ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
07 May, 2012
நிவேதனப் பெயர்களை தெரிந்து கொண்டு பூஜை
வீட்டில் பூஜைகள் நிவேதனப் பெயர்களை தெரிந்து கொண்டு பூஜை செய்தால் சுலபமாக இருக்கும்.
1. கதலீபலம் - வாழைப்பழம்
2. பீஜாபூரபலம் - கொய்யாப்பழம்
3. வேத்ர பலம் - பெரப்பம் பழம்
4. பதரி பலம் - எலந்தைப் பழம்
5. கர்ஜுர பலம் - பேரிச்சம் பழம்
6. ஜம்பூ பலம் - நாவல் பழம்
7. கபித்த பலம் - விளாம் பழம்
8. த்ராஷா பலம் - திராøக்ஷ பழம்
9. சூ பழம் - மாம்பழம்
10. மாதுஸங்கபழம் - மாதுளம் பழம்
11. நாரங்கபலம் - நார்த்தம்பழம் அல்லது சாத்துக்குடி
12. பனஸ பலம் - பலாப் பழம்
13. உர்வாருகம் - வெள்ளரிக்காய்
14. ஜம்பீர பலம் - எலுமிச்சம் பழம்
15. இக்ஷúகண்டம் - கரும்பு
16. சணகம் - கடலை
17. ப்ருதுகம் - அவல்
18. ஸர்க்கரா - சர்க்கரை
19. ததி - தயிர்
20. குடோபஹாரம் - வெல்லம்
21. ஆப்பிள் - காஷ்மீர பலம்
22. அமிருதம் - தீர்த்தம்
23. நாரிகேளம் - தேங்காய்
24. ஸால்யன்னம் - சம்பா அன்னம்
25. குளா பூபம் - அதிரசம், அப்பம்
26. தத்யன்னம் - தயிர் சாதம்
27. திந்திரியன்னம் - புளியோதரை
28. ஸர்கரான்னம் - சர்க்கரை பொங்கல்
29. மாஷா பூபம் - வடை
30. ரஸகண்டம் - கற்கண்டு
31. மோதகம் - கொழுக்கட்டை
32. திலான்னம் - எள்ளு சாதம்
33. ஆஜ்யோபகாரம் - நெய்
34. லட்டூகம் - லட்டு
35. சித்ரான்னம் - பலவகை கலந்த சாதம்
36. நாரிகேளகண்டத்வயம் - இரண்டாக உடைத்த தேங்காய்
37. க்ருதகுள பாயஸம் - வெல்லம் போட்ட பாயஸம்
38. கோக்ஷீரம் - பசும் பால்
ருதுக்கள் சித்திரை, வைகாசி - வஸந்த ருது ஆனி, ஆடி - க்ரீஷ்ம ருது ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது மார்கழி, தை - ஹேமந்த ருது மாசி, பங்குனி - சிசிர ருது கிழமைகளைச் சொல்லும் முறை ஞாயிறு - பானு வாஸர திங்கள் - இந்து வாஸர செவ்வாய் - பவும வாஸர புதன் - சவும்ய வாஸர வியாழன் - குரு வாஸர வெள்ளி - ப்ருகு வாஸர சனி - ஸ்திர வாஸர பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை சித்திரை - மேஷ மாஸே வைகாசி - ரிஷப மாஸே ஆனி - மிதுன மாஸே ஆடி - கடக மாஸே ஆவணி - ஸிம்ம மாஸே புரட்டாசி - கன்யா மாஸே ஐப்பசி - துலா மாஸே கார்த்திகை - வ்ருச்சிக மாஸே மார்கழி - தனுர் மாஸே தை - மகர மாஸே மாசி - கும்ப மாஸே பங்குனி - மீன மாஸே.
இதே நாள்...
