|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 August, 2011

தமிழ்நாட்டில் தூய தமிழ் இல்லை மலேசிய மாணவி வேதனை!


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலேயா பல்கலைக்கழகத்தில் பி.ஏ., மொழியியல் பயிலும் மாணவ, மாணவிகள் 21 பேர், 45 நாள் ஆய்வுக்காக தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் நேற்று நாகர்கோவில் இந்து கல்லூரி தமிழ்த்துறை மாணவ, மாணவிகளுடன், கலந்துரையாடினர். கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழில் பாடி, பேசி மலேசிய மாணவிகள் அசத்தினர். ஆய்வுக்கு வந்த மாணவி சல்மா,    ‘’எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்தது தமிழ் மண்ணில் தான். நாங்கள் மலேசியாவில் பிறந்து வளர்ந்தாலும் தமிழை மறக்க வில்லை. மலேசியாவில் 523 தமிழ் பாடசாலைகள் உள்ளன. எங்கள் வீடுகளில் அனைவரும் தமிழில்தான் பேசுவோம். 


இங்கு ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதமாக தமிழ் பேசுகிறார்கள். பெரும்பாலும் ஆங்கிலம் கலந்த தமிழில் தான் பேசுகிறார்கள். தூய தமிழ் இங்கு இல்லை. ஆனால் மலேசியாவில் நாங்கள் தூய தமிழில் தான் பேசுவோம். 

நாங்கள் பேசும் தமிழ், இங்குள்ளவர்களுக்கே புரியவில்லை. இங்கு சாதிக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கிறார்கள். ஆனால் மலேசியாவில் அப்படி இல்லை. திருமணத்தின் போது மட்டுமே சாதியை பார்க்கிறார்கள். அதுவும் இப்போது மாறி வருகிறது’’ என்று கூறினார்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக முழுமையான பதில் தேவை: இலங்கையிடம் ஐநா!

போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் முழுமையான பதிலை எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் போர்க்குற்றங்களை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அது தொடர்பாக சில பரிந்துரைகளையும் தெரிவித்திருந்தது.


இந்தநிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கருத்துரைத்த இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ், நிபுணர் குழு அறிக்கைக்கு ஒருபகுதி பதிலை இலங்கை அரசாங்கம் வழங்கிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

எனினும் நிபுணர் குழு அறிக்கைக்கான முழு பதிலையும் எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

இன்று 65-வது சுதந்திர தினம்!


உலகின் பெரிய ஜனநாயக நாடாக இந்தியாஇருக்கிறது. விண்வெளி, மருத்துவம், கல்வி,பொருளாதாரம்,ராணுவம்,அணு சக்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உலகளவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைஎட்டியுள்ளது. ஆனால் வல்லரசு நாடாக உருவாவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். ஏனெனில்வல்லரசாக வேண்டுமெனில் பல்வேறு துறைகளில் நாம் மேலும் வளர்ச்சியடைய வேண்டும். உலகில் தற்போதுஅமெரிக்கா வல்லரசு நாடாக விளங்குகிறது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த நூற்றாண்டில் வல்லரசு நாடாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

வல்லரசு நாடு என்பது உள்நாட்டிலும், உலக நாடுகள் மத்தியிலும் செல்வாக்கைநிலைநிறுத்தும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். உலகின் எப்பகுதியிலும் தனது ஆதிக்கத்தை பயன்படுத்தும் அளவுக்கு ஆதிக்கம் மிக்கதாக இருக்க வேண்டும். நமது ராணுவம் உலகில்இரண்டாவது இடத்திலும், விமானப்படைநான்காவது இடத்திலும், கடற்படை மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்திய வியாபார நிறுவனங்கள், வெளிநாடுகளில் கிளைகளை கொண்டுள்ளன. சாப்ட்வேர் துறை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியர்கள் உலகில் அனைத்துபகுதிகளிலும் வாழ்கின்றனர்.

இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள்ஆகிவிட்டன. இந்த ஆண்டுகளில் இந்தியாவல்லரசாக முடியவில்லை. இதற்கு பலகாரணங்கள் உள்ளன. இருந்தாலும் வல்லரசுஆவதற்கு இன்னும் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டும். இந்தியா 2020ம் ஆண்டுக்குள் வல்லரசாகும் என்பது நாட்டின் முன்னாள் ஜனாதிபதிஅப்துல்கலாம் அவர்களின் கருத்து.இவரது கூற்று நிறைவேறுமா என்று பார்த்தால் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒருசாரார் கண்டிப்பாக முடியும் எனவும், இன்னும் அதிக ஆண்டுகள் ஆகும் எனவும் கருதுகின்றனர். நாடு வல்லரசாக வேண்டுமெனில், இதற்கான பொறுப்பு மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமல்லாது, அனைவரிடமும் உள்ளது. என்ன செய்யலாம்?

இந்தியா 2020ம் ஆண்டுக்குள் வல்லரசாக வேண்டுமெனில் சில துறைகளில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். சீனாவுடன் ஒப்பிடுகையில், நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாகத் தான் உள் ளது. நிலவுக்கு நாம்இன்னும் மனிதனுடன் செயற்கைகோளை அனுப்பவில்லை. 5,500 கி.மீ., தூரத்தை தாண்டி பாயும் ஏவுகணைகள் நம்மிடம் இல்லை. நாட்டில் உள்ளநதிகளை இணைத்தால் அனைத்து பகுதிகளும் வளம் பெறும். நமது அரசியல்வாதிகளிடம் இது பற்றி ஒருமித்த கருத்து இல்லை. இத்திட்டத்தை இப்போது துவக்கினால் தான் அடுத்த10 ஆண்டுகளிலாவது செயல்படுத்த முடியும்.

* ஆண்டுதோறும் நாட்டின் பட்ஜெட்டில் ராணுவத்துறைக்கு தான் அதிகளவில் செலவிடப்படுகின்றன. இருப்பினும் மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது ராணுவ தளவாடங்கள் நவீனமிக்கதாக இல்லை. இக்குறையை போக்க வேண்டும்.

* இன்ஜினியரிங், டாக்டர்கள், வக்கீல்கள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுவோர், பணிக்காலத்தில், சிறிது காலம் கட்டாயம் கிராமங்களில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு பணியாற்றுபவர்களுக்கு வரிச்சலுகை அளிக்கலாம். இதனால் கிராமப்புற வளர்ச்சி மேம்படும். கல்வித்துறையில் சீரான இடைவெளியில் மாற்றம் கொண்டு வரவேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படவேண்டும்.

* பொதுமக்களும் தங்களது பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும். அப்போது தான் தகுதியானவர்கள் தேர்ந் தெடுக்கப்பட முடியும். * பல அரசு துறைகள் செயல்படாதவையாக உள்ளன. ஊழியர்கள், கடமையைசெய்வதற்கு லஞ்சத்தை எதிர்பார்ப்பது கேவலமானது.

மேலும் சட்டத்துக்கு புறம்பான வேலைகளுக்கு மக்கள் அணுகும்போது அதை ஊழியர்கள் அனுமதிக்கக்கூடாது. அப்படி செய்தால் சட்டவிரோத குற்றங்களை தடுக்கலாம். இன்று நாட்டில் எங்கு பார்த்தாலும் ஊழல், லஞ்சம்தலைவிரித்தாடுகிறது. அரசு ஊழியர்கள் தங்களது கடமையை செய்வதற்கே லஞ்சம் கேட்கின்றனர். எனவே ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். நாட்டின் சட்டதிட்டங்கள் மிகவும் எளிமையாக இருப்பதால் தான் பயமில்லாமல் ஊழலில் ஈடுபடுகின்றனர். இந்தியர்களின் கறுப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்படுகிறது. இதனால் நாட்டிற்குவரவேண்டிய வருமானம் தடைபடுகிறது.

* மக்கள்தொகை என்பது நமது நாட்டின் வளர்ச்சியில் தடைக்கல்லாக இருக்கிறது என்று பெரும்பாலோனோர் கருதுகின்றனர். ஆனால் மக்கள்தொகை உயரும் போது, அனைவரும் படித்தவர்களாக இருக்கும் போது, இதை ஆக்கபூர்வ சக்தியாக மாற்றலாம். * "கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு' என்று மறைந்த மகாத்மா காந்தியடிகள் கூறினார். இவரது கூற்று நூறு சதவீதம் உண்மை. ஏனெனில் நமது மக்கள்தொகையில் 51.5 சதவீதம் பேர் கிராமங்களில் வாழ்வதாக சமீபத்திய சென்செஸ் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்பகுதிகள் எந்தளவுக்கு முன்னேற்றப்பட வேண்டியுள்ளதை அறியலாம். மொத்த மக்கள்தொகையில் பாதிபேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். இந்த 21ம் நூற்றாண்டிலும் அதிகளவிலான கிராமங்களில் சாலை வசதி, போக்குவரத்து மின்சாரம், குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் இல்லை. ஒவ்வொரு மாவட்ட தலைநகருடன், அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களின் சாலைகளும் இணைக்கப்படவேண்டும்.

தேசியக் கொடி பிறந்த கதை:தேசிய கொடியை வடிவமைத்தவர் ஆந்திராவைசேர்ந்த பிங்கிலி வெங்கையா. இவர் பிரிட்டிஷ் இந்தியராணுவம் மற்றும் ரயில்வே துறைகளிலும் பணியாற்றினார்.1921ல் இந்திய தேசிய காங்கிரஸ் பொது மாநாடு,காக்கிநாடாவில் நடைபெற்ற போது, காந்தியின் வேண்டுகோளை ஏற்று மூன்று வண்ணங்கள் மற்றும் நடுவே அசோக சக்கரத்துடன் கூடிய தேசியக் கொடியை வடிவமைத்தார். இது விஜயவாடாவில் நடந்த பொது மாநாட்டில் வெளியிடப்பட்டு, தேசிய கொடியாக முன்மொழியப்பட்டது.

இளமை இந்தியா:""நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள்;இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன்'' என்று விவேகானந்தர்கூறினார். இளைஞர்களால் ஒரு செயலை எளிதாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்க முடியும். இதனாலேயே விவேகானந்தர் ஆணித்தரமாகஇளைஞர் சக்தியை நம்பினார். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் இந்தியாவை அனைத்து துறையிலும் உயர்த்தி வருகின்றனர். இந்த எழுச்சியால், இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது, என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடுகளே பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டன. இந்தியா இதிலிருந்து தப்பித்து சீரான வளர்ச்சி அடைந்து வருவது, உலகநாடுகளை வியப்படையச் செய்தது. இந்தியர்களின் கடின உழைப்பு தான், வளர்ச்சிக்கு காரணம்.

இந்தியாவின் மக்கள்தொகை,தற்போது 121 கோடி. உலக மக்கள் தொகையில் நாம் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். சில ஆண்டு களுக்கு முன், மக்கள்தொகை பெருக்கம் நமக்கு சவாலாக இருந்தது. தற்போது அந்த சவால், நமக்கு சாதகமாகி வருகிறது. இந்திய மக்கள்தொகையில் இளைஞர்கள் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம். இது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 சதவீதம் பேர் இளைஞர்கள். இந்த இளமைத் துடிப்பு எந்த நாட்டுக்கும் இல்லை. சுதந்திரத்தின் போது, கல்வி, விவசாயம், தொழில்நுட்பம் என்று பல்வேறு துறைகளில் இந்தியா, பின்தங்கியே இருந்தது.84 சதவீதம் பேர் அப்போது கல்லாதவர்கள்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.8 சதவீதத்துடனும், ஆண்டுக்கு 2 சதவீத மக்கள் தொகை வளர்ச்சியுடனும் பெரிய சுமையுடனே இந்தியாமுன்னேற்றப் பாதையில் மெல்ல அடி எடுத்து வைத்தது.கல்வி வாய்ப்பின்மை, ஏழ்மை, மோசமான சுகாதாரம், வேலை வாய்ப்பின்மை என்று ஏராளமான பிரச்னைகளை சமாளிக்க வேண்டிய நிலை. உலக நிலப்பரப்பில் 2 சதவீதமே இந்தியாவினுடையது. ஆனால், உலகின் ஆறில் ஒருவர் இந்தியர். இன்று அனைத்து துறைகளும் வளர்ந்திருக்கின்றன. சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளுக்கிணங்க, இளமை சக்தியுடன்இந்தியா விரைவில் வல்லரசாக மாறும்.

சுதந்திரம் பெற்ற இரவு நடந்தது என்ன?""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளிலே நம்முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை அறியலாம். கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களின் சகாப்தம், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இரவு முடிவுக்கு வந்தது. அன்றைய தினம் இரவு என்ன நடந்தது...

டில்லியில் பார்லிமென்ட் கூடியது. காந்தி, நேரு, மவுண்ட் பேட்டன் உள்பட பல முக்கிய தலைவர்கள் கூடினர். சுதேசா கிருபளானி வந்தே மாதரம் என்ற பாடலை பாடினார். ராஜேந்திர பிரசாத் கூட்டத்தின் தலைமை உரையை வாசித்தார். நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. முதல் பிரதமராக நேரு பதவியேற்றார். கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன், ஆட்சி அதிகாரத்தை நேருவிடம் ஒப்படைத்தார். ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட நேரு, "விதியுடன் ஒரு போராட்டம்' என்ற தலைப்பில் சிறப்பான உரை நிகழ்த்தினார்.அதில், "" இன்று நாம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை முழுமையாக அடையவில்லை என்றாலும் கணிசமான அளவு அடைந்து விட்டோம். உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியா சுதந்திரத்தையும் புது வாழ்வையும் பெறுகிறது. புதிய சகாப்தம் இன்று துவங்குகிறது. வரலாற்றில் மிகவும் அரிதானதருணம் இது. நீண்ட காலம் அடைபட்டுக் கிடந்த ஒரு நாட்டின் மறுமலர்ச்சி இன்று புத்துயிர் பெறுகிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கவும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லவும், மக்களின் சேவைக்காவும், மனிதநேயத்திற்காகவும் அர்ப்பணித்து அயராது உழைப்போம்.

