகவும் இருக்கும்.கொஞ்சம் வளர்ந்து பனை மரமானதும் அதில் கிடைக்கும் பனை ஓலை, வீடுகள் மேயவும், படுப்பதற்கும், உட்காருவதற்கும், பண்டங்கள் கட்டுவதற்கும் தேவையான பாய்கள் செய்ய பயன்பட்டது. கடுமையான வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக இந்த பனை ஒலைகள் கொடுக்கப்பட்டு வந்தது. இப்போதும் கூட பனை ஓலையில் செய்யப்பட்ட விசிறிகளில் வீசும் போது குளுமையான காற்று கிடைக்கும்.
பனைமரம் பாலை விட்டு காய்க்க தொடங்கினால், அந்த பாலையிளிருந்து பதநீர் எனும் தெலுவு கிடைக்கும், அதே தெலுவில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால் அது சுவையானதாகவும், அதே நேரம் கொஞ்சம் போதையுடன் கூடிய இயற்கையான கள் என்ற பானம் கிடைக்கும்.கொஞ்சநாள் கள்ளு இறக்கிய பின்னர் வளரும் பாளையில், பனங்காய் காய்க்கும், இந்த காய்களில் தான் குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும்.அதற்கு அடுத்த கட்டமாக, காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும் முற்றிய பணங்காயிலிருந்து சதை பகுதியை கத்தியால் சீவி எடுத்து வேகவைத்து உண்ணலாம். அதற்கு பின்னர், பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும், பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும், கொஞ்ச நாட்கள் போனால் கொட்டைக்குள் உருவாகும் சீப்பை கிடைக்கும், இந்த சீப்பை குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும்.
அதை இன்னும் கொஞ்சநாள் விட்டால் பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இப்படி மனித வாழ்வில் உணவுத் தேவைக்கு மட்டுமில்லாமல், வீடுகள் கட்ட வெட்டுக்கை, விட்டம், ஓடுகள் பாதிக்கும், பனை வாரைகள் கொடுத்தது பனைமரம்.பனை மரத்திலிருந்து அறுத்து எடுக்கப்படும் பனம்பட்டையை வெய்யலில் கொஞ்சம் வாடிய பின்னர் உரித்து எடுக்கப்படும் நார் முன்பு கட்டுகள் கட்டவும், கால்நடை தீவனங்கள் கட்டி அடுக்கிவைப்பதர்க்கும், ஓலை வீடுகளை அமைக்கவும், பண்டங்கள் கட்டுப்போட்டவும் நார் பயன்பட்டது. நம் வீட்டு பெண்கள் விறகு அடுப்பில் சமையல் செய்த காலங்களில், அடுப்பில் நெருப்பு பத்தவைக்க பெண்களுக்கு பனை மரத்தின் பன்னாடையும், வரண்டு போன ஓலைகளும் அவசியம் இருக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. காய்ந்து போன பனம்பட்டைகள், காய்ந்து போன நொங்கு காய்களும் அடுப்பு எரிக்க சிறந்த விறகாகப் பயண்பட்டது.