- நார்வே தேசிய தினம்
- வங்காள மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்(1861)
- சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் இறந்த தினம்(1539)
- ஐரோப்பிய அமைப்பு உருவாக்கப்பட்டது(1948)
- சோனி நிறுவனம் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது(1946)
அணுகுண்டு தாக்குதல் காரணமாக வரும் கேடுகளை விட மிக கொடூரமானது !
நாட்டில் சாதாரணமாக பயன்பாட்டிற்கு வந்துள்ள பிளாஸ்டிக் பைகள் பெரும் கேட்டை ஏற்படுத்தும் என்றும், இதனை இப்படியே விட்டு விட்டால் எதிர்கால சந்ததியினரையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கும் என்றும், அணுகுண்டு தாக்குதல் காரணமாக வரும் கேடுகளை விட மிக கொடூரமானது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பில் மத்திய ,மாநில அரசின் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு உள்ளது என விளக்கம் அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பியது.எந்த வொரு பொருளை எடுத்தாலும் பிளாஸ்டிக் கவரேஜ் இல்லாமல் இல்லை என்ற அளவிற்கு இது மக்கள் பயன்பாட்டில் ஆக்கிரமித்துள்ளது. இதன் காரணமாக நீர்நிலைகள், பூமியின் ஆதாரம் சீரழியும் என பல்வேறு நிபுணர்கள் எடுத்து சொல்லியும் யாரும் இதனை அலட்சியமாகவே எடுத்து கொள்கின்றனர். பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க நாட்டில் விழிப்புணர்வு பிரசாரம் கடலில் கரைத்த காயமாகவே இருக்கிறது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலவழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞரும், சமூகஆர்வலருமான ஷியான்திவான் ஆஜராகி வாதிட்டார். இவரது வாதுரையில் ; இந்த பிளாஸ்டிக் பைகள் மூலம் ஏற்படும் கெடுதல் குறித்த ஆய்வு அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளேன். சாதாரணமாக பொதுமக்கள் உணவு பொருட்கள் வாங்கும் போது இந்த பிளாஸ்டிக் பயன்பாடுகள் அதிகம் உள்ளன. மக்கள் சாப்பிடும் போது இதில் உள்ள கண்ணுக்கு தெரியாத கிருமிகள் பல்வேறு கொடூர நோய்களை உருவாக்குகிறது. சாப்பிட்டு முனிசிபால் குப்பை தொட்டியில் வீசி விடுகின்றனர். இதனை உண்ண வரும் கால்நடைகள் வயிற்றுக்குள் இந்த பிளாஸ்டிக் சென்று விடுகிறது. சமீபத்திய கால்நடை ஆராய்ச்சியில் மொத்தம் ஆடு மாடுகள் வயிற்றில் இருந்து 30 முதல் 50 கிலோ வரை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். சிங்வி மற்றும் முகோபாத்யயா இது குறித்து மத்திய மாநில அரசுகள் தங்களின் நிலைப்பாட்டை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர். மேலும் தங்களுடைய கருத்தில் அவர்கள் கூறுகையில்; இந்த பிளாஸ்டிக் உபயோகம், நகர் மற்றும் கிராம பகுதிகளை நாசமடைய செய்கிறது. குளம், ஆறு மற்றும் நிலத்தடி நீர் கடும் பாதிப்புக்குள்ளாகிறது. இதனை தற்போது ஒழிக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இது எதிர்கால சந்ததியினரையும் கடுமையாக பாதிக்கும். அணு குண்டு சேதத்தை விட கொடூரமானதாக அமையும் என்றும் எச்சரித்தனர். மேலும் மொத்தமாக ஒழித்தால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும் என்றும் தங்களுடைய கருத்தில் நீதிபதிகள் தெரிவித்தனர்,
54 வகை கேன்சர் வரும் : சமீபத்திய அமெரிக்க நிபுணர்கள் ஆராய்ச்சியில் பிளாஸ்டிக் பை உபயோகத்தின் மூலம் 54 வகை கேன்சர் நோய்கள் மனிதர்களுக்கு வரும் வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.
சத்ய மேவ ஜெயதே!