சக்கரம் என்ன சொல்கிறது?நமது தேசிய கொடியில் உள்ள சக்கரம், சாரநாத்தில் உள்ள அசோகர் ஸ்தூபியிலிருந்து எடுக்கப்பட்டது. ஜூலை 22 ஆம் நாள், 1947 ம் ஆண்டு இந்திய அரசால் இது ஏற்றுக் கொள்ளப்பட்டது. சக்கரம், 24 ஆரங்களுடன் கூடிய நீல வண்ணமுடையது. இது சத்தியம், தர்மம், சட்டம் ஒழுங்கு, உண்மை போன்றவற்றை கடைப்பிடித்து, நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று உணர்த்துகிறது.

தாயுடன் சேர்ந்த சேய்கள்:வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் 565 சுதேசி சமஸ்தானங்கள் இருந்தன. வெள்ளையர்களுக்கு வரி கட்டிக்கொண்டு இருந்த சமஸ்தான மன்னர்கள், நாடு சுதந்திரம் அடைந்த பின்னும் தனி நாடுகளாக இருக்க வேண்டும் என்று எண்ணினர். இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவியேற்ற பின், சுதேச சமஸ்தானங்கள் அனைத்தும் இந்தியாவுடன் இணைய வேண்டும் என வேண்டுகோள்விடுத்தார். அதன்படி பிகானிகர், பாட்டியாலா,குவாலியர், பரோடா முதலிய சமஸ்தானங்கள்இந்தியாவுடன் உடனடியாக இணைய முன்வந்தன.

பின், அப்போதைய உள்துறை அமைச்சர்சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் 552சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்தன. ஆனால் காஷ்மீர், ஐதராபாத், திருவாங்கூர்,ஜூனாகத் போன்ற சில சமஸ்தானங்கள், தனி நாடாக இருப்போம் என்று அடம் பிடித்தன.ஐதராபாத்தை நிஜாம் ஆண்டு வந்தார். 1948 செப்டம்பர் 13 ம் நாள் இந்திய ராணுவம் ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைத்தது. பின்ஜூனாகத், காஷ்மீர், திருவாங்கூர் சமஸ்தானங்கள்இந்தியாவுடன் இணைந்தன. தமிழ்நாட்டில் இருந்த ஒரே சமஸ்தானம் புதுக்கோட்டை. இதை ஆண்டராஜகோபால் தொண்டமான், 1948 மார்ச் 3ம் நாள்இந்தியாவுடன் இணைந்தார்.

மக்கள் தொகை: அப்போதும் இப்போதும்:சுதந்திரம் அடைந்த போது, நமது நாட்டின் மக்கள் தொகை 31 கோடியே82 லட்சம். தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி. அதாவது சுதந்திர இந்தியாவில்90 கோடி பேர் பிறந்துள்ளனர்.

48 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் புதுப்பட பூஜை!

கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் புதுப்படம் ஒன்றின் தொடக்க விழாவையும், சூட்டிங்கையும் நடத்தியிருக்கிறார்கள். அந்த படத்தின் பெயர் "சிறுவாணி". இன்றைய காலகட்டத்தில் படப்பிடிப்பு தளங்கள் அனைத்துமே சென்னையில்தான் இருக்கின்றன. ஆனால் முன்பு கோவை, சேலம், காரைக்குடி போன்ற இடங்களில் ஸ்டுடியோக்கள் அமைந்திருந்தன. மாத சம்பளத்திற்கு நடிகர் நடிகைகளை அமர்த்தி நடிக்க வைத்தார்கள். ஏவிம், மாடன் தியேட்டர்ஸ், பட்சிராஜா ஸ்டுடியோஸ் என்று கடந்த காலத்தின் கல்வெட்டுகளாக இருக்கும் இவற்றில் மிஞ்சியது ஏ.வி.எம் மட்டும்தான். கோவை பட்சிராஜா ஸ்டுடியோவில் கடைசியாக 48 வருஷங்களுக்கு முன் சிவாஜி நடித்த நான் பெற்ற செல்வம் என்ற படப்பிடிப்பு நடந்ததாம்.

பல்லாண்டுகள் கழித்து சிறுவாணி படத்தின் தொடக்கவிழாவையும், படப்பிடிப்பையும் அங்கு நடத்தியிருக்கிறார்கள். சஞ்சய், ஐஸ்வரி ஜோடியாக நடிக்கும் இந்த படத்தை டைரக்டர் ரகுநாத் இயக்குகிறார். எம்.கே.டி பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், பி.யூ..சின்னப்பா, எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன். டி.ஏ.மதுரம் போன்ற ஜாம்பவான்கள் ஆடிப் பாடிய அந்த இடத்தில் தன் படத்தின் சூட்டிங்கை நடத்தியதை பெருமிதமாக கருதுவதாக கூறுகிறார் டைரக்டர் ரகுநாத்.

தமிழர்களை அழுக்கர் என்று கூறிய அமெரிக்க பெண் தூதரை வெளியேற்ற வேண்டும்!


சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணை தூதராக இருப்பவர் மவ்ரீன் காவ். பெண் அதிகாரியான இவர், சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர் கூறும்போதும், 20 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பதற்காக இந்தியா வந்த நான், டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரெயிலில் சென்றேன். 24 மணி நேரத்தில் போய் சேர வேண்டிய இடத்தை 72 மணி நேரமாகியும் அந்த ரெயில் போய் சேரவில்லை. இந்த பயணத்தின் போது எனது தோல் தமிழர்களை போல கறுப்பாகவும், அழுக்காகவும் மாறிவிட்டது என்றார்.
அவரது பேச்சை வட இந்திய மாணவர்கள் பலர் கைதட்டி ரசித்துள்ளனர். ஆனால் மேடையில் இருந்த முக்கிய பிரமுகர்களும், தமிழ் மாணவர்களும் இதனை கண்டு கொள்ளாமல் வாயை பொத்திக் கொண்டு இருந் துள்ளனர்.   அமெரிக்க பெண் அதிகாரியின் இந்த பேச்சுக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழக தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக முதல்- அமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் ஜெனிபர் மெக் இன்னருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அமெரிக்க உதவி துணை தூதர் மவுரீன் சாவ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது, பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதில், நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரெயிலில் சென்றேன். இந்த பயண நேரம் 24 மணி நேரம்தான். ஆனால் 72 மணி நேரம் ஆகியும், அந்த ரெயில் ஒரிசா போய்ச் சேரவில்லை.
அதனால், எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகிவிட்டது என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார்.   இனவெறி கொண்ட இந்த பேச்சு, மிகவும் கண்டத்துக்கு உரியது. இந்த கருத்து, ஒட்டு மொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும். எனவே, இந்த கருத்துக்களை வாபஸ் பெற்றுக் கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்த கையை கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:- 
தமிழ்நாட்டில் பணியாற்றிக்கொண்டு தமிழர்களால் நடத்தப்படும் பல்கலைக்கழகத்தில் தமிழர்களை பற்றியே இனவெறியுடன் மவுரின் சோவ் பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அமெரிக்க உதவி துணை தூதரின் இந்தப் பேச்சு தமிழர்களை பற்றிய குரூரமான கற்பனை ஆகும்.
 தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அமெரிக்கர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சவால்விடும் வகையில் தமிழர்கள் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், அவர்களை தீண்டத்தகாதவர்களை போல சித்தரித்து அமெரிக்க உதவித்துணை தூதர் பேசியிருப்பதை தன்மானம் உள்ள தமிழர்கள் எவராலும் சகித்துக் கொள்ள முடியாது.
அமெரிக்காவுக்குச் செல்லும் இந்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களை பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் ஆடைகளை களைந்து அவமதிக்கும் அமெரிக்கர்களின் இனவெறி தற்போது தமிழகம் வரை நீண்டிருப்பது உணர்வுள்ள தமிழர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. ஈழத்தமிழர் சிக்கல் முதல் அனைத்து விவகாரங்களிலும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நடுவண் அரசு செயல்பட்டு வருவதாலும், தாராளமயமாக்கல் கொள்கை காரணமாக தமிழர்களிடையே இன உணர்வும், பண்பாட்டு உணர்வும் குறைந்து வருவதாலும்தான் எங்கிருந்தோ வந்தவர்களுக்கு இப்படியெல்லாம் பேசுவதற்கான துணிச்சல் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒபாமா அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்து வரும் நிலையில், அவரின் பிரதிநிதியாக தமிழகத்தில் இருக்கும் ஒருவர் தமிழர்களை கறுப்பர்கள் என்றும், அழுக்கானவர்கள் என்றும் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த இனவெறி பேச்சுக்காக மவுரின் சோவ் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும். இவரைப்போன்ற பிறவிகள் இனியும் தமிழகத்தில் தங்கியிருக்க அனுமதிக்கக்கூடாது. தமிழர்களை அவமதித்த அவரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் அழைத்து கண்டிப்பதுடன், உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:- அமெரிக்க துணைத் தூதரின் இந்தப் பேச்சு இனவொதுக்கல் தன்மை கொண்ட முறை தவறிய பேச்சு என்பதில் ஐயமில்லை. இதற்காக அமெரிக்க தூதரகம் வருத்தம் தெரிவித்திருக்கிறது என்ற போதிலும் இவ்வளவு இங்கிதமற்ற ஒருவர், முக்கியமான பொறுப்பில் இருப்பது இந்திய அமெரிக்க ராஜீய உறவுகளை நிச்சயம் பாதிக்கும்.   இனவெறியை வெளிப்படுத்தும் விதமாகத் தமிழர்களை இழிவு படுத்தியிருக்கும் மவுரீச் சாவ் அம்மையார் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்.
அவரை அமெரிக்க அரசு உடனடி யாகத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.   அமெரிக்க அதிபருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தமிழகத்துக்கு வந்து தமிழக முதல்வரோடு பேச்சு நடத்தினார். ஈழத் தமிழர்கள் குறித்து அப்போது அவர் சாதகமாக கருத்து தெரிவித்தார். ராஜபக்சே அரசின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்பது தமிழர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அமெரிக்க துணைத் தூதரின் இந்த "இன வெறிப் பேச்சு" அதிர்ச்சியளிக்கிறது.   இந்திய அரசு அமெரிக்க தூதரை அழைத்துத் தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். 

உண்ணாவிரதத்துக்கு 22 நிபந்தனைகள்!


ஊழல் எதிர்ப்புவாதி அன்னா ஹசாரே நாளை மறுநாள் டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கிறார். இதற்கு டெல்லி போலீசார் 22 நிபந்தனைகள் விதித்துள்ளனர். இதை ஏற்க முடியாது என்று அன்னாஹசாரே அறிவித்துள்ளார்.
 
லோக்பால் அதிகார வரம்புக்குள் பிரதமர் மற்றும் நீதிபதிகளையும் கொண்டு வந்தால் தான், லோக்பால் சட்ட மசோதா வலுவானதாக இருக்க முடியும் என்று அன்னா ஹசாரே கூறி வருகிறார். ஆனால் மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ள லோக்பால் சட்ட மசோதாவின் வரம்பில் பிரதமர், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் சேர்க்கப்படவில்லை. எனவே, இந்த பலவீனமான லோக்பால் சட்ட மசோதாவை எதிர்த்து டெல்லியில் நாளை மறுநாள் (16-ந்தேதி) சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்க அன்னா ஹசாரே முடிவு செய்துள்ளார்.
 
இதற்காக ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதே நாளில் அவரது ஆதரவாளர்களும், சமூக ஆர்வலர்களும் நாடு முழுவதும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகின்றனர். டெல்லியில் ஹசாரே உண்ணாவிரதத்துக்கு போலீசார் 22 நிபந்தனைகளை விதித்துள்ளனர். டெல்லியில் ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்காவில் மட்டுமே உண்ணாவிரத போராட்டத்தை நடத்த வேண்டும்.
 
3 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் தொடரக்கூடாது. உண்ணாவிரத பந்தலில் 5 ஆயிரம் பேருக்கு மேல் அமரக்கூடாது. அவர்கள் ஒரே இடத்தில்தான் அமர்ந்து இருக்க வேண்டும். சிறு சிறு குழுக்களாக பிரிந்து சாலையில் நிற்க கூடாது. 50 கார்கள் மற்றும் 50 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஒலி பெருக்கி கருவி பொருத்தக்கூடாது.
 
16-ந்தேதி காலை 8 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி 18-ந் தேதி மாலை 6 மணிக்கே முடித்துக் கொள்ள வேண்டும். உண்ணாவிரதம் இருப்பவர்களிடம் அரசு மருத்துவ குழுவினர் தினமும் 3 முறை மருத்துவ பரிசோதனை செய்வார்கள். யாருக்காவது உடல்நலக் குறைவு காணப்பட்டால் அவர்கள் உண்ணாவிரதப்பந்தலில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவார்கள்.
 
இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவில் இடம் பெற்றுள்ள சாந்திபூஷன், அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன், கிரண் பேடி உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்டு உறுதிமொழி அளிக்க வேண்டும். இவ்வாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
 
போலீசாரின் நிபந்தனைகள் அன்னா ஹசாரேக்கும், அவரது குழுவினருக்கும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று அன்னா ஹசாரேவும், அவரது குழுவினரும் திட்டவட்டமாக அறிவித்து விட்டனர்.
 
இது பற்றி அன்னா ஹசாரே கூறியதாவது:-
எனது உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் விதித்துள்ள நிபந்தனைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். நாட்டில் ஊழல் அதிகரித்து வருகிறது என்று அனைத்து தரப்பு மக்களும் கூறுகிறார்கள். அதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இப்போது மக்களை ஏமாற்றும் வகையில், பல் இல்லாத லோக்பால் மசோதாவை கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது.
 
மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் அரசு, ஜனநாயக கொலை செய்வதுடன் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராகவும் செயல்படுகிறது. அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த எங்கள் பிரதிநிதி நீரஜ் குமார் இருமுறை சென்று வந்துள்ளார். ஆனால் திருப்திகரமான முடிவு எட்டப்படவில்லை. உண்ணாவிரதம் நடக்காமல் தடுக்கவே அரசு முயலுகிறது.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
 
இதற்கிடைய, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி அளித்துள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தினால், அந்தப் பகுதியில் அமைதி குலையும் என்று மக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர் எனவே ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்காவில் உண்ணாவிரதம் இருக்க, அன்னாஹசாரேவிற்கு அனுமதி அளிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.
 
பூங்காக்களை உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்று கோர்ட்டு தடை உள்ளது. இதை டெல்லி போலீசார் சரியாக கவனிக்காமல் ஜெ.பி.பூங்காவை சிபாரிசு செய்துவிட்டனர் என்றும் போலீஸ் வட்டாரத்தில் இப்போது தெரிவிக்கப்படுகிறது.
 
எனவே உண்ணாவிரத போராட்டத்திற்கு தடை விதிக்கலாமா? என்று டெல்லி உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தில் நடந்த அசம்பாவிதம் போல், இனிமேலும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு 22 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.
 
நிபந்தனைகள் ஏற்கப்படாத பட்சத்திலும், ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாகவும், கடைசி நேரத்தில் உண்ணாவிரதத்துக்கு தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. போலீஸ் என்ன நிபந்தனை விதித்தாலும் அதை மீறுவது என்ற முடிவில் அன்னா ஹசாரேயும் அவரது குழுவினரும் உள்ளனர்.
 
எனவே தடையை மீறும் பட்சத்தில் பாபாராம்தேவ் டெல்லியில் உண்ணாவிரதம் தொடங்கியபோது அவரை இரவோடு இரவாக போலீஸ் படையை குவித்து அப்புறப்படுத்தியது போல் அன்னா ஹசாரேயும் அப்புறப்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. அதே சமயம் நாடு முழுவதும் நடைபெறும் உண்ணாவிரதத்தை அரசு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை.
 
இதனால் டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. நாளை சுதந்திர தின விழா முடிந்ததும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்க திட்டமிட்டுள்ளது.

போலீஸ் நிபந்தனைபடி நடந்து கொள்ளுங்கள் போராட்டம் குறித்து அன்னா ஹசாரேவுக்கு மன்மோகன்சிங்!


டெல்லி போலீசார் விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, அன்னா ஹசாரே கடிதம் எழுதினார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
அமைதியான முறையில் நடைபெற இருக்கும் உண்ணா விரத போராட்டத்திற்கு, நாங்கள் கேட்ட இடத்தை ஒதுக்க டெல்லி போலீசார் மறுத்துள்ளனர். இதன் மூலம் எங்களது போராட்டத்தை ஒடுக்கும் அரசின் உள் நோக்கம் தெரிகிறது. ஜனநாயக படுகொலை மற்றும் அரசியல் சாசனத்தை மீறுவதன் மூலம், மக்களின் அடிப்படை உரிமைகளை உங்கள் தலைமையிலான அரசு நசுக்குகிறது.   இது தங்களது தகுதிக்கு ஏற்புடையது தானா? ஒவ்வொரு முறையும் பொறுப்பு ஏற்கும் அரசு, அதற்கு முந்தைய அரசை விட அதிகமாக ஊழல்கள் புரிகின்றன.
 
சுதந்திரத்திற்கு பின்பு, உங்களது தலைமையிலான அரசுதான் மிகவும் ஊழல் மலிந்த அரசு என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்துக்கு அனுமதி மறுப்பதற்கு சரியான காரணங்கள் கிடைக்காததால், போலீசார் இது போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளனர்.   போராட்டம் நடத்த எங்களுக்கு இடம் மறுக்கப்பட்டதால், அனைவரும் கைதாகி சிறையில் போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம். நான் உண்ணாவிரதம் தொடங்கும் 16-ந்தேதி அன்று, லட்சக் கணக்கான பேர் நாடு முழுவதும் தெருவில் இறங்கி போராடுவார்கள்.இவ்வாறு கடிதத்தில் ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்துக்கு பிரதமர் தரப்பில் இருந்து அன்னா ஹசாரேக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த கடிதத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், சட்டம்- ஒழுங்கை பராமரிக்கவும் தான் போலீசார் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
 
பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தின் போது ஏற்பட்ட சம்பவங்கள் மீண்டும் நடை பெறக் கூடாது. எனவே போலீசாரின் நிபந்தனைகளை ஏற்று, அதன்படி, நடந்து கொள்ளுங்கள், என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு போலீசார் நிபந்தனை விதித்து இருப்பதற்கு அவரது ஆதரவாளரும் டெல்லி முன்னாள் போலீஸ் அதிகாரியுமான கிரண்பேடி கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
 
சட்டம்- ஒழுங்கை பேணும் நடவடிக்கை என்ற பெயரில் தேவையற்ற சட்ட திட்டங்களை விதிப்பது டெல்லி போலீசாரின் கையாளாகாத தனத்தையே வெளிப்படுத்துகிறது. மற்ற போராட்டங்களை போன்றது உண்ணாவிரதம் ஒரே இடத்தில் அமர்ந்து, பொதுமக்கள், போக்கு வரத்து இவற்றுக்கு எந்த இடையுறும் ஏற்படாமல் நடைபெறும் அமைதி போராட்டத்துக்கு இவ்வளவு நிபந்தனை விதிக்கப்பட்டது தேவையற்றது. நானும் போலீஸ் துறையில் உயர் பதவியை வகித்துள்ளேன். ஆனால், இப்படியொரு, அதர்மமான நடவடிக்கை எடுத்தது கிடையாது. போலீஸ் அதிகாரிகள் ஆட்சியாளர்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப ஆடக்கூடாது. 

பதவி ஆசையே இல்லாத பாமக தலைவர் அவர்களே..!


அன்புமணி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி சொன்னதற்கு நான் அளித்த பதிலால் அவருக்குக் கூட வராத கோபம், கோ.க.மணிக்கு வந்திருப்பது ஏன் என யோசித்தேன். பிறகு தான் புரிந்தது, தன்னுடைய மகன் தமிழ்க் குமரனை சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்க வைத்து அழகு பார்த்தவருக்குக் கோபம் வராதா என்ன? என் மனைவியோ, பிள்ளைகளோ அன்றும் - இன்றும் - என்றும் திமுகதான்.

கட்சிக்காக பணியாற்றுபவர்கள்தான். நல்ல வேளையாக யாரோ வற்புறுத்துகின்றார்கள் என்று சொல்லி என் பிள்ளை சட்டமன்றத்திற்கும் நிற்க வைக்கவில்லை. பாராளுமன்றத்திற்கும் நிற்கவைக்கவில்லை. உங்களுக்கு என்று வந்து விட்டால் அது அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பம். 75 ஆண்டு கால பொது வாழ்க்கைச் சொந்தக்காரரான கலைஞர் குடும்பம் என்றால் பாரம்பரியம் இல்லையா? ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக செஞ்சியாரைப் பற்றியும், எ.ஜி.சம்பத்தைப் பற்றியும் திடீர் சமுதாய அக்கறையோடு பேசும் அன்பிற்குரிய கோ.க.மணி அவர்களே,

அருள் கூர்ந்து உங்கள் கட்சியில் முதல் முதலாக வெற்றி பெற்று யானை மேல் அம்பாரி போன பண்ருட்டி ராமச்சந்திரன் - உங்கள் கட்சி வேட்பாளராக என்னை எதிர்த்து விழுப்புரம் சட்டமன்றத் தேர்தலில் நிறுத்தினீர்களே - நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி - நண்பர் தீரன் - பூ.தா.இளங்கோவன், பூ.தா.அருள்மொழி இவர்கள் எல்லாம் எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று விரட்டினீர்கள்.

அவ்வளவு ஏன்? டாக்டர் அய்யாவின் சொந்தத் தம்பி சீனுக்கவுண்டர் அவர்கள் வெளியேறக் காரணம் என்ன? தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றிக் கொள்ளும் பதவி ஆசையே இல்லாத பாமக தலைவர் அவர்களே யாரையோ திருப்திப்படுத்துவதற்காக மனசாட்சியை மறந்துவிட்டுப் பேசாதீர்கள் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...