இப்படி மனித வாழ்கையின் ஒரு அங்கமாக இருந்த பனைமரம்... சமீபகாலத்தில் உருவாகிய இரும்பு, சனல், நைலான், எரிவாயு போன்ற நவீன சாதனங்கள் தோன்றியதால்... இக்கால மனிதர்களுக்கு பனைமரத்தின் அவசியமே இல்லாமல் போய்விட்டது. எத்தனை வருடமானாலும் தண்ணீர் இல்லாமலேயே வளரும் தனமையுடைய பனைமரம், காடு, தோட்டம் என வித்தியாசம் இல்லாமல் வயல் ஓரங்களிலும், வேலி ஓரங்களிலும் விவசாயிகள் வைத்து வளர்த்தார்கள். சமீப காலமாக இதன் பயன்பாடு இல்லாமல் போனதாலும், வருடம் ஒருமுறை பனைமரத்தில் வளர்ந்துள்ள ஓலைகளை வெட்டி, பட்டையை அறுத்து சுத்தம் செய்து சிரை எடுத்து விடுவதற்கு மட்டும் ஒரு மரத்திற்கு ஐம்பது ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. அப்படி சிரை எடுக்காவிட்டால், மரத்தில் உள்ள பட்டைகள் எல்லாம் வரண்டு காய்ந்து இலை தலைகள் விழுந்து பனைமரத்திலேயே தொங்குவதால், பாம்புகள் கூட குடியிருக்க தொடங்கிவிடும் ஆபத்து உள்ளது. பெரும்பாலும் அணில், எலி போன்றவைகள் கூடு கட்டிவிட்டால் அதில் இருந்து கொண்டு நிலத்தில் விளையும் தானியக் கதிர்களை வெட்டிக் கொண்டுபோய் விடும் என்பதால் பனைமரத்தில் ஓலையை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சூழலில் பனைமரங்களை வளர்க்கும், எந்த ஒரு விவசாயிக்கும் பனைமரத்தால் எந்தவித பயனும் கிடையாது, ஆனால் வருடத்திற்கு ஒரு மரத்திற்கு குறைந்தது ஐம்பது ரூபாயாவது செலவு செய்தால் தான், பனைமரத்தை சுத்தமாக வைத்திருக்க முடியும் என்ற நிலை உள்ளது. இவ்வளவு செலவு செய்தாலும், ஐம்பது அறுபது வருடம் வளர்ந்த ஒரு பனைமரத்தை வியாபாரியிடம் விற்றால் இருநூறு ரூபாய் முதல் முன்னூறு ரூபாய் வறை மட்டுமே காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு பனை மரத்துக்கும் விவசாயி செய்துள்ள செலவை கணக்கிட்டால் இந்த காசு எதற்கும் உதவாது என்பதால், எல்லா இடங்களிலும் உள்ள பனைமரங்களை விவசாயிகள் வெட்டி செங்கல் சூளைக்கு அனுப்பி வருகிறார்கள். நகரங்களில், ஒரு பக்கம் மரம் வைக்கவும், அவற்றை வளர்க்கவும் அரசு பல கோடி ரூபாய்களை செலவு செய்கிறது. ஆனால், மறுபக்கம் கிராமங்களில் உள்ள விவசாயிகள், தாங்கள் நிலங்களில் உள்ள கெட்டுப்போன கரியமிலவாயு போன்ற காற்றை சுத்தமான தூய பிரானவாயுவாக மாற்றிக்கொண்டிருக்கும் கற்பகவிருச்சமான பனை மரங்களை கட்டுபடியாகாத விலைக்கு வெட்டி விற்பனை செய்கிறார்கள்.
இந்த முரண்பாட்டின் காரணம் என்ன...? இயற்கை ஆர்வலரும், மரங்கள் பற்றிய ஆய்வாளரும், கீழ் பவாணி பாசன விவசாயிகள் சங்க தலைவருமான நல்லசாமி அவர்களிடம் கேட்டோம்.முதலில் ஒரு மரம் என்று இருந்தால், அதில் எதாவது உபயோகம் இருக்கவேண்டும்..., பனை மரத்தால் இன்றைய காலகட்டத்தில் உழவர்களுக்கு எந்த நேரடியான பயனும் கிடையாது, தவிர அவர்களுக்கு செலவுகள் தான் வருகிறது. அதனால் பனைமரங்களை வெட்டி விற்கிறார்கள். அதை எப்படி தடுப்பது...? அந்த மரத்தில் எதாவது லாபம் கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும், அதற்கு ஒரே வழி... கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.இதனால், பனைமரமும் வளரும், பனைமரம் வளர்க்கும் விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும், எந்த விதமான இரசாயன கலப்பும் இல்லாத, அருந்தும் மனிதனின் குடலையும், வயிற்றையும் வேகவைக்காத... மிகவும் குறைவான போதையை கொடுக்கும், சத்தான கள்ளும் கிடைக்கும், கள் என்பது போதை பொருள் அல்ல... அது ஒரு வகை உணவுப்பொருள் தான்... அதை மது என்ற சொல்லுவதே தவறு... இன்றைக்கு, இயற்கையான முறையில் உரம், யூரியா போடாத வயலில் விளைந்த நெல் என்றும் காய்கறி என்றும் சொன்னால் அதைத்தான் மக்கள் ஓடிப்போய் வரிசையில் நின்று வாங்குகிறார்கள். மக்களுக்கு இயற்கையின் மீது நம்பிக்கையும், செயற்கையின் மீது பயமும் வந்து விட்டது. இதற்க்கு காரணம் மனிதருக்கு வரும் புதிய புதிய நோய் தான்.நோயுக்கு பயந்து இயற்கையின் பக்கம் போகும் மக்களுக்கு ஓன்று சொல்லுகிறேன், ஒரு துளி கூட பூச்சி மருந்து அடிக்காமல், உரம் போடாமல் சொல்லப்போனால் தண்ணீர் கூட விடாமல், சத்தான எருவும் போடாமல் இயற்கையில் தானாக விளையும் ஒரு காமதேனு பனை மரத்தில் உற்பத்தியாகும் பணம் பால் தான். அதை நம்முடைய மக்கள் குடிக விடாமல் பன்னாட்டு நிறுவனங்கள், நம்மூர் அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் தரகர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கையூட்டு கொடுத்து நம் நாட்டிலேயே நம்முடைய மரத்தில் விளையும் பணம்பாலுக்கு தடை வாங்கி கொடுத்துள்ளார்கள்.
