டெல்லி போலீசார் விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து பிரதமர்
மன்மோகன்சிங்கிற்கு, அன்னா ஹசாரே கடிதம் எழுதினார். அதில் கூறப்பட்டு
இருப்பதாவது:-
அமைதியான முறையில் நடைபெற இருக்கும் உண்ணா விரத
போராட்டத்திற்கு, நாங்கள் கேட்ட இடத்தை ஒதுக்க டெல்லி போலீசார்
மறுத்துள்ளனர். இதன் மூலம் எங்களது போராட்டத்தை ஒடுக்கும் அரசின் உள்
நோக்கம் தெரிகிறது. ஜனநாயக படுகொலை மற்றும் அரசியல்
சாசனத்தை மீறுவதன் மூலம், மக்களின் அடிப்படை உரிமைகளை உங்கள் தலைமையிலான
அரசு நசுக்குகிறது. இது தங்களது தகுதிக்கு ஏற்புடையது தானா? ஒவ்வொரு
முறையும் பொறுப்பு ஏற்கும் அரசு, அதற்கு முந்தைய அரசை விட அதிகமாக ஊழல்கள்
புரிகின்றன.
சுதந்திரத்திற்கு பின்பு, உங்களது
தலைமையிலான அரசுதான் மிகவும் ஊழல் மலிந்த அரசு என்று மக்கள் குற்றம்
சாட்டுகிறார்கள். காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்துக்கு அனுமதி
மறுப்பதற்கு சரியான காரணங்கள் கிடைக்காததால், போலீசார் இது போன்ற
நிபந்தனைகளை விதித்துள்ளனர். போராட்டம் நடத்த எங்களுக்கு இடம்
மறுக்கப்பட்டதால், அனைவரும் கைதாகி சிறையில் போராட்டம் நடத்தவும் தயாராக
இருக்கிறோம். நான் உண்ணாவிரதம் தொடங்கும் 16-ந்தேதி அன்று, லட்சக் கணக்கான
பேர் நாடு முழுவதும் தெருவில் இறங்கி போராடுவார்கள்.இவ்வாறு கடிதத்தில் ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.
இந்த
கடிதத்துக்கு பிரதமர் தரப்பில் இருந்து அன்னா ஹசாரேக்கு பதில் கடிதம்
அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த கடிதத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல்
தடுக்கவும், சட்டம்- ஒழுங்கை பராமரிக்கவும் தான் போலீசார் நிபந்தனைகள்
விதித்துள்ளனர்.
பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தின்
போது ஏற்பட்ட சம்பவங்கள் மீண்டும் நடை பெறக் கூடாது. எனவே போலீசாரின்
நிபந்தனைகளை ஏற்று, அதன்படி, நடந்து கொள்ளுங்கள், என்று குறிப்பிடப்பட்டு
உள்ளது. அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு போலீசார்
நிபந்தனை விதித்து இருப்பதற்கு அவரது ஆதரவாளரும் டெல்லி முன்னாள் போலீஸ்
அதிகாரியுமான கிரண்பேடி கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
சட்டம்-
ஒழுங்கை பேணும் நடவடிக்கை என்ற பெயரில் தேவையற்ற சட்ட திட்டங்களை
விதிப்பது டெல்லி போலீசாரின் கையாளாகாத தனத்தையே வெளிப்படுத்துகிறது. மற்ற
போராட்டங்களை போன்றது உண்ணாவிரதம் ஒரே இடத்தில் அமர்ந்து, பொதுமக்கள்,
போக்கு வரத்து இவற்றுக்கு எந்த இடையுறும் ஏற்படாமல் நடைபெறும் அமைதி
போராட்டத்துக்கு இவ்வளவு நிபந்தனை விதிக்கப்பட்டது தேவையற்றது. நானும்
போலீஸ் துறையில் உயர் பதவியை வகித்துள்ளேன். ஆனால், இப்படியொரு, அதர்மமான
நடவடிக்கை எடுத்தது கிடையாது. போலீஸ் அதிகாரிகள் ஆட்சியாளர்களின்
அபிலாசைகளுக்கு ஏற்ப ஆடக்கூடாது.
No comments:
Post a Comment