‘சத்ய மேவ ஜெயதே’ ரியாலிட்டி ஷோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பாலிவுட் நடிகர்கள் டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெறுவது புதிதல்ல. அமிதாப்பச்சன், சாருக்கான், சல்மான்கான், ஹிருரித் ரோஷான் போன்றவர்கள் வரிசையில் அமீர்கானும் இணைந்துள்ளார். சத்ய மேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியின் வழியாக அவரும் சின்னத்திரையில் தோன்றியுள்ளார்.மே 6 ம் தேதி ஞாயிறு காலை 11 மணிக்கு ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியிலும், டிடி 1 லும் ஒளிபரப்பாகிய இந்த நிகழ்ச்சியில் தனது வழக்கமான மேனரிசத்துடன் நேயர்களிடம் உரையாடினார் ஓபரே வின்ஸ்ப்ரே போல நிகழ்ச்சியை விறுவிறுப்பாகவும், போராடிக்காமலும் கொண்டு சென்றதாக நிகழ்ச்சியை கண்டு ரசித்த ரசிகர்கள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கான புரோமாஷன் போட்டது தொடங்கி சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றவைகளில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே முதல் நிகழ்ச்சியே பரபரப்பான விஷயம்தான். பெண் சிசுக்கொலை பற்றியும், கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தால் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற விவாதங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெண் சிசுக்கொலையை தடுப்பது எவ்வாறு என்பது பற்றியும் கூட இதில் நேர்மறையான தீர்வு தெரிவிக்கப்பட்டது.
கண்மூடித்தனமாக ஜாமீன் வழங்கக் கூடாது உச்சநீதிமன்றம்
கொலை வழக்கு ஒன்றில் ஒடிசா உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டோருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது. ஆனால் அவர்களை கீழ் நீதிமன்றம் முன்பாக சரணடையுமாறும், சரணடையும்போது தகுதியிருப்பதாக கருதினால், நிபந்தனை ஜாமீன் கொடுக்குமாறு கீழ் நீதிமன்றத்தை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு ஜாமீன் கிடைத்தது.இதை எதிர்த்து கொலையானவரின் சகோதரி ரஷ்மி ரேகா தட்டோய் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.உச்சநீதிமன்றத்தில் விசாரணைஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் அவசியமானதுதான். ஆனால் ஜாமீன் அளிக்கும்போது சட்ட விதிகளை நீதிமன்றங்கள் மீற முடியாது' என்று கூறினர்.
நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா பெஞ்ச் அளித்த தீர்ப்பு:குற்றம்சாட்டப்பட்டவர்கள் சரணடையும்போது அவர்களுக்கு தகுதியிருந்தால் நிபந்தனைகளுடன் ஜாமீன் அளிக்குமாறு உயர் நீதிமன்றங்கள் முந்தைய காலங்களில் உத்தரவிட்டதாக தெரியவில்லை. ஜாமீன் வழக்கில் மேல் நீதிமன்றங்கள் இது போன்று கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் தெரியவில்லை.முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுக்கும்போது, கைது நடவடிக்கையை தவிர்க்கும் விதமான பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உயர்நீதிமன்றத்தால் வழங்க முடியாது.இந்த வழக்கில் சட்ட விதிகளும், முந்தைய வழக்கில் வழங்கப்பட்ட மேற்கோள்களும் மீறப்பட்டுள்ளன. நீதிமன்றங்கள் கண்மூடித்தனமாக ஜாமீன் வழங்க முடியாது. இடைக்கால உத்தரவை மட்டுமே வழங்க முடியும். அதுவும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டே இடைக்கால உத்தரவை வழங்க முடியும்.சரணடைபவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூறும் உத்தரவு சட்டப்படி செல்லாது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதோடு, கீழ் நீதிமன்றங்களின் அதிகாரங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்று அவர்கள் தீர்ப்பளித்தனர்.
தனது மகள் MP ஆவதற்கு திமுகாவின் அரசியல்!
திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியின் அரசியல் எதிர்காலம், குறிப்பாக டெல்லி அரசியல் வாழ்க்கையின் அடுத்த கட்டம் காங்கிரஸ் கையில் இருப்பதாக அரசியல் அரங்கில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.திமுக தலைவர் கருணாநிதியின் அன்பு மகள் கனிமொழி தற்போது திமுக ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். கனிமொழி கடந்த 2007 ம் வருடம் ஜூன் மாதம் ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றார். இவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு (2013 ம் வருடம்) ஜூன் மாதம் முடிவுக்கு வருகின்றது.கனிமொழி மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக வேண்டும் என்றால் அதற்குரிய சட்ட மன்ற உறுப்பினர்கள் திமுக வசம் இல்லை. இதனால் அவர் மீண்டும் ராஜ்யசபா உறுப்பினர் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது.இந்தியாவையே உலுக்கிய 2ஜி வழக்கில் கனிமொழி சிக்கிய சமயத்தில் அவரை பாதுகாத்தது எம்.பி. பதவி தான் என்ற வாதம் அரசில்வாதிகள் மத்தியில் உள்ளது. இதனால் அவர் மீண்டும் எம்.பி. ஆனால் தான் 2 ஜி வழக்கில் அவருக்கு போதிய பாதுகாப்பு கிடைக்கும் என திமுக தரப்பு கணக்கு போடுகின்றது. இதனால் கனிமொழியின் ராஜ்யசபா உறுப்பினர் பதவி முக்கியத்துவம் பெறுகின்றது.
ஆனால் தற்போது தமிழகத்தில் போதிய எம்.எல்.ஏக்கள் பலம் திமுகவிடம் இல்லை. இந்த நிலையில்தான் குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் திமுகவுக்கு ஒரு சின்ன சான்ஸ் கிடைத்துள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்தேயாக வேண்டும் என்ற நிலையில் தி்முக உள்ளது. அப்படிச் செய்தால், கனிமொழியை மீண்டும் ராஜ்யசபாவுக்கு அனுப்ப காங்கிரஸ் கை கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு திமுகவிடம் உள்ளது. இதனால் காங்கிரஸ் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அதை திமுக ஆதரிக்கும் என்று கருதப்படுகிறது.இப்படிச் செய்வதன் மூலம் கனிமொழியை ராஜ்யசபாவுக்கு அனுப்ப காங்கிரஸ் உதவலாம். தமிழகத்திலிருந்து முடியாவிட்டால் காங்கிரஸ் நல்ல பலத்துடன் உள்ள வேறு எந்த மாநிலத்திலிருந்தாவது அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்க காங்கிரஸ் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம், காங்கிரஸை மட்டும் நம்பியிராமல் தமிழகத்திலேயே பிற அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறவும் திமுக ரகசியமாக செயல்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக விஜயகாந்த் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவற்றின் ஆதரவைப் பெறவும் திமுக ரகசியமாக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இப்போது தெரிகிறதா, புதுக்கோட்டையில் ஏன் திமுக போட்டியிடவில்லை என்று....!
நித்யானந்தாவால் இந்துக்கள் தலை நிமிர்ந்து ...?இந்து மகா சபா!
மதுரை ஆதீனம் மடத்திற்கு அகில பாரத இந்து மகா சபா தேசியத் தலைவர் சக்ரபாணி மகாராஜ், பொதுச் செயலாளர் இந்திரா திவாரி, தமிழ் மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியம் அடங்கிய குழு இன்று வந்தது.அவர்கள் மதுரை ஆதீனம் அருணகிரி நாதரையும், இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நித்யானந்தாவையும் சந்தித்துப் பேசினர். பின்னர் இந்தக் குழுவினர் நிருபர்களிடம் பேசுகையில்,நித்யானந்தர் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இந்து மதத்தை நல்ல முறையில் பரப்பி வருகிறார். இந்து மதம் தழைத்தோங்க பல்வேறு முயற்சிகளும் எடுத்து வருகிறார். அவரால் உலகில் உள்ள இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்.
அவர் நீடூழி வாழ்ந்து இந்து மதத்திற்கு இன்னமும் பல சாதனைகள் புரிய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறோம். இந்து மதத்தைப் பொறுத்தவரை யாராவது ஒருவர் நல்ல காரியம் செய்தால் சிலர் எதிர்ப்பது வாடிக்கைதான். அதுபோல நித்யானந்தரின் நடவடிக்கைகளை அவர் இந்து மதத்திற்கு ஆற்றி வரும் தொண்டுகளை பொறுக்க முடியாத சிலர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் இந்து மத விரோதிகள்.நித்யானந்தரின் தொண்டு தொடர எங்கள் அமைப்பு முழு ஆதரவு கொடுக்கும். நித்யானந்தர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் சிறு சிறு பிரச்சனைகள்தான். அவருக்கு உள்ள சக்தியில் இதெல்லாம் சாதாரண விஷயம்.மதுரை ஆதீனத்தை பிரச்சனையாக்க முயற்சிக்கும் மற்ற ஆதீனங்களின் செயல்களை வண்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களை இந்து மத விரோதிகளாக நாங்கள் பார்க்கிறோம் என்றனர்.
100வது சிக்ஸ் அடித்து கிறிஸ்கெய்ல் சாதனை!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி துவக்க வீரர் கிறிஸ் கெய்ல், இன்று 26 ரன்களை எடுத்து அவுட்டானார். ஆனால் இன்று 2 சிக்ஸ் அடித்த கிறிஸ் கெய்ல், ஐபிஎல் தொடர்களில் 100 சிக்ஸ்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.ஐபிஎல் 5 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துவக்க வீரர் கிறிஸ் கெய்ல். மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனான கிறிஸ் கெய்ல், அதிரடியாக ஆடி ரன்களை குவிப்பதில் வல்லவர். இதிலும் இவர் அடிக்கும் இமாலய சிக்ஸ்கள், ரசிகர்களுக்கு அதிக உற்சாகத்தை அளித்து வருகின்றன.முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்காத கிறிஸ் கெய்ல், 2வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். 2 ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடினார். அதன்பிறகு கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு தாவினார்.இதுவரை 4 ஐபிஎல் தொடர்களில் ஆடியுள்ள கிறிஸ் கெய்ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்காக மொத்தம் 38 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் அதிரடியாக ஆடியுள்ள கெய்ல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 26 சிக்ஸ்களும், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக 74 சிக்ஸ்களும் அடித்துள்ளார். இதன்மூலம் கிறிஸ் கெய்ல் இதுவரை மொத்தம் 101 சிக்ஸ் அடித்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சுழல் பந்துவீச்சாளர் பியூஸ் சாவ்லாவின் பந்துகளில் கிறிஸ் கெய்ல் அதிகபட்சமாக 7 சிக்ஸ்களை அடித்துள்ளார். மேலும் ராகுல் சர்மா, ராஜத் பாட்டியா, சுரேஷ் ரெய்னா உட்பட 45 பந்துவீச்சாளர்களின் பந்துகளில் கிறிஸ் கெய்ல் சிக்ஸ் அடுத்துள்ளார்.மேலும் ஐபிஎல் 5வது தொடரில் அதிக சிக்ஸ்களை அடித்த வீரர்களில் கிறிஸ் கெய்ல் தான் முதலிடத்தில் உள்ளார். இத்தொடரில் இதுவரை 31 சிக்ஸ்களை அடித்துள்ள கெய்ல், அதிக தூரம் கொண்ட சிக்ஸ்(111 மீட்டர்) அடித்தவரும் கூட.கடந்த 2009ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் சிக்ஸை அடித்த கிறிஸ் கெய்லுக்கு, இன்று அதே அணியுடன் தனது 100வது சிக்ஸை அடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)