கள் குடிப்பதால் உடலுக்கு தீமை என்று யார் நிரூபித்தாலும் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக குடுக்க கள் இயக்கம் தயாராக உள்ளது. தமிழகத்தில் கள் இறக்கி விற்கவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல..., தமிழகத்தில் இறக்கப்படும் கள்ளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவாவது அரசு முன்வரவேண்டும்.பனை மரத்தின் அவசியத்தை வலியுறுத்தி வரும் ஜனவரியில் கன்னியாகுமரி முதல் சென்னை வறை ஒரு பிரசார இயக்கம் தொடங்கி நடை பயணம் செல்ல ஏற்பாடு செயப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், பனைத் தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பனை மரத்தின் அவசியம் பற்றி மக்களுக்கு சொல்ல இருக்கிறார்கள். இந்தியாவில் எட்டுக்கோடி பனைமரங்கள் இருப்பதாக கணக்கிடபட்டுள்ளது, அதில் ஐந்து கோடி பனைமரங்கள் தமிழகத்தில் தான் உள்ளன.... தமிழ நாட்டில், எதை இழந்தாலும் பனை மரத்த காப்பாற்றியாக வேண்டும் என்றார் நல்லசாமி. சரிதான் அது. பனை என்பது வெறும் மரம் மட்டுமல்ல.... தமிழரின் அடையாளம்.
ராணா ஷூட்டிங் நாளை முதல்!
ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம் ‘எந்திரன்’. இதையடுத்து ‘ராணா’ படத்தில் நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். ரஜினி மகள் சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடந்தபோது ரஜினிக்கு உடல் நலம் குன்றியது. இதையடுத்து சென்னை மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சில நாட்களுக்கு முன் ஷாருக்கானின் ‘ரா ஒன்’ படத்திற்காக சில மணி நேரம் நடித்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் சென்னையில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினி கலந்துகொண்டார். அப்போது, ‘சிவாஜி, கமல்ஹாசன் போல் எனக்கு நடிப்பு திறமை கிடையாது. எனது பலமே என்னுடைய வேகம். உடலில் வேகம் இருக்கும் வரை நடிப்பேன்’ என்றார். இந்நிலையில் ‘ராணா’ பட ஷூட்டிங் பெங்களூரில் 3 நாட்கள் நடக்கிறது. அங்கு நைஸ் ரோடில் நடக்கும் படப்பிடிப்புக்காக நேற்றிரவு விமானத்தில் ரஜினி பெங்களூர் புறப்பட்டு சென்றார். 13ம் தேதி முதல் 15ம் தேதி ஷூட்டிங் நடக்கிறது. தீபிகா படுகோனுடனான காட்சிகள் கடைசி 2 நாட்கள் படமாக்கப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இப்படத்திற்காக ரஜினி தங்கும் வழக்கமான ஓட்டல் முழுவதும் படப்பிடிப்புக் குழுவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.5 கோடி மதிப்பில் பென்ட்லி கன்டினட்டல் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் கார்கள் பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மருத்துவ உதவியாளர்கள் தேர்வு!
