ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம் ‘எந்திரன்’. இதையடுத்து ‘ராணா’ படத்தில் நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். ரஜினி மகள் சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடந்தபோது ரஜினிக்கு உடல் நலம் குன்றியது. இதையடுத்து சென்னை மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சில நாட்களுக்கு முன் ஷாருக்கானின் ‘ரா ஒன்’ படத்திற்காக சில மணி நேரம் நடித்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் சென்னையில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினி கலந்துகொண்டார். அப்போது, ‘சிவாஜி, கமல்ஹாசன் போல் எனக்கு நடிப்பு திறமை கிடையாது. எனது பலமே என்னுடைய வேகம். உடலில் வேகம் இருக்கும் வரை நடிப்பேன்’ என்றார். இந்நிலையில் ‘ராணா’ பட ஷூட்டிங் பெங்களூரில் 3 நாட்கள் நடக்கிறது. அங்கு நைஸ் ரோடில் நடக்கும் படப்பிடிப்புக்காக நேற்றிரவு விமானத்தில் ரஜினி பெங்களூர் புறப்பட்டு சென்றார். 13ம் தேதி முதல் 15ம் தேதி ஷூட்டிங் நடக்கிறது. தீபிகா படுகோனுடனான காட்சிகள் கடைசி 2 நாட்கள் படமாக்கப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இப்படத்திற்காக ரஜினி தங்கும் வழக்கமான ஓட்டல் முழுவதும் படப்பிடிப்புக் குழுவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.5 கோடி மதிப்பில் பென்ட்லி கன்டினட்டல் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் கார்கள் பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment