மலேசிய தலைநகர்
கோலாலம்பூரில் உள்ள மலேயா பல்கலைக்கழகத்தில் பி.ஏ., மொழியியல் பயிலும்
மாணவ, மாணவிகள் 21 பேர், 45 நாள் ஆய்வுக்காக தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் நேற்று
நாகர்கோவில் இந்து கல்லூரி தமிழ்த்துறை மாணவ, மாணவிகளுடன்,
கலந்துரையாடினர். கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழில் பாடி, பேசி மலேசிய
மாணவிகள் அசத்தினர். ஆய்வுக்கு
வந்த மாணவி சல்மா, ‘’எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்தது தமிழ் மண்ணில்
தான். நாங்கள் மலேசியாவில் பிறந்து வளர்ந்தாலும் தமிழை மறக்க வில்லை.
மலேசியாவில் 523 தமிழ் பாடசாலைகள் உள்ளன. எங்கள் வீடுகளில் அனைவரும்
தமிழில்தான் பேசுவோம்.
இங்கு ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதமாக தமிழ் பேசுகிறார்கள். பெரும்பாலும் ஆங்கிலம் கலந்த தமிழில் தான் பேசுகிறார்கள். தூய தமிழ் இங்கு இல்லை. ஆனால் மலேசியாவில் நாங்கள் தூய தமிழில் தான் பேசுவோம்.
நாங்கள் பேசும்
தமிழ், இங்குள்ளவர்களுக்கே புரியவில்லை. இங்கு சாதிக்கு அதிக முக்கியத்
துவம் கொடுக்கிறார்கள். ஆனால் மலேசியாவில் அப்படி இல்லை. திருமணத்தின் போது
மட்டுமே சாதியை பார்க்கிறார்கள். அதுவும் இப்போது மாறி வருகிறது’’ என்று
கூறினார்.
No comments:
Post a Comment