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 15ம் தேதி 108 ஆம்புலன்ஸ் சேவை க்கு மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. 108 இலவச ஆம்புல ன்ஸ் சேவையில் பணியா ற்ற மருத்துவ உதவியாளர் கள் தேவைப்படுகின்ற னர். இதற்காக வரும் 15ம் தேதி திண்டுக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆட்கள் தேர்வு செய்யப் பட உள்ளனர். இதற்கு பிஎஸ்சி பாட் டனி, சுவாலஜி, மைக்ரோபயா லஜி, பயோகெமிஸ் ட்ரி, கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், லைப் சயின்ஸ், நர்சிங் அல்லது ஜிஎன்எம் (பிள ஸ்2வுக்கு பிறகு 3 ஆண்டு கள் நர்சிங் படித்திருக்க வேண்டும்) படித்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது 21 முதல் 30க் குள் இருக்க வேண்டும்.. ஆண், பெண் இருபா லா ரும் கலந்து கொள்ளலாம். அனுபவம் தேவையில்லை. எழுத்துத்தேர்வு, மரு த்துவ நேர்முகம், மனிதவளத் துறையின் நேர்முகம் என்று மூன்று பிரிவாக தேர்வுகள் நடை பெறும். ஊதியம் ரூ.7 ஆயிரத்து 250. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 45 நாட்கள் முழு மையான வகுப்பறைப் பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் மாத ஊக்கத்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். தங்கும் வசதி மற்றும் தினசரி உணவிற்காக ரூ.100படியும் வழங்கப்படும். 12 மணி நேர ஷிப்ட் முறையில் பணியாற்ற வேண்டும். தமிழகத்தின் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பப்படுவர். தேர்வு செய்யப்பட்ட அன்றே பணி நியமன ஆணை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 9629038108 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி குடும்பம் வறுமையில்!
தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகியான மறைந்த டி.பி.ராஜலட்சுமிக்கு நேற்று 100வது பிறந்த நாள். தமிழ் சினிமாவில் பல சாதனைகள் படைத்தவர். ஆனால் இன்று அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது. இது பற்றி அவரது மகள் கமலா மோனி, ’’எனது தாயார் ராஜலட்சுமி, 1911ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பிறந்தார். வறுமையில் வாடியே தனது 55 வயதில் அவர் இறந்தார். முதல் பெண் இயக்குனரான அவர், பாடல், கதை, படம் தயாரிப்பு, நடிப்பு என பல துறையில் சிறந்து விளங்கினார். முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ படத்தில் ஹீரோயினாக நடித்தார். ‘மிஸ் மாலினி’, ‘மதுரை வீரன்’ படங்களில் அவரது திறமை பாராட்டப்பெற்றது.
தாத்தா திருவையாறு பஞ்சாபிகேச சாஸ்திரிகள் இறந்த பிறகு, குடும்பம் வறுமையில் வாடியது. குடும்பத்தை காப்பாற்ற நாடகத்தில் நடித்தார். இது அவரது கணவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். சங்கரதாஸ் சுவாமிகள்தான் அம்மாவை நாடக மேடை நடிகையாக அறிமுகப்படுத்தினார். தேச பக்தி பாடல்களை அம்மா மேடைகளில் பாடுவார். இதனால் அவரை வெள்ளையர்கள் சிறையில் அடைத்தனர். நாடக குழுவினர் தான் சிறையிலிருந்து மீட்டார்கள். இது அடிக்கடி நடக்கும். சம்பாதித்த பணம், சொத்து எல்லாவற்றையும் சினிமா தயாரிப்பிலும் தனது குடும்பத்தினருக்குமே செலவு செய்து இழந்தார்.
வறுமை வாட்டியபோது ‘கலைமாமணி’ விருது கிடைத்தது. அதை உருக்கி தனது பேரனுக்கு தங்க சங்கிலி அணிவித்தார். மனஅழுத்தம், சர்க்கரைநோயால் 52 வயதில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். 1964ல் இறந்தார். இன்று அவரது குடும்பம் வறுமையில் இருக்கிறது. அவர் பிறந்த நூற்றாண்டு தினமான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அரசு அதிகாரிகள் சமீபத்தில் அவரைப்பற்றிய தகவல் மற்றும் போட்டோ சேகரித்து சென்றனர். அரசிடமிருந்து உதவி கிடைக்கும் என்ற எதிர்பார்க்கிறோம்’’ என்று கூறினார்.
Subscribe to:
Posts (